“ஒரு புத்திசாலி நுகர்வோர் எப்படியிருப்பான்? சந்தைக்கு வரும் ஒரு பொருளில் தரம் நன்றாக இருக்கிறதா என்பதை அறிந்து, பின்னரே வாங்க முடிவெடுப்பான். ஆனால், உன் போன்ற ரசிகர்கள்? பொருள் தரமோ, இல்லையோ...அது எப்படியிருக்கிறது என்று பார்ப்பதற்காக வாங்க முடிவெடுக்கிறீர்கள்”என்று எழுதியிருந்தார்.
அந்த Read பதிவு மட்டும் அதன் தலைப்பை மீண்டும் ஒரு முறை வாசியுங்கள்
கல்கி, அகிலன் போன்ற எழுத்தாளர்களின் தொடர்கதைகள் வெளி வந்த காலங்களில், வீட்டில் யார் முதலில் படிப்பது என்ற போட்டி இருக்குமாம். படிக்க தூண்டும் ஆர்வத்தை எற்படுத்துவது ஒரு எழுத்தாளரின் திறமை.
ஆனால் ஹாரி மரணமடைவானா என்ற கேள்வியை எழுப்பி, அதை விட மோசம் - ஹாரிக்கு உயிர் கொடுக்க - ஒரு இயக்கம் வேறு ஆரம்பித்து, என்னவோ முதல் நாளில் இந்த புத்தகத்தை படிக்காவிட்டால் உலகமே இருட்டாகி விட்டது என்ற தோற்றம் திட்டமிடப்பட்டு ஏற்படுத்தப்பட்டது.
ஒரு பொருள் (அல்லது சேவை) விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் பொழுது விலை குறைப்பது அல்லது சில நேரங்களில் இலவசமாக அளிப்பது என்பது தான்இது நாள் வரையில் கடைபிடிக்கப்பட்ட உத்தி...... உதாரணம் - ஒரு மாததிற்கு இலவசமாக உபயோகிக்கக்கூடிய மென்பொருள்கள் (30 day இலவசமாக உபயோகிக்கலாம்) மற்றும் குமுதம் ரிப்போட்டர், நாணயம் விகடன் போன்ற புத்தகங்களின் அறிமுகம்
வழக்கமாக, புத்தக விற்பனையை அதிகப்படுத்த அறிமுக நாளில் விலை குறைப்பார்கள். அல்லது முன்னதாக pre order செய்பவர்களுக்கு 33% முதல் 40% வரை தள்ளுபடி தரப்படும்.
அதை விடுத்து அதற்கு நேர் எதிர் திசையில் முதல் நாளில் விலை அதிகமாக வைத்து அனைவரையும் (முட்டாளாக்கி) வாங்க வைத்த (பதிப்பகத்தின்) புத்திசாலிதனத்தை பாராட்டத்தான் வேண்டும். !!!