சிடாக் வழங்கும் பாஸ் இயங்குதளத்தை ஒரு குறுந்தகட்டில் தருகிறார்கள்
ஒரு குறுந்தகடு மூலம் இயங்கு தளத்தை வன் தகட்டில் நிறுவலாம். அல்லது மற்றொரு குறுந்தகடு மூலம் இயங்கு தளத்தை வன்தட்டில் நிறுவாமலேயே உபயோகிக்கலாம்.
நான் சோதித்து பார்த்தவரையில் முதல் குறுந்தட்டு மூலம் எளிதாக இயங்கு தளத்தை நிறுவ முடிகிறது. அதே போல் இரண்டாவது குறுந்தகடு சிக்கல் இல்லாமல் இயங்கியது. நெட்வோர்க்கில் இருக்கும் கணினியில் இதை சொருகி ரீபூட் செய்தால் தானாகவே நெட்வோர்க் அமைப்புகளை கண்டுபிடித்து விடுகிறது. எந்த சிரமமும் இல்லாமல் உலாவியில் இணையத்தை மேயலாம்.
ஒரு “குறைந்த பட்ச தேவை மென்பொருள்களுடன்” இயங்குதளம் மூலம் பழைய கணினிகளை இயக்க முடியும் என்று பதிவர் பத்ரி கூறியிருந்தார்
குறுந்தகட்டில் இருந்தே இயங்கும் இயங்குதளத்தை வடிவமைப்பது சிரமம் அல்ல (சிடாக் பாஸ் தளத்தில் இருந்து சில மென்பொருட்களை நீக்கினால் போதும்)
அப்படி ஒரு குறுந்தகட்டில் இருந்தே 128 MB RAM கணினியில் இயங்கும் இயங்குதளத்தை - தமிழ் உள்ளீடும் வசதி, ஒபன் ஆபிஸ், பயர் பாக்ஸ், மெஸஞர் உடன் - யாராவது அளித்தால் கண்டிப்பாக அது மிகப்பெரிய வெற்றி அடையும். ஏனென்றால் அப்படி பட்ட ஒரு இயங்கு தளத்திற்கான சந்தை திறந்தே உள்ளது. கழிக்கப்பட்ட நிலையில் உள்ள பல கணினிகள் (குறைந்த பட்சம் உலாவியகங்களிலாவது) உபயோகிக்கப்படலாம்
ஊதிய சங்கை ஊதி விட்டேன். விரைவில் “வன் தகட்டில் நிறுவாமலேயே கணினியை தமிழில் உபயோகிக்க கூடிய NHM OS" வரும் என்று நினைக்கிறேன்.
:) :) :)
Centre's decision for quota in medical PG not binding on states, says SC
-
http://timesofindia.indiatimes.com/india/Centres-decision-for-quota-in-medical-PG-not-binding-on-states-says-SC/articleshow/5293122.cms
NEW DELHI: In a ru...
23 hours ago





6 மறுமொழிகள்:
நல்ல தகவல்
உலாவகங்களில் லினக்சு வருவதில் இரண்டு பிரச்சினைகள்:
1. மக்கள் பழகிப் போன yahoo, msn IM முகப்புகள் அதில் கிடைக்கா. Pidgin போன்றவற்றுக்கு மக்கள் பழக வேண்டும்.
2. ஏற்கனவே உள்ள வலைப்படக்கருவிகள் லினக்சுக்கு இயங்க வேண்டும். Pidgin அல்லது பெரும்பாலான லினக்சு அரட்டை மென்பொருள்கள் இன்னும் விண்டோசு அரட்டை மென்பொருள்களுடன் ஒத்தியங்கவில்லை :(
Open officeஏ பளுவானது. abi word போன்றவற்றைச் சேர்க்கலாம்.
**
உலாவியகமா உலாவகமா? உலாவி = browser?
நல்ல தகவல்.
முடளிகண்ணன், வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
தமிழ்சினிமா
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
//உலாவியகமா உலாவகமா? உலாவி = browser?//
சரி, உலாவகம் !!
Post a Comment