இது குறித்து எனக்கு தெரிந்த தகவல்களை எழுதுகிறேன்.
வழக்கமான டிஸ்கி : நான் கணினி கைநாட்டு (கம்ப்யூட்டர் இல்லிடரேட்) எனவே நான் கூறுவது தவறாக கூட இருக்கலாம்
-oOo-
ஒரு பதிவர் எழுதும் இடுகை மூன்று விதமாக படிக்கப்படுகிறது
- நேரடியாக அந்த பதிவின் முகவரியை உலாவியில் உள்ளிடுவதன் மூலம். இதன் மூலம் நாம் html வடிவிலான பக்கங்களை படிக்கிறோம்.
- செய்தியோடை (RSS Feeds) மூலமாக. ப்லாக்லைன்ஸ் (Bloglines), கூகிள் ரீடர் (Google Reader) ஆகியவற்றின் மூலமாக இப்படி படிக்கலாம்
- திரட்டிகளின் மூலமாக - தமிழ்மணம், தேன்கூடு, திரட்டி, தமிழ்வெளி போன்றவை திரட்டிகளாகும்
தமிழ்மணம் மூலம் - அதாவது தமிழ்மணத்தில் உள்ள பதிவின் (இன்னமும் சரியாக சொல்லவேண்டுமென்றால் இடுகையின்) சுட்டியை சுட்டி படிப்பது குறித்த ஒரு கணக்கே சூடான இடுகை யாகும்
ஒரு இடுகையை எத்தனை பேர் / எத்தனை முறை படிக்கப்பட்டது என்பது அல்ல சூடான இடுகையின் பின்புலம் - ஒரு இடுகையை எத்தனை முறை தமிழ்மண பக்கங்களில் உள்ள சுட்டிகளின் மூலம் படிக்கப்பட்டது என்பதே சூடான இடுகையின் பின்புலம்
மாற்றி சொல்ல வேண்டுமென்றால்
ஒரு இடுகை எப்படி உள்ளது என்பதை சூடான இடுகை கூறுவதில்லை
ஒரு இடுகை மொத்தமாக எத்தனை முறை படிக்கப்பட்டது என்பது சூடான இடுகை கூறுவதில்லை
ஒரு இடுகை தமிழ்மண பக்கங்களிலிருந்து எத்தனை முறை படிக்கப்பட்டது என்பதை மட்டும் தான் சூடான இடுகை தெரிவிக்கிறது
-oOo-
எந்த இடுகை தமிழ்மண பக்கங்களிலிருந்து பல முறை படிக்கப்படிகிறது
- முகப்பில் உள்ள இடுகைகள்
- மறுமொழிகள் கீழ் உள்ள இடுகைகள்
- சூடான இடுகைகள் கீழ் உள்ள இடுகைகள்
- வாசகர் பரிந்துரை கீழ் உள்ள இடுகைகள்
இப்பொழுது இதில் ஒரு இடுகை அதிகம் மறுமொழிகளை பெற்றால் (அதாவது முகப்பு பக்கத்தில் மறுமொழிகளின் கீழ் உள்ள செங்குத்துவரிசையில் என்னேரமும் இருந்தால்) அவ்விடுகையை படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மறுமொழி அளிக்க நினைப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். மறுமொழிகள் வந்தால் மீண்டும் அந்த இடுகை அதே செங்குத்துவரிசையில் இருக்கும் --> இவ்வாறான ஒரு ”நேர்மறை பின்னூட்ட விளைவு” நிகழ்கிறது
அதே போல் ஒரு இடுகை சூடான இடுகைகளின் கீழ் வந்தாலும், அதை அதிகம் பேர் படிக்க வாய்ப்புள்ளதால் இங்கும் அதே நேர்மறை பின்னூட்ட விளைவு நிகழ்வதால் அந்த இடுகை தொடர்ந்து சூடான இடுகையிலேயே இருக்கிறது
-oOo-
ஆனால் இவ்வாறாக வருவதற்கு முதலில் அந்த இடுகை முதல் முறை பலரால் படிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஒரு நாளில் எழுதப்படும் சராசரி 400 இடுகைகளில் எந்த இடுகையை படிப்பது என்பதை ஒரு சராசரி வாசகர் முடிவு செய்வது மூன்று காரணிகளினால்
- தமிழ்மண முகப்பில் தெரியும் தலைப்பு
- முதல் 20 வார்த்தைகள் - இது அனைத்து இடுகைகளுக்கும் பொருந்தாது
- பதிவு எழுதியவர் பெயர்
எனவே உங்களின் இடுகையை பலர் படிக்க வேண்டுமென்றால் --> அப்படி படித்து உங்களின் இடுகை சூடான இடுகையில் வர வேண்டுமென்றால் --> அப்படி வந்ததால் மேலும் பலர் படித்து மறுமொழி அளிக்க வேண்டுமென்றால் --> அப்படி அளிப்பதன் மூலம் மறுமொழி செங்குத்து வரிசையில் உங்கள் இடுகை வரவேண்டுமென்றால் --> அப்படி வருவதன் மூலம் மேலும் பலர் படித்து சூடான இடுகையிலேயே உங்கள் இடுகை தொடர்ந்து இருக்க வேண்டுமென்றால் செய்ய வேண்டியது என்ன
1. வசீகரிக்கும் தலைப்பு - இதை மட்டுமே பலரும் பிடித்துக்கொண்டு தலைப்பு வைக்க சிரமப்படுவதாக தோன்றுகிறது
2. முதல் 20 வார்த்தைகளில் நீங்கள் சொல்ல வந்த கருத்து என்னவென்று சொல்வது
3. மிக முக்கியமான ஆனால் பலருக்கும் தெரியாத (அல்லது தெரிந்து கொள்ள மறுக்கும்) விஷயம் “இவர் நல்ல எழுத்தாளர்” என்ற பெயரை பிற எழுத்தாளர்களிடம் வாங்குவது
ஒரு உதாரணம்
- ”தசாவதாரம் பட விமர்சனமும் டைம்ஸ் ஆஃப் இந்தியா வின் கூத்தும்” என்ற இடுகையின் சுட்டியை நாம் சுட்ட அந்த தலைப்பை விட அதை எழுதிய வினையூக்கி என்ற பெயர் தான் முக்கியம். அந்த பதிவர் எழுதிய இந்த இடுகையை படிக்கலாம் என்ற எண்ணத்தை அளித்ததில் அவர் இது வரையில் எழுதிய பழைய இடுகைகளும் ஒரு காரணம் தானே
மேலும் ஒரு உதாரணம்
- விடுபட்டவை 15 ஜூன் 2008 என்ற தலைப்பில் ஒரு இடுகை சூடான இடுகையில் இடம்பிடிப்பதற்கு காரணம் அந்த தலைப்பு அல்ல
- விடுபட்டவை 15 ஜூன் 2008 என்ற தலைப்பில் ஒரு இடுகை சூடான இடுகையில் இடம்பிடிப்பதற்கு காரணம் அந்த இடுகையில் எழுதப்பட்டிருக்கும் விபரங்கள் அல்ல. அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பது தெரியாமல் தானே அந்த இடுகை படிக்கப்படுகிறது
- விடுபட்டவை 15 ஜூன் 2008 என்ற தலைப்பில் ஒரு இடுகை சூடான இடுகையில் இடம்பிடிப்பதற்கு காரணம் - இது வரை வந்த விடுபட்டவை இடுகைகள் மக்களுக்கு பிடித்துப்போனதே ஆகும்.
முத்தாய்ப்பாக
சூடான இடுகை என்பது ஒரு திறம், தரம் (quality) சார்ந்த குறியீடு அல்ல. அது ஒரு எண்ணிக்கை (quantity) சார்ந்த விடயம் என்பது ஒரு வகையில் உண்மையென்றாலும், சூடான இடுகையில் இடம் பிடிக்கும் ஒரு இடுகை அதற்கு முந்தைய இடுகைகளின் தரத்தை வெளிப்படுத்துகிறது என்று கூறுவது தவறில்லை என்பது என் கருத்து. :) :) :)
வழக்கம் போல் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன
20 comments:
1. வசீகரிக்கும் தலைப்பு - இதை மட்டுமே பலரும் பிடித்துக்கொண்டு தலைப்பு வைக்க சிரமப்படுவதாக தோன்றுகிறது
2. முதல் 20 வார்த்தைகளில் நீங்கள் சொல்ல வந்த கருத்து என்னவென்று சொல்வது
3. மிக முக்கியமான ஆனால் பலருக்கும் தெரியாத (அல்லது தெரிந்து கொள்ள மறுக்கும்) விஷயம் “இவர் நல்ல எழுத்தாளர்” என்ற பெயரை பிற எழுத்தாளர்களிடம் வாங்குவது
///1. வசீகரிக்கும் தலைப்பு - இதை மட்டுமே பலரும் பிடித்துக்கொண்டு தலைப்பு வைக்க சிரமப்படுவதாக தோன்றுகிறது
2. முதல் 20 வார்த்தைகளில் நீங்கள் சொல்ல வந்த கருத்து என்னவென்று சொல்வது
3. மிக முக்கியமான ஆனால் பலருக்கும் தெரியாத (அல்லது தெரிந்து கொள்ள மறுக்கும்) விஷயம் “இவர் நல்ல எழுத்தாளர்” என்ற பெயரை பிற எழுத்தாளர்களிடம் வாங்குவது////
எண் 3ல் உள்ளதைச் செய்வதுதான் என்றேன்றும் பயனளிக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து!
சிறப்பாக ஆராய்ந்து எழுதி இருக்கிறீர்கள்
ஹை செம ஜாலியா, மேட்டரே இல்லாமலும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை ரேஞ்சுக்கு பதிவு போட்டுட்டீங்களே. சூப்பர் மருத்துவர் புருனோ! இதுலயே நீங்க ஒரு exampleஅ
செட் பண்ணிட்டீங்க.
ஹி ஹி தப்பா எடுத்துக்காதீங்க.
நீங்க உண்மையிலேயே மருத்துவர்தானா.. யாரோ செய்ய வேண்டிய வேலையில்லாத வேலையெல்லாம் நீங்க செய்றது நியாயமா. இதுக்கு பதில் நாலு ஏழை பாளைக்கு மருத்துவம் செய்யலாமே.. அல்லது வேறேதாவது ஆராய்ச்சி செய்யலாமே..
சூடான இடுகை பத்தி ஒரு ஆய்வு.. அதுக்கு ஒரு டாக்டர்..
வேணாங்க. ப்ளீஸ்.
சூடான இடுகை பத்தி இதுதான் இப்படித்தான்னு தீர்கமா எதுவும் சொல்ல முடியாது. வெறும் தலைப்பை மட்டும் வச்சி சூடான இடுகைகளும் உண்டு. இப்டி ஆனதுதான் அதிகம்.
வாத்தியார் சார், உங்கள் கருத்துதான் என் கருத்து
//ஹை செம ஜாலியா, மேட்டரே இல்லாமலும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை ரேஞ்சுக்கு பதிவு போட்டுட்டீங்களே. சூப்பர் மருத்துவர் புருனோ! இதுலயே நீங்க ஒரு exampleஅ
செட் பண்ணிட்டீங்க.
ஹி ஹி தப்பா எடுத்துக்காதீங்க.//
”சூடான இடுகை” என்பது “ஹிட் ரேட்” (அதுவும் தமிழ்மண எக்ஸிட் ஹிட் ரேட்) என்பது தெரியாமல் பலரும் அப்பாவியாக கேள்விகள் கேட்டதை பதிவர் சந்திப்பில் பார்க்க முடிந்தது.
அதை தெளிவு படுத்தத்தான் பதிவு
//யாரோ செய்ய வேண்டிய வேலையில்லாத வேலையெல்லாம் நீங்க செய்றது நியாயமா.//
யாருமே செய்யாததால் தான் நான் செய்தேன்
//இதுக்கு பதில் நாலு ஏழை பாளைக்கு மருத்துவம் செய்யலாமே.. அல்லது வேறேதாவது ஆராய்ச்சி செய்யலாமே..//
இப்படி மறுமொழி எழுதும் நேரங்களில் நீங்கள் கூட ”ஏழை பாளைக்கு” மருத்துவம் செய்ய உதவலாம். நீங்கள் எந்த வித தொழில் செய்பவராக இருந்தாலும், திறன் சார்ந்த தொழில் என்றாலும் அல்லது திறன் சாரா தொழில் என்றாலும் சுகாதார துறையில் சேவை என்றுமே தேவைதான். உங்கள் திறன் என்னவென்றும் ஒரு நாளுக்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் கூறினால் எழை பாளைக்கு மருத்துவம் செய்ய நீங்கள் என்ன செய்யவது மூலம் உதவலாம் என்று கூறுகிறேன்
உங்கள் கருத்து படி யாருமே பதிவு எழுத முடியாது !!!!
//மேட்டரே இல்லாமலும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை ரேஞ்சுக்கு பதிவு போட்டுட்டீங்களே. //
அப்படி யென்றால் நான் தெளிவாக விளக்க வில்லை என்று தெரிகிறது ;) ;)
என் எழுத்தை மேம்படுத்த முயற்சிக்கிறேன்
ஐயா,
என்னுடைய வலைப்பூவை பார்த்து அதை மேன்மைபடுத்த ஆலோசனை வழங்குகள்...விஜய்-கோவை
http://pugaippezhai.blogspot.com
வாசகர் கூட்டத்தை சுண்டி இழுக்க
வாய்ப்பான வழிகள் பல சொல்லி
தமிழ் வலைபதிவு வாசகர் வட்டத்தை
தரணி எங்கும் பரவிடச் செய்யட்டும்
தப்பா நினைச்சிக்காதீங்க
விஷயம் “இவர் நல்ல எழுத்தாளர்” என்ற பெயரை பிற எழுத்தாளர்களிடம் வாங்குவது//
இதுக்கும் தமிழ்மணத்தில் பட்டியலிடப்பட்டும் சூடான இடுகைகளுக்கும் சம்பந்தமே இல்லை என்பது என்னுடைய மூன்றாண்டுகால அனுபவம்.
டாக்டர் அண்ணே! புதுசா வந்த என்னைய மாதிரி ஆட்களுக்கு வருகின்ற சந்தேகத்தை தீர்த்துவிட்டீங்க
நன்றி
ஓ! உண்மையிலேயே சூபர்! also these factors can be mixed to creat a super star in blogging!lol!
புதுகை.எம்.எம்.அப்துல்லா மற்றும் ஒசையாரே, வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
//இதுக்கும் தமிழ்மணத்தில் பட்டியலிடப்பட்டும் சூடான இடுகைகளுக்கும் சம்பந்தமே இல்லை என்பது என்னுடைய மூன்றாண்டுகால அனுபவம்.//
அதாவது சூடான இடுகை என்பது ஒரு திரைப்படம் முதல் நாள் சீட்டு விற்பனை விலை போல். அதற்கும் (முதல் நாள் அனுமதி சீட்டின் விலைக்கும்) படத்தின் தரத்திற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது !!!
ஆனால் வாசகர் பரிந்துரை என்பது மூன்றாவது வார அனுமதிசீட்டு போல். படம் நன்றாக இருந்தால் தான் மூன்றாவது வாரமும் படம் பார்க்க சீட்டு வாங்குவது சிரமம்.
நான் கூற வந்ததே, சூடான இடுகையில் ஒரு இடுகை வருவது அந்த இடுகையினால் அல்ல என்பதை தெரிவிக்கவும், “இதெல்லாம் எப்படி சூடான இடுகை” என்ற கேள்வியை தமிழ்மண நிர்வாகிகளிடம் கேட்பதில் பலன் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டத்தான்
அதிகம் படிக்கப்படுவதே சூடான இடுகை
அதிகம் ரசிக்கப்படுவது அல்ல :) :)
ஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.
"கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சுழல்
போராளியின் வெற்றிப்பேரிகை"
http://pugaippezhai.blogspot.com/2008/06/blog-post_3130.html
அன்புடன்,
விஜய்
கோவை
தினசரி பதிவாகும் இடுகைகள் 475 என்று தமிழ்மணம் சொல்கின்றது.
கூடிய விரைவில் இன்னும் ஒரு மாதத்திற்குள் அந்த
எண்ணிக்கை 500ஐத் தொடலாம்.
எல்லா இடுகைகளையும் படிப்பது சாத்தியமில்லை!
(நேரம் வேண்டுமே?)
சிலவற்றை பதிவரின் பெயரை வைத்துப் படிக்கின்றோம்
சிலவற்றை சுண்டி இழுக்கும் தலைப்பை வைத்துப் படிக்கின்றோம்.
பல நல்ல கருத்துச் செறிவுள்ள பதிவுகள் கண்ணில் படாமல் போய் விடுவதற்கு வாய்ப்பு அதிகமாகிவிட்டது.
தமிழ்மணம் திருவிழாக்கூட்டம் போல ஆகிவிட்டது.
வரவேற்க வேண்டிய வளர்ச்சிதான்!
ஆனால் நல்ல இடுகைகள் படிக்கப்பட வேண்டும்
அதற்கு ஏதாவது மருந்து இருக்கிறதா டாக்டர்?:-))))
//பல நல்ல கருத்துச் செறிவுள்ள பதிவுகள் கண்ணில் படாமல் போய் விடுவதற்கு வாய்ப்பு அதிகமாகிவிட்டது.
தமிழ்மணம் திருவிழாக்கூட்டம் போல ஆகிவிட்டது.
வரவேற்க வேண்டிய வளர்ச்சிதான்!
ஆனால் நல்ல இடுகைகள் படிக்கப்பட வேண்டும்
அதற்கு ஏதாவது மருந்து இருக்கிறதா டாக்டர்?:-))))//
வாசகர் தேர்வு, பூங்கா, மாற்று, கில்லி ஆகிய முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொருத்திருந்து பார்ப்போம்
ஹிஹி. தமிழ்மண சூடான இடுக்கையில் இடம் பிடிப்பதர்கு ரெண்டு விஷயம்தான் தேவை
1) இழுக்கும் தலைப்பு
2) பாப்புலர் பதிவர் - நம்ம லக்கி, பாலா, செல்லா, வெட்டி மாதிரி.
வேணும்னா, இதை ர்சர்ச் பண்ணி பாக்கலாம். யாருக்கும் சொல்லாம, லக்கிய தொடர்ந்து, அ., ஆ, இ , ஈன்னு தலைப்பு வைக்கச் சொல்லிப்பாக்காலாம் :)
தமிழ் வலைப் பதிவுலக
சான்றோர்களுக்கும்,
பெரியோர்களுக்கும்,
அறிஞர்களுக்கும்,
சகோதரர்களுக்கும்,
சகோதரிகளுக்கும்,
நண்பர்களுக்கும்,
தோழர்களுக்கு,
தோழியர்களுக்கும்
என் பணிவு கல்ந்த வணக்கங்கள்.
புகைப்பேழையில் படம் பிடித்த புகைப்டங்களை பதிந்து வந்த என்னை செய்தியுடன் பதிவு செய்ய அறிவுறுத்திய
டோண்டு ராகவன் ஐயா அவர்களுக்கு என் முதல் நன்றி.
எனது அன்பு அழைப்பை ஏற்று
வருகை புரிந்து
வாழ்த்துரை வழங்கியும்,
மேம்படுத்த ஆலோசனகள் தந்தும்
பேருதவி புரிந்திட்ட
அன்புகளுமிய அன்பர்கள்
திருநெல்வேலி கார்த்திக்
அதிஷா
VSK
dondu(#11168674346665545885)
லக்கிலுக்
ajay
துளசி கோபால்
உண்மைத் தமிழன்(15270788164745573644
VIKNESHWARAN
சின்ன அம்மிணி
VIKNESHWARAN
ஜமாலன்
உறையூர்காரன்
மதுரையம்பதி
கிரி
ambi
ஜீவி
வடுவூர் குமார்
செந்தில்
SP.VR. SUBBIAH
தமிழரசன்
cheena (சீனா)
சிறில் அலெக்ஸ்
வால்பையன்
வெட்டிப்பயல்
பினாத்தல் சுரேஷ்
இலவசக்கொத்தனார்
அகரம்.அமுதா
குசும்பன்
கயல்விழி முத்துலெட்சுமி
சென்ஷி
தருமி
தமிழன்
செந்தில்
மனதின் ஓசை
கானா பிரபா
Kailashi
மாதங்கி
முகவை மைந்தன்
அனைவருக்கும்
நெஞ்சுநிறை
நன்றிகள்
கோடான கோடி
என்றும் உங்கள்
விஜய்
கோவை.
http://pugaippezhai.blogspot.com
நல்ல பதிவு நண்பரே
சுபாஷ் சார்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
Post a Comment