இந்த தொடரின் முந்தைய இடுகைகள்
- கட்டாய கிராமப்புற சேவைத்திட்டத்தில் 150க்கு மேற்பட்ட மருத்துவர்கள் நியமனம்
- ஒரு நோய்க்கு மூன்று அடுக்கு வைத்தியம்,
- தமிழகத்தில் மருத்துவர் பற்றாக்குறையா, அல்லது அதிகம் மருத்துவர்களா
1. உங்கள் கணக்குப் படி தமிழகத்தில் போதுமான MBBS மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கே வேலைக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. அப்படி என்றால் இன்னும் புதிது புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகள் திறப்பதால் அந்த மாணவர்களின் எதிர்காலத்துக்குப் பாதிப்பு உண்டா?
இல்லை. போதுமான மருத்துவர்கள் இல்லை !!!
அப்படி பொருள்பட நான் எழுதவில்லை. இன்னும் அதிகம் மருத்துவர்கள் (எம்.பி.பி.எஸ்) வேண்டும்
அதைவிட அதிகம் சிறப்பு மருத்துவர்கள் வேண்டும்.
எம்.பி.பி.எஸ் மாணவர்களுக்கு வேலைக்குத் தட்டுப்பாடு நிலவுவதற்கு காரணம் மருத்துவக்கல்லூரிகளில் அதிகம் எம்.பி.பி.எஸ் இருக்கைகள் / இடங்கள் இருப்பதல்ல. அதற்கு காரணம் போதுமான அளவு பட்ட மேற்படிப்பு இடங்கள் இல்லாததால்
2. மேற்கண்ட காரணத்தால் புதிய கல்லூரிகள் திறப்பைத் தாமதப்படுத்தினால், அது ஓரிரு மதிப்பெண் குறைவினால் மருத்துவப் படிப்பைப் படிக்க இயலாமல் போகும் மாணவர்களுக்கு இழப்பு தானே? ஆர்வமும் நியாயமான தகுதியும் உள்ளவர்கள் படிக்கச் செய்ய வேண்டும் தானே? இல்லை, வேலைக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் கூடுதல் இடங்களை ஏற்படுத்துவது தவறா? வேலை கிடைக்குமா என்ற கண்ணோட்டத்தை அரசு வேலை, தமிழ்நாட்டுக்குள் வேலை என்பதற்குள் தான் அடக்க வேண்டுமா? பிற மாநில, நாட்டு வாய்ப்புகள் எந்த அளவுக்கு உள்ளன?
நான் மேலே கூறியுள்ள பதில் படி, இன்னமும் அதிகம் மருத்துவக்கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும்.
அதே போல் தற்பொழுது உள்ள மருத்துவக்கல்லூரிகளிலும் பட்ட மேற்படிப்பு இடங்கள் அதிகப்படுத்தப்படவேண்டும்.
பிற நாடுகளில் வேலைவாய்ப்பு இருந்தாலுல் நுழைவது சிரமம் என்று கேள்விப்பட்டேன்.
3. மென்பொருள் துறை வளர்ச்சி, பொறியியில் கல்வி நாட்டம் காரணமாக, ஆகச் சிறந்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் நாட்டம் குறைந்து வருவதாகச் சொல்லப் படும் போக்கு பற்றி?
உண்மை
இப்படி ஆகச் சிறந்த மாணவர்கள் விடுத்துச் செல்வதால் பெரிய இழப்பு இல்லை என்று நினைக்கிறீர்களா?
ஆகச்சிறந்த மாணவர்கள் பொருளாதார காரணங்களினால் விடுத்துச்செல்வதால் இழப்புதான்
மருத்துவர்களுக்குப் போதிய வேலை வாய்ப்புகள், வசதிகள் வரா நிலையில் வருங்காலத்தில் மருத்துவப் படிப்புக்கு மாணவர்கள் சேரா நிலை வரக்கூடுமா?
நான் இந்த இடுகைத்தொடரின் முதல் பதிவில் கூறியபடி, இந்த நிலை நீடித்தால் முதல் மற்றும் இரண்டாம் பிரிவு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து மூன்றாம் பிரிவு மாணவர்களின் எண்ணிக்கை குறையும்.
அதாவது கடந்த முப்பது வருடங்களாகத்தான் மூன்றாவது பிரிவு மாணவர்களின் எண்ணிக்கை மருத்துவக்கல்லூரிகளில் அதிகம் இருக்கிறது. இந்த நிலை மாறி மருத்துவம் என்பது மேட்டுக்குடியினரின் படிப்பு (விமான ஓட்டி படிப்பு போல்) ஆகி விடக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கிறது
இல்லை, தமிழ்நாட்டு மாணவர்கள் சேரா நிலையிலும் பிற மாநில மாணவர்களுக்கு அந்த இடங்களை ஒதுக்க இயலுமா?
தமிழ் நாட்டில் சேருவதற்கு முதல் மற்றும் இரண்டாம் பிரிவு மாணவர்கள் கண்டிப்பாக இருப்பார்கள்
பிற மாநிலங்களில் இன்னும் மருத்துவப் படிப்பு மோகம் இருக்கிறது என்றே நினைக்கிறேன்..இல்லை, இந்தியா எங்கும் மோகம் குறைந்து வருகிறதா?
பிற மாநிலங்களில் (வட மாநிலங்களில்) மருத்துவப்படிப்பு என்பது இன்னமும் மேட்டுக்குடியினரின் படிப்பாகத்தான் இருக்கிறது.எனவே மோகம் இருக்கிறது. தமிழகத்தில் கூட நடுத்தர வர்க்கத்தினரிடம் தான் மோகம் குறைகிறதே தவிர மேட்டுக்குடியினரின் மோகம் குறையவில்லை
இந்த வருடம் (2009) நடுத்தர வர்க்கத்தில் இருந்து கூட மருத்துவகல்லூரிக்கு நுழைபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் !!
4. இந்திய அளவில் ஒப்பிடுகையில் தமிழக மருத்துவக் கல்லூரிகளின் தரம் எப்படி இருக்கிறது? இந்தியாவில் மருத்துவப் படிப்புக்குச் சிறந்த இடங்கள் எவை?
தமிழக மருத்துவக்கல்லூரிகளின் தரம் சிறப்பாகவே இருக்கிறது.
5. மேற்படிப்பு படித்த மாணவர்கள் தான் பற்றாக்குறை என்றால், ஏன் அந்த படிப்புக்கான இடங்களைக் கூட்டக் கூடாது? திரும்பவும் ஆசிரியர், வளங்கள் போதாமை தான் காரணமா?
ஆசிரியர் , வளங்கள் என்ற அளவில் நாம் போதுமான அளவு இருந்தாலும், உள்கட்டமைப்பில் சில சின்ன விஷயங்கள் செய்ய வேண்டியுள்ளது. உதாரணமாக நூலகங்களில் குறிப்பிட்ட அளவு வெளிநாட்டு சஞ்சிகைகள் போன்ற படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள்.
இதற்கு காரணம் என்ன வென்றால் பட்ட மேற்படிப்பில் 5 இடங்கள் கூடியிருக்கிறது என்பது (புதிதாக மருத்துவக்கல்லூரி அமைப்பது போல்) அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாக இல்லாமல் இருப்பதுதான்
6. MBBS, மேற்படிப்பு படித்த மாணவர்களுக்கு அரசு, தனியார் இடையே ஊதிய விகிதங்கள் எவ்வாறு வேறுபடுகிறது?
எம்.பி.பி.எஸ் பொறுத்த வரை தனியாரை விட (சுமார் 8,000 முதல் 15,000 வரை) அரசில் அதிகம் சம்பளம்
ஆனால் மேற்படிப்பு படுத்தால் தமிழக அரசில் வெறும் 2 வருடாந்திர ஊதிய உயர்வு மட்டும் தான் (அதாவது 275 x 2)
அதற்கு மேல் சிறப்பு படிப்பு படித்தாலும் எந்த ஊதிய உயர்வும் கிடையாது :( :(
உதாரணமாக
5 வருட அனுபவம் உள்ள எம்.பி.பி.எஸ் மருத்துவர்
தனியார் - சுமார் 15,000
மத்திய அரசு - சுமார் 35000
மாநில அரசு - சுமார் 22000
5 வருட அனுபவம் உள்ள எம்.டி மருத்துவர்
தனியார் - சுமார் 35,000
மத்திய அரசு - சுமார் 45000
மாநில அரசு - சுமார் 24000
5 வருட அனுபவம் உள்ள டி.எம் மருத்துவர்
தனியார் - சுமார் 1,00,000
மத்திய அரசு - சுமார் 50000
மாநில அரசு - சுமார் 24000
இப்பொழுது தெரிகிறதா, ஏன் தமிழக அரசு பணியில் சேர சிறப்பு மருத்துவர்கள் வருவதில்லை, ஆனால் தேவைக்கு அதிகமாக எம்.பி.பி.எஸ் மருத்துவர்கள் வருகிறார்கள்
மிகச் சிறந்த நிபுணருக்கு தனியாரில் கூடுதல் ஊதியம் கிடைக்கலாமாக இருக்கும்.
பதில் மேலே
ஆனால், இன்று மேற்படிப்பு முடித்து வரும் ஒருவருக்குத் தனியார், அரசு இடையே வேலைவாய்ப்பு, ஊதிய விகித வேறுபாடு என்ன?
பதில் மேலே
தனியார் அளவு இல்லாவிட்டாலும் மத்திய அரசு அளவிற்காவது ஊதியம் உயர்த்தப்படவேண்டும்
அரசை விடுத்து தனியாரை நாடுவதற்கு ஊதியம் தவிர்த்த பிற காரணங்கள் உளவா?
கண்டிப்பாக
01. வரையறுக்கப்பட்ட பணி நேரம். ஆரம்ப சுகாதார நிலையங்களில் வாரத்திற்கு 99 முதல் 123 மணி வரை நேரம் (வேலை இல்லாத நேரம் என்பது வாரத்திற்கு 45 மணி நேரம் மட்டுமே)
02. தொடர்ந்து 33 மணி நேரம் பணி கிடையாது. (முந்தைய பதிவின் பின்னூட்டத்தை பார்க்கவும்)
03. ஞாயிறு விடுப்பு உண்டு
04. கடைநிலை ஊழியர் உங்களின் பெயரை சொல்லி லஞ்சம் வாங்க மாட்டார்
05. அதை நீங்கள் தட்டி கேட்டால் கொலை மிரட்டல் வராது

06. உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்கள் உங்களை மிரட்ட மாட்டார்கள்
07. மாற்றல் இருக்காது
08. அதிகம் வேலை செய்தால் அதிகம் ஊதியம் கிடைக்கும்
09. நோயாளிக்கு மட்டும் வைத்தியம் பார்த்தால் போதும்
10. சட்டம் சார் வழக்குகளுக்காக (மெடிக்கோ லீகல் ) நீதிமன்றம் போக வேண்டாம் (எந்த ஊர் நீதிமன்றம் என்றாலும் கை காசை செலவழித்துதான் போக வேண்டும்)
11. பல்ஸ் போலியோ என்று 2 வாரம் தூக்கத்தை தொலைத்து அலைய வேண்டாம்
12. உட்காருவதற்கு நல்ல நாற்காலி இருக்கும்.
13. குடும்ப நல அறுவைசிகிச்சை, வருமுன் காப்போம், காச நோய் தடுப்பு, தொழுநோய் தடுப்பு போன்ற எந்த திட்டமும் கிடையாது
14. பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம். அதன் பின் அதற்காக நீதிமன்றம் செல்ல வேண்டாம்.
அரசு பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றவர்களை கேட்டால் இன்னும் நிறைய சொல்வார்கள்
7. BDS பல் மருத்துவம் முடித்த தோழிகள் சிலர் 3,000 ரூபாய் சம்பளத்துக்கு எல்லாம் வேலை பார்த்தார்கள் !! (பொறியியல் மாணவர்கள் சிலரும் இந்தச் சம்பளத்துக்கு வேலை பார்ப்பதுண்டு) MBBS மாணவர்களை விட இவர்களின் நிலை கவலைக்கிடமோ என்று தோன்றியது.
கண்டிப்பாக. அதற்கு காரணம் இத்துறை குறித்து இன்னமும் போதிய விழிப்புணர்வு இல்லாததே.
நேற்று எங்கள் வீட்டில் துணி துவைக்கும் பொறி பழுதடைந்து விட்டது. உத்தரவாதகாலம் (வார்த்தை புரியாவிட்டால் மட்டும் பின்னூட்டத்தில் கேட்கவும்) முடிந்துவிட்டது. வாங்கிய கடைக்கு தொலைபேசியதில் பழுது நீக்கும் பொறியாளர் வந்து சோதித்து விட்டு, பரிசோதனை கட்டணம் 350 ரூபாய் கேட்டார். அதன் பின் வடிகட்டி (பில்டர்) மாற்ற ரூபாய் 550 செலவானது. கணினி பழுது நீக்குபவர்கள் வீட்டிற்கு வந்தால் 250 ரூபாய்க்கு குறைவாக வாங்குவதில்லை. (இதனால் தான் பலரும் கணினியில் பிரச்சனை என்றால் கணினி அறிவு உள்ள நண்பர்களை அழைத்து ஒரு காப்பியுடன் முடித்து விடுவது வேறு விஷயம் :) :) )
MBBS அல்லா, BDS, physiotherapy படிப்புகள், இவற்றில் தனியார் கல்லூரிகளின் பெருக்கம், அவற்றின் தரம், மாணவர்களின் எதிர்காலம் குறித்து உங்கள் பார்வை என்ன?
உங்கள் இல்லத்தில் யாராவது பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்தால் உடலியக்க மருத்துவர் (பிசியோதெரபிஸ்ட்) வீட்டிற்கு வந்து சிகிச்சை அளித்தால் 350 ரூபாய் கேட்டால் தருவீர்களா ??
அல்லது பேச்சு குறைபாடு உள்ள குழந்தைக்கு பேச்சு பிறழ்வு சிகிச்சை நிபுனர் (ஸ்பீச் தெரபிஸ்ட்) ஒரு முறை வைத்தியம் பார்க்க 350 வாங்கினால் அடுத்த முறை கூப்பிடுவீர்களா.
இன்று எங்கள் வீட்டில் 12 ஆம் வகுப்பு முடித்த ஒருவன் இருந்தால் அவன் எந்த துறையை தேர்ந்தெடுப்பான்.
இந்த தொடரின் அடுத்த இடுகைகள்
36 மறுமொழிகள்:
விரிவான உடனடி பதில்களுக்கு நன்றிங்க.
**
உயர்படிப்புக்கான இடங்களைக் கூட்டாமல் MBBS படிப்புக்கான இடங்களைக் கூட்டுவது வேலை வாய்ப்புகளைக் குறைக்கும் என்று புரிந்து கொள்கிறேன். ஆனால், ஏன் உயர் கல்வியில் ஒரு துறைக்கு 1,2 இடங்கள் என்று வைத்திருக்கிறார்கள் என்று புரியவில்லை?? அதையே 5, 10 பேருக்காவது சொல்லித் தருமாறு இடங்களைக் கூட்டுவதில் என்ன சிரமம்? மருத்துவ இதழ்கள், கருவிகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை இத்தனை பேர் பகிர்ந்து பயன்படுத்த இயலாதா?? ஏன் குறைவான பேருக்கு உயர்படிப்பு வாய்ப்புகளைத் தந்து கடும் போட்டி உருவாக்குகிறார்கள் என்று புரியவில்லை. தேவை உள்ள அளவு இடங்களைத் திறக்கலாமே? இந்த வகையில் பொறியியல் கல்வியில் முன்னணி நிறுவனங்களில் இடம் பிடிக்கத் தான் போட்டியே தவிர, ஓரளவு அறிந்த நிறுவனத்தில் இடம்பெறுவது சாத்தியமே.
**
மத்திய அரசுக்கு ஈடாக மாநில அரசு ஊதியத்தை உயர்த்துவதில் பணப்பற்றாக்குறை போக வேறு காரணங்கள் உண்டா? எடுத்துக்காட்டுக்கு, உங்களுக்கு உயர்த்தினால் தங்களுக்கும் உயர்த்துமாறு ஆசிரியர்கள் போன்ற பிற துறையினர் குரல் கொடுப்பார்களா?
**
தனியார் பணியை நாடுவதற்கான காரணங்களாக நீங்கள் கூறியுள்ளவை பெரும்பாலும் எல்லா அரசு பணிகளுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். குறிப்பாக, கடமையைச் செய்தால் கொலை மிரட்டல் வருவது போன்றவை?
**
உங்கள் வீட்டுக்கும் பொறிகளைப் பழுது நீக்க வந்தவர்கள் பொறியாளர்களா என்று ஐயமாக இருக்கிறது :) இது போன்ற பழுதுகளை நீக்க polytechnic, ITI மாணவர்கள், சிறப்புப் பயிற்சி பெற்றவர்களே போதும்.
எனக்குத் தெரிந்த உடலியக்க மருத்துவர் ஒருவர் குடந்தையில் வீட்டுக்குச் சென்று பார்த்தால் ஒவ்வொரு முறையும் 200 ரூபாய் பெறுகிறார். ஆனால், பொதுவாக, இத்துறையினரின் நிலை தெரியவில்லை. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இத்துறைப்படிப்புகளுக்கு வரவேற்பு, வருவாய் குறைவாய் இருப்பதாய் புரிகிறது.
**
மீண்டும் நன்றி :)
இதை பற்றி நான் விரிவாக எனது தளத்தில் எழுதியுள்ளேன். எனது முகவரி www.lightink.wordpress.com
புரூனோ, ரொம்பவே வியக்க வைக்கிறீர்கள். உங்களது பதிவுகள் இன்னும் பல புரிதல்களை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றன...
கண்டிப்பாய் பாராட்டப் பட வேண்டிய ஒன்று.
http://blog.nandhaonline.com
மருத்துவத்துறை சார்ந்த செய்திகளை
அனைவரும் புரியும் வண்ணம் விளக்கியுள்ளிர்கள்.(திரு ரவிசங்கர் அவர்களுக்கும் நன்றி-கேள்விகளை என்னமாக தொடுக்கிறார்).தமிழகத்தில்
அரசுத்துறையில் பணியாற்றும் மருத்துவர்களின் நிலை பற்றிய தங்கள்
கருத்துப்படி உறுதியான முன்னேற்றம்
தேவை.
//தனியார் பணியை நாடுவதற்கான காரணங்களாக நீங்கள் கூறியுள்ளவை பெரும்பாலும் எல்லா அரசு பணிகளுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.//
ஒரே வித்தியாசம். அவர்களின் படிப்பிற்கு தனியாரில் வாங்கும் ஊதியத்தை விட அரசில் வாங்கும் ஊதியம் அதிகம்
மருத்துவர்களை பொறுத்த வரை தனியாரில் வாங்கும் ஊதியத்தை விட குறைவாக வாங்கிக்கொண்டு ஏன் இவ்வளவு கஷ்டத்தையும் அனுபவிக்க வேண்டும் என்பது தான் கேள்வி.
சக்தி சார்,
பின்னூட்டத்திற்கு நன்றி.
உங்களில் பதிவை படித்திருக்கிறேன்.
பல விஷயங்கள் சரிதான் என்றாலும், சில விஷ்யங்களில் எனக்கு உடன்பாடு கிடையாது
கிராமப்புற சேவை பற்றிய என் பதிவை ஒரு முறை படியுங்களேன்.
நந்தா சார், வாழ்த்துக்கும் தொடர்ந்து ஊக்கம் அளிப்பதற்கும் நன்றி
//அதையே 5, 10 பேருக்காவது சொல்லித் தருமாறு இடங்களைக் கூட்டுவதில் என்ன சிரமம்?//
எனக்கும் தெரியவில்லை :) :) :)
//மத்திய அரசுக்கு ஈடாக மாநில அரசு ஊதியத்தை உயர்த்துவதில் பணப்பற்றாக்குறை போக வேறு காரணங்கள் உண்டா? //
எனக்கு தெரிந்து இல்லை. ஆசிரியர்களை பொருத்த வரை மத்திய அரசின் ஊதியம் தான் வாங்குகிறார்கள்
எழிலரசு சார், கருத்திற்கு நன்றி
//உங்கள் வீட்டுக்கும் பொறிகளைப் பழுது நீக்க வந்தவர்கள் பொறியாளர்களா என்று ஐயமாக இருக்கிறது :) இது போன்ற பழுதுகளை நீக்க polytechnic, ITI மாணவர்கள், சிறப்புப் பயிற்சி பெற்றவர்களே போதும்.//
அப்படியென்றால் பட்டயபடிப்பு படித்தவர்களை விட இளங்கலை படித்த உடலியக்க மருத்துவர் குறைவாக ”கூலி”பெறுகிறார் என்றால் எங்கோ சிக்கல் இருக்கிறதல்லவா.
:( :( :(
//அதையே 5, 10 பேருக்காவது சொல்லித் தருமாறு இடங்களைக் கூட்டுவதில் என்ன சிரமம்?//
எனக்கும் தெரியவில்லை :) :) :)
//மத்திய அரசுக்கு ஈடாக மாநில அரசு ஊதியத்தை உயர்த்துவதில் பணப்பற்றாக்குறை போக வேறு காரணங்கள் உண்டா? //
எனக்கு தெரிந்து இல்லை. ஆசிரியர்களை பொருத்த வரை மத்திய அரசின் ஊதியம் தான் வாங்குகிறார்கள்
உங்கள் இல்லத்தில் யாராவது பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்தால் உடலியக்க மருத்துவர் (பிசியோதெரபிஸ்ட்) வீட்டிற்கு வந்து சிகிச்சை அளித்தால் 350 ரூபாய் கேட்டால் தருவீர்களா ??
அல்லது பேச்சு குறைபாடு உள்ள குழந்தைக்கு பேச்சு பிறழ்வு சிகிச்சை நிபுனர் (ஸ்பீச் தெரபிஸ்ட்) ஒரு முறை வைத்தியம் பார்க்க 350 வாங்கினால் அடுத்த முறை கூப்பிடுவீர்களா.
இன்று எங்கள் வீட்டில் 12 ஆம் வகுப்பு முடித்த ஒருவன் இருந்தால் அவன் எந்த துறையை தேர்ந்தெடுப்பான்.
ப்ருனோ அவர்களே,
மிக நல்ல எடுத்துகாட்டு!!!
மகேஷ் MD
மகேஷ் சார், நீங்களும் எழுத ஆரம்பியுங்கள்
//எங்கள் வீட்டில் துணி துவைக்கும் பொறி பழுதடைந்து விட்டது. உத்தரவாதகாலம் (வார்த்தை புரியாவிட்டால் மட்டும் பின்னூட்டத்தில் கேட்கவும்) முடிந்துவிட்டது. வாங்கிய கடைக்கு தொலைபேசியதில் பழுது நீக்கும் பொறியாளர் வந்து சோதித்து விட்டு, பரிசோதனை கட்டணம் 350 ரூபாய் கேட்டார்.//
ஆடம்பர பொருட்களுக்கு செலவு செய்ய யாரும் தயங்குவதில்லை. தங்கள் வீட்டில் உள்ள ஆடம்பரப் பொருட்கள் வேலை செயவதில்லை என்று சொல்லிக் கொள்ள யாரும் விரும்புவதில்லை.
//ஆடம்பர பொருட்களுக்கு செலவு செய்ய யாரும் தயங்குவதில்லை. தங்கள் வீட்டில் உள்ள ஆடம்பரப் பொருட்கள் வேலை செயவதில்லை என்று சொல்லிக் கொள்ள யாரும் விரும்புவதில்லை.//
உண்மைதான் தல
நோயாளியின் வீட்டுக்குப் போய் மருத்துவம் பார்த்த மருத்துவரின் அனுபவம்
பெரும்பாலும் வீட்டுக்கு அழைக்கப் படும் மருத்துவர்களுக்கு சரியான கூலி மற்றும் மரியாதை கிடைப்பதில்லை என்பது எனது கருத்து. பெருநகரங்களில் எப்படி என்று தெரியவில்லை.
நல்ல பதிவு.
மருத்துவ கல்லூரியில் பேமண்ட் சீட் எவ்வளவு போகிறது தமிழகத்தில் & புதுவையில்?
சென்ற ஆண்டு எங்க தெரு கம்பவுண்டர் மகன் / அவருக்கு அவர் மகனை மருத்துவர் ஆக்கனும் என்று கொலைவெறி , ரூ 18 லட்சம் / டொனேஷன் மட்டும். கொடுத்து பெங்களூரில் சேர்த்தார். ஏ.சி சண்முகத்தின் கல்லூரியாமே..
வெளிப்படையாக சொல்லமுடியாவிட்டாலும் சூசகமாக சொல்ல இயலுமா ?
//பெரும்பாலும் வீட்டுக்கு அழைக்கப் படும் மருத்துவர்களுக்கு சரியான கூலி மற்றும் மரியாதை கிடைப்பதில்லை என்பது எனது கருத்து. பெருநகரங்களில் எப்படி என்று தெரியவில்லை.//
தனி மருத்துவர் என்றால் கிடைப்பதில்லை.
ஆனால் ஒரு அம்புலன்சில் “ஷோ” காட்டி சென்றால் ஆயிரக்கணக்கில் கிடைக்கும்
//மருத்துவ கல்லூரியில் பேமண்ட் சீட் எவ்வளவு போகிறது தமிழகத்தில் & புதுவையில்?
சென்ற ஆண்டு எங்க தெரு கம்பவுண்டர் மகன் / அவருக்கு அவர் மகனை மருத்துவர் ஆக்கனும் என்று கொலைவெறி , ரூ 18 லட்சம் / டொனேஷன் மட்டும். கொடுத்து பெங்களூரில் சேர்த்தார். ஏ.சி சண்முகத்தின் கல்லூரியாமே..
வெளிப்படையாக சொல்லமுடியாவிட்டாலும் சூசகமாக சொல்ல இயலுமா ?//
வெளிப்படையாகவே சொல்லலாம்
ஒரே கட்டணம் கிடையாது. நீங்கள் எவ்வளவு ஏமாளியோ அந்த அளவு கட்டணம் அதிகரிக்கும்
தனியார் கல்லூரிகளில் 6 லட்சம் முதல் 30 லட்சம் வரை இருக்கிறது
--
ஆரக்கிள் உரிமம் ஒரே கட்டணத்திலா விற்கிறார்கள். ஆளை பொருத்து கட்டணம் மாறுகிறதல்லவா. அது போல் தான் !!!
செந்தழல் ரவி அவர்கலின் பின்னூட்டத்திற்கு நானும் ஒரு பதில் சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்க ஆகும் ஒட்டு மொத்த செலவு இன்றைய சூழ்நிலையில் உயர்நிலை,மேல்நிலைக் கல்விக்காக சாதாரண தனியார் பள்ளிகளில் படிக்க ஆகும் செலவைவிட குறைவு. பத்து ஆண்டுகளுக்கு முன் மருத்துவ கல்லூரிகளில் ஆண்டுக்கட்டணம் ரூ 4000/- தேர்வுக்கட்டணம் மொத்தமாகவே ரூ 500க்குள். விடுதியில் தங்கிப் படித்தால் விடுதியில் அறைவாடகை மாதம்ரூ10/- தவிர பங்கிடும் முறையில் சாப்பாட்டுச் செலவு. கல்லூரிக் கட்டணங்களில் பெரிய மாறுதல்கள் இன்றும் கூட பெரிய அளவில் இருக்காது என்றே நினைக்கிறேன்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணங்களைப் பற்றி புருனோ சார் ஏற்கனவே கூறிவிட்டார்.
அரசுக் கல்லூரிகளில் இடம் வாங்குவதும் சுலபம்தான். இருக்கும் பாடப் புத்தகங்களை தெளிவாகப் படித்தால் போதும். வாங்கும் மதிப்பெண்கள் அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரியும். அந்த மதிப் பெண்களின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப் படுகிறார்கள்.'
தனியாக எந்தவித நேர்காணலும் கிடையாது. விருப்பப் பட்ட கல்லூரி கிடைக்க கலந்தாய்வு மட்டுமே.., அதிக மதிப் பெண் பெற்றவர்கள் தாங்கள் விருப்பப் பட்ட அல்லது அருகிலுள்ள கல்லூரிகளில் இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
===============================
நான் மேல்நிலைக்கல்வி கற்றுக் கொண்டிருந்த போது ஜெண்டில் மேன் திரைப் படம் வந்து எங்கள் வயிற்றில் அதி பயங்கர புளியை கரைத்திருந்தது. ஆனால் நுழைவுத்தேர்வு முடிந்த போது பட்டியல் வெளியாகி கல்லூரியில் சேர்ந்தபோதுதான் உண்மை நிலவரம் தெரிந்து பெருமூச்சு விட முடிந்தது.
அதுவும் முதலிடங்கள் பிடித்த மாணவர்களின் முழுக் கல்விச் செலவையும் தமிழக அரசு பார்த்துக் கொள்கிறது.
மாணவர்கள் செய்ய வேண்டியது அதிக மதிப்பெண் பெறுவது மட்டுமே.. புரிந்து படித்தால் மட்டுமே நூழிலை வித்தியாசங்களைக் கூட தாண்டி செலவே இல்லாமல் கல்வி கற்க முடியும்.
உண்மையில் அந்தக் கட்டணங்களைக் கூட உதவித் தொகை மூலமே நான் உட்பட பல மாணவர்கள் கட்டிவந்தோம்.
இந்த அளவு குறைந்த செலவில் தமிழகத்தில் படிக்கும் வாய்ப்பு உள்ளது என்பது தமிழகத்தில் நிறைய மாணவர்களுக்கு தெரிவதில்லை.
ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் டி.வி. யில் போடப் படும் ஜெண்டில்மேன் படம் பார்த்து பதட்டப் படுவ்தாகவே காலம் போய்கொண்டிருக்கிறது
நன்றி புருனோ மற்றும் சுரேஷ்...
//மாணவர்கள் செய்ய வேண்டியது அதிக மதிப்பெண் பெறுவது மட்டுமே.. புரிந்து படித்தால் மட்டுமே நூழிலை வித்தியாசங்களைக் கூட தாண்டி செலவே இல்லாமல் கல்வி கற்க முடியும்.
உண்மையில் அந்தக் கட்டணங்களைக் கூட உதவித் தொகை மூலமே நான் உட்பட பல மாணவர்கள் கட்டிவந்தோம்.
இந்த அளவு குறைந்த செலவில் தமிழகத்தில் படிக்கும் வாய்ப்பு உள்ளது என்பது தமிழகத்தில் நிறைய மாணவர்களுக்கு தெரிவதில்லை.
ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் டி.வி. யில் போடப் படும் ஜெண்டில்மேன் படம் பார்த்து பதட்டப் படுவ்தாகவே காலம் போய்கொண்டிருக்கிறது//
சூப்பர் தல
தெளிவு
:)
ஏன்யா இப்படி மொக்கப்பதிவுக்கெல்லாம் கள்ள வோட்டு குத்துறீங்க?
அதுவும் 80-90ன்னு புதுசா எழுத வர்வெனெல்லாம் டெரர் ஆகி ஓடப்போறான்
payanulla pathivu. thodarungal.
அருமையான விளக்கத்துடன் அறியாத செய்திகள்.
நன்றி டாக்டர்.
//ஏன்யா இப்படி மொக்கப்பதிவுக்கெல்லாம் கள்ள வோட்டு குத்துறீங்க?
//
உண்மையில் எதற்கு வோட்டு விழுகிறது என்று புரியவில்லை.
இத்தனைக்கும் இது மீள்பதிவு !!
சுவனப்பிரியன் சார்
நன்றி !!
முரளிகண்ணன்
நன்றி தல
//ஏன்யா இப்படி மொக்கப்பதிவுக்கெல்லாம் கள்ள வோட்டு குத்துறீங்க?//
:( :(
பல மணி நேரம் உட்கார்ந்து கஷ்டப்பட்டு அட்டவனை எல்லாம் போட்டு எழுதிய
ஆறாவது ஊதிய குழு பரிந்துரைகள் - 4 - உண்மையான உயர்வு எவ்வளவு இடுகைக்கு எத்தனை வோட்டு என்று பாருங்கள் :) :)
மக்கள் ரசனையை புரிந்து கொள்ளவே முடியவில்லை !!
Sorry to Write in English. I dont know Typing in Tamil.
1. Most doctors are not ready to come to village and to work.
2. They treat people most like animals not even human beings. ( some good doctors are also there)
3. They think of money most not the care of people or work location
4. The maintenance of Hospitals in Village is really worst. Even the new buildings after one year looks like 10 years old.
5. There are not stick to timings to come to hospital.
6. There is hie in thinking that only IT people earn more and lives peacefully. But the Truth is other way round.
//1. Most doctors are not ready to come to village and to work.//
Totally Wrong. The proof is already given in the previous posts in this same series
முழுப்பொய். ஆதாரம் இந்த இடுகைத்தொடரிலேயே உள்ளது
//2. They treat people most like animals not even human beings. ( some good doctors are also there)//
Imagination which is totally false
//3. They think of money most not the care of people or work location//
Imagination which is totally false
//4. The maintenance of Hospitals in Village is really worst. Even the new buildings after one year looks like 10 years old.//
You have not gone to a Primary Health Centre at all. Please don't spread lies like this.
கடந்த சில வருடங்களாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் நன்றாக பராமரிக்கப்படுகின்றன
இதோ ஒரு புகைப்படம்
அமரபூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்அமரபூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்மேலும் சில உதாரணங்கள்
தோகமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம்தோகமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம்பெரூங்கட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்>பெருங்கட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்;//5. There are not stick to timings to come to hospital.//
Do you know the Timing of OP in a PHC
Do you know the Timing of OP in a GH
Do you know the Timing of OP in a Medical College
Now tell me what timing was not adhered to
ஆரம்ப சுகாதார நிலையங்களில் புறநோயாளிகள் சிகிச்சை நேரம் உங்களுக்கு தெரியுமா
அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சை நேரம் உங்களுக்கு தெரியுமா
ஆரம்ப சுகாதார நிலையங்களில் புறநோயாளிகள் சிகிச்சை நேரம் உங்களுக்கு தெரியுமா
கூறுங்கள் பார்ப்போம்
அதன் பிறகு எந்த நேரம் கடைபிடிக்கப்படவில்லை என்று கூறுங்கள்
//6. There is hie in thinking that only IT people earn more and lives peacefully. But the Truth is other way round.//
மிக்க நன்றி
"ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் டி.வி. யில் போடப் படும் ஜெண்டில்மேன் படம் பார்த்து பதட்டப் படுவ்தாகவே காலம் போய்கொண்டிருக்கிறது"
இந்த சமூக சேவைக்காகத்தான் அந்தப் படம் வெளியான பொழுது அதன் தயாரிப்பாளரையும், இயக்குஞரையும் தில்லித் தமிழர்கள் டி.என். சேசன் முன்னிலையில் பாராட்டி கவுரவித்தார்கள்.
நான் 12வது முடித்த பொழுது நேர்முகத்தேர்வு. ஒன்றிரண்டு கேள்விகள்தான் கேட்கப்படும். ஆயினும் பெரிதும் மோசம் இல்லை...12ம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து இடம் கிடைக்குமா இல்லையா என்று கணித்து விடலாம்.
சினிமாக்காரர்களுக்கு ஒன்று நமது தேர்வு முறைகளைப் பற்றி தெரியாது. தெரிந்த ஓரிருவருக்கும் வேறு நோக்கங்கள் இருக்கும்.
அடுத்து,
வேலைவாய்ப்பிற்கும், கல்விக்கும் தொடர்பு கிடையாது. யார் யார் மருத்துவம் படித்து அந்த தேர்வுகளை பாஸ் செய்ய முடியுமோ அவர்கள் அனைவருக்கும், படிக்க இடம் கொடுக்க வேண்டியது ஒரு ஐடியல் அரசாங்கத்தின் பணி. ஆனால், அனைவரும் படிக்கும் வண்ணம் மருத்துவ கல்லூரிகளை தொடங்கவும் ந்டத்தவும் நமது பொருளாதாரம் இடம் கொடுக்காததால்தான், அரசு தானியார் கல்லூரிகளை தொடங்க அனுமதித்து அவர்களிடம் இருந்து ஐம்பது சதவீத இடங்களை மெரிட் மாணவர்களுக்காக பெறுகிறது.
அடுத்து,
தற்பொழுது அனைத்து புரொபஷனல் கல்லூரி மாணவர்களுக்கும் முழுமையான கல்விக் கடன்களை நமது வங்கிகள் செக்யூரிட்டி இல்லாமலேயே வழங்குகின்றன. படித்து முடித்த பின்னர் திருப்பிச் செலுத்தினால் போதும்.
நமது அரசுகளும் இயங்கத்தான் செய்கின்றன!
//சினிமாக்காரர்களுக்கு ஒன்று நமது தேர்வு முறைகளைப் பற்றி தெரியாது. தெரிந்த ஓரிருவருக்கும் வேறு நோக்கங்கள் இருக்கும்.//
இந்த கூற்றும் பதிவர்களுக்கும் பொருந்துவது ஆச்சரியமே
உதாரணம் : புத்தகங்கள் நாட்டுடைமை குறித்து வந்த சில பதிவுகள்
பதிவர்களுக்கு ஒன்று நமது அரசு நடைமுறைகளை பற்றி தெரியாது. தெரிந்த ஓரிருவருக்கும் வேறு நோக்கங்கள் இருக்கும். !!
:) :)
//நமது அரசுகளும் இயங்கத்தான் செய்கின்றன!//
:) :) :)
Post a Comment