இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Monday, July 07, 2008

ஆதமும் ஏவாளும் சாப்பிட்ட பழம் என்ன

ஆதமும் ஏவாளும் சாப்பிட்ட பழம் என்ன என்ற கேள்விக்கு நீங்கள் உடனடியாக ”ஆப்பிள்” என்று சொல்வீர்கள் என்று தெரியும்

விவிலியம் என்ன சொல்கிறது என்று பார்ப்போமா.
Genesis 2:9 And out of the ground made the LORD God to grow every tree that is pleasant to the sight, and good for food; the tree of life also in the midst of the garden, and the tree of the knowledge of good and evil.

Genesis 2:17 but of the tree of the knowledge of good and evil, thou shalt not eat of it; for in the day that thou eatest thereof thou shalt surely die.'
அது என்ன “நன்மை மற்றும் தீமை குறித்த அறிவின் மரம்”... இதை விட ஞானப்பழம் என்ற பெயர் பொருத்தமாக உள்ளதா

எத்தியோபியர்கள் படிக்கும் ஈனோகின் புத்தகத்தில் (31:4) இந்த மரம் குறித்து விளக்கப்பட்டிருக்கிறது. “ அது புளிய மரம் போலிருந்தது. அதன் பழங்கள் மெல்லிய திராட்சைபழங்களை போலிருந்தன, அதன் வாசனை பரவியிருந்தது”

யூதர்களின் தல்முத் என்ற புத்தகம், அந்த பழம் திராட்சை என்கிறது. மற்றொரு தல்முத கதை ஏவாள் அந்த பழத்திலிருந்து வைன் அருந்தினாள் என்கிறது. அதை அத்திப்பழம் என்றும், கோதுமை என்றும் கூட கருதுகிறார்கள்

மேல்நாட்டு ஓவியர்கள் மட்டுமே அந்த பழத்தை ஆப்பிள் ஆக்கினார்கள். (அவர்களுக்கு தெரிந்த பழம் அதுதான்). அதனால் தான் மேல் நாட்டு (ஐரோப்பிய) ஓவியங்களில் அந்த மரம் ஆப்பிள் மரமாகவும் அந்த பழம் ஆப்பிளாகவும் காட்டப்படுகின்றன. அவர்கள் (ஐரோப்பிய ஓவியர்கள்) என்ன செய்வார்கள். அவர்களுக்கு தெரிந்த பழத்தை ஓவியத்தில் வரைந்து விட்டார்கள். ஒரு வேளை ரவி வர்மா, இந்த காட்சியை வரைந்திருந்தால் தேங்காய் வரைந்திருக்கலாம்

சிலர் அந்த பழம் மாதுளை என்று கூட சொல்கிறார்கள்.

மேலும் விபரங்களுக்கு விக்கிபிடியா கட்டுரையின் சுட்டி இது தான்

27 மறுமொழிகள்:

rapp said...

இதே மாதிரிதானேங்க சார், கிருஸ்துமஸ் மரத்துக்கு பைன் மரத்தை உபயோகப்படுத்தும் முறையும் ஆரம்பிச்சிது. பொதுவாக ஐரோப்பாவில், அதுவும் இந்த பைன் மரத்தை அழகுப்படுத்துவதை பெரியளவில் அறிமுகப்படுத்திய ஜெர்மனியில்(அங்குள்ள மிகப் பெரிய பைன் மரக் காடுகளினால்) குளிர்காலங்களில் முக்கால்வாசி மரங்களில் இலயில்லாதக் காரணத்தால், பைன் மரங்களை அலங்கரிக்கின்றனர். ஆனால், இந்தியா போன்ற நாடுகளில் ஜாஸ்தி இலையுதிர்கால பாதிப்பு இல்லாதபோதும், ஐரோப்பியர்கள் செய்வதையே சிரமப்பட்டாவது, செய்கின்றனர். இது என்னோட தனிப்பட்ட ஒரு கருத்து. இதற்கு வேறொரு வரலாறு இருந்தால் தவறுக்கு மன்னிக்கவும்.

சிறில் அலெக்ஸ் said...

//ஒரு வேளை ரவி வர்மா, இந்த காட்சியை வரைந்திருந்தால் தேங்காய் வரைந்திருக்கலாம்
//

ஏன் நேந்திரம்பழம்கூட 'பல வகைகளில்' பொருந்துமே. :)

புருனோ Bruno said...

ராப் மேடம்,

பள்ளி காலத்தில் வைய்.எம்.சி.ஏவில் ஒரு நிகழ்ச்சியில் கிருஸ்துமஸ் மரத்திற்கு ஈச்ச மரம் தான் சரியான மரம் என்று பொருள் படும் வகையில் நாங்கள் நக்கலடித்திருக்கிறோம் :) :)

புருனோ Bruno said...

//ஏன் நேந்திரம்பழம்கூட 'பல வகைகளில்' பொருந்துமே. :)//

:) :) :) :)

யாருக்காவது இது புரியவில்லை என்றால் சிறிலிடம் மின்னஞ்சல் அனுப்பி கேட்டுக்கொள்ளவும் :) :)

கோவி.கண்ணன் said...

புரூனோ சார்,

அது துரியன் பழமாகத்தான் இருக்கனும். மற்ற மற்ற சாமாச்சாரத்துக்கெல்லாம் துரியன் பழம் பலன் கொடுக்கிறது என்று தமிழ்நாட்டில் நம்புகிறார்கள். துரியன் பழத்துக்காக சிலர் 3 மாதம் வரை கூட காத்திருக்கிறார்களாமே ?
:)

முரளிகண்ணன் said...

ஆஹா வித்தியாசமான பார்வையா இருக்கே

புருனோ Bruno said...

முரளி கண்ணன், வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

புருனோ Bruno said...

//அது துரியன் பழமாகத்தான் இருக்கனும். மற்ற மற்ற சாமாச்சாரத்துக்கெல்லாம் துரியன் பழம் பலன் கொடுக்கிறது என்று தமிழ்நாட்டில் நம்புகிறார்கள். துரியன் பழத்துக்காக சிலர் 3 மாதம் வரை கூட காத்திருக்கிறார்களாமே ?
:)//

:) :) :)

Anonymous said...

Palaa pazhamaa irukkumooo ?

mani

Anonymous said...

Palaa pazhamaa irukkumooo ?

mani

சென்ஷி said...

எனக்கு தெரிஞ்சு போச்சு டாக்டர்.. எனக்கு தெரிஞ்சு போச்சு..

தினம் ஒரு ஆப்பிளை சாப்பிட்டா டாக்டர்கிட்ட போகவேணாம்னு ஒரு சொலவடை இல்லன்னா மெதுவடை இருக்கறதால நீங்க அத கட்டுடைக்க பார்க்கறீங்க. அதுக்காக இந்த பதிவை நீங்க சபை ஏத்தி ஆப்பிளை சபிக்கப்பட்ட பழமா மாத்த மாட்டேங்குறீங்க :))

அச்சச்சோ.. ஆப்பிளை வச்சு அதிகமா கதை எழுதி வச்சிருக்கேனே.. அதெல்லாம் இப்ப ஞானப்பழமா மாத்துறதுக்குள்ளே நொந்து அழுகிடுமே.. :(

சென்ஷி said...

தல அடிக்கடி ங்... கொய்யா...ல...ம்பாரே..

ஒருவேளை அந்த பழம் கொய்யாவா இருக்குமோ :))

புருனோ Bruno said...

//Palaa pazhamaa irukkumooo ?

mani//

இருக்கலாம் :) :)

புருனோ Bruno said...

//அச்சச்சோ.. ஆப்பிளை வச்சு அதிகமா கதை எழுதி வச்சிருக்கேனே.. அதெல்லாம் இப்ப ஞானப்பழமா மாத்துறதுக்குள்ளே நொந்து அழுகிடுமே.//

:) :) :)

//ஒருவேளை அந்த பழம் கொய்யாவா இருக்குமோ :))//

:) :) :)

நையாண்டி நைனா said...

எல்லா பழத்தையும் பார்ததுட்டேன், பக்தி பழத்தை தவிர. ஆகையினால் அது "பக்தி பழமாக" இருக்க வாய்ப்பிருக்கிறது.....

உங்களுக்கு பக்தி பலமா இருந்தாலோ...
நீங்களே ஒரு பக்தி பழமா இருந்தாலோ...
இந்த மாதிரி ஒரு பழத்தை கொண்டு வந்து நாரதர் வேலை பார்க்க மாட்டீங்க.

புருனோ Bruno said...

//இந்த மாதிரி ஒரு பழத்தை கொண்டு வந்து நாரதர் வேலை பார்க்க மாட்டீங்க.//

இதில் நாரதர் வேலை என்ன உள்ளது.

பிரபு ராஜதுரை said...

மேல்நாட்டு ஓவியர்கள் மட்டுமே அந்த பழத்தை ஆப்பிள் ஆக்கினார்கள்

ஏன் கிறிஸ்துவையும் ஐரோப்பியர் ஆக்கி விட்டனரே

புருனோ Bruno said...

//ஏன் கிறிஸ்துவையும் ஐரோப்பியர் ஆக்கி விட்டனரே//

ஆமாம்ல

குடுகுடுப்பை said...

இந்த பழம் கேள்வியை அனைவுரும் அவர்களுக்குள் கேட்டுக்கொண்டால். விரைவில் தெளிவு பிறக்கும்.

டாக்டர் ரவீந்திரநாத் என்ன சொல்றார் இந்த பழம் பற்றி?

புருனோ Bruno said...

குடுகுடுப்பை

டாக்டர் ரவீந்திரநாத்திற்கும் இந்த இடுகைக்கும் என்ன சம்மந்தம்.

கொஞ்சம் புரியும் படி கூறுங்கள்

கயல்விழி said...

இப்போ எதுக்காக இந்த ஆராய்ச்சி. ஏதோ ஒரு பழம் விடுங்க

துளசி கோபால் said...

persimmon பழம்தான் அந்த 'ஞானப்பழம்'ன்னு ரெண்டு மூணுவாரமுன்பு ஒரு செய்தி தினமலரில் படிச்சேனே.

எந்தெந்த ஊர்லே எந்தப் பழம் அதிகமா விளையுதோ அதது அவுங்களுக்கு ஞானப்பழம்.

சிறிலுக்கு: ஐரோப்பாவில் வாழை அதிகம் இல்லை:-))))

எங்க ஊருக்குக்குன்னு தனியா கிறிஸ்மஸ் மரம் இருக்கு.

pohutukawa or New Zealand Christmas Tree

புருனோ Bruno said...

கயல்விழி மற்றும் துளசி கோபால் மேடம்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

Anonymous said...

பாவம் எண்டு சொல்லப்பட்டதால் ஒருவேளை அது ஆண் - பெண் குறிகளை குறிக்குமோ?
- ஈழத்து செல்வி, கனடா.

THE BALACHANDRAN said...

கனி என்பது ஆண் பெண் உடலுறவை மறைத்து சொல்லப்பட்ட மறைமொழி. விலக்கபட்ட கனிவிருட்சம் தோட்டத்தின் மத்தியில் முளைத்தது. அது ஆதாமின் உடலின் மத்தியபாகமான அரையைக் குறிக்கும் எப்படியெனில் அவனுடல் தோட்டத்தின் மண்ணிலிருத்து எடுக்கப்பட்டது... இதுக்குறித்து விவரமாகத் தெரிந்துக்ககொள்ள அழைக்கவும்+919843053572 அல்லது chandr31062@gmail.com

balachandran said...

கனி என்பது ஆண் பெண் உடலுறவை மறைத்து சொல்லப்பட்ட மறைமொழி. விலக்கபட்ட கனிவிருட்சம் தோட்டத்தின் மத்தியில் முளைத்தது. அது ஆதாமின் உடலின் மத்தியபாகமான அரையைக் குறிக்கும் எப்படியெனில் அவனுடல் தோட்டத்தின் மண்ணிலிருத்து எடுக்கப்பட்டது... இதுக்குறித்து விவரமாகத் தெரிந்துக்ககொள்ள அழைக்கவும்+919843053572 அல்லது chandr31062@gmail.com

புருனோ Bruno said...

//Anonymous said...

பாவம் எண்டு சொல்லப்பட்டதால் ஒருவேளை அது ஆண் - பெண் குறிகளை குறிக்குமோ?
- ஈழத்து செல்வி, கனடா. //

உங்கள் கேள்விக்கு விடை அடுத்த மறுமொழியில் உள்ளது

நன்றி பாலச்சந்திரன் சார்

இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...