இந்த இடுகைத்தொடர் சிறந்த இடுகையாக செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள் பிரிவில் 2008ஆம் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டது
இடம் : முதலிடம்
-oOo-
எனது முந்தைய பதிவில் (மெட்ரிகுலேஷன் / தனியார் பள்ளிகளின் மறுபக்கம்) மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்த முடியாததால் மூடப்படும் தனியார் பள்ளி குறித்து சில கேள்விகளை (எழில் அவர்கள் கூறியபடி ஆதங்கம்) எழுப்பியிருந்தேன். மேலும் சில கருத்துக்கள் இந்த பதிவில்.....
கடந்த பதினைந்து வருடங்களாக விலைவாசி அதிகரித்து வருகிறது என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. அதே போல் சம்பளமும், வருமானமும் அதிகரித்து வந்துள்ளன.
ஆனால் அனைத்து பொருட்களும் விலை உயர்ந்துள்ளதா என்றால் இல்லை என்று தான் பதில் கூற வேண்டும்
சில பொருட்களின் விலை குறைந்துள்ளது - உதாரணமாக செல்லிடப்பேசி, கணனி போன்றவைகளை கூறலாம்
சில பொருட்களின் விலை அப்படியே உள்ளது - எனக்கு தெரிந்து 6x4 மேக்ஸி புகைப்படம் அச்சிடும் (அல்லது வேறு சொல் என்ன) கட்டணம் பதினைந்து வருடங்களாக 5 ரூபாய் தான்
பெரும்பாலான பொருட்களின் விலை கூடியுள்ளது
- தங்கத்தை எடுத்துக்கொண்டால் 1993ல் இருந்ததை விட 2.5 முதல் 3 மடங்கு விலை கூடியுள்ளது
- பெட்ரோலை எடுத்துக்கொண்டால் 1993ல் இருந்ததை விட 2.5 முதல் 3 மடங்கு விலை கூடியுள்ளது
- பேரூந்து கட்டணம் 2.5 முதல் 3 மடங்கு
[முதலில் ஒரு பொறுப்பெல்லை மொழி அல்ல்து உரிமைத் துறப்பு (தமிழ் வலைப்பதிவு மொழியில் டிஸ்கி) - நான் பொருளாதார நிபுனர் அல்ல]
பொருளாதார ரீதியாக மூன்று அடுக்குகளை நாம் பல வருடங்களாகவே கூறிக்கொண்டுவருகிறோம் -
- மேல்தட்டு அல்லது பொருளாதார ரீதியாக முன்னேறியவர்கள்,
- நடுத்தட்டு அல்லது நடுத்தரவர்க்கம்,
- பின்தட்டு அல்ல்து பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள்-
- 2.5 முதல் 3 மடங்கை விட அதிகம் உள்ளதா, அல்லது,
- 2.5 முதல் 3 மடங்கு உள்ளதா இல்லை
- 2.5 முதல் 3 மடங்கை விட குறைந்துள்ளதா (அப்படியே உள்ள விலை, மற்றும் விலை குறைவு)
உதாரணமாக, 1993ல் 10 ரூபாய்க்கு விற்ற ஒரு பொருள், 2008ல்
- 30 ரூபாயை விட அதிகமாகி விட்டதா
- 25 முதல் 30 ரூபாய் உள்ளதா
- 25 ரூபாயை விட கம்மியாகி விட்டதா - அது 10 ரூபாயில் இருந்தாலும் (உதாரணம் புகைப்படம், பத்து ரூபாயைவிட குறைந்தாலுல் (உதாரணம் செல்லிடப்பேசி) இந்த அடுக்கிலேயே வைப்போம்
1993 ஒரு பொருள் (அல்லது சேவை) அனைத்து மக்களாலும் பயன்படுத்தப்பட்டது (அல்லது அவர்கள் பயன்படுத்தும் எல்லைக்குள் இருந்தது) என்று வைத்துக்கொள்ளுங்கள்.
- இன்று அப்பொருளின் விலை உயர்வு மூன்று மடங்கிற்குள் மட்டும் இருந்தால் மட்டுமே அனைவராலும் பயன்படுத்த முடியும்
- இன்று அது மூன்று மடங்கை விட அதிகம் உயர்ந்து விட்டது என்றால் அதை பின் தட்டு மக்களால் பயன்படுத்த முடியாது.
- மேலும் விலை உயர்ந்தால் நடுத்தட்டு மக்களாலும் கூட பயன்படுத்த முடியாது
- 2.5 மடங்கை விட விலையுயர்ந்தாலோ, விலை அப்படியே இருந்தாலோ, அல்லது விலை குறைந்தாலோ பின் தட்டு மக்கள் கூட பயன்படுத்த முடியும்
- 2.5 மடங்கு உயர்ந்தால் நடுத்தட்டு மற்றும் மேல்தட்டு மக்களால் பயன்படுத்த முடயும்.
- இன்று அது மூன்று மடங்கை விட அதிகம் உயர்ந்து விட்டது என்றால் அதை நடுத்தட்டு மக்களால் பயன்படுத்த முடியாது.
- 2..5 மடங்கை விட குறைவாக விலையுயர்ந்தால் நடுத்தட்டு கூட பயன்படுத்த முடியும். விலை அப்படியே இருந்தாலோ அல்லது விலை குறைந்தால் அனைவரும் பயன்படுத்தலாம்.
- 2.5 மடங்கு உயர்ந்தால் மேல்தட்டு மக்களால் பயன்படுத்த முடியும்.
- இன்று அது மூன்று மடங்கை விட அதிகம் உயர்ந்து விட்டது என்றால் அதை மேல்தட்டு மக்களிலேயே சிலர்தான் பயன்படுத்த முடியும்.
எனவே வாங்கு திறன் (பர்சேசிங் பவர்) என்பது அனைத்து பொருட்களுக்கும் ஒன்றல்ல. இது பொருளுக்கு பொருள் மாறுபடும்.
அதேபோல் வாங்கு திறன் (பர்சேசிங் பவர்) என்பது அனைத்து மக்களுக்கும் ஒன்றல்ல. இது அவரவரின் பொருளாதார நிலையை பொருத்து. கடந்த பதினைந்து ஆண்டுகளில், ஒரு விளம்பர பலகை எழுதுபவரின் வாங்கு திறனை விட அடோபியில் விளம்பரங்களை வடிவமைத்து அச்சிடுபவரின் வாங்கு திறன் கூடியுள்ளது.
அப்படியென்றால் எந்தெந்த பொருட்களின் வாங்குதிறன் அதிகரித்து உள்ளது
- ஒரு பொருளின் விலை 2.5 முதல் 3 மடங்கை விட குறைந்துள்ளது
- கார் - மாருதி 800
- ஒரு பொருளின் விலை அப்படியே உள்ளது
- புகைப்படம்,
- பெப்சி, கோக் !!! (அதே பத்து ரூபாய் தானே)
- ஒரு பொருளின் விலை குறைந்துள்ளது
- கணிப்பொறி, மடிக்கணனி, இணைய இனைப்பு கட்டனம்
- செல்லிடப்பேசி,
- 2.5 முதல் 3 மடங்கு அதிகரித்து உள்ளது
- பெட்ரோல்,
- தங்கம்
- 2.5 முதல் 3 மடங்கை விட அதிகமாகி உள்ளது என்றால் அந்த பொருளின் வாங்குதிறன் குறைந்துள்ளது.
- திரைப்பட கட்டணம்
- திரையரங்குகளில் விற்கப்படும் உணவு பொருட்களின் கட்டணம்
- கல்விக்கட்டணம்

13 மறுமொழிகள்:
//நான் பொருளாதார நிபுனர் அல்ல//
அதனால்தான் நல்ல விரிவான விளக்கம் கூற பொறுமை இருந்திருக்கிறது :)
நன்றாக உங்கள் கருத்தை வெளிப்படுத்துகிறீர்கள். அடுத்த ஆக்கத்திற்கு காத்திருக்கிறேன்.
மத்திய அரசின் பஞசப்படி இன்டெக்ஸில்
கல்விக் கட்டணததை சேர்ப்பார்களா? அல்லது மாட்டார்களா? விவரம் தெரிந்தால் எழுதுங்கள் டாகடர்!
//அடுத்த ஆக்கத்திற்கு காத்திருக்கிறேன்.//
இதோ இங்கு
http://payanangal.blogspot.com/2008/04/3_07.html
//அல்லது மாட்டார்களா? விவரம் தெரிந்தால் எழுதுங்கள் டாகடர்!//
கேட்டு சொல்கிறேன் வாத்தியார் சார்.
Bruno,
Thanks for an unbiased analysis.
The views are expressed from the point of increase in price of goods. The analysis will be complete only when we compare the purchasing power of the society in 1993 and 2008. If possible(hey i respect your time!), please publish the data of purchasing power(translated as salary) for all the three layers(upper middle and lower). The data can probably point an answer to the age-old saying "panakaran melum panakaran ahiran. Yealai melum yealai ahiran".
I can remember that in 1985, people used to get Rs 1.10 for making 1008 match box drawers (called "kettu ottuthal") in sivakasi. Now people are paid more than Rs. 11.
So my main question is if salary of the lower strata of the society has kept up with the inflation of ordinary, essential and luxury items.
Regards,
anony munna
(Happy to see a fellow Tuticorin-ian here!!)
கல்விக்கட்டணம் எங்கே உயர்ந்துள்ளது தனியார் கல்விக்கூடங்களிலா அல்லது அரசு கல்விக்கூடங்களிலா என்று சிந்தித்துப் பாருங்கள். மேலும் ஒரு கேள்வி 1993 ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியரின் ஊதியம் என்ன 2008ல் புதிதாக சேர்ந்த ஆரம்பப்பள்ளி ஆசிரியரின் ஊதியம் என்ன இந்த ஊதிய மடங்கு களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள்.
விலைவாசி உயர்வு என்றால் பால் விலை ஏரிவிட்டது வெங்காய விலை ஏறிவிட்டது சமையல் எண்ணெய் விலை ஏறிவிட்டது என்று கூச்சல் இடுகிறார்கள். இவை அனைத்தும் திட்டமிடப்பட்டு தொழிற்ச்சாலைகளில் தயாரிக்கப்படுவதில்லை இயற்க்கையைச்சார்ந்து விவசாயிகளால் தயாரிக்கப்படுவது. இதனை கட்டுப்படுத்தவேண்டுமெனில் அரசு விவசாயிகளின் தலைமேல்தான் கையை வைக்கவேண்டும்.
//So my main question is if salary of the lower strata of the society has kept up with the inflation of ordinary, essential and luxury items.//
நான் கூறவந்தது அதுவல்ல.
நீங்கள் எந்த ஒரு பொருளையோ, சேவையையோ எடுத்தால் அதை கீழ்க்கண்ட நான்கு வகைகளுக்குள் பொருத்தலாம்
1. நேற்று அனைவரும் பெற முடிந்தது இன்றும் அனைவரும் பெற முடியும் - உதாரணம் வானொலி
2. நேற்று அனைவரும் பெற முடிந்தது இன்று ஒரு சிலரால் மட்டும் பெற முடியும் - உதாரணம் திரையரங்கு சென்று திரைப்படம் பார்த்தல் (தொலைக்காட்சியில் பார்ப்பது வேறு. நான் அதை கூறவில்லை)
3. நேற்று ஒரு சிலரால் மட்டும் பெற முடிந்தது இன்று அனைவரும் பெற முடியும் - உதாரணம் தொலைபேசியும், தொலைக்காட்சியும், குளிர்சாதனப்பெட்டியும்
4. நேற்று ஒரு சிலரால் மட்டும் பெற முடிந்தது இன்றும் ஒரு சிலரால் மட்டும் பெற முடியும் - உதாரணம் கோல்ப் விளையாட்டு
கல்வி என்பது சுதந்திரத்திற்கு முன்வரை ஒரு சிலரால் மட்டுமே பெறக்கூடியதாக இருந்தது. உதாரணமாக 6ஆம் வகுப்பிற்கு மேல் படிப்பு படிக்க மாவட்ட தலை நகர் வரை வர வேண்டி யிருந்ததே
இன்று வரை (தமிழகத்தில்) கல்வி அனைவராலும் பெறக்கூடிய பொருள். இலவச பேரூந்து பயண அட்டை (பஸ் பாஸ்), இலவச மிதிவண்டி, இலவச கல்வி என்று இருக்கிறது
மீண்டும் அது ஒரு சிலரால் மட்டும் பெறக்கூடியதாக ஆகிவிடக்கூடிய வாய்ப்பு எவ்வளவு
//கல்விக்கட்டணம் எங்கே உயர்ந்துள்ளது தனியார் கல்விக்கூடங்களிலா அல்லது அரசு கல்விக்கூடங்களிலா என்று சிந்தித்துப் பாருங்கள்.//
கண்டிப்பாக தனியாரில் தான். சந்தேகமே இல்லை. நான் கூற வந்தது அது வல்ல.
ஏற்கனவே மாணவர்கள் இல்லாமல் பல கிராமப்புற பள்ளிகள் மூடப்படுவது தினசரி நிகழ்வாகிவிட்டது. மாணவர்கள் இல்லாததற்கு காரணம் (1) நகர் புறங்களுக்கு மக்கள் செல்வது (2) தமிழகத்தில் அளவிற்கு அதிகமாக கடைபிடிக்கப்பட்ட குடும்ப கட்டுபாடு. பள்ளி மூடப்படுவதற்கு காரணம் "50 மாணவர்களுக்கு 3 ஆசிரியர்கள்" என்று "துப்பறிந்து" எழுதும் ஊடகங்கள் (என் வரிப்பணம் வீணாகிறது என்று சில அறிவு ஜீவிகளின் புலம்பல் வேறு கட்டாயம் அந்த கட்டுரையுடன் பெட்டி செய்தி யாக இருக்கும்).... கிராமப்புற மாணவன் படிக்க கூடாது என்று உள்நோக்கமே இது "வரி வீனாகிறது" கட்டுரையாக வருகிறது என்பது என் கருத்து. உங்கள் கருத்து என்ன ?. மாடு மேய்த்துக்கொன்டிருந்தவனை சாப்பாடு போட்டு பள்ளிக்கு அழைத்த காலம் போய், இன்று பள்ளிக்கு வருபவனை பள்ளியை மூடி விட்டு அடுத்த ஊருக்கு போ என்றால் அதன் விளைவு என்னவாக இருக்கும் ??
// மேலும் ஒரு கேள்வி 1993 ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியரின் ஊதியம் என்ன 2008ல் புதிதாக சேர்ந்த ஆரம்பப்பள்ளி ஆசிரியரின் ஊதியம் என்ன இந்த ஊதிய மடங்கு களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள்.
//
அதைத்தான் 2.5 முதல் 3 மடங்கு என்று கணக்கிட்டு உள்ளோம். (இதுவும், பெட்ரோல் விலை உயர்வும், தங்கம் விலை உயர்வும் ஒரே அளவில் தான்)
1993ல் உள்ள சம்பளத்தை விட 2013ல் சம்பளம் 4 மடங்கு ஆகும் (அதற்கு தான் சம்பள கமிஷன்)
நான் கூறுவது என்ன வென்றால், 1993 ல் உள்ள கல்விக்கட்டணத்தை விட 2008ல் உள்ள கல்விக்கட்டணம் 3 மடங்கை விட அதிகரித்துள்ளது (திரையரங்கு கட்டணத்தை போல்)
//விலைவாசி உயர்வு என்றால் பால் விலை ஏரிவிட்டது வெங்காய விலை ஏறிவிட்டது சமையல் எண்ணெய் விலை ஏறிவிட்டது என்று கூச்சல் இடுகிறார்கள்.//
இவை கூட முன்று மடங்கு தானே ஏறு உள்ளது (1999ல் ஏறிய வெங்காயஹ்ட்தை தவிர்த்து)
கல்விக்கட்டணம் மற்றும் கிராமப்புற மாணவர்களும் பயன் பெரும் வகையில் ஒரு திட்டம் இப்படி இருந்தால் என்ன
http://puratchithamizan.blogspot.com/2008/04/blog-post.html
புருனோ, இந்த இடுகையிலும் முந்தைய இடுகையிலும் புருனொ என்ற பெயரில் மறுமொழி எழுதுவது நீங்கள் தானா? மற்றவர் பதிவுகளில் வேறு ப்ளாகர் கணக்கில் இருந்து நீங்கள் மறுமொழி எழுதுவதைப் பார்த்திருக்கிறேன். இதனால், எழுதுவது நீங்கள் தானா போலியா என்று குழப்பமாக இருக்கிறது. தயவுசெய்து உங்கள் ஒரே ப்ளாகர் கணக்கில் இருந்தே எல்லா இடங்களிலும் மறுமொழி இட வேண்டுகிறேன்.
//தயவுசெய்து உங்கள் ஒரே ப்ளாகர் கணக்கில் இருந்தே எல்லா இடங்களிலும் மறுமொழி இட வேண்டுகிறேன்.//
சரி, செய்து விடுகிறேன் :) :) :)
விவாதம் சூடுபறக்கிறது. பதிவுலக நண்பர்களின் கேள்விக் கணைகளுக்கு சரியான பதில் அதுவும் பொருளாதார அடிபடையில்.வாழ்த்துக்கள்.தங்களது சமுதாய சிந்தனை சார்ந்த இந்த பதிவுக்கு நன்றி .(உணவுப் பொருள்களின் விலைகள்,வீட்டுவாடகை,கல்விகட்டணங்கள், (NH 4lane)தேசியச் சாலைகளில் பயணிக்க செலுத்த இருக்கும் சுங்க வரி,...etc 3 மடங்கையும் தாண்டும் போலுள்ளதே!)
//தங்களது சமுதாய சிந்தனை சார்ந்த இந்த பதிவுக்கு நன்றி.//
வாழ்த்துக்களுக்கு நன்றி சார்
//உணவுப் பொருள்களின் விலைகள்,வீட்டுவாடகை,கல்விகட்டணங்கள், (NH 4lane)தேசியச் சாலைகளில் பயணிக்க செலுத்த இருக்கும் சுங்க வரி,...etc 3 மடங்கையும் தாண்டும் போலுள்ளதே!//
இது தான் மைய கருத்து. அனைவருக்கும் கணினி, அனைவருக்கும் செல்லிடப்பேசி, அனைவருக்கும் மின்னஞ்சல் முகவரி என்பது கடந்த 15 வருடங்களாக நாம் செல்லும் பாதை.
ஆனால் அதே நேரத்தில், கல்வி, வீடு போன்றவைகளில் நாம் எந்த திசையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்றும் பார்க்க வேண்டும்.
ஒன்றை இழந்தால் தான் மற்றொன்றை பெற முடியும். இதில் சந்தேகமே இல்லை. ஆனால் நாம் எதை இழக்கிறோம், எதே பெறுகிறோம் ????
இன்று பெரிதாக பாதிப்பில்லை போல் தோன்றினாலும், இதே நிலைமை இன்னும் ஒரு 15 வருடங்கள் இதே விகிதத்தில் இதே திசையில் சென்றால் என்ன நடக்கும் ????
Post a Comment