இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Thursday, April 10, 2008

பிற்படுத்தப்பட்டோர்க்கு 27 சதவிதம் இடப்பங்கீடு - உச்ச நீதிமன்றம்

கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்டோர்க்கு 27 சதவிதம் இடப்பங்கீடு வழங்கும் மத்திய அரசின் சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

”க்ரீமி லேயர்” பிற்படுத்தப்பட்டோர் இடப்பங்கீட்டின் போது பிற்படுத்தப்பட்டோராக கருதப்படாமல் பொது வகுப்பினராகவே கருதப்படுவர்.

தீர்ப்பு விரைவில் வரும் என்றும், அது இப்படிதான் இருக்கும் (இடப்பங்கீடு செல்லும், “க்ரீமி லேயருக்கு” பலன் கிடையாது) என்றும் நான் சில நாட்களுக்கு முன்னரே என் நண்பரிகளிடம் அடித்து கூறியிருந்தேன்.

ஏற்கனவே இடப்பங்கீடு குறித்த இடுகைத்தொடரில் அதியமான் அவர்களின் சில கருத்துக்களுக்கு எதிர் கருத்து கூறும் பொழுது
”க்ரீமி லேயர்” குறித்து பின்னர் விவாதிக்கலாம் என்று கூறியிருந்தேன். இப்பொழுது நேரம் வந்து விட்டது.

அதற்கு (விரிவான அடுத்த இடுகைக்கு) முன் சில கேள்விகள்

”க்ரீமி லேயர்” என்பது வருமானத்தை வைத்து வரையருக்கப்பட்டால்

1. எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை அந்த வருமானத்தை மாற்ற வேண்டும் ?

2. அனைத்து இடங்களிலும் ஒரே வருமானம் தானா. (உதாரணமாக பள்ளி ஆசிரியராக சேர 2 லட்சம் மேல் வருட வருமானம் உள்ள குடும்பங்களில் உள்ளவர்கள் ”க்ரீமி லேயர்” என்றால் IASக்கும் அதே 2 லட்சம் தானா ?

உங்கள் கருத்தை கூறுங்களேன். என் கருத்து அடுத்த இடுகையில்

பின்குறிப்பு : இரண்டாவது கேள்விக்கு விடையளிக்கும் முன்னர் இதை படித்தால் விடை எளிது

44 மறுமொழிகள்:

ezhil said...

நம் பாரத துணைக்கண்டத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் முன்னேற இடஒதுக்கீடு முறை அவசியம் தேவை,இதை மறுப்பவர்கள் முற்போக்கு சிந்தனைக்கு எதிரானவர்கள்.இட ஒதுக்கிட்டு முறை ஒரளவுக்கு ஒரு குறிப்பிட்ட விழுக்காடு மக்களுக்கு சிறிய முன்னேற்றம் தந்துள்ளது.அவர்களின் அடுத்த தலை முறை இன்னும் முன்னேற வாய்ப்பு கிடைக்க இருக்கும் பட்சத்தில் "பணவசதிபடைத்தவர்" என முன்னேற தடை விதிபத்து நாட்டுக்கு நல்லதல்லா.அதுவும் 6 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டிய IIM படிப்புக்கு இந்த தடை ஒரு தேர்ந்த சதியே(இதற்குப் பின்னால் யார் உள்ளனர் இந்த நாடே அறியும்.).

ஆனால் அதே சமயத்தில் சாதாரண பள்ளி,கல்லுரி படிப்புகளுக்கு,அரசு வேலைகளுக்கு,அரசு மானிய உதவிகளுக்கு நடை பெறும் தேர்வில், பின்தங்கிய ஒடுக்கப்பட்ட மக்களில் பொருளாதாரத்தில் நலிவடைந்தோரை அடடையாளம் கண்டு வலிமை(பணவசதியில் ) படைத்தோரிடமிருந்து
எந்த வகையிலாவது முன்னுரிமை அளிப்பது நம் தேசியத் தலைவர்களின்(உண்மையான,நேர்மையான,தெளிந்த சிந்தனையுள்ள,தன்னலமற்ற) கடமையன்றோ!

புருனோ said...

வாங்க எழில் சார்,

கருத்திற்கு நன்றி. நான் சொல்ல வந்ததை கூறிவிட்டீர்கள்.

//சாதாரண பள்ளி,கல்லுரி படிப்புகளுக்கு,அரசு வேலைகளுக்கு,அரசு மானிய உதவிகளுக்கு நடை பெறும் தேர்வில், பின்தங்கிய ஒடுக்கப்பட்ட மக்களில் பொருளாதாரத்தில் நலிவடைந்தோரை அடடையாளம் கண்டு வலிமை(பணவசதியில் ) படைத்தோரிடமிருந்து
எந்த வகையிலாவது முன்னுரிமை அளிப்பது நம் தேசியத் தலைவர்களின்(உண்மையான,நேர்மையான,தெளிந்த சிந்தனையுள்ள,தன்னலமற்ற) கடமையன்றோ!//

இதுதான் உண்மையான க்ரீமி லேயரின் பயன்

Anonymous said...

//அதுவும் 6 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டிய IIM படிப்புக்கு இந்த தடை ஒரு தேர்ந்த சதியே(இதற்குப் பின்னால் யார் உள்ளனர் இந்த நாடே அறியும்//
IIM இல் சேரும் பெரும்பாலானோர் கல்விக் கடன் வாங்கி தான் படிக்கின்றோம். யாரிடமும் 6 லட்சம் இருப்பதில்லை. இங்கு படிப்பவர்களுக்கு கடன் எளிதில் வழங்கப்படுகிறது. அதனால் இங்கு ஒரு ‘சதி'யும் இல்லை.

பிரபு ராஜதுரை said...

க்ரீமி லேயர் பற்றிய எனது கருத்து
http://marchoflaw.blogspot.com/2006/12/6.html

ஒன்றரை வருடங்கள் கழிந்து விட்டது. இன்றும் எனது கருத்து அதுதான்...

க்ரீமி லேயர் என்பது அரசியல் சட்டப்படியானது அல்ல...மாறாக பத்திரிக்கைகள் ஏற்ப்படுத்திய பொதுக்கருத்தினை அடிப்படையாக கொண்டது அவ்வளவுதான்!

ezhil said...

Anonymous said...

//அதுவும் 6 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டிய IIM படிப்புக்கு இந்த தடை ஒரு தேர்ந்த சதியே(இதற்குப் பின்னால் யார் உள்ளனர் இந்த நாடே அறியும்//
IIM இல் சேரும் பெரும்பாலானோர் கல்விக் கடன் வாங்கி தான் படிக்கின்றோம். யாரிடமும் 6 லட்சம் இருப்பதில்லை. இங்கு படிப்பவர்களுக்கு கடன் எளிதில் வழங்கப்படுகிறது. அதனால் இங்கு ஒரு ‘சதி'யும் இல்லை.
-----------------------------
dear sir,
All are accepting that loans are granted freely for the IIM students by banks since there is a heavy demand in the job market for them.( some bright students are getting more than 1 crore from mncs).But my intention is that students (oppressed class) should not be barred to enter in to IIM campbus under the pretext of greamy layer ( yearly in come of 2 lakhs- The author insists that only .He is not totally opposing greamy layer concept.please see the reply ).To get loan from Bank one should get selection in IIM .That facility should not be banned.

Anonymous said...

//But my intention is that students (oppressed class) should not be barred to enter in to IIM campbus under the pretext of greamy layer ( yearly in come of 2 lakhs- The author insists that only .He is not totally opposing greamy layer concept.please see the reply ).To get loan from Bank one should get selection in IIM .That facility should not be banned.//
Sir,
I have clearly understood the author as well as SC ruling. No where the creamy layer from the "OPPRESSED" class is barred entry into IIM but only into OBC quota.

ezhil said...

Anonymous said...

Sir,
I have clearly understood the author as well as SC ruling. No where the creamy layer from the "OPPRESSED" class is barred entry into IIM but only into OBC quota.
------------------------------
துடிப்பான உடன் பதிலுக்கு நன்றி.இந்த விவாதம் தொடரவேண்டும் என்பதே என் அவா.
பதிவின் ஆசிரியர் " 2 லடசம் வருமான உள்ள அளவுகோல்"- 6 லடசம் கட்டணத் திட்டத்துடன் உள்ள IIM படிப்புக்கு அமுல் படுத்த பட்டால் OBC quota மாணவர்களில் ஒரு பகுதியினர் பாதிக்க படலாம்.அதை தவிர்ப்பது "சமுக நீதி காக்கும் " என கருதுவதாக (ஆசிரியர்-புருனோ அவர்கள்)நான் நினைக்கிறேன்.

Thamizhan said...

மிகவும் ஆழ்மாக ஆராயப்பட்டு மக்கள் மன்றம் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களாலேயே ஒதுக்கப் பட்ட வார்த்தையான "பொருளாதர்ர" Economically ,என்பது
"சமுதாய கல்வியில்" Socially and Educatinally என்பதன் வாலாகக் கொல்லைப் புறமாகச் சாதி வெறியர்களால் creamy layer ஒட்ட வைக்கப் பட்டுள்ளது.

மக்கள் மன்றத்திலே நிறை வேற்ற முடியாததை அநீதி மன்றத்தில் ஒட்ட வைத்துள்ளார்கள்.

இந்தியாவின் எந்தப் பட்டிக்காட்டிற்கு வேண்டுமானாலும் சென்று பாருங்கள்.அங்கே பொருளாதார அடிப்படையிலே பணக்காரர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் படித்து சமுதாய கல்வி முன்னேற்றம் அடையாமல் இருப்பது எதனால்?அவர்கள் மற்றவர்களுடன் போட்டியிட்டு மருத்துவ.பொறியியல் மற்ற படிப்புகளில் சேர முடியாதது எதனால்?

புருனோ said...

அனானி, எனது இரண்டாவது கேள்விக்கு விடையளியுங்களேன்

பிரபு ராஜதுரை சார்,
//க்ரீமி லேயர் என்பது அரசியல் சட்டப்படியானது அல்ல..//

நன்றி

சரி, நான் ஐ.ஐ.எமில் படித்து விட்டு அரசு வேலை (மாத சம்பளம் 15,000) சேர்ந்தால் இந்த கடனை எப்படி அடைப்பது

ஏன் ஐ.ஐ.எமில் சேர்பவர்கள் அரசு பணிக்கு சேர கூடாது என்று கூறுகிறீர்கள்.

இல்லை ஐ.ஐ.எமில் படித்து விட்டு தொழில் முனைவோராகா ஆக வேண்டுமென்றால் கூட கடன் வாங்க வேண்டுமே

புருனோ said...

அனானி, முதலில் இரண்டாவது கேள்விக்கு பதிலளியுங்கள்

அடுத்ததாக, க்ரீமி லேயர் என்பது 1990களின் கண்டுபிடிப்பு என்றாலும் கூட அது ஒரு சிக்கலான விஷயம்.

க்ரீமி லேயரில் வருவதாக கருதப்படும் ஓ.பி.சி மாணவர்களை ஓ.பி.சியாக கருதாமல் பொது வகுப்பினாராக கருதுவதால், பணி நியமணத்தில்

1. க்ரீமி லேயரில் வராத ஓ.பி.சி மாணவர்களுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் :)

2. க்ரீமி லேயரில் வருவதாக கருதப்படும் ஓ.பி.சி மாணவர்கள் அதே எண்ணிக்கை இடங்களை பெற்றாலும் விரும்பும் இடங்களின் எண்ணிக்கை குறையும். (Same number of seats, but is less favoured areas) :)

3. முற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இடங்கள் குறையும் :)

-oOo-
ஆனால் கல்வி நிலையங்களில் அதிக மதிப்பெண் பெற்றும் கட்டணம் செலுத்த முடியாத ஓ.பி.சி மாணவர்கள் படிக்க முடியாமல் போவதால் அந்த இடங்கள் பின் வாசல் வழியாக முற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களால் நிரப்பப்படும் :( :(
-oOo-
இதானால் தான் கல்வியில் க்ரீமி லேயர் (creamy layer) வேண்டாம், ஆனால் பணி நியமனங்களில் வேண்டும் என்று விபரம் தெரிந்த இடப்பங்கீட்டு ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்

புருனோ said...

முந்தைய பின்னூட்டத்தில் கூறியதை அடுத்த இடுகைகளில் விளக்குறேன்

பிரபு ராஜதுரை said...

டாக்டர்,

தீர்ப்பினைப் படித்தீர்களா? தற்பொழுதான் பாலகிருஷ்ணன் அவர்களது தீர்ப்பினைப் படித்தேன். க்ரீமி லேயருக்கு வேலைக்கான க்ரீமி லேயருக்கான அளவுகோலினைத்தான் வைக்க வேண்டிய கட்டாயமில்லை என்பது போல எழுதியுள்ளார்.

நல்லவேளை பாமக சார்பில் தனியே வக்கீல் வைத்துள்ளனர். அவர் மட்டுமே பிறப்பு முதல் இறப்பு வரை ஜாதி என்பது இந்த நாட்டில் உள்ளதுதான் ஏதோ இட ஒதுக்கீட்டால் வந்ததல்ல என்று அடித்துப் பேசியுள்ளார்.

சரி, ஆனால் மற்ற நீதிபதிகள் தனியே தீர்ப்பு எழுதியுள்ளனர். இட ஒதுக்கீட்டை ஒத்துக் கொண்டாலும் அதன் பலன் ஏதும் கிடைக்காத வண்ணம் உள்ளது தீர்ப்பு...முழுவதும் படிக்க வேண்டும். சுமார் 300 பக்கங்களை தாண்டிச் செல்கிறது.

முடிந்தால் படிங்களேன்
http://judis.nic.in/supremecourt/qrydisp.aspx?filename=31230

http://judis.nic.in/supremecourt/qrydisp.aspx?filename=31231

http://judis.nic.in/supremecourt/qrydisp.aspx?filename=31232

Anonymous said...

//சரி, நான் ஐ.ஐ.எமில் படித்து விட்டு அரசு வேலை (மாத சம்பளம் 15,000) சேர்ந்தால் இந்த கடனை எப்படி அடைப்பது

ஏன் ஐ.ஐ.எமில் சேர்பவர்கள் அரசு பணிக்கு சேர கூடாது என்று கூறுகிறீர்கள்.

இல்லை ஐ.ஐ.எமில் படித்து விட்டு தொழில் முனைவோராகா ஆக வேண்டுமென்றால் கூட கடன் வாங்க வேண்டுமே
//
தலைப்பு முற்றிலும் திசை மாறி விட்டது. இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கும் அதே கட்டணம் தான். மேலும் நாம் வாங்கிய கடனை நாம் தான் அடைக்க வேண்டும். வேண்டுமானால் IIM இல் கட்டணம் குறைக்க வேண்டும் என்றொரு பதிவு போட்டு விடுங்கள்.

Anonymous said...

//இதானால் தான் கல்வியில் க்ரீமி லேயர் (creamy layer) வேண்டாம், ஆனால் பணி நியமனங்களில் வேண்டும் என்று விபரம் தெரிந்த இடப்பங்கீட்டு ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்//

கல்லூரி வரை ஒன்றாக என்னுடன் படித்த ஒரு நண்பனின் தந்தை மிக வசதியானவர், பல ஆயிரம் செலவு செய்து IIM பயிற்சி வகுப்புகளில் அவனை சேர்த்து விட்டார். ஆனால் அவனால் IIM தேர்ச்சி பெற முடியவில்லை. இட ஒதுக்கீடு மூலம் வலுக்கட்டாயமாக அவனை IIM இல் சேர்ப்பதில் என்ன லாபம்? இதைத் தான் நாங்கள் சொல்கிறோம். வசதியிருந்தும் படிக்காதவனுக்கு பதில் வசதியில்லாதவனுக்கு வாய்ப்பளிப்போம் என்று.

Anonymous said...

இதில் வருந்தத்தக்க விசயம், பமக, திமுக போன்ற இதில் ஆர்வமுடைய அரசியல் அமைப்புகள் இந்தத்தீர்ப்பை ஒரு வெற்றியாக உணர்ந்து, கொண்டாடிவிட்டு இதில் உள்ள சூழ்ச்சியை சரியான முறையில் எதிர்கொண்டு சரியான நியாயம் கிடைக்கும் வரை போராடுவார்களா என்பதுதான்.

புருனோ said...

வணக்கம் வக்கீல் சார்,

நான் இன்னமும் தீர்ப்பை படிக்கவில்லை. கடந்த சில நாட்களாக பெரும்பாலும் பயணித்துக்கொண்டே இருக்கிறேன். இந்த வாரம் தான் முழு தீர்ப்பையும் படிக்க வேண்டும்.

//. க்ரீமி லேயருக்கு வேலைக்கான க்ரீமி லேயருக்கான அளவுகோலினைத்தான் வைக்க வேண்டிய கட்டாயமில்லை என்பது போல எழுதியுள்ளார்.//

இது கண்டிப்பாக தேவை.

அதே போல் பிற்படுதப்பட்ட வகுப்பு மாணவர்கள் இல்லை என்றால் பொது பிரிவு மாணவர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என்று இரு நீதிபதிகள் தீர்ப்பளித்து உள்ளதாக ஊடகங்களில் வருகிறது. இந்த தீர்ப்பையும், ஐ.ஐ.எம்களின் வருடத்திற்கு 6 லட்சம் கல்விக்கட்டணம் உயர்வை இனைத்து பார்க்க வேண்டும் :(

கண்டிப்பாக முழுவதும் படித்து விட்டு விவாதிக்க வேண்டும்.

புருனோ said...

//மேலும் நாம் வாங்கிய கடனை நாம் தான் அடைக்க வேண்டும்.//

அரசு வேலைக்கு சென்றால் அடைக்க முடியாத அளவிற்கு கடன் வாங்க வேண்டிய நிலை உள்ளதே.

நாங்கள் கூறுவது என்னவென்றால்-- வருடம் 6 லட்சம் கல்வி கட்டணம் உள்ள கல்வி நிறுவனத்தில் சேரும் பொழுது வருடம் 2 லட்சம் மேல் வருமானம் உள்ளவர்களை எல்லாம் க்ரீமி லேயராக கருதலாமா....

வருட கல்விக்கட்டணம் 6 லட்சம் என்று உள்ளதால் வருட வருமானம் 15 லட்சம் மேல் உள்ளவர்கள் மட்டுமே க்ரீமி லேயராக கருதப்படவேண்டும்.

ஏனென்றால் கடன் வாங்கி படிப்பது என்பது நடைமுறையில் முடியாத காரியம் என்று தெளிவாக தெரிகிறது.

ezhil arasu said...

க்ரீமி லேயர் பிரச்சனை சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது.இந்திய அரசியல் களம் புதுப்புது கூட்டடணிகளைப் பார்க்க போகிறதோ? அறிவுத் தந்திரங்களா?,வோட்டு அரசியலா ,நேர்மைக்கா எதற்கு வெற்றி?.ஜெயிக்கப் போவது யாரு-கலக்கப் போவது யாரு-கலங்கப் போவது ..................

புருனோ said...

எழில் அரசு சார்,

இந்த க்ரீமி லேயர் என்பதே, பிற்படுத்தப்பட்டவர்களின் இடத்தை காலியாக வைத்து அதில் (காலியாக இருப்பதை காரணம் காட்டி) முற்படுத்தப்பட்ட வகுப்பினரை நிரப்ப வழி வகுக்கும் ஒரு தந்திரம் என்று ஒரு கருத்து உள்ளது.

க்ரீமி லேயரின் வருமானம் வரம்பு உயர்த்தப்பட்டாலே (உதாரணம் வருடம் 6 லட்சம் - ஐ.ஐ.எம்மின் வருட கல்விக்கட்டணம் :) :) அளவிற்கு) பலன் கிடைக்கும்.

இது குறித்து விரிவாக எழுதவேண்டும். இப்பொழுது ஓடிக்கொண்டிருக்கிறேன். இந்த வாரத்தில் விரிவாக அலசுகிறேன்.

Anonymous said...

//நாங்கள் கூறுவது என்னவென்றால்-- வருடம் 6 லட்சம் கல்வி கட்டணம் உள்ள கல்வி நிறுவனத்தில் சேரும் பொழுது வருடம் 2 லட்சம் மேல் வருமானம் உள்ளவர்களை எல்லாம் க்ரீமி லேயராக கருதலாமா....//

2 லட்சம் சம்பாதிக்கும் ஒருவரால் கட்டாயமாக தன் மகன்/மகளுக்கு நல்ல கல்வியை அளிக்க முடியும். அதனால் அவைகளை கிரீமி லேயராகத் தான் கருத வேண்டும்.

மற்றபடி கடன் பெறுவது பற்றியெல்லாம் தற்போது IIM படிப்பவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு எழுத வாருங்கள்.

சரவணகுமார் said...

தீர்ப்பை முழுவதும் படித்த பின் அலசுவது நல்லது எனப் படுகிறது. இந்த "க்ரீமி லேயர்" வரையரை படி Quota இடங்கள் நிரம்பாமல் போனால் வரையறையை மாற்றி அமைக்க அரசுகள் பரிசீலித்து 27 சதவிகிதத்தை பூர்த்தி செய்யலாம் என்பதாகவே தீர்ப்பில் உள்ளது.

""""""We make it clear that same principle of determining the creamy
layer for providing 27% reservation for backward classes for
appointment need not be strictly followed in case of reservation
envisaged under Article 15(5) of the Constitution. As pointed by
Shri Ravivarma Kumar, learned Senior Counsel, if a strict income
restriction is made for identifying the "creamy layer", those who are
left in the particular caste may not be able to have a sufficient
number of candidates for getting admission in the central
institutions as per Act 5 of 2007. Government can make a
relaxation to some extent so that sufficient number of candidates
may be available for the purpose of filling up the 27% reservation.
It is for the Union Government and the State Governments to issue
appropriate guidelines to identify the "creamy layer" so that SEBC
are properly determined in accordance with the guidelines given by
this Court. If, even by applying this principle, still the candidates
are not available, the State can issue appropriate guidelines to
effectuate the implementation of the reservation purposefully."""""

இதில் இங்கு வைக்கப் பட்டிருக்கும் சில கேள்விகளுக்காவது விடை இருக்கிறது என நம்புகிறேன் :)

சரவணகுமார் said...

///பிரபு ராஜதுரை said...

டாக்டர்,

தீர்ப்பினைப் படித்தீர்களா? தற்பொழுதான் பாலகிருஷ்ணன் அவர்களது தீர்ப்பினைப் படித்தேன். க்ரீமி லேயருக்கு வேலைக்கான க்ரீமி லேயருக்கான அளவுகோலினைத்தான் வைக்க வேண்டிய கட்டாயமில்லை என்பது போல எழுதியுள்ளார்./////

நான் போன பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தது திரு. பிரபு ராஜதுரை சொன்னது போல் திரு பாலகிருஷ்ணன் எழுதியுள்ள தீர்ப்பு. இது அமல் படுத்தப்படுமா அல்லது ஒட்டு மொத்த பென்ச்சின் தீர்ப்பு இதிலிருந்து மாறுபட்டுள்ளதா என்று பிரபு ராஜதுரை அவர்களோ அல்லது வேரு வக்கீல் யாராவது விளக்கினால் நல்லது. நன்றி

புருனோ said...

//2 லட்சம் சம்பாதிக்கும் ஒருவரால் கட்டாயமாக தன் மகன்/மகளுக்கு நல்ல கல்வியை அளிக்க முடியும். அதனால் அவைகளை கிரீமி லேயராகத் தான் கருத வேண்டும்.//

ஆனால் ஐ.ஐ.எம் சேருவதற்கு கல்வி கட்டணம் செலுத்த முடியாது.

எனவே ஐ.ஐ,எம்மை பொருத்தவரை அவர் எப்படி க்ரீமி லேயர் ஆவார்.

ஐ.ஐ.எம் சேருவதற்கு (கல்வி கட்டனம் வருடம் ஆறு லட்சம்) க்ரீமி லேயர் 15 லட்சமாக இருக்க வேண்டும்

புருனோ said...

//மற்றபடி கடன் பெறுவது பற்றியெல்லாம் தற்போது IIM படிப்பவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு எழுத வாருங்கள்.//

என் குடும்ப வருமானம் 2 லட்சம் தான். படித்து முடித்த பின் நான் அரசாங்க வேலை (மாதம் 15 ஆயிரம்) பார்க்க போகிறேன். எனக்கு 12 லட்சம் கடன் வேண்டும். மாதம் 5000 தான் இரு வருடம் கழித்து என்னால் கடன் செலுத்த முடியும்.

அப்படியென்றால் எந்த வங்கியில் கடன் பெற முடியும். விளக்கவும்

புருனோ said...

//நான் போன பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தது திரு. பிரபு ராஜதுரை சொன்னது போல் திரு பாலகிருஷ்ணன் எழுதியுள்ள தீர்ப்பு. //

ஊடகங்களிலும் இப்படி தான் கூறப்பட்டுள்ளது. இரு நீதிபதிகள் வேறு விதமாக கூறியுள்ளார். (காலி இடங்கள் பொது பிரிவினரால் நிரப்பப்படவேண்டும் என்று)

என்ன செய்வார்கள் என்று பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

Anonymous said...

பேசாம நம்ம கோர்ட், க்ரீமி லேயர் ஓ பி ஸி கும்பலுக்கு 27% இட ஒதுக்கீட்டு செய்து, ஓ பி சி நான் க்ரீமி லேயருக்கு பத்து சதவிகிதம் கொடுத்திருந்தா நம்ம க்ரீமி லேயர் ஓ பி ஸி வலையுலக கும்பலும்(புரூனோ,ராஜதுரை,கோவி கண்ணன்,தமிழ் சசி,லக்கி லுக்,வர வனையான்,சுந்தரவடிவேல்,டி பி சி டி,பாலபாரதி போன்ற கும்பல்),ஆதிக்க சக்திகளான ஓ பி சி அரசியல்வாதிகளும்(அதான் மிகவும் ஒடுக்கப்பட்ட மஞ்ச துண்டு,மரம் வெட்டி,ஸ்டாலின்,மானமிகு போன்றவர்கள்) மகிழ்வார்கள்.க்ரீமி லேயர் ஆதிக்க சக்திகள் செய்யும் அநியாயத்தை, நியாயம் என்று சொல்லாத நீதி மன்றம் ஒரு நீதி மன்றமா?வெட்கக் கேடு.

Anonymous said...

தீர்ப்பை முழுவதும் படித்த பின் அலசுவது நல்லது எனப் படுகிறது. இந்த "க்ரீமி லேயர்" வரையரை படி Quota இடங்கள் நிரம்பாமல் போனால் வரையறையை மாற்றி அமைக்க அரசுகள் பரிசீலித்து 27 சதவிகிதத்தை பூர்த்தி செய்யலாம் என்பதாகவே தீர்ப்பில் உள்ளது.

""""""We make it clear that same principle of determining the creamy
layer for providing 27% reservation for backward classes for
appointment need not be strictly followed in case of reservation
envisaged under Article 15(5) of the Constitution. As pointed by
Shri Ravivarma Kumar, learned Senior Counsel, if a strict income
restriction is made for identifying the "creamy layer", those who are
left in the particular caste may not be able to have a sufficient
number of candidates for getting admission in the central
institutions as per Act 5 of 2007. Government can make a
relaxation to some extent so that sufficient number of candidates
may be available for the purpose of filling up the 27% reservation.
It is for the Union Government and the State Governments to issue
appropriate guidelines to identify the "creamy layer" so that SEBC
are properly determined in accordance with the guidelines given by
this Court. If, even by applying this principle, still the candidates
are not available, the State can issue appropriate guidelines to
effectuate the implementation of the reservation purposefully."""""

இதில் இங்கு வைக்கப் பட்டிருக்கும் சில கேள்விகளுக்காவது விடை இருக்கிறது என நம்புகிறேன்
-----------------------------------
இதை தலைமை நீதிபதி தன் தீர்ப்பில்
குறிப்பிடுகிறார்.5 நீதிபதிகளில் இன்னும் இருவராவது இதை
ஏற்றுக்கொண்டிருந்தால்தான்
இது ஏற்றுக்கொள்ளதக்கதாகும்.
இல்லாவிடில் நீதிபதியின்
கருத்து என்ற அளவில்
நின்றுவிடும், நடைமுறைப்படுத்த
வியலாது.இந்த வழக்கில் ஒரு
நீதிபதி மட்டும் இப்படிக் கூறியிருக்கிறார், பிற நால்வரும்
தங்கள் தீர்ப்புகளில் இது போன்ற/
இதே தீர்வைக் கூறவில்லை.
எனவே இதை உச்சநீதிமன்றத்தின்
தீர்ப்பின் பகுதி என்று கொண்டு
நடைமுறையில் கொண்டுவர
முடியாது.

நவீன் said...

பொருளாதார அடிப்படையில் க்ரீமிலேயர் வைப்பதைவிட, முதல் தலைமுறையினருக்கு முன்னுரிமை என வைக்கலாம் என்ற ஞாநியின் யோசனை சரியாகப்படுகிறதே. உங்கள் கருத்தென்ன?

புருனோ Bruno said...

அனானி (5/10/2008 2:12 PM),

ரானிடிடின், ஜெலுஸில், ஒமெப்ரசோல் போன்ற மருந்துகள் உங்களுக்கு தேவை என்று நினைக்கிறேன்

புருனோ Bruno said...

//இதை தலைமை நீதிபதி தன் தீர்ப்பில்
குறிப்பிடுகிறார்.5 நீதிபதிகளில் இன்னும் இருவராவது இதை
ஏற்றுக்கொண்டிருந்தால்தான்
இது ஏற்றுக்கொள்ளதக்கதாகும்.
இல்லாவிடில் நீதிபதியின்
கருத்து என்ற அளவில்
நின்றுவிடும், நடைமுறைப்படுத்த
வியலாது.இந்த வழக்கில் ஒரு
நீதிபதி மட்டும் இப்படிக் கூறியிருக்கிறார், பிற நால்வரும்
தங்கள் தீர்ப்புகளில் இது போன்ற/
இதே தீர்வைக் கூறவில்லை.
எனவே இதை உச்சநீதிமன்றத்தின்
தீர்ப்பின் பகுதி என்று கொண்டு
நடைமுறையில் கொண்டுவர
முடியாது.//

இது குறித்து வழக்கறிஞரின் (ராஜதுரை சார்) கருத்து என்னவோ

புருனோ Bruno said...

நவீன் சார்,

க்ரீமி லேயர் என்பதை பொருளாதார அடிப்படையில் இல்லாமல் தந்தை தாயின் கல்வி அடிப்படையில் அமைப்பது நல்லது.

ஆனால் இதிலும் அந்த அளவுகோல் ஒவ்வொரு தேர்விற்கும், வேலைக்கும் மாறுபட வேண்டும்,

உதாரணமாக ஒரு ஓ.பிசி எழுத்தரின் மகன் எழுத்தர் வேலைக்கு விண்ணப்பித்தால் அவரை பொது வகுப்பினராக கருதவேண்டும். ஆனால் அவர் மருத்துவ கல்லூரி (அல்லது பொறியியல் கல்லூரி) தேர்வு எழுதுகையில் ஓ.பி.சியாக கருதப்பட வேண்டும்.

அதே போல் ஒரு மருத்துவரின் மகன் மருத்துவ கல்லூரி நுழைவுத்தேர்வில் பொது வகுப்பினராக கருதப்பட வேண்டும்

இது போன்ற க்ரீமி லேயர் இருந்தால் வரவேற்க வேண்டும் :) :) :) :)

புருனோ Bruno said...

தற்பொழுதுள்ள பொருளாதார அடிப்படையிலான க்ரீமி லேயர் குறித்து எனக்கு சில மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன

ஒ.பி.சி,க்கான 27 சதவித இடங்களில் க்ரீமி லேயர் அல்லாத (பொருளாதாரத்தில் பின் தங்கிய) மாணவர்கள் இல்லையென்றால் (மட்டுமே) பொருளாதாரத்தில் முன்னேறிய ஒ.பி.சியினரால் அந்த 27 சதவித இடங்கள் நிரப்பப்படவேண்டும்.

இதன் மூலம்

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு வேண்டிய பலன் கிடைக்கும்

அதே நேரம் பொருளாதாரத்தில் முன்னேறியவர்களுக்கும் பலன்.

If there are not enough OBCs (with income less than 2.5 lakhs per annum) then the places should be filled by OBCs with income more than 2.5 lakhs and ONLY if there are no OBCs at all it should be filled by general turn என்று ஒரு சட்ட திருத்தம் கொண்டுவந்தால் க்ரீமி லேயரின் முழுப்பலன் கிடைக்கும் என்பது என் கருத்து.

ஒ.பி.சி மேல் அக்கரையினால் க்ரீமி லேயர் நீக்கப்படவேண்டும் என்று கூறியவர்கள் நான் சொன்ன கருத்தை கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார்கள். :) :)

நவீன் said...

/ஒ.பி.சி,க்கான 27 சதவித இடங்களில் க்ரீமி லேயர் அல்லாத (பொருளாதாரத்தில் பின் தங்கிய) மாணவர்கள் இல்லையென்றால் (மட்டுமே) பொருளாதாரத்தில் முன்னேறிய ஒ.பி.சியினரால் அந்த 27 சதவித இடங்கள் நிரப்பப்படவேண்டும்./

சரியாகச் சொன்னீர்கள் புருனோ அவர்களே.

ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு அளிக்கப்படும் இடஒதுக்கீடு முழுக்க அவர்களுக்கே கிடைக்க வகை செய்ய வேண்டும்.

அவர்களுள், முதலில் கல்வியிலும், பின் பொருளாதாரத்திலும் பின் தங்கியவர்களுக்கு முன்னுரிமை அளித்தால் சிறப்பாக இருக்கும்.

புருனோ Bruno said...

நவீன் சார், நன்றி

Anonymous said...

You are right Bruno.Even though you are a wealthy creamy layer OBC swine, you are really backward only,that is mentally bacakward.You need to have a reserved bed in a mental asylum.

புருனோ Bruno said...

அனானி,
கருத்திற்கு நன்றி :) :) :)
-oOo-
பண்டங்களை ஏற்றுக்கொள்ளாத புத்தர் கதை தெரியுமா உங்களுக்கு :) :) :)

Anonymous said...

புருனோ அய்யா,

தாங்கள் ஒரு கிருமி லேயர் ஓ பி ஸி ஆசாமியா அல்லது Non கிருமி லேயர் ஆசாமியா?அப்படி ஒடுக்கப்பட்ட Non கிருமி லேயர் ஓ பி ஸி ஆசாமி என்றால் உங்களை ஒடுக்கியது யார்?கிருமி லேயர் ஓ பி ஸி கும்பல் தானே?விளக்கமா சொல்லுங்கய்யா.

பாலா

புருனோ said...

பாலா

கிருமி லேயர் என்றால் என்ன என்று சொன்னால் தான் புரியும்

Anonymous said...

//பாலா

கிருமி லேயர் என்றால் என்ன என்று சொன்னால் தான் புரியும்//
ஆ டாக்டர் அய்யாவுக்கே கிருமி லேயர் ஓ பி ஸி என்றால் என்ன என்று தெரியாதா?அப்படீன்னா புருனோ கண்டிப்பாக கிருமி லேயர் ஓ பி ஸி கும்பலை சேர்ந்தவராகத்தான் இருக்க வேண்டும்.அப்ப புருனோ ஒடுக்கப்பட்டவர் அல்ல;ஏகப்பட்ட பேர்களை ஒடுக்கிய கும்பலைச் சேர்ந்தவர்.வாழ்க வாழ்க.

பாலா

பாலா

புருனோ said...

//ஆ டாக்டர் அய்யாவுக்கே கிருமி லேயர் ஓ பி ஸி என்றால் என்ன என்று தெரியாதா?//

எனக்கு க்ரீமி லேயர் தான் தெரியும்....

எனக்கு தெரிந்த கிருமி லேயர் நுண்ணறிவியல் துறையில் கண்ணாடி தட்டில் உள்ள கிருமி லேயர் தான் :) :) :)

புருனோ said...

க்ரீமி லேயர் என்பதற்கு நீங்கள் வைத்துள்ள விளக்கம் என்னவென்று தெளிவாக கூறினால் தான் விவாதம் உபயோகமாக இருக்கும்

மற்றபடி

தரங்கெட்டு அடுத்தவரை திட்டுவது கிருமிலேயர் என்றால் நான் கிருமி லேயர் இல்லை

தங்கள் வாதத்திற்கு வலுசேர்க்க தக்க கருத்தில்லாமல் தனிநபரை தாக்கும் சில கிருமிகள் உள்ள கிருமி லேயரிலும் நான் இல்லை

போதுமா.

புருனோ said...

அது சரி

லைப்பாய் சோப் போட்டு குளித்தால் கிருமி லேயர் போய்விடுமா இருக்குமா

Anonymous said...

புருனோ அவ்ர்கள் இடஒதுக்கீட்டுக் கொள்கையில் மிகத் தெளிவாக தன்நிலை விளக்கம் கொடுத்த பிறகும் சிலர் அவரை வசைபாடுவது கண்டனத்துக்குறியது.அவ்ருடைய மருத்துவக் கட்டுரைகள் எல்லோரும் மருத்துவ ரகசியங்களை தெரியும் வண்னம் எளிதாக உள்Laதற்கே நாம் நன்றி சொல்லவேண்டும்.

தனிமனித கண்ணியம் காத்தல் எல்லோருக்கும் நலம் பயக்கும்.

நான் புரிந்த வரையில் டாக்டர் புருனோ அவர்களில் கருத்து

27% ஒதுக்கீடு for b.c and o.b.cs

1.first fill the reseved quota by people(b.c) having less income (as suggested by supreme court)
2.then the unfilled vacencies may be filled by the left out people (b.c)without any restriction.
3.then the remaining seats may be filled by people form o.c

ஆனால் உயர் கல்விக்கான (I.T.I, I.B.M)ஆண்டு வருமான வரம்பு ரூபாய் 10 லட்சமாக ஆக்குவது சமுக நீதி காக்கும்.

புருனோ Bruno said...

அனானி, நன்றி

//ஆனால் உயர் கல்விக்கான (I.T.I, I.B.M)ஆண்டு வருமான வரம்பு ரூபாய் 10 லட்சமாக ஆக்குவது சமுக நீதி காக்கும்.//

I.T.I ??? அல்லது IIT.

I.T.I என்றால் 2.5 லட்சம் சரியான தொகைதானே

இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...