இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

மென்பொருள் நிறுவன ஊழியர்களை ஏமாற்றும் கும்பல்

மென்பொருள் நிறுவன ஊழியர்களை ஏமாற்றுவது சுலபம் (காசு நிறைய வைத்திருக்கிறார்கள் செலவழிக்க தயங்க மாட்டார்கள்) என்று நினைத்து இப்பொழுது அடுத்தவரை ஏமாற்றி பிழைப்பு நடத்துபவர்கள் அனைவரும் மென்பொருள் நிறுவனங்களை குறி வைத்திருக்கிறார்கள்

ஊடகங்களில் சில விஷயங்கள் வெளிவந்து நீங்கள் அறிந்திருக்கலாம்.

இது மற்றொரு சம்பவம்

சென்னையில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் அலுவலகத்திற்கு சென்ற சில நபர்கள், தாங்கள் -----------ல் இருந்து வருவதாகவும், ஊழியர்கள் அனைவருக்கும் இலவசமாக மலிவு விலையில் மொத்தமாக இதய பரிசோதனை செய்ய தயாராக இருப்பதாகவும், இதற்காக விடுப்பு எடுக்க தேவை யில்லை என்றும் அலுவலகத்திலேயே பரிசோதனை செய்யலாம் என்றும், ஒரு நபருக்கு 500 ரூபாய் மட்டும்தான் என்றும், 5 நிமிடங்கள் கூட ஆகாது, இரத்தம் எடுக்க தேவையில்லை, உடனிருக்கும் மருத்துவர் முடிவுகளை உடனடியாக கூறி விடுவார் என்றும் கூறியதில் அங்குள்ள 2000 நபர்களில் 1500க்கும் மேற்பட்டவர்கள் உடனடியாக சம்மதித்து விட்டதாக தெரிகிறது

அவர்கள் செய்த பரிசோதனை ஈ.சி.ஜி,

பொதுவாக ஒருவருக்கு ஈ.சி.ஜி பரிசோதனை 12 லீடுகளில் செய்யப்படுகிறது. அப்பொழுது தான் அதை முழுமையான சோதனையாக நம்பலாம். ஒரு லீடு மட்டும் என்றால் அது முழுமையான சோதனை ஆகாது !!

உதாரணமாக நீங்கள் வெளியூர் செல்ல வேண்டுமென்றால் வாகனத்தின் நான்கு சக்கரங்களிலும் அதே போல் மாற்றுச் சக்கரத்திலும் (தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் இந்த ஆங்கில சொல்லின் தமிழ் பதங்களை பார்த்த பொழுது அதிர்ந்தது நிஜம். ஆங்கிலத்தில் இப்படி இருப்பதாக தெரியவில்லை) காற்று இருக்கிறதா என்று பார்ப்பீர்களா அல்லது ஒரே ஒரு சக்கரத்தை மட்டும் சோதிப்பீர்களா

ஒரே ஒரு சக்கரத்தை மட்டும் சோதித்து மீதி சக்கரங்களை சோதிக்காமல் போனால் என்னவாகும் :) :) :)

ஆனால் இதய சோதனை என்ற பெயரில் அங்கு ஒரே ஒரு லீடில் மட்டுமே ஈ.சி.ஜி எடுக்கப்பட்டு 500 ரூபாய் வாங்கப்பட்டுள்ளது.

ஒரு நபருக்கு சோதனை செய்ய ஆகும் நேரம் மற்றும் நுகர்பொருட்களை வைத்து (தாள், பாகு போன்றவை) போன்றவைகளை வைத்து 12 பேர்களுக்கு சோதனை முடித்தவர்களின் புத்திசாலித்தனத்தை என்ன வென்பது

அது மட்டுமல்ல, அந்த ஒரே ஒரு லீடை மாத்திரம் வைத்துக்கொண்டு, பெரும்பாலானவர்களிடம் நீங்கள் “நார்மல்” என்று கூறிவிட்டார்கள்.

அதில் ஒருவர் என்னிடம் பேச்சுவாக்கில் அந்த ஈ.சி.ஜியை காட்டியபோது தான் மீதி 11 லீடுகள் எங்கு என்று கேட்டேன். அவர் இது மட்டும்தான் அளிக்கப்பட்டது என்றார். பரிசோதனை செய்ததாக கூறப்பட்ட நிறுவனத்தில் இருக்கும் எனக்கு தெரிந்த ஒருவரை சந்திக்கும் பொழுது இது குறித்து கேட்டால் நாங்கள் அப்படி சோதிப்பது இல்லை. இது போல் பலரும் எங்களிடம் கேட்கிறார்கள். பழைய சோதனை முடிவுகளை கொண்டு வந்து ”உங்களிடம் எடுத்தது ” என்று கூறும் பொழுது தவறாக கூறுகிறார்கள் என்று நினைத்தோம். ஆனால் இது மோசடி போல் உள்ளது என்று நொந்து விட்டார்

இதய சோதனை என்பது ஈ.சி.ஜி மட்டும் அல்ல. அதாவது நீங்கள் வெளியூர் கிளம்பும் பொழுது 5 சக்கரங்களிலும் காற்று இருக்கிறதா என்று மட்டுமா சோதிப்பீர்கள். பெட்ரோல் இருக்கிறதா, மின்கலம் சரியாக இருக்கிறதா என்றெல்லாம் பார்ப்பீர்கள் அல்லவா, அது போலத்தான் இதய சோதனை என்றால் ஈ.சி.ஜி, டிரட்மில், எக்கோ, இரத்த சோதனைகள் என்று பல இருக்கின்றன

ஒரே ஒரு லீடை மட்டும் வைத்துக்கொண்டு நார்மல் என்று கூறுவது அயோக்கியத்தனம்

இதில் பாதகமான விஷயங்கள்

1. இது போன்ற போலிகளை நம்பி பலர் தாங்கள் ஆரோக்கியமாக இருப்பதாக தவறாக நினைக்க வாய்ப்பு உள்ளது

2. போலிகள் உபயோகித்த நிறுவன பெயரை கொண்ட நிறுவனத்திற்கு கெட்ட பெயர்

3. பண விரயம்

4. நேர விரயம்

முக்கியமான செய்தி
இது போல் “சோதிக்கிறேன்” என்று யாராவது உங்கள் நிறுவனத்திற்கு வந்தால் உஷாராக இருங்கள்.

பின்குறிப்பு 1:
1500 x ரூபாய் 500 = ரூபாய் 7,50,000
அதில் அவர்களுக்கு செலவு 30,000 கூட இருக்காது
மோசடி செய்தவர்களுக்கு கண்டிப்பாக 7 லட்சம் லாபம் தான்

பின்குறிப்பு 2:
இது போல் நீங்கள் ஏமாற்றப்பட்டிருந்தால் பின்னுட்டத்தில் தெரிவிக்கவும் :) :) :) (அனானியாக கூட தெரிவிக்கலாம்)

30 மறுமொழிகள்:

மறுமொழி எண்
ரவிசங்கர் said...

லீட் என்றால் என்ன? இது போன்ற துறைச்சொற்களுக்கு விக்கிப்பீடியா தொடுப்பு தரலாம்.

**
stepney சொல்லின் வரலாறு - http://www.hindu.com/edu/2004/01/12/stories/2004011200121500.htm

நம்ம ஆளுங்க தான் ஒரு சொல்ல பல வகைல பயன்படுத்துறவங்க ஆச்சே :) ஒரு அகரமுதலி சமூகத்தில் ஒரு சொல்லுக்கு நிலவும் எல்லா வகையான பொருளையும் தருவதில் தவறில்லை :)

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//நல்ல வேளை உஷார் படுத்துனீங்க//

சீப்பு, புடவை போன்றவைகளை வேலை செய்யும் இடத்திற்கே வந்து விற்பது போல் செய்து கொண்டிருக்கிறார்கள்

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//நம்ம ஆளுங்க தான் ஒரு சொல்ல பல வகைல பயன்படுத்துறவங்க ஆச்சே :) ஒரு அகரமுதலி சமூகத்தில் ஒரு சொல்லுக்கு நிலவும் எல்லா வகையான பொருளையும் தருவதில் தவறில்லை :)//

"Stepney" என்பது ஆங்கில சொல்

அந்த சொல்லுக்கு ஆங்கிலேயர் உபயோகிக்கும் ஒரே அர்த்தம் ”மாற்று சக்கரம்” தான்.

அப்படி இருக்க ஆங்கில "Stepney" க்கு ஈடாக மற்ற சொற்கள் தேவையா

ஏன் சில இடங்களில் “கீப்” (Keep - ”வை”த்துள்ளான் என்பதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிவாளி யாரோ :) ) என்ற சொல்லை கூட உபயோகிக்கிறார்கள்

அதற்காக keep என்ற சொல்லின் synonym ஆக mistress என்று thesaurusல் போட முடியுமா
--

”ஸ்டெப்னி” என்ற தமிழ் சொலின் அர்த்தம் வேண்டுமென்றால் “கீப்” (இதுவும் தமிழ் என்று எடுத்துக்கொண்டால்), “துனைவி”, ”ஆசை நாயகி” என்று எழுதலாமே தவிர, அதை ஒரு ஆங்கில வார்த்தை யாக்கி இப்படி அர்த்தம் கற்பிப்பது நெருடல் தான்

மறுமொழி எண்
இலவசக்கொத்தனார் said...

அடப்பாவிங்களா. இனிமே மக்களை ஜாக்கிரதையா இருக்கச் சொல்லறேன். தகவலுக்கு நன்றி ப்ரூனோ.

மறுமொழி எண்
புருனோ Bruno said...

யாத்திரீகன் சார்,

இதுவாவது தெரியாமல் (அதாவது ஈ.சி.ஜி என்றால் என்னவென்று தெரியாமல்) ஏமாறுகிறார்கள்

சில இடங்களில் தெரிந்தே ஏமாறுவது (பல் அடுக்கு சந்தைப்படுத்துதல்) குறித்து என்னவென்று சொல்வது

மறுமொழி எண்
ILA said...

ரூம் போட்டு யோசிக்கிறாங்கப்பா. இப்படி ஒரு அணி வரும்போது கண்டிப்பா அது மனிதவளம்(HR) மக்கள்கிட்டே சொல்லித்தான் ஆவனும். அவுங்கதான் விசாரிச்சிட்டு அனுமதி தருவாங்க. விசாரிக்காம விட்டது ம.வ மக்கள் தப்பு. இல்லாட்டா 7ல ஒரு பகுதி/விகுதி அங்கேயும் போயிருக்கலாம்.

மறுமொழி எண்
மணிகண்டன் said...

நல்ல மீள்பதிவு. இன்னிக்கு தான் நோட் பண்றேன். இது என்ன அகரமுதலி ? அகராதி தமிழ் சொல் கிடையாதா ? சொற்களை பிரிச்சி அதுல உள்ள தமிழ் இல்லாத பார்ட்டுக்கு மட்டும் ரீப்லேச்மேன்ட்டா ? உங்களை எல்லாம் புடிச்சி மொத்த தமிழ் விக்கிபீடியா பொறுப்பும் ஒப்படைச்சிடனும் ! எல்லாம் ஓடி போய்டுவாங்க.

எதை வச்சி ஆதி தமிழ் சொல் இல்லைன்னு முடிவு பண்ணினாங்கன்னு தெரிஞ்சிக்கலாமா ?

திருக்குறள்ல இது மாதிரி எவ்வளவு சொற்கள் தமிழ் இல்லாதது ? அதுவும் நம்ப தமிழ் ப்ளாக் உலகம் ஆராய்ச்சி செஞ்சி இருக்கா ?

மறுமொழி எண்
மணிகண்டன் said...

இளா, மனிதவள மேம்பாட்டு துறையோட ஏற்பாடா தான் இருக்கும் இது. அவங்களுக்கு EMPLOYEE WELFARE க்கு ஹெல்த் பரிசோதனை சீப்பா பண்ணினோம்ன்னு ஏதாவது செக் லிஸ்ட்ல டிக் பண்ணி இருப்பாங்க.

மறுமொழி எண்
ராஜா | KVR said...

மருத்துவமனைகளில் Health Checkup Packageகளில் நீங்கள் குறிப்பிட்டு இருப்பது போல 12 லீடுகளை உபயோகிக்கிறார்களா? ஈசிஜி எடுக்கும்போது பல இடங்களில் வயர்களை ஒட்டி வைக்கிறார்களே, அதை தான் லீட் என்று குறிப்பிடுகிறீர்களா?

மறுமொழி எண்
எம்.எம்.அப்துல்லா said...

//(அனானியாக கூட தெரிவிக்கலாம்) //

நீங்க அனானியா பதில் சொல்றீங்கன்னு கம்ப்ளைண்ட் வருது தெரியுமாண்ணே??

:))

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//ரூம் போட்டு யோசிக்கிறாங்கப்பா. இப்படி ஒரு அணி வரும்போது கண்டிப்பா அது மனிதவளம்(HR) மக்கள்கிட்டே சொல்லித்தான் ஆவனும். அவுங்கதான் விசாரிச்சிட்டு அனுமதி தருவாங்க. விசாரிக்காம விட்டது ம.வ மக்கள் தப்பு.//

நாங்கள் இந்த நிறுவனத்திலிருந்து வருகிறோம் என்றால் அந்த நிறுவனத்திற்கு தொலைபேசி உறுதிப்படுத்து நடைமுறையில் இல்லாததால் வரும் பிரச்சனை இது

//இல்லாட்டா 7ல ஒரு பகுதி/விகுதி அங்கேயும் போயிருக்கலாம்.//

?? :) :)

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//சொற்களை பிரிச்சி அதுல உள்ள தமிழ் இல்லாத பார்ட்டுக்கு மட்டும் ரீப்லேச்மேன்ட்டா ?//

பாகத்திற்கு மற்றும் மாற்று

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//அவங்களுக்கு EMPLOYEE WELFARE க்கு ஹெல்த் பரிசோதனை சீப்பா பண்ணினோம்ன்னு ஏதாவது செக் லிஸ்ட்ல டிக் பண்ணி இருப்பாங்க.//

நானும் இப்படித்தான் நினைத்தேன்

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//மருத்துவமனைகளில் Health Checkup Packageகளில் நீங்கள் குறிப்பிட்டு இருப்பது போல 12 லீடுகளை உபயோகிக்கிறார்களா? //

கம்பிகள் வேறு. அதிலிருந்து வருவது லீட்

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//நீங்க அனானியா பதில் சொல்றீங்கன்னு கம்ப்ளைண்ட் வருது தெரியுமாண்ணே??
//

புகார் செய்வது நிஜ நபர்களா அல்லது அனானிகளாண்ணா ??

மறுமொழி எண்
Ramadoss Magesh said...

Hi Bruno,

Am a regular reader of your blog, though not commented in the past.

More than the blatant cheating, this issue highlights the ignorance level of the larger population on issues of health care.This is yet another instance, why the patient education on health care practices is so much needed. If this is the case with something as prevalent a diagnostic procedure as ECG, then one can image how things stand.

Why cannot we provide as a standard protocol, a patient education pamphlets along with such diagnostic procedures, detailing the need for the tests, the procedure and what can one infer from them, which will go a long way in improving patient education.

Best regards,
Magesh

மறுமொழி எண்
எம்.எம்.அப்துல்லா said...

//புகார் செய்வது நிஜ நபர்களா அல்லது அனானிகளாண்ணா ??

9/02/2009 4:12 AM
//

இங்க பாருங்க

http://panimalar.blogspot.com/2009/08/bruno-2.html

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//
//புகார் செய்வது நிஜ நபர்களா அல்லது அனானிகளாண்ணா ??

9/02/2009 4:12 AM
//

இங்க பாருங்க

http://panimalar.blogspot.com/2009/08/bruno-2.html

//

அண்ணே

நான் சந்தேகித்தது போலவே அது கூட அனானிப்புகார் தானே :) :) :)

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//Why cannot we provide as a standard protocol, a patient education pamphlets along with such diagnostic procedures, detailing the need for the tests, the procedure and what can one infer from them, which will go a long way in improving patient education.//

கண்டிப்பாக செய்யப்பட வேண்டும். கூடிய விரைவில் எதிர்பாருங்கள் ;)

மறுமொழி எண்
Ramadoss Magesh said...

Hi Bruno,

If you are working on any such initiative, and if you feel appropriate, would appreciate sharing the information, as I have a lot of interest in such an initiative.

If appropriate I can write to your personal e-mail.

Best regards,
Magesh

மறுமொழி எண்
Mãstän said...

ஆஆஆஅஅஅ....

இப்படியெல்லாமா ஏமாத்துறாங்க???

எச்சரிக்கைக்கு மிக்க நன்றி.

மறுமொழி எண்
enpaarvaiyil said...

தமிழ் நாட்டில் ஏமாறுபவர்களுக்கும் ஏமாற்ற்றுபவர்களுக்கும்
பெறுத்த வேறுபாடு கிடையாது
இருவரும் அவ்வப்போது அணிமாறிகொண்டிருப்பார்கள்
நிதி மோசடி, இலவச மோசடி,நில பத்திர மோசடி,ஆன்மீகம், மாயஜாலம், மந்திரம், மாயம், அரசியல், போலிவைத்தியர்கள்,(மான்கறி வைத்தியர்)).அருள்வாக்கு(கஞ்ச சாமியார்) ,அதிரிஷ்டக்கல் ,பேர்வசியம். என எண்ணற்ற விளம்பரங்களை
தொலைகாட்சியில் பார்த்து சில ஆயிரம் முதல் பல லகரங்களை இழந்த
பல்லாயிரம் தமிழர்கள் வாழும் நாடு இது. தமிழன் என்று
நம்மை நம்மை நாம் ஏன் இழிவு செய்துகொள்ளவேண்டும் ?
படித்தவனாகட்டும், பாமரனாகட்டும் எது உண்மை, என்று ஆராய்ந்து பார்க்கும் சிந்தனையை கைகொள்ளாவிடில் இதுபோன்று மோசடிகளிலிருந்து மீள வழிஇல்லை.

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...