இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Wednesday, April 09, 2008

வாகனம் ஓட்டும் பொழுது "டயர்" வெடித்தால் என்ன செய்ய வேண்டும்

அண்மையில் மின்னஞ்சலில் வந்தது

நாற்சக்கர வாகனம் ஓட்டும் பொழுது "டயர்" வெடித்தால் என்ன செய்ய வேண்டும்

நிறுத்துக் கருவியை (ப்ரேக்) ஓங்கி அழுத்தாதீர்கள்
வேகம் அதிகரிக்கும் சாதனத்திலிருந்து (ஆக்ஸிலெரேட்டர்) காலை எடுத்து விடுங்கள்
திசை மாற்றியை (ஸ்டீரிங்) கெட்டியாக பிடித்துக்கொள்ளுங்கள்
நேரான பாதையிலேயே வாகனத்தை செலுத்துங்கள்
மெதுவாக வாகனத்தை ஒரு பக்கமாக (இந்தியாவில் இடது) திருப்புங்கள்
வாகனம் நின்றபின் டயரை மாற்றி விடுங்கள்

இந்த தகவலை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்புங்கள்

பி.கு :
டயர் என்பதற்கு சரியான தமிழ் சொல் என்ன ?
ப்ரேக், ஆக்ஸிலெரேட்டர் போன்றவைகளுக்கு பொருத்தமான தமிழ சொல் என்ன ?

8 மறுமொழிகள்:

Venkatramanan said...

சக்கரம்னு சொல்லலாம். மற்ற சொற்களுக்கு - http://ta.wikipedia.org/wiki/சக்கரம் பார்க்கலாம்.
அன்புடன்
வெங்கட்ரமணன்

புருனோ_Bruno said...

வருக வெங்கட்ராமனன் சார், தகவலுக்கு நன்றி

சக்கரம் என்பது "வீல்" என்பதற்கு பொருத்தமான தமிழ் சொல்.

நமக்கு தேவை

டயர் எனபதற்கு பொருத்தமான சொல்.
டுயூப் என்பதை வேண்டுமானால் சக்கர குழாய் :)/ காற்றுக்குழாய் என்று சொல்லலாம்.

வடுவூர் குமார் said...

இதை படிக்கும் போது
இது
ஞாபகம் வந்தது.

enRenRum-anbudan.BALA said...

//
டயர் என்பதற்கு சரியான தமிழ் சொல் என்ன ?
ப்ரேக், ஆக்ஸிலெரேட்டர் போன்றவைகளுக்கு பொருத்தமான தமிழ சொல் என்ன ?
//

டயர் - ரப்பர் சக்கரம்

பிரேக் - நிறுத்துக் கருவி

ஆக்ஸிலெரேட்டர் - வேகம் கூட்டி

payanangal said...

வடுவூர் குமார் சார்,

தன்னம்பிக்கை குறித்து ஒரு அருமையான படத்தொகுப்பு

புருனோ said...

என்றென்றும் பாலா சார்... நன்றி

இராம.கி said...

அன்பிற்குரிய புரூனோ,

பின்னூட்டு நீளமானதால் தனிப்பதிவாக இட்டிருக்கிறேன்.

http://valavu.blogspot.com/2008/04/tyre-brake-and-acceleration.html#links

ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

அன்புடன்,
இராம.கி.

புருனோ said...

நன்றி ஐயா. பல தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது. மின்னஞ்சலில் வந்த அந்த குறிப்புகளை நான் பதிவிட்டதன் முக்கிய காரணம் -> அதில் வரும் சொற்களுக்கு ஈடான தமிழ் பதங்களை அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான்.

மீண்டும் ஒரு முறை நன்றி

இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...