இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்
இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

கட்டாய சேவைத்திட்டத்தில் 150க்கு மேற்பட்ட மருத்துவர்கள் நியமனம்

இது புது கருத்துக்கள் மற்றும் புது சுட்டிகள் சேர்க்கப்பட்ட ஒரு மீள்பதிவு : 

தமிழகத்தில் 2009 ஏப்ரல் மாதத்தில் கட்டாய சேவைத்திட்டத்தில் 150க்கு மேற்பட்ட மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்........

செய்தியை கேட்டவுடன் உங்களுக்கு பல வினாக்கள் எழுந்திருக்கும். முக்கியமாக
  1. இது குறித்து ஏன் ஊடகங்களில் பெரிதாக விவாதிக்கப்படவில்லை / எழுதப்படவில்லை
  2. மாணவர்கள் வீதிக்கு வந்து போராடினார்களே, எதிர்ப்பு என்னவாயிற்று
  3. அப்படி என்றால் மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் நடைமுறைக்கு வந்து விட்டதா.
என்றெல்லாம் கேள்விகள் எழுவது நியாயமே

இனி விடைகள்

1. இது குறித்து ஏன் ஊடகங்களில் பெரிதாக விவாதிக்கப்படவில்லை / எழுதப்படவில்லை
ஏனென்றால் இது புது நிகழ்வு கிடையாது. வழக்கமான ஒன்றுதான். 2007ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்படும் நடைமுறைதான். மூன்றாவது வருடமாக இந்த வருடம் நியமனம் நடக்கிறது

2. மாணவர்கள் வீதிக்கு வந்து போராடினார்களே, எதிர்ப்பு என்னவாயிற்று.
அந்த எதிர்ப்பு அப்படியேத்தான் உள்ளது. அது வேறு திட்டம். இது வேறு திட்டம் :) :(

3. அப்படி என்றால் மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் நடைமுறைக்கு வந்து விட்டதா.

அது வேறு. இது வேறு . இது மாநில அரசின் (தமிழக அரசின்) திட்டம். இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை

:) :)

குழப்பமாக இருக்கிறதா ? தெளிவு படுத்திவிடுகிறேன்

எம்.பி.பி.எஸ். படிப்பு முடிந்து அதன் பின் கட்டாயமாக ஒரு வருடம் அரசு மருத்துவ நிலையங்களில் (அதில் வெறும் 4 மாதங்கள் மட்டும் கிராமங்களில்) தினம் 266 ரூபாய்க்கு தொகுப்புதியத்தில் பணி புரிய வேண்டும் என்ற மத்திய அரசின் திட்டம் வேறு....

பட்ட மேற்படிப்பு படித்த பின் 2 அல்லது 3 ஆண்டுகள் கிராமப்புறங்களில் காலவரைமுறை ஊதியத்தில் பணி புரிய வேண்டும் என்ற தமிழக அரசின் திட்டம் வேறு

மத்திய அரசின் திட்டத்திற்கு தான் எதிர்ப்பே தவிர மாநில அரசின் திட்டத்தை யாரும் எதிர்க்க வில்லை. அது சீரிய முறையில் நடந்து கொண்டிருக்கிறது.

அது சரி, மத்திய அரசு ஒரு வருடம் பணி புரிய சொன்னதற்கே எதிர்த்தவர்கள் தமிழக அரசு மூன்று வருடம் பணி புரிய சொல்லும் போது எதிர்க்கவில்லையே.

ஏன்

எனென்றால் இரண்டு திட்டங்களுக்கும் பெரிரிரிய்ய்ய்யயயயயய வித்தியாசம் உள்ளது
மத்திய அரசின் திட்டம்தமிழக அரசின் திட்டம்
எம்.பி.பி.எஸ் முடிந்தபின்பட்டமேற்படிப்பு முடிந்தபின்
1 வருடம். அதில் 4 மாதங்கள் மட்டுமே கிராமப்புறங்களில். மற்றுமொரு நான்கு மாதம் மருத்துவக்கல்லூரியில்.இரண்டு (அல்லது மூன்று) வருடங்கள்
ஒரு மருத்துவர் வெறும் நான்கு மாதங்கள் மட்டுமே ஒரு நிலையத்தில் பணி புரிய முடியும்.மருத்துவர் விருப்பபடும் வரை அதே நிலையத்தில் பணிபுரியலாம்
தொகுப்பூதியம்கால முறை ஊதியம்
ஒப்பந்த பணிதமிழக அரசின் விதி 10 அ 1ன் கீழ் பணி நியமனம்
சம்பளம் 8000 ரூபாய் மட்டுமே8000-275-13500 என்ற சம்பள ஏற்றமுறையில் சம்பளம். மொத்தமாக சுமார் 22000 வரை பெறலாம்
ஆறாவது ஊதிய குழுவின் பரிந்துரைகள அமல்படுத்தப்பட்டாலும் சம்பளம் 8000 ரூபாய் மட்டுமேஆறாவது ஊதிய குழுவின் பரிந்துரைகள அமல்படுத்தப்பட்டபின் 26,000 வரை ஊதியம் அதிகரிக்கலாம்
ஏற்கனவே ஒரு மருத்துவர் பணி புரியும் இடத்தில், அந்த மருத்துவருக்கு பதிலாக (அதாவது அவரது வேலைக்கு ஆப்பு வைத்து விட்டு) நியமணம்இந்த திட்டத்திற்காக கடந்த ஆண்டுகளில் சுமார் 1600 பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன
வருங்காலத்தில் அரசு பணிக்கு மருத்துவர் நியமனம் தடை அல்லது மிகவும் குறைக்கப்படும்தமிழ்நாடு தேர்வானையம் (டி.என்.பி.எஸ்.சி) மூலம் நியமனம் தொடர்ந்து நடைபெரும். கட்டாய சேவை திட்டத்தில் மருத்துவர்கள் நியமனம் ஒரு புறம் நடந்து கொண்டிருக்கும் அதே நேரம் தேர்வாணையம் மூலம் மருத்துவர் தேர்வும் நடந்து கொண்டிருக்கிறது்
சட்டீஸ்கர் முதல் சம்பல் பள்ளத்தாக்கு வரை எங்கு வேண்டுமானாலும் நியமனம்பணியிடங்கள் தமிழகத்திற்கு உள் மட்டும்தான்
விடுப்பு கிடையாதுஅரசு ஊழியர்களுக்கு உள்ள அனைத்து விடுப்பும் உண்டு
மகப்பேறு விடுப்பு கூட கிடையாதுமகப்பேறு விடுப்பு உண்டு
ஒப்பந்த காலம் முடிந்தபின் மருத்துவர் வீட்டிற்கு அனுப்பப்படுவார்ஒப்பந்த காலம் முடிந்தபின் தொடரவேண்டுமெனறு மருத்துவர் விரும்பினால்  தொடரலாம். இதற்கென்று தமிழ்நாடு பொது தேர்வாணையம் நடத்தும் சிறப்பு தேர்வின் (Special TNPSC) மூலம்  பணி நிரந்திரம் செய்யப்படுவார்கள்
சம்பள உயர்வு கிடையாதுவருடாந்திர ஊதிய உயர்வும், அகவிலைப்படி உயர்வும் உண்டு
கண்டிப்பாக பணிபுரிய வேண்டும்அபராதம் செலுத்தினால் பணிபுரிய தேவையில்லை (அபராதம் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை)
அனைவரும் எதிர்க்கிறார்கள்வெளிமாநிலங்களிலிருந்து இங்கு பயிலுபவர்களை தவிர யாரும் எதிர்க்கவில்லை

இதில் முக்கிய விஷயங்கள்
  1. பணி நிரந்திரம்
  2. புதிதாக உருவாக்கப்பட்ட பணியிடங்கள்
  3. தேர்வானையம் மூலம் பணியிடங்கள் நிரப்பப்படுவது தொடர்வது
இன்று மருத்துவ கல்லூரிகளில் படிப்பவர்களை மூன்று விதமாக பிரிக்கலாம்
  1. ஒரு மருத்துவமனை சொந்தக்காரரின் மகன் / மகள் / மருமகன் / மருமகள் (நன்றாக கவனியுங்கள் - நான் மருத்துவர் என்று சொல்லவில்லை - மருத்துவமனை சொந்தக்காரர் என்று சொன்னேன் - இரண்டிற்கும் நிறைய வேறு பாடு உள்ளது. தமிழகத்தில் உள்ள 60,000 மருத்துவர்களில் 45,000 மருத்துவர்கள் சொந்த மருத்துவமனை வைத்திருப்பதில்லை)
  2. பிற தொழிலதிபர்களின் மகன் / மகள் மற்றும் அரசியல்வாதிகளின் மகன் / மகளும் இந்த குழுமத்தில் அடக்கம்
  3. ஆசிரியர்கள், அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள், விவசாயிகள், மளிகை கடை வைத்திருப்பவர்கள், வாகனம் பழுதுபார்க்கும் கடைக்காரர்கள், பிற அடிப்படை தொழிலாளிகளின் மகன் / மகள்.
இதில் முதலாவது வகையினர் (சுமார் 10 சதவிதம்) எம்.பி.பி.எஸ் முடித்த உடன் தங்களின் சொந்த மருத்துவ மனைகளில் தொழிலை ஆரம்பிக்கலாம்

இரண்டாவது ரகத்தினர் (சுமார் 10 சதவிதம்) வெளிநாடு செல்ல முயல்வார்கள்

மூன்றாவது தான் பெரும்பாண்மையே (80 சதவிதம்). இவர்களுக்கு தேவை அரசு வேலை.

இப்பொழுது மத்திய அரசின் திட்டத்தை ஏன் அனைவரும் எதிர்க்கிறார்கள் என்று எளிதாக புரிந்து கொள்ளலாம்
  • முதல் இரண்டு பிரிவினரும் மத்திய அரசின் திட்டத்தை எதிர்க்கும் காரணம் வேறு
  • மூன்றாவது பிரிவினர் எதிர்க்கும் காரணம் வேறு.
முதல் இரண்டு பிரிவினரும் படிப்பு முடிந்த உடன் பணிபுரிய மருத்துவமனை அல்லது கடவுச்சீட்டு (வெளிநாடு செல்ல) தயாராக உள்ளது. அவர்களை பொருத்தவரை இந்த திட்டத்தினால் அவர்களில் வாழ்க்கையில் ஒரு வருடம் வீணாகிறது. இவர்கள் எதிர்ப்பது ஒரு வருடம் கூடுவதற்காக

மூன்றாவது பிரிவினரின் நிலை முற்றிலும் வேறு
  • இதில் பெரும்பாலனவர்கள் கல்விக்கடன் வாங்கி படிப்பவர்கள்.
  • அவர்களின் பெற்றோர் ஓய்வு பெற்றிருப்பார்கள் அல்லது ஒரு வருடத்தில் ஓய்வு பெறும் நிலையில் இருப்பார்கள்.
  • அவர்களுக்கு குடும்பத்தை சுமக்க வேண்டிய கட்டாயம் இருக்கும் . (12ஆவது வகுப்பு வரை கூட படித்த பக்கத்து வீட்டு மாணவன், அப்பாவின் அலுவலக நண்பரின் மகள், சித்தப்பா மகன் அனைவரும் வேலைக்கு சென்று இரண்டு வருடமாகி, கார் வாங்கி, வீட்டிற்கு பணம் அனுப்பி, கடன் வாங்கி வீடு கட்ட வானம் தோண்டிவிட்ட நிலையில்) 
  • இவர்கள் அரசு வேலையை எதிர்நோக்கி இருக்கிறார்கள்.
மத்திய அரசின் திட்டத்தினால் அரசு பணியிடங்கள் சுமார் 35,000 வரை (இந்தியா முழுவதும்) ரத்து செய்யப்படுகிறது. எனவே இவர்களால் அரசு வேலையில் சேரவே முடியாது.

இந்த பிரிவினர் மத்திய அரசின் கட்டாய திட்டத்தை எதிர்ப்பதன் முக்கிய காரணம் படிப்பு காரணம் ஒரு வருடம் கூடுவதோ, அல்லது கிராமப்புறங்களுக்கு செல்லவேண்டும் என்பதோ அல்ல. பணியிடங்கள் ரத்து செய்யப்படுவதால் அவர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படுவதே மூன்றாவது பிரிவினர் மத்திய அரசின் திட்டத்தை எதிர்க்க காரணம்.

1 வருடம் வேலை செய்ய மாட்டேன் என்று கூறியவர்கள் 3 வருடம் வேலை செய்ய சம்மதித்தது ஏன்

ஏனென்றால்

1. தமிழக அரசின் திட்டத்தால் பணியிடங்கள் அழிக்கப்படவில்லை. மாறாக கடந்த சில வருடங்களாக சுமார் 1600 பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் கடந்த மூன்று வருடங்களில் சுமார் 4000 மருத்துவர்கள் கால முறை ஊதியத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்கள்

2. இரண்டு / மூன்று வருடம் கழித்து விருப்பப்பட்டால் அரசுப்பணியில் தொடரலாம்

3. சுமார் 22000 வரை மாதம் சம்பளம். வருடாந்திர ஊதிய உயர்வு உண்டு. ஆறாவது ஊதிய குழுவின் பரிந்துரைகள அமல்படுத்தப்பட்டபின் 26,000 வரை ஊதியம் அதிகரிக்கலாம்.

4. இரண்டு / மூன்று வருடம் வரை ஒரே இடத்தில் வேலை செய்யலாம். வெறும் நான்கு மாதம் மட்டும் ஒரு இடத்தில் வேலை பார்ப்பதால் உள்ள் நடைமுறை சிக்கல்கள் எத்தனை. அதிலும் எம்.பி.பி.எஸ் முடிக்கும் தருவாயில் உள்ள் பெண்கள் - 22 வயதில் - திருமணமாகி சிலர் கர்ப்பமாக இருப்பது வாடிக்கை.

வயிற்றில் குழந்தையுடன் , தனியாக, பீகார் சென்று வெறும் நான்கு மாதம் ஒரு ஊரில் தங்குவது என்பது நடைமுறையில் எவ்வளவு சிக்கல்களை உருவாக்கும்.

5. பிற்காலத்தில் அரசு பணியில் தொடர முடிவு செய்தால் வேலையில் சேரும் நாள் முதல் அரசு பணிக்காலம் கணக்கிலெடுக்கப்படும்.

இது தான் இந்த இரண்டு திட்டங்களுக்கும் உள்ள வித்தியாசம்

மத்திய அரசின் திட்டத்திற்கு எதிராக வீதியில் கோஷமிட்டவர்கள் , மாநில அரசு வேலை (அதே கிராமப்புரத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு) வேண்டுமென்று நீதிமன்றம் வரை சென்று போராடியதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் பிரச்சனை எதில் உள்ளது என்று ...

தமிழகத்தை பொருத்த வரை கிராமத்திற்கு போவதில் பிரச்சனையே கிடையாது. கிராமங்களில் உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு பொது தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் தேர்வுகளுக்கு 5000 விண்ணப்பங்களுக்கு மேல் தான் வரும்.

அரசு வேலை வேண்டாம் என்று மறுப்பவர்கள் 20 சதவிதம் கூட இருக்க மாட்டார்கள். (பெரும்பாலும் நான் குறிப்பிட்ட முதல் இரண்டு பிரிவினர் தான் அரசு வேலை வேண்டாம் என்பார்கள்). எனக்கு வேலை கொடு என்று வழக்கு உரைத்து வேலை வாங்குபவர்கள் தான் இங்கு அதிகம். இவர்கள் (கிராமங்களில் இருக்கும் சுகாதார நிலையங்களில் வேலைக்கு விண்ணப்பித்திருப்பவர்கள்) அனைவரும் கட்டாய கிராமப்புற திட்டத்தை எதிர்த்ததன் காரணம் என்னவென்றால் அது நிரந்திர வேலைவாய்ப்பை பாதிப்பதால்.

அதனால் தான் தமிழக அரசின் திட்டம் இரண்டு வருட கட்டாய பணியை வலியுருத்திய போதும் ஒரு எதிர்ப்பும் கிடையாது. பட்ட மேற்படிப்பு தேர்வு முடிந்த அடுத்த நாளே பத்து மருத்துவர்கள் பொது சுகாதார துறை இயக்குனரின் அலுவலகத்திற்கு வந்து வேலையில் சேர உத்தரவு கேட்டதிலிருந்தே உண்மை நிலவரம் என்ன என்பதையும் பிரச்சனை எது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

இதில் சொல்ல வேண்டிய் விஷயங்கள் பல உள்ளது. மேலும் ஒரு இடுகை எழுதலாம் என்று நினைத்துள்ளேன். உங்களில் சந்தேகங்கள் / கேள்விகளை பின்னூட்டத்தில் கூறினால் அடுத்த இடுகையில் விடை அளிக்கிறேன்.

நான் கூறிய பல கருத்துக்களும் ஆதாரங்களை சுட்டிகளில் அளித்துள்ளேன். சுட்டிகளை பார்த்தால் விபரங்களை நீங்களே புரிந்து கொள்ளலாம்

இந்த தொடரின் அடுத்த இடுகைகள்

36 மறுமொழிகள்:

மறுமொழி எண்
யாத்திரீகன் said...

டாக்டர் .. மிகவும் எளிமையான அதே நேரம் தெளிவான விளக்கம் .. மிகவும் நன்றி .. இதிலிருந்தே தெரிகிறது கிராமத்திற்கு போவதற்கு பிரச்சனையா இல்லை வேறா என்று ..

மறுமொழி எண்
புருனோ Bruno said...

யாத்திரீகன் சார்,

நன்றி. நீங்கள் மருத்துவர் இல்லை என்று நினைக்கிறேன். உங்களுக்கு புரிந்த்து என்றால் மகிழ்ச்சி :)

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//வவ்வால் எங்கே????//

பொய் தகவல்களை மட்டுமே பரப்பி வந்த அவர், எனது ஆதாரங்கள் மற்றும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் போனதை இங்கு பார்க்கலாம்

http://rathnesh.blogspot.com/2008/02/blog-post_09.html

மறுமொழி எண்
புருனோ Bruno said...

வவ்வால் கூறிய பெரும்பாலான புரட்டுகளுக்கு விளக்கம் மேலே தந்துள்ள பதிவின் பின்னூட்டங்களில் உள்ளது.

அவர் பொய்யையும் புரட்டையும் மட்டுமே கூறியனார். அவரது தகவல்கள் தவறு என்று நிருபிக்கப்பட்ட பின்னர் ஒரு மறுப்போ, வருத்தமோ தெரிவிக்கக்கூட முன்வராத “நாகரிக” ஆசாமி வவ்வால்.

முக்கியமாக சம்பள ஏற்ற முறை (Scale of Pay) குறித்த அவரது பதிவுகள் மிகச்சிறந்த காமெடி.

படித்து பாருங்கள். உண்மை தெரியும்.

மறுமொழி எண்
யாத்திரீகன் said...

:-) முட்டி மோதி நன்கு வருடங்கள் பொறியியல் படித்ததே போதும் போதும் என்றானது .. இதில மருத்துவரா ;-) நீங்க வேற ..

சார் வேணாமே .. :-)

என்னுடைய தங்கை ஒரு மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவி, இந்த வருடம் கல்லூரியில் சேருகிறாள் ..

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மூன்றாவது பிரிவை சேர்ந்தவள் என் தங்கை.//

உங்கள் தங்கை மட்டுமல்ல. 80 சதவித மருத்துவ மாணவர்கள் மூன்றாவது பிரிவு தான்.

மறுமொழி எண்
பிரபு ராஜதுரை said...

எவ்வளவு எளிதாக உங்களால் விளக்க முடிகிறது. இன்றுதான் இந்தப் பிரச்னை பற்றி முழுதாக தெரிந்து கொண்டேன்.

பேசாமல், போராடிய மாணவர் குழுவுக்கு உங்களை spokesperson ஆக்கி விடலாம்.

நன்றி!

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//பேசாமல், போராடிய மாணவர் குழுவுக்கு உங்களை spokesperson ஆக்கி விடலாம்.//
வக்கீல் வாயால் பாராட்டு :) :) :) :) நன்றி சார் :) :) :)

மறுமொழி எண்
moscow-mirage said...

amazing work Bruno sir ... ur infos can be read even by non medical public and are so easily understandable . best wishes on this sacred journey...

regards - Vairamuthu / pearllysun

மறுமொழி எண்
SUREஷ் said...

முதலில் பிறந்த பெண் என்றால் நிலமை.....

திருமணமா.. மேற்படிப்பா...

இவ்வளவு படித்த பெண்ணுக்கு அவருக்கு தகுந்த மாப்பிள்ளை..

அவருக்கு சீர்வரிசை.. சில சமுதாயங்களில் பல லட்சங்கள் கூட செல்வாகும்.

அவரைக் கொண்டுபோய் 8000 சம்பளத்திற்கு ஜார்கண்டில் வேலை செய்யச் சொன்னால்....

=============================

திருமணத்திற்கு தங்கை தயாராக இருக்கும் இளம் மருத்துவரை 8000 சம்பலத்திற்கு மும்பை அனுப்பினால் இன்னும் பரிதாபம். 8000த்தை வைத்து பெருநகரங்களில் அன்றாட அத்தியாவசிய தேவைகளை கூட நிறைவேற்ற முடியாது.

============================

இதையெல்லாம் கொத்தடிமைத்தனமாக நினைக்க மாட்டார்களா...

மறுமொழி எண்
வெட்டிப்பயல் said...

கலக்கல் பதிவு டாக்டர். பிரச்சனை இப்ப நல்லா புரியுது. உங்க விளக்கம் பிரமாதம்!!!

மறுமொழி எண்
அறிவன்#11802717200764379909 said...

தெளிவான செய்திகளுடனான பதிவு.

இது இவ்வளவு எளிதாக மாநில அளவில் ஏற்றுக் கொள்ளப் படும் போது மத்திய சுகாதார அமைச்சராக இருந்த அன்புமணி ஏன் இதை எல்லா மாநில அளவிலும் அந்தந்த மாநில சட்டமாக ஏற்றுக் கொள்ளவைக்க முயற்சிக்கவில்லை?

பொதுவாக அந்தந்த மாநில அளவில் அவர்களின் கிராமங்களில் வேலை செய்ய மருத்ததுவர்களுக்கு மனத்தடைகள் கிடையாது என்பதை நீங்கள் இந்தப் பதிவின் மூலம் சொல்கிறீர்கள் என்று நான் புரிந்து கொள்கிறேன்.இது சரி என்றால் அனைத்து மாநிலங்களும் இதே வகை விதி முறைகளைப் பின்பற்றலாமே...

இந்திய அளவில் எல்லா கிராமங்களுக்கும் மருத்துவர்கள் கிடைப்பார்களே...

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//இதையெல்லாம் கொத்தடிமைத்தனமாக நினைக்க மாட்டார்களா...//

அதனால் தானே அவ்வளவு எதிர்ப்பு தல

மறுமொழி எண்
புருனோ Bruno said...

அறிவன் சார்

மாநில அரசில் திட்டம் புதிதாக வேலையிடங்களை தோற்றுவிற்பது
மத்திய அரசின் திட்டம் இருக்கும் மருத்துவர் பணியிடங்களை ஒழித்து விட்டு அதற்கு பதில் தொகுப்புதியத்தில் அனுபவமில்லாத மருத்துவர்களை வைத்து “ஒப்பேத்துவது”

மாநில அரசின் திட்டம் வேறு
மத்திய அரசின் திட்டம் வேறு

//இது இவ்வளவு எளிதாக மாநில அளவில் ஏற்றுக் கொள்ளப் படும் போது மத்திய சுகாதார அமைச்சராக இருந்த அன்புமணி ஏன் இதை எல்லா மாநில அளவிலும் அந்தந்த மாநில சட்டமாக ஏற்றுக் கொள்ளவைக்க முயற்சிக்கவில்லை?//

அதை அவரிடம் தான் கேட்க வேண்டும்

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//பொதுவாக அந்தந்த மாநில அளவில் அவர்களின் கிராமங்களில் வேலை செய்ய மருத்ததுவர்களுக்கு மனத்தடைகள் கிடையாது என்பதை நீங்கள் இந்தப் பதிவின் மூலம் சொல்கிறீர்கள் என்று நான் புரிந்து கொள்கிறேன்.//

அது (அதே மாநிலத்தில் பணிபுரிவது) மட்டுமே காரணம் அல்ல

வேறு காரணங்களும் உள்ளன. அவற்றை நான் ஏற்கனவே பட்டியலிட்டுள்ளேனே

1. மருத்துவர் விருப்பபடும் வரை அதே நிலையத்தில் பணிபுரியலாம்

2. கால முறை ஊதியம்

3. 8000-275-13500 என்ற சம்பள ஏற்றமுறையில் சம்பளம். மொத்தமாக சுமார் 22000 வரை பெறலாம்

4. நிரந்திர பணி

5. இந்த திட்டத்திற்காக கடந்த ஆண்டுகளில் சுமார் 1600 பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன

6. தமிழ்நாடு தேர்வானையம் (டி.என்.பி.எஸ்.சி) மூலம் நியமனம் தொடர்ந்து நடைபெரும்.

7. அரசு ஊழியர்களுக்கு உள்ள அனைத்து விடுப்பும் உண்டு

8. மகப்பேறு விடுப்பு உண்டு

9. ஒப்பந்த காலம் முடிந்தபின் தொடரவேண்டுமெனறு மருத்துவர் விரும்பினால் தொடரலாம்

அதே மாநில பணி என்பது இங்கு குறிப்பிடப்படும் காரணங்களை விட முக்கியத்துவம் குறைந்த காரணமே

மறுமொழி எண்
புருனோ Bruno said...

/இது சரி என்றால் அனைத்து மாநிலங்களும் இதே வகை விதி முறைகளைப் பின்பற்றலாமே...//

மருத்துவர்களுக்கு போதிய சம்பளம் (அதிகம் இல்லை. மாதம் 22,000 ரூபாய் மட்டும் தான்) கொடுக்க விருப்பமில்லாமல் தினம் ரூபாய் 266 தொகுப்புதியத்தில் வேலை வாங்கலாம் என்று நினைப்பது தான் பிரச்சனையின் ஆணிவேர்

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//பொதுவாக அந்தந்த மாநில அளவில் அவர்களின் கிராமங்களில் வேலை செய்ய மருத்ததுவர்களுக்கு மனத்தடைகள் கிடையாது என்பதை நீங்கள் இந்தப் பதிவின் மூலம் சொல்கிறீர்கள் என்று நான் புரிந்து கொள்கிறேன்.//

உங்கள் புரிதல் தவறு. மனத்தடைக்கு காரணங்கள் வேறு. மிக மிக முக்கியத்துவம் இல்லாத காரணமே மாநிலம்.

மறுமொழி எண்
புருனோ Bruno said...

அனானியாரே நன்றி

வழக்கமாக அனானியாக வந்து திட்டி விட்டு தான் செல்வார்கள்

உங்கள் பாராட்டிற்கு நன்றி

மறுமொழி எண்
vanathy said...

உங்களது தகவல்களுக்கு நன்றி.தமிழ்நாட்டினதும் பிரிட்டனினதும்(United Kingdom) மக்கள் தொகை கிட்டத்தட்ட சமமாக இருப்பதால்(according to 2001 census population of Tamil nadu-62 million,population of UK-59 million) இரு நாடுகளினதும் மருத்துவ சேவையை ஒப்பிட்டு பார்க்க விரும்புகிறேன். ஒரு வளர்ந்த நாட்டோடு தமிழ் நாட்டை ஒப்பீடு செய்த மாதிரி இருக்கும்
Tamil nadu மருத்துவர் எண்ணிக்கை 60,000(1 doctor for 1000 people)பிரிட்டனின் மருத்துவர் எண்ணிக்கை 120,000(1 doctor for 500 people)
இதில் UK பொது மருத்துவர் (general Practitioners)40,000
பயிற்சி மருத்துவர் (Trinee doctors who are doing specialst trainig and preparing for post graduate exams)40,000
மேல்படிப்பு பயிற்சி முடித்த மருத்துவர் (specialist doctors)40,000
இந்த நேரத்தில் பிரிட்டனில் அரச மருத்துவம் என்கிற NHS(national health service) இல தான் பெரும்பாலான நோயாளிகள் சிகிச்சை செய்யப் படுகிறார்கள் என்பதையும் ,தனியார் மருத்துவம் என்பது ஒரு சிறிய சதவிகிதம் என்பதையும் தெரியப் படுத்த விரும்புகிறேன்.
அரச மருத்துவர்களின் ஊதியம் .
1.மருத்துவ பட்டம் பெற்ற வுடன் பயிற்சி மருத்துவருக்கு from 22,000 to 45,000 pounds(it can go upto 60,000 pounds according to the overtime they are doing)one pound is approximately 80 indian rupees.
2.பொதுமருத்துவர் மற்றும் specialist மருத்துவருக்கு from 70,000 to 100,000 pounds ,(it can go upto 160,000 pounds if they get clinical excellent awards,these awards are given to doctors who are brilliant at their clinical practice.)

தமிழ் நாட்டின் அரசு மருத்துவரின் ஊதியம் குறைந்தது(minimum salary) எவ்வளவு கூடியது(maximum salary) எவ்வளவு என்று சொல்லமுடியுமா?
-வானதி

மறுமொழி எண்
vanathy said...

மேலேயுள்ள கருத்துக்களுடன் இவற்றையும் மேலதிகமாகச் சொல்ல விரும்புகிறேன்
நான் மேல சொன்ன பிரித்தானியாவின் அரசு மருத்துவர்களின் ஊதியம் - வருடாந்த ஊதியம்.(annual salary before tax)
பிரிட்டனின் சராசரி ஊதியம் .-about 30,000 pounds
சராசரி ஊதியத்துடன் ஒப்பிடும்போது அரசு மருத்துவர்கள் ஊதியம் சிறந்தது அத்துடன் கூடுதல் சம்பளம் பெரும் அரசு ,தனியார் என்று இரு பகுதி ஊழியர்களுடன் ஓப்பீடு செய்யும்போழுது நன்கு ஊதியம் வழங்கப் படும் (one of the top salary earners of the country ,especially the specialist doctors and general practitioners)ஊழியர்களாகக் கருதலாம்.
தமிழ் நாட்டில் மற்றைய ஊழியர்களின் (அரசு ,தனியார் ) சராசரி ஊதியத்துடன் ஒப்பிடும்போது மருத்துவர்கள் எந்த மாதிரி என்று சொல்லமுடியுமா?
-வானதி

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//தமிழ் நாட்டின் அரசு மருத்துவரின் ஊதியம் குறைந்தது(minimum salary) எவ்வளவு கூடியது(maximum salary) எவ்வளவு என்று சொல்லமுடியுமா?//

தமிழகத்தில் MBBS மட்டும் படித்த அரசு மருத்துவர் ஒருவர் பணியில் சேரும் போது சம்பளம் (இன்றைய நிலையில்) 22,000

பட்டமேற்படிப்பு படித்திருந்தால் 23,000

--

அதே போல்

மருத்துவகல்லூரி பேராசிசிரியரின் சம்பளம் (ஓய்வு பெறும் சமயம்) சுமார் 35,000

இது தான் உயர்ந்த பட்ச சம்பளம்

தமிழகத்தில் மட்டும் தான் பச்சையப்பா கல்லூரி ஆங்கில பேராசிரியரை விட சென்னை மருத்துவ கல்லூரி அறுவை சிகிச்சை பேராசிரியரின் சம்பளம் குறைவுஇத்தனைக்கும் மருத்துவ கல்லூரி பேராசிரியர்களுக்கு இரு பணிகள்

1. கற்பித்தல் - ஆசிரியர் பணி
2. வைத்தியம் - மருத்துவர் பணி

ஆனால் குறைந்த ஊதியம் மட்டும் தான்.

இது குறித்த விரிவான தகவல்களுடன் ஒரு தனி இடுகை எழுதுகிறேன்

மறுமொழி எண்
புருனோ Bruno said...

தமிழகத்தில் அரசு மருத்துவரின் ஊதியம் அரசு வாகன ஓட்டுனரின் ஊதியத்தை விட ஒன்றரை மடங்கு அதிகம்
----
அதே நேரம் மத்திய அரசு, மற்றும் பிற மாநிலங்களில்

பணியில் சேரும் போது - மாதம் சுமார் 40,000

25 வருடம் பணி புரிந்தால் - மாதம் 80,000

பேராசிரியர்கள் - மாதம் 1,25,000

மறுமொழி எண்
அக்னி பார்வை said...

தல வெயில் கொடும தாங்கல கொஞ்சம் வெயில் கால உண்வு முறைகள், பத்தி ஒரு பதிவு போடுங்களேன்

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//அக்னி பார்வை said...
தல வெயில் கொடும தாங்கல கொஞ்சம் வெயில் கால உண்வு முறைகள், பத்தி ஒரு பதிவு //

எழுதிவிடுவோம் தல :)

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//வரிவரியாகப் படித்து, தெரி(ளி)ந்து கொண்டேன். நன்றி//

தல

சந்தேகங்களை கேட்கலாம்

மறுமொழி எண்
pearllysun said...

pearllysun :

[ தமிழகத்தில் மட்டும் தான் பச்சையப்பா கல்லூரி ஆங்கில பேராசிரியரை விட சென்னை மருத்துவ கல்லூரி அறுவை சிகிச்சை பேராசிரியரின் சம்பளம் குறைவுஇத்தனைக்கும் மருத்துவ கல்லூரி பேராசிரியர்களுக்கு இரு பணிகள்

1. கற்பித்தல் - ஆசிரியர் பணி
2. வைத்தியம் - மருத்துவர் பணி

ஆனால் குறைந்த ஊதியம் மட்டும் தான்.

இது குறித்த விரிவான தகவல்களுடன் ஒரு தனி இடுகை ]

என்ன சார் சொல்றீங்க ?? அப்போ மருத்துவருக்கு மரியாதையே இல்லையா ?? கடவளுக்கு எதற்கு கூலி என்று கூறுகிறார்களோ ??

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//என்ன சார் சொல்றீங்க ?? அப்போ மருத்துவருக்கு மரியாதையே இல்லையா ?? கடவளுக்கு எதற்கு கூலி என்று கூறுகிறார்களோ ??//

:( :( :(

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...