இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Saturday, July 26, 2008

தீப்பெட்டி தொழிற்சாலையில் இருந்து கல்லூரிக்கு செல்ல உதவி தேவை

இந்து நாளிதழின் செய்தி

தற்பொழுது ஆங்கிலத்தில் - விரைவில் தமிழிலும் பதிவிடுகிறேன்

Dalit girl’s dream of becoming a doctor under threat P. Sudhakar

TIRUNELVELI: A Dalit girl’s dream of becoming a doctor is under threat since her family working in a fireworks manufacturing unit near Sattur is unable to pay the fee though she has secured a seat in the Tuticorin Medical College on merit.

When M. Jeeva, a school teacher came to know that J. Selvi of Achchankulam near Panaiyadipatti in Sivakasi taluk has scored 1,078 marks in Plus Two in March 2008, she asked her to apply for MBBS since her cut off mark for medicine is 189.

Fearing ‘financial burden on her parents due to her higher studies’, she refused immediately and prepared to join one of the fireworks manufacturing unit close to her village to augment the family’s income.

However, Ms. Jeeva discussed her case with her husband Michael Raj, Station Master of Sattur Railway Station, who asked his son to buy an application for Ms. Selvi. With the help of D. Aram, State president of Doctors’ Association for Social Equality (DASE) and doctor in Sattur Government Hospital, he convinced the poor girl and persuaded her to apply for MBBS.

Help from doctors

“When she went to Chennai for counselling, a group of budding doctors from Madras Medical College helped Ms. Selvi, who got a seat in Tuticorin Medical College on merit,” said Dr. Aram.

Ms. Selvi’s father R. Jayaraj, who has to feed the family of five members with his monthly salary of Rs.1,300, initially was not in a mood to admit her in I MBBS. However, the girl’s sustained persuasion forced him to get a loan from a moneylender and admit her in the I year of MBBS.

“Now he is worried about the impending expenditure on books, hostel fee, clothe etc. and seeking assistance from philanthropists,” Dr. Aram said.

Those who want to help Ms. Selvi may contact Dr. Aram at 94432 44633.

செய்தியை மொழிபெயர்க்க நேரமில்லாததால் தற்பொழுது அப்படியே பதிகிறேன்.

நான் உங்களின் கவனத்திற்கு அளிக்க விரும்பிய முக்கிய விஷயங்கள்

1. மாணவியின் மதிப்பென் - 94.5 %
2. மாதம் 1300 ரூபாய் ஊதியம உள்ள 5 குழந்தைகள் உள்ள ஒரு குடும்பத்தில் உள்ள ஒரு குழந்தை 94.5 சதம் மதிப்பெண் பெரும் வகையில் நமது கல்வித்துறை செயல்படுகிறது

3. தமிழக அரசின் கல்வி சார் திட்டங்களான இலவச கல்வி, இலவச புத்தகங்கள், இலவச பேரூந்து பயனம், இலவ்ச மிதிவண்டி, இலவச மதிய சத்துனவு எல்லாம் வீண் என்று கருத்து கூறியவர்களின் முகத்தை காண ஆசை

வேண்டுகோள் 1 : மாணவி செல்விக்கு உதவ விரும்பும் நல்ல உள்ளங்கள் (நூறு ரூபார் மணியார்டர் கூட உதவிதான்) தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : 94432 44633 (Dr. Aram).

வேண்டுகோள் 2 : என் வேண்டுகோளை, மீள் பதிவாகவோ, தொடர் மின்னஞ்சலாகவோ செய்யவும். (புகைப்படங்கள், சர்தார் நகைச்சுவைகள் என்று நாம் அனுப்பும் தொடர் மின்னஞ்சலுக்கு இடையில் இப்படி ஒரு மின்மடலையும் அனுப்பலாமே)

16 மறுமொழிகள்:

ரவிசங்கர் said...

புருனோ, இலவச தரமான அரசுக் கல்வியின் தேவையை நிச்சயம் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், ஏதோ ஒரு சிலர் கூடுதல் மதிப்பெண்கள் பெறுவது மட்டும் மகிழ்ச்சிக்குரியதா? ஒட்டு மொத்த மாணவர்களின் சராசரி மதிப்பெண்கள் நல்ல விதமாக அமைந்தால் மகிழலாம்.

இந்தப் பையனுக்கு சொல்லிக் கொடுத்த மாதிரி தான் எல்லாருக்கும் சொல்லிக் கொடுத்தாங்க..பசங்க படிக்க ஆர்வம் காட்டாட்டி ஆசிரியருங்க என்ன பண்ணுவாங்கன்னும் நினைக்கத் தோணுது. காசு கட்டி வாங்கும் பொருளை நாம் வீணாக்குவதில்லை. அது மாதிரி காசு கட்டி தனியார் பள்ளிகளில் சேர்வோர், அந்தக் காசுக்காகவேனும் படிக்கச் சொல்லி பெற்றோர் உள்ளிட்டோரால் தூண்டுப்படுகிறார்கள் / கட்டாயப்படுத்தப்படுகிறார்களோ?

enRenRum-anbudan.BALA said...

I will re-post this in my blog, it might help !

//2. மாதம் 1300 ரூபாய் ஊதியம உள்ள 5 குழந்தைகள் உள்ள ஒரு குடும்பத்தில் உள்ள ஒரு குழந்தை 94.5 சதம் மதிப்பெண் பெரும் வகையில் நமது கல்வித்துறை செயல்படுகிறது
//
என்ன சொல்ல வருகிறீர்கள் ? Unable to get your point !

//3. தமிழக அரசின் கல்வி சார் திட்டங்களான இலவச கல்வி, இலவச புத்தகங்கள், இலவச பேரூந்து பயனம், இலவ்ச மிதிவண்டி, இலவச மதிய சத்துனவு எல்லாம் வீண் என்று கருத்து கூறியவர்களின் முகத்தை காண ஆசை
//

கல்விக்காக அரசு தரும் எல்லா இலவசங்களூம் சரியே, இந்த கலர் டிவி போன்ற உருப்படாத விஷயங்களில் பணத்தைக் கொட்டுவது தான் atrocious ! So, you may not want to look at my face :)

தமிழ்சினிமா said...

என்னால் முடிந்த அளவில் நண்பர்களுக்கு மெயில் அனுப்பி இருக்கிறேன். அத்தோடு நிறுத்தாமல் வலைத்தளத்திலும் இச்செய்தியை போட்டாச்சு
வலை முகவரி
http://nellaitamil.com

புருனோ Bruno said...

//ஆனால், ஏதோ ஒரு சிலர் கூடுதல் மதிப்பெண்கள் பெறுவது மட்டும் மகிழ்ச்சிக்குரியதா?//

அப்படியில்லை ரவி. இலவச கல்வி இல்லையென்றால் இந்த பெண் படித்தேஇருக்கமாட்டாள் என்பது மைய கருத்து

புருனோ Bruno said...

//பசங்க படிக்க ஆர்வம் காட்டாட்டி ஆசிரியருங்க என்ன பண்ணுவாங்கன்னும் நினைக்கத் தோணுது. //

உண்மைதான். ஆனால் நான் கூறவந்தது அதுவல்ல. நான் கூறவந்தது என்னவென்றால் படிக்க நினைக்கும் மாணவன் / மாணவி படிப்பதற்கு நம் அரசு போதிய ஏற்பாடுகளை செய்கிறது என்பதை வலியுருத்தத்தான்

புருனோ Bruno said...

//காசு கட்டி தனியார் பள்ளிகளில் சேர்வோர், அந்தக் காசுக்காகவேனும் படிக்கச் சொல்லி பெற்றோர் உள்ளிட்டோரால் தூண்டுப்படுகிறார்கள் / கட்டாயப்படுத்தப்படுகிறார்களோ?//

இது உண்மை.

அரசு பள்ளிகள் “நூறு சதவிதம் தேர்ச்சி” பெறாமல் இருப்பதற்கு நீங்கள் கூறியது முக்கிய காரணம்தான்

புருனோ Bruno said...

////2. மாதம் 1300 ரூபாய் ஊதியம உள்ள 5 குழந்தைகள் உள்ள ஒரு குடும்பத்தில் உள்ள ஒரு குழந்தை 94.5 சதம் மதிப்பெண் பெரும் வகையில் நமது கல்வித்துறை செயல்படுகிறது
//
என்ன சொல்ல வருகிறீர்கள் ? Unable to get your point !//

மாதம் 6000 ரூபாய் ஊதியம் பெறும் ஒரு ஆசிரியர் அல்லது வங்கி ஊழியரின் குழந்தை அந்த பள்ளியில் படித்தால் 99% சதம் பெற முடியும் :) :)

வீட்டில் இருந்து உதவி பெறாமலேயே ஒரு குழந்தையை 94.5 சதம் ம்திப்பெண் பெற வைத்த அந்த பள்ளி ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்

புருனோ Bruno said...

//கல்விக்காக அரசு தரும் எல்லா இலவசங்களூம் சரியே,//

ஐயா சாமி,

நான் சொன்னது அதை மட்டும் தான்.

:) :) :)

புருனோ Bruno said...

//என்னால் முடிந்த அளவில் நண்பர்களுக்கு மெயில் அனுப்பி இருக்கிறேன். அத்தோடு நிறுத்தாமல் வலைத்தளத்திலும் இச்செய்தியை போட்டாச்சு//
நன்றி சார்

புருனோ Bruno said...

//என்னால் முடிந்த அளவில் நண்பர்களுக்கு மெயில் அனுப்பி இருக்கிறேன். அத்தோடு நிறுத்தாமல் வலைத்தளத்திலும் இச்செய்தியை போட்டாச்சு//

உதவி செய்ய விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள தொலைபேசி எண் அளித்தீர்கள் தானே ?? :)

முரளிகண்ணன் said...

மணிஆர்டர் செய்கிறேன்

ரவிசங்கர் said...

அரசு பள்ளிக் கல்விக்குத் தரும் இலவசங்களையும் யாராவது எங்காவது நொட்டை சொல்லிக் கொண்டிருந்தால் தொடுப்பு தரவும் :)

புருனோ Bruno said...

//அரசு பள்ளிக் கல்விக்குத் தரும் இலவசங்களையும் யாராவது எங்காவது நொட்டை சொல்லிக் கொண்டிருந்தால் தொடுப்பு தரவும் :)//

எங்காவது மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிக்கூடத்தை கண்டுபிடித்து. 20 மாணவர்கள், இரு ஆசிரியர்கள். வரி பணம். நம் பணம் வீணாகிறது என்ற சில பத்திரிகைகளின் புலம்பலை படித்ததில்லையா.

அந்த புலம்பலில் மையக்கருத்து - கிராமப்புற மாணவர்களுக்கு கிடைக்கும் கல்வியை தடுக்க வேண்டும். அவர்களை எழுத்தறிவில்லாதவர்களாக (திரும்பவும்) ஆக்க வேண்டும் என்பது தானே

எனது பழைய பதிவு ஒன்றில் இதை கோடிட்டு காட்டியிருந்தேன்

பள்ளி மூடப்படுவதற்கு காரணம் "50 மாணவர்களுக்கு 3 ஆசிரியர்கள்" என்று "துப்பறிந்து" எழுதும் ஊடகங்கள் (என் வரிப்பணம் வீணாகிறது என்று சில அறிவு ஜீவிகளின் புலம்பல் வேறு கட்டாயம் அந்த கட்டுரையுடன் பெட்டி செய்தி யாக இருக்கும்).... கிராமப்புற மாணவன் படிக்க கூடாது என்று உள்நோக்கமே இது "வரி வீனாகிறது" கட்டுரையாக வருகிறது என்பது என் கருத்து. உங்கள் கருத்து என்ன ?. மாடு மேய்த்துக்கொன்டிருந்தவனை சாப்பாடு போட்டு பள்ளிக்கு அழைத்த காலம் போய், இன்று பள்ளிக்கு வருபவனை பள்ளியை மூடி விட்டு அடுத்த ஊருக்கு போ என்றால் அதன் விளைவு என்னவாக இருக்கும் ??

Naresh Kumar said...

புருனோ அவர்களுக்கு,

இந்தப் பெண்ணுக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்க வாய்ப்பில்லையா? என்னதான் நாம் உதவி செய்தாலும் அது அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யுமா என தெரியவில்லை. அதே சமயம் ஸ்காலர்ஷிப் அதற்கான தீர்வாக அமையவும் வாய்ப்பிருக்கிறது.

எது எப்படியோ இது போன்ற நிகழ்வுகளைப் படிக்கும் போதுதான் மகிழ்ச்சி, நிம்மதி, நம்பிக்கை, மனிதாபிமானம் போன்ற பல உணர்வுகளுக்கு வழிகோலுகிறது.

புருனோ Bruno said...

//இந்தப் பெண்ணுக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்க வாய்ப்பில்லையா? என்னதான் நாம் உதவி செய்தாலும் அது அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யுமா என தெரியவில்லை. அதே சமயம் ஸ்காலர்ஷிப் அதற்கான தீர்வாக அமையவும் வாய்ப்பிருக்கிறது.//

கல்வி உதவி தொகை என்பது கல்வி செலவில் ஒரு பகுதியே ஆகும். கல்வி கட்டணம் மட்டுமே அளிக்கப்படுகிறது.

கல்வி செலவு என்பது

1. கல்வி கட்டணம்
2. விடுதி கட்டணம்
3. விடுதி உணவக கட்டணம்
4. புத்தகங்கள், பேனா, இதர எழுதுபொருட்கள்
5. உடைகள்
6. வீட்டிற்கு சென்று வரும் செலவு

என்று பல வகைப்படும்

bharath said...

கண்டிப்பாக என்னால் முடிந்ததை செய்கிறேன்.

//கல்வி கட்டணம்
2. விடுதி கட்டணம்
3. விடுதி உணவக கட்டணம்
4. புத்தகங்கள், பேனா, இதர எழுதுபொருட்கள்
5. உடைகள்
6. வீட்டிற்கு சென்று வரும் செலவு
//

மிகச் சரியாக பட்டியலிட்டுள்ளீர்கள்.. அறக்கட்டளைகள் மூலம் இதற்கான உதவித்தொகை கிடைக்க வழியுள்ளதா? தங்களைப்போல் விவரமரிந்தவர்கள் இதற்கான வழிமுறைகளை அவர்களுக்கு விளக்க வேண்டுகிறேன்.

//2. மாதம் 1300 ரூபாய் ஊதியம உள்ள 5 குழந்தைகள் உள்ள ஒரு குடும்பத்தில் உள்ள ஒரு குழந்தை 94.5 சதம் மதிப்பெண் பெரும் வகையில் நமது கல்வித்துறை செயல்படுகிறது
//

I feel this case is an "exception" rather than a norm. There is a long way to go in this regard.


//3. தமிழக அரசின் கல்வி சார் திட்டங்களான இலவச கல்வி, இலவச புத்தகங்கள், இலவச பேரூந்து பயனம், இலவ்ச மிதிவண்டி, இலவச மதிய சத்துனவு எல்லாம் வீண் என்று கருத்து கூறியவர்களின் முகத்தை காண ஆசை//

so far i have not come across anybody who feels this way. If so it has to be strongly countered..

இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...