சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யாததை தவறு என்று கூறி மருத்துவர்கள் / மருத்துவமனையின் மீது சேற்றை வாரியிரைக்கும் (mud slinging / smear campaign) செயல்கள் தற்சமயம் தொடர் மின்னஞ்சல்கள் மற்றும் பிறதளங்களில் நடந்து வருவதால் சென்ற வருடம் (20 மே 2008) “மருத்துவம் தொடர்பான நையாண்டி நைனாவின் மழுப்பல் கேள்விகளுக்கு தெளிவான விடைகள்” என்ற தலைப்பில் எழுதிய இந்த இடுகை மேலும் சில புதிய தகவல்கள், கருத்துக்கள் மற்றும் படங்களுடன் மீள்பதிவு செய்யப்படுகிறது.
இந்த இடுகையின் நோக்கம் கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் மருத்துவமனைக்கு வக்காலத்து வாங்குவது இல்லை என்பதை புரிந்து கொள்ளவது எளிது தான். இந்த மீள்பதிவின் நோக்கம் சிசேரியன் சதவிதங்கள் அதிகரித்ததற்கு முக்கிய காரணம் மருத்துவர்களின் மேல் செலுத்தப்படும் “அழுத்தங்கள்” என்பதை பதிவு செய்ய
அழுத்தங்கள் என்பது நீதிமன்ற தலையீடு மற்றும் ஊடக தலையீடு, அந்த பகுதி கட்டபஞ்சாயத்து என்று பலவகைப்படும் !!!
இந்த உதாரணம் ஊடக தலையீடு. நீதிமன்ற தலையீட்டிற்கு ஏகப்பட்ட உதாரணங்கள் இருக்கின்றனவே
இன்று புதிதாக எழுதப்பட்டவை அடர்சிகப்பு நிறத்தில் இருக்கின்றன
-oOo-
கேள்விகள் கேட்டது நையாண்டி நைனா
எனது முந்தைய பதிவில் நையாண்டி நைனா என்ற பதிவர் சில கேள்விகளை கேட்டிருந்தார். அனைத்திற்கும் நான் தெளிவான பதில் அளித்திருந்தேன். மேலும் அவரிடம் சில கேள்விகளும் கேட்டிருந்தேன். பதிலும் வரவில்லை
அவர் மேலும் சில கேள்விகளை கேட்கிறார்
மருத்துவர் ஐயா திரு. புருனோ அவர்கள், சொல்கிறார் டெஸ்ட் எடுக்க நீதி மன்றங்கள் வற்புறுத்துகின்றதாம். நீதி மன்றங்கள் அதனிடம் முறை இடப்பட்ட வழக்கு சார்ந்த வகைகளுக்கு மட்டுமே அவ்வாறு வற்புறுத்துகிறது, மற்றைய நேரங்களில் அதன் தலையீடு இருப்பதில்லை,
நைனா, என்னிடம் வரும் 100 நோயாளிகளில் ஒருவர் மட்டும் தான் நீதிமன்றம் போவார். ஆனால் யார் அந்த ஒருவர் என்று எனக்கு தெரியாது. எனவே 100 பேரும் நீதிமன்றம் செல்வார்கள் என்று நினைத்து வைத்தியம் பார்க்கும் நிலைக்கு மருத்துவர்களை தள்ளியது சமுகம் தான்.
உங்களுக்கு வரும் அனைத்து மின்னஞ்சல்களிலும் நச்சு நிரல் இருக்காது. ஆனால் அனைத்து மின்னஞ்சல்களையும் சோதிப்பீர்கள் அல்லவா.
அதே போல் தான் இதுவும்.
அதாவது, ஒரு சாதாரண பொதுஜனம், நம்ம நையாண்டி நைனா போகிறார் என்று வைத்து கொள்ளுங்களேன் அவரிடம் தேவை இல்லாத சில / பல பரிசோதனைகளை பரிந்துறைப்பது ஏன்?
இது மழுப்பலான கேள்வி. தேவையே இல்லாத பரிசோதனை என்று நையாண்டி நைனா என்ன சொல்கிறார். ஒரு உதாரணம் தர முடியுமா.
(சோதனைகள் செய்யாமல் எப்படி நோயை கண்டு பிடிப்பது என்று எதிர் கேள்வி கேட்க தேவை இல்லை. மேலும் அது மருத்துவதிற்கு தேவை அற்றது என்று நீங்கள் எப்படி முடிவு செய்கிறீர்கள்? மாற்று மருத்துவம் நீங்களே சொல்லுங்கள் என்று கேட்டு கேள்வியின் நோக்கத்தை திசை திருப்பும் முகமாக பதிலை நான் விரும்ப வில்லை.)
இது திசை திருப்புவது இல்லை. இது தான் உங்களின் கேள்விக்கு நேரான பதில்.
சோதனைகள் (உதாரணமாக நாக்கை நீட்டச்சொல்லி பார்ப்பது, இரத்த அழுத்தம் எடுப்பது) கூடாது என்று நீங்கள் கூறுவது வித்தியாசமாக உள்ளது.
பலர் கூறியபடி இது உயிர் சம்பந்தமான துறை. இங்கு ஏன் ஸார் உங்கள் நையாண்டி
என் வாழ்வில் எனக்கு நடந்த ஒரு சின்ன அனுபவம். எனக்கு வயது 27 ஆகும் சமயம், அதாவது கடந்த வருடம். எனக்கு கடைவாய் பல்லின் அருகே, வலி வந்தது ஒரு மருத்துவரிடம் சென்றேன் அவர் ஒன்றுமே கேட்காமல், " போய் ஒரு எக்ஸ்ரே எடுத்து வாருங்கள் " என்று சொல்கிறார். நானாக ஒரு வலி நிவாரண மாத்திரை எழுதி வாங்கி உட்கொண்டு, பின்னர் என் வீட்டிற்கு போன் செய்து சொன்னதும் எனது தந்தை கூறுகிறார் " உனக்கு கடைவாய் பல் வளரும் பருவம் அது தான் வளர்கிறது, வேறொன்றும் இல்லை" என் தந்தை கூறிய படியே நடந்தது.
உண்மை என்னவென்றால்
கடைவாய் பல் வளரும் போதும் வலி வரும். தாடை எலும்பில் புற்று நோய் வந்தாலும் வலி வரும்.
ஒரு மருத்துவரிடம் வரும் 1000 நபர்களில் 999 பேருக்கு வலி கடைவாய் பல் வளர்வதால். 1 நபருக்கு வரும் வலி தாடை எலும்பில் புற்று நோயினால். அதே சமயம் ஒருவருக்கு பல் வளர வேண்டிய நேரத்தில் வளர வில்லை என்றால் அவருக்கு புற்றுநொய் அல்லது சில வகை கட்டிகள் வரும் வாய்ப்புகள் அதிகம்.
நாளை அந்த ஒருவர் நீதிமன்றம் சென்று ”முதலில் வலிக்கும் பொழுதே நான் இந்த மருத்துவரிடம் சென்றேன். அவர் ஆரம்ப நிலையில் என் புற்றுநோயை கண்டுபிடிக்க வில்லை - எனக்கு 5 லட்சம் நஷ்ட ஈடு வேண்டும்” என்று வழக்கு தொடர்ந்தால் நீதிமன்றம் “நீ ஊடுகதிர் எடுக்காது குற்றம். எனவே பிணியாளருக்கு 5 லட்சம் நஷ்ட ஈடு அளி” என்று உத்தரவிடுகிறது.
பொதுவாக ஒருவருக்கு கடைவாய் பல் வரும் வயது 17 முதல் 21 வரை.


எனவே 27 வயது நபர் ஒருவர் பல் வலி என்று வந்து அவருக்கு கடைவாய் பல் வளர வில்லை என்றால் பல காரணங்கள் இருக்கலாம். ஒரு காரணம் அவர் குடும்ப (அல்லது உடல்) வாகு. அது மட்டும் காரணம் அல்ல. அது ரிக்கெட்ஸாக இருக்கலாம். அல்ல்து தைராய்டு குறைபாடாக இருக்கலாம், பைரஸ் டிஸ்ப்ளேசியாவாக இருக்கலாம், டவுன்ஸ் ஸிண்ட்ரோமாக இருக்கலாம், மேலும் விபரம் தேவைப்படுவோர் கிழ்க்கண்ட கட்டுரைகளை வாசிக்கலாம்
- Johnsen DC. Prevalence of delayed emergence of permanent teeth as a result of local factors. J Am Dent Assoc 1971;14:100-6.
- Kaban LB, Needleman HL, Hertzberg J. Idiopathic failure of eruption of permanent molar teeth. Oral Surg 1976;42:155-63.
இது போல் நடப்பதால் தான் மருத்துவர்கள் ஆதாரத்தை பதிவு செய்வதற்காக சோதனை செய்கிறார்கள்.
இது குறித்து நான் ஏற்கனவே போன பதிவில் தெளிவாக விளக்கியிருந்தேன்.
உங்களுக்கு தெரியுமா : அரசு மருத்துவமனையில் கூட வெளியில் எடுத்த நுண்ணொளி மற்றும் திசு சோதனையை வைத்து அறுவை சிகிச்சை செய்வதில்லை.இதை போல் என் அண்ணனுக்கும் நடந்தது. ஒரு சாதாரண மனிதருக்கு தெரியும் இந்த விவரம் ஒரு மருத்துவருக்கு தெரியாமல் போனது ஏன்? (இது ஒரு சின்ன எடுத்துக்காட்டு மட்டுமே.)
அரசு மருத்துவமனையில் மீண்டும் இலவசமாகவே
இரத்த பரிசோதனை
நுண்ணொளி (Ultrasonogram)
திசு பரிசோதனை (Biopsy) செய்வார்கள் என்று தெரியுமா
ஒரு நோயாளி வெளியில் நுண்ணொளி பரிசோதனை செய்திருந்தாலும்
கண்டிப்பாக அரசு மருத்துவமனையில் மறுமுறை நுண்ணொளி சோதனை செய்யப்படும். அது போல் வெளியிடங்களில் செய்த திசு சோதனையில் புற்று நோய் என்று இருந்தால் உடனே அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய மாட்டர்கள். மறுபடியும் சோதனை செய்து அரசு நோய் குறியியல் மருத்துவ பேராசிரியர் (Professor of Pathology) அதை புற்று நோய் என்று உறுதி படுத்தினால் தான் அறுவை சிகிச்சை
ஏன்.
அப்படி (அரசு மருத்துவமனையிலேயே மீண்டும் இலவசமாக) செய்வதால் அரசு மருத்துவருக்கு என்ன லாபம்....
வேலை பளு அதிகரித்தாலும் கூட செய்வதற்கு காரணம் நீதிமன்றங்கள் தான்
எப்பொழுது மருத்துவம் நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு உட்பட்டதோ அப்பொழுதே இதெல்லாம் ஆரம்பித்து விட்டது
சாதாரண மனிதர் அப்படி சொல்லலாம் .ஏனென்றால் அவர் சாதாரண மனிதர். நீங்கள் அவர் மேல் வழக்கு தொடர மாட்டீர்கள். மருத்துவர் அப்படி சொல்ல முடியாது என்று நீதிமன்றம் கூறுகிறது
புரிகிறதா
ஏன் சார் தெளிவாக விளக்கிய பின்னரும் அதே கேள்வி கேட்கிறீர்கள். புரியவில்லையா, அல்ல புரியாதது போல் நடிக்கிறீர்களா
அது சரி,
அப்படி சாதாரண மனிதருக்கு தெரிகிறது என்றால் நீங்கள் ஏன் மருத்துவரிடம் சென்றீர்கள் :) :) :) அது கூட நையாண்டி தானா
வேண்டும் என்றே இயற்கையாக வரும் பிரசவ வலியினை மட்டுருத்தி, சிசேரியன் செய்ய வற்புறுத்தாமை வேண்டும் என்று நான் கூறினால், நீங்கள் சொல்கிறீர்கள் "அப்படி சுகப்பிரசவம் ஆக சிறிது நேரம் பொறுக்கலாம். ஆனால் அதில் ஆபத்து அதிகம். பிறகு பிரச்சனை வந்தால் நீங்கள் (அதாவது பொது ஜனம்) என்ன கூறுவீர்கள். முதலிலேயே அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது என்று தானே"
அப்படி பொதுஜனம் கூறவில்லையா. மருத்துவம் நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு அப்பாற்பட்டது என்று சட்டம் இயற்றினால் பரிசோதனைகள் குறையும். (நீங்கள் இதை ஆதரிக்கிறீர்களா)
சுக பிரசவத்தில் சிக்கலா?????
உங்களின் கேள்வியே தவறு.
சாமி, பிரசவம் என்பது
- சுகப்பிரசவம்
- சிக்கலான பிரசவம்
- அறுவை சிகிச்சை மூலமாக தாயும் சேயும் நலம்
- அறுவை சிகிச்சை செய்யாததால் தாய், சேய், தாயும் சேயும் உடல் குறைவு அல்லது மரணம்
அப்படி என்றால் நம் முன்னோர்கள் 10 - 15 பிள்ளைகள் பெற்றார்களே எப்படி?
முன்னோர்களின் காலத்தில் தமிழகத்தில் ”பிரசவ கால மரண விகிதம் ” (Maternal Mortality Rate) 3 சதவிதமாக இருந்தது. அதாவது 1000 பிரசவங்களில் 30 பேர் மரணித்தார்கள். இன்று தமிழகத்தில் 0.08 சதமாக (அதாவது 1000 பிரசவங்களில் 0.8) பேர் மரணிக்கிறார்கள்.
இது ஆதார பூர்வ தகவல் . வேண்டுமானால் யாரிடமும் கேட்டுக்கொள்ளுங்கள்
இந்தியாவின் சக்கரவர்த்தியே அக்காலத்தில் தனது காதல் மனைவியை பிரசவ கால மரணத்திற்கு பரிகொடுத்தார். தெரியுமா (மன்னர் யார் என்று தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் கூறலாம்)
சரி, அந்த இக்கட்டான நிலமையையும் சமாளிக்க தானே மருத்துவ மனை தேடி வருகிறார்கள். சுகமாய் பிரசவம் ஆகவேண்டும். ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் சமாளிக்க தானே மருத்துவ மனைகளே ஒழிய, சுக பிரசவம் ஆகும் முன்னரே சிசேரியன் செய்வதற்கு அல்ல.
சாமி, அசம்பாவிதம் நடக்கும் என்று தெரிந்தால் நடக்கும் முன்னரே நடவடிக்கை எடுப்பது தான் புத்திசாலித்தனம். தாய் உயிருக்கு போராடுவது வரை ஏன் விட வேண்டும்
உதாரணமாக நீங்கள் பயணம் கிளம்புகிறீர்கள். ஒரு சக்கரத்தில் காற்று கம்மியாக உள்ளது. கிளம்பும் முன்னரே அதை சரி செய்வீர்களா அல்லது பாதியில் எதாவது பஞ்சர் கடை இருக்கும் என்று கிளம்புவீர்களா.
மற்றபடி, நீங்கள் கூறும் ”இக்கட்டான நிலைமை வரும் (பாதி வழியில் சீருந்து நிற்கும்) என்று தெரிந்தாலும் முதலில் ஒன்றும் (சக்கரத்தை மாற்றுவது அல்லது ஒட்டையை அடைப்பது) செய்யாமல் இக்கட்டான நிலைமை வந்தபின் (வாகனம் பாதியில் நின்றபின்) ”இக்கட்டான நிலமையையும் சமாளிக்க தானே ” _______ (பஞ்சர் கடை) என்ற உங்கள் கூற்றை வேறு யாரும் ஏற்றுக்கொள்வார்களா என்று தெரியவில்லை.
மற்ற வலைப்பதிவர்களுக்கு : சுகப்பிரசவம் ஆகாது என்று தெரிந்த பின், தாயும் சேயும் நலமாக இருக்கும் போதே அறுவை செய்ய வேண்டுமா, அல்லது தாயிற்கு வலி எடுத்து இரத்த போக்கு அதிமாகி (ante partum hemorrhage, post partum hemorrhage, rupture uterus) சிசுவிற்கு முச்சு தினறல் (foetal distress) ஏற்பட்ட பின் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா.
தாயும் சேயும் நலமாக இருக்கும் போதே அறுவை செய்யதால்
தாய் நலமாக இருப்பதற்கு வாய்ப்பு - 95 %
சேய் நலமாக இருப்பதற்கு வாய்ப்பு - 95 %
பிரசவ வலி ஏற்பட்ட பின் அறுவை செய்யதால்
தாய் நலமாக இருப்பதற்கு வாய்ப்பு - 50 %
சேய் நலமாக இருப்பதற்கு வாய்ப்பு - 25 %
என்றால் நீங்கள் என்ன முடிவு எடுப்பீர்கள்
நையாண்டி நைனா தான் இரண்டாவது முடிவு எடுப்பதாக் கூறுகிறார் (இது கூட நையாண்டி தானா)
முதல் முடிவு எடுப்பது மருத்துவர்கள் பணம் சம்பாதிக்க என்று கூறுகிறார். மற்றவ்ர்களின் கருத்தென்ன ?? உங்களுக்கு குழப்பமாக இருக்கிறது என்றால் விஜயசங்கரின் இந்த இடுகையை வாசியுங்கள். மருத்துவர்கள் ஏன் அறுவை சிசிச்சை செய்கிறார்கள் என்பது தெளிவாக புரியும். முதலில் அறுவை சிகிச்சை வேண்டாம் என்றும் தாங்கள் “ரிஸ்க் எடுக்க தயார்” என்றும் கூறுபவர்கள் சுகப்பிரசவத்தில் ஏதாவது சிக்கல் வந்த பின்னர் அதற்கும் மருத்துவர் தான் காரணம், என்று குற்றம்சாட்டி அந்த மருத்துவரின் பெயரை / மருத்துவமனையின் பெயரை தொடர் மின்னஞ்சல்களிலும் முகபுத்தகத்திலும் (facebook) பிறதளங்களிலும் கெடுப்பதாக கூறி மிரட்டி பணம் கேட்கும் (blackmail) கொடுமை நடக்கும் போது நையாண்டி நைனாக்கள் அமைதியாக இருக்கும் மர்மம் என்ன
அந்த மருத்துவமனையில் செயல்பாடுகளை நான் நியாயப்படுத்த முயலவில்லை. ஆனால் அதே நேரம் தேவையில்லாமல் சிசேரியன் செய்கிறார்கள், அந்த மருத்துவமனையில் சுகப்பிரசவமே ஆவதில்லை என்றெல்லாம் அவதூறு பரப்பும் பதிவர்கள்
ஒரு நிமிடம் சிந்தித்து
முதலிலேயே அறுவை சிகிச்சை செய்திருந்தால் உங்கள் குழந்தை பிழைத்திருக்கும், தாமதமாக செய்ததால் தான் குழந்தை இறந்து விட்டது என்ற நிலை உங்களுக்கு வந்தால்
நீங்கள் என்ன முடிவெடுப்பீர்கள் என்று கூற முடியுமா
அல்லது
சுகப்பிரசவத்தில் சிக்கல் வந்ததால் குழந்தையின் கைசெயல்படாமல் போய்விட்டால் (அறுவை சிகிச்சையில் இந்த பாதிப்பு வந்திருக்காது) என்றால் சுகப்பிரசவம் பார்த்த அந்த மருத்துவமனையை திட்டுவீர்களா அல்லது பாராட்டுவீர்களா
சாலையில் செல்லும் ஒருவரை இரு சக்கர வாகனம் இடித்து விட்டால் (யார் மேல் தவறிருந்தாலும்) நாம் அந்த வாகன ஓட்டியைத்தான் அடிப்போம். அதே போல் இரு சக்கர வாகனமும் நான்கு சக்கர வாகனமும் இடித்து விட்டால் நம்மிடம் அடி வாங்குவது அந்த நான்கு சக்கர வாகன ஓட்டுனரே
அதே போல் இது போல் ஒரு கை ஊனமான குழந்தை ஒரு புறமும், மருத்துவர் மறுபுறமும் நின்றால் கட்டாயம் அந்த மருத்துவர் தான் அடி வாங்குவார். அது தான் இன்று நடக்கிறது - நீதிமன்றங்களிலும், ஊடகங்களிலும், தற்சமயம் ப்ளாக்கரிலும், பேஸ்புக்கிலும், வோர்ட்பிரசிலும், மருத்துவர் தவறு செய்ய வில்லை என்றால் கூட மருத்துவமனையை குற்றம் சாட்டுகிறார்கள்
அதுவும் அந்த குழந்தை இறந்து விட்டால், 40 வாரம் சுமந்து பெற்ற தாயின் மேல் உள்ள பரிதாபமும் சேர்ந்து விடுகிறது
இந்த பெங்களூர் மருத்துவமனை விவகாரத்தில் அந்த தாயிடம் ஏற்கனவே சிசேரியன் செய்ததால் அதன் பிறகு சுகப்பிரசவம் என்பது தாயிற்கும் சேயிற்கும் அதிக அளவு சிக்கல் நிறைந்தது என்று தெளிவாக கூறப்பட்டிருக்கிறது
இருந்தாலும் அந்த தாய் சுகப்பிரசவமே தேவை என்று கூறியுள்ளார். இது போல் பலரும் கூறியிருப்பார்கள்
சுகப்பிரசவத்தில் பிரச்சனை இல்லாத 99 பேரும் வீட்டிற்கு சென்று விட்டார்கள். இது போல் ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு கூட மறுமுறை சுகப்பிரசவம் முயன்று பார்க்கும் அந்த மருத்துவமனையை பாராட்டி இணையத்தில் ஏதாவது பதிவு இருக்கிறதா என்று தெரியவில்லை :) :)
ஆனால் சிக்கல் என்றவுடன் “எனக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது தானே” என்று போர்க்கொடி
அதற்கு சிங்கி அடிக்க இணையத்தில் மேலும் சில தற்குறிகள் :( :(
இது போன்ற சிக்கல்கள் இருப்பதால் தான் பெரும்பாலன மருத்துவர்கள் ஒரு சிறிய பிரச்சனை இருந்தாலும் அறுவை சிகிச்சை செய்ய விரும்புகிறார்கள்
மருத்துவர்கள் / மருத்துவத்துறையில் மேல் காழ்ப்புணர்வு அல்லது புரிந்து கொள்ளும் தன்மை குறைவு அல்லது அறியாமை ஆகியவற்றுடன் பதிவு மற்றும் மறுமொழி எழுதும் பதிவர்கள் இனியாவது உண்மையை தெரிந்து கொண்டு திருந்துவார்கள் என்று எதிர்பார்க்கலாமா
இயற்கையாக வரும் பிரசவ வலி ( பிரசவ வலி வந்தால், பிரசவம் ஆகிவிடும்,
ஆகா,
எப்படி சார் உங்களால் இப்படி எல்லாம் நையாண்டி செய்ய முடிகிறது
பல நிலைகளிலும் பிரசவ வலி வரும், ஆனால் சுகப்பிரசவல் கண்டிப்பாக ஆகாது. உதாரணத்திற்கு 2 மட்டும் த்ருகிறேன்
1. Placenta Praevia
2. CPD
எனவே பிரசவ வலி வந்தால் பிரசவம் ஆகிவிடும் என்ற உங்கள் கூற்று நையாண்டியே தவிர வேறு ஒன்றுமில்லை. அளவிற்கு மீறினால் நையாண்டியும் நஞ்சு தான்
அப்படி ஆகும் பொழுது சில சமயம் குழந்தாயின் நிலை மாறிவிடும், வேறு பல சிக்கல்களும் வரும்) வராமல் மட்டுபடுத்தி சிசேரியன் செய்ய அல்ல.
இது போன்ற நையாண்டி வரிகளுக்கு விளக்கம் தேவையில்லை
எத்தனை பேர், மருத்துவரின் தவறுக்கு அவரிடம் வில்லங்கம் செய்கிறார்கள்?
பலர். நாளிதழ்களை படித்தாலே தெரியும். மேலும் பலர் மருத்துவர் தவறு செய்யாவிட்டாலும் கூட அவரிடம் வில்லங்கம் செய்கிறார்கள். [உதாரணம் வேண்டுமா :) :) :) :) ] {இது உள்குத்து அல்ல - வெளிகுத்து :) :) :) } சந்தேகம் இருந்தால் நான் அளித்த சுட்டிகளை பாருங்கள்
அவரவர், அவரவர் விதியினை நொந்து தானே செல்கிறார்கள்.
அப்படி செல்வது மருத்துவர் தான் :( :(
அடுத்து, சோதனை, டெஸ்ட் என்று நான் சொல்வது ஸ்டெத்-சோதனைகளையும், நாக்கை நீட்டி சோதனை செய்வதையும் கூறவில்லை,
இதை நீங்கள் முதலில் தெளிவாக கூறவில்லை
ஆனால் அதையும் நீங்கள் கூறி இருப்பது உங்கள் நகைச்சுவை உணர்வை காட்டினாலும், அதில் உங்கள் மழுப்பல் உணர்வே மேலோங்கி இருப்பதாக தெரிகிறது.
என்ன மழுப்பல். அது தெளிவான பதில் தான். எனது தெளிவான பதில்களையும் நான் எழுப்பிய கேள்விகளையும் ஒரு முறை படியுங்கள். எதாவது சந்தேகம் என்றால் குறிப்பிட்டு கேளுங்கள்.
நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் பதிலளிக்க வில்லை. ஏன். பதில் கூறங்கள் ச
மழுப்பல் மழுப்பல் என்று திரும்பத்திரும்ப கூறுவது ஏன்
மேலும் அந்த சோதனைகளை காசில்லாமல் செய்கிறோம் என்ற ஏளனமா? இல்லையே? அந்த சோதனைகளுக்கும் சேர்த்து தானே கட்டணம் வாங்குகிறீர்கள்.
ஆமாம். கண்டிப்பாக காசு வாங்குகிறோம். இதில் என்ன தவறு. மருத்துவர் காசு வாங்குவது தவறு என்ற உங்களில் கூற்று தான் நையாண்டி.
உங்களின் இரண்டாவது வரியே சொல்கிறது, உங்களின் முதல் வரி அர்த்தமற்றது என்று
ஏற்கனவே பார்த்து கொண்டிருக்கும் மருத்துவரின் மருந்துக்களும், வைத்திய முறைகளும் தீர்வை தரவில்லை என்று அடுத்த மருத்துவரை நாடும் பொழுது எடுக்க சொல்லும் டெஸ்டுகளை பற்றி நான் சொன்னால் நீங்கள் வேறு எதையோ பேசி சமாளிக்கிறீர்கள்.
அதுவும் இது போல் தான். நான் சமாளிக்க வில்லை, இது குறித்து தெளிவாக விளக்கியுள்ளேன். உங்களுக்கு எதாவது சந்தேகம் இருந்தால் குறிப்பிட்ட பதிவில் கேட்கவும்
ஏற்கனவே பார்த்து கொண்டிருக்கும் மருத்துவரின் மருந்துக்களும், வைத்திய முறைகளும் தீர்வை தரவில்லை என்று அரசு மருத்துவமனையை நாடும் பொழுது எடுக்க சொல்லும் டெஸ்டுகளை பற்றி நான் கூறிவிட்டேனே
படித்தீர்களா. ஏன் சார் பதிலை கூட படிக்காமல் நையாண்டி செய்கிறீர்கள்.
மீண்டும் அதே பரிசோதனைகளை செய்வதால் அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் மருத்துவருக்கு பொருளாதார ரீதியாக லாபம் கிடையாது. ஏன் வேலைப்பளு தான் கூட. அப்படி கூட அதிகம் வேலைப்பளுவை தாங்குவது நீதிமன்றத்திற்குத்தான். புரிகிறதா.
ட்ரிப்ஸ், சிரிஞ்சு, ஏன் எழுதி கொடுக்கிறீர்கள் என்று தெளிவில்லாமல் கேட்டது என் தவறு தான்.
அப்பாடா.
நான் சொல்வது தேவைக்கு மீறி, எழுதி கொடுப்பது ஏன்?
நான் சொல்வது தேவைக்கு மீறி கொடுக்கவில்லை.
தேவைப்பட்டது தான் தரப்படுகிறது என்று தான்.
என்ன தேவை, ஏன் தேவை என்று நான் தெளிவாக விளக்கி விட்டேன். ஆனால் உங்களின் குற்றச்சாட்டிற்கு நீங்கள் ஆதாரம் தர வில்லை.
பின்னர் அவர் ஒரு மாத்திரை வில்லை எழுதி கொடுப்பார் அது அங்கே இல்லை எனில் (அப்படி பெரும்பாலும் இருக்காது, ஏன் எனில் அவரே அங்கு ஸ்டாக் உள்ளத்தை தானே எழுதியே தருவார் )அங்கே உள்ளவர் மாற்றி ( மாற்றி கொடுப்பது என்பது வேறு ராசாயன கலவை கொண்டுள்ள மாத்திரை அல்ல, எல்லாம் ஒரே ராசாயனம், திறன், அளவு உள்ள மாத்திரை தான்) கொடுத்தாலும், ஒண்ணும் சொல்ல மாட்டார். ஆனால் நாம் வெளியே சென்று வாங்கி வந்துவிட்டால்? பிரச்சினை தான்? ஒண்ணும் சொல்ல முடியாத பட்சத்தில் இம்சை வேறு ரூபத்தில் வரும்.
இது குறித்தும் நான் தெளிவாக விளக்கி விட்டேன்.
உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் (அதில் பெரும்பாண்மை நையாண்டி கேள்வியாக இருந்தாலும்) தெளிவாக விளக்கிவிட்டேன்.
மேலும் சந்தேகம் இருந்தால் கேட்கவும்.
பின் குறிப்பு
ஒருவரிடம் கேள்வி கேட்க வேண்டுமென்றால் அவர் பதிவில் ஒரு பின்னூட்டம் இட்டால் தான் நீங்கள் கேட்டது தெரியும்
---
நையாண்டி நைனா பதிலளிக்காமல் மழுப்பிய நான் கேட்ட கேள்விகள்
- அப்படி யென்றால் இதையத்துடிப்பு மானி (Stethoscope) வைத்து ஒரு நோயாளியை வாழ்நாளிலேயே ஒரு முறை தான் சோதிக்க வேண்டுமா ??
- ஒரு நோயாளி மறுமுறை வந்தால் குறைந்த பட்சம் நாக்கை நீட்டச்சொல்லி பார்ப்பது கூட தவறா ??
- இளங்கலை படித்த மருத்துவரும், முதுகலை படித்த மருத்துவரும், சிறப்பு மருத்துவரும் ஒரே கட்டணம் தான் வாங்க வேண்டுமா
- இருபது வருடங்களுக்கு முன்னர் புறநோயாளி பிரிவிலேயே போலியோ என்று கூறலாம். இன்று பரிசோதனை (அதான் டெஸ்ட்) எடுத்து விட்டு தான் கூற வேண்டும் என்பது விதி. இது குறித்து உங்கள் கருத்து என்ன
- மருந்து விற்பது எந்த விதத்தில் தவறு என்று கூற முடியுமா
- நோயாளி இறந்த உடன் மருத்துவமனையை அடிப்பது என்னவாம்.
- சிகிச்சை பலனின்றி நோயாளி இறந்தால் அந்த பகுதி தாதாக்களை வைத்து மருத்துவரை மிரட்டுவது குறித்து உங்கள் கருத்து என்ன
- ஒரு மருத்துவமனைக்கு தேவைப்படும் மென்பொருள்,கணனி,மின்சாரம், நீர், வாகனம், பெட்ரோல் போன்றவைகளை அளிப்பவர்களும் சேவை மணப்பாண்மையுடன் செயல்பட வேண்டுமா அல்லது மருத்துவர்கள் மட்டும் செயல்பட்டால் போதுமா
- ஒருமுறை மட்டும் இரத்தில் சர்க்கரை அளவை பார்த்து விட்டு வாழ்நாள் முழுவதும் வைத்தியம் பார்க்க வேண்டும் என்கிறீர்களா
(நீங்கள் நான் கேட்டுவரும் கேள்விகளுக்கு பதிலளித்தாலும், அல்லது பதிலளிக்காமல் நழுவினாலும்) பதிலளிக்க நான் தயார்



65 மறுமொழிகள்:
Dear Bruno,
its heartening to note that u have this much tolerance and patience to exlain all these to idiots like naiyandi!!!
அனானி,
தங்களில் ஆதாரம் இல்லாத பின்னூட்டம் நீக்கப்படுகிறது
அனானி,
தங்களில் ஆதாரம் இல்லாத பின்னூட்டம் நீக்கப்படுகிறது
இந்தியாவின் சக்கரவர்த்தியே அக்காலத்தில் தனது காதல் மனைவியை பிரசவ கால மரணத்திற்கு பரிகொடுத்தார். தெரியுமா (மன்னர் யார் என்று தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் கூறலாம்)
Shah Jehan-- His wife Mum Taj died during her 14th child's delivery.--thyagarajan
தியாகராஜன்,
சிசேரியன் பரவலாக செய்யப்படுவதற்கு முன் சக்கரவர்த்தியின் மனைவியின் உயிருக்கு கூட உத்திர வாதம் கிடையாது
இன்று அப்படி இல்லை
நையாண்டி நைனாவின் உறுமி மேளம் தொடருமா?
இடக்காய் கேட்டாலும் பலரின் சந்தேகங்கள் தெளிவுபெருவதால் அவருக்கு நவினயுக நக்கீர தெனாலிராமன் என்ற பட்டம் கொடுத்து பாராட்டலாம்
நான் சென்னையில் வசித்து வருகிறேன் சிறுநீர் என்பது நம் உடலில் இருந்து வெளியேற்றப்படுவது ஆனால் அதை குடிக்கலாம் என்றும் அது தண்ணீர் போன்றதுதான் என்று ஒரு இணைய தளத்தில் படித்தேன் இது எந்த அளவிற்கு உண்மை என்பதை விளக்கவும் அப்படியானால் ஒரு கணவன் மனைவி சிருநீரயோ அல்லது மனைவி கணவன் சிருநீரயோ குடிக்கலாமா இதனால் பின்விளைவுகள் எதுவும் உண்டா என்பதை விளக்கவும்
நான் சென்னையில் வசித்து வருகிறேன் சிறுநீர் என்பது நம் உடலில் இருந்து வெளியேற்றப்படுவது ஆனால் அதை குடிக்கலாம் என்றும் அது தண்ணீர் போன்றதுதான் என்று ஒரு இணைய தளத்தில் படித்தேன் இது எந்த அளவிற்கு உண்மை என்பதை விளக்கவும் அப்படியானால் ஒரு கணவன் மனைவி சிறுநீரையோ அல்லது மனைவி கணவன் சிறுநீரையோ குடிக்கலாமா இதனால் பின்விளைவுகள் எதுவும் உண்டா என்பதை விளக்கவும் நமது முன்னால் பிரதமர் மொராஜி தேசாய் மாணவர்கள் மூத்திரம் என்ற புத்தகம் எழுதி உள்ளதாகவும் அதில் அவர் அதன் நன்மைகள் என்னவென்று எழுதி உள்ளதாக கூறுகின்றனர் திருவள்ளுவர் அவர்கள் ‘கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள’ என்று எழுதி உள்ளதாகவும் என்ற ‘திருக்குறள் ’ பாடலை இம்மருத்துவத்துக்கான முக்கியமான ஆதாரமாகக் காணலாமென்பது அவர்தம் தரப்பாகும். இதில் உண்டு என்ற சொல் காதல்-காம மயக்க நிலையில் பெண்ணின் சிறுநீரை உண்ணுதலையே குறிக்கும் என்பது அவர் துணிபு. இதன் மூலம் புணர்ச்சிநீள்கிறது,வீரியம் கூடுகிறது என்பது அவர்தம் அனுபவ உண்மை. கண்டு என்பது சிறுநீர் கழிப்பதைக் காணுதலும் கேட்பதென்பது அவ்வொலியை செவிகூர்தலும் உயிர்த்தல் என்பது அதை முர்ந்து நோக்குதலும் உற்று என்பது அதை உடலெங்கும் பூசிக்கொள்ளுதலும் ஆகும்.திருக்குறளில் இன்னும் பல பாடல்களில் இம்மருத்துவத்திற்கான விளக்கம் உள்ளது.வள்ளுவர் கூற்றுப்படி துணைவியின் சிறுநீரை கணவன் அருந்தலாமா.
இப்படிக்கு
பங்கஜம்
pankajam60@gmail.com
நான் கூறியதற்கு ஆதாரம்
http://vijayashankar.wordpress.com/2009/06/04/all-about-wockhardt-bannerghatta-road-bangalore/
மேலும் பலர் மருத்துவர் தவறு செய்யாவிட்டாலும் கூட அவரிடம் வில்லங்கம் செய்கிறார்கள்.
மற்ற வலைப்பதிவர்களுக்கு : சுகப்பிரசவம் ஆகாது என்று தெரிந்த பின், தாயும் சேயும் நலமாக இருக்கும் போதே அறுவை செய்ய வேண்டுமா, அல்லது தாயிற்கு வலி எடுத்து இரத்த போக்கு அதிமாகி (ante partum hemorrhage, post partum hemorrhage, rupture uterus) சிசுவிற்கு முச்சு தினறல் (foetal distress) ஏற்பட்ட பின் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா.
தாயும் சேயும் நலமாக இருக்கும் போதே அறுவை செய்யதால்
தாய் நலமாக இருப்பதற்கு வாய்ப்பு - 95 %
சேய் நலமாக இருப்பதற்கு வாய்ப்பு - 95 %
பிரசவ வலி ஏற்பட்ட பின் அறுவை செய்யதால்
தாய் நலமாக இருப்பதற்கு வாய்ப்பு - 50 %
சேய் நலமாக இருப்பதற்கு வாய்ப்பு - 25 %
என்றால் நீங்கள் என்ன முடிவு எடுப்பீர்கள்
டாக்டர் சார், சூப்பரா பதில் சொல்லி இருக்கீங்க...
//ஏற்கனவே பார்த்து கொண்டிருக்கும் மருத்துவரின் மருந்துக்களும், வைத்திய முறைகளும் தீர்வை தரவில்லை என்று அடுத்த மருத்துவரை நாடும் பொழுது எடுக்க சொல்லும் டெஸ்டுகளை பற்றி நான் சொன்னால் நீங்கள் வேறு எதையோ பேசி சமாளிக்கிறீர்கள்.//
நைனா உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன் , என் அம்மாவுக்கு ஒரு தனியார் மருத்துவமனையில் சோதனை செய்த பொழுது நுரையீரலில் புற்று நோய் இருக்கலாம் (இருக்கிறது என்று இல்லை) என்று ரிப்போர்ட் வந்தது, சென்னை அரசு மருத்துவமனைக்கு வந்த பொழுது எல்லா ரிப்போர்ட்டையும் பார்த்துவிட்டு, திரும்ப முதலில் இருந்தே அனைத்து சோதனைகளையும் செய்தார்கள் ரிசல்ட் இல்லை என்று வந்தது. திரும்பவும் ஒருமுறை சோதனை செய்தார்கள் இல்லை என்று வந்தது.
தாங்கள் சொன்னது போல் ஒரே ஒரு ரிப்போர்ட்டை வைத்துக்கொண்டு அம்மாவுக்கு புற்றுநோய்க்கான சிகிச்சை கொடுத்து இருந்தால் என்ன ஆவது?:(((
மிகவும் அருமையான விளக்கங்கள் தலைவரே!
கூடுதல் தகவல் இருக்கலாம் என்று வந்த ரிப்போர்ட்டுக்கு செலவு 35ஆயிரம், இல்லை என்று வந்ததுக்கு செலவு 1000 கூட இல்லை!
குசும்பன் சார்
நன்றி :) :) :)
கூடுதல் தகவல் :
இருக்கலாம் என்று வந்த ரிப்போர்ட்டுக்கு செலவு 35ஆயிரம்,
இல்லை என்று வந்ததுக்கு செலவு 1000 கூட இல்லை!
//சரவணகுமரன் said...
டாக்டர் சார், சூப்பரா பதில் சொல்லி இருக்கீங்க...
//
நன்றி சார்
அருமையான விளக்கங்கள். பல பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம், தமிழ்நாட்டில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பலருக்கு இருப்பதில்லை என்று நினைக்கிறேன் - இருந்திருந்தால் திடீர் மருத்துவ சோதனைகளுக்கு உதவியாக இருக்கும். நோயாளி - மருத்துவர் இரண்டு தரப்புமே தேவை இல்லாத பிரச்சினைகளை தவிர்க்கலாம். மேலும் மருத்துவர்களுக்கு "Medical malpractice insurance" இருக்கிறதா என்பது தெளிவாக தெரியவில்லை. சட்ட ரீதியான பிரச்சினைகள் அணுகும் போது இது ரொம்ப அவசியம்.
//"Medical malpractice insurance" இருக்கிறதா என்பது தெளிவாக தெரியவில்லை. சட்ட ரீதியான பிரச்சினைகள் அணுகும் போது இது ரொம்ப அவசியம்.//
இருக்கிறது. ஆனால் அதன் சந்தா தொகை அதிகரித்து கொண்டே போகிறது
மறைமுகமாக மருத்துவ செலவை கூட்டம் திட்டம் இது
ஒரு சில சுயநலமிகளால் அனைவரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்பது வருத்தப்பட வேண்டிய விஷ்யம்
நல்ல பயனுள்ள பதிவு.. நன்றி..
நானும் கூட சிசேரியன் விவகாரத்தில் தவறான எண்ணமே கொண்டிருந்தேன்.
அதற்காக வருந்துகிறேன்.
நான் மட்டும் தமிழக முதல்வராக இருந்தால், மருத்துவ துறையில் செய்தி ஒலிபரப்புத்துறை என்று ஒன்றை ஏற்ப்படுத்தி அதில் உங்களை இயக்குஞராக நியமிப்பேன் :-)
டாக்டர்,
நுகர்வோர் நீதிமன்றங்கள் இருப்பதால் மட்டும்தான் மருத்துவர்கள் மீது வழக்கு தொடரலாம் என்பதில்லை. சாதாரண சிவில் நீதிமன்றங்களிலும் தொடரலாம். அங்குதான் தொடரப்பட்டு வந்தன!
நுகர்வோர் நீதிமன்றங்களில் நீதிமன்ற கட்டணம் இல்லை. ஒரு கடிதம் மாதிரி கூட எழுதி மனு தாக்கல் செய்யலாம். சாட்சி விசாரணை இல்லை (ஆனால் மருத்துவ கவனக்குறையினை சாட்சிகள் மூலம் தெளிவாக நிரூபிக்க வேண்டும்).
தற்பொழுது நுகர்வோர் நீதிமன்றங்கள் மருத்துவர்கள் மீது நன்கு ஆய்ந்த பின்னரே தீர்ப்பு கூறுகின்றன என்று நினைக்கிறேன். நான் சென்றதில்லை...
ஆயினும் தொல்லைதான்!
/*
பிரசவ வலி ஏற்பட்ட பின் அறுவை செய்யதால்
தாய் நலமாக இருப்பதற்கு வாய்ப்பு - 50 %
சேய் நலமாக இருப்பதற்கு வாய்ப்பு - 25 %
*/
This relates the "labor pain" with "probability of survival".
Does this mean, having a labor pain reduces the probability of survival by 50/75 % for mom/child?
How true this statistic is?
What attributes for going from labor pain to surgery ?
//
Does this mean, having a labor pain reduces the probability of survival by 50/75 % for mom/child?
How true this statistic is?
What attributes for going from labor pain to surgery ?
//
ஐயா அனானி உங்களுக்கு தமிழ் தெரியுமல்லவா
முழுவதும் படித்து விட்டு கேள்வி கேளுங்கள்
சுகப்பிரசவம் ஆகாது என்று தெரிந்த பின், தாயும் சேயும் நலமாக இருக்கும் போதே அறுவை செய்ய வேண்டுமா, அல்லது தாயிற்கு வலி எடுத்து இரத்த போக்கு அதிமாகி (ante partum hemorrhage, post partum hemorrhage, rupture uterus) சிசுவிற்கு முச்சு தினறல் (foetal distress) ஏற்பட்ட பின் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா.
என்று தெளிவாகவே எழுதியுள்ளேன்
புரிகிறதா. கண் மட்டும் அல்ல, மனதும் திறந்திருந்தால் தான் உண்மைகள் புரியும்
//நான் மட்டும் தமிழக முதல்வராக இருந்தால், மருத்துவ துறையில் செய்தி ஒலிபரப்புத்துறை என்று ஒன்றை ஏற்ப்படுத்தி அதில் உங்களை இயக்குஞராக நியமிப்பேன் :-)//
:) :) :)
//தற்பொழுது நுகர்வோர் நீதிமன்றங்கள் மருத்துவர்கள் மீது நன்கு ஆய்ந்த பின்னரே தீர்ப்பு கூறுகின்றன என்று நினைக்கிறேன். நான் சென்றதில்லை...//
பல வழக்குகளில் நீங்கள் கூறுவது போல் நடந்தாலும் சில வழக்குகளில் அனுதாபத்தின் அடிப்படையில் மருத்துவர் தவறு செய்யாத போதும் மருத்துவருக்கு எதிராக தான் தீர்ப்பு வருகிறது
உதாரணம் ஆரம்ப காலங்களில் கருத்தடை அறுவை சிகிச்சைக்கு பின்னர் கருத்தரித்தால் மருத்துவருக்கு எதிராகத்தான் தீர்ப்பு வந்தது - உச்ச நீதிமன்றம் தலையிடும் வரை http://www.doctorsandlaw.com/2005/08/supreme-court-appeal-civil-5128-of.html
இங்கு பாருங்கள்
http://www.unwire.org/unwire/20000428/8529_story.asp
India's Supreme Court ruled Wednesday that a state-run hospital was responsible for a sterilization procedure that failed to prevent the birth of a child (Jyotsna Singh, BBC Online, 26 Apr).
Under the court's ruling, the mother is entitled to full compensation to raise the child from the state and the doctor who performed the procedure.
"Damages for the birth of an unwanted child may not be of any value for those who are already living in affluent conditions," Justices S. Saghir Ahmed and D. P. Wadhwa said, dismissing the state government's appeal of the ruling. "Those who live below the poverty line or who belong to the labor class, who earn their livelihood on [a] daily basis ... cannot be denied the claim for damages on account of medical negligence," they said (Times of India, 27 Apr).
Observers say the ruling adds a new dimension to government-sponsored family planning programs, which have been criticized repeatedly for ineffectiveness.
Complaints of negligence at government hospitals are common, particularly those offering free sterilization programs. Others say the ruling makes a mockery of government birth control efforts (Singh, BBC Online, 26 Apr).
--
கருத்தடை சிகிச்சை செய்தபின்னர் குழந்தை பிறந்தால் அது ineffectiveness, negligence at government hospitals என்ற வகையில் செய்தி பரப்பும் ஊடக பயங்கரவாதமே முக்கிய பிரச்சனை :)
கருத்தடை அறுவை சிகிச்சை முறையாக செய்யப்பட்டாலும் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது
எனவே கருத்தை அறுவை சிகிச்சை செய்தபின்னர் குழந்தை பிறந்தால் அது மருத்துவமனையின் தவறு மட்டுமே என்ற கருத்து முற்றிலும் தவறு
இதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும் வரை ஒழுங்காக அறுவை சிகிச்சை செய்தும், பணத்தை இழந்த மருத்துவர்களின் நொந்த கதையை எந்த ஊடகமாவது வெளியிட்டுள்ளதா
உதாரணமாக கண்புரை உள்ளவர்களின் 1000 பேருக்கு அறுவை சிகிச்சை செய்தால் 950 பேருக்கு தான் பார்வை திரும்ப கிடைக்கும்
ஆனால் ஊடகங்களும் மெத்த படித்த வலைப்பதிவர்களும் எப்படி எழுதுவார்கள் தெரியுமா “50 ஏழைகளின் பார்வையை பறித்த ஆஸ்பத்திரி” என்று தான் எழுதுவார்கள் :( :(
வணக்கம் மருத்துவர் ஐயா.
சமீபத்தில் கும்பகோணத்தில் என் மனைவிக்குப் பிரசவமானது. கத்திரி சிகிச்சையில் பிரசவமானது. அந்த மருத்துவவிடுதி பேறுகால மகளிருக்காகவே நடத்தப்படுவது. ஒரே ஒரு மருத்துவர். விடுதியின் மாடியிலேயே அவரது வீடும் இருக்கிறது.
அவரது மருத்துவ அனுபவத்திலோ அறிவிலோ குறை சொல்லும் நோக்கம் எனக்கில்லை. ஆனால் அந்த அம்மையார் பேறு பார்த்துக்கொள்ள வந்த மகளிரையும் அவர்களைப் பார்க்க வருகிற பார்வையாளர்களையும் உடனிருப்போரையும் நடத்துகிற விதம் சரியில்லை. காலை மற்றும் மாலை வேளைகளில் வழக்கமான சுற்றுக்கு வரும்போது அறையில் தாயும் சேயும் மட்டுமே இருக்க வேண்டும். வேறு யாரும் இருக்கக் கூடாது, அனைவரும் வெளியில் (அதாவது விடுதிக்கு வெளியில் சாலைக்கு) சென்று விட வேண்டும். மாடியிலிருந்து படியிறங்கி வரும்போது யாரும் எதிரில் நிற்கக் கூடாது.
இதற்கான காரணம் என்ன என்று அங்கிருந்த செவிலியர்களிடம் கேட்டதற்கு “டாக்டரம்மா வரும்போது யாரும் எதிரில நிக்கக் கூடாது. யாரும் அவங்களைக் கேள்வி கேக்கக் கூடாது. அவுங்களுக்கு இதெல்லாம் பிடிக்காது” என்றார்.
நான் கேட்கிறேன் அவர் வெறும் மருத்துவர்தானே, கடவுள் அவதாரம் இல்லையே. வானத்திலிருந்து ஒன்றும் குதித்துவிடவில்லையே? அவர் ஆயிரம் பிரசவம் பார்த்தவராக இருக்கட்டும். எனக்கு இது முதல் குழந்தை. இயல்பிலேயே எனக்கு இருக்கும் ஐயங்களையும் அச்சங்களையும் போக்குகிற கடமை ஒரு மருத்துவராக அவருக்கு இருக்கிறதா இல்லையா?
என் மனைவி ஒன்றும் தர்ம சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை. அதற்குரிய கட்டணத்தைச் செலுத்தியே சிகிச்சை எடுத்துக் கொண்டாள். ஆக ஒரு நுகர்வோராகவும் என்னுடைய கேள்வி கேட்கும் உரிமை உறுதி செய்யப்படுகிறது.
சிகிச்சையில் ஏதேனும் பாதகமான விளைவுகள் ஏற்பட்டால் மருத்துவர் எவ்விதத்திலும் பொறுப்பாளி அல்ல என்று எழுதி வாங்கிக் கொண்ட பொறுப்புணர்வு, ஏன் எனக்கு பதில் சொல்வதில் இல்லாமல் போயிற்று.
இதைக் குறித்து நான் உரிய பொறுப்பிலிருப்பவர்களிடம் புகாரளிக்க விரும்புகிறேன். அவ்வாறு புகாரளிப்பதெனில் யாருக்குத் தெரிவிக்க வேண்டும் என்கிற தகவலைத் தந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
//உதாரணமாக கண்புரை உள்ளவர்களின் 1000 பேருக்கு அறுவை சிகிச்சை செய்தால் 950 பேருக்கு தான் பார்வை திரும்ப கிடைக்கும்//
எனக்கு இது புது செய்தி. அப்ப கண்புரைக்கு சிகிச்சை செய்துகிட்டா பார்வை சரியாகும்ன்னு உறுதி கிடையாதா? அவர்களுக்கு ஏதாவது நிவாரணம் உண்டா?
\\ ஆனால் ஊடகங்களும் மெத்த படித்த வலைப்பதிவர்களும் எப்படி எழுதுவார்கள் தெரியுமா “50 ஏழைகளின் பார்வையை பறித்த ஆஸ்பத்திரி” என்று தான் எழுதுவார்கள் :( :( \\
“50 ஏழைகளின் பார்வையை பறித்த ஆஸ்பத்திரி” என்று எழுதியதில் ஏதாவது தவறு உள்ளதா? உள்ளடக்கத்தில் 1000 பேர் சிகிச்சை பெற்றுக்கொண்டார்கள் என சொல்லாமல் விட்டால் அது தவறு.
// அப்ப கண்புரைக்கு சிகிச்சை செய்துகிட்டா பார்வை சரியாகும்ன்னு உறுதி கிடையாதா?//
பெரும்பாலானோருக்கு சரியாகும். அதிகம் பாதிப்பு இருந்தால் சரியாகாது
//அவர்களுக்கு ஏதாவது நிவாரணம் உண்டா? //
ஏன் வழங்க வேண்டும் என்று கூற முடியுமா
யார் வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்
//“50 ஏழைகளின் பார்வையை பறித்த ஆஸ்பத்திரி” என்று எழுதியதில் ஏதாவது தவறு உள்ளதா? //
தவறு மட்டுமல்ல. அது மிகவும் கீழ்த்தரமான எழுத்தநடையாகும்
சும்மா இருக்கும் (அதாவது கண்பார்வை நன்றாக இருக்கும்) 1000 பேரை அழைத்து ஏதாவது அறுவை சிகிச்சை செய்து அதில் 50 பேருக்கு பார்வை சரியில்லாமல் போவதற்கும், பார்வையற்றவர்கள் 1000 பேருக்கு அறுவை சிகிச்சை செய்து அதில் 950 பேர் பார்வையை திரும்ப பெற்று 50 பேருக்கு பார்வை திரும்ப கிடைக்காமல் போவதற்கும் வித்தியாசம் உள்ளதல்லவா
--
100 நபர்கள் இருக்கிறார்கள். அதில் 5 பேரின் பாக்கெட்டிலிருந்து நீங்கள் பர்ஸை எடுத்தால் அது “பறிப்பு”
100 நபர்கள் பர்ஸை தொலைத்து விட்டார்கள். நான் 95 பேருக்கு கண்டு பிடித்து கொடுத்து விட்டேன். 5 பேரின் பர்ஸை கண்டுபிடிக்க முடியவில்லை. நீங்கள் 5 பேரின் பர்ஸை பறித்து விட்டீர்கள் என்று நான் எழுதலாமா
பறித்த என்ற சொல்
//காலை மற்றும் மாலை வேளைகளில் வழக்கமான சுற்றுக்கு வரும்போது அறையில் தாயும் சேயும் மட்டுமே இருக்க வேண்டும். வேறு யாரும் இருக்கக் கூடாது, //
இதில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை
அவரது பணிபுரியும் இடத்தில் அவர் விருப்பப்படி பணி புரிகிறார்
மருத்துவர் சுற்றுக்கு வரும் போது உடன் மற்றவர்கள் இருக்கக்கூடாது என்பது மருத்துவ துறையில் உலகம் முழுவதும் இருக்கும் நடைமுறை தான்
//என் மனைவி ஒன்றும் தர்ம சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை. அதற்குரிய கட்டணத்தைச் செலுத்தியே சிகிச்சை எடுத்துக் கொண்டாள். ஆக ஒரு நுகர்வோராகவும் என்னுடைய கேள்வி கேட்கும் உரிமை உறுதி செய்யப்படுகிறது.//
அந்த கேள்விகளை உங்களின் மனைவி மருத்துவரிடம் கேட்கலாமே.
உங்கள் மனைவி கேட்டு பதிலளிக்க மறுத்தால் அது தவறு
நீங்கள் என்ன பணி புரிகிறீர்கள் என்று கூற முடியுமா (உங்களுக்கு பதில் அளிக்க உதாரணம் கூறத்தான்)
உதாரணமாக நீங்கள் ஆசிரியர் என்றால் உங்களுக்கு ஒரு கேள்வி
உங்கள் குழந்தைக்கு பள்ளி கட்டணம் செலுத்துகிறீர்கள் என்ற காரணத்திற்காக நீங்கள் வகுப்பில் உட்கார அனுமதி இல்லை
//இதைக் குறித்து நான் உரிய பொறுப்பிலிருப்பவர்களிடம் புகாரளிக்க விரும்புகிறேன். அவ்வாறு புகாரளிப்பதெனில் யாருக்குத் தெரிவிக்க வேண்டும் என்கிற தகவலைத் தந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.//
புகார் அளிக்க வேண்டுமென்றால் முகவரி மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர், கும்பகோணம் அரசு மருத்துவமனை
என் மகன் வகுப்பில் சந்தேகம் கேட்டால் ஆசிரியர் பதிலளிக்க மறுக்கிறார் என்று புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பார்கள்
ஆனால் இந்த விஷயத்தை புகார் அளித்தால் நடவடிக்கை இருக்குமா என்று தெரியவில்லை
நான் என் மகனுக்கு கல்வி கட்டணம் செலுத்துகிறேன். ஆனால் வகுப்பு நேரம் என்னை ஆசிரியர் வகுப்பறையில் இருக்க அனுமதிக்க மறுக்கிறார். என்னால் வகுப்பு நேரம் என் சந்தேகங்க்ளை கேட்க முடியவில்லை. அதற்குரிய கட்டணத்தைச் செலுத்தியே என் மகன் படிக்கிறார். ஆக ஒரு நுகர்வோராகவும் என்னுடைய கேள்வி கேட்கும் உரிமை உறுதி செய்யப்படுகிறது என்று கூறினால் எத்தனை கல்வி அதிகாரிகள் உங்கள் புகாரை விசாரிப்பார்கள் என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது :) :) :)
அன்பு ப்ருனோ அவர்களே,
மிக தெளிவான விளக்கம் , இதற்க்கு பின்னும் மருத்துவரை குறை கூறும் பங்கு குறையும் என நம்பு கிறேன்.
நன்றி
எஸ் எஸ் பி
It is ok to wait outside the room or in the corridor while she came for her regular visits. I clearly mentioned we are forced to leave the building and wait in the street. We've to wait till she check up each and every patient of the floor, not just my wife.
Don't try to justify her faults just because she is a doctor. I feel I came to a wrong place. Sorry for the disturbance.
Please check this link
http://manarkeni.blogdrive.com/archive/cm-1_cy-2004_m-2_d-12_y-2004_o-1.html
or
http://manarkeni.blogdrive.com/
and the title "PRICE OF PARENTHOOD"
"She had undergone a Laproscopic surgery, as a birth control measure but conceived and gave birth to a child. She wanted to sue the Doctor for compensation. Though I am personally against dragging the medical professionals to the Court, my professional duty compelled me into accepting the brief, as her case was legally tenable. Neither I have any other choice being a budding Advocate."
http://manarkeni.blogdrive.com/archive/cm-1_cy-2004_m-2_d-12_y-2004_o-5.html
தலைவரே.. அருமையான பதில்கள்..
//அன்பு ப்ருனோ அவர்களே,
மிக தெளிவான விளக்கம் , இதற்க்கு பின்னும் மருத்துவரை குறை கூறும் பங்கு குறையும் என நம்பு கிறேன்.
//
நன்றி சார்
//It is ok to wait outside the room or in the corridor while she came for her regular visits. I clearly mentioned we are forced to leave the building and wait in the street. We've to wait till she check up each and every patient of the floor, not just my wife.//
அது அவரது மருத்துவமனையின் விதி
இதில் சட்டவிரோதமாக எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை
ஆனால் உங்களுக்கு தவறாக தெரியலாம். அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது
நான் பொதுவாக உறவினர்களை வெளியில் செல்ல சொல்வதில்லை
காரணம் நான் சோதிப்பது தலையையும், கண்களையும், காதுகளையும் தான்
ஆனால் ஒரு மகப்பேறு மருத்துவர் பிறப்பு உறுப்புக்களை சோதிக்க வேண்டிவரும்
அப்பொழுது நோயாளியை சுற்றி பலர் இருப்பது சரியா என்பதை உங்களின் முடிவிற்கே விட்டு விடுகிறேன்
//Don't try to justify her faults just because she is a doctor.//
இதை fault என்ற சொல் மூலம் கூறுவதை நான் எதிர்க்கிறேன்
இதை behaviour i dislike என்று வேண்டுமானால் கூறலாமே தவிர இதில் fault என்பது முற்றிலும் தவறு
//I feel I came to a wrong place.//
நீங்கள் கூறியதில் உள்ள அபத்தத்தை (அதாவது வகுப்பில் மாணவரின் தந்தையும் அமர்ந்து ஆசிரியரிடம் சந்தேகம் கேட்க வேண்டும்) சுட்டி காட்டினால் அது தவறான இடமா. என்ன கொடுமை சார் இது
//Sorry for the disturbance.//
உங்களின் கேள்விக்கு அளிக்கும் பதில் மூலம் பலரும் தெளிவு பெரும் வாய்ப்பு இருப்பதால் thanks for the disturbance :) :) :)
//Though I am personally against dragging the medical professionals to the Court, my professional duty compelled me into accepting the brief, as her case was legally tenable. //
Nopes :) :) As per Supreme Court Judgement
CASE NO.:
Appeal (civil) 5128 of 2002
PETITIONER:
State of Punjab
RESPONDENT:
Shiv Ram & Ors.
DATE OF JUDGMENT: 25/08/2005
மேற்குறிப்பிட்ட தீர்ப்பின் படி மருத்துவர் தவறிழைக்க வில்லை என்றாலும் கூட அந்த பெண் கருத்தரிக்கலாம்
//The inescapable conclusion is medical negligence is universal and one cannot avoid a bad doctor, whichever damn country she/he lives in//
சிகிச்சை வெற்றி பெறவில்லை என்றால் அது medical negligence என்ற கருத்து தவறு :) :) :)
கருத்தடை சிகிச்சை செய்த பின்னர் குழந்தை பிறந்தால் அது மருத்துவமனையின் தவறாக இருக்கலாம் அல்லது நோயாளியின் தவறாக (உடல் கூறு) இருக்கலாம்
இதைத்தான் 2005 உச்ச நீதிமன்ற தீர்ப்பு உறுதி செய்கிறது
பஞ்சரான டயரை / டியூபை ஓட்டுவதற்கும் மனித உறுப்பை அறுவை சிகிச்சை செய்வதற்கும் வேறுபாடு உள்ளது
டயர் / டியூப் என்பது தொழிற்சாலை செய்யப்படுவது. அனைத்தும் ஒரே போல் தான் இருக்கும்
ஆனால் ஒரு மனிதனின் உறுப்பிற்கும் மற்றொருவரின் உறுப்பிற்கும் வேறுபாடு உண்டு
சவரம் செய்யும் போது கத்தி வெட்டினால் சிலருக்கு 1 நிமிடத்தில் உறையும் இரத்தம் சிலருக்கு 5 நிமிடம் கழித்து தான் உறையும்
அதே போல் கருத்தடை சிகிச்சை செய்தபின்னர் கூட சிலருக்கு அந்த குழாய்கள் இணைந்து விடும்
அப்படி பட்டவர்களுக்கு மறுமுறை குழந்தை பிறந்தால் அதற்கு காரணம் மருத்துவர் அல்ல
நல்ல விரிவான விவாதத்திற்கு விரிவான விளக்கங்கள்..
இது போன்று ஆக்கபூர்வமான விவாதங்களை படிப்பது அரிதாக உள்ளது..
எனக்கும் மருத்துவரால் சில கசப்பான அனுபவங்கள் உள்ளது.
உங்களிடம் கேட்டால் ஆக்கபூர்வமான விவாதங்களும் அந்த சூழ்நிலையை புரிந்து கொள்ளவும் முடியும் என்று நம்புகிறேன்.
விரைவில் என் சந்தேகங்களுடன் உங்களை அணுகுகிறேன்.
நன்றி
//உங்களிடம் கேட்டால் ஆக்கபூர்வமான விவாதங்களும் அந்த சூழ்நிலையை புரிந்து கொள்ளவும் முடியும் என்று நம்புகிறேன்.
விரைவில் என் சந்தேகங்களுடன் உங்களை அணுகுகிறேன்.
நன்றி//
கேள்விகளை எதிர்பார்க்கிறேன்
//உங்களிடம் கேட்டால் ஆக்கபூர்வமான விவாதங்களும் அந்த சூழ்நிலையை புரிந்து கொள்ளவும் முடியும் என்று நம்புகிறேன்.
விரைவில் என் சந்தேகங்களுடன் உங்களை அணுகுகிறேன்.
நன்றி//
கேள்விகளை எதிர்பார்க்கிறேன்
ராஸ்மி கேசை பொறுத்த வரை லதா கொடுத்த தயிரியம் தான் காரணம் என்று தெரிகிறது. ரிஸ்க் இருக்கு வேண்டாம் என்று சொல்லியிருந்தால் எல்லாம் நலம்.... (அவர்கள் பதிலில் இதை தான் கோடிட்டு காட்டியிருக்கிறார்கள்! ) அப்புறம், என் ப்ளாகில் வரும் கமண்டுக்கள் பார்த்தால், ப்ரோபெசனல் ப்ளாகர்ஸ், தங்கள் ப்ளாகை பிரபலப்படுத்த வேண்டுமென்று கமன்ட் இட்ட மாதிரி தெரியுது!
மேலும் நேற்று நான் சென்ற ஜெயதேவாவில், கட்டாயம் ட்றோபோனின் டெஸ்ட் செய்ய வைத்தார்கள், ரெகுளர் ஹார்ட் செக்கபிர்க்கு! எனக்கு மொத்தம் ரூ 2000 செலவு கவலை இல்லை. ஏழைகள் என்ன செய்வார்கள்? அங்கு சிலர் ரேசன் கார்டு காட்டி, 50% டிஸ்கவுண்ட் பெற்றாலும், மருந்து சீட்டு வைத்துக்கொண்டு பிச்சை எடுப்பது, மனதுக்கு கஷ்டமாக இருக்கு.
நல்ல வேலை நான் டாக்டர் ஆகவில்லை ( 1986 ஸ்டேன்லி ). என் சீட் மற்றொரு ஏழை மாணவனுக்கு போயிருக்கும்.
அப்படி ஆகியிருந்தாலும், ஸ்பெஸலைஸெஸன் என்று செலவு செய்து, எங்கள் சமூகத்தில் வழக்கப்படி, நல்ல விலைக்கு ( 100% வரதட்சணை! ) விற்றிருப்பார்கள். ;-)
//மேலும் நேற்று நான் சென்ற ஜெயதேவாவில், கட்டாயம் ட்றோபோனின் டெஸ்ட் செய்ய வைத்தார்கள், ரெகுளர் ஹார்ட் செக்கபிர்க்கு! //
அவர்கள் ரிஸ்க் எடுக்கவில்லை சார்
அவ்வளவுதான்
ரிஸ்க் எடுத்து அந்த டெஸ்ட் எடுக்காமல் நாளை உங்களுக்கு மாரடைப்பு வந்தால் நீங்களும் இதே போல் “எனக்கு ஒழுங்காக சோதனை செய்யவில்லை - இதை முன்னரே கூறியிருந்தால் நான் அந்த டெஸ்டை எடுத்திருப்பேன்” என்று இதே போல் இணையம் முழுவதும் சேற்றை வாரி தூற்றமாட்டீர்கள் என்று என்ன நிச்சயம்
இது தனிப்பட்ட உங்களை பார்த்து கேட்கும் கேள்வியல்ல. உங்கள் பதிவில் வந்து மறுமொழி எழுதி தங்களின் அறியாமையையும் ஆழ்மன வக்கிரங்களையும் வெளிப்படுத்தும் அனைவருக்குமான கேள்விதான் :) :)
இணையத்தில் / ஊடகங்களில் “ரவுடித்தனம்” புரியும் சிலரை பார்த்து மருத்துவர்கள் பயப்படுவதால் தான் அனைத்து பரிசோதனைகளும் செய்கிறார்கள் - சின்ன பிரச்சனைக்கு கூட உடனடியாக அறுவை சிகிச்சை செய்கிறார்கள் - அதனால் மருத்துவ சிகிச்சையில் செலவு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது :( :( :(
--
சோதனை செய்தாலும் தப்பு - காசுக்காக செய்கிறார்கள் என்று பழிச்சொல்
சோதனை செய்யாமல் 10000ல் ஒருவருக்கு பிரச்சனை வந்தால் - மருத்துவர் தவறு செய்து விட்டார் என்று பழிச்சொல்
அறுவை சிகிச்சை செய்தாலும் தப்பு - காசுக்காக செய்கிறார்கள் என்று பழிச்சொல்
அறுவை சிகிச்சை செய்யாமல் 10000ல் ஒருவருக்கு பிரச்சனை வந்தால் - மருத்துவர் தவறு செய்து விட்டார் என்று பழிச்சொல்
உங்களுக்கே நியாயமாக இருக்கிறதா என்று யோசித்து பாருங்கள்
பொறுந்தாத உதாரனங்களைச் சொல்லி என்னை முட்டாளாகவும் உங்களை அறிவுஜீவியாகவும் காட்டிக்கொள்வதில் கவனம் செலுத்திய தாங்கள் நான் கேட்ட விஷயங்களுக்கு நேர்மையாகப் பதில் சொல்லுவதில் சிறிதும் கவனம் செலுத்தவில்லை.
நீங்கள் சொன்ன ஒவ்வொரு விஷயத்துக்கும் என்னால் வரிக்கு வரி பதில் சொல்ல முடியும். ஆனால் அதற்குப் பிறகும் ”இது அந்த மருத்துவர் வேலை பார்க்கும் விதம். Way of working” என்று அப்போது சப்பை கட்டு கட்டப் பார்ப்பீர்கள் என்பது இதுவரை தாங்கள் கொடுத்துள்ள பதில்களிலிருந்தே தெரிகிறது.
இனி உங்களோடு வார்த்தையாடுவதில் எந்தப் பயனும் இல்லை. “மருத்துவர்கள் அனைவரும் கடவுளுக்குச் சமம். அவர்களைப் போய் குறை சொல்லுகிறாயே” என்ற அதே கீழ்த்தரமான தட்டைச் சிந்தனையோடு உள்ள ஒருவருடன் வார்த்தையாடி என் நேரத்தை வீணாக்கி இருக்கிறேன் என்று இப்போது புரிகிறது.
உங்களது பின்னூட்டம் என் பதிவுக்குச் சம்பந்தமில்லாதது. அதானால் அதனை அங்கே பதிப்பிக்க முடியாது. உங்களைத் தேடி வந்து கேள்வி கேட்டது என்னுடைய தவறு. மீண்டும் சொல்கிறேன் நான் தவறான இடத்துக்குத்தான் வந்திருக்கிறேன். மன்னிக்கவும். நீ என்ன சொன்னாலும் கடைசி வரைக்கும் நான் சொன்னதையேதான் சொல்லிக் கொண்டிருப்பேன் என்று சொல்லுகிற உங்களுடன் இனி உரையாடலைத் தொடருவதில் எனக்கு விருப்பமில்லை. நன்றி
//பொறுந்தாத உதாரனங்களைச் சொல்லி என்னை முட்டாளாகவும் உங்களை அறிவுஜீவியாகவும் காட்டிக்கொள்வதில் கவனம் செலுத்திய தாங்கள் நான் கேட்ட விஷயங்களுக்கு நேர்மையாகப் பதில் சொல்லுவதில் சிறிதும் கவனம் செலுத்தவில்லை.//
பொருந்தாத உதாரணம் என்றால் எப்படி நீங்கள் முட்டாளாக முடியும். ??? முரண் தெரிகிறதே
நான் கூறியதில் என்ன பொருந்தவில்லை என்று கூறினால் விளக்கத்தயார்
//நீங்கள் சொன்ன ஒவ்வொரு விஷயத்துக்கும் என்னால் வரிக்கு வரி பதில் சொல்ல முடியும்.//
முடிந்தால் சொல்லுங்கள். அவ்வளவுதான்
//ஆனால் அதற்குப் பிறகும் ”இது அந்த மருத்துவர் வேலை பார்க்கும் விதம். Way of working” என்று அப்போது சப்பை கட்டு கட்டப் பார்ப்பீர்கள் என்பது இதுவரை தாங்கள் கொடுத்துள்ள பதில்களிலிருந்தே தெரிகிறது.//
அது அவரது way of working தான். இதில் என்ன தவறு இருக்கிறது. பெற்றோரும் வகுப்பில் இருந்து சந்தேகம் கேட்பார் என்பதை எத்தனை பேர் ஏற்றுக்கொள்வார்கள் என்ற என் கேள்வி மிகப்பொருத்தமானதே. உங்களின் கேள்விக்கு மிகவும் பொருத்தமான பதில் தான்.
//இனி உங்களோடு வார்த்தையாடுவதில் எந்தப் பயனும் இல்லை. //
உங்களது தவறான கருத்துக்களை நான் சரியான விதத்தில் எதிர்கொண்டு உள்ளேன் என்பது தெரிகிறது நன்றி
//“மருத்துவர்கள் அனைவரும் கடவுளுக்குச் சமம். அவர்களைப் போய் குறை சொல்லுகிறாயே” என்ற அதே கீழ்த்தரமான தட்டைச் சிந்தனையோடு உள்ள ஒருவருடன் வார்த்தையாடி என் நேரத்தை வீணாக்கி இருக்கிறேன் என்று இப்போது புரிகிறது.//
மருத்துவர்கள் கடவுள் அல்ல என்பது தான் நான் இதுவரை கூறிவந்த கருத்து . எங்காவது நான் மருத்துவரை கடவுள் என்று கூறியிருக்கிறேனா என்று காட்டவும்.
ஆனால் மருத்துவர் என்றால் நீங்கள் கூறும் அனைத்தையும் கேட்டுக்கொள்ளவேண்டும் (அதாவது அவர் சிகிச்சை அளிப்பதை நீங்கள் வேடிக்கை பார்ப்பதை கூட அனுமதிக்கவேண்டும்) என்ற தட்டை சிந்தனை உள்ளவர்களும் நாட்டில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள உதவிய உங்களுக்கு நன்றி. என் நேரம் மிகவும் பயனுள்ளதாக கழிந்தது
//உங்களது பின்னூட்டம் என் பதிவுக்குச் சம்பந்தமில்லாதது. அதானால் அதனை அங்கே பதிப்பிக்க முடியாது. //
நீங்கள் இந்த இடுகையில் ஆரம்பத்தில் கேட்ட கேள்வி இந்த மறுமொழிக்கு சம்பந்தமில்லாது தான்
ஆனால் அதை நான் பதிப்பித்தேன். காரணம் அந்த கேள்விக்கு என்னிடம் ஒரு நேர்மையான பதில் இருந்தது. என் கருத்து சரி என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. நீங்கள் எழுதிய கருத்து தவறென்றதால் அதை தக்க நியாயமான உண்மையான எதிர்கருத்து மூலம் எதிர்கொள்ள நெஞ்சுரம் இருந்தது. அதனால் பதிப்பித்தேன். அதற்கு தக்க பதிலுரையும் தந்தேன்.
கேள்விக்கு பதில் சொல்ல தைரியம் இல்லாதவர்களும், தங்களது கருத்தின் ஆழத்தில் நம்பிக்கையில்லாதவர்களும், மாற்று கருத்து உள்ள மறுமொழிகளை அழிப்பதில் வியப்பில்லையே
// நீ என்ன சொன்னாலும் கடைசி வரைக்கும் நான் சொன்னதையேதான் சொல்லிக் கொண்டிருப்பேன் என்று சொல்லுகிற உங்களுடன் இனி உரையாடலைத் தொடருவதில் எனக்கு விருப்பமில்லை.//
நீங்கள் கூறுவதில் நியாயம் இருந்தால் அதை கண்டிப்பாக ஏற்றுக்கொள்வேன். இணையத்தில் என்னுடன் விவாதம் புரிபவர் யாராக இருந்தால் அவர்களின் நியாயமான கருத்தை நான் ஏற்றுக்கொள்ள மறுத்ததே கிடையாது.
உதாரணமாக இந்த விவாதத்தில் “தன் மகனின் கல்விக்கட்டணத்தை செலுத்துவதாலேயே வகுப்பில் பாடம் நடக்கும் வேளையில் வகுப்பினுள் அமர்ந்து சந்தேகங்களை கேட்பதற்கு ஒரு பெற்றொருக்கு உரிமை உள்ளது” என்று வேறு யாராவது ஏற்றுக்கொண்டால் உங்கள் கருத்தை சரி என்று ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்த ஆட்சபனையும் இல்லை. புரிகிறதா.
--
என் பக்கம் நியாயம் இருப்பதாக நான் கருதுவதால் விவாதத்தை தொடர சம்மதம்.
//இனி உங்களோடு வார்த்தையாடுவதில் எந்தப் பயனும் இல்லை. “மருத்துவர்கள் அனைவரும் கடவுளுக்குச் சமம். அவர்களைப் போய் குறை சொல்லுகிறாயே” என்ற அதே கீழ்த்தரமான தட்டைச் சிந்தனையோடு உள்ள ஒருவருடன் வார்த்தையாடி என் நேரத்தை வீணாக்கி இருக்கிறேன் என்று இப்போது புரிகிறது.//
ஐயா பெரியவரே, அறிவாளியே
நீங்கள் ஒரு கருத்தை கூறுகிறீர்கள் - மருத்துவர் நோயாளியை பரிசோதிக்கும் போது அனைவரும் வேடிக்கை பார்க்க அனுமதிக்க வேண்டும்
நான் கூறுகிறேன் - அனுமதிக்க முடியாது என்று கூற அவருக்கு முழு உரிமை உள்ளது. அது அவரது பணியிடம். அங்கு அவரது விருப்பப்படி அவர் பணிபுரிவார். அது அவரது உரிமை
நீங்கள் கூறுகிறீர்கள் - நான் பணம் செலுத்தி தான் வைத்தியம் பார்க்கிறேன். எனக்கு அந்த உரிமை உள்ளது
நான் கூறுகிறேன் - பணம் செலுத்துவதாலேயே உங்களுக்கு அந்த உரிமை கிடையாது. உதாரணம் உங்கள் குழந்தையின் வகுப்பறையில் வகுப்பு நேரத்தில் அமர உங்களுக்கு அனுமதி கிடையாது
இதில் நான் கூறியது சரியா, நீங்கள் கூறியது சரியா என்பதை யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுக்கொள்ளலாம்
திறந்த மனதுடன் இங்கு எழுதியிருப்பதை மீண்டும் படித்து பாருங்கள்
குறை கூறக்கூடாது என்று நான் கூறவேயில்லையே.
இந்த இடுகைக்கு சம்மந்தம் இல்லை என்றாலும் கூட, உங்கள் கருத்தை கேட்டு அதற்கு தக்க விளக்கங்களையும் உதாரணங்களையும் த்ந்துள்ளேனே
அப்படி இருக்க ““மருத்துவர்கள் அனைவரும் கடவுளுக்குச் சமம். அவர்களைப் போய் குறை சொல்லுகிறாயே” என்ற அதே கீழ்த்தரமான தட்டைச் சிந்தனையோடு” என்று உங்கள் கருத்து கீழ்த்தரமானதா அல்லது மேல்தரமானதா என்று நான் கூறவேண்டாம். யார் வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம் !!
உங்கள் மனது தட்டையில்லை என்றால் உங்களுக்கே கூட இது புரியும் !!
ingu nadakkum vivaatham periya nagarangalukku vedumaanaal porunthalaam.anal siru nagarangal kiraamangalukku porunthaathu.siriya ngarangalil noyaalikalai nadaththum vitham kandaal raththa kanneer varum.vaippu irunthaal.dr avarkal sendru paarkkavum.naan anaivaraiyum sollavillai60 satham nallavarkalum irukkiraarkal.
//.vaippu irunthaal.dr avarkal sendru paarkkavum.//
சார்
நான் மூன்று வருடங்கள் கிராமத்திலேயே வீடு வாடகைக்கு எடுத்து தங்கி அங்குள்ள கிராம ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்தவன்
//anal siru nagarangal kiraamangalukku porunthaathu.siriya ngarangalil noyaalikalai nadaththum vitham kandaal raththa kanneer varum.//
கிராமங்களில் உள்ள சிலர் மருத்துவரை நடத்துவதை பார்த்தால் கண்டிப்பாக இரத்த கண்ணீர் வரும்
இதை வாசித்து பாருங்கள்
அரிவாளோடு ஆஸ்பத்திரியில்
சார். .. குளுக்கோஸ் போடுங்க....
இதுக்குப்போயி அலட்டிக்கலாமா..?
கொஞ்சம் யோசிங்க.
//naan anaivaraiyum sollavillai60 satham nallavarkalum irukkiraarkal.//
நானும் அனைத்து மக்களையும் சொல்லவில்லை. 80 சதம் நல்லவர்கள் தான்
மிகவும் வியக்க வைக்கும் பயனுள்ள உழைப்பு.
நன்றி டாக்டர்.
திரு. நையாண்டி நைனா அவர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும். உங்களிடம் இருக்கும் சரக்கை வெளிக்கொணர்ந்ததற்கு.
dear bruno.i am also a govt doctor.i also frustrated by some peoples not understanding the stress of doctors work nature.but u have done a very good job by explaining with patience.keep working..dont try to explain things to people like vijayagopalasamy.ur explanations are needed to other bloggers who want to understand and reason out what is happening.. next time i will try to post comment in tamil..
விஜயகோபாலசாமி அவர்களே. மருத்துவரின் வேலை தன்மை பற்றி பாடம் எடுக்கும் தாங்கள் என்ன வேலை பார்க்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாமா..
மற்ற அரசு அலுவலகங்களில் ( காவல் நிலையம்,RTO office ) கால் வலிக்க வெளியே காத்து கிடக்கும் நீங்கள் உயிர் காக்கும் மருத்துவர்களிடம் மட்டும்தான் குறை சொல்லுவீர்களா .
நாங்கள் கடவுள் இல்லை. ஆனால் எல்லாம் தெரிந்தவர்கள் போல் ஒண்ணுமே தெரியாமல் நீங்கள் கேட்கும் சில கேள்விகள் மருத்துவர்களின் அமைதியாக பார்க்கும் தன்மையை மாற்றுவதால் தான் உங்களை வெளியே நிக்க சொல்லி , நோயாளியை மட்டும் கேள்வி கேட்க அனுமதிக்குறோம்.. இது எங்களின் நேர்மையான பதில்... விவாதிக்க தயாரா..
ப்ருனோ வுக்கு நன்றி..
//மிகவும் வியக்க வைக்கும் பயனுள்ள உழைப்பு.
நன்றி டாக்டர்.//
நன்றி சார்
//dear bruno.i am also a govt doctor.i also frustrated by some peoples not understanding the stress of doctors work nature.but u have done a very good job by explaining with patience.keep working..dont try to explain things to people like vijayagopalasamy.ur explanations are needed to other bloggers who want to understand and reason out what is happening.. next time i will try to post comment in tamil..//
:) :) :)
பொதுவாக மருத்துவமனையில் பார்வையாளர் நேரம் என்று சில மணிநேரங்கள் மட்டுமே அனுமதி உண்டு
இந்த மருத்துவரோ தான் சுற்று செல்லும் நேரத்தை தவிர பிற நேரங்களை எல்லாம் பார்வையாளர் நேரமாக அனுமதித்து உள்ளார்
உண்மையில் பாராட்டப்பட வேண்டியது
--
வகுப்பு நடக்கும் போது நான் வகுப்பில் உட்கார்ந்து ஆசிரியரிடம் சந்தேகம் கேட்க அனுமதிக்க வேண்டும் என்பது எவ்வளவு “விஜயகோபால்சாமி”தனமானதோ அதே போல் தான் மருத்துவர் நோயாளிய்யை பரிசோதிக்கும் போது மருத்துவமனையில் நிற்பேன் என்பதும்
விஜயகோபாலசாமி அவர்களே. மருத்துவரின் வேலை தன்மை பற்றி பாடம் எடுக்கும் தாங்கள் என்ன வேலை பார்க்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாமா..மற்ற அரசு அலுவலகங்களில் ( காவல் நிலையம், கால் வலிக்க வெளியே காத்து கிடக்கும் நீங்கள் உயிர் காக்கும் மருத்துவர்களிடம் மட்டும்தான் குறை சொல்லுவீர்களா . நாங்கள் கடவுள் இல்லை. ஆனால் எல்லாம் தெரிந்தவர்கள் போல் ஒண்ணுமே தெரியாமல் நீங்கள் கேட்கும் சில கேள்விகள் மருத்துவர்களின் அமைதியாக பார்க்கும் தன்மையை மாற்றுவதால் தான் உங்களை வெளியே நிக்க சொல்லி , நோயாளியை மட்டும் கேள்வி கேட்க அனுமதிக்குறோம்.. இது எங்களின் நேர்மையான பதில்... விவாதிக்க தயாரா.. ப்ருனோ வுக்கு நன்றி..
//dear bruno.i am also a govt doctor.i also frustrated by some peoples not understanding the stress of doctors work nature.but u have done a very good job by explaining with patience.keep working..dont try to explain things to people like vijayagopalasamy.ur explanations are needed to other bloggers who want to understand and reason out what is happening.. next time i will try to post comment in tamil..//
:) :) :)
இன்னும் சுவாரசியமான மறு மொழிகளை எதிர்பார்க்கிறேன் ப்ருனோ ..
Sir,
My sister in kumbakonam was taking
treatment under dr gowri for
2nd delivery. up to 4.5 months
she went to the dr. and dr told normal. 2 times scans were done. after 5th month dr. told no water inside and go to tanjore. then she got admitted in some other hospital for abortion and found child only 300 gram. not enough weight for 5 months. suggestion was that may be kidney problem for the child. is it negligence?
ak
// suggestion was that may be kidney problem for the child. is it negligence?//
குழந்தைக்கு சிறுநீரகத்தில் கோளாறு இருப்பது கட்டாயம் மருத்துவரின் கவனக்குறைவு ஆகாது
அது பெரும்பாலும் ப்ரம்பரையாக வரக்கூடிய நோய்
//2nd delivery. up to 4.5 months
she went to the dr. and dr told normal. 2 times scans were done. after 5th month dr. told no water inside and go to tanjore.//
ஆக குறைபாடு உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது
இது பாராட்டப்படவேண்டிய விஷ்யமே
// then she got admitted in some other hospital for abortion and found child only 300 gram.//
முதல் மருத்துவமனையின் பெயரை கூறும் நீங்கள் இதில் பெயர் கூறாததன் காரணத்தை புரிந்து கொள்ள முடிகிறது :) :)
//not enough weight for 5 months.//
இது தான் பிரச்சனையே
இருபது வார சிசுவின் நீளம் 20 செ.மி மற்றும் எடை 300 கிராம் என்பது பொதுவாக நாம் பார்க்கும் கணக்கு தானே
20 வார சிசுவின் எடை 300 கிராம் என்பது எப்படி குறைவான எடை என்று நீங்கள் கூறுகிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா
http://www.babycenter.com/average-fetal-length-weight-chart
sorry - 6 month was completed
ak
sir,
if possible romove the first dr name also. she was very good and
want to say that my another sister name is also same dr name (27 yrs back) b-cos of the affection on the dr who attended my chithi delivery.
ak
//sorry - 6 month was completed
ak//
சார்
கொஞ்சம் தெளிவாக கூறுங்கள்
நீங்கள் தான் 2 times scans were done. after 5th month dr. told no water inside and go to tanjore.
என்று கூறினீர்கள்
found child only 300 gram. not enough weight for 5 months. என்றும் கூறினீர்கள்
இப்பொழுது 6 மாதம் முடிந்தது என்று கூறுகிறீர்கள்
Post a Comment