இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்
இப்படி முற்பட்ட வகுப்பு ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை கீழ்க்கண்டவர்கள் ஆதரிப்பார்களா எதிர்ப்பார்களா
வக்கீல் விஜயன்
இன்பொசிஸ் நாராயண மூர்த்தி
பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்
ஷிவ் கேரா
:) :)
பொருத்திருந்து பார்க்க வேண்டும்
---
குறைந்த மதிப்பெண் எடுத்த தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவனுக்கு இடம் அளிப்பதால் மெரிட் பறிபோகும் என்று கூப்பாடு போட்டவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்த முற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவனுக்கு இடம் அளிப்பதற்கு என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்
பதிவுலகில் இடப்பங்கீட்டை நேரடியாக எதிர்த்து எழுதும் சில பதிவர்களும், ஆதரிப்பது போல் கபட வேடம் போட்டு மறைமுகமாக எதிர்த்து எழுதும் சில பதிவர்களும் இது குறித்து என்ன கருத்து தெரிவிக்கப்போகிறார்கள் என்றுதெரிந்து கொள்ள ஆசை
நான் எதிர்ப்பார்த்தது போலவே இது வரை யாருமே மூச்சு விடும் சத்தம் கூட கேட்கவில்லை.
அரசு மருத்துவமனைகளின் மருத்துவரின் ஆலோசனையின் மதிப்பு என்ன என்று தெரிந்து கொள்ள இந்த இடுகையை வாசித்துக்கொள்ளுங்கள்
"கொஞ்சம் ஏமாந்து இருந்தாலும் ஊசி போடாம அனுப்பிருப்பாரு அந்த சின்ன டாக்டர். நம்ம பெரிய டாக்டர் தான் ஊசி எழுதி தர சொன்னார். கவருமண்டு ஊசி குடுத்தா இவங்க கை காச குடுக்குற மாதிரி ரொம்பப் பண்றாங்க. மாத்திரை யாருக்கு வேணும்? இந்த மாத்திரைய எப்பவாது காய்ச்சல், தலைவலி வரும் போது போட்டுக்கலாம் கைல இருக்கட்டும். இப்ப ஊசி போடுங்கனா கேக்க மாட்றாங்க."
எனக்கு பகீரென்றது. அடப்பாவி hypertension tableta காய்ச்சல் தலைவலிக்கு போடப் போறிங்களா? நீங்க போட்டாலும் பரவாயில்ல மத்தவங்களுக்கும் கொடுப்பிங்களே! (கவர்மென்ட் ஆஸ்பத்திரில வாங்குன இலவச மாத்திரையை கொடுத்து தான் நிறைய பேர் தங்கள் வள்ளல் தன்மையை வெளிப்படுத்துவர்.) காலைல இருந்து கஷ்டப்பட்டு diagnose பண்ணுனா ஒரு விட்டமின் ஊசி போதும்னு சொல்றாரே.
மருத்துவ அலுவலரிடம் சொன்னேன். அவரோ ரொம்ப கூலா "உனக்கு இது புதுசு. மெயின் ரோடுக்கு போற வழில ரயில்வே டிராக் தாண்டி பாரு. நம்ம குடுத்த மாத்திரைலாம் கிடக்கும். போற வழில தூக்கி போட்ருவாங்க. அவங்களுக்கு தேவை ஊசி தான். மாத்திரைய வேற வழி இல்லாம வாங்குறாங்க. ஊசி அவங்க உரிமை. அதுவும் சிபாரிசோட வந்தா ரெண்டு ஊசி போட்டா தான் போவாங்க," என்று சிரித்தார்.
மருத்துவர்கள் யாரும் நாங்கள் சொல்வதை கேட்பதில்லை, நோயாளியுடன் போதிய நேரம் ஒதுக்குவதில்லை போன்ற கற்பனையான பொய் குற்றச்சாட்டுகளுடன் மருத்துவர்கள் திட்டும் பதிவர்கள, எழுத்தாளார்கள் யாருமே அந்த இடுகை குறித்து ஒரு வார்த்தை கூட கருத்து கூறாமல் இருப்பதன் காரணம் (மருத்துவர்கள் மீது இருக்கும் ஆழ்மன காழ்ப்புணர்ச்சியே இது போல் கற்பனையான பொய் குற்றச்சாட்டுகளை கூற வைக்கிறது) தெரிந்ததே :) :) :) நான் பொய் குற்றச்சாட்டு கூறுபவர்களை பற்றித்தான் கூறினேன். நீங்கள் எல்லாம் உண்மையானவர் என்றால் உங்களுக்கு பற்றி எரிய வேண்டியதில்லை. போதுமா !!!
ஆனால் நம் மக்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்
இது மிக சுலபமான பொருளாதார சூத்திரம்
வெளியில் விற்கப்படும் மாத்திரைகள் பாராசிட்டமால், அவில் போன்றவையே. அவை 2 ரூபாய் மட்டுமே. ஆக மருத்துவர் என்ன மாத்திரை அளித்தாலும் (அது griseofulvin ஆனாலும் சரி cipro ஆனாலும் சரி, losartan ஆனாலும் சரி ) மருத்துவர் அவருக்கு 2 ரூபாய் மதிப்பிலான வைத்தியம் மட்டுமே செய்துள்ளதாக அந்த நோயாளி கருதுகிறார்
வெளியில் ஊசி 20 ரூபாய். ஆக மருத்துவர் என்ன ஊசி போட்டாலும் அவருக்கு 20 ரூபாய்க்கு வைத்தியம் செய்துள்ளதாக கருதுகிறார். அது விட்டமின் என்றாலும் சரி, நார்மல் சைலைன் என்றாலும் சரி, ceftriaxone என்றாலும் சரி - அதற்கு அவர்கள் வைக்கும் மதிப்பு 20 ரூபாய்
அவர் கணக்கு படி
மருத்துவர் ஊசி போட்டால் அவருக்கு 20 ரூபாய் கிடைக்கிறது !!
மருத்துவர் ஊசி போடாமல் மாத்திரை அளித்தால் அவருக்கு 2 ரூபாய் மட்டும் அளித்து விட்டு அந்த ஊசியை மருத்துவர் தனது தனி கிளினிக்கில் போட்டு 20 ரூபாய் சம்பாதிக்கிறார்
ஆக
ஊசி (அது நார்மல் சைலைன் என்றாலும் கூட) போடுபவர் நல்ல டாக்டர்
மாத்திரை கொடுப்பவர் ஊசியை தனது சொந்த கிளினிக்கு எடுத்த் செல்லும் டாக்டர்
அப்படி என்றால் சிரை வழியில் திரவம் ஏற்றுவது. அதற்கு வெளியில் விலை 200 ரூபாய்
ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிரை வழி திரவம் ஏற்றும் மருத்துவர் அந்த பகுதியில் குறுநில மன்னராக விளங்குவார்
காரணம் : மற்ற மருத்துவர்கள் 20 ரூபாய்க்கு வைத்தியம் பார்க்கும் போது இவர் மட்டும் 200 ரூபாய்க்கு வைத்தியம் பார்க்கிறாரே
இதில் முக்கிய விஷயம் ஒன்று உள்ளது : வயிற்றுப்போக்கு என்றால் சிரைவழியாக சிப்ரோவோ மெட்ரோவோ ஏற்றும் மருத்துவர் ஏமாற்று பேர்வழி - ஏன் புரிகிறதா - அவை எல்லாம் 100 மிலி பாட்டில்களில் வரும் விலை உயர்ந்த மருந்துகள். ஆனால் வெறும் சலைன் மற்றும் ஏற்றுபவர் நல்ல மருத்துவர். காரணம் அது 500 மிலி பெரிய பாட்டில்
வயிற்றுப்போக்கிற்கு விலை உயர்ந்த சிப்ரோ அளிப்பவரை ஏமாற்றுக்காரராகவும், விலை குறைந்த சலைன் அளிப்பவரை நல்ல மருத்துவராகவும் பார்க்கும் சமூகம் தான் இங்குள்ளது
ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினமும் 20 நோயாளிகளுக்கு சிரை வழி திரவம் ஏற்றி பாருங்கள். நீங்கள் அந்த பகுதியின் குறுநில மன்னராக இருக்கலாம்
சமீபத்தில் விவாதம் ஒன்றில் ஜெயமோகன் மருத்துவர்கள் தேவையில்லாத மருந்துகளை எழுதுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார். ஆனால் ஆதாரம் கேட்ட போது தினறினார். இதற்கு ஏன் தினற வேண்டும் என்று சத்தியமாக தெரியவில்லை. அரசு மருத்துவமனைகளில் போடப்படும் ஊசிகளில் 95 சதம் தேவையற்றதே. ஆனால் அதற்கு யார் காரணம். காரணம் தெரியாதவர்கள் எதாவது ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலை 9 மணி முதல் 11 மணி வரை மருத்துவரின் அருகில் அமர்ந்து தெரிந்து கொள்ளலாம். முடிந்தால் ஊசி தேவையில்லை என்று சொல்லி பாருங்களேன். உங்கள் சமார்த்தியம். !!!
ஒருவர் உடம்பில் ஓடும் சுமார் 5 லிட்டர் (5000 மில்லி லிட்டர்) இரத்ததில் இருந்து சுமார் 350 மிலி பெறப்படுவது இரத்த தானம்
உயிருடன் இருப்பவர்கள் மட்டுமே அளிக்க முடியும்.
எத்தனை முறை வேண்டுமானாலும் அளிக்கலாம்
சில நாட்களில் இரத்தம் மீண்டும் ஊறி விடும்
தானம் பெற்றவருக்கும் தானம் அளித்தவரின் இரத்தமும் ஒரே வகையாக இருக்க வேண்டும் என்பது அவசியம் (இதற்கு சில விதிவிலக்குகள் உள்ளன)
பலன் : இரத்தம் தேவைப்படும் பிணியாளருக்கு. ஒவ்வொரு முறையும் ஒரு உயிரை காக்கலாம். இரத்தம் கூறுகளாக பிரிக்கப்பட்டால் ஒரே முறையில் பல பிணியாளர்க்ளுக்கு பயன் படும்.
உதிரக்கொடை அளிக்க விரும்பினால் : அருகிலுள்ள அரசு மருத்துவமனையின் உதிரவங்கியை அணுகவும்
பார்வைக்கொடை (கண் தானம்) :
உயிருடன் உள்ள ஒருவர் கண் தானம் செய்ய முடியாது. கண் தானம் செய்ய இசைவு தெரிவிக்கலாம் (இந்த வேறுபாட்டை புரிந்து கொள்ளவும்) அல்லது ஒரு நபர் இறந்த பின்னர் அவரது உறவினர்கள் தானம் செய்யலாம்
ஒருவர் இறந்த பின்னரே அவரது கண்கள் எடுக்கப்படும்.
இயற்கை மரணம் என்றாலும் எடுக்கப்படும்
மூளை சாவு என்றாலும் எடுக்கப்படும்
கண்கள் எடுக்கப்பட்ட பின் பிரேத உடல் உறவினர்களிடம் அளிக்கப்படும்
எடுக்கப்பட்ட கண்களின் விழித்திரை அடுத்த நபருக்கு பொருத்தப்படும்
தானம் பெற்றவருக்கும் தானம் அளித்தவரின் இரத்தமும் ஒரே வகையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
பலன் : விழித்திரை நோயால் பார்வையிழந்த இரு நபர்களுக்கு.
எலும்பு கொடை (எலும்பு தானம்) :
உயிருடன் உள்ள ஒருவர் எலும்பு தானம் செய்ய முடியாது. கண் தானம் செய்ய இசைவு தெரிவிக்கலாம் (இந்த வேறுபாட்டை புரிந்து கொள்ளவும்) அல்லது ஒரு நபர் இறந்த பின்னர் அவரது உறவினர்கள் தானம் செய்யலாம்
ஒருவர் இறந்த பின்னரே அவரது எலும்புகள் எடுக்கப்படும்
இயற்கை மரணம் என்றாலும் எடுக்கப்படும்
மூளை சாவு என்றாலும் எடுக்கப்படும்
பிரேத உடல் உறவினர்களிடம் அளிக்கப்படும்
எலும்பு வங்கி இருக்கும் ஊர்களிலேயே இது கடை பிடிக்கப்படுகிறது
எடுக்கப்பட்ட எலும்புகள் எலும்பு வங்கியில் வைக்கப்படும்.
தானம் பெற்றவருக்கும் தானம் அளித்தவரின் இரத்தமும் ஒரே வகையாக இருக்க வேண்டும் என்பது அவசியம்
இது தவிர இருவரின் HLAக்களும் முரணாக இருக்க கூடாது
பலன் : பல பிணியாளர்களுக்கு
உறுப்புக்கொடை (உறுப்பு தானம்) :
உயிருடன் உள்ள ஒருவர் உறுப்பு தானம் செய்ய முடியாது. உறுப்பு தானம் செய்ய இசைவு தெரிவிக்கலாம் (இந்த வேறுபாட்டை புரிந்து கொள்ளவும்) அல்லது ஒரு நபர் மூளைச்சாவால் இறந்த பின்னரே அவரது உறவினர்கள் தானம் செய்யலாம்
மூளை சாவு என்றால் மட்டுமே எடுக்கப்படும்.
சிறுநீரகங்கள், ஈரல், இதயம், நுரையீரல், தோல் உட்பட பல உறுப்புகள் எடுக்கப்படும்
பிரேத உடல் உறவினர்களிடம் அளிக்கப்படும்
தானம் பெற்றவருக்கும் தானம் அளித்தவரின் இரத்தமும் ஒரே வகையாக இருக்க வேண்டும் என்பது அவசியம்
இது தவிர இருவரின் HLAக்களும் முரணாக இருக்க கூடாது
பலன் : பல பிணியாளர்களுக்கு
முக்கிய குறிப்பு : உயிருடன் உள்ள நபர்கள் தங்களின் நெருங்கிய உறவினர்களுக்கு, அல்லது தங்கள் விரும்பும் ஒரு நபருக்கு ஒரு கிட்னி தானம் செய்ய சட்டத்தில் ஒரு ஓட்டை உள்ளது. தற்சமயம் உள்ள Transplantation of Human Organs Act 1994 திருத்தப்பட உள்ளது. அதன் பிறகு இந்த ஓட்டை அடைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
உடல்கொடை (உடல்தானம்) :
உயிருடன் உள்ள ஒருவர் உடல் தானம் செய்ய இசைவு தெரிவிக்கலாம் அல்லது ஒரு நபர் இறந்த பின்னர் அவரது உறவினர்கள் தானம் செய்யஇசைவு தெரிவிக்கலாம்
இயற்கை மரணம் என்றால் மட்டுமே பெறப்படும். விபத்து என்றால் உடல் பெறப்படமாட்டாது
உடல் உறவினர்களிடம் அளிக்கப்படாது.
உடல் உடற்கூறியல் பிரிவில் வைக்கப்படும். முதல் வருட மாணவர்கள் உடற்கூறியல் குறித்து படித்த அறிவதற்காக உடல் பயன்படும்
அவ்வாறு தானம் அளிக்கப்பட்ட உடலிருந்து கண்களும், எலும்புகளும் எடுக்கப்படலாம். இவை பிணியாளர்களுக்கு பயன் படும்
பலன் : கண்களால் இருவருக்கு, எலும்புகளால் பல பிணியாளர்களுக்கு, மற்றும் மருத்துவ மாணவர்களுக்கு.
உறுப்பு தானம் என்பது வேறு !! உடல் தானம் என்பது வேறு. உறுப்பு தானம் என்பது மூளைச்சாவு எற்பட்டால் மட்டுமே. அதன் மூலம் மற்றொரு உயிரை காக்கலாம். உடல் தானம் என்பது இயற்கை மரணம் ஏற்பட்டால் மட்டுமே. இது மருத்துவ மாணவர்களின் பயிற்சிக்காக. உடல் தானம் மூலம் இதய மாற்று அறுவை சிகிச்சை நடப்பதாக எழுதப்படுவது நிஜமல்ல !!
சென்ற வாரம் மாற்று மருத்துவ முறைகளுக்கு சாவு மணி அடிக்கும் தீர்ப்பு ஒன்று உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து இந்த இடுகையில் சில விவாதங்கள் நடைபெற்றன.
பதிவர் விந்தைமனிதன் தனது இடுகையில் http://vinthaimanithan.blogspot.com/2010/07/dr.html சில கருத்துக்களை தெரிவித்திருந்தார்
அலோபதி மருத்துவமும், அதுசார்ந்த மருந்தியல் நிறுவனங்களும் நோயாளிகளை வெறும் வாடிக்கையாளர்களாக நுகர்வு பிண்டங்களாக மட்டுமே பார்க்கும் அவலம் இன்று தலைவிரித்து ஆடுகின்றது.
இந்த நிலையில் சித்த மருத்துவர்கள் சித்த மருந்தை தராமல் அலோபதி மருந்து தந்தால் இந்த நிலை மோசமாகுமா, சரியாகுமா
இந்த நிலையில் ஆயுர்வேத மருத்துவர்கள் ஆயுர்வேத மருந்தை தராமல் அலோபதி மருந்து தந்தால் இந்த நிலை மோசமாகுமா, சரியாகுமா
இந்த நிலையில் ஹோமியோபதி மருத்துவர்கள் ஹோமியோபதி மருந்தை தராமல் அலோபதி மருந்து தந்தால் இந்த நிலை மோசமாகுமா, சரியாகுமா
இந்த நிலையில் யுனானி மருத்துவர்கள் யுனானி மருந்தை தராமல் அலோபதி மருந்து தந்தால் இந்த நிலை மோசமாகுமா, சரியாகுமா
--
மாற்று மருத்துவம் வளர வேண்டும் என்பது உங்கள் ஆசை என்றால் நீங்கள் இந்த தீர்ப்பை ஆதரிக்க வேண்டுமா எதிர்க்க வேண்டுமா
--
சித்த மருத்துவர்கள் சித்த மருந்தை தராமல் அலோபதி மருந்தை தருவதினால் சித்த மருத்துவம் வளருமா தேயுமா
ஆயுர்வேத மருத்துவர்கள் ஆயுர்வேத மருந்தை தராமல் அலோபதி மருந்தை தருவதினால் ஆயுர்வேத மருத்துவம் வளருமா தேயுமா
ஹோமியோபதி மருத்துவர்கள் ஹோமியோபதி தராமல் அலோபதி மருந்தை தருவதினால் ஹோமியோபதி மருத்துவம் வளருமா தேயுமா
யுனானி மருத்துவர்கள் யுனானி மருந்தை தராமல் அலோபதி மருந்தை தருவதினால் யுனானி மருத்துவம் வளருமா தேயுமா
நன்றி : தி இந்து : http://www.thehindu.com/news/cities/Chennai/article542577.ece
நேற்று சென்னை உயர் நீதிமன்றம் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்திருக்கிறது.
அதாவது சித்தா, ஆயூர்வேதம், யுனானி, ஹோமியோபதி முறை மருத்துவம் கற்றவர்கள் அலோபதி முறையிலுள்ள மருத்துவம், அறுவை சிகிச்சை, பெண்கள் சிறப்பு சிகிச்சை, மகப்பேறு, கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம் ஆகியவற்றை பயன்படுத்தலாம் என்பதே அந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு ( Siddha, Ayurveda, Homoeopathy and Unani, who are also eligible to practice modern scientific medicine, including surgery, gynaecology, obstetrics, anaesthesiology, ENT and ophthalmology)
இவ்வளவு நாளாக அலோபதியில் குணமாக்க முடியாத நோய்களை நாங்கள் குணமாக்குகிறோம் என்று புருடா விட்டு நோயாளிகளிடமிருந்து பணம் பறித்து வந்தவர்களின் நிலை இப்பொழுது வெட்ட வெளிச்சமாகிறது
அலோபதி மருந்துகள் பக்க விளைவு, எங்கள் மருந்தில் பக்க விளைவே கிடையாது என்று ஊரை ஏமாற்றியவர்களும், அவர்களுக்கு ஆதரவாக எழுதிவந்த பதிவர்கள் சிலரும் இப்பொழுது முகத்தை எங்கு வைத்து கொள்ள போகிறார்கள் என்று அறிய ஆவல்
உடனடியாக தோன்றும் கேள்விகள் இவை
“அலோபதியில் குணமாக்க முடியாத நோய்களை மாற்று மருத்துவத்தில் குணமாக்க முடியும்” என்பது உண்மையென்றால் எங்களை அலோபதி முறையில் வைத்தியம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ஏன் உயர் நீதிமன்றத்தில் கெஞ்ச வேண்டும்
“அலோபதி மருந்தில் பக்க விளைவு உணடு, எங்கள் மருந்தில் பக்க விளைவு கிடையாது” என்று இவர்கள் கூறுவது உண்மையென்றால் ஏன் அலோபதி மருந்துக்களை பரிந்துரைக்க அனுமதி கேட்கிறார்கள்
இவர்கள் படிப்பது ஆயுர்வேதம், ஆனால் சிகிச்சை அளிப்பது அலோபதி முறையில் என்றால், ஆயுர்வேத, சித்த, ஹோமியோபதி மருத்துவ கல்லூரிகள் தேவையா. அவற்றை எல்லாம் மூடி விட்டு அவற்றையும் அலோபதி மருத்துவகல்லூரிகளாக மாற்ற வேண்டியது தானே
பிற பதிவர்கள் மற்றும் வாசகர்களின் கருத்துக்களை தெரிந்து கொள்ள ஆவல்
துனை கேள்விகள் : இப்படி எங்கள் மருத்துவமுறை பலனற்றது. எனவே எங்களை அலோபதி முறையில் சிகிச்சை அளிக்க அனுமதியுங்கள் என்று சிலர் வழக்கு தொடுத்ததில் மாற்று மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கும் அனைத்து மருத்துவர்களுக்கும் உடன்பாடு உண்டா அல்லது இது ஒரு சிலரின் வேலை ??
இப்படி அலோபதியே மேலானது, எங்கள் மருத்துவமுறை பலனற்றது என்று இவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததை அனைத்து சித்த, ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி மருத்துவ நிபுணர்களும் ஏற்றுக்கொள்கிறார்களா
50 வருடங்களுக்கு முன்னர் :
புழுதியும் அனல்காற்றும் போட்டி போட்டுக்கொண்டு முகத்தில் அறையும் அந்த சாலையில் எம்.டி.டி 2727 பதிவு எண்ணைவுடைய அந்த சீருந்து சென்று கொண்டிருந்தது. வழியில் ஒரு தொடர்வண்டி இருப்பு பாதை. தொடர்வண்டி வரும் நேரம் என்பதால் கதவு அடைத்திருந்தது.
எனவே வண்டி நிற்க வேண்டிய சூழல். வண்டியிலிருந்த அவர் இறங்கி காலாற வெளியில் நடக்கிறார். சாலையின் அருகில் ஒரு சிறுவன் மாடு மேய்த்துக்கொண்டிருப்பதை பார்த்து ஆச்சரியப்படுகிறார். அரசு பள்ளிக்கூடங்களில் கல்வி இலவசமாயிற்றே. அப்படியும் கூட இவன் ஏன் படிக்கவில்லை. படிக்கும் வயதில் மாடு மேய்க்கிறானே என்று பல எண்ணவோட்டங்கள்.
அவனிடமே கேட்கிறார் “தம்பி, நீ படிக்க வில்லையா, ஏன் மாடு மேய்த்துக்கொண்டிருக்கிறாய்”
சிறுவன் அசரவேயில்லை. பாக்கு வெட்டியிலிருந்து தெறிக்கும் பாக்குதுண்டுகளை போல் அவனிடமிருந்து பதில் வருகிறது “இஸ்கூலுக்கு போனா சாப்பாட்டுக்கு என்ன பண்ணுரதாம் ??”
சிறுவனோ ஒரே நொடியில் பதில் கூறிவிட்டான்
அவரிடமோ பல கணங்கள் ஆழ்ந்த மௌனம். அந்த பதிலின் ஆழம் அவரை நேரடியாக தாக்குகிறது. குலக்கல்வி திட்டத்தில் மூடப்பட்ட 6000 பள்ளிகளை அவர் மீண்டும் திறந்தார். அது தவிர மேலும் 12000 பள்ளிகளை புதிதாக திறந்தார். ஆனால் பல பள்ளிகளில் போதிய மாணவர்கள் எண்ணிக்கை இல்லை. அவருக்கு அதுவரை காரணம் புரியவில்லை அனைத்து பள்ளிகளிலும் கல்வி இலவசம் தான். ஆனால் அது மட்டும் ஏழ்மையை எதிர்கொள்ள போதாது என்பதை அப்பொழுது தான் அவர் உணர்கிறார்.
பிறகு சுதாரித்து விட்டு கேட்கிறார் “பள்ளிக்கூடத்தில் சாப்பாடு போட்டால் நீ படிக்க வருவாயா ??”
சென்னை வந்தார். பள்ளிகளில் மதிய உணவு இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று கூறினார். பலரும் எதிர்த்தார்கள். ஆனால் அவர் அசரவேயில்லை. விடாப்பிடியாக திட்டத்தை செயல்படுத்தினார்
அந்த சிறுவன் யார் என்று வரலாறு பதிவு செய்து வைக்கவில்லை. ஆனால் அவரின் மனதில் அவன் விதைத்த விதையானது உயிர் கொண்டு வளர்ந்து விருட்சமானது. அந்த விருட்சத்தின் பழங்களிலிருந்து மேலும் பல மரங்கள் வந்தது. அடுத்த ஐம்பது ஆண்டுகளில் ஒரு சோலையே உருவாகிவிட்டது.
இன்று அவரின் 108ஆவது பிறந்தநாள்.
"நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
தன் வீடு பார்க்காமல் வாழ்வு பார்க்காமல்
இந்த நாடு முன்னேற நாளும் உழைத்தவனை - நாடு பார்த்துண்டா ..
வலிமை இருந்த போதும் மிக எளிமையோடு இருந்தான்
வெள்ளை உள்ளம் கொண்ட எங்கள் கருப்பு காந்தி இவனே"
பொறுப்பு துறப்பு : இந்த இடுகையில் உள்ள கர்ண பரம்பரை கதைக்கு சான்று, ஆதாரம், உசாத்துணை எதுவும் என்னிடம் இல்லை. சிறிது தேடிப்பார்த்ததில் இந்த தளத்தில் எழுதப்பட்டுள்ளது என்பதை கண்டுபிடித்தேன் http://en.wikipedia.org/wiki/Mid-day_Meal_Scheme. ஆனால் அங்கும் உசாத்துணைகளோ சான்றுகளோ இல்லை.