இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Sunday, May 10, 2009

ஒரு நோய்க்கு மூன்று அடுக்கு வைத்தியம்,

இந்த தொடரின் முந்தைய இடுகை
தமிழக அரசு மருத்துவமனைகள் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் வருகின்றன. இதில் பல இயக்குனரகங்கள் (டைரக்டிரேட்) உள்ளன
  1. மருத்துவ கல்வி இயக்குனரகம் - Directorate of Medical Education - DME
  2. மருத்துவ சேவை மற்றும் ஊரக நல இயக்குனரகம் - Directorate of Medical and Rural Health Services - DMRHS - DMS
  3. பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ இயக்குனரகம் - Directorate of Public Health and Preventive Medicine - DPHPM - DPH
  4. மருத்துவ சேவை மற்றும் ஊரக நல இயக்குனரகம் (ஈ.எஸ்.ஐ)- Directorate of Medical and Rural Health Services - DMRHS - DMS(ESI)
  5. மருந்து கட்டுப்பாடு இயக்குனரகம்
  6. மாநில சுகாதார துறை போக்குவரத்து இயக்குனரகம்
இது தவிர பல இயக்குனரகங்களும் உள்ளன. முக்கியமான மூன்றை மட்டும் பார்ப்போம்
  1. இதில் மருத்துவ கல்வி இயக்குனரகம் என்பது பெரியார் சாலையில், கீழ்ப்பாக்கத்தில் உள்ளது. இதன் கீழ் தான் 17 (அடுத்த வருடம் முதல் 19) மருத்துவக்கல்லூரிகள் மற்றும் அக்கல்லூரிகளுடன் இணைந்த மருத்துவமனைகள் இயங்குகின்றன
  2. மருத்துவ சேவை மற்றும் ஊரக நல இயக்குனரகம் தேனாம்பேட்டையில் (டி.எம்.எஸ் பேரூந்து நிறுத்தம்) உள்ளது. இதனடியில் 270 அரசு மருத்துவமனைகளும் 30 பிற மருத்துவ நிறுவனங்களும் இயங்குகின்றன
  3. பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ இயக்குனரகம் தேனாம்பேட்டையில் அதே கட்டிடத்தில் உள்ளது. இதனடியில் 1417 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும் சில மருத்துவ பயிற்சி நிறுவனங்களும் இயங்குகின்றன.
மத்திய அரசின் கட்டாய கிராமப்புற திட்டத்தின் படி 12 மாத கட்டாய பணியில் மருத்துவக்கல்லூரிகளில் 4 மாதமும், அரசு மருத்துவமனைகளில் 4 மாதமும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 4 மாதமும் பணி புரிய வேண்டும்.

இவை இவ்வாறு பிரிக்கப்பட்டிருப்பதற்கு காரணங்கள் பல

எந்த ஒரு நோயை எடுத்துக்கொண்டாலும் அதற்கு மூன்று அடுக்கு வைத்தியம் அல்லது கவனிப்பு தேவை (three levels of "care")
  1. முதல் அடுக்கு -Primary Care - to Prevent the Disease - நோய் வராமல் தடுக்க. அல்லது ஆரம்ப நிலையில் வைத்தியம் பார்க்க
  2. இரண்டாவது அடுக்கு -Secondary Care - To Treat Disease - வைத்தியம் பார்க்க
  3. மூன்றாவது அடுக்கு -Tertiary Care - To Treat Complications - நோயினால் ஏற்படும் சிக்கல்களை தீர்க்க
இதில் முதல் அடுக்கு கவனிப்பை ஆரம்ப சுகாதார நிலையங்களும் (அந்த இயக்குனரகத்தில் பெயரில் ஆரம்ப சுகாதாரம் , தடுப்பு மருத்துவம் இருப்பதை கவனியுங்கள்) இரண்டாம் அடுக்கு கவனிப்பை அரசு மருத்துவமனைகளும், மூன்றாம் அடுக்கு கவனிப்பை மருத்துவக்கல்லூரிகளும் அளித்து வருகின்றன

உதாரணமாக
  • சுகப்பிரசவம் என்றால் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே பார்க்கலாம்
  • அறுவை சிகிச்சை என்றால் அரசு மருத்துவமனைகளில் பார்ப்பார்கள்
  • சிறிது சிக்கல் (உயர் இரத்த அழுத்தம், வெட்டு, மஞ்சள்காமாலை, இரட்டை குழந்தைகள், இரத்த போக்கு) என்றால் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் பார்க்கலாம்.
அதே போல்

கீழே விழுந்ததில்
  • சிராய்ப்பு மட்டும் என்றால் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே கட்டுப்போட்டுக்கொள்ளாம்
  • கை, அல்லது கால் எலும்பு முறிந்து விட்டது என்றால் அரசு மருத்துவமனையில் தான் அறுவை சிகிச்சை செய்ய முடியும்
  • முதுகெலும்பில் அடி என்றால் மருத்துவக்கல்லூரியில் சிறப்பு மருத்துவப்பிரிவில் சிறப்பு மருத்துவர்கள் வைத்தியம் பார்க்க வேண்டும்.
சென்னையில் செண்ட்ரல் இரயில் நிலையம் எதிரில் இருக்கும் பிராமாண்ட கட்டிடம் ஜி.எச் (GH) என்று பொதுவாக அழைக்கப்பட்டாலும் அது மருத்துவக்கல்லூரியுடன் இனைந்தது.

இது போல் அனைத்து நோய்களுக்கும் மூன்றடுக்கு மருத்துவநிலை உண்டு
அதே போல் எந்த நோயை எடுத்துக்கொண்டாலும்
  • அதிகம் தேவைப்படுவது முதல் அடுக்கு தான்
  • குறைவான சமயமே இரண்டாவது அடுக்கு தேவைப்படும்
  • மிக மிக குறைவான சமயமே மூன்றாவது அடுக்கு தேவைப்படும்
உங்கள் குடும்பத்தில், நண்பர்கள் குடும்பத்தில், உறவினர்களில்
கிழே விழுந்ததில் சிராய்ப்பு ஏற்பட்டது எத்தனை தடவை, கை / கால் எலும்பு முறிந்தது எத்தனை தடவை, முதுகெலும்பு முறிந்தது எத்தனை தடவை என்று நினைத்து பார்த்தால் நான் கூறுவது புரியும்

அதே போல் உங்கள் குடும்பத்தில், நண்பர்கள் குடும்பத்தில், உறவினர்களில்
சுகப்பிரசவம் எத்தனை முறை நடந்துள்ளது, அறுவைசிகிச்சை எத்தனை முறை, வெட்டு, மஞ்சள்காமாலை, இரட்டை குழந்தைகள், இரத்த போக்க போன்றவை எத்தனை முறை என்று பாருங்கள்

இதிலிருந்து சில விதிகளை நாம் பார்க்கலாம்

ஒரு நோய்க்கு
  • ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேறு சிகிச்சை
  • அரசு மருத்துவமனையில் வேறு சிகிச்சை
  • மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வேறு சிகிச்சை
நான் மேலே கூறிய உதாரணங்களை பார்த்தால் உங்களுக்கு மேலும் சில விதிகள் புலப்படும்
ஒரு நோய்க்கு
  • ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்க செலவு மிக மிக குறைவு
  • அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அதிகம் செலவாகும்
  • மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மிக மிக அதிகம் செலவாகும்
அதே போல்
ஒரு நோய்க்கு
  • ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்க எம்.பி.பி.எஸ் படித்த மருத்துவர்கள் போதும்
  • அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க DCH, DGO, MD (GM) MS (GS) படித்த மருத்துவர்கள் தேவை
  • மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை DM, MCh, போன்ற சிறபபு மருத்துவர்கள் தேவை
இந்த தொடரின் அடுத்த இடுகைகள்

9 மறுமொழிகள்:

முரளிகண்ணன் said...

தலைவா நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்

புருனோ Bruno said...

தொடரின் முதல் கட்டுரையை வாசித்து விட்டீர்களா

Chill-Peer said...

//சிராய்ப்பு மட்டும் என்றால் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே கட்டுப்போட்டுக்கொள்ளாம்//

ஆரம்ப சுகாதார நிலையத்தில் இச்சேவை நடைமுறையில் உள்ளதா? நான் அறிந்தவரை அங்கு தடுப்பூசிகள் போன்ற நோய் தடுப்பு சிகிச்சை மட்டும் தானே அளிக்கப்படுகிறது, டாக்டர்.

புருனோ Bruno said...

////சிராய்ப்பு மட்டும் என்றால் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே கட்டுப்போட்டுக்கொள்ளாம்//

ஆரம்ப சுகாதார நிலையத்தில் இச்சேவை நடைமுறையில் உள்ளதா? நான் அறிந்தவரை அங்கு தடுப்பூசிகள் போன்ற நோய் தடுப்பு சிகிச்சை மட்டும் தானே அளிக்கப்படுகிறது, டாக்டர்.//

தடுப்பூசி அளிப்பது தான் முக்கிய பணி என்றாலும் இது போல் சிராய்ப்புகளுக்கு கட்டு போடுவது, போன்ற பணிகளும் செய்யப்படுகின்றன

இந்த பதிவுகளையும் பாருங்கள்

தோகமலை ஆரம்ப சுகாதார நிலையம்பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையம்அ.ஆ.சுகாதார நிலையம் அமரபூண்டி

புருனோ Bruno said...

சிசேரியன் கூட செய்யப்படுகிறது

பத்திரிகை செய்தி 1
மதுரைபத்திரிகை செய்தி 1 :
திருச்சி

புருனோ Bruno said...

தோகமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
தோகமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம்பெருங்கட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
பெருங்கட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்அமரபூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
அமரபூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

Chill-Peer said...

Thanks Doctor,

எம்.எம்.அப்துல்லா said...

//கீழே விழுந்ததில்
சிராய்ப்பு மட்டும் என்றால்
//

டாக்டர்...டாக்டர்... காதல்ல விழுந்தவனுக்கு என்ன வைத்தியம் டாக்டர்??

:))))

புருனோ Bruno said...

//டாக்டர்...டாக்டர்... காதல்ல விழுந்தவனுக்கு என்ன வைத்தியம் டாக்டர்??

:))))//

அது அந்த பெண்ணின் தந்தை யார் என்பதை பொருத்தது அண்ணா.

அவர் சாதாராண பள்ளி ஆசிரியராக இருந்தால் சிராய்ப்பு கூட வராது

ஏரியா தாதா என்று முதுகெலும்பு கூட உடையலாம் :) :)

இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...