அதுவும் தமிழகத்தில் 95% பிற்படுத்தப்பட்டவர்களால் நடத்தப்படும் பிற்படுத்தோர் துறையில் "இடஒதுக்கீடு சாதிச்சான்றிதழ்" அமோகமாக விற்பனை செய்யப்படுவது பிற்படுத்தப்பட்டோர்களால் தான் என்பதும் தங்களுக்குத் தெரிந்ததே!சாதி சான்றிதழ் அளிப்பது எந்த துறை என்று கூட தெரியாமல், அதை தெரிந்து கொள்ள கூட முயற்சிக்காமல், இது போன்ற தவறான தகவல்களை பரப்புவது வருத்தமளிக்கிறது.
இது போல் அனைவருக்கும் தெரிந்த விஷயங்களிலேயே பொய்யை உண்மை போல் எழுதினால் பதிவர்கள் நடுவில் நம்பகத்தன்மை குறையும் என்பது என் கருத்து.
இடப்பங்கீட்டை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக பொய்களையும் தவறான செய்திகளையும் தொடர்ந்து பரப்புவதை பதிவர் ஹரிஹரன் போன்றவர்கள் நிறுத்தி, உண்மையை எழுதுவார்கள் என்று நம்புவோம்
சரி, தமிழகத்தில் சாதி சான்றிதழ் அளிக்கும் துறை எது - தமிழக அரசின் வருவாய் துறை.
வருவாய் துறையினர் அளிக்கும் சான்றிதழ்கள் எவை
- சாதி சான்றிதழ் Community Certificate
- பிறப்பிட / இருப்பிட சான்றிதழ் Nativity / Residential Certificate
- வருமான சான்றிதழ் Income Certificate
- குடியுரிமை சான்றிதழ் Nationality Certificate
- வாரிசு சான்றிதழ் Legal Heirship Certificate
- கடன் தீர் ஆற்றல் சான்றிதழ் Solvency Certificate
- பிறப்பு சான்றிதழ் இறப்பு சான்றிதழ் Birth and Death Certificate
- ஆதரவற்ற குழந்தைகளுக்கான சான்றிதழ் Certificate for Destitute Children
- ஆதரவற்ற விதவைகளுக்கான சான்றிதழ் Destitute Widow Certificate
- சாதி மறுப்பு திருமண சான்றிதழ் Inter-Caste Marriage Certificate
- பள்ளி சான்றிதழ்கள் தொலைந்தற்கான சான்றிதழ் Certificate for the loss of School Certificate
- கைவிடப்பட்ட சான்றிதழ் Deserted Women Certificate
அடுத்த இடுகை : தமிழக அரசு கல்வி நிலையங்களில் போல் சாதி சான்றிதழ்களை எப்படி கண்டுபிடிக்கிறார்கள்





26 மறுமொழிகள்:
:)
ஐயா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்..
95% பிற்படுத்தப்பட்டோர் வருவாய் துறையில் வேலை பார்க்கிறார்களா....?
"1979-80 களில், அராங்க பதவிகளில் பி.ப : 15.5%, பழ. : 18.71% , உயர். : 68.74 %
2004 , அராங்க பதவிகளில் பி.ப : 4.51%, பழ. : 24.96% , உயர். : 70.53%"
எனவே சும்மாக்காச்சிக்கும் அரசாங்க வேலைகளில் பிற்படுத்தப்பட்டோர் 95% என்றால், அது எந்த பிரிவு என்று தெரிந்துக் கொள்ள ஆவலாக இருக்கின்றேன்..
காசை வாங்கிக்கொண்டு வேலை செய்பவர்கள் அனைவருமே பிற்போக்கானவர்களே!
கடமையைக் கண்ணாகக் கருதி வேலை செய்பவர்கள் அனைவரும் முற்போக்கானவர்கள்!
அவர்கள் எந்த சாதியை அல்லது பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி!
ஆனால் இன்று நாட்டில் காசுதான்/பணம்தான்/லஞ்சம்தான் எல்லாவற்றையுமே
நிர்வகிக்கின்றது. அது நீங்கள் சொன்ன சதவிகிதத்தில் (95%) நிச்சயம் இருக்கும்!
பணம் கிடைக்கிறது என்னும் போது, இன்றைய மனிதன் எதையுமே பார்க்க மாட்டான்
அதுதான் சோகம்! அதுதான் நமது நாட்டைப் பிடித்துள்ள கேடு!
லஞ்ச லாவண்யத்தில் இருந்து நமக்கு சுதந்திரம் வாங்கித்தர நமக்கு இன்னொரு மகாத்மா வேண்டும்!
கிடைப்பாரா?
//எனவே சும்மாக்காச்சிக்கும் அரசாங்க வேலைகளில் பிற்படுத்தப்பட்டோர் 95% என்றால், அது எந்த பிரிவு என்று தெரிந்துக் கொள்ள ஆவலாக இருக்கின்றேன்..//
நானும் தான்.
ஹரிஹரன் ஐயாவின் பதில் தான் எதிர்பார்க்க படுகிறது
//லஞ்ச லாவண்யத்தில் இருந்து நமக்கு சுதந்திரம் வாங்கித்தர நமக்கு இன்னொரு மகாத்மா வேண்டும்!
கிடைப்பாரா?//
உண்மைதான் ஐயா.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கான சான்றிதழினை வட்டாட்சியரும் (Tahsildar) தாழ்த்தப்பட்டவர்களுக்கான சான்றிதழினை கோட்டாட்சியரும் (RDO) வழங்க வேண்டும். இருவரும் வருவாய் துறையை (Revenue) சார்ந்தவர்கள்.
வருக வக்கீல் சார்,
பழங்குடியினருக்கு சான்றிதழ் வழங்க வேண்டியது மாவட்ட ஆட்சித்தலைவரா ???
கல்வி நிலையங்களிலோ அல்லது வேலையிடங்களிலோ அளிக்கப்படும் தாழ்த்தப்பட்டவர்களுக்கான சான்றிதழ் random முறையில் மாவட்ட அளவிலான அல்லது மாநில அளவிலான குழுவினால் ஆராயப்படும். ஏதும் புகார் செய்யப்பட்டாலும் ஆராயப்படும்.
ஆனால், பிற்ப்படுத்தப்பட்டவர் என்று போலி சான்றிதழ் பெறுவதில் ரிஸ்க் எடுக்கும் அளவிற்கு பலன் அவ்வளவு இல்லையென்பதால் புகார் வந்தால் மட்டுமே ஆராயப்படுகின்றன.
இல்லை கோட்டாட்சியரே வழங்கலாம். 1989க்கு முன்பு அனைத்தும் வட்டாட்சியராலேயே வழங்கப்பட்டது.
உபயோகமான தகவல்களுக்கு நன்றி வக்கீல் சார்
ஆனால், பிற்ப்படுத்தப்பட்டவர் என்று போலி சான்றிதழ் பெறுவதில் ரிஸ்க் எடுக்கும் அளவிற்கு பலன் அவ்வளவு இல்லையென்பதால் புகார் வந்தால் மட்டுமே ஆராயப்படுகின்றன
புரியவில்லை, விளக்கவும்.
தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு இருக்கிறது. ஆனால் பல துறைகளில்
பிற்பட்டோர்/மிகவும் பிற்பட்டோர்/
தாழ்த்தப்பட்டோர் எண்ணிக்கை 90%
அளவில் இருக்கிறது. சில துறைகளில் இன்னும் அதிகமாகவே இருக்கலாம்.
சுரேஷ்குமார் இந்திரஜித் சில ஆண்டுகளுக்கு முன் உயிர்மையில்
எழுதிய கட்டுரையில் சில துறைகளில்
இடஒதுக்கீட்டின் கீழ் வராதோர் எண்ணிக்கை மிகவும் குறைவு
என்று குறிப்பிட்டார்.எனவே
95% என்பது சற்றே மிகை என்று
கொண்டாலும் அது 85% ஆக இருக்க
அதிக வாய்ப்புண்டு.
டிபிசிடி குறிப்பிடுவது மத்திய அரசின்
புள்ளிவிபரம்.அதுவே எந்த அளவு சரி
என்பதை ஆராய வேண்டும்.ஏனெனில்
1992 முதல் 27% இட ஒதுக்கீடு உள்ளது. தமிழக மாநில அரசுப் பணிகளில் நிலை வேறு. இங்கு
'முற்பட்ட' சாதியினர் சிறுபான்மையினர், எண்ணிக்கை,
அதிகாரத்தில் என இரண்டிலும்.
//சில துறைகளில்
இடஒதுக்கீட்டின் கீழ் வராதோர் எண்ணிக்கை மிகவும் குறைவு
என்று குறிப்பிட்டார்.//
இது தவறான கருத்து
எந்த துறை என்றாலும் இடப்ப்ங்கீட்டின் கீழ் வராதவர்கள் எண்ணிக்கை 31 சத்விதம்
அனானி,
உங்களின் மனநிலை என்னவென்பதை உங்கள் மறுமொழி தெளிவாக கூறிவிட்டது.
நன்றி
இங்கு நல்ல விவாதம் நடந்துகொண்டிருப்பதால் உங்களின் விவாதத்திற்கு தொடர்பில்லாத மறுமொழி நீக்கப்படுகிறது
அனானி 2
உங்களின் மறுமொழிக்கு நன்றி
200 ரூபாய் கொடுத்தால் செத்துப் போனவரின் பெயரில்கூட சாதி சான்றிதழ் தாராளமாகக் கிடைக்கும்.. கையெழுத்திட்டுத் தருபவர் முகத்தை ஏறெடுத்து கூட பார்க்க மாட்டார்..
இந்த லட்சணத்தில் அரசுத் தரப்புகள் சொல்லும் புள்ளி விவரங்களில் எத்தனை எத்தனை லஞ்சம் கொடுத்து முறைகேடாக வாங்கப்பட்டது என்பதனை யார் அறிவர்..?
பாதிக்குப் பாதி பொய்யாகத்தான் இருக்கும். அரசு சொல்லும் சதவிகிதக் கணக்கில் பாதியைக் குறைத்துவிட்டு மதிப்பிடுங்கள்.. அதுதான் உண்மையாக இருக்கும்..
ஹரிஹரன் கொஞ்சம் சூடாகிவிட்டார் போலும்.
வாங்க உண்மைத் தமிழன் அண்ணா
//ஹரிஹரன் கொஞ்சம் சூடாகிவிட்டார் போலும்.//
அது தான் அவரை சாந்தப்படுத்துகிறோம்
2007 ல் நடந்த பல்வேறு இடஒதுக்கீடு விவாதங்களில் கரிகரன் கடைசியில் சொல்கிற ஒரே காரணம் என்னை தனிமனித தாக்குதல் நடத்தினார்கள் என்று அழுகாச்சி நாடகம் நடத்துவார்! அவருக்கு என்று சில அல்லக்கைகள் அனானியாக வந்து ஜிங்சாங் அடிப்பார்கள் :)
தொடர்ந்து ஒவ்வொரு செய்தியையும் எடுத்து கரிகரனை அம்பலப்படுத்துவதற்கு வாழ்த்துகள்!
நிற்க,
ஒரு சிறிய விளக்கம்...
பிறப்பு சான்றிதழ் இறப்பு சான்றிதழ் Birth and Death Certificate.
இந்த சான்றிதழ் மட்டும் சில எளிய முறையில் வாங்க முடியும்.
1. அரசு மருத்துவமனையில் பிறப்போ அல்லது இறப்போ நடந்தால் அந்த மருத்துவமனையிலே இந்த சான்றிதழ் வழங்க முடியும்.
2. நகராட்சிக்கு உட்பட்டவர்கள்... எப்பொழுது வேண்டுமானாலும் அந்தந்த நகராட்சி அலுவலகத்திலேயே விண்ணபித்து வாங்கிக்கொள்ளலாம்!
ஒன்றியங்கள், கிராமபஞ்சாயத்துகளில் இருப்பவர்கள் மட்டுமே வருவாய்துறை அலுவலகத்துக்கு சென்று வாங்க வேண்டி வரும்.
இதை தவிர நீங்கள் குறிப்பிட்ட சான்றிதழ்களில்
1. சாதி சான்றிதழ்
2. வருவாய் சான்றிதழ்
இவை இரண்டும் முறையாக கிராம நிர்வாக அலுவலர் (VAO) அவர்களிடம் ஒப்பம் வாங்கிய பின்பே, குறிப்பிட்ட வருவாய்துறை அலுவலகத்தில் விண்ணபிக்க முடியும்.
நன்றி
'//சில துறைகளில்
இடஒதுக்கீட்டின் கீழ் வராதோர் எண்ணிக்கை மிகவும் குறைவு
என்று குறிப்பிட்டார்.//
இது தவறான கருத்து
எந்த துறை என்றாலும் இடப்ப்ங்கீட்டின் கீழ் வராதவர்கள் எண்ணிக்கை 31 சத்விதம்'
கூற வந்தது இதுதான் 31% இடங்களிலும் மிகப் பெரும்பான்மையாக இருப்பது
இடஒதுக்கீட்டின் கீழ் வரும் பிரிவினர்.
சில வாரங்களுக்கு முன் வீரமணி
(திராவிடர் கழகம்) 1972ல் தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்ட 412 பேருக்கு ஒய்வுதியத்தில் உள்ள சில
சிக்கல்களை தீர்த்து அவர்களுக்கு
பிற அரசு ஊழியர் போல் முழு
ஓய்வூதியம் தரப்பட வேண்டும்
என்று கோரினார். அவர் சொன்னது
இதில் பார்ப்பனர்கள் யாரும் இல்லை.
அவர்கள் பால்வளத்துறையில்
நியமிக்கப்பட்டவர்கள்.
400த்து சொச்சம் பேரில் பார்ப்பனர்
யாரும் இல்லாத நிலை 1970களில்
இருந்ததென்றால் இன்று 95% SC/ST/
OBC/BC ஆக இருக்க வாய்ப்புகள் அதிகம்.
இதை ஒட்டியே நானும் ஒரு பதிவு எழுதி உள்ளேன்.
பதிவர் பாரி.அரசு,
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி,
நீங்கள் கூறியபடியே தான் இங்கும் நடந்து வருகிறது.
--
//1. அரசு மருத்துவமனையில் பிறப்போ அல்லது இறப்போ நடந்தால் அந்த மருத்துவமனையிலே இந்த சான்றிதழ் வழங்க முடியும்.//
இந்த வசதி தற்பொழுது சில மருத்துவமனைகளில் தான் இருக்கிறது. விரைவில் அனைத்து மருத்துவமனைகளுக்கும் விரிவு படுத்தப்படும்
தற்பொழுது வருவாய் துறையினர் அளிக்கும் சான்றிதழை மருத்துவத்துறையினர் பெற்று அளித்து வருகிறார்கள்
அனானி,
நீங்களே கூறிவிட்டீர்கள் அவர்கள் முறையாக தேர்வு செய்யப்படவில்லை. அவர்கள் அரசு ஊழியர் இல்லையென்று.
பிறகு எதற்கு சப்பைக்கட்டு.
பதிவர் ஹரிஹரனே முதலில் 95 என்று ஆரம்பித்தவர், ஆதாரம் கேட்டவுடன் அளிக்க முடியாமல், பிறகு நாங்கள் ஆதாரம் கேட்டவுடன் தனது நிலையை மாற்றிக்கொண்டுவிட்டு முதலில் எழுதியதற்கு மாறாக வேறு தகவல்களை தருகிறார்
அதெல்லாம் இருக்கட்டும் டாக்டர் ,
மிகவும் பிற்படுத்தப்பட்ட சான்றிதல்களில் எத்தனை சதம் உண்மையானவை ?
இட ஒதுக்கீடு சரியாகத்தான் போய் சேர்கிறதா ?
இதே ஒதுக்கீட்டுக்குள் முதல் தலைமுறைக்கும் , பொருளாதார அளவுகோலுக்கு முன்னுருமை கொடுப்ப்பது சரியா தவறா ?
//இதை ஒட்டியே நானும் ஒரு பதிவு எழுதி உள்ளேன்.//
படித்தேன். நல்ல கருத்து.
மிகவும் பிற்படுத்தப்பட்ட சான்றிதல்களில் எத்தனை சதம் உண்மையானவை ?//
இன்போசிஸ், ஐ.ஐ.டி, ஏ.ஐ.ஐ.எம்.எஸ் ஆகியவற்றில் திறமையால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் சதவிதத்தை விட அதிகம்
//இட ஒதுக்கீடு சரியாகத்தான் போய் சேர்கிறதா ?//
சேர்ந்ததால் தான் தமிழகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இடப்பங்கீடு குறித்து நான் எழுதிய இடுகைகளில் போதிய ஆதாரம் அளித்திருக்கிறேன்
//இதே ஒதுக்கீட்டுக்குள் முதல் தலைமுறைக்கும் , பொருளாதார அளவுகோலுக்கு முன்னுருமை கொடுப்ப்பது சரியா தவறா ? //
உங்கள் கேள்விகளுக்கு ஏற்கனவே விடையளிக்கப்பட்டுள்ளது
இடப்பங்கீடு குறித்து நான் எழுதிய இடுகைகளில் பதில் உள்ளது
*****மிகவும் பிற்படுத்தப்பட்ட சான்றிதல்களில் எத்தனை சதம் உண்மையானவை ?//
இன்போசிஸ், ஐ.ஐ.டி, ஏ.ஐ.ஐ.எம்.எஸ் ஆகியவற்றில் திறமையால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் சதவிதத்தை விட அதிகம்*****
நீங்க நாராயணமூர்த்தி மற்றும் இன்போசிஸ்ச விடறா மாதிரி இல்ல.
உஙகள் பார்வைக்கு.
http://kudukuduppai.blogspot.com/2008/08/blog-post_18.html
Post a Comment