- கட்டாய கிராமப்புற சேவைத்திட்டத்தில் 150க்கு மேற்பட்ட மருத்துவர்கள் நியமனம்
- ஒரு நோய்க்கு மூன்று அடுக்கு வைத்தியம்,
- தமிழகத்தில் மருத்துவர் பற்றாக்குறையா, அல்லது அதிகம் மருத்துவர்களா
- ரவிசங்கர் அவர்களின் வினாக்களுக்கு விடைகள்
8. தமிழ் வழியத்தில் படித்து வரும் மாணவர்கள் மருத்துவப் படிப்பில் தடுமாறுகிறார்களா?
கண்டிப்பாக இல்லை. எங்கள் வகுப்பிலிருந்து முதன் முதலில் பட்டமேற்படிப்பு படித்த மாணவர் (அதாவது நாங்கள் முதலில் எழுதிய நுழைவுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தவர்) தமிழ் வழியில் படித்தவர் தான்.
மருத்துவத்துறையை பொருத்தவரை முதல் மூன்று ஆண்டுகளில் உபயோகிக்கும் 95 சதவித வார்த்தைகள் ஆங்கிலம் அல்ல. அவை கிரெக்கம் அல்லது லத்தீன் !! ஏன் கிட்டத்தட்ட அனைத்து மொழிகளில் இருந்தும் (சில ஆப்பிரிக்க மொழிகள் உட்பட) சொற்கள் உள்ளன
எனவே
தமிழ் வழிக்கல்வியில் வந்தவரும் அவைகளை புதிதாக படிக்க வேண்டும்
ஆங்கில வழிக்கல்வியில் வந்தவரும் அவைகளை புதிதாக படிக்க வேண்டும்
உதாரணமாக
தமிழ் - தோளின் முன்புறம் ஒரு கட்டி
ஆங்கிலம் - Swelling in front of Shoulder
Medical - Swelling at anterior aspect of deltoid
இதில் தமிழ் மாணவரும் புதிதாக இரண்டு வார்த்தை கற்க வேண்டும்
ஆங்கில வழி படித்தவரும் புதிதாக இரண்டு வார்த்தை கற்க வேண்டும்
இதை தமிழ் படுத்தினால்
டெல்டாயிடுக்கு அண்டிரியராக ஒரு கட்டி என்று எழுத வேண்டியிருக்கும்
ஐரோப்பிய நாடுகளில் தாய் மொழியில்தான் கற்கிறார்கள். அவர்களுக்கு அவர்களின் தாய் மொழியின் Script அதே ரோமன் ஸ்கிரிப்ட் தான். அவர்களும் fever, stomach, leg, brain, heart போன்ற சொற்களைத்தான் தங்களின் தாய் மொழியில் பயன்படுத்துவார்கள். 98 விழுக்காடு சொற்கள் கலைச்சொற்கள் தான். அதே போல் பிரஞ்சு மொழியில் படித்த ஒருவர் மேற்கொண்டு ஆங்கில மொழி புத்தகத்தை (மருத்துவத்துறையை பொருத்தவரை) ஒரு சிறு அகராதியை வைத்துக்கொண்டே கற்கலாம்.
தமிழ் வழியில் படித்த மாணவர்கள் மருத்துவக்கல்லூரிகளில் கண்டிப்பாக தடுமாறுவதில்லை.
இது குறித்து நான் பல ஆங்கில பதிவுகளில் பின்னூட்டங்களில் எழுதியிருந்தேன். ஆங்கிலம் தெரியாததால் தற்கொலை செய்து கொள்ளுதல் அல்லது படிப்பை விட்டு விலகி விடுதல் போன்றவை மருத்துவத்துறையில் அறவே நடப்பது இல்லை.
சில (பொறியியல்) கல்வி நிலையங்களில் நடப்பது போல் ஆங்கிலம் தெரியாததால் மருத்துவத்துறையில் யாரும் தற்கொலை செய்து கொள்வது கிடையாது. அப்படியே ஒன்றிரண்டு தற்கொலைகள் நடந்த போதும், அது காதல் தோல்வியால் தான். படிப்பினால் மன உளைச்சல் என்றால் எனக்கு தெரிந்து 2002ஆம் வருடம் ஒரு மாணவி தனக்கு பட்டமேற்படிப்பில் இடம் கிடைக்கவில்லை என்று தான் தற்கொலை செய்ததை தவிர வேறு ஒன்றும் இல்லை
மற்றொரு விஷயம் -- படித்து முடித்த பின் “மென் திறன்” (தமிழ் சொல் புரியவில்லை என்றால் மட்டும் பின்னூட்டத்தில் கேட்கவும்) போன்ற “மாயைகள்” இத்துறையில் இல்லை. வாடிக்கையாளர்களிடம் (பிணியாளர்) பேச வேண்டிய மொழி தமிழ் என்பதாலும், பேச்சு ஆங்கிலத்திற்கு மிகக்குறைவான (கிட்டத்தட்ட பூஜ்யம்) அளவு முக்கியத்துவம் இருப்பதாலும் தான் தமிழ் வழி படித்தவர்கள் இந்த துறையில் எந்த பெரிய பிரச்சனையையும் சந்திப்பதில்லை.
ஒரு படி மேலே போய், தமிழ் வழி படித்தவர்கள் ஆங்கில வழியாக எளிதாக படிக்கக்கூடிய துறை என்னவென்றால் கட்டாயமாக மருத்துவத்துறை என்று கூறலாம் !!
மருத்துவப் படிப்பையும் முழுக்கத் தமிழ் வழியத்தில் கொண்டு வருவதை ஆதரிப்பீர்களா?
இல்லை. அதனால் பலன் கிடையாது. நோயாளிக்கு நாம் கூறுவதும் நமக்கு நோயாளி கூறுவது புரிய வேண்டும் என்பதற்காக தமிழ் வழியில் தான் படிக்க வேண்டும் என்று கிடையாது
அதன் பயன், பாதகம் என்னவாக இருக்கும்?
பயன் ஒன்றும் இல்லை. (எனக்கு தெரிந்த வரை)
பாதகம் நேரவிரையம். எம்.பி.பி.எஸ் படிக்கும் பொழுது நேர விரயம் ஏற்பட வில்லை என்றாலும் எம்.பி.பி.எஸ் படித்து முடித்த பின் மேற்படிப்பு படிக்கும் பொழுது நேரவிரையம் ஏற்படும்
ஆனால்
நோயாளிகளுக்கு அளிக்கும் குறிப்பு சீட்டு, மருந்து பரிந்துரை ஆகியவற்றை கட்டாயம் தமிழில் தான் அளிக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
அப்படி கொண்டு வரும் நிலையில் அதற்கு ஆதரவாக இருக்க வேண்டிய புறச் சூழ்நிலைகள் என்ன?
மருத்துவம் என்பது பல அடுக்கு படிக்க வேண்டிய ஒரு துறை.
உதாரணமாக இந்த வருடம் MS Anatomyக்கு தமிழக்த்திலேயே ஒரு மாணவர் மட்டும் தான் சேர்ந்துள்ளார். இப்படி ஒரு மாநிலத்திலேயே ஐந்திற்கும் குறைவானவர்களே படிக்கும் பொழுது ஆங்கிலத்திலேயே படிப்பது தான் மேற்படிப்பு, குறிப்பு எடுப்பது, சர்வதேச சஞ்சிகைகளுக்கு எழுதுவது ஆகியவற்றுக்கு நல்லது. ஐந்து நபர்கள் மட்டும் படிப்பதற்காக 20000 பக்கங்களை தமிழ் படுத்துவது என்பது நேரவிரையம்
ஆனால் நோயாளியுடன் பேசு பொழுது கட்டாயம் தாய் மொழியில் தான் பேச வேண்டும்.
(எடுத்துக்காட்டுக்கு, அரசு வேலையில் முன்னுரிமை, பிற மாநிலங்களில் ஏற்பு..)
இப்படி கொண்டு வருவதற்கான தேவை இருக்கிறதா?
தேவை இல்லை என்பது என் கருத்து
கொண்டு வருவதற்கான தடைகள் யாவை?
தடை என்று பார்த்தால் டெல்டாயிடுக்கு அண்டிரியர் என்று எழுதுவதற்கும் Anterior to Deltoid என்று எழுதுவதற்கும் வித்தியாசம் இல்லை. ஆனால் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உதாரணமாக Diabetes Mellitus வேறு. Diabetes Insipidus வேறு.
இந்திய மருத்துவக் கழகத்தின் ஆதரவு இல்லாமலை, தமிழில் பயிற்சி உடைய ஆசிரியர்கள் இல்லாமை, பாடநூல்கள் இல்லாமை..பிற?
மருத்துவ கவுன்சில் ஆதரவு என்பது பெரிய விடயம் கிடையாது. முக்கிய விஷ்யம் என்னவென்றால் இவ்வளவு முயற்சி செய்தால் விளையும் பயன் என்ன என்பது.
நோயாளிக்கு தமிழில் விளக்க வேண்டும் என்பதற்காக மருத்துவ படிப்பை தமிழ் படுத்த வேண்டும் என்பது இல்லை
மருத்துவ மேற்படிப்புக்கான தேர்வைத் தமிழில் தான் எழுதுவேன் என்று ஒருவர் தொடர்ந்து போராடி வருவதாகக் கண்டேன்..
எழுதலாம். தப்பில்லை. ஆனால் இதில் என்ன பிரச்சனை . ஏன் அதை தடுக்கிறார்கள் என்று புரியவில்லை. அவரை தமிழில் எழுத விட்டு தமிழ் தெரிந்த மருத்துவ பேராசிரியர்களை வைத்து திருத்த வேண்டியது தான். ஆனால் செய்முறைத்தேர்வில் பிற மாநிலத்திலிருந்து வருபவர்களிடம் எப்படி தமிழில் பேச முடியும் என்பது தான் சிக்கலான விஷயம்.
நோய் குறித்த விரிவான விவரங்களைத் தமிழில் சொன்னாலும் ஆங்கிலத்தில் சொன்னாலும் நோயாளிகளுக்குப் புரியாமல் இருக்காலம்.
கண்டிப்பாக வித்தியாசம் உள்ளது.
next review on Tuesday at room 10 என்பதற்கும்
அடுத்த முறை அறை எண் 10க்கு செவ்வாய்கிழமை வரவும் என்று எழுதுவதற்கும் நிறைய வேறு பாடு உள்ளது. நான் பல வருடங்களாக நோய் குறிப்பு சீட்டில் தமிழில் தான் எழுதிகொடுக்கிறேன். என்னைப் போல் பலரும் இப்படி தான் செய்கிறோம்.
தமிழக அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் அனைத்து மருந்துகளிலும் அட்டையில் மருந்தின் பெயர் தமிழில்தான் இருக்கும்.
ஏனென்றால் கலைச்சொற்கள் பொது மக்களுக்குப் புரியாமல் இருக்கலாம். அதனால், எந்த மொழியில் படிக்கிறோம் என்பது ஒரு பிரச்சினை இல்லை என்று கருதுகிறீர்களா?
பொதுமக்களிடம் கலைச்சொற்களை பயன்படுத்த தேவையில்லை. அப்படி பயன்படு்ததுவது தவறும் கூட. அவர்களிடம் சாதாரண மொழியில் தான் உரையாட வேண்டும்.
You have got thrombosis of Artery of Charcot என்றாலோ
உங்களின் சார்கோட் ஆர்டரி த்ராம்போஸ் ஆகி விட்டது
என்றாலோ கண்டிப்பாக புரியாது - இரண்டாவது தமிழில் இருந்தாலும் கூட. ஏன் ஆங்கிலத்தில் எம்.பில் படித்தவருக்கு கூட முதலில் சொன்னது புரியாது
You have got Stroke and Hemiplegia என்றாலோ
உங்களுக்கு பக்க வாதம் என்றாலோ
கட்டாயம் புரியும்
9. தமிழ்நாட்டில் தமிழ் தெரியாமல் மருத்துவம் பார்ப்பது சாத்தியமா?
இல்லை. எந்த ஊரிலும் அந்த மொழி தெரியாமல் வைத்தியம் பார்ப்பது சாத்தியமில்லை.
சென்னையில் ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்தால் தமிழுடன் தெலுங்கு தெரிந்திருக்க வேண்டும்
வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் தமிழுடன் மலையாளமும் வங்காளியும் தெரிந்திருக்க வேண்டும்
அப்பலோ, சங்கர நேத்ராலயா போன்ற தனியார் மருத்துவமனைகளிலும் கூட தமிழுடன் வங்காளியும் தெரிந்திருக்க வேண்டும்
ஆங்கில அறிவுடைய நோயாளிகளுக்கும் மட்டும் மருத்துவம் பார்க்க வேண்டும். அல்லது, மருத்துவரின் சேவையைப் புறக்கணிக்க இயலாத அளவுக்கு ஏதோ ஒரு துறையில் நிபுணராக இருக்க வேண்டும். வேறு சாத்தியங்கள் ஏதும் தோன்றவில்லை.
நோயாளியிடம் தமிழில் பேசுவதற்கு தமிழ் மொழியில்தான் படிக்க வேண்டும் என்று இல்லை.
மருத்துவ மொழி வேறு. ஆங்கிலம் வேறு. தமிழ் வேறு. மருத்துவ மொழி என்பதை ஆங்கிலம் என்று தவறாக நினைக்க வேண்டாம். உதாரணமாக கீழே தரப்பட்டுள்ளது ஆங்கிலம் தான். எவ்வளவு புரிகிறதா என்று பாருங்கள்
இதை தமிழில் எழுதினாலும் மருத்துவ அறிவு இல்லாத தமிழனுக்கு எவ்வளவு புரியும் என்று பாருங்கள்
Hyperparathyroidism and hypoparathyroidism
The classification of Hyperparathyroidism and hypoparathyroidism
- Primary Hyperparathyroidism
- Due to a disease of Parathyroid
- Ademoma of Parathyroid
- Carcinoma of Parathyroid
- Primary Chief Cell Hyperplasia of Parathyroid
- Secondary Hyperparathyroidism
- o Presents with Mild Hypocalcemia
- o Due to a disease elsewhere producing Hypocalcemia and the Parathyroid compensates
- Chronic Renal Insufficiency
- Vitamin D Deficiency
- Intestinal Malabsorption
- Tertiary Hyperparathyroidism
- Complication of Secondary Hyperparathyroidism
- Hyperfunction persists inspite of removal of the cause
- Probably a hyperplastic nodule has turned into adenoma
- Primary Hypoparathyroidism
- Due to disease of Parathyroid
- Surgery
- Of Thyroid
- Radical neck Dissection
- Auto immune diseases
- Pseudo Hypoparathyroidism
- Tissues fail to respond to Parathyroid hormone though Parathyroid may be normal
- Inherited as Autosomal Dominant
- Signs and symptoms of Hypoparathyroidism
- Short Stature
- Short Metacarpals and Metatarsals
- Flat Nose
- Round Face
- Multiple Exostoses
- Hypercalciuria
- Hypocalcemia
- Hyperphosphatemia
- Pseudo Pseudo Hypoparathyroidism
- Probably an incomplete form of Pseudo Hypoparathyroidism
- Clinical features of Pseudo Hypoparathyroidism, but tissues respond normally
அதே நேரத்தில் நீரழிவு நோய் குறித்து ஒரு சிறு குறிப்பு (துண்டுச்சீட்டு என்று வைத்துக்கொள்வோம்)
Symptoms of Type 2 Diabetes
- Excessive thirst
- Passing of excessive amounts of urine
- Fatigue
- Frequent skin infections e.g. boils
- Itchiness
- If you are over weight – try to lose some weight: Evidence shows that a 10% reduction in body weight can lead to on average a 50% reduction in fasting blood sugar levels.
- Exercise Regularly: with regard to diabetes, regular physical activity aids weight management; improves insulin sensitivity and therefore blood glucose control; aids blood fats control; and improves your overall sense of well-being.
- Eat healthily: maintain and adhere to a healthy diabetic diet.
- Keep a regular eye on your blood sugar levels
இது புரிகிறதா அல்லது கீழே உள்ளது புரிகிறதா என்று பாருங்கள்
நீரழிவு நோயின் அறிகுறிகள்
- அதிக தாகம்
- அடிக்கடிசிறுநீர் கழித்தல்
- அசதி
- அடிக்கடி தோல் கொப்புளங்கள்
- புண்கள் ஆறாமல் இருப்பது
- நீங்கள் அதிக எடையுள்ளவராக இருந்தால் எடையைக்குறைக்கவும்
- ஒழுங்காக, தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்யவும்
- ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைபிடிக்கவும்
- இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும்
ஆனால் இது போன்ற விஷயங்களுக்காக மருத்துவத்தை தமிழில் படிக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை.
இன்று நான் நெதர்லேண்டு வருகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள் (அல்லது சீனா செல்கிறேன்) ஒரு 6 மாதம் அந்த மொழியை படித்த பின் என்னால் கண்டிப்பாக அந்த மக்களுடன் உரையாடி அவர்களுக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்க முடியும். அதற்கு நான் சீன மொழியில் ம்ருத்துவம் படிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
தமிழ்வழியில் பள்ளியில் படித்த பலர் வட மாநிலங்களில் பட்ட மேற்படிப்பு படிக்கும் காலங்களில் அங்குள்ள மக்களுக்கு வைத்தியம் பார்க்க ஹிந்திதான் பேச வேண்டும்.
அதே போல் பள்ளியில் ஹிந்தி வழியில் படித்தவர்கள் தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் படிக்கிறார்கள். பின்னர் அவர்களின் மாநிலங்களுக்கு சென்று வைத்தியம் பார்க்கிறார்கள்.
நோயாளியிடம் தமிழில் பேசுவதற்கு தமிழ் மொழியில்தான் படிக்க வேண்டும் என்று இல்லை.
இன்று
பி.ஈ / பி.டெக் இடங்கள் எத்தனை
எம்.ஈ. / எம்.டெக் இடங்கள் எத்தனை
அதே போல்
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் இடங்கள் எத்தனை
எம்.டி / எம்.எஸ் இடங்கள் எத்தனை
என்று பார்த்தால் பி.ஈ முடித்து மேற்படிப்பு படிப்பவர்களை விட எம்.பி.பி.எஸ் முடித்து மேற்படிப்பு படிப்பவர்களின் எண்ணிக்கை (அல்லது சதவிதம்) அதிகம்.
http://www.targetpg.com/exams/tnpg/2008/tnpg_2008_total_vacancies.pdf
இந்த கோப்பில் நீங்கள் இடங்களை பார்க்கலாம். இதில் பல படிப்புகளில் ஒரு இடம் அல்லது இரண்டும் இடங்கள் உள்ளன. சில படிப்புகளில் தமிழகம் முழுவதுமே ஒரு இடம் மட்டும் தான்.
இப்படி ஒரு நபர் படிக்க (அல்லது அடுத்த 20 வருடங்களில் அதிக பட்சம் 50 பேர் படிப்பார்கள்) சுமார் 25000 (25 ஆயிரம்) பக்கங்களை தமிழில் மொழி பெயர்க்க வேண்டிய சிரமங்கள் (சிக்கல் எதுவும் கிடையாது. சிரமம் மட்டும் தான்) எவ்வளவு. இருபது வருடம் கழித்து இந்த 25000 பக்கங்களில் 24000 பக்கங்களை மறுபடி மொழிபெயர்க்க வேண்டும். இந்த துறை அவ்வளவு வேகமாக வளர்கிறது. இவ்வளவு முயற்சியும் அந்த அளவிற்கு பலன் தருமா என்றால் சந்தேகமே.
சரி தமிழ் படுத்தி அவர் தமிழில் படிக்கிறார் என்றால் அதன் பிறகு ஒரு சஞ்சிகையோ, வேறு ஒரு புத்தகமோ படிக்க ஆங்கிலம் தேவை. அம்மாதிரி தருணங்களில் அவர் (தமிழ் வழியில் இளங்கலை படித்த ஒருவர்) மேற்கொண்டு படிக்காமலேயே போவதற்கு வாய்ப்பு உள்ளது.
-oOo-
ரஷ்யாவில் மட்டும் ரஷ்ய மொழியில் படிக்கிறார்கள். ஐரோப்பாவில் மட்டும் ஐரோப்பிய மொழியில் படிக்கிறார்கள். நாம் மட்டும் ஏன் ஆங்கிலத்தில் படிக்க வேண்டும் ??
உண்மை என்னவென்றால் அவர்களும் பட்ட மேற்படிப்பு ஆகியவற்றில் மெதுவாக ஆங்கிலத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.
ரஷ்யாவில் எம்.பி.பி.எஸ் படிக்க செல்லும் மாணவர்கள் கட்டாயம் ரஷ்ய மொழி கற்ற வேண்டும். காரணம் பாடங்கள் ரஷ்ய மொழியில் இருக்கும்
ஐரோப்பாவில் கூட அடிப்படை மருத்துவம் அவர்களின் தாய் மொழியில்தான் இருக்கிறது
ஆனால் ஐரோப்பாவில் புத்தாய்வு மாணவராக (பெலோஷிப்) செல்பவர்கள் ஆங்கிலம் தான் உபயோகிக்கிறார்கள். இன்னமும் சில ஆண்டுகளில் ஆங்கில தாக்கம் (இளங்கலையில் கூட) அதிகரிக்கும்.
பல சிறந்த சிகிச்சை முறைகள் இருந்து ரஷ்யர்களின் கண்டுபிடிப்புகள் பரவலாக அறியப்படாமல் இருப்பதற்கும் (பனிப்போரின் பின்னரும்), பல புதிய சிகிச்சை முறைகளை ரஷ்யர்கள் பயன்படுத்தாமல் இருப்பதற்கும் காரணம் ரஷ்ய மொழி வழி மருத்துவம் தான். சீனா, ஜப்பான் முதலிய நாடுகளுக்கும் இது பொருந்தும். வயிற்று புற்றுநோய் தவிர்த்து பிற துறைகளின் ஜப்பானியர்களை (அதாவது மருத்துவத்துறையில் அவர்களின் கண்டுபிடிப்பு) பற்றி மற்றவர்களுக்கு தெரியாது.
ஐரோப்பிய மொழிகளை பொருத்த வரை ஐரோப்பிய மொழியில் (கிரேக்கம் தவிர்த்து) எழுதப்பட்டிருக்கும் நோய்க்குறிப்பு ஆங்கிலம் தெரிந்தவருக்கு புரியும். (ஒரு சிறு அகராதி போதும்). உதாரணமாக நான் மேலே தந்துள்ள விபரம் ரோமன் எழுத்து வடிவம் உள்ல எந்த ஐரோப்பிய மொழியிலிருந்தாலும் அதை அனைவரும் புரிந்து கொள்வார்கள். அதானால் தான் மருத்துவம் 20ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் வளர்ந்த அளவிற்கு ரஷ்யாவில் வளர வில்லை
சரி ஏதாவது ஒரு கல்லூரியில் தமிழ் வழியே மருத்துவம் கற்பித்தால் என்னவாகும்
தமிழ் வழியில் படித்தவர் வெளிநாடு செல்லாமல் நம் நாட்டிலேயே இருப்பார். -- இது நல்ல செய்தி
ஆனால் மேற்படிப்பு படிக்காமல் பொது மருத்துவராகத்தான் இருப்பார் -- இது கெட்ட செய்தி. ஏற்கனவே தமிழகத்தின் முக்கிய பிரச்சனை என்னவென்று பார்த்தோம்.
தமிழகத்தில் தமிழ் மொழியில் எம்.பி.பி.எஸ் கற்பிப்பது தமிழுக்கு வளர்ச்சியே :) .... இதில் எந்த சந்தேகமும் இல்லை
ஆனால் அந்த மாணவரின் எதிர்காலத்திற்கு சாதகமா, பாதகமா என்றால் விடை மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை :(
அதே போல் ஒட்டு மொத்தமாக இங்கு இத்துறையின் வளர்ச்சிக்கு சாதகமா, பாதகமா என்றால் விடை மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை :(
39 மறுமொழிகள்:
உங்கள் கருத்துக்களில் யதார்த்தம் தெரிகிறது.
இஸ்ரேல், யப்பான், சீனா, உருசியா போன்ற நாடுகளில் மருத்துவத்தை எந்த மொழியில் படிகிறார்கள்? அவர்களுக்கு இது எப்படி சாத்தியமாகிறது?
ஆங்கிலத்தில் படித்தாலும், தமிழிலும் இணையாக கருத்துக்களை வளர்க்கலாம். இதற்கு குறைந்த பட்சம் எல்லாவித மருத்துவ தகவலகளையும் மருத்துவர் தமிழில் தர கூடியவாறு பயிற்சி வேண்டும்.
20 000 பக்கங்களை தமிழில் மொழிபெயர்ப்பது ஒரு பெரிய வேலையாக தெரியலாம். ஆனால் 70 மில்லியன் ஒரு சமூகத்தில், மூன்று அரசுகள் அலுவலக மொழியாகா அங்கீகரிக்கப்பட்ட ஒரு மொழிக்கு இது சமாளிக்கப்படக்கூடிய ஒரு சவாலே.
இப்போதே சமூகம் ஒரு Expert Society தான். மொழி அன்னியப்படுதல் அதை கூரிமைப்படுத்தும்.
தமிழில் அறிவியல் தேவையில்லை என்றால் பின்ன எதற்கு தமிழ் தேவை?
இலக்கியத்துக்கா...
2000 வருசமா இன்ப இலக்கியத்த வளர்த்து, கண்டது பெரிசா ஒன்றுமில்லை.
தமிழுக்கு அறிவியலுக்கு ஈடுகொடுக்க முடியவிட்டால், அதைப் பேணுவதை நாம் தீவர கேள்விக்குட்படுத்தவேண்டும்.
புருனோ, நற்கீரன் கூறியுள்ளது போல் நீங்கள் யதார்த்தமான பார்வையையே முன்வைத்துள்ளீர்கள். அதனால், பெரிதாக வாதிடும் எண்ணமில்லை :) ஆனால், சில கேள்விகள், கருத்துகளைப் பதிந்து வைக்க விரும்புகிறேன்.
**
//தமிழ் - தோளின் முன்புறம் ஒரு கட்டி
ஆங்கிலம் - Swelling in front of Shoulder
Medical - Swelling at anterior aspect of deltoid//
இந்த எடுத்துக்காட்டில் இருந்து மருத்துவ மொழி கூட பாமரர் ஆங்கிலத்தில் இருந்து மாறுபட்டது என்று சொல்கிறீர்கள். ஆனால், சீனம், சப்பான், உருசியா போன்ற நாடுகளிலும் இதே கிரேக்க, இலத்தீனக் கலைச் சொற்களைக் கொண்டு தான் பயில்கிறார்களா? இல்லை, மருத்துவக் கலைச்சொற்களையும் மொழிபெயர்த்திருக்கிறார்களா?
வெறுமனே is, was, that, butஐ மட்டும் தமிழில் சொல்லி,
//டெல்டாயிடுக்கு அண்டிரியராக ஒரு கட்டி//
என்று எழுதுவதைத் தமிழ் வழிக் கல்வி என்பதில் உடன்பாடில்லை. அது நமது நோக்கமும் இல்லை. ஒரு துறை குறித்த சிந்தனை முழுதும் தமிழ் வழியாக இருப்பது நன்று.
உயர் கல்விக்குச் செல்கையில் மாணவருக்கு கொஞ்சம் நேர விரயம் என்பது உண்மை தான். (அல்லது காலப்போக்கில் உயர் கல்வி, ஆராய்ச்சி முழுமையும் தமிழுக்கு மாற்றலாம்.) தற்போதைய நிலையில் நீங்கள் சொல்வது போல் உயர்கல்விக்கோ வெகு சில மாணவர்களே செல்கையில் இளங்கலைக் கல்வி பயிலும் பெரும் எண்ணிக்கை மாணவர்களைக் கருத்தில் கொண்டால் தமிழ் வழிக் கல்விக்குச் செலவிடும் உழைப்பு பயன் உள்ளதாகத் தான் இருக்கும் என்று தோன்றுகிறது.
மருத்துவம் மட்டுமின்றி எந்த ஒரு துறைக்கும் தமிழ் வழிக்கல்விக்கான தயக்கம் இருக்குமே என்றால் அது துவக்கத்திலேயே அப்படி செய்யாமல் நாம் ஆங்கிலத்துக்குப் பழக்கப்பட்டுப் போய் விட்டோம் என்ற காரணத்தால் தான்.
தமிழ் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு உள்ள நெதர்லாந்து மக்கள் எல்லாம் உள்ளூர் மொழியில் மருத்துவம் பயில்கையில் ஆற்றாமையே மிஞ்சுகிறது !!
**
சித்த மருத்துவப் படிப்பில் எந்த அளவு தமிழ் வழிக் கல்வி சாத்தியம்? அதற்கு தமிழில் உள்ள இலக்கிய, மருத்துவக் குறிப்புகள், பாரம்பரிய அறிவு போதாதா? இலங்கையில் ஒரு பல்கலையில் இதற்கு தமிழ் வழிக் கல்வி இருப்பதாகக் கேள்விப்பட்டேன். ஆனால், உறுதியில்லை.
**
//இன்று நான் நெதர்லேண்டு வருகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள் (அல்லது சீனா செல்கிறேன்) ஒரு 6 மாதம் அந்த மொழியை படித்த பின் என்னால் கண்டிப்பாக அந்த மக்களுடன் உரையாடி அவர்களுக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்க முடியும். அதற்கு நான் சீன மொழியில் ம்ருத்துவம் படிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.//
ஒரு வேளை உள்ளூர் மொழியை மட்டும் கற்றுக் கொண்டு மருத்துவம் பார்க்க இயலலாம். ஆனால், நெதர்லாந்து நாட்டு சட்டப்படி 3 ஆண்டுகள் போல் இங்கு ஒரு பட்டப்படிப்பு முடித்த பிறகே மருத்துவப் பயிற்சி செய்ய முடியும். இது முழுக்க மொழிப் படிப்பு அல்ல. மருத்துவம் தொடர்புடைய சில விசயங்களையும் உள்ளூர் மொழியில் கற்பிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். எனினும் எல்லா நாட்டிலும் இத்தகைய சட்டம் இருக்கும் என்று எதிர்ப்பார்க்க இயலாது. சில நாடுகளில் உள்ளூர் மொழி மட்டும் கற்றால் போதுமோ என்னவோ?
**
இங்குள்ள நண்பர் ஒருவர் எவ்வளவு பெரிய நோய் வந்தாலும் நெதர்லாந்து மருத்துவர்களிடம் போவதில்லை என்று "வைராக்கியமாக" இருக்கிறார். இங்குள்ளவர்கள் குறைவான எண்ணிக்கையில், தீவிரமில்லாத நோயாளிகளைத் தான் பார்ப்பதால் அவர்களின் அனுபவத்தின் மேல் இவருக்கு நம்பிக்கை இல்லை. இந்தியா போய் தான் மருத்துவம் பார்ப்பேன் என்றிருக்கிறார் !!
இன்னொன்று, இங்கு சுலபத்தில் எதற்கும் மருந்து தர மாட்டேன் என்கிறார்கள். உயிர் போவது போல் இருந்தால் தான் கவனிப்பார்கள் போல் !! இது நல்லதா கெட்டதா தெரியவில்லை. ஆனால், வீணே மருத்துவக் காப்பிட்டீல் பணம் வீணாவதாய்க் கவலைப்படுகிறார்கள் !!
ரவி, இலங்கையில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் சித்த மருத்துவத்துறை இளங்கலைப் படிப்பு இருக்கிறது. இவர்களை நாட்டு வைத்தியர்கள் என்பர்.
எப்பிடி தமிழில் இலக்கியங்கள் மீள்கண்டுபிடிக்கப்பட்டதோ, அதுபோலவே தமிழ் அறிவியல் கூறுகளும் ஆய்வு செய்யப்படவேண்டும்.
அமெரிக்க மிசனரி ஒருவர் 1800 களிலேயே தமிழில் ஆங்கில வழி மருத்துவ நூல்கள் ஆக்கினார். ஆனால் அது அதே வீச்சில் தொடரப்படவில்லை.
குறிப்பாக மருத்துவம், வானியல், கணிதம் அகிய துறைகளில் பல ஏடுகள் உண்டு. ஆனால் அவை பற்றிய ஆய்வுகள் அரிது.
தற்கால அறிவியலின் வயது ~500 ஆண்டுகளே. நாம் அதில் 150 வருடங்கள் பரிச்சியம் கொண்டவர்கள்.
தமிழகம் அறிவியல் மார்க்கப்பட்டாவே தமிழ் அறிவியல் மொழியாக மாறும். அதை ஆங்கில மூலமாக செய்வதில் தவறில்லை. ஆனால் தமிழில் அறிவியல் சிந்தனை தேவையில்லை என்றால் அரோகராதான். பேசாமல் பில்லிசூனியம் செய்யவேண்டியதுதான்.
நற்கீரன், தமிழ்நாட்டிலும் இளங்கலை சித்த மருத்துவப்படிப்பு உள்ளதை அறிவேன். ஆனால், அதில் தமிழ்க் கலைச்சொற்களின் பயன்பாடு எந்த அளவு என்று அறியேன்.
நான் யாழ்ப்பாணத்தில் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது நிகழ்ந்த ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது. அப்போது அப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தவர் ஒக்ஸ்போட் வரை சென்று ஆங்கிலத்தில் எம். ஏ பட்டம் பெற்றவர். அக்காலத்தில் யாழ்ப்பாணக் கல்வியாளர்கள் மத்தியில் நன்றாக அறியப்பட்ட தலைமை ஆசிரியர்களுள் அவரும் ஒருவராக இருந்தார். அக் காலத்தில் இலங்கையில் ஆங்கிலக் கல்வியை மேம்படுத்துவதுவது பற்றி ஆராய அரசாங்கம் ஒரு குழுவை நியமித்திருந்தது. அக் காலத்திலும் இலங்கைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்புவரை எல்லோருக்கும் கட்டாயமாகத் தாய்மொழிக் கல்விதான் இருந்தாலும் 2 ஆம் வகுப்பிலிருந்து ஆங்கிலம் ஒரு பாடமாகக் கற்பிக்கப்பட்டு வந்தது. அரசு நியமித்த குழுவினர் முன் வாதிட்ட குறிப்பிட்ட தலைமை ஆசிரியர் பல கருத்துக்களை முன்வைத்தார். இரண்டாம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்புவரை கல்வி பயிலும் பல இலட்சக்கணக்கான மாணவர்களில், ஆங்கிலம் தேவைப்படும் அளவுக்கு மேற்படிப்புப் படிப்பவர்கள் சில ஆயிரம் பேர்களே. எனவே இலட்சக் கணக்கானவர்களுக்குப் 12 ஆண்டுகள் ஆங்கிலம் பயிற்றுவித்து ஏன் வளங்களையும் பல மாணவர்களது நேரத்தையும் செலவு செய்யவேண்டும் என அவர் கேள்வி எழுப்பினார். 10 ஆம் வகுப்புக்கு மேல் ஆங்கிலம் கற்பித்தால் போதுமானது என்பது அவரது வாதமாக இருந்தது. இவ் வாதத்தில் யதார்த்தம் உள்ளது. ஆனால் எவரும் ஏற்கவில்லை. கூட்டல் கழித்தல் சமப்படுத்தல் போன்றவற்றினால் மட்டும் சில விடயங்களின் பயன்பாடுகளைத் தீர்மானித்துவிட முடியாது. தமிழில் மருத்துவ நூல்கள் இருந்தால் மேற்படிப்புப் படிக்கும் மருத்துவர் மட்டுமன்றி ஏனைய மருத்துவர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு அகராதியின் துணையுடன் பிற துறைகளில் படித்தவர்களும் சில விடயங்களை அறிந்து கொள்ளும் நோக்கில் பயன்படுத்தும் வாய்ப்பும் உண்டு. ஒருவர் மருத்துவத்தில் மேற்படிப்புப் படிப்பதற்கு ஆங்கிலம் தேவை என்பதற்காக இன்று என்ன நடக்கிறது. எல்லோருமே தமது பிள்ளைகளே அந்த ஒருவராகப் போகிறார்கள் என எண்ணிக்கொண்டு LKG முதலே பிள்ளை ஆங்கிலத்தில் தான் படிக்கவேண்டும் என வாதிடுகின்றனர். தமிழ் படிப்பது இதற்குத் தடையாக இருக்கும் எனவும் நம்புகின்றனர். இதனால் தமிழ்நாட்டிலேயே தமிழில் எழுத வாசிக்கத்தெரியாத பல தமிழ்ப் பிள்ளைகள் இருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. நீங்கள் சொன்ன அந்த ஓரிரு மேற்படிப்புக்கான இடங்களைக் குறிவைத்துக்கொண்டு அல்லது அதை ஒரு சாட்டாக வைத்துக்கொண்டு முதலாம் வகுப்பில் தமிழ் படிக்கச்சொன்னாலே வழக்குப் போட்டுத் தடை வாங்கும் நிலைதான் உள்ளது.
ஆங்கிலம் தேவையில்லாத கோடிக் கணக்கானவர்களுக்குப் பல ஆண்டுகள் ஆங்கிலம் கற்பிக்கும் செலவுடன் ஒப்பிடும்போது 20,000 பக்கங்கள் கொண்ட ஆயிரம் புத்தகங்களுக்கான செலவும் மிகமிகக் குறைவே.
19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அமெரிக்காவிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவர் டாக்டர் கிறீன் என்பவர். அவர் யாழ்ப்பாணத் தமிழர்கள் சிலருக்கு ஆங்கில மருத்துவம் கற்பிப்பதற்காக ஏறத்தாழ ஐயாயிரம் பக்கங்கள் கொண்ட ஆங்கில மருத்துவ நூல்கள் பலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ஆங்கிலேயரான அவர் 150 ஆண்டுகளுக்கு முன் தனி ஒருவராக நின்று தமிழ் படித்து இதனைச் சாதித்தார் என்றால் இன்று இதனை ஏன் செய்யமுடியாது. டாக்டர் கிறீன் பற்றிய மேலதிக விபரங்களையும் படங்களையும் தமிழ் விக்கிப்பீடியாவிலுள்ள "சாமுவேல் ஃபிஸ்க் கிறீன்" என்னும் கட்டுரையில் காணலாம்.
மயூரனாதன், நான் சுட்ட மறந்த கருத்தையும் அழகாகச் சுட்டியுள்ளீர்கள்.
**
புருனோ, ஓரிரு இடுகைகள் முன் தனியார் பள்ளிகள் மூடல்+ அரசு பள்ளிகள் பெருகாமை காரணமாக, கல்வி பணம் படைத்தோருக்கான ஒன்றாக மாற வாய்ப்பிருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ளீர்கள்.
அதே காரணங்களுக்காக எல்லா உயர் கல்வி நிறுவனங்களிலும் தமிழ் வேண்டும் என்று சிந்தித்துப் பார்க்கலாம்.
உயர்கல்வியில் ஆங்கிலம் தான் வசதி என்பதற்காக இளங்கலை கல்லூரிப் படிப்புகள் ஆங்கிலத்தில் அமைக்கிறோம். +2 வரைக்கும் தமிழில் படித்து விட்டு கல்லூரியில் ஆங்கிலத்தில் படிப்பதற்கு தொடக்கத்தில் இருந்தே ஆங்கிலத்தில் படிப்போம் என்று ஆங்கில வழியப் பள்ளியை மக்கள் நாடுவார்கள்.
ஆனால், ஆங்கில வழிக் கல்வியோ பெருமளவு தனியாரிடம் இருக்கிறது. அதன் விலையும் நாளுக்கு நாள் கூடுகிறது.
இப்படிச் செல்வது நாளடைவில் மறைமுகமாக உயர்படிப்புகள் யாவும் ஆங்கில வழி கற்ற பணம் படைத்தோருக்கே என்ற சமநிலையற்ற சமூகத்துக்கு இட்டுச்செல்லும்.
இதனை முன்னிட்டே ஆயிரம் தடைகள் இருந்தாலும் எல்லா நிலையிலும் தாய் மொழிக் கல்வியே சிறந்தது என்று கருத வழி செய்கிறது.
ரவி, நேரமின்மையால் சிறு விளக்கம்.
1. தமிழ் வழி மருத்துவக்கல்வி என்பது சிரமம்தானேதவிர சிக்கல் அல்ல என்பதை நான் ஏற்கனவே தெளிவு படுத்தியிருந்தேன்.
2. இளங்கலை வரை தமிழில் பயின்றபின் முதுகலையில் ஆங்கிலம் பயில்வது என்பதை விட 12ஆம் வகுப்பு வரை தமிழில் பயின்று விட்டு இளங்கலையில் ஆங்கிலத்தில் பயில்வதை விட பல மடங்கு சிரமம்.
3. 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வி தான் சிறந்து என்பதில் (ஆங்கில வழியில் படித்த) என்னிடம் மாற்றுக்கருத்தே கிடையாது.
4. ஒரிருவர் படிப்பதற்காக தமிழில் 25000 பக்கங்களை மொழிமாற்று செய்வது இயலாத காரியம் அல்ல. ஆனால் அந்த முயற்சியும், நேரமும் “தமிழ் வளர்ச்சி” என்பதை அன்றி பலன் தருமா என்பதில் சந்தேகமே
5. ஐரோப்பிய மொழிகளில் கூட டெல்டாய்ட் என்பதை மொழி மாற்றம் செய்வதில்லை. அது டெல்டாயிட் தான்
தோள் - shoulder - schouder - épaule - Schulter - ώμος - spalla என்று மாறும்.
stomach, fever போன்ற சொற்கள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும்.
அதை தவிர கலைச்சொற்களை (villous adenoma, squamous cell carcinoma) பெரும்பாலும் மொழிபெயர்ப்பதில்லை.
6. தற்பொழுது பட்டமேற்படிப்பு சிலர் படிப்பது உண்மைதான். ஆனால் இது மாற வேண்டும். எனவே சிலர்தானே மேற்படிப்பு படிக்கிறார்கள் என்ற வாதம் தவறானது. அதைவிட முக்கியம் மேற்படிப்பு ஆங்கிலத்தில் இருப்பதால் தமிழ் வழி இளங்கலை படித்த ஒருவர் மேற்படிப்பு படிக்காமல் விட்டால் அதை விட பெரிய நஷ்டம் இல்லை.
அடுத்ததாக இந்த மேற்படிப்பு என்பது சுமார் 60 துறைகளில் உள்ளது என்பதையும் நாம் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்.
7. 25000 பக்கங்களை ஒரு முறை மட்டும் மொழி பெயர்த்தால் போதாது. தொடர்ந்து மொழி பெயர்த்துக்கொண்டிருக்க வேண்டும் !!!!
கண்டிப்பாக பத்து வருடங்களுக்கு முன் உள்ள புத்தகங்கள் உதவாது. கண்டிப்பாக பத்து வருடங்களுக்கு ஒரு முறை - மருந்தியல், உடலியக்கவியல் போன்ற துறைகளில் 3 வருடங்களுக்கு ஒருமுறை - புத்தகங்களை புதுபித்துக்கொண்டிருக்க வேண்டும்.
அதுவும் 38 துறையில் 250000 பக்கங்கள் என்றால் இதை யார் மொழிபெயர்ப்பார். எத்தனை நபர்கள் தேவை. அப்படி உட்கார்ந்து மொழிபெயர்ப்பவர்கள், அந்த நேரத்தில் அறுவை சிகிச்சை செய்தாலோ, அல்லது நோயாளிகளை ப்ரிசோதித்தாலோ, அல்லது 10 மாணவர்களுக்கு வகுப்பெடுத்தாலோ வரும் பலன் பெரிதா அல்லது 20 பேர் படிக்க அவர் மொழிபெயர்க்க வேண்டுமா என்றும் சிந்திக்க வேண்டும்.
இதையும் நாம் மறந்து விடக்கூடாது
ரஷ்யாவிலும் சீனாவிலும் மருத்துவத்தை அவர்களில் தாய் மொழியில் படித்ததில் அவர்களில் மொழி வளர்ந்திருக்கலாம். ஆனால் மருத்துவத்துறையை பொருத்த வரை அவர்களுக்கு பின்னடைவே.
ஐரோப்பிய நாடுகள் பலவும் மேற்படிப்புகளிம் மெதுவாக ஆங்கிலம் நோக்கி வருவதையும் நாம் ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டும்
கடைசியாக
பள்ளிப்பருவம் முழுவதும் தமிழில் இருக்க வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்கள் கிடையாது
அதே நேரம்
தமிழ் வழியில் மருத்துவம் கற்பிப்பதற்கு நான் எதிரியல்ல.
ஆனால் 12ஆம் வகுப்பை தமிழில் கற்பிப்பதற்கும் மருத்துவத்தை தமிழில் கற்பிப்பதற்கும் இடையில் பெரும் வேறுபாடு உள்ளது. அதில் நடைமுறை சிரமங்களும் உள்ளது.
//தமிழில் அறிவியல் தேவையில்லை என்றால் பின்ன எதற்கு தமிழ் தேவை?//
நான் அப்படி சொல்லவில்லை. என் பதிவுகளை படித்தாலே நான் எவ்வளவு அறிவியல் வார்த்தைகளை தமிழ் படுத்துகிரேன் என்பது உங்களுக்கு புரியும்.
வாஷிங் மெஷின் என்பதை துணி துவைக்கும் பொறி என்று கூறுவது வேறு .
இந்த சொல் 10 கோடி தமிழர்களுக்கும் உதவும்.
Lesser Gastric Artery என்பதை சின்ன வயிறு தமணி என்பதில் தவறு இல்லை. ஆனால் அதை உபயோகிப்பவர்கள் மொத்தமே 10 பேர் என்றால் (ஒரு பேச்சுக்கு) அதை தமிழ் படுத்துவதில் செலவழிக்கப்படும் நேரத்தில் அதை தமிழ் படுத்துபவர் 10 மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தால் என்ன என்பது தான் கேள்வி
எதில் சமுகத்திற்கு நிறைய பலன் ??
மருத்துவத்தை தமிழில் கற்பிக்கலாம். அதனால் தமிழ் வளரும். ஆனால் ஒட்டுமொத்த பலன் என்ன
எதையாவது அளித்து தான் மற்றொன்றை பெற முடியும். ஆனால் நாம் அளிப்பது அதிகமா, பெறுவது அதிகமா என்பதை
ஒரு தமிழ் ஆர்வலர் என்று பார்த்தால் மட்டும் போதாது
ஒரு தமிழன் - மருத்துவ சேவை தேவைப்படும் தமிழன் - என்ற இடத்தில் இருந்தும் பாருங்கள்.
//தற்போதைய நிலையில் நீங்கள் சொல்வது போல் உயர்கல்விக்கோ வெகு சில மாணவர்களே செல்கையில் இளங்கலைக் கல்வி பயிலும் பெரும் எண்ணிக்கை மாணவர்களைக் கருத்தில் கொண்டால் தமிழ் வழிக் கல்விக்குச் செலவிடும் உழைப்பு பயன் உள்ளதாகத் தான் இருக்கும் என்று தோன்றுகிறது.//
இளங்கலை படிக்கும் அனைவரும் முதுகலை பயில்வது தான் ஒரு சிறந்த மருத்துவ சமுகத்திற்கு அடையாளம்.
எனவே இந்த கருத்தில் எனக்கு மாறுபாடு உள்ளது
////டெல்டாயிடுக்கு அண்டிரியராக ஒரு கட்டி//
என்று எழுதுவதைத் தமிழ் வழிக் கல்வி என்பதில் உடன்பாடில்லை. அது நமது நோக்கமும் இல்லை. ஒரு துறை குறித்த சிந்தனை முழுதும் தமிழ் வழியாக இருப்பது நன்று.
//
அப்படி தான் அனைத்து மொழிகளிலும் எழுதுகிறார்கள். நான் கூறியபடி, காய்ச்சல், வெட்டு, வயிறு, வாய், தலைவலி, போன்ற சொற்கள் தான் அந்தந்த மொழிகளில் வருமே தவிர மருத்துவ சொற்களை யாரும் மொழிபெயர்க்க முயலவில்லை.
//அப்படி தான் அனைத்து மொழிகளிலும் எழுதுகிறார்கள். //
புருனோ, இது மிக முக்கியமான விசயம். ஐரோப்பிய சார்பு மொழிகளில் அதே கலைச்சொற்கள் பயன்படுவதில் ஆச்சர்யம் இல்லை. உருசியம். சீனம், சப்பானியம், அரபு போன்ற ஐரோப்பியச் சார்பு இல்லாத மொழிகளிலும் இப்படித் தானா என்று உறுதிப்படுத்த இயலுமா? சீன, அரபு மரபு வழி மருத்துவப்படிப்புகளில் கலைச்சொற்களின் தன்மை எத்தகையது? உங்கள் மருத்துவ நண்பர் தொடர்புகள் மூலம் இதன் உண்மை அறிந்து சொன்னால் நன்று.
**
இளங்கலை படிக்கிற எல்லாரும் உயர்கல்வி பெறுவது தான் விருப்ப நிலையாக இருந்தாலும் பாட மொழி சாராத நடைமுறைக் காரணங்களாலும் கூட அது நிறைவேறப்போவதில்லை என்பதே உண்மை.
**
மருத்துவம் என்ற ஒரு துறையை மட்டும் தமிழ் வழிக் கல்வி என்று நோக்குகையில் உறுத்தலாய் இருக்கிறது. ஆனால், உயிரியல் முதலிய தொடர்புடை அறிவியல், நுட்பத் துறைகள் அனைத்திலும் தமிழ் வழிக் கல்வி வந்தாலே முழுமையான பயன்பாடு வரும். சிரமங்களும் குறையும். தனியே மருத்துவக் கல்வியை மட்டும் தமிழாக்குவது சிறந்த நடைமுறையாக இருக்காது.
எத்துறையிலும் தாய்மொழிக் கல்வி கொண்டு வருவது ஏதோ அம்மொழி வளர்ச்சிக்காக என்று மட்டும் எண்ணிவிட இயலாது. மொழியோடு சேர்ந்து சமூக வளர்ச்சியும் பின்னிப் பிணைந்திருப்பதே முக்கிய காரணம். அன்னிய மொழியில் உயர் நுட்பச் சிந்தனைகளைப் பெற்றுக் கொள்ளும் போது அறிவு, அதைப் பெறுவதற்கான மொழி என்ற அடிப்படையில் சமூகம் துண்டாகிறது.
**
மருத்துவர்கள் போலவே, பொறியாளர்களுக்கும் தனியாரை விட அரசு ஊதியம் குறைவு என்று நினைக்கிறேன். வேறு துறைகள் ஏதும் அது போல் உளவா?
**
சரி, இத்தோடு இன்றைய இலக்கிய உரையாடலை இனிதே முடித்துக் கொள்வோம் :)
//உருசியம். சீனம், சப்பானியம், அரபு போன்ற ஐரோப்பியச் சார்பு இல்லாத மொழிகளிலும் இப்படித் தானா என்று உறுதிப்படுத்த இயலுமா?//
விசாரித்து சொல்கிறேன். நான் இந்த சிறிய விஷ்யத்தை யோசிக்க வில்லை
//இளங்கலை படிக்கிற எல்லாரும் உயர்கல்வி பெறுவது தான் விருப்ப நிலையாக இருந்தாலும் பாட மொழி சாராத நடைமுறைக் காரணங்களாலும் கூட அது நிறைவேறப்போவதில்லை என்பதே உண்மை.//
இல்லை ரவி, இதில் நீங்கள் மற்ற துறைகளை போல் ஒப்பிடக்கூடாது.
அமெரிக்கா, ஐரோப்பா, உருசியா ஆகிய நாடுகளில் அனைவரும் முதுகலை பயின்றோரே !!!
இதில் தான் நாம் பின் தங்கி இருக்கிறோம். தமிழகத்தில் முதுகலை இடங்கள் 914 மட்டுமே. அதில் பாதி அனைத்திந்திய ஒதுக்கீடு. இளங்கலை 1600 இடங்களுக்கு மேல்
**
//மருத்துவம் என்ற ஒரு துறையை மட்டும் தமிழ் வழிக் கல்வி என்று நோக்குகையில் உறுத்தலாய் இருக்கிறது. ஆனால், உயிரியல் முதலிய தொடர்புடை அறிவியல், நுட்பத் துறைகள் அனைத்திலும் தமிழ் வழிக் கல்வி வந்தாலே முழுமையான பயன்பாடு வரும். சிரமங்களும் குறையும். தனியே மருத்துவக் கல்வியை மட்டும் தமிழாக்குவது சிறந்த நடைமுறையாக இருக்காது.//
இதிலும் சில துறைகளை தமிழ் படுத்தலாம். உதாரணமாக கிராம சுகாதார செவிலியர் பயிற்சி தற்பொழுது தமிழில் உள்ளது
அடுத்து செவிலியர் பயிற்சி தமிழ் படுத்தலாம்.
பின்னர் ஆய்வக நுட்பனர், மருந்தாளுனர் என்று கடைசியாக மருத்துவம் வரலாம்.
//எத்துறையிலும் தாய்மொழிக் கல்வி கொண்டு வருவது ஏதோ அம்மொழி வளர்ச்சிக்காக என்று மட்டும் எண்ணிவிட இயலாது. மொழியோடு சேர்ந்து சமூக வளர்ச்சியும் பின்னிப் பிணைந்திருப்பதே முக்கிய காரணம். //
இதில் தான் என் கவலை. தற்பொழுது உள்ள சூழலில் தமிழ் வழியில் மருத்துவ இளங்கலை என்பதில் சமுகத்திற்கு லாபமா, நஷ்டமா என்று பார்க்க வேண்டும்.
//அன்னிய மொழியில் உயர் நுட்பச் சிந்தனைகளைப் பெற்றுக் கொள்ளும் போது அறிவு, அதைப் பெறுவதற்கான மொழி என்ற அடிப்படையில் சமூகம் துண்டாகிறது.//
:( :(
// மருத்துவர்கள் போலவே, பொறியாளர்களுக்கும் தனியாரை விட அரசு ஊதியம் குறைவு என்று நினைக்கிறேன். வேறு துறைகள் ஏதும் அது போல் உளவா?//
இல்லை. கணினி பொறியாளர்களை தவிர பிற பொறியாளர்களுக்கு அரசு ஊதியம் அதிகம்.
ஆனால் ஒரு விஷ்யம்
இங்கு (மருத்துவத்துரையில்) கொலை மிரட்டல் தான். அங்கு (பொறியாளர்) கொலை முயற்சியே நடக்கிறது :( :( :(
**
//சரி, இத்தோடு இன்றைய இலக்கிய உரையாடலை இனிதே முடித்துக் கொள்வோம் :)//
நாளை தொடர்வோம் :) :) :)
இது நல்லதொரு உரையாடல். மருத்துவத்துறையில் தமிழ் பற்றிய தகவல்களுக்கு நன்றி, புருனோ. :-)
ஒரு சிறு தகவல்: சித்த மருத்துவ மாணவர்கள் பெரும்பாலான பாடங்களைத் தமிழிலேயே கற்கின்றனர். பட்டமேற்படிப்புக்கு நுழைவுத்தேர்வுகள் தமிழிலும் நடத்தப்படுவதாகவும் அவற்றில் தமிழ் வழியக் கல்வி மாணவர்கள் பிறரைக் காட்டிலும் மதிப்பெண் கூடுதலாகப் பெறும் வாய்ப்பு உள்ளது என்றும் கேள்விப்பட்டுள்ளேன்.
//இது நல்லதொரு உரையாடல். மருத்துவத்துறையில் தமிழ் பற்றிய தகவல்களுக்கு நன்றி, புருனோ. :-)//
வாருங்கள் தலைவரே. நலமா. இரு வருடங்களுக்கு முன்னர் நாம் எடுத்த புகைப்ப்டம் இங்கு உள்ளது
http://payanangal.blogspot.com/2006/09/blog-post_30.html
//ஒரு சிறு தகவல்: சித்த மருத்துவ மாணவர்கள் பெரும்பாலான பாடங்களைத் தமிழிலேயே கற்கின்றனர்.//
ஆமாம்.
ஆனால் அவர்கள் கற்றும் உடற்கூறியல் ஆங்கில வழி தான். மேலும் அது அலோபதி மருத்துவ புத்தகம் தான்.
//பட்டமேற்படிப்புக்கு நுழைவுத்தேர்வுகள் தமிழிலும் நடத்தப்படுவதாகவும் அவற்றில் தமிழ் வழியக் கல்வி மாணவர்கள் பிறரைக் காட்டிலும் மதிப்பெண் கூடுதலாகப் பெறும் வாய்ப்பு உள்ளது என்றும் கேள்விப்பட்டுள்ளேன்.//
நல்ல செய்தி. இது போல் அனைத்து பட்ட மேற்படிப்பு தேர்வுகளிலும் (மருத்துவம் மட்டுமல்ல, பொறியியல் உட்பட) தமிழில் படித்தவர்கள் மதிப்பெண் அதிகம் பெற வழிவகை செய்ய வேண்டும்.
/////Anonymous said...
மருத்துவர்களை கடவுளுக்கு சமமாக அதனால்தான் ஒப்பிடுகின்றார்கள் .
ஆனால் அரசுமருத்துவ மனை அவலங்கள் ( ஊழல்,லஞ்சம்,லாவண்யம்,பராபட்சமான கவனிப்புகள்,திருட்டுக்கள்)மாறினால் தான் நமது மருத்துவத்துறையின் பலன்கள் ஏழை எளியோருக்கு சென்றடையும்.
உங்கள் பதிவு மருத்துவர்கள் மேல் உள்ள மதிப்பை உயர்த்தும்.////
4/19/2008 1:57 PM
புருனோ Bruno said...
//திருட்டுக்கள்)//
//கண்டிப்பாக அரசு மருத்துவமனைகளில் உங்கள் சிறுநீரகம் திருடு போகாது //
தமிழகத்தில் இந்த மாதத்தில் மருத்துவ முகாம்களில் போடப்பட்ட தடுப்பூசிகள் திருவள்ளுவர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் 5 ஏழைக் குழந்தைகள் இறந்த தாகவும்,அரசின் இழப்பீட்டுத்துகை வழங்கப்பட்டதாகவும் செய்திகள் சொல்லப்பட்டது.
இதைப் பற்றி உங்கள் வாசகர்களுக்கு புரியும் (விரிவான முறையில்-குன்னுர் மற்றும் அரசு தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மூடப்படும் எனும் பத்திரிக்கை செய்திகள்-(தனியார்மயம்,தாரளமயம்,உலகமயம்))வகையில் ஒரு பதிவு போடவும்.
தடுப்பூசி மரணங்கள் குறித்து அதிகார பூர்வ விசாரனை நடப்பதால் அது குறித்து நான் கருத்து கூறுவது சரி அல்ல.
விசாரனை முடிந்தபின் ஒரு பதிவு எழுதுகிறேன்
தற்பொழுது தடுப்பூசி குறித்து சில இடுகைகள் எழுதலாம் என்று நினைக்கிறேன்
வாழ்த்துக்கள் டாக்டர்... நல்ல பதிவு...
பதிவர் நட்டி, வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
எனது ஜூனியர் மாணவர் மரு. குருசாமி அகில இந்திய மருத்துவ மேற்படிப்பு நுழைவுத்தேர்வில் முடித்த முதல் ஆண்டிலேயே முதல் இடம் பிடித்தார். அவர் 12வரை கற்றது தமிழ்வழி. அவரது குடும்பத்தில் அவர் முதன்முதலில் 10வது தேறியவர்.இவர் இப்போது மும்பையில் எலும்புமுறிவு உதவிப் பேராசியர்.
மற்றொரு தோழி மரு.நீலா பல தங்க பதக்கங்களை வென்றவர். அவரும் 12வரை தமிழில் கற்றவர்.
நண்பர் மரு.சிவகுமார்,மரு.செந்தில்,மரு.பிரபாகர்,
மரு.கந்தவேல் மரு.மகேஷ் போன்றவர்கள் தமிழ்வழியில் கற்றவர்கள்.
முக்கியமான உண்மை ஒன்று இருக்கிறது. மருத்துவ மொழியை இணைப்பு மொழியாக ஆங்கிலம் உபயோகப் படுத்தப் படுகிறது. அவ்வளவுதான். நோயாளிக்கு அறிவுரைகள் வழங்குவது விளக்குவது போன்றவை தமிழில் அமைவது என்பது மிக அவசியம்.
அதனால்தான் தமிழக அரசில் வேலை கிடைத்தவர்களுக்கு தமிழில் அடிப்படைத் தகுதி பெறவேண்டும் என்பதை கட்டாயப் படுத்துகிறார்கள். தனித்தேர்வுகள் வைத்து தேர்ச்சி பெறவேண்டும் என்பதை கட்டாயப் படுத்துகிறார்கள்.
தமிழில் மருத்துவ கல்வி என்பது சாத்தியமே.., ஆனால் அதற்கு முன் நாம் தாண்டிச் செல்லவேண்டிய முக்கிய மைல்கல்கள் நிறைய இருக்கின்றன. மொழிப் பெயர்பதில் செலுத்தும் கவனத்தை வல்லுனர்களை உருவாக்குவதில் செலுத்தவேண்டும். அவ்ர்களின் ஆரய்ச்சி தாகத்திற்கு தேவையான உட்கட்டமைப்புகளை இங்கேயே உருவாக்கவேண்டும். அவர்களின் திறமைகளை இங்கேயே பயன்படுத்திக் கொள்ளும் வழிவகைகளை உருவாக்கவேண்டும்.
ஒருசிலர்மட்டும் கற்பது என்ற நிலைமாறி பலரும் மேற்படிப்பு கற்கும் நிலை உருவாக்கவேண்டும். உலக அளவில் அப்படிக் கற்றுக் கொடுப்பதில் நாம் முன்னிலை பெற வேண்டும். உலகம் மதிக்கும் தரத்தில் அந்தக் கல்வி அமைய வேண்டும். அந்தக் கட்டத்தில் நாம் தமிழ் வழியில் பாடங்களைப் புகுத்தும் போது அதற்கு நல்ல மரியாதை கிடைக்கும்.
அதைவிடுத்து இப்போதே தமிழ்படுத்துவேன் என்பது தமிழ் வளர்க்கிறேன் என்று சொல்லிக் கொண்டு அமெரிக்க அதிபருக்கு மின்னஞ்சல் அனுப்பவது போல அமையும். தமிழில் கற்பது என்பது இங்கு வேலை செய்வதுடன் நமது தரத்தினை உலகிற்கு உணர்த்த வேண்டிய கட்டாயமும் இருக்கிற சூழலையும் மனதில் கொள்ள வேண்டும்.
சிக்கன்குனியா நோயாள் எவ்வளவு கஷ்டப் பட்டோம். ஆனால் உலகத்தில் அது போன்ற எபிடெமிக் காலகட்டத்தில் இருந்து மிக வேகமாக மீண்டது நாம்தான். தவிர 2007,08 கால கட்டங்களில் அவை வராமல் தடுப்பதிலும் வெற்றிக் கண்டோம். இதற்கு நமக்கு தெளிவான மருத்துவ மொழி அறிவு அவசியம்.
அந்தக் கலைச் சொற்களை விடுத்துப் பார்த்தால் மருத்துவக் கல்வியில் மீதம் இருப்பது is, was but போன்ற வார்த்தைகளே..,
எனவே தமிழ் மருத்துவக் கல்வி வர நாம் செல்லவேண்டிய பயணங்கள் நெடுந்தூரம் இருக்கிறது.
வாங்க தல
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
well written. in fact i was a member of the committee that was formed in 1992 to bring about medical education in tamil..seeing all the idiotic discussions held in the meetings i quit that in 1993.. medical education or for that matter any education needs text books..and since we do not have them in tamil it will not be possible. if you get used to talking thamani and sirai you will not be able to reach out and interact internationally.
good post as always. keep writing and best wishes
//well written. in fact i was a member of the committee that was formed in 1992 to bring about medical education in tamil..seeing all the idiotic discussions held in the meetings i quit that in 1993..//
அந்த அனுபவங்களை எழுதலாமே !!
//good post as always. keep writing and best wishes//
நன்றி சார்
டாக்டர் , இது போன்ற உபயோகமான விசயங்களை சொல்லுங்கள் ,
டெண்டுல்கர் போன்ற வியங்களை பிடித்து தொங்காதீர்கள் .
(மருத்தும் சார்ந்த ஏதும் என்றால் உங்களிடம் கேட்கலாம் என்ற மனநிலை பதிவுலகில் உருவாகவில்லை, வெட்டி சண்டை போடும் மற்ற பதிவர்கள் போலவே நீங்களும் ஏன் இருக்கிறீர்கள் ?
//டெண்டுல்கர் போன்ற வியங்களை பிடித்து தொங்காதீர்கள்//
என் கருத்தை நான் வெளிப்படுத்துகிறேன் :) :)
//(மருத்தும் சார்ந்த ஏதும் என்றால் உங்களிடம் கேட்கலாம் என்ற மனநிலை பதிவுலகில் உருவாகவில்லை, வெட்டி சண்டை போடும் மற்ற பதிவர்கள் போலவே நீங்களும் ஏன் இருக்கிறீர்கள் //
ஒருவரை பற்றி அபாண்டமாக பொய்களையும் புரட்டுக்களையும் எழுதும் போது, உண்மை தெரிந்த ஒருவர் அந்த தவறுகளை சுட்டிக்காட்டுவதில் தவறொன்றும் இல்லை என்பது என் கருத்து
அது வெட்டி சண்டை என்ற உங்கள் கருத்தை நான் மதிக்கிறேன். ஆனால் உடன்படவில்லை :) :)
//மருத்தும் சார்ந்த ஏதும் என்றால் உங்களிடம் கேட்கலாம் என்ற மனநிலை பதிவுலகில் உருவாகவில்லை//
அந்த மனநிலை உருவாக வேண்டும் என்ற எண்ணத்தில் நான் பதிவு எழுதவில்லை
என் பதிவு எனது தொழிலுக்கு விளம்பரம் அல்ல :) :)
நான் அரசு மருத்துவமனைகளையும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களையும் பற்றியே அதிகம் எழுதியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்
//டெண்டுல்கர் போன்ற வியங்களை பிடித்து தொங்காதீர்கள் .//
சச்சின் பற்றி நான் எழுதியது ஒரே ஒரு பதிவு தான் என்று நினைக்கிறேன்.
இப்படி இருக்கும் போது நீங்கள் கூறுவது வியப்பாக இருக்கிறது பதிவரே :) :) :)
Hi
Fantastic post. It breaks lot of myth about Medical profession (in particular language). It is a real eye opener, for outsiders to medicine field and its eduction.
Your blog on Medicine field, will be few best Tamil blogs. Forwarded the link to many friends.
Sudharsan
Sudharsan சார்
ஊக்கப்படுத்துவதற்கு நன்றி :) :)
ஆர்வமாக வாசிக்க வைத்த உரையாடல். நன்றி..
கையேடு சார்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
I have improved my logic and argumentative ability by reading your posts.
Thank you.
//I have improved my logic and argumentative ability by reading your posts.
Thank you.//
நன்றி சார்
excellent write up!!
urs luk lyk an 'indexd' journal!!
//excellent write up!!
urs luk lyk an 'indexd' journal!!
//
நன்றி சகா
தமிழின் மீதும் மருத்துவம் மீதுமான உங்களது கருத்து மிகவும் தெளிவானது..புருனோ மாதிரியான சிந்தனையாளர்கள் தமிழ்நாட்டில் இருப்பது நெஞ்சைப் பெருமிதம் கொள்ள வைக்கிறது..உங்களது பதிவு எனக்கு நிறைய வகைகளில் உதவியிருக்கின்றது..புருனோவிற்கு எனது நன்றி கலந்த வாழ்த்துக்கள்:)
Super write up. I still have a very slight thread of a feeling that translating such huge text docs in simple understandable Tamil may attract more people to understand concepts behind the jargons. We have started to crawl Tamil medical docs for our கோரி Tamil search project. Will sure use your pages for seeds. Pls recommend urls with Tamil medical terms in them. My research team is going to love your page(s).
Post a Comment