இந்த இடுகைத்தொடர் சிறந்த இடுகையாக தமிழ் மொழி, கலாச்சாரம், வரலாறு, தொல்லியல் பிரிவில் 2008ஆம் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டது
இடம் : முதலிடம்
-oOo-
இன்றைய இந்து நாளிதழில் வந்த தமிழ் வழிக்கல்விக்கு எதிரான கட்டுரை ஒன்று என்னை பயங்கரமாக் கடுப்பேற்றி விட்டது. தவறான தகவல்களுடன் கட்டுரைகளை எழுதுவது துப்பறியும் இதழ்கள் மட்டும் தான் என்ற நிலையிலிருந்து சமிப காலங்களில் தினசரிகள் கூடநினைத்தை எல்லாம் எழுதும் போக்கு அதிகரித்து வருகிறது. சமீபத்திய உதாரணம் வன்முறை தடுப்பு சட்டம் குறித்து நேற்று திணமனியின் வந்த தவறான தலையங்கம் அதை விட இன்றைய இந்து கட்டுரை வருத்தமளிக்கக்கூடியதாக உள்ளது.
கட்டுரையின் சில “அரிய” கருத்துக்களும், அதற்கு என் விளக்கம் / கருத்துகளும் கீழ் உள்ளது. முழு கட்டுரையையும் தமிழ் படுத்தாததாலும் எனது மொழி மாற்றததால் கருத்து மாற வாய்ப்பு உள்ளதாலும் ஆங்கில வரிகளையும் சேர்த்து அளித்திருக்கிறேன்
பள்ளி படிப்பு சவாலாகும் இந்த கால கட்டத்தில் மாணவர்களுக்கு மேலும் ஒரு சவால் - மொழி (At a time when school education has become quite demanding, students with Tamil as the medium of instruction seem to be having an additional challenge – that of language.)தமிழ் கற்பது பாரமாம். ம்ம்ம்ம்ம்
பேச்சு தமிழும் எழுத்து தமிழும் வேறு என்பதால் மாணவர்கள் புரிந்து கொள்ள கஷ்டப்படுகிறார்கள் என்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள் (Since spoken Tamil is considerably different from formal, written, Tamil, understanding concepts becomes difficult, say teachers.)அப்படியா. ஆசிரியர்கள் தானே கூறுகிறார்கள். யாராவது மாணவர்களிடம் கேட்க வேண்டியது தானே
புவி ஈர்ப்பு சக்தி போன்ற சொற்கள் பேச்சு தமிழில் உபயோகிக்கப்படுவது இல்லை. (“Words such as puvi eerpu sakthi (gravity) are hardly used in conversational Tamil. Scholars perhaps use it while delivering a formal speech. Otherwise, our spoken Tamil is largely different from what the child reads in textbooks,” says the teacher of a Corporation school. )இது குறித்து பதிவர் பத்ரி தனது பதிவில் ஒரு அருமையான கேள்வி கேட்டுள்ளார் “எதைச் சொல்லி அழ? (“புவி ஈர்ப்பு விசை”) இதில் எது கஷ்டம்? புவியா, ஈர்ப்பா, சக்தி அல்லது விசையா? அனைத்தும் தினசரிப்புழக்கத்தில் உள்ளவைதானே? புவியியல் என்பதுதானே பள்ளிக்கூடப் பாடத்தின் பெயர். “பூமி புட்ச்சு இழுக்கும் ஃபோர்ஸ்” என்று அதற்குப் பெயர் வைக்கவேண்டும் என்றா இந்த ஆசிரியர் விரும்புகிறார்?” அது சரி, கிராவிட்டி என்ற சொல் மட்டும் பேச்சு வழக்கில் உள்ளதா. புதிதாக எந்த சொல்லையும் கற்று தருவதற்கு பள்ளிகளுக்கு தடை எதுவும் உள்ளதா. பேச்சு வழக்கில் உள்ள சொற்களை மட்டும் போதிப்பதற்கு பள்ளி எதற்கு. ஆசிரியர்கள் எதற்கு என்ற கேள்வி எழாமல் இல்லை.
ஆசிரியர்கள் கூட புரிந்து கொள்ள சிரமப்படுகிறார்கள் (“Sometimes, even teachers find it difficult to understand,” she says, on condition of anonymity.)மாணவர்கள் புரிந்து கொள்ள சிரமப்படுகிறார்களா ??
ஆங்கிலம் போன்ற மொழிகளில், பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும் ஒன்றாக இருந்தாலும் அவற்றை தனியாக பார்க்கிறார்கள். (Even for a language such as English, where the written and spoken forms are the same, there is a practice of looking at the two independently. )ஆங்கிலத்தில் வேறு ஒரு பிரச்சனை உண்டு என்பதை இவர்கள் ஏன் மறந்தார்கள். ஆங்கிலத்தில் எழுத்துகளுக்கும் உச்சரிப்பிற்கும் சம்மந்தம் கிடையாதே
ஒரே எழுத்துக்கள் / ஒரே வார்த்தை பல முறைக்ளில் உச்சரிக்கப்பட வேண்டும். (the aeroplance என்பதில் உள்ள theயும் the blog என்பதில் உள்ள theவும் ஒரே போலாகவா உச்சரிக்கப்படவேண்டும். read என்பது ரெட், ரீட் என்று இரு உச்சரிப்பு உள்ளதா இல்லையா) பல வார்த்தைகள் ஒரே போல் உச்சரிக்கப்படும் (red, read இரண்டும் ரெட் தான்) சிக்கலான மொழி தானே ஆங்கிலம். அப்படிபட்ட மொழியா எளிது ?? ஆனால் எழுத்தும் உச்சரிப்பும் ஒரே போல் உள்ள மொழியா தமிழ் கடினமா ?? என்ன கொடுமை சார் இது
ஆனால் தமிழில், இதற்கு வழி கண்டுபிடிக்க வேண்டும் (“But in Tamil, which is more complex, we are yet to find a solution to bridge the gap,” says the headmaster of a government higher secondary school. “Some students assign a colloquial equivalent to the difficult words in order to understand. But the process is cumbersome,” he adds.)மாணவர்களுக்கு பிரச்சனையா அல்லது ஆசிரியர்களுக்கு பிரச்சனையா என்று தான் தெரியவில்லை :) :(
இந்த பிரச்சனை உயர் வகுப்புகளில் பெரிதாகிறது (And the problem, teachers say, gets compounded as the child goes to higher classes. )அடப்பாவி :(
அறிவியல் போன்ற பாடங்களை படிக்க மட்டும் சிரமம் இல்லை. தமிழில் கூட அவர்கள் சிக்கலான பதங்களை கற்ற வேண்டும். வேறு வழியில்லாததால் அவர்கள் மனப்பாடம் செய்கிறார்கள். (“Children find it hard not only while learning subjects such as science. Even in Tamil itself, they have to constantly learn very complex terms. Without any choice, they resort to memorising without any understanding,” says a class VI teacher of a government-aided school in Central Chennai.)இவர்கள் என்ன கூற வருகிறார்கள் என்று புரியவில்லை. திருக்குறளுக்கு தமிழில் அளிக்காமல் ஆங்கிலத்தில் விளக்கம் அளிக்க வேண்டுமா, அல்லது பாட புத்தகத்திலிருந்து அம்மா என்ற சொல்லை நீக்கி விட்டு மம்மி என்று எழுத வேண்டுமா
பேச்சு மற்றும் எழுத்து மொழிகளுக்கு இடையில் உள்ள வித்தியாசம் கற்பதை கடினப்படுத்துகிறது. (The disparity between the spoken and written forms of Tamil could make the learning process more tedious, experts in linguistics agree. Languages with this inequality are categorised as diglossic. The classic form is often used in writing and sometimes, in public speaking. The spoken language, however, is simpler and far more informal. )இருபேச்சு (டைக்கிலாசிகு) மொழிகள் என்று பார்த்தால் அதில் தமிழ் போல் பல மொழிகள் உள்ளன. செந்தமிழ் (எழுத மற்றும் மேடை பேச்சுகளில் உபயோகிப்பது) மற்றும் இயற்தமிழ் (பேச்சு வழக்கு) என்று இரு வகைகள் இருப்பது ஒன்றும் புதிதல்ல.
அந்த கால திரைப்பட வசனங்கள் கூட செந்தமிழ் தான். கல்கியின் எழுத்துக்கள் இயற்தமிழாக (ஆனால் அதே நேரம் இலக்கண சுத்தமாக) இருந்த்தது தான் இன்று கூட பொன்னியின் செல்வனையோ அவரின் (அமரர் கல்கியின் ) பிற எழுத்துக்களையோ படித்தாலும் சலிப்பதில்லை. நமக்கு அவை நேற்று எழுதப்பட்டது போல் தெளிவாக புரிகிறது.
செந்தமிழுக்கும் இயற்தமிழுக்கும் உள்ள வேறு பாடு அனைவரும் அறிந்ததே. செந்தமிழ் என்பது தமிழகம் முழுவதும் ஒன்று தான். பேச்சு தமிழ் என்பது கோவையில் வேறு, சென்னையில் வேறு, மதுரையில் வேறு, நெல்லையில் வேறு, நாகர்கோவிலில் வேறு.
இதில் இது போல் இரண்டு வகை இருப்பதால் மாணவர்கள் கற்க சிரமப்படுகிறார்கள் என்று கூறுவது உச்ச கட்ட நகைச்சுவை. இங்கிலாந்தில் பேசப்படும் ஆங்கிலம் வேறு. அமெரிக்க ஆங்கிலம் வேறு. ஏன் அமெரிக்காவிலேயே கிழக்கில் உள்ள உச்சரிப்பு வேறு. மேற்கில் உள்ள உச்சரிப்பு வேறு. அதனால் அமெரிக்கர்கள் ஆங்கிலத்தை தவிர்த்து விட்டு உலகம் முழுவதும் ஒரே போல் உச்சரிக்கப்படும் , பேசுவதைப்போலவே எழுதப்படும் லத்தீனை மட்டுமே பள்ளிகளில் போதிக்க வேண்டும் என்று ஏதாவது அமெரிக்க ஊடகங்கள் எழுதுகின்றனவா ??.
ஆங்கிலம் போன்ற மொழிகளில் இந்த பிரச்சனை இல்லை. (But for languages such as English, this difference hardly exists.)ஆங்கிலத்தில் உள்ள பிரச்சனை இதை விட பெரிது. அதை நாம் ஏற்கனவே பார்த்து விட்டோம். தமிழில் உள்ள பாடங்களை மனப்பாடம் செய்யும் (வீட்டில் மற்றும் தெருவில் தமிழ் பேசும் சிறார்கள்) ஆங்கிலத்தில் உள்ள பாடங்களை புரிந்து படிப்பார்களா ???
(“While it is very effective when children study through their mother tongue, we should also see how close the written form is to the way a language is spoken,” says N. Deivasundaram, Professor and Director of the Linguistic Studies unit, Department of Tamil Language, University of Madras. This difference is true of most classical languages, he says.)இந்த இந்து கட்டுரையின் முக்கிய குறைபாடுகள்
(“And in Tamil, there are so many regional dialects in spoken form. We have almost arrived at a common spoken form (as is used in films or mainstream). But written Tamil is simple only in mainstream Tamil newspapers and magazines. We need to focus on school textbooks to make learning easier,” he points out.)
(The Tamil Nadu Textbook Corporation is the authorised agency for the printing and supply of textbooks. The content is under the purview of the Directorate of School Education.
When contacted, Director of School Education P. Perumalsamy said the textbook committees were consciously trying to make the content more accessible. “We are trying to use simple language wherever possible. Only the technical terms cannot be simplified in subjects such as science,” he says. )
- மாணவர்களிடம் கேட்காமல் ஆசிரியர்களிடமும், சில “மொழியியல் அறிஞர்களிடமும்” மட்டுமே கருத்து கேட்டு அதை வைத்து முடிவு கட்டுவது
- தமிழின் “இருபேச்சு” பிரச்ச்னையை மட்டும் பிடித்து கொண்டு தொங்கி ஆங்கிலத்தில் உள்ள இதை விட பெரிய பிரச்சனைகளை மறந்தது அல்ல மறைத்தது
- அரசு (மாநகராட்சி) பள்ளிகள், மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை மட்டும் குறிவைத்து எழுதியுள்ளது (இதை உங்களில் எத்தனை பேர் கவனித்தீர்கள் என்று தெரியவில்லை)
பாடம் புரியாததற்கு முக்கிய காரணம் அது நடத்தப்படும் மொழி அல்ல. அதற்கான காரணங்கள்
- காலத்திற்கு ஒப்பாத பாடத்திட்டம்
- மோசமான பாடநூல்
- நடத்த தெரியாத / முடியாத ஆசிரியர்கள்
- கேவலமான தேர்வு முறை
- காலத்திற்கு ஏற்ற பாடத்திட்டம் - 1000 வருடங்களுக்கு முன்னர் நமது இலக்கியங்கள், இதிகாசங்கள் அனைத்தும் த்லைமுறை தலைமுறையாக மன்ப்பாடம் செய்யப்பட்டே காப்பாற்றப்பட்டு வந்தன. எழுதியதை பிரதி எடுப்பதில் (காகிதம் கண்டுபிடிப்பதற்கு முன்) உள்ள நடைமுறை சிரமங்களால் வேதங்கள் முதல் இதிகாசங்கள் வரை அனைத்தும் மனப்பாடம் செய்யப்பட்டே அடுத்த தலைமுறைக்கு வழங்கப்பட்டன. எனவே மனப்பாடம் செய்வது தான் படிப்பதில் முக்கிய விசயம் என்றாகியது. இதனால் தான் மனப்பாடம் செய்யும் திறனுக்கு அதிக முக்கியம் வழங்கப்பட்டு பிற திறன்கள் பின்னுக்கு தள்ளப்பட்டன. இன்று வரை அதே எண்ணதில் கல்வி முறை அமைந்திருப்பது கொடுமை
- சுவாரசியமான தரமான பாடநூல்கள் - பாடநூல்களை சரியாக மட்டும் எழுதினால் போதாது. சுவாரசியமாகவும் எழுத வேண்டும்
- ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி. ஒவ்வொரு வருடமும் குறைந்தது 10 நாட்களாவது ஆசிரியர்களுக்கு மாற்றப்பட்ட பாடத்திட்டம் மற்றும் பிற மாற்றங்கள் குறித்த பயிற்சி கண்டிப்பாக தேவை
- தேர்வு முறை மாற்றம் : மனப்பாடம் செய்யும் திறனை மட்டுமே சோதிக்கும் தேர்வு முறை மாற்றப்பட வேண்டும். அனைத்து திறன்களையும் சோதிக்க வேண்டும்
இன்று பள்ளி கல்வி முடித்து கல்லூரியில் சேரும் மாணவர்களில் 75 சதவிததினருக்கு ஒரு விடுப்பு விண்ணப்பம் கூட முறையாக எழுத தெரியவில்லை என்பது வேதனை தானே (ஆங்கிலத்திலும் எழுத தெரியவில்லை, தமிழிலும் எழுத தெரியவில்லை என்பது கூடுதல் வேதனை)
இதை சரிசெய்வதற்கு ஆயிரம் வழிகள் இருக்க “சில காரனங்களுக்காக” , “சில விளைவுகளை எதிர்நோக்கி” ஊடகங்கள்
எழுதுவது வேதனையளிக்கும் விடயம்.
கல்வி குறித்த எனது முந்தைய இடுகைகள்

108 மறுமொழிகள்:
"தமிழ்" மொழிப்பாடங்களில் சில மாறுதல்கள் கொண்டு வரலாம். தமிழாராய்ச்சி மற்றும் இலக்கிய ஆய்வுகளின் முடிவுகள் பெரும்பாலும் மீண்டும் தமிழ் என்ற மொழிப்பாடத்தினுள்ளேயே புகுத்தப்படுகிறது. அவற்றுள் துறைசார்ந்த முடிவுகளை முன்னிறுத்தும் பாடல்களை விளக்கங்களுடன் துறைசார்ந்த பாடத்திட்டங்களுள் புகுத்தலாம்.
1. இந்த சென்டிமீட்டர் எல்லாம் ஆங்கிலேயர் வந்ததுக்கப்புறம் வந்ததுன்னா, அதுக்கு முன்னடி நாம எப்படி அளந்தோம்? ஏன் நம் நாட்டில் எதுவுமே கண்டுபிடிக்கப்படவில்லையா, எல்லாமே ஆங்கிலேயர் வகுத்துக்கொடுத்ததுதானா?
2. இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் எதுவும் என்னால் என்னைச் சுற்றிப்பார்க்க முடியவில்லையே ஏன்?
3. இந்தியாதான் 1947 ல் சுதந்திரம் வாங்கிடுச்சே அதுக்கப்புறம் இன்னியவரைக்கும், இந்தியாவில் என்ன நடந்ததுன்னு ஏன் எந்த புத்தகத்திலயும் போடறதில்லை?
மேற்குறிப்பிட்டுள்ள கேள்விகளுக்கு சொந்தமானவர் தமிழ்வழியில் கல்வி பயிலும் ஒரு ஐந்தாம் வகுப்புச் சிறுமி.
மிகவும் அருமையான மற்றும் தேவையான இடுகை டாக்டர். புருனோ.
//1. இந்த சென்டிமீட்டர் எல்லாம் ஆங்கிலேயர் வந்ததுக்கப்புறம் வந்ததுன்னா, அதுக்கு முன்னடி நாம எப்படி அளந்தோம்? ஏன் நம் நாட்டில் எதுவுமே கண்டுபிடிக்கப்படவில்லையா, எல்லாமே ஆங்கிலேயர் வகுத்துக்கொடுத்ததுதானா?//
நமது நாட்டில் அளப்பதற்கு பல முறைகள் இருந்தன.
அதே போல் இங்கிலாந்தில் அளந்தது
அங்குலம் - inch
அடி - foot
yard
fathom
mile
நாம் கூட
சான்
முழம்
காதம்
யோசனை
போன்ற அளவுகளை வைத்திருந்தோம்
ஏக்கர்
ஹெக்டேர்
போன்ற அளவுகள் இருந்தன
செண்டிமீட்டர், மீட்டர் போன்றவை ஆங்கிலேயரால் அளிக்கப்பட்டவை அல்ல.
அது சர்வதேச குறியீடு
கேள்வி என்னுடையதல்ல டாக்டர்.. சிறுமியுடையது.. :)
ஏக்கர், ஹெக்டேர் கூட நமது அளவுமுறைகிடையாது. குலி, மா, வேலி போன்றவையே நில அளவைகளாகப் பயன்படுத்தப்பட்டன.
//குலி, மா, வேலி போன்றவையே நில அளவைகளாகப் பயன்படுத்தப்பட்டன. //
தகவலுக்கு நன்றி :)
இது குறித்து மேலும் விபரங்கள் அறிய இராமகி ஐயாவின் பதிவில் தான் தேட வேண்டும் என்று நினைக்கிறேன்
what you are going to loose if you learn in your mother tongue? It is proven that mother tongue is so easy to learn and understand.I studied in government elementry school. til my degree i studied in tamil medium. I didn't feel bad about it. What the author really wants to convey? Some people think like if you study in english/hindhi medium that is prestigious. Please ignore these kind of people.
Thanks for posting an useful article.
இந்த குறிப்பிட்ட பத்திரிக்கை எங்கே, யாரிடம் கருத்து கேட்டார்கள், உண்மையில் கேட்டார்களா என்பதிலேயே எனக்கு சந்தேகம் இருக்கிறது.
வலுக்கட்டாயமாக பள்ளியில் நம் மேல் திணிக்கப்படும் ஆங்கிலம் சுலபமாம், குழந்தைப்பருவத்தில் இருந்தே நம்மோடு கலந்து விட்ட தமிழ் மொழி கடினமாம். ஒருவர் ஒரு ஆங்கில புத்தகத்தை படிக்கிறார் என்றால் அவரது மூளை அவருடைய தாய்மொழி எதுவோ அதில் மொழிமாற்றம் செய்தே புரிந்துக்கொள்ளுகிறது. நேரடியாகவே தமிழில் படித்தால் மூளைக்கு அந்த கூடுதல் வேலை கொடுக்கத்தேவை இல்லை. மேலும் படிப்பதும் தெளிவாக புரியும்.
தமிழ் கடினமாக மொழி அல்ல, திட்டமிடப்பட்டு கடினமாக்கப்பட்ட மொழி.
தமிழகத்தில் கல்வியின் நிலை, படித்து வெளிவரும் மாணவர்களின் தகுதி, பற்றியும் முன்னேற்றத்திற்க்கான அருமையான வழிமுறைகளும் சொல்லியுள்ளீர்கள்.
ஆங்கிலக் கல்வி முறைதான் சரியென நினக்கும் மனோபாவம்( வருமான அடிப்படையில் -அடிதட்டு மக்களிடம் கூட)இருக்கும் நிலையில் தங்கள் கருத்துக்கள் சரியானவை.
இப்போ நம்ம கண்மணிகளுக்கு ஆங்கிலமும் சரியாகத் தெரியவில்லை தமிழும் ததிகிணத்தம் போடுது.
உங்கள் வாதம் 100/100 உண்மை.
சரி செய்ய வேண்டியது நம் அனைவரது கடமை அன்றோ !
கோவை விஜய்
please visit my blog
http://pugaippezhai.blogspot.com/
தமிழகத்தில் கல்வியின் நிலை, படித்து வெளிவரும் மாணவர்களின் தகுதி, பற்றியும் முன்னேற்றத்திற்க்கான அருமையான வழிமுறைகளும் சொல்லியுள்ளீர்கள்.
ஆங்கிலக் கல்வி முறைதான் சரியென நினக்கும் மனோபாவம்( வருமான அடிப்படையில் -அடிதட்டு மக்களிடம் கூட)இருக்கும் நிலையில் தங்கள் கருத்துக்கள் சரியானவை.
இப்போ நம்ம கண்மணிகளுக்கு ஆங்கிலமும் சரியாகத் தெரியவில்லை தமிழும் ததிகிணத்தம் போடுது.
உங்கள் வாதம் 100/100 உண்மை.
சரி செய்ய வேண்டியது நம் அனைவரது கடமை அன்றோ !
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
//////என் கருத்துக்கள்
பாடம் புரியாததற்கு முக்கிய காரணம் அது நடத்தப்படும் மொழி அல்ல. அதற்கான காரணங்கள்
1. காலத்திற்கு ஒப்பாத பாடத்திட்டம்
2. மோசமான பாடநூல்
3. நடத்த தெரியாத / முடியாத ஆசிரியர்கள்
4. கேவலமான தேர்வு முறை
அப்படியென்றால் செய்ய வேண்டிய வழிகள் என்ன//////
நெத்தியடியான கருத்துக்கள். இவற்றைச் செய்தால் போதும்!
உயர் நிலையில் உள்ள கல்வித்துறை அதிகாரிகளுக்கு இதற்கெல்லாம்
நேரமில்லை!.அதுதான் சோகம்!
மீரா சீனிவாசன்!உங்கள் ஆங்கிலப் புலமைக்கு வாழ்த்துக்கள்.அதே அளவுக்கு உங்களுக்கு தமிழ்ப்புலமையும் இருக்குமா என்பதில் எனக்கு சந்தேகம்.புவி ஈர்ப்பு கடினமாகத் தோன்றுகிறதா? எனக்குத் தெரிந்து கணக்குக்கும் வாத்தியாருக்கும் பயந்த மாணவர்களும் F என்பதை எப்ன்னு உச்சரிக்க சிரமப்பட்ட மாணவர்களையே கண்டுள்ளேன்.தமிழ் வளர்க்க வேண்டாம் தாயே!தடுக்காமல் இருந்தால் நன்று.
ஈராயிரம் நூற்றாண்டாக இந்த இரு வழக்குத் தமிழ் மொழியில் தானே கற்றோம்? தமிழில் இப்படி இரு வழக்கு இருப்பது சுமை இல்லை. தமிழின் தொடர்ச்சிக்கு இதுவே ஒரு முக்கிய காரணம்.
பாடப்புத்தகத் தமிழில் உள்ள பாதி சொற்களாவது பேச்சு வழக்கில் உண்டு.
(மிக உயர் தட்டுப் பள்ளிகள் தவிர்த்து) ஆங்கில வழியில் பயிலும் எத்தனை சொற்களை சிறுவர்கள் வீட்டிலும் நண்பர்களுடனும் பேசுகிறார்கள்?
இல்லாத பிரச்சினையை இருப்பதாகக் காட்டி தமிழ் வழி கற்போரிடம் குழப்பத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் தெரிந்தே உருவாக்கும் விசமத்தனமான கருத்துகள்.
கவனக்குறைவான/விசமத்தனமான கட்டுரை எழுதிய மீரா சீனிவாசனுக்கு என் கண்டனங்களைப் பதிவுசெய்கிறேன்.
செத்துப் போன மொழிக்கு அலங்காரம் செய்து அழகு பார்க்கும் 'அந்த' கும்பல் தமிழைத் தூற்றுவது ஒன்றும் புதிதல்ல. அவ்வப்போது எதிர்ப்புகளை பதிவு செய்து வைப்போம். உங்கள் பதிலடி நெற்றியடி !
புரோனோ,
உங்கள் தமிழார்வம் வியக்கவே வைக்கிறது. மருத்துவத் துறையில் இருந்து கொண்டு தமிழ்மீதுள்ள பற்றுதல்களால் அதனையும் சரிசெய்ய முயன்றுவரும் தங்கள் திருவுளம் போற்றுதலுக்குரியது.
நாம் தமிழ் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பல சொற்கள் தமிழ்ச்சொல்லே அல்ல, அதற்கு மாற்றான எளிய சொற்கள் பல இருக்கின்றன, பயிற்சியை மேம்படுத்திக் கொண்டால் தமிழில் உள்ள களைகளை முற்றிலுமே அகற்ற முடியும்.
பயங்கரமாக் கடுப்பேற்றி - மிக மிக கடுப்பேற்றி (அந்த இடத்துக்கு பொருத்தமான சொல்)
தினசரிகள் - நாளிதழ்கள்
சமிப - அண்மை
அதிகரித்து வருகிறது - மிகுந்து வருகிறது
சமீபத்திய உதாரணம் - அண்மைய எடுத்துக்காட்டு
சிரமப்படுகிறார்கள், கஷ்டப்படுகிறார்கள் - கடினப்படுகிறார்கள்
சவால் - பெரும் சோதனை
உபயோகிக்கப்படுவது - பயன்படுத்தப்படுவது
தினசரிப்புழக்கத்தில் - நாள்தோறும் புழக்கத்தில்
பிரச்சனை - தொல்லை, இடர்
உச்சரிப்பிற்கும் - பலுக்குதல்
சம்மந்தம் - தொடர்பு
உச்ச கட்ட - முடிவான
முக்கிய - முதன்மை, முன்பான
பிரதி எடுப்பதில் - நகல் எடுப்பதில்
கேவலமான - மிகக்கீழான
எனவே மனப்பாடம் செய்வது தான் படிப்பதில் "முக்கிய விசயம்" என்றாகியது. - "நோக்கம்"
சுவாரசியமான - சுவையார்வமான இராமகி ஐயா தெரிவு செய்தது)
Adhanae, Govi Kannan madhiriyana aatkalanin nachchu pinnuuttam innum varalayaennu paarthaen. Vandidichi. Thirudhungappa.
//Thanks for posting an useful article.//
வருக :)
//தமிழ் கடினமாக மொழி அல்ல, திட்டமிடப்பட்டு கடினமாக்கப்பட்ட மொழி.//
நச் :)
//சரி செய்ய வேண்டியது நம் அனைவரது கடமை அன்றோ !//
கவலைப்படாதீர்கள். விரைவில் சரிசெய்து விடுவோம்
//உயர் நிலையில் உள்ள கல்வித்துறை அதிகாரிகளுக்கு இதற்கெல்லாம்
நேரமில்லை!.அதுதான் சோகம்!//
ஒரேயடியாக அப்படி சொல்ல முடியாது. சிலர் அதிகாரிகள் முயன்றார்கள். தேர்வு வேண்டும் என்று கொடி பிடித்தது நமது ஆட்கள் தான் :(
//தமிழ் வளர்க்க வேண்டாம் தாயே!தடுக்காமல் இருந்தால் நன்று.//
வழிமொழிகிறேன்
//இல்லாத பிரச்சினையை இருப்பதாகக் காட்டி தமிழ் வழி கற்போரிடம் குழப்பத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் தெரிந்தே உருவாக்கும் விசமத்தனமான கருத்துகள்.//
இது போன்ற விசமத்தனங்களை அனைவரும் கண்டிக்க வேண்டும். அதுவும் உடனடியாக கண்டிக்க வேண்டும்
//கவனக்குறைவான/விசமத்தனமான கட்டுரை எழுதிய மீரா சீனிவாசனுக்கு என் கண்டனங்களைப் பதிவுசெய்கிறேன்.//
அனானி, கருத்திற்கு நன்றி
//புரோனோ,//
புருனோ :) :)
//நாம் தமிழ் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பல சொற்கள் தமிழ்ச்சொல்லே அல்ல, அதற்கு மாற்றான எளிய சொற்கள் பல இருக்கின்றன, பயிற்சியை மேம்படுத்திக் கொண்டால் தமிழில் உள்ள களைகளை முற்றிலுமே அகற்ற முடியும்.//
உண்மை. என் பதிவை தற்செயலாக பார்த்த எனக்கு தெரிந்த ஒருவர் கூறியதும் இது தான். “நீ ஆங்கிலத்தை தவிர்த்து எழுதுகிறாய். ஆனால் பிற மொழி சொற்கள் பல இருக்கின்றன”
தங்கள் பட்டியல் அதை சுட்டி காட்டுகிறது.
திருத்திக்கொள்கிறேன்.
/ஈராயிரம் நூற்றாண்டாக/
??
உணர்ச்சிவசப்பட்டுவிட்டீர்களோ?:)
/நகல்/
அதுவும் பாரசீகத்திசைச்சொல் என்று படுகிறது. படி என்பது பொருந்தலாம்.
நல்ல விவாதம் நானும் ஆட்டையிலே
கலந்துக்கிறேன்
எங்கும் எதிலும் ‘அவாள்' பார்க்கும் கோவி.கண்ணன் போன்றோர்கள் வாழ்க.
மற்றொருவரும் மீரா சீனிவாசனைக் கண்டித்துள்ளார். அவர் ஒரு பத்திரிகை நிருபர். அவர் பார்த்துப் பேசியுள்ளது சென்னை மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோரை. அவர்கள் சொன்னதை அப்படியே மேற்கோளாகக் கொடுத்திருக்கிறார். ஒருவேளை அவர்களும் ‘அவாள்களாக' இருக்கலாமோ என்னமோ. கோவி.கண்ணனுக்கே வெளிச்சம்.
***
தமிழ் பற்றிப் பேசும்போது ‘என்ன வளம் இல்லை இந்தத் தமிழ்நாட்டில்' கோஷ்டியும் கானம் பாடப் புகுந்துவிடும். தமிழில் உருப்படியான விஷயங்கள் பலவும் எழுதப்படுவதில்லை என்பது தெளிவு. அவற்றை உருவாக்கும் வேலையில் நாம் இறங்கவேண்டும்.
பாடங்களை எளிமையான மொழியில், சரளமான முறையில் புரிந்துகொள்ளுமாறு எழுதுவது அவசியம். ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் தேவை.
மாணவர்கள் தாங்களே புத்தகத்தை எடுத்துப் படித்து, அதனால் மிகுந்த சந்தோஷத்தைப் பெற ஆரம்பித்துவிட்டால், அதுவே போதும். அவர்கள் எந்தப் பிரச்னையுமின்றி தமிழில் சரளமாக உரையாட, எழுத ஆரம்பித்துவிடுவார்கள்.
பத்ரியின் பதிவில் இந்தப் பின்னூட்டத்தை அளித்தேன். தொடர்பு கருதி அப்படியே இங்கேயும் இடுகிறேன். புருனோ, உங்களுடைய கருத்துகளுடனும் முழுவதும் உடன்படுகிறேன்.
***
ஒரு முக்கியமான பிரச்னையை எந்த வித ஆதாரங்கள், புள்ளி விவரங்கள், அலசல்கள் இல்லாமல், ஒருசில மேம்போக்கான செவிவழிக் கருத்துக்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இப்படி தத்துபித்தாக ஒரு செய்தியை எழுதும் பத்திரிகையாளர்களே அறிவிலாதவர்கள். அறிவியல் பாடங்களை கற்றுக் கொடுக்கத் தரமான நூல்களும், உருப்படியான ஆசிரியர்களும் இல்லாத குறையைத் திரித்து மொழியின் குறையாக மேம்போக்காக எழுதிடும் இப்பத்திரிகைகளுக்கிருக்கிற அக்கறையை என்ன சொல்வது?
இதே இந்துப் பத்திரிகைக்குச் சென்ற மாதம் தமிழகம் வந்திருந்த போது ஒரு கடிதம் அனுப்பினேன். அது கிடைத்ததோ இல்லையோ என்று சந்தேகமிருந்த படியால் சில தினங்களுக்கு முன்பு மறுபடியும் அனுப்பியுள்ளேன். வெளியிடுவார்களா எனத் தெரியாது. தமிழகத்துக்குள் செல்லும் விமானங்களில் பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிப்புகளை ஏன் தமிழில் சொல்வதில்லை என்று (கடிதத்தை கீழே கொடுத்துள்ளேன்). மக்கள் புரிந்து கொள்ளும் மொழியில் அத்தியாவசியமான அறிவிப்புகளைச் செய்ய முன் வராத அரசுகளையும், வணிக நிறுவனங்களைப் பற்றியும் இப்பத்திரிகைகளுக்கு என்றாவது அக்கறையிருந்திருக்கிறதா?
பள்ளியிறுதி ஆண்டு வரை நான் தமிழில் படித்த அறிவியல் கோட்பாடுகள் மட்டுமே (கல்லூரியில் கற்ற ஆங்கிலக் கோட்பாடுகளை விட) என் மனதில் அவற்றின் உண்மையான பொருளோடு இன்றளவும் தங்கியுள்ளன. கல்லூரிக்குச் சென்று சேர்ந்த பொழுதில் சிக்கலாக இருந்தாலும், பின்னால் ஆங்கிலவழி கற்ற மாணவர்கள் அனைவரைக் காட்டிலும், என்னால் அறிவியல் பாடங்களில் சிறப்பாகச் செய்ய முடிந்தது. புவியீர்ப்பு சக்தியும், சவ்வூடு பரவலும், அவற்றின் காரணப் பெயர்கள் மூலம் மனதில் நின்றனவே தவிர gravity, osmosis என்று மனனம் செய்த ஆங்கிலச் சொற்கள் மூலமாக அல்ல. ஆனால் ஒன்றை வலியுறுத்த விரும்புகிறேன். கிராமப் புறப் பள்ளிகளில் பயின்றாலும் அக்கால கட்டத்தில் அறிவியலையும், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளையும் கற்பிக்க நல்ல ஆசிரியர்கள் இருந்தார்கள். இன்று பாலர் பருவத்திலிருந்து ஆங்கிலம் கற்கும் பெரும்பாலான மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் உருப்படியாக ஒரு கடிதம் எழுத வரவில்லை என்பதே வெட்கக் கேடு. எனவே புற்றீசல்கள் போலத் தோன்றியுள்ள ஆங்கிலப் பள்ளிகளின் மூலம் இங்கு சீரழிந்திருப்பது கல்வியின் தரமேயொழிய, தமிழ் மொழி வழி அறிவியலல்ல.
(கீழே உள்ள கடிதம் இந்த உரையாடலைத் திசைதிருப்பக் கூடும் என்று கருதினால் வெட்டி விடவும்.)
நன்றி - சொ. சங்கரபாண்டி
[My Letter to The Hindu:
Airline safety and the use of local languages
I have been living in the U.S. for the past 15 years and am currently in India on a three week visit.
On June 17, 2008, I was traveling from Chennai to Coimbatore by Jet Airways Flight 9W-3533 leaving Chennai at 19.10 hrs. Since the flight started 10 minutes late, it missed its scheduled take-off time and waited in the runway for about 30 minutes thanks to the busy air traffic. Two passengers who were seated across the aisle (Seats 11 D & E) were still talking on their cellphones and did not have their seatbelt on.
I and another passenger seated next to me had to ask them to stop using the cellphone when the flight was taking off. Having seen passengers religiously following the flight announcements in the West, I was wondering why few passengers do not even pay attention to such basic safety requirements.
Later when I was following few in-flight announcements, the reasons struck me. All the announcements were made only in Hindi and English while more than 90 percent of the passengers may be Tamil speaking and 25-30 percent of the passengers (including the above two) may know only Tamil, if my observation is not too wrong.
While thinking about this, I remembered the feed back sheets that I filled in Jet Airlines in the previous years whenever I flew to Chennai either from Mumbai or Bangalore. While commending the excellent services (much more than any International Airlines) of Jet Airlines, I wrote a humble request that Tamil (or another local language in a different city) must be included in flights to Chennai because my mother does not understand English. However the fact that a flight flying within Tamil Nadu does not use Tamil made me feel angry.
I would not feel so if it were a flight operated by the Government of India because languages other than Hindi and English do not exist as far as I learn from my experience with the Indian government. But the fact that even the corporate sector seems to neglect the basic requirements of its customers not only shows the arrogance of the Hindi-speaking elite in these companies but also reflects the selfishness and inability of the English-speaking elite among the Tamils.
I have traveled in almost all the major international carriers to visit India and they all provide services to Indians in (Indian languages including Tamil) in their respective travel segments to India. This is done in spite of the fact that Indians traveling internationally are expected to understand English. That is the basic courtesy one would expect from the airline companies as a customer. Here it also involves the very safety of the flight too as I have pointed out in the case of two passengers above. ]
//Badri said...
எங்கும் எதிலும் ‘அவாள்' பார்க்கும் கோவி.கண்ணன் போன்றோர்கள் வாழ்க.
//
அண்ணே, நான் 'அந்த' என்று தானே சொல்லி இருக்கிறேன். இதில் ஒட்டு மொத்தமாக 'அவாளை' நுழைத்துப்பார்த்தால் நான் பொறுப்பு அல்ல.
அவாள் என்பது குறியீடு தானே. எது எப்படி எல்ல நல்லவர்களுக்கும் பொருந்தும். சிலரின் செயல் சாதிக்கு இழிவை ஏற்படுத்துகிறது என்று நினைப்பவர்களாக மனம் வருந்தி அவர்களே சாதிக்குப் பெருமை சேரும் விதமாக நடந்து கொண்டாலும் அதுவும் சாதி வெறியோ, பற்றோ என்ற வகையில் வராதா ?
உங்களுக்கு தொடர்பில்லாத ஒன்றிற்கு நீங்கள் ஏன் ஆதங்கப்படவேண்டும் ?
புரியல்ல தயவு செய்து விளக்கவும்.
எங்கோ படித்த ஞாபகம்.
திருடர்களைக் குறைச் சொல்லும் போது திருந்தி நல்லவர்களானவர்களுக்கும், திருட்டுத் தொழிலையே விட்டுவிட்டவர்களுக்கும் ஏன் கோபம் வரவேண்டும். திருட்டு என்பது வெறும் குறியீடுதானே. திருந்தியவர்கள் ஏன் அந்த குறியீட்டுக்கு உரிமை கொண்டாடவேண்டும் ?
//Badri said...
எங்கும் எதிலும் ‘அவாள்' பார்க்கும் கோவி.கண்ணன் போன்றோர்கள் வாழ்க.
மற்றொருவரும் மீரா சீனிவாசனைக் கண்டித்துள்ளார். அவர் ஒரு பத்திரிகை நிருபர். அவர் பார்த்துப் பேசியுள்ளது சென்னை மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோரை. அவர்கள் சொன்னதை அப்படியே மேற்கோளாகக் கொடுத்திருக்கிறார். ஒருவேளை அவர்களும் ‘அவாள்களாக' இருக்கலாமோ என்னமோ. கோவி.கண்ணனுக்கே வெளிச்சம்.
***
//
சற்றும் ஆராயமல் ஒரு பொய்யான செய்தியை சேகரித்துக் கட்டுரையாக்கியிருப்பதும் அதன் உள் நோக்கம் கூட உங்களுக்குத் தவறாகத் தெரியவில்லையா ? பொறுப்பான பத்திரிக்கையாளர் இது போல் தகவல்களையெல்லாம் செய்திக் கட்டுரையாக்கமாட்டார், அவர் கருத்தாக இல்லாவிட்டாலும், அதைக் கடை விரித்தது யார் ?
மீராவாசுதேவன் உண்மையானவர், நேர்மையாளர்.
வாழ்க வாழ்க !
சற்றும் ஆராயமல் ஒரு பொய்யான செய்தியை சேகரித்துக் கட்டுரையாக்கியிருப்பதும் அதன் உள் நோக்கம் கூட உங்களுக்குத் தவறாகத் தெரியவில்லையா ? பொறுப்பான பத்திரிக்கையாளர் இது போல் தகவல்களையெல்லாம் செய்திக் கட்டுரையாக்கமாட்டார், அவர் கருத்தாக இல்லாவிட்டாலும், அதைக் கடை விரித்தது யார் ?namma newskaranga poiya pesaranuga?
இந்து நாளிதழ் கட்டுரையில் கட்டுரை ஆசிரியர் என்ன சொல்ல வருகிறார்? தமிழில் பேச்சுக்கும், எழுத்துக்கும் வேறுவேறான இரண்டு வடிவங்கள் இருப்பது சிரமமாக இருக்கிறது அதனால் பேசாமல் ஆங்கிலத்தையே இரண்டுக்கும் வைத்துக் கொள்ளலாம் என்கிறாரா?. எந்த மொழியிலுமே கலைச் சொற்கள் பேச்சு மொழியில் இருந்து வருவதில்லை. தற்காலத்தில் ஒவ்வுரு நாளும் பல துறைகளையும் சேர்ந்த கலைச் சொற்கள் உருவாகிக் கொண்டுதான் இருக்கின்றன. இவையெல்லாம் பேச்சு மொழியில் புழங்குவதும் இல்லை. அதற்கான தேவையும் கிடையாது. பல கலைச் சொற்கள் பேச்சு மொழியிலும் புழக்கத்துக்கு வருவது உண்டு. புவி ஈர்ப்பு அல்லது புவியீர்ப்பு என்பது முடியைப் பிய்த்துக்கொள்ளும் அளவுக்குத் தமிழ் நாட்டில் பிரச்சினை கொடுக்கும் சொல்லாக இருக்கிறது என்பது வியப்பாக இருக்கிறது. இலங்கையில் தமிழ்ப் பிள்ளைகள் 12 ஆம் வகுப்பு வரை பல பத்தாண்டுகளாகத் தமிழிலேயே பல துறைக் கல்வியையும் கற்று வருகிறார்கள். புவியீர்ப்பு என்பது அங்கே ஒரு சாதாரண மனிதனுக்கும் புரியும். ஆங்கிலேயரும் கலைச்சொற்கள் மூலம் வீட்டில் பேசிக்கொள்வதும் இல்லை, பேச்சு மொழியில் இருந்து கலைச் சொற்களை உருவாக்குவதும் இல்லை. பெரும்பாலான கலைச்சொற்கள் துறை வல்லுனர்களுக்கும், மாணவர்களுக்கும் மட்டுப்படுத்தப்பட்டவை தான் அவற்றைப் புதிதாகக் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஒரு சாதாரண தமிழனுக்குப் புவியீர்ப்பு என்ற சொல் மூலம் அதன் பொருளைப் புரிந்து கொள்ளச் சிரமமாக உள்ளது ஆனால் gravity என்பது அதன் பொருளைத் தமிழனுக்கு இலகுவாகப் புரிய வைக்கிறது என்றால் சிரிக்காமல் என்ன செய்ய முடியும். ஆங்கிலத்தில் அறிவியல் படிக்கும் மாணவர்கள், Archaeopteryx, Archosauromorpha போன்ற சொற்களையெல்லாம் அவற்றின் பொருளைப் புரிந்து கொள்ளாமலே மனப்பாடம் செய்யவேண்டும் என்பதை மிக மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்பவர்கள் தமிழில் புரிந்து கொள்ளக்கூடிய சொற்களை நினைவில் வைத்துக் கொள்வதையிட்டு ஏன் இவ்வளவு அலட்டிக் கொள்கிறார்கள்?. மரபு வழியாக விவசாயம் செய்வதானால் கூட ஏராளமான புதிய சொற்களைப் பயின்று கொள்ளத்தான் வேண்டும். பூச்சிகொல்லி, சொட்டு நீர்ப்பாசனம் போன்ற பயன்பாடுகள் மக்களிடையே இலகுவாகப் புழங்கவில்லையா? Insecticide, drip irrigation என்றால் இன்னும் இலகுவாக இருந்திருக்கும் என்கிறார்களோ?
தமிழில் உள்ள இரு நடை அதன் செழுமையைப் பறைசாற்றுகிறது என்பது அவர்களிற்குப் புரியவில்லைப்போலும்.
முடிந்தால் அவர்களை Shakespeare இன்நடையில் நாளிதளை வெளியிடச்சொல்லுங்கள் ,இது ஒரு சவால்.
இதாவது அவர்களின் மூளையில் உறைக்கிறதா பார்க்கலாம்
இதில் கருத்துக் கூறியுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பலர்(அனைவரையும் கூறவில்லை) தனியாக ட்யூஷன் சென்டர்(ஆங்கிலத்துக்கு மன்னிக்கவும்) ஆரம்பித்து வித விதமான முறைகளில் தயார் செய்து சம்பாதித்து, விளம்பரப்படுத்தி, மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி என்று செலவழிக்கும் நேரத்தையும் உழைப்பையும், கொஞ்சம் மனசாட்சியுடன் தங்களை நம்பி பள்ளிக்கல்வி என்ற அஸ்திவாரத்தயே(மன்னிக்கவும்) அளித்துள்ள மாணவர்களுக்கு சிறிதளவு நியாயம் செய்யக்கூடாதா? சரி இவர்களின் அதிபுத்திசாலித்தனமானக் கூற்றுப்படி, மாணவர்கள் தமிழ் வழியில் படித்து தேய்ந்து போகிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம். ஒரு சாதாரண மொழிப்பாடமாகவாவது தமிழையும் ஆங்கிலத்தையும் ஒழுங்காக கற்பித்து உள்ளார்களா? என்னைப் பொறுத்தவரை இந்தக் கட்டுரையை எழுதியவர்கள் எல்லார் கூறியவற்றிலும் தங்களுக்கு சாதகமானவற்றை மட்டும் எடுத்து கையாண்டுள்ளார்கள் என்பதே என் ஐயம்
http://vinavu.wordpress.com
எனக்குத் தெரிந்து நான் ஆங்கிலத்திலும் கவிதைகளை மனப்பாடம் செய்துதான் எழுதியுள்ளேன். இலக்கியம் என்பதை மனதை பண்படுத்தும் ஒரு மொழியியல் கூற்றாக பார்க்க வேண்டும். அதனை முழுவதுமாக அனுபவிக்க மனப்பாடம் செய்வதுதான் உலகின் அனைத்து மொழிவழிக் கல்வி முறைகளும் செயல்படுத்துகிறது. இதென்ன முட்டாள்தனமான வாதம் என்பதே புரியவில்லை. இலக்கியத்தை வாழ்வியல் கூற்றான அறிவியலோடு ஒப்பிடும் போக்கு, அடிப்படையே இல்லாத வாதம். அறிவியலின் அடிப்படையை அந்நிய மொழியில் கற்றால் மனதில் நிற்கும் என்ற வாதத்தை அவர்கள் வைக்கும்போதே அவர்களின் நோக்கம் கல்வி முன்னேற்றம் அல்ல என்பது தெளிவாகிறது.
தாய்மொழியை இலக்கண சுத்தமாகக் கற்றால்தான் வேறொரு மொழியை சரியாகக் கற்கமுடியும் என்பதே இவர்களுக்குத் தெரியவில்லை, வந்துவிட்டார்கள் கட்டுரை எழுத. இவர்களின் நாளிதழை மக்கள் ஆங்கில தாகத்தால் படிக்கிறார்கள் என்று எண்ணியுள்ளார்கள் போலும்
புருனோ அங்கிள்,
அரசு பள்ளில உள்ள ஆசிரியர்கள் எல்லாம் தண்டம் அப்படின்னு சொல்றீங்களே (நடத்த தெரியாத / முடியாத ஆசிரியர்கள்). இது எப்படி ? மக்கள் எல்லாம் அரசு மருத்துவமனை / அரசு மருத்துவமனைல உள்ள வைத்தியர குறை சொல்றா மாதிரியா ?
ஆனா உங்க வாதம் (தமிழ் வழி கல்வி பற்றி) சரியானதே.
இது மாதிரி ஒரு நிருபர் உண்மையாவே போய் பள்ளில விசாரிச்சாலும் இந்த தவறான கருத்துக்கள் வர வாய்ப்பு இருக்கு. அந்த நிருபர் அத ஆராய்ஞ்சு அதுல உள்ள misconceptions எடுத்து எறிஞ்சு/ தவறுகள சுட்டி காட்டி ஒரு கட்டுரை எழுதி இருந்தா அவர பாராட்டலாம். இவங்க வெறுமன அவங்க சொன்னுத அப்படியே பிரசுருச்சி இருக்காங்க. ஏன் அப்படி செஞ்சாங்க ? கோவி கண்ணன் சரியான விளக்கம் கொடுத்து இருக்காரு.
கோவி கண்ணன் அவர்களுக்கு :- விடுதலை பத்திரிகைல பெரியார் அவர்களோட தமிழ் மொழி பற்றிய காட்டுமிராண்டி கருத்துகள publish பண்ணினா மாதிரின்னு நினைக்கறேன்.
//அரசு பள்ளில உள்ள ஆசிரியர்கள் எல்லாம் தண்டம் அப்படின்னு சொல்றீங்களே //
அனைவரையும் சொல்லவில்லை. இது போல் தத்துபித்தாக கருத்து சொல்பவர்களைத்தான் கூறினேன். கல்வி குறித்த என் பிற இடுகைகளை ஒரு முறை பாருங்கள்.
என் கருத்துக்களை தெளிவாக சொல்லியிருக்கிறேன்.
ஏதேனும் குறிப்பிட்ட சந்தேகம் இருந்தால் கேட்கவும்
ராப்,
//தாய்மொழியை இலக்கண சுத்தமாகக் கற்றால்தான் வேறொரு மொழியை சரியாகக் கற்கமுடியும் என்பதே இவர்களுக்குத் தெரியவில்லை//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
தமிழன் சார்
//முடிந்தால் அவர்களை Shakespeare இன்நடையில் நாளிதளை வெளியிடச்சொல்லுங்கள் ,இது ஒரு சவால். இதாவது அவர்களின் மூளையில் உறைக்கிறதா பார்க்கலாம்//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
******அறிவியலின் அடிப்படையை அந்நிய மொழியில் கற்றால் மனதில் நிற்கும் என்ற வாதத்தை அவர்கள் வைக்கும்போதே அவர்களின் நோக்கம் கல்வி முன்னேற்றம் அல்ல என்பது தெளிவாகிறது********
பைத்தியகாரத்தனமான வாதம் தான். ஆனா நம்ப ஊருல மக்கள் கிட்ட ஒரு தவறான கண்ணோட்டம் இருக்கு. இங்கிலீஷ் படிச்சா எளிதா வேல கிடைக்கும். இங்கிலீஷ் படிச்சா பீத்த பெருமை. (ரஜினி சில படத்துல திடீர்னு a for apple, b for bakistan அப்படினா நம்ப மக்கள் ஆஆன்னு வாய பொளப்பாங்க) ஆங்கிலத்த ஒரு மொழியா கத்துகிட்டு, தமிழ் மொழி வழி கல்வி இருந்தா ஓரிரு தலைமுறைல நம்ப இன்னும் அதிகமா முன்னேறலாம்.
//பாடங்களை எளிமையான மொழியில், சரளமான முறையில் புரிந்துகொள்ளுமாறு எழுதுவது அவசியம். ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் தேவை.//
வழிமொழிகிறேன்
//மாணவர்கள் தாங்களே புத்தகத்தை எடுத்துப் படித்து, அதனால் மிகுந்த சந்தோஷத்தைப் பெற ஆரம்பித்துவிட்டால், அதுவே போதும். அவர்கள் எந்தப் பிரச்னையுமின்றி தமிழில் சரளமாக உரையாட, எழுத ஆரம்பித்துவிடுவார்கள்.//
அற்புதமான கருத்து !!
//அறிவியல் பாடங்களை கற்றுக் கொடுக்கத் தரமான நூல்களும், உருப்படியான ஆசிரியர்களும் இல்லாத குறையைத் திரித்து மொழியின் குறையாக மேம்போக்காக எழுதிடும் இப்பத்திரிகைகளுக்கிருக்கிற அக்கறையை என்ன சொல்வது?//
நான் கூறவந்து (ஆனால் சரியான சொற்களை பயன்படுத்தாததால் தெளிவற்றுப்போன) கருத்து இது தான்
//க அல்ல. ஆனால் ஒன்றை வலியுறுத்த விரும்புகிறேன். கிராமப் புறப் பள்ளிகளில் பயின்றாலும் அக்கால கட்டத்தில் அறிவியலையும், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளையும் கற்பிக்க நல்ல ஆசிரியர்கள் இருந்தார்கள். இன்று பாலர் பருவத்திலிருந்து ஆங்கிலம் கற்கும் பெரும்பாலான மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் உருப்படியாக ஒரு கடிதம் எழுத வரவில்லை என்பதே வெட்கக் கேடு. எனவே புற்றீசல்கள் போலத் தோன்றியுள்ள ஆங்கிலப் பள்ளிகளின் மூலம் இங்கு சீரழிந்திருப்பது கல்வியின் தரமேயொழிய, தமிழ் மொழி வழி அறிவியலல்ல.//
வழிமொழிகிறேன்
*****செத்துப் போன மொழிக்கு அலங்காரம் செய்து அழகு பார்க்கும் 'அந்த' கும்பல் தமிழைத் தூற்றுவது ஒன்றும் புதிதல்ல. அவ்வப்போது எதிர்ப்புகளை பதிவு செய்து வைப்போம்*****
செத்துப் போன மொழிக்கு அலங்காரம் செய்ய முடியாட்டி ஆங்கிலத்துக்கு தாவிடறாங்க. தொல்ல புடிச்ச கூட்டம் !
//எந்த மொழியிலுமே கலைச் சொற்கள் பேச்சு மொழியில் இருந்து வருவதில்லை. தற்காலத்தில் ஒவ்வுரு நாளும் பல துறைகளையும் சேர்ந்த கலைச் சொற்கள் உருவாகிக் கொண்டுதான் இருக்கின்றன. இவையெல்லாம் பேச்சு மொழியில் புழங்குவதும் இல்லை. அதற்கான தேவையும் கிடையாது. பல கலைச் சொற்கள் பேச்சு மொழியிலும் புழக்கத்துக்கு வருவது உண்டு.//
:)
//ஒரு சாதாரண தமிழனுக்குப் புவியீர்ப்பு என்ற சொல் மூலம் அதன் பொருளைப் புரிந்து கொள்ளச் சிரமமாக உள்ளது ஆனால் gravity என்பது அதன் பொருளைத் தமிழனுக்கு இலகுவாகப் புரிய வைக்கிறது என்றால் சிரிக்காமல் என்ன செய்ய முடியும்.//
:) :) :) :)
//பூச்சிகொல்லி, சொட்டு நீர்ப்பாசனம் போன்ற பயன்பாடுகள் மக்களிடையே இலகுவாகப் புழங்கவில்லையா? Insecticide, drip irrigation என்றால் இன்னும் இலகுவாக இருந்திருக்கும் என்கிறார்களோ?//
மயூரநாதன் , வெளுத்து வாங்கி விட்டீர்கள்
//ஆங்கிலத்த ஒரு மொழியா கத்துகிட்டு, தமிழ் மொழி வழி கல்வி இருந்தா ஓரிரு தலைமுறைல நம்ப இன்னும் அதிகமா முன்னேறலாம்.//
:)
//ஆங்கிலத்த ஒரு மொழியா கத்துகிட்டு, தமிழ் மொழி வழி கல்வி இருந்தா ஓரிரு தலைமுறைல நம்ப இன்னும் அதிகமா முன்னேறலாம்.//
ஏன் சிரிக்கிறீங்க ப்ருனோ இதுக்கு ?
//Badri said...
மற்றொருவரும் மீரா சீனிவாசனைக் கண்டித்துள்ளார். அவர் ஒரு பத்திரிகை நிருபர். அவர் பார்த்துப் பேசியுள்ளது சென்னை மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோரை. அவர்கள் சொன்னதை அப்படியே மேற்கோளாகக் கொடுத்திருக்கிறார்.//
சரி இருக்கட்டும். தகவல்களை ஆராயமல் வெறும் மேற்கோள் காட்டி தமிழ்வழிக்கல்வியை சாடும் இக்கட்டுரையின் நோக்கமென்ன? கூறுங்களேன்!
இதற்கு கோவி.கண்ணன் அவர்கள் சரியான பதில் கொடுத்திருக்கிறார்.
//கோவி.கண்ணன் said
மீராவாசுதேவன் உண்மையானவர், நேர்மையாளர்.
வாழ்க வாழ்க !//
கட்டுரை ஆசிரியர் மீரா சீனிவாசன்!
மீராவாசுதேவன் என ஒரு நடிகை இருக்கிறார் ;)
ஒரு நாளிதழில் வெளியாகும் செய்திக்கட்டுரைகளுக்கெல்லாம்
உள்ளர்த்தம்,'அவாள்' என்று
பார்த்து விமர்சிப்பது வெட்டிவேலை.
அவர் சில ஆசிரியர்களை சந்தித்து
அவர்கள் கூறிய கருத்துக்களை முன்
வைத்திருக்கிறார். உங்களுக்கு அதில்
மாற்றுக் கருத்துக்களை நாகரிகமாக
விமர்சிக்க,விவாதிக்க முடியவில்லை.
கோவி.கண்ணன், பிறரை தூற்றும்
நீங்கள் எத்தனை அறிவியல்,
பொறியியல் கட்டுரைகளை தமிழில்
எழுதியிருக்கிறீர்கள்.தமிழில் எத்தனை
புதிய கருத்துக்களை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்.அல்லது
எத்தனை கட்டுரைகளை மொழிபெயர்த்திருக்கிறீர்கள், புதிய
கலைச்சொற்களை தமிழுக்கு தந்திருக்கிறீர்கள். ஒரு பெ.நா.அப்புசாமி செய்தத்தில்
ஆயிரத்தில் ஒரு பங்கு கூட செய்யாத
உங்களுக்கு பிறரை குறித்து இப்படி
எழுத வெட்கமாக இல்லை.
‘செத்துப் போன மொழிக்கு அலங்காரம் செய்து அழகு பார்க்கும் 'அந்த' கும்பல் தமிழைத் தூற்றுவது ஒன்றும் புதிதல்ல. அவ்வப்போது எதிர்ப்புகளை பதிவு செய்து வைப்போம்.'
இங்கு யாரும் தமிழைத் தூற்றவில்லை.சில சிக்கல்கள்
இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அதுவும் ஒருவரின் கருத்தாக
இல்லை.எந்த மொழி செத்துப்
போன மொழி. சமஸ்கிருதம்
செத்த மொழி என்று எந்த
மடையன் சொன்னான்.இன்றும்
உலகெங்கும் அறிஞர்கள் அதை
கொண்டாடுகிறார்கள்.அதில் உள்ளவற்றை ஆராய்கிறார்கள்.
ஆயுர்வேத நூல்கள் எம்மொழியில்
உள்ளன.சரக சம்கிதை எம்மொழியில்
உள்ளது என்பதை அறிவாயா மூடனே.
'ஒரு முக்கியமான பிரச்னையை எந்த வித ஆதாரங்கள், புள்ளி விவரங்கள், அலசல்கள் இல்லாமல், ஒருசில மேம்போக்கான செவிவழிக் கருத்துக்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இப்படி தத்துபித்தாக ஒரு செய்தியை எழுதும் பத்திரிகையாளர்களே அறிவிலாதவர்கள். அறிவியல் பாடங்களை கற்றுக் கொடுக்கத் தரமான நூல்களும், உருப்படியான ஆசிரியர்களும் இல்லாத குறையைத் திரித்து மொழியின் குறையாக மேம்போக்காக எழுதிடும் இப்பத்திரிகைகளுக்கிருக்கிற அக்கறையை என்ன சொல்வது? '
பத்திரிகைகளில் ஒரு நிருபர் இப்படியான கட்டுரையை எழுதுவது தவறில்லை.அவர் சிலரைத் சந்தித்த
பின் அவர்கள் கூறியதையும் சேர்த்தே
எழுதியிருக்கிறார். அவர் இல்லாத
ஒன்றை எழுதிவிடவில்லையே.
//கோவி கண்ணன் சரியான விளக்கம் கொடுத்து இருக்காரு.
கோவி கண்ணன் அவர்களுக்கு :- விடுதலை பத்திரிகைல பெரியார் அவர்களோட தமிழ் மொழி பற்றிய காட்டுமிராண்டி கருத்துகள publish பண்ணினா மாதிரின்னு நினைக்கறேன்.//
பெரியாரின் தமிழ்பற்றிய பல்வேறு விமர்சனங்கள் எழுந்தகாலத்தில் தமிழ் முற்றிலும் சிதைந்ததாகவே இருந்தது. அப்பொழுது இருந்தது தமிழ் 'மொழி' அல்ல, வடமொழியை கலந்து திரிக்கப்பட்ட மணிப்பவள தமிழ் 'பாஷை'. அதன் இயல்பு நடையெல்லாம் தொலைந்து போய் பக்தி இலக்கியங்களையும், வடமொழி மொழிப்பெயர்பான இராமயணம், மகாபாரத கதா கலேசபங்களைத்தான் விழாக்களில் அரங்கேற்றி வந்தனர். பெரியார் அறிந்திருந்த தமிழ் காட்டு மிராண்டி 'பாசை' என்று சொல்லும் அளவுக்கு அது களங்கப்பட்டு இருந்தது. திருக்குறளுக்கு கொடுக்கப்பட்ட திரிக்கப்பட்ட விளக்கங்கள் போன்றே சிலப்பதிக்காரகதைகளின் உட்பொருளை சிதைத்து கற்பை முன்னிறுத்தி அவை உயர்வாக பேசப்பட்டது. இதையெல்லாம் பார்த்தே பெரியார் பழமைவாதம் பேசும் மொழியாக தமிழை நினைத்து தமிழ் 'காட்டு மிராண்டி பாசை' என்றார். பின்னாளில் அவர் கொடுத்த ஊக்கத்தில் தான் பாரதிதாசன், தேவநேயப் பாவாணர் போன்றவர் தமிழில் இருந்த வேற்று மொழிச் சொற்களுக்கு மாற்றான புதிய தமிழ் சொற்களை சங்க இலக்கியங்களில் இருந்து அறிமுகப்படுத்தினர். பக்தி பாடல்கள் எழுதினாலும் பெரியாரின் சீர்த்திருத்த எழுத்துக்களைத்தான் அவற்றில் பயன்படுத்துகிறோம் :) பெரியாரின் தமிழ்குறித்த விமர்சனங்கள் பெற்றவர்கள் பிள்ளையை கண்டிப்பது போன்று அக்கரைகளினால் எழுந்த கோபமேயன்றி அது துவேசம் இல்லை.
மேலும் படிக்க...
http://govikannan.blogspot.com/2007/09/blog-post_10.html
பெரியாரின் தமிழ்குறித்த விமர்சனங்கள் பெற்றவர்கள் பிள்ளையை கண்டிப்பது போன்று அக்கரைகளினால் எழுந்த கோபமேயன்றி அது துவேசம் இல்லை.
இருக்கலாம்.
//சமஸ்கிருதம்
செத்த மொழி என்று எந்த
மடையன் சொன்னான்.//
நம்ம பத்ரி அண்ணன் கூட செத்த பாசைக்கு வளர்ச்சிக்கு(?) ஏன் வருசா வருசம் நிதி உதவி செய்கிறீர்கள் என்று ஒரு கட்டுரை எழுதி வாங்கிக் கட்டிக் கொண்டார் என்பது தெரியாதோ ?
:) நான் சொல்வது மெய்யா ? பொய்யா ? என பத்திரி அண்ணனிடம் கேளுங்க !
//சமஸ்கிருதம் செத்த மொழி என்று சொல்வதில் யாரும் உணர்ச்சி வசப்படக்கூடாது. சில நூறு பேர்கள், அதுவும் பல்கலைக்கழக அளவில் கற்றுப் பேசும் ஒரு மொழி, வெகுமக்கள் மத்தியில் புழங்காத மொழி, செத்த மொழிதான். லத்தீன், பழைய கிரேக்கம் போன்று சமஸ்கிருதம் செத்த மொழிதான். இன்று வாழும் மொழிகள் உயிர்த்துடிப்புடன் கூடியவை. இன்றைய மக்களின் வாழ்க்கையை, நெருக்கடிகளை, சாதனைகளை, சாத்தியங்களை, சிந்தனைகளை, உணர்ச்சிகளை இன்று வாழும் மொழிகளால்தான் வெளிப்படுத்த முடியும்.
மேலும் படிக்க...
http://thoughtsintamil.blogspot.com/2007/02/blog-post_13.html
//
//இன்றும்
உலகெங்கும் அறிஞர்கள் அதை
கொண்டாடுகிறார்கள்.அதில் உள்ளவற்றை ஆராய்கிறார்கள்.
ஆயுர்வேத நூல்கள் எம்மொழியில்
உள்ளன.சரக சம்கிதை எம்மொழியில்
உள்ளது என்பதை அறிவாயா மூடனே.//
ஓ அப்படியா ? சமஸ்கிரதம் கம்ப்யூட்டார் பாசையாமே அந்தப் பெருமையை ஏன் விட்டுவிட்டீர்கள் ?
//பத்திரிகைகளில் ஒரு நிருபர் இப்படியான கட்டுரையை எழுதுவது தவறில்லை.அவர் சிலரைத் சந்தித்த
பின் அவர்கள் கூறியதையும் சேர்த்தே
எழுதியிருக்கிறார். அவர் இல்லாத
ஒன்றை எழுதிவிடவில்லையே.//
அச்சா அச்சா ... அப்படியே ஊழல்வாதிகள், கொள்ளையடிப்பவர்களை யெல்லாம் சந்தித்து அவர்கள் தொழிலை எவ்வாறு நேர்த்தியாக செய்கிறார்கள் என்பதையும், திண்ணைத்தூங்கிகள் சோம்பேறியானது எப்படி என்று பேட்டி எடுத்தும் எழுதலாம், நாட்டுக்கு ரொம்ப நல்லது. மேலும் அந்த செய்தி இதழைப் பற்றி பொதுமக்கள் என்னவிதமான கருத்துச் சொல்கிறார்கள் என்பதையும் தணிக்கை இல்லாமல் எழுதினால் நன்றாகத்தான் இருக்கும்
//கோவி.கண்ணன், பிறரை தூற்றும்
நீங்கள் எத்தனை அறிவியல்,
பொறியியல் கட்டுரைகளை தமிழில்
எழுதியிருக்கிறீர்கள்.தமிழில் எத்தனை
புதிய கருத்துக்களை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்.அல்லது
எத்தனை கட்டுரைகளை மொழிபெயர்த்திருக்கிறீர்கள், புதிய
கலைச்சொற்களை தமிழுக்கு தந்திருக்கிறீர்கள்.//
எனது பதிவில் 500 இடுகைகள் வரையில் இருக்கிறது, குறிசொற்களுடன் வகைப்படுத்தி இருக்கிறேன். நீங்கள் சொல்லும் மேற்கண்டவைகள் இருக்கிறதா இல்லையா என்று பார்த்துவிட்டு வந்து சொல்லலாமே ? என்ன அவசரமோ ?
//நல்ல விவாதம் நானும் ஆட்டையிலே
கலந்துக்கிறேன் //
அண்னா, கலந்துக்கிறேன்னு சொல்லிபுட்டு ஒன்றும் கூற வில்லையே
////ஆங்கிலத்த ஒரு மொழியா கத்துகிட்டு, தமிழ் மொழி வழி கல்வி இருந்தா ஓரிரு தலைமுறைல நம்ப இன்னும் அதிகமா முன்னேறலாம்.//
ஏன் சிரிக்கிறீங்க ப்ருனோ இதுக்கு ? //
என் கருத்துடன் நீங்கள் ஒன்று படுவதால் மகிழ்ச்சி அது :) :) :)
//கட்டுரை ஆசிரியர் மீரா சீனிவாசன்!
மீராவாசுதேவன் என ஒரு நடிகை இருக்கிறார் ;) //
!!!! :) :)
//உங்களுக்கு அதில்
மாற்றுக் கருத்துக்களை நாகரிகமாக
விமர்சிக்க,விவாதிக்க முடியவில்லை.//
இந்த விவாதத்தில் எங்கு நாகரிகம் குறைந்தது என்று நினைக்கிறீர்கள்
//அவர் சில ஆசிரியர்களை சந்தித்து
அவர்கள் கூறிய கருத்துக்களை முன்
வைத்திருக்கிறார்.//
ஏன் ஒரு மாணவனை கூட சந்திக்க வில்லை ??
சந்தித்தால் அவர்கள் என்ன கூறுவார்கள் ??
வருக அனானி
//இன்றும்
உலகெங்கும் அறிஞர்கள் அதை
கொண்டாடுகிறார்கள்.அதில் உள்ளவற்றை ஆராய்கிறார்கள்.
ஆயுர்வேத நூல்கள் எம்மொழியில் உள்ளன.சரக சம்கிதை எம்மொழியில்
உள்ளது என்பதை அறிவாயா //
கருத்திற்கு நன்றி
//அவர் இல்லாத
ஒன்றை எழுதிவிடவில்லையே. //
அவர் இருப்பதை (மாணவர்களுக்கு தமிழ் வசதியாக இருப்பதை, மாணவர்களுக்கு ஆங்கிலம் சிரமமாக இருப்பதை) எழுதவில்லை என்பதால் தான் விவாதமே.
இது மொழிகளுக்கு இடையிலான போர் அல்ல
//பெரியாரின் தமிழ்குறித்த விமர்சனங்கள் பெற்றவர்கள் பிள்ளையை கண்டிப்பது போன்று அக்கரைகளினால் எழுந்த கோபமேயன்றி அது துவேசம் இல்லை.//
நல்ல கருத்து !!
அருமையான உவமானம்
//இன்றும்
உலகெங்கும் அறிஞர்கள் அதை
கொண்டாடுகிறார்கள்.அதில் உள்ளவற்றை ஆராய்கிறார்கள்.
ஆயுர்வேத நூல்கள் எம்மொழியில்
உள்ளன.சரக சம்கிதை எம்மொழியில்
உள்ளது என்பதை அறிவாயா மூடனே.//
******ஓ அப்படியா ? சமஸ்கிரதம் கம்ப்யூட்டார் பாசையாமே அந்தப் பெருமையை ஏன் விட்டுவிட்டீர்கள் *****
இது ஏதோ கிறுக்குபைய சொன்ன கருத்து.
அனானி அவர்கள் சொன்னவிதம் ஒரு constructive வாதத்துக்கு ஏற்ற மொழில இல்ல. ஆனா நிறைய நூல்கள் சமஸ்க்ருததுல இருக்கறது உண்மை தான்.
//ஓ அப்படியா ? சமஸ்கிரதம் கம்ப்யூட்டார் பாசையாமே அந்தப் பெருமையை ஏன் விட்டுவிட்டீர்கள் ?//
அப்படி யார், எங்கு ஆராய்ந்து கூறினார்கள் என்று தெரிந்தவர்கள் விளக்கவும்.
இது குறித்த பல தொடர் மின் மடல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அது உண்மையா, இல்லை கணனி மொழி என்பது நைசிரியா வங்கி கணக்கிலுள்ள பணத்துடன் சேர்ந்ததா என்று தெரிந்து கொள்ள ஆவல்
--
சோழர் பல நாடுகளை வென்றதை மறைத்து “இந்தியா எந்த நாட்டின் மேலும் போர் தொடுக்க வில்லை” என்று மின் மடல்களை அனுப்புபவர்கள் இருக்கிறார்கள் என்பதால் தான் இந்த ஐயம்
//மேலும் அந்த செய்தி இதழைப் பற்றி பொதுமக்கள் என்னவிதமான கருத்துச் சொல்கிறார்கள் என்பதையும் தணிக்கை இல்லாமல் எழுதினால் நன்றாகத்தான் இருக்கும்//
;)
(அவனும் அவளும். இந்த சிரிப்பான் நக்கல் தான்)
*****எனது பதிவில் 500 இடுகைகள் வரையில் இருக்கிறது, குறிசொற்களுடன் வகைப்படுத்தி இருக்கிறேன். நீங்கள் சொல்லும் மேற்கண்டவைகள் இருக்கிறதா இல்லையா என்று பார்த்துவிட்டு வந்து சொல்லலாமே ? என்ன அவசரமோ ?******
உண்மை கோவி. என்னோட நன்றியையும் தெரிவிச்சுகரேன்.
*******அந்த செய்தி இதழைப் பற்றி பொதுமக்கள் என்னவிதமான கருத்துச் சொல்கிறார்கள் என்பதையும் தணிக்கை இல்லாமல் எழுதினால் நன்றாகத்தான் இருக்கும்*******
முரசொலிலேந்து ஆரம்பிக்கலாம்.
******** அப்படியே ஊழல்வாதிகள், கொள்ளையடிப்பவர்களை யெல்லாம் சந்தித்து அவர்கள் தொழிலை எவ்வாறு நேர்த்தியாக செய்கிறார்கள் என்பதையும்,******
உண்மைல இது மாதிரி நடந்தா நல்லது தான்.
//அனானி அவர்கள் சொன்னவிதம் ஒரு constructive வாதத்துக்கு ஏற்ற மொழில இல்ல. ஆனா நிறைய நூல்கள் சமஸ்க்ருததுல இருக்கறது உண்மை தான். //
லத்தீனில் அதை விட அதிகம் நூல்கள் இருக்கின்றன.
சமசுகிரதத்தை தாய் மொழியாக கொண்டவர்கள் அந்த மொழியில் கற்ற விரும்பினால் அது குறித்து கருத்து கூற நாம் யார்
*******லத்தீனில் அதை விட அதிகம் நூல்கள் இருக்கின்றன******
நீங்க சொல்றது சரியாவும் இருக்கலாம்.
*******சமசுகிரதத்தை தாய் மொழியாக கொண்டவர்கள் அந்த மொழியில் கற்ற விரும்பினால் அது குறித்து கருத்து கூற நாம் யார்*******
தாய்மொழியா இருக்கற மொழிய மட்டும் தான் ஒருத்தன் கத்துக்க விருப்பபடனும்ன்னு, இல்லாட்டி தாய்மொழில உள்ள நூல்கள தான் ஆராய்ச்சி பண்ணனும்ன்னோ கட்டாயம் கிடையாது.
//தாய்மொழியா இருக்கற மொழிய மட்டும் தான் ஒருத்தன் கத்துக்க விருப்பபடனும்ன்னு, இல்லாட்டி தாய்மொழில உள்ள நூல்கள தான் ஆராய்ச்சி பண்ணனும்ன்னோ கட்டாயம் கிடையாது. //
சீனா தேச மாணவன் ஒருவனிடம் போய் நீ தமிழ் வழியில் தான் விஞ்ஞானத்தையும் வரலாற்றையும் கற்க வேண்டும் என்று சொல்வது அபத்தம்.
திருக்குறளோ, சிலப்பதிகாரமோ, சித்த வைத்திய நூல்களோ, கண்ணதாசன் பாடல்களோ, சாவு வலைப்பதிவையோ படிக்க விரும்பினால் அவர் தமிழ் கற்கலாம்.
ஒரு களத்தில் ஒருவர் சம்ஸ்கிரதம் தெரிந்தால் கணணி உலகில் கொடிகட்டிப்பறக்கலாம் என்ற கருத்தை அடிக்கடி முன்வைப்பவர். அப்போ பில்கேட்ஸ்சுக்கும் அமெரிக்க சீனா கணணி பொறியியளாளர்களுக்கும் சமஸ்கிரதம் தெரிந்தா இருக்கின்றது?
*******சீனா தேச மாணவன் ஒருவனிடம் போய் நீ தமிழ் வழியில் தான் விஞ்ஞானத்தையும் வரலாற்றையும் கற்க வேண்டும் என்று சொல்வது அபத்தம்*****
இதுல எனக்கு எதுவும் மாற்று கருத்து இல்ல.
****திருக்குறளோ, சிலப்பதிகாரமோ, சித்த வைத்திய நூல்களோ, கண்ணதாசன் பாடல்களோ, சாவு வலைப்பதிவையோ படிக்க விரும்பினால் அவர் தமிழ் கற்கலாம்****
இது தான் சரியான approach. சாவு வலைபதிவ படிக்க முடியலனா அவர் வாழ்ந்து என்ன சாதிக்க போறார் ?
ஒரு சின்ன பின்னூட்டம் விவாத்தின் திசையவே மாத்திடுச்சு இல்ல ?
பதிவர் பத்ரியின் இடுகையில் நான் எழுதிய மறுமொழி
//அப்புறம் ஏன் அந்த கராமத்து பையன் தற்கொலை செய்து கொண்டான் (விஜய் டி.வி.யில் பார்த்தது). 12ஆம் வகுப்போடு ஒரு மொழி வழிக்கல்வி முடிந்து மற்றோரு மொழி கல்விக்கு தாவுவது கடினமான ஒன்றே. இந்த மாற்றங்களை தினசரி வாழ்வில் சராசரி மனிதனால் இயல்பாக ஏற்கொள்ள இயலுமா? ஏற்கனவே மண்டை உடையும் கல்விக்கட்டணங்கள் இதில் பிள்ளைக்கு திடீர் என்று ஆங்கிலம் வராது என்று அறிந்தால் அந்த சராசரிக் குடும்பத்தின் நிலை என்ன?//
ஐயா,
கல்லூரியில் சேரும் மாணவன் தற்கொலை செய்வதற்கு பாடங்கள் புரியாததே (தமிழ் வழி கல்வியில் பள்ளியில் கற்றதால்) என்று பொருள் பட நீங்கள் கூறுவதின் எனக்கு உடன்பாடு கிடையாது
அதற்கு (மாணவர் தற்கொலைக்கு) பல சமூக காரணங்கள், (தாழ்வு மனப்பாண்மை போன்றவை) முக்கியம்
1. ஐ.ஐ.டியில் சேருபவர்களில் ஆங்கில வழியில் படித்தவர்கள் கூட தற்கொலை செய்கிறார்கள்
2. இங்கிருந்து உருசியா சென்று மருத்துவம் கற்கும் அனைவரும் தற்கொலை செய்வதில்லை. அங்கு பாடங்கள் உருசிய மொழியில் தான் என்று உங்களுக்கு தெரியும்தானே
புரிகிறதா
நான் இலங்கையைச் சேர்ந்தவன் எமக்கு 12 ஆம் வகுப்பு வரை தமிழில் தான் பாடம் சொல்லித்தருகின்றார்கள். சிங்களவர்களுக்கு சிங்களத்தில் பாடம் சொல்லித்தருகின்றார்கள். பல்கலைக் கழகத்தில் மட்டும் ஆங்கிலவழிப்போதனை உண்டு. இங்கே படிப்பறிவு வீதம் 92%க்கும் அதிகம். கொழும்பு கண்டி போன்ற மாநகரங்களில் இருப்பவர்கள் மட்டும் ஆங்கிலத்தை கலந்து அல்லது முழுமையாக தம்முடைய இனத்தவர்களுடன் கதைப்பவர்கள்(தமிழனும் தமிழனும் அல்லது சிங்களவனும் சிங்களவனும்) ஏனையோர் அறிந்துவைத்திருக்கிறார்கள் தேவைப்படும்போது மட்டும் உபயோகிப்பார்கள்.
எமக்கு பல்கலைக்கழகத்தில் ஆங்கிலமூலம் படிப்பது சிரமமகா இருக்கவில்லை. காரணம் ஆரம்பமுதல் ஆங்கிலத்தை ஒரு பாடமாக 10ஆம் வகுப்புவரை பாடசாலைகளில் வைத்திருப்பதுதான். பேச்சு ஆங்கிலம் மட்டும் பலருக்கு சிக்கல் இதற்கான காரணம் பெரும்பாலும் பேசிப்பழக்கமில்லை என்பதாகும். மற்றும்படி புவியீர்ப்புவிசை , சேதன இரசாயனம்(Organic ), நுண்கணிதம்(Calculas) என தமிழில் படிப்பவற்றின் ஆங்கிலமொழி அர்த்தம் தெரியும்.
ஹிந்து ஏன் இப்படிச் செய்கின்றது என்பது வெளிப்படை உண்மை. அதனை கோவிகண்ணன் வெளிப்படையாகச் சொல்லியே விட்டார்.
//ஒரு சின்ன பின்னூட்டம் விவாத்தின் திசையவே மாத்திடுச்சு இல்ல ? //
இல்லை விவாதம் சரியான திசையில் தான் சென்று கொண்டிருக்கிறது.
நீண்ட தூர பேரூந்து பயணங்களில் காபிக்கு சாலையோர உணவகங்களில் அவ்வபோது வண்டி நிற்பது போல் நாம் சிறிது நகைச்சுவையுடன் பேசுகிறோம். அவ்வளவு தான்
வந்தியத்தேவன்,
கருத்திற்கு நன்றி.
தெளிவாக எடுத்துரைத்துள்ளீர்கள் :)
I thought the same after reading the article in 'The Hindu'. There are 100 examples of such broadly one-sided articles by Madras Media Mafia. Kudos for the excellent article, Dr. Bruno.
I am also a Tamil-medium student. Even in Diploma First year we had Engineering Drawing and Physics in Tamil! and I also came through IIT very successfully @ 9.44/10 CGPA. (Not to boast, but just to reinforce the point that how idiotic her opinions are).
Sorry, I had to type in English, as I do not have any Tamil tool here.
காசி சார்,
கருத்திற்கு நன்றி
//There are 100 examples of such broadly one-sided articles by Madras Media Mafia//
உண்மைதான். ஆனால் இனி வரும் கட்டுரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தோமென்றால் வருங்காலங்களிலாவது இது போல் அபத்தங்களை எழுத தயங்குவார்கள் என்று நினைக்கிறேன். (முற்றிலும் நிற்காவிட்டாலும் எண்ணிக்கை குறையுமல்லவா)
எனக்கென்னவோ, அனைவரையும் ஆங்கிலத்துக்கு மாற்றி சர்குலேசனை அதிகரிக்கும் ஹிண்டுவின் தொழில்யுக்தியாகவே தெரிகிறது :-D
(சும்மா ஒரு மொக்கை for relax)
//இன்றும்
உலகெங்கும் அறிஞர்கள் அதை
கொண்டாடுகிறார்கள்.அதில் உள்ளவற்றை ஆராய்கிறார்கள்.
ஆயுர்வேத நூல்கள் எம்மொழியில்
உள்ளன.சரக சம்கிதை எம்மொழியில்
உள்ளது என்பதை அறிவாயா மூடனே//
அறிஞர் பெருமானே உங்க பாஷையிலே எழுதவேண்டியதுதானே. எம்மொழியில் வந்து ஏன் வாந்தி எடுக்கின்றாய்.
//சோழர் பல நாடுகளை வென்றதை மறைத்து “இந்தியா எந்த நாட்டின் மேலும் போர் தொடுக்க வில்லை” என்று மின் மடல்களை அனுப்புபவர்கள் இருக்கிறார்கள் என்பதால் தான் இந்த ஐயம்//
சோழர்கள் இந்தியர்களா? தோழரே srilanka, indonesia, malaysia எல்லாம் அகண்ட பாரதத்தை சேர்ந்தது. அதனால் அது எல்லாம் போராகாது.
ஒரு விதத்தில் பார்த்தால் அந்த email correct தான். பிரிட்டீஷ்காரன் வந்துதானே இந்தியா என்ற தேசத்தை உருவாக்கினான். அதற்கு முன்பு .....
ஐயா,
வணக்கம்.
தவறான தகவல்களுடன் கட்டுரைகள் இந்து நாளிதழில் வருவது புதிய செய்தியன்று. - குறிப்பாக , தமிழு
க்கு எதிராக எழுதும்போதெல்லாம்!
ஞாயத்தோடும் நேர்மையோடும் நீங்கள் வெளிப்படுத்திய கருத்துக்கள் கயமையின் கன்னத்தில் விழுந்த அறைகளென்றே சொல்லலாம்!
உங்கள் உணர்வாடு முழுவதும் இச்செய்தியில் ஒன்றுகிறேன்.
நாம் எத்தனைமுறை விளக்கிக் கூறினும் அவர்கள் போக்கை மாற்றிக்கொள்வதில்லை என்பதை உணரவேண்டியவர்களாக இருக்கிறோம்.
அன்பன்,
தமிழநம்பி.
டாக்டர். புருனோ,
ஓவ்வொரு முறையும் அழகான விவாதத்துக்குறிய நல்ல விசயங்களை கவனித்து இங்கு கொண்டு வருவதற்கு உங்களுக்கோர் சிறப்பு நன்றி, இத் தருணத்தில்.
நான் அறிந்த மட்டிலும் எல்லா மொழிகளுக்குமே பேச்சு மற்றும் எழுத்துக்கென்றே நடை ஒன்று இருப்பதாகவே தெரிகிறது. பேச்சு மொழி ஆங்கிலத்தை அப்படியே மொட்டையாக எழுதினால் அதன் மொழி ஆளுமையும், புலமையும் பல்லிளித்துவிடும் தானே ;-).
இங்கு பலபேர் குறிப்பிட்டபடி தமிழ் வழி பாட நூல்கள் சுவாரசியமான நடையில் எழுதப் படமால் போவதற்கு மொழியின் குறை கிடையாது, அதனை உள்வாங்கி திருப்பிக் கொடுப்பவர்களின் திறமையைப் பொருட்டே அமைக்கிறது. தினசரி வாழ்க்கையில் யாரும் இங்கும்(ஆங்கிலத்தில்) கூட துறைசார்ந்த கலைச் சொற்களை பயன் படுத்துவதற்கான அவசியம் இருப்பதில்லை. இது எல்லா மொழிகளுக்கும் பொருந்தும் என்றே கருதுகிறேன்.
மீண்டும் நான் நினைவுகூற நினைப்பது, முதலில் ஆசிரியர்கள் எந்த வகுப்பு எடுக்கிறார்களோ அதனை நன்கு உள்வாங்கி எளிமையாக கொடுக்க முன்வந்தால் தாய் மொழியில் மிக எளிதாகவே இதர பிரிவு துறைப் பாடங்களையும் நன்றாகவே ஆழ அறிவுடன் கற்றுத் தேரமுடியும். பிரச்சினை - அடிப்படையில் தாய் மொழியிலும் தகிடுதத்தம், இரவல் மொழியிலும் தகிடுதத்தமாய் அமையக் காரணம் அடிப்படையில் ஆசிரியர்கள் புலமையற்று இருப்பதே.
நானும் தருமியும் இதனையொட்டி ஆளுக்கொரு பதிவு சில வருடங்களுக்கு முன்பு எழுதியிருக்கிறோம். நேரமிருப்பின் வாசித்துப் பாருங்கள்.
இது தருமியின் பதிவு ===> 12. MOTHER TONGUE - THE RAJ LEGACY
ஊருணியில் என்னோடது ====> The Red Chair and English...
//எனக்கென்னவோ, அனைவரையும் ஆங்கிலத்துக்கு மாற்றி சர்குலேசனை அதிகரிக்கும் ஹிண்டுவின் தொழில்யுக்தியாகவே தெரிகிறது :-D//
:) :) :)
வெண்தாடிதாசன்
உங்கள் கருத்திற்கு நன்றி
தமிழநம்பி
தங்களின் கருத்திற்கும் ஆதரவிற்கும் நன்றி
//நானும் தருமியும் இதனையொட்டி ஆளுக்கொரு பதிவு சில வருடங்களுக்கு முன்பு எழுதியிருக்கிறோம். நேரமிருப்பின் வாசித்துப் பாருங்கள்.//
வாசித்து பார்த்தேன். நாமெல்லாம் பல காலமாகவே சங்கை ஊதிக்கொண்டிருக்கிறோம் என்று தெரிகிறது. :)
You rightly said it. I was telling to my friends that the quality of Hindu was coming down in terms of English. BUt now its going donw in terms of thinking as well.
Thanks for registering the protest.
//Thanks for registering the protest.//
ஆதரவிற்கு நன்றி
பின்னூட்டங்களையெல்லாம் படித்துவிட்டு மீண்டும் வந்தேன்.தமிழில் படித்த நான் ஆங்கிலத்தில் டஃப்டன் பள்ளியில் படித்த நண்பனுக்கு அவர் கருத்து சொல்ல ஆங்கிலத்தில் நான் கடிதத்தை எழுதும் நிலைமையை நினைத்து சிரித்துவிட்டுப் போகிறேன்:)
புருனோ சார், நான் இது சம்பந்தமா ஒரு பதிவு போட்டு இருக்கேன். படிச்சுட்டு உங்க பதிலை சொல்லுங்க.
Hating sanskrit is no solution.
How much of the global knowledge is available in Tamil. In many
subjects there is not even a primer or single article in Tamil.
So understand the condition of Tamil vis a vis global knowledge
before ridiculing sanskrit.
Sanskrit is not a dead language.If one goes by number of speakers, there are many languages which are spoken by very small groups whose
numbers are not even in thousands.
Sanskrit is relevant for modern world.The sanskrit hating morons who also happen to be tamil zealots should read this article
http://www.ebc-india.com/lawyer/articles/2004v6a5.htm
In drug discovery using ayurveda
as the source of knowledge, the
texts in sanskrit are of enormous
value. As an India I am proud of both sanskrit and Tamil.The world values sanskrit. Of course one cant expect that from bigots whose
contribution to their own mother
tongue is next to nothing.
//Hating sanskrit is no solution.//
சமஸ்கிருத்தை வாழ வைப்பதற்காக தமிழை அழிக்கிறார்கள் என்பதால் தான் தமிழர்களுக்கு வெறி
//How much of the global knowledge is available in Tamil.//
சமஸ்கிருதத்தில் இருப்பதை விட 1000 மடங்கு
//In many subjects there is not even a primer or single article in Tamil.//
அதை விட 1000 மடங்கு தலைப்புகள் பற்றி சமஸ்கிருதத்தில் கட்டுரை கிடையாது
//So understand the condition of Tamil vis a vis global knowledge
before ridiculing sanskrit.//
செத்த மொழியின் நிலையை பற்றி தெரிந்த பின் தமிழ் பற்றி குறை கூறு
//Sanskrit is not a dead language.//
அப்படியா. அதை நீ தான் கூறுகிறாய்
//If one goes by number of speakers, there are many languages which are spoken by very small groups whose numbers are not even in thousands.//
அவை கூட செத்த மொழிகள் தான்
//Sanskrit is relevant for modern world.//
எப்படி
//The sanskrit hating morons who also happen to be tamil zealots should read this article
http://www.ebc-india.com/lawyer/articles/2004v6a5.htm
//
அதில் என்ன இருக்கு. நீதிதுறையில் இருக்கும் எவனோ ஒருத்தன் செத்த மொழிக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறான்
//In drug discovery using ayurveda
as the source of knowledge, the
texts in sanskrit are of enormous
value.//
அப்படியா. ஆயுர்வேதத்தை விட அதிக மருந்துகள் கொண்ட சித்த வைத்தியம் தமிழில் இருக்கு தெரியுமா உனக்கு
//As an India I am proud of both sanskrit and Tamil.//
நல்லது
//The world values sanskrit.//
அதை உன்னைத்தவிர (உன் போன்றவர்களை தவிர) வேறு யாரும் சொல்லவில்லையே
//Of course one cant expect that from bigots whose contribution to their own mother tongue is next to nothing.//
உன் தாய் மொழி எது
அதற்கு நீ என்ன செய்திருக்கிறாய் என்று கூற முடியுமா
ராஜ நடராஜன், அவனும் அவளும் , ரவி ஸ்ரீனிவாஸ், அனானி
கருத்திற்கு நன்றி
//Hating sanskrit is no solution.
How much of the global knowledge is available in Tamil. In many
subjects there is not even a primer or single article in Tamil.
So understand the condition of Tamil vis a vis global knowledge
before ridiculing sanskrit.
Sanskrit is not a dead language.If one goes by number of speakers, there are many languages which are spoken by very small groups whose
numbers are not even in thousands.
Sanskrit is relevant for modern world.The sanskrit hating morons who also happen to be tamil zealots should read this article
http://www.ebc-india.com/lawyer/articles/2004v6a5.htm
In drug discovery using ayurveda
as the source of knowledge, the
texts in sanskrit are of enormous
value. As an India I am proud of both sanskrit and Tamil.The world values sanskrit. Of course one cant expect that from bigots whose
contribution to their own mother
tongue is next to nothing.//
இந்த அற்புதமான(!) கருத்தை எழுதிய ரவி ஸ்ரீனிவாஸ் இதை முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறார்(தமிழில் எழுதாமல் புறக்கணிக்கிறாராம்). அவருக்கு முதலில் சமஸ்கிருதம் தெரியுமா? சமஸ்கிருதத்தில் சேர்ந்தது மாதிரி ஒரு வரி எழுத முடியுமா? சமஸ்கிருதத்தை ஆதரிப்பவர்களில் எத்தனை பேருக்கு அந்த மொழி தெரியும்? ஆதரிக்கவேண்டுமே என்ற காரணத்துக்காக ஆதரிப்பது போல இருக்கிறது.
ஆயுர்வேத நூல்கள் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருக்கிறதாம். புரூனோ மருத்துவதுறையில் இருப்பதால் அவருக்கு இந்த கேள்வி: இந்தியாவில் இருக்கும் நோயாளிகளில்(படித்தவர்கள்) எத்தனை பேர் சித்த வைத்திய முறையை பின்பற்றுகிறார்கள்? இந்த கருத்தை எழுதியவர் பயன்படுத்துவாரா?(நான் தலைவலி,கோல்ட் போன்ற சும்மா விட்டால் தானாகவே போய்விடுகிற நோய்களை குறிப்பிடவில்லை. சீரியசான நோய்கள், உயிர்க்கொல்லி நோய்களைப்பற்றி குறிப்பிடுகிறேன்).
விவாதம் தமிழை தமிழில் கற்பது கடினமா என்பதும் மீரா சீனிவாசனின் வாசகமும்தான்.ரவி சீனிவாஸ் ஏன் விவாதக்களத்தை சமஸ்கிருதத்திற்கு திசை திருப்புகிறார்?
//விவாதம் தமிழை தமிழில் கற்பது கடினமா என்பதும் மீரா சீனிவாசனின் வாசகமும்தான்.ரவி சீனிவாஸ் ஏன் விவாதக்களத்தை சமஸ்கிருதத்திற்கு திசை திருப்புகிறார்? //
ஐயா ரவி தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்
அன்பிற்குரிய மரு.புரூனோ,
இந்தச் செய்தியை வேறு வகையிற் பார்க்கலாமே?
புவி ஈர்ப்பு விசை என்ற கூட்டுச் சொல்லைப் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு அந்த மாணவனோ, அல்லது அதை விளக்க முடியாத அளவிற்கு அந்த அறிவியல் ஆசிரியரோ இருக்கிறார் என்றால், அவர்களின் பின்புலம் எங்கோ சீரழிந்திருக்கிறது என்று நிர்வாக அடிப்படையில் கொள்ளலாமே? அதோடு "நம் குமுகாயத்தில் நல்ல தமிழ் குறைந்து வருகிறது, நாம் பிறமொழிப் பயன்பாட்டைக் கூட்டிக் கொண்டிருக்கிறோம்" என்று ஆகிறதல்லவா? இந்நிலையில்,
நோய்நாடி, நோய்முதல் நாடி, அது தணிக்கும்
வாய்நாடி, வாய்ப்பச் செயல்
என்பதன்வழி, நாம் எல்லோரும் பிறமொழிக் கலப்பைக் கூடியவரை தவிர்த்து, நம் இளையோருக்கும் அதைச் சொல்லி, ஊரெங்கும் அந்தக் கருத்தைப் பரப்பி, ஓர் எழுச்சி பெறச் செய்யலாமே?
பொதுவாய் இன்றையத் தமிழ் நடையின் நிலை கவலைக்கிடமே! அதைத் தொலைக்காட்சி, நாளிதழ்கள், தாளிகைகள் வழியாக உணரமுடியும். அண்மையில் புத்துருவாக்கம் பெற்ற ஆனந்த விகடன் முற்றிலும் தமிங்கில நடைக்கு மாறியதைக் கவனத்தில் கொள்ளுங்கள். மற்ற தாளிகைகளும் இதே போல வணிக வரிதியாய் இன்னுஞ் சில மாதங்களில் மாறக் கூடும். இது போன்ற மாற்றங்களால் தமிழரில் இருந்து தமிங்கிலர் என்பவர் புற்றீசலாய் உருவாகுவது விரைவாகிக் கொண்டிருக்கிறது. நாமோ ஒன்றுஞ் செய்யாது வாளாது இருக்கிறோம். நம் கண்முன்னே ஒரு புது மலையாளம் உருவாகிக் கொண்டிருக்கிறது. மொத்தத்தில் வீடு பற்றி எரிகிறது. அதை அணைக்க ஒரு குடம் தண்ணீர் கூட ஊற்றாது நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். சத்தம் போடாது இருக்கிறோம்.
அன்பர்கள் எல்லோருக்கும் என் வேண்டுகோள்: செல்வி மீரா சீனிவாசனின் பதிவாக்கத்தை நம் எல்லோருக்கும் தரும் உணர்வுறுத்தலாய்க் கொண்டு, நம்மால் முடிந்த பணிகளைச் செய்வோம். நல்லதமிழ்ப் புழங்குவோம். மற்றவருக்கும் சொல்லுவோம்.
ஊர்கூடித் தானே தேர் இழுக்க வேண்டும்?
அன்புடன்,
இராம.கி.
//இந்தியாவில் இருக்கும் நோயாளிகளில்(படித்தவர்கள்) எத்தனை பேர் சித்த வைத்திய முறையை பின்பற்றுகிறார்கள்? இந்த கருத்தை எழுதியவர் பயன்படுத்துவாரா?(நான் தலைவலி,கோல்ட் போன்ற சும்மா விட்டால் தானாகவே போய்விடுகிற நோய்களை குறிப்பிடவில்லை. சீரியசான நோய்கள், உயிர்க்கொல்லி நோய்களைப்பற்றி குறிப்பிடுகிறேன்). //
இதற்கும் ஐயா ரவி தான் பதில் சொல்ல வேண்டும்
//நாம் எல்லோரும் பிறமொழிக் கலப்பைக் கூடியவரை தவிர்த்து, நம் இளையோருக்கும் அதைச் சொல்லி, ஊரெங்கும் அந்தக் கருத்தைப் பரப்பி, ஓர் எழுச்சி பெறச் செய்யலாமே?
//
கண்டிப்பாக செய்ய வேண்டும். அதற்கான நேரம் வந்துவிட்டது என்றே நினைக்கிறேன்
ரவி சொன்னது ஆயுர்வேதம் (சமஸ்கிரதம்)
கயல்விழி சொலவது சித்த (தமிழ் வைத்திய முறை)
இரண்டிற்கும் பாரிய இடைவேளை உள்ளது.
எனக்கு தெரிந்து ஆயுர்வேதத்தில் குணப்படுத்த முடியாத பல நோய்களுக்கு சித்த முறையில் சிறந்த சிகிச்சை உள்ளது.
தரமான பதிவு தலைவரே!
//தரமான பதிவு தலைவரே! //
நன்றி
வணக்கம் ...
இன்னும் வளர என் வாழ்த்துக்கள்.தொடருங்கள்.
http://loosupaya.blogspot.com
sharevivek
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
தமிழ்வழிக் கல்வியை விடுங்கள். இந்த காலத்து குழந்தைகள் தமிழை ஒரு பாடமாக எடுத்துப் படித்தாலே நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்.
தமிழ் மொழியை படிப்பதோ / தமிழில் பேசுவதோ தரக்குறைவான ஒன்று எண்ணும் குழந்தைகள் / இளைஞர்கள் லட்சக்கணக்கில் உண்டு சென்னை போன்ற நகரங்களில்.
என்னுடைய ஆதங்கத்தை முன்னொரு பதிவில் சொல்லியிருந்தேன்.
http://joeanand.blogspot.com/2009/04/blog-post_9262.html
//தமிழ் மொழியை படிப்பதோ / தமிழில் பேசுவதோ தரக்குறைவான ஒன்று எண்ணும் குழந்தைகள் / இளைஞர்கள் லட்சக்கணக்கில் உண்டு சென்னை போன்ற நகரங்களில்.//
உங்கள் ஆதங்கள் உண்மைதான் சார்
Post a Comment