இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Saturday, September 30, 2006

வண்டிமலையசாமி மற்றும் வண்டிமலைச்சியம்மன்

வண்டிமலையசாமி மற்றும் வண்டிமலைச்சியம்மன் ஆகியோர் தூத்துக்குடி , திருநெல்வேலி மற்றும் அருகில் உள்ள தமிழக மாவட்டங்களில் வணங்கப்பட்டு வரும் தொல்தமிழ் தெய்வங்கள் ஆவார்கள்.

இந்த படம் எட்டயாபுரத்தில் எடுக்கப்பட்டது. சுந்தர் (http://enkirukkal.blogspot.com) தனது flickr தளத்தில் ஏற்றியிருந்த படம் (http://flickr.com/photos/51035553987@N01/228052647/) இங்கு கொடுக்கப்பட்டுள்ளது

வண்டிமலையசாமி மற்றும் வண்டிமலைச்சியம்மன் மற்றும் இதர தொல் தமிழக கடவுள்கள் மக்களுக்கு கலாச்சார ரீதியாக மிகவும் அருகாமையில் உள்ளனர். அதிக மனித குணமும் சிறிது கடவுள் குணமும் கொண்டவர்களாக உருவகப் படுத்தப்பட்டுள்ளனர். சாதாரண மாந்தர் போலவே இவர்களுக்கு உணவும் படைக்கப்படுகிறது. கோழி, ஆடு (சில நேரங்களில் சாராயம் கூட - மேலே தரப்பட்டுள்ள கடவுளுக்கு இது - மது- தரப்படுகிறதா என்பது தெரியாது) படையல் இடப்படுகிறது.

தற்பொழுது இது போன்ற கடவுள்களின் கோயில்கள் படிப்படியாக மாற்றப்பட்டு வருகின்றன. இக்கோயில்கள் இந்து மதத்துடன் இனைக்கப்பட்டு தமிழர்களின் புராதான கடவுள்கள் படிப்படியாக மறைக்கப்படுகின்றன.

பல வண்டிமலையசாமி கோயில்கள் புணரமைக்கப்படும் போது கற்சிலைகள் மாற்றப் பட்டு, சாமி உக்கார வைக்கப்படுகிறது. (மேலே உள்ள படத்தை நன்றாக பாருங்கள் !!!) விநாயகர் வந்து விடுகிறார். நவக்கிரகங்கள் நுழைக்கப்படுகின்றன. கடவுளை வேண்டும்போது தமிழ் மறைகிறது. சமஸ்கிருதம் நுழைகிறது !!!

Sunday, September 17, 2006

தமிழக காவல் நிலையங்கள்

மணிமலர் அவர்கள் தமது பதிவில் கூறிய இந்த ஒரு கருத்தைப் பற்றி எனது அனுபவங்களை இப்பதிவிலிடுகிறேன்
நமது நாட்டை பொறுத்தவரை தொலைபேசிகூட இல்லாத காவல்நிலையங்கள் இருக்கின்ற நிலையில்
எனக்கு தெரிந்த வரையில் இன்று (இந்த வருடம் 2006) தமிழத்தில் உள்ள துறைகளிலேயே மிகவும் நவீன மயமான துறை காவல்துறை தான் என்று உறுதியாக கூற முடியும்.

தமிழகத்தின் அனைத்து காவல் நிலையங்களிலும்
  • தொலைபேசி உள்ளது (தொலைபேசி இல்லாத அரசு மருத்துவமனைகள் நிறைய உள்ளது வேறு விஷயம் !!!!)
  • கணணி உள்ளது
  • Fax Cum Scanner/ Laser Printer உள்ளது. இதன் மூலம் குறைந்த செலவில் Xerox எடுக்க முடியும்
  • Internet வசதி இருக்கிறது
  • கணணி WAN மூலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துடன் இனைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் DCRB தகவல்கள் விரைவாக பெற முடியும்
அவரது கருத்துக்கள் பீகார் போன்ற மாநிலங்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். தமிழகதிற்கு அல்ல

Saturday, September 16, 2006

தனியார் வங்கிகள் நாமம்

தனியார் வங்கிகளில் நமது பணம் = நாமம்

இங்கு பார்க்கவும்

Friday, September 08, 2006

தேளா பாம்பா

அண்ணாகண்ணன் அவர்கள் தனது பதிவில் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்
தேள் என்பது, பாம்பு அளவுக்குக் கொடிய விஷம் உடையது இல்லை. கடித்தவுடன் இறந்துவிடுவார்கள் என்ற நிலை இல்லை. கடித்ததும் உடனே முதலுதவிகள் செய்தால் கடிபட்டவர் பிழைத்துவிட வாய்ப்பு உண்டு. ஆனால், அலட்சியம் என்பது தேளைக் காட்டிலும் கொடியது. அது, இருந்தால் பெருங்கேடு உறுதி.
இதில் முதல் வரியை தவிர மீதி அனைத்து வரிகளிலும் எனக்கு உடன்பாடுதான். உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். தேளானது பாம்பை விட கொடிய விஷமுடையதா?
பாம்பின் விஷம் கொல்லக்குடியதாக இருந்தாலும் அதற்கு ஏற்ற மருந்துகள் நம்மிடம் உள்ளன. பாம்புகள் பலவிதம். ஆனால் விஷம் நான்கு விதம் தான். அரசு (மற்றும் தனியார்) மருத்துவமனைகளில் இருக்கும் மருந்தில் (ASV) இந்த நான்கு வகை விஷத்தையும் முறியடிக்கக் கூடிய மாற்று மருந்து (Antidote) சரியான விகிதத்தில் கலந்து இருக்கும். எனவே பாம்பு கடித்த உடனேயோ அல்லது பாம்பு கடித்து இரண்டு மணி நேரத்திற்குள்ளோ அந்த நபரை அரசு (அல்லது இந்த மருந்து வைத்திருக்கும் தனியார்) மருத்துவமனைக்கு கொண்டு வந்தால் உறுதியாக (100 சதவிகிதம்) உயிரை காப்பாற்றி விடலாம்.

தற்பொழுது உள்ள மருந்தில் (ASV) நான்கு வகை விஷத்தையும் முறியடிக்கக் கூடிய மாற்று மருந்து (Antidote) உள்ளதால் பாம்பு கடித்த நபரை மட்டும் மருத்துவமனைக்கு கொண்டு வந்தால் போதும். பாம்பு தேவையில்லை !!! ஆனாலும் பலர் அந்த பாம்பையும் கொன்று(டு) வருகிறார்கள்

தேள் கடித்தால்தான் மருத்துவருக்கு தலைவலி ஆரம்பம்.
தேள் பல வகை.... அதன் விஷமும் பலவகை.....
இதில் முக்கிய சிக்கல் என்னவென்றால், ஒவ்வொரு விஷத்திற்கும் ஒவ்வொரு மாற்றுமருந்து. அதில் இந்தியாவில் ஒரு சில வகை மருந்துகள்தான் உள்ளன. பல வகை மருந்துகள் உலகில் எங்குமே கிடையாது
மற்றுமொரு தலைவலி, ஒரே தேள் கடியில் பல வகை விஷங்கள் கூட இருக்கலாம்

இதில் ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி

நல்ல செய்தி என்னவென்றால், பெரும்பாலான விஷங்களினால் உயிருக்கு எந்த ஆபத்தும் கிடையாது. Lignocaine என்ற மருந்தை செலுத்தினாலோ அல்லது வெங்காயத்தை அரைத்து பூசினாலோ வலி சரியாகிவிடும்

கெட்ட செய்தி என்னவென்றால், சில வகை விஷங்கள் Myocarditis ஏற்படுத்தி இதயத்தை பாதிக்கும். அப்பிடி Myocarditis வந்துவிட்டது என்றால் 99.99 (இந்தியாவில்) சதவிதம் நோயாளியை காப்பாற்ற முடியாது. (வெளி நாட்டில் உயிர் பிழைக்கும் வாய்ப்பு 20 சதவிதம் தான்)

எனவே, ஒரு பக்கம் பாம்பு ஒரு பக்கம் தேள் என்று மாட்டிக் கொண்டால், பாம்பு உள்ள பக்கம் வாருங்கள்...... Myocarditis வந்தால் வைத்தியம் (இந்தியாவில்)கிடையாது
கருத்துரைத்த அனைவருக்கும் நன்றி. டாக்டர் புரூனோவின் குறிப்புகள், பயனுள்ளவை. 'அரணை கடித்தால் அரை விஷம், தேள் கடித்தால் முக்கால் விஷம், பாம்பு கடித்தால் முழு விஷம்' என்பது போல் ஒரு சொற்றொடரை என் இளவயதில் கேட்டிருக்கிறேன். இன்னொன்று, பாம்பு கடித்து இறந்ததாகத்தான் நிறைய செய்திகள் வருகின்றன. அந்த அடிப்படையில் ஒரு கணிப்பாகத்தான் அப்படி எழுதினேன்.

நான் பதிவு எழுதியதின் நோக்கம், தேள் விஷம் (நாம் நினைத்து கொண்டிருப்பதை விடவும் மிகவும்)கொடியது என்பதை சுட்டி காட்டத்தான். இந்த பதிவை படித்துவிட்டு யாரும் பாம்பிடம் சென்று "மெனக்கெட்டு" கடி வாங்கினால் நான் பொறுப்பல்ல !!!!

மற்றுமொரு விஷயம்.

1. பாம்பு கடி பட்டு ஒருவர் அரசு மருத்துவமனை வந்தால் அது குறித்து போலிசுக்கு தெரிவித்து MLC(Medicl Legal Case) பதியப்படுகிறது. அந்த நோயாளி மரணமடைந்தால் அதுவும் போலிசுக்கு தெரிவிக்கப்பட்டு அதனால் இது குறித்த புள்ளி விபரங்கள்(Statistics) நிறைய உள்ளன.

2. தேள் கடி குறித்த புள்ளி விபரங்கள் முறையாக சேகரிக்கப்படாததால் இது குறித்து விழிப்புணர்வு அதிகம் இல்லை.

56,000 பேருக்கு வேலை

அடுத்த ஒரு வருடத்தில் தமிழகத்தில் 56,000 பேருக்கு வேலைவாய்ப்பு உள்ளது என்று ரீடிப் தெரிவிக்கிறது

மதுரை புத்தக கண்காட்சி

சென்ற திங்கள் மற்றும் செவ்வாய் (4 மற்றும் 5 செப்டம்பர்) இரண்டு நாட்களும் மதுரை புத்தக கண்காட்சி சென்று சுமார் 3500 மதிப்பிலான புத்தகங்களை வாங்கினேன். பெரும்பாலான கடைகளில் வெறும் 10 % மற்றுமே தள்ளுபடி தருகிறார்கள்

பயணங்கள்

Travels in Road as well as in Mind
இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...