சென்ற மாதம் நான் தமிழில் புதிதாத கற்ற / உபயோகித்த சொற்களை வரிசைபடுத்த இந்த பதிவு. நான் பயன்படுத்தும் தமிழ் சொற்கள் பெரும்பாலும் tamilvu.org தளத்தில் உள்ளவையே. அப்படி இல்லாமல் நானாக புதிதாக உருவாக்கிய பதங்கள் நீல நிறத்தில் உள்ளன
சொற்கள் குறித்த உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. இதை விட சிறந்த தமிழ் சொல் வழக்கத்தில் / புழக்கத்தில் / நிகண்டில் இருந்தால் கூறவும்
தடங்கலில்லா மின் வழங்கி (த.மி.வ ) - UPS
தானியங்கி பணம் வழங்கி (தா.ப.வ) - ATM
செலவட்டை - Debit Card
தானியங்கி பணம் வழங்கி அட்டை - ATM Card
அடிப்படை சம்பளம் - Basic Pay
அகவிலைச்சம்பளம் - Dearness Pay (DP)
அகவிலைப்படி / பஞ்சப்படி - Dearness Allowance (DA)
மருத்துவப்படி - Medical Allowance
விட்டு வாடகை படி - House Rent Allowance (HRA)
பயணப்படி - Travelling Allowance (TA)
தினப்படி - Daily Allowance (DA)
வருடாந்திர ஊதிய உயர்வ - Increment
கால முறை ஊதியம் - Time Scale of Pay
சம்பள ஏற்றமுறை - Pay Scale
தொகுப்பூதியம் - Consolidated Pay
செலவழித்தது திருப்பிக் கொடு - Reimburse
(இரயிலில்) குளிர்சாதன இரண்டடுக்கு - AC II Tier (Train)
(இரயிலில்) முதல் வகுப்பு - First Class (Train)
(இரயிலில்) குளிர்சாதன முன்றடுக்கு - AC III Tier(Train)
(இரயிலில்) குளிர்சாதன நாற்காலி வகுப்பு - AC Chair Car (Train)
(இரயிலில்) குளிர்சாதன முதல் வகுப்பு - AC First Class (Train)
வேலை முறைப் பட்டியல் - Roster
சுழற்சி முறைப் பட்டியல் - Rotation Roster
100 புள்ளி முறைப்பட்டியல் - 100 point Roster
தணிக்கை - Audit
மேற்பார்வை - Supervision
இருப்பு பதிவேடு - Stock Register
பேராசிரியர் - Professor
விரிவுரையாளர்கள் - Lecturers
மீண்டுமீண்டெழுது தண்டம் - Imposition
உடற்கூறியல் - Anatomy
எலும்பியல் - Osteology
திசுவியல் - Histology
கதிரியல் - Radiology
8 மறுமொழிகள்:
செலவட்டை என்று Credit Card இனைத்தான் சொல்லவேண்டும்; Debit Card இனை வரவட்டை என்றுதான் சொல்லவேண்டும்.
நான் சரியா சொல்கிறேனா?
கௌபாய்மது ...
//செலவட்டை என்று Credit Card இனைத்தான்//
டெபிட் அட்டையில் வரவு எதுவும் வருவதில்லையே
மேலும் கிரடிட் என்றால் கடன். அதனால் தான் கிரடிட் அட்டை என்பது கடனட்டை என்று பரவலாக கூறப்படுகிறது
ஆனால் டெபிட் அட்டை என்பதை எப்படி கூற . வரவட்டை அவ்வளவு சிறப்பாக இல்லையே :)
வங்கி பணியில் உள்ளவர்கள் விளக்கினால் நன்றாக இருக்கும்
ஒருவருடைய கணக்கில் இருக்கும் பணத்தை செலவழிக்க பயன்படுத்தும் அட்டைதான் டெபிட் கார்ட்.
ஆகவே டெபிட் கார்டை செலவட்டை என்று அழைப்பதுதான் சரி என்று கருதுகிறேன்
டி.பி.ஆர் சார்
வருக, நன்றி,
//ஒருவருடைய கணக்கில் இருக்கும் பணத்தை செலவழிக்க பயன்படுத்தும் அட்டைதான் டெபிட் கார்ட்./
இதே எண்ணவோட்டத்தில்தான் நானும் செலவட்டை என்று கூறினேன்
ஓமோம், நீங்கள் சொல்லுறது சரிபோலத்தான் கிடக்குது.
நானும் கொஞ்ச நாட்களாக, தங்களது பதிவினை கவனித்துதான் வருகிறேன். தங்களைப் போன்ற மருத்துவர்களும், பல விஞ்ஞானிகளும் ஆங்கிலத்தில் படித்திருந்தாலும் தமிழில் தகுந்த சொற்களுடன் எழுத முயல்கையில்...எழுத்தாளர் என்று கூறிக்கொள்பவர்களுக்கு அந்த அக்கறை இல்லையே என்ற ஆதங்கத்தில்தான் எனது அந்தப் பதிவு.
இணையத்தில் நான் கற்ற நல்ல தமிழ் வார்த்தை 'சேரியமாக சொல்லுதல்' 'seriousஆ பேசறேன்னு' சொல்றதுக்கு.
commentக்கு தெரியாமல் இருந்தது. இராமகி அவர்கள் முன்னிகை என்ற வார்த்தையினை பயன்படுத்துகிறார்கள்!
பிரபு ராஜதுரை சார்
நன்றி,
- முன்னிகை -
கருத்து
விமர்சனம்
அபிப்ராயம்
எண்ணம்
என்று பல சொற்கள் இருக்கிறதே
அபிப்ராயம் பொருத்தமாக இருக்கிறது என்பது என் அபிப்ராயம் :) :)
பின்னூட்டம் என்பது feedback என்பதற்கு பொருந்தும் அளவிற்கு commentக்கு பொருந்தவில்லை பின் (back) + ஊட்டம் (feed)
Post a Comment