முற்பட்ட சமுகத்தை சேர்ந்த சிலர் பணம் கொடுத்து பிற்படுத்தப்பட்டோர் என்று சான்றிதழ் பெறுகிறார்கள் என்பதை ஆதாரத்துடன் குமுதம் இதழ் வெளிக்கொண்டுவந்திருப்பதாக தெரிவிக்கிறார். (பிற்பட்ட வகுப்பு சான்றிதழால் பலன் பெறக்கூடிய ஒரே வகுப்பு முற்பட்டவர்கள் என்று குழந்தைக்கு கூட தெரியும். போலி வருமான சான்றிதழ், போலி மதிப்பெண் சான்றிதழ் போன்றவை வேண்டுமென்றால் அனைவருக்கும் பொது எனலாம்
)
`சாதிகள் இல்லையடி பாப்பா!' என்று பாடிய சுப்பிரமணிய பாரதிக்கு சாதிச் சான்றிதழ்! அதுவும் பிற்படுத்தப்பட்டவர் என்று!நல்ல கேள்விகள் ஐயா......
அப்படித்தான் பாரதியாருக்கும் வகுப்பு மாறி இடம் ஒதுக்கப்பட்டது. பாரதி மறைந்து எண்பத்தேழு ஆண்டுகளுக்குப் பின்பு, `புதுப்பேட்டையில் இருக்கிறார். அவருக்கு ஜாதி கிடையாது. ஆனால் சான்றிதழ் வேண்டும்!' என்று நாம் கேட்ட இரண்டாவது நாளே நாடார் சமூகத்தில் அவரைச் சேர்த்து நம்மை பிரமிக்க வைத்துவிட்டனர்!
சாதியும், முறையும் எப்படி இருந்தால் என்ன, தவறு செய்கிறார்களா? இல்லையா? என்பதுதான் முக்கியம் என்று நாமும் அதைப் பெரிதுபடுத்தவில்லை. ஆனாலும் பேச்சுக்கு, ``இந்த சர்டிஃபிகேட் ஒரிஜினல்தானா?'' என்று கேட்டோம்.
``இது செல்லாத இடம் ஒன்று இந்தியாவில் இல்லை! என்னவொன்று இதனுடைய நகலை மட்டும் அலுவலகத்தில் இருந்து அப்புறப்படுத்திவிடுவோம்!'' என்று சர்வசாதாரணமாகச் சொல்கிறார்கள். இதைச் செய்ய தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட புரோக்கர்கள் ஓர் அமைப்பாகவே செயல்படுகிறார்களாம்.
ஆக, பாரதியார் நாடார் ஆவதும்; குஷ்பு மறவர் ஆவதும் இவ்வளவு எளிது என்றால், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடெல்லாம் யாருக்காக? எதற்காக? எதுவாயினும், விற்கப்படுவது சான்றிதழ் அல்ல சமூக நீதி என்பதைப் புரிந்துகொண்டு, அதன் காவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்தால் சரி!.
பாரதியார் நாடார் ஆவதும்; குஷ்பு மறவர் ஆவதும் இவ்வளவு எளிது என்றால், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடெல்லாம் யாருக்காக? எதற்காக?......
இப்படி பிற்பட்டவர்களுக்கு அரசு அளிக்கும் சலுகையை ஏமாற்றி பெறும் முற்பட்டவர்கள் பற்றி தோலுரித்து காட்டியதற்கு ஐயா ஹரிகரனுக்கு கோடி நமஸ்காரங்கள்
என்னைபோல் இடப்பங்கீடு ஆர்வலர்களும் ஐயா ஹரிஹரனுக்கு நன்றி கூறுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன் ;) :) ;) :)
இதை வெளிக்கொண்டுவந்த குமுதம் இதழுக்கும் நமது நன்றிகள்
இது போல் நடக்கும் மோசடிகளை ஐயா ஹரிஹரன் தொடர்ந்து வெளிகொண்டுவந்து ஏமாற்று பேர்வழிகளின் முகமூடிகளை கிழிப்பார் என்று எதிர்பார்க்கிறேன் ;) :) ;) :)
மேலும் அவர் மற்றொரு அதிர்ச்சி தகவலையும் அளிக்கிறார்
பி.குறிப்பு 2:ஆத்தாடி.... இது எப்படி என்று யோசித்தால், பதிலும் அவர் பதிவிலேயே இருக்கிறது
தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7 கோடி, கொடுக்கப்பட்ட இட ஒதுக்கீடு ஜாதிச் சான்றிதழ் அடிப்படையிலான மக்கள் தொகை 10 கோடிக்கும் மேல்??
குறிப்பு 3:அடப்பாவிகளா, அப்படி என்றால் மற்ற மாநிலம், மற்ற நாட்டிலிருந்து எல்லாம் முற்பட்ட வகுப்பினர் (பிற்பட்டவர்கள் என்ற) போலி சான்றிதழ் வாங்கி இங்கு தமிழக அரசு தீப்பெட்டி தொழிற்சாலையில் வெந்து அப்படியும் படித்து மதிப்பெண் பெரும் மாணவி செல்வி போன்றவர்களுக்கு அளிக்கும் சலுகையை சட்ட விரோதமாக அனுபவிக்கிறார்களா. இது குறித்து இந்த குறிப்புகளை எழுதிய ஹரிஹரன் ஐயா தான் விளக்க வேண்டும் :)
இனி தமிழ்நாட்டுல போங்கடா புள்ளகுட்டிங்கள டிஸ்கவுண்டட் இடஒதுக்கீடு ஜாதிச்சான்றிதழ் வாங்கிட்டு படிக்க வைங்கடான்னு சொல்லிக்கலாம்!
ஐயா, ஹரிஹரன் ஐயா.... உங்களுக்கு புண்ணியமாக போகும். அப்படி பட்டவங்க யாராவது உங்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தால் தயது செய்து சொல்லுங்கள். புகார் அளித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்
பின் குறிப்பு 1 : இடப்பங்கீடு குறித்த விபரங்கள், மற்றும் சில கருத்துகள் எனது பழைய இடுகையில் உள்ளன : தமிழகத்தில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 500 மாணவர்களின் ஜாதி என்ன
பின் குறிப்பு 2 : சொ.செ.சூ என்றால் என்ன
பிற்சேர்ப்பு : சாதி சான்றிதழ் குறித்த அடுத்த இடுகை
45 மறுமொழிகள்:
குறிப்பு 2, 3 கவலை அளிக்கிறது :(
**
ஆனால், முற்பட்டவர்கள் (FC) மட்டுமின்றி BC, MBC வகுப்பினரும் தங்களுக்குக் கீழ் MBC, SC என்று மாற்றிச் சாதிச் சான்றிதழ் வாங்குவதும் நடக்கிறது. இதுவும் குற்றமே.
//குறிப்பு 2, 3 கவலை அளிக்கிறது :(//
அது உண்மையா என்று அந்த குறிப்புகளை எழுதிய பதிவர் ஹரிஹரன் விளக்க வேண்டும். ஒரு வேளை அது ஆதாரமில்லாதௌ என்றால் கவலைப்பட தேவையில்லை :)
**
//ஆனால், முற்பட்டவர்கள் (FC) மட்டுமின்றி BC, MBC வகுப்பினரும் தங்களுக்குக் கீழ் MBC, SC என்று மாற்றிச் சாதிச் சான்றிதழ் வாங்குவதும் நடக்கிறது. இதுவும் குற்றமே.//
யார் செய்தாலும் தவறு தவறு தான். அதில் சந்தேகமே கிடையாது.
(பிற்பட்ட வகுப்பு சான்றிதழால் பலன் பெறக்கூடிய ஒரே வகுப்பு முற்பட்டவர்கள் என்று குழந்தைக்கு கூட தெரியும்)
புருனோ ஐயா,
இட ஒதுக்கீட்டு பலனுக்காகவும், அரசு வேலைக்காகவும் தம் சமூகத்தை மிகவும் பிற்படுத்திக்கொள்வதிலும், தாழ்த்தப்பட்டவர்களாக்கிக் கொண்டு, இருப்பதிலேயே பழங்குடி என்று காட்டிக்கொள்ளத் துடிப்பவர்கள் அரசியல் இயக்கம் வைத்து சாதித்துக்கொள்பவர்கள் "பிற்படுத்தப்பட்டவர்கள்" தெற்கே தமிழகத்தில் வன்னியர்கள் வடக்கே குஜ்ஜார்கள் என்பது தாங்கள் அறிந்திருப்பீர்கள்.
அதுவும் தமிழகத்தில் 95% பிற்படுத்தப்பட்டவர்களால் நடத்தப்படும் பிற்படுத்தோர் துறையில் "இடஒதுக்கீடு சாதிச்சான்றிதழ்" அமோகமாக விற்பனை செய்யப்படுவது பிற்படுத்தப்பட்டோர்களால் தான் என்பதும் தங்களுக்குத் தெரிந்ததே!
இந்த 'இடஒதுக்கீட்டு சாதிச்சான்றிதழ்" விற்பனையை - பகுத்தறிவு திராவிட கழக அரசுகள் தமிழகத்தில் இதுகாறும் நாற்பது ஆண்டுகளாக முறையற்று மறுக்கப்பட்ட முற்படுத்தப்பட்டவர்களுக்காக பிற்படுத்தப்பட்டவர்கள் தாமே முன்வந்து வலிந்து செய்யும் பொதுத்தொண்டாக எடுத்துக்கொண்டு பயன் பெறலாமா? :-))
இந்த செய்தி ஆதரப்பூர்வமானதா..??
//95% பிற்படுத்தப்பட்டவர்களால் நடத்தப்படும் பிற்படுத்தோர் துறையில்//
ha ha, these ppl are experts in "so se soo"!
Hariharan showed how these forward castes can cheat the others. We have to be more vigilant on this issues. Corruptions knows no boundaries! Mainly in the uppercastes it takes the organised crime form! The entire community can behave like mafia! Only after the supreme court's kick in the butt the IIMs and IITs ... ha ha even AIMS listened!
Osai Chella as anony
'முற்பட்ட வகுப்பினர் பெறும் போலி பிற்பட்ட வகுப்பு சான்றிதழ்கள்'
முள்ளை முள்ளால் எடுப்பது
என்பது இதுதானா?.
'ஆனால், முற்பட்டவர்கள் (FC) மட்டுமின்றி BC, MBC வகுப்பினரும் தங்களுக்குக் கீழ் MBC, SC என்று மாற்றிச் சாதிச் சான்றிதழ் வாங்குவதும் நடக்கிறது. இதுவும் குற்றமே.'
இதற்காக தண்டிக்கப்பட்டவர்கள்
எத்தனை பேர்.சட்ட்ப்படி
தவறு என்று பேசுவதில் அர்த்தமில்லை.ஏன் மக்கள் இப்படி செய்கிறார்கள் என்பதையும் யோசியுங்கள்.இந்த இடஒதுக்கீடு
முறையே கோளாறாக இருக்கும்
வரை இவை தொடரும்.
ஹரிஹரன் சார்,
தங்களின் கருத்துகளுக்கு ஆதாரம் இருந்தால் கூறவும்.
ஆதாரம் இல்லாமல் கூறினால் அந்த தவறாக தகவல் / கருத்தின் பெயர் “கற்பனை”
(உண்மை) தெரிந்தே பொய்களை சொல்லும் கேவல பிழைப்பை நீங்கள் செய்யமாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது :) :)
//இந்த செய்தி ஆதரப்பூர்வமானதா..??
//95% பிற்படுத்தப்பட்டவர்களால் நடத்தப்படும் பிற்படுத்தோர் துறையில்////
ஐயா ஹரிஹரன்.
தாங்கள் தான் இதற்கு பதிலளிக்க வேண்டும்
சில முற்பட்ட வகுப்பினரின் (போலி சான்றிதழ் பெறும்) திருட்டுத்தனத்தை ஆதாரத்துடன் வெளிக்கொண்டு வந்தது போல் இதற்கும் ஆதாரம் அளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
ஒரு வேளை இது தட்சச்சு பிழை என்றால் நீக்கி விடவும் :) :)
(உண்மை) தெரிந்தே பொய்களை சொல்லும் கேவல பிழைப்பை நீங்கள் செய்யமாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது :) :)
[[தங்களது பதிவில் குறிப்பிட்டிருக்கும்
வார்த்தைகள் நகைச்சுவையானவை.
//(பிற்பட்ட வகுப்பு சான்றிதழால் பலன் பெறக்கூடிய ஒரே வகுப்பு முற்பட்டவர்கள் என்று குழந்தைக்கு கூட தெரியும்)// ]]
இதில் என்ன நகைச்சுவை.
பிற்பட்டோர் சான்றிதழால் பயன் பெறக்கூடியது முற்பட்டவர்கள்தானே ??
போலி வருமான சான்றிதழ், போலி மதிப்பெண் சான்றிதழ் போன்றவை வேண்டுமென்றால் அனைவருக்கும் பொது எனலாம்
புரிகிறதா
நீங்கள் போலி "பிற்பட்டவகுப்பினர் சான்றிதழ்" என்று கூறியதால் தான் குற்றவாளி (பலனாளி) யார் என்று கூறினேன்
மீண்டும் நன்றி
//ஏன் மக்கள் இப்படி செய்கிறார்கள் என்பதையும் யோசியுங்கள்.இந்த இடஒதுக்கீடு முறையே கோளாறாக இருக்கும் வரை இவை தொடரும்.//
இதற்கு காரணம் இடப்பங்கீடு இல்லை. இடப்பங்கீடு முறை கோளாறு அல்ல.
நிலப்பதிவில் நில மதிப்பை தவறாக தருகிறார்கள் என்பதற்காக நிலபதிவு நடைமுறையை நிறுத்த முடியாது
புரியவில்லையா...
மதிப்பெண் சான்றிதம் கூட போலியாக வருகிறது. தேர்வுகளை நிறுத்தலாமா
அல்ல மென்பொருள் துறையில் அனுபவச்சான்றிதழ் எத்தனை சதவிதம் உண்மை ?? அனுபவச்சான்றிதழ் வேண்டாமா :) :) :) :)
ஏன் சாமி எதை (எந்த தவறை) எடுத்தாலும் அதற்கு காரணம் இடப்பங்கீடு என்று கூறுகிறீர்கள் :) :)
செல்லா சார்,
வருகைக்கு நன்றி !!
ஏன் அனானியாக பின்னூட்டமிடுகிறீர்கள்
//Hariharan showed how these forward castes can cheat the others.//
Osai & others,
It is not me, but a DMK aligned magazine brought out the ramphant corruption in one of the Key department of TN state and the how inefficient the 69% caste based reservation in TN actually is!
It is for Those doubting thomases to Checkout the fact of 95% workers in the alleged TN dept is actually managed by socalled Backward class only!
If anything to be laughed at it is the inefficiency of the current caste based reservation system and the variety of corruptive avenues it opens up and the ever falling attitude of overall community for the sake of reservation benefits leaving the the real deserving to get any help!!
Although Dr. Bruno allows comments attacking me as individual , I am still confidant Dr. Bruno will inculcate and elevate debates to remain with all necessary decorum to be called a debate!
Good Luck!
//நீங்கள் போலி "பிற்பட்டவகுப்பினர் சான்றிதழ்" என்று கூறியதால் தான் குற்றவாளி (பலனாளி) யார் என்று கூறினேன்//
நான் கூறியது "இடஒதுக்கீட்டு சாதிச்சான்றிதழ்" என்றே!
//போலி வருமான சான்றிதழ், போலி மதிப்பெண் சான்றிதழ் போன்றவை வேண்டுமென்றால் அனைவருக்கும் பொது எனலாம்//
இதிலே பலனாளிகள்:
1)பிற்பட்டவரிலிருந்து மிகவும் பிற்படுத்தப்படுத்திக்கொள்பவர்கள்
2)மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாக்கிக்கொள்வோர்
3)பழங்குடியாக்கிகொள்பவர்கள்
4)முற்பட்டவர்கள் பிற்படுத்திக்கொள்வது
போலி ஜாதிச்சான்றிதழ் பலனால் மாட்டிக்கொள்ள வாய்ப்பிருக்கும் முற்பட்டவரையும் விட இன்றைக்கு அரசியல் செல்வாக்குடன் இருக்கும் இதர கிரீமி லேயர் சாதிக்காரர்களுக்குத்தான் பலன் அதிகம் தருகிறதாய் இருக்கிறது!
சாதியால் முற்பட்ட அரசியல் அதிகாரம் அற்ற சாமான்யர்கள் கல்விக்கு பல்கலைக்கழகங்களின் தொலை தொடர்பு முறையில் பயிற்றுவிக்கப்படும் எம்.சிஏ, எம்.எஸ்ஸி பிஸிக்ஸ், கெமிஸ்டிரி, எலக்ட் ரானிக்ஸ் கம்யூனிகேஷன், எம்பிஏ போன்றவை சாதி சார் 69%இடஒதுக்கீடு எனும் கிருமி இல்லாமல் நேரடியாக படிக்க விரும்பும் அனைவருக்கும் உதவுகின்றன!!
//Although Dr. Bruno allows comments attacking me as individual , I am still confidant Dr. Bruno will inculcate and elevate debates to remain with all necessary decorum to be called a debate!//
பதிவர் ஹரிஹரனை தனிப்பட்ட ரீதியாக பெயர் குறிப்பிட்டு தாக்கும் மறுமொழி எதுவென்று கூறவும்.
உடனடியாக நீக்கி விடுகிறேன்.
//how inefficient the 69% caste based reservation in TN actually is!//
பதிவர் ஹரிஹரன்.
காசு கொடுத்தால் போல் சான்றிதழ் கிடைக்கிறது என்று தான் அந்த இதழில் இருந்ததே தவிர மேலே கூறியிருப்பது உங்கள் சொந்த கருத்து.
இது ஆதாரமில்லாத முழு பொய்
அந்த கட்டுரையில் கடைசியாக இருந்த ஒரு வாக்கியத்தை நீங்கள் கவனிக்க வில்லை (அல்லது உங்களுக்கு புரியவில்லை)
உங்கள் வசதிக்காக அதை நான் பெரிய எழுத்தில் காட்டியிருந்தேன்.
திரும்ப படிக்கவும். புரியவில்லை என்றால் கூறவும்
இது போன்ற போலி சான்றிதழ்களால் பாதிப்பு கிடையாது என்பதை குமுதமே புத்திசாலித்தனமாக எழுதிவிட்டார்கள்.
நீங்கள் அதை வைத்து உங்கள் சொந்த கருத்தை எழுத நினைக்கிறீர்கள்
உங்களுக்கு சந்தேகம் இருந்தால் "சான்றிதழ் சரிபார்த்தல்” (Certificate Verification) என்றால் என்னவென்று உங்களுக்கு தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
அரசு மருத்துவக்கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் அனைத்து சான்றிதழ்களும் (10, 12 வகுப்பு, சாதி சான்றிதழ், விளையாட்டு சான்றிதழ்) அதை வழங்கிய அதிகாரி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு சரிபார்க்கப்படுமா என்று (நான் சொன்னால் நம்ப முடியவில்லை என்றால்) தெரிந்தவர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.
(செவிலியர் படிப்பில் மதிப்பெண் சரிபார்ப்பது கிடையாது)
//If anything to be laughed at it is the inefficiency of the current caste based reservation system and the variety of corruptive avenues it opens up and the ever falling attitude of overall community for the sake of reservation benefits leaving the the real deserving to get any help!!//
இது முற்றிலும் தவறான ஆதாரமில்லாத முழுபொய்.
பதிவர் ஹரிஹரன் இது போல் ஆதாரமில்லாத பொய்களை எழுதுவதை தவிர்க்கவும்.
அல்லது ஆதாரம் தரவும்.
//It is for Those doubting thomases to Checkout the fact of 95% workers in the alleged TN dept is actually managed by so called Backward class only!//
ஏன் சாமி, நீங்கள் கூறும் கருத்திற்கு ஆதாரம் கேட்டால் அதை அளிக்க வேண்டியது உங்கள் கடமை.
அப்படியில்லையென்றால் அது பொய் என்று தான் எடுத்துக்கொள்ளப்படும் என்று உங்களுக்கு தெரியாதா.
//அதுவும் தமிழகத்தில் 95% பிற்படுத்தப்பட்டவர்களால் நடத்தப்படும் பிற்படுத்தோர் துறையில் "இடஒதுக்கீடு சாதிச்சான்றிதழ்" அமோகமாக விற்பனை செய்யப்படுவது பிற்படுத்தப்பட்டோர்களால் தான் என்பதும் தங்களுக்குத் தெரிந்ததே!
//
சாதி சான்றிதழ் அளிப்பது எந்த துறை என்று கூட தெரியாமல் இது பற்றி எழுதுகிறீர்களே.
இது போல் அனைவருக்கும் தெரிந்த விஷயங்களிலேயே பொயை உண்மை போல் எழுதினால் பதிவர்கள் நடுவில் (உங்கள்
நம்பகத்தன்மை) குறையும் என்பது தெரியாதா
//பதிவர் ஹரிஹரன்.
காசு கொடுத்தால் போல் சான்றிதழ் கிடைக்கிறது என்று தான் அந்த இதழில் இருந்ததே தவிர மேலே கூறியிருப்பது உங்கள் சொந்த கருத்து.
இது ஆதாரமில்லாத முழு பொய்//
Dr.புருனோ,
சாதிச்சான்றிதழ் காசு கொடுத்து வாங்குவது முதல் படி அதற்கு ஒரு தொகை, அடுத்த மாட்யூல் அதை ரெகுலரைஸ் செய்வது! அதற்கு இன்னொரு தொகை!
பிற்படுத்தப்பட்டோர் உதவித்தொகை பெற குடும்ப வருமானம் வெரிபிகேஷன் செய்யப்பட்டு தொழிலதிபர் மகன் எனது சக மாணவன் (நண்பன்) உதவித்தொகையாக 1988ல் ரூ 250/- பெற்றதை நான் கண்டிருக்கிறேன்!
வெரிபிகேஷன் என்பது கல்வி உதவி தகுதிச் சான்றிதழ் புகைப்படத்துடன் கூடியதாக எம்பெட்டட் கைரேகை/கண்விழி -ஐரிஸ் இமேஜ் வெரிபிகேஷன் உள்ளதாக பகுத்தறிவுடன் செய்யவேண்டும்!
//சாதி சான்றிதழ் அளிப்பது எந்த துறை என்று கூட தெரியாமல் இது பற்றி எழுதுகிறீர்களே.
இது போல் அனைவருக்கும் தெரிந்த விஷயங்களிலேயே பொயை உண்மை போல் எழுதினால் பதிவர்கள் நடுவில் (உங்கள்
நம்பகத்தன்மை) குறையும் என்பது தெரியாதா//
எந்த துறையானலும் தமிழக அரசு வேலையில் குறைந்த பட்சம் 60-75%% பேர் பிற்படுத்தப்பட்டவர்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
சாதிச்சான்றிதழ் தரப்படும் துறை எது என்று எனக்குத் தெரியாதது என் மீதான நம்பகத்தன்மையை மேம்படுத்தவே செய்கிறது டாக்டர்!
வெரிபிகேஷன் என்பது கல்வி உதவி தகுதிச் சான்றிதழ் புகைப்படத்துடன் கூடியதாக எம்பெட்டட் கைரேகை/கண்விழி -ஐரிஸ் இமேஜ் வெரிபிகேஷன் உள்ளதாக பகுத்தறிவுடன் செய்யவேண்டும்!
அத்துடன் இரண்டாவது, மூன்றாவது தலைமுறையாக கல்வி உதவித் தகுதிக்கு முன்னுரிமை இவர்களுக்கு சாதி அடிப்படையிலே போய்ச்சேராமல் முதல் தலைமுறை கல்வி உதவித் தகுதி பெறுவோருக்கு முதல் முன்னுரிமை தரப்படும் வகையில் எம்பெட்டட் வெரிபிகேஷன் அமைக்கப்படவேண்டும்
//இது போல் அனைவருக்கும் தெரிந்த விஷயங்களிலேயே பொயை உண்மை போல் எழுதினால் பதிவர்கள் நடுவில் (உங்கள்
நம்பகத்தன்மை) குறையும் என்பது தெரியாதா//
டாக்டர் சார்,
அனைவருக்கும் தெரிந்த உண்மையான, அரசியல்வாதிகளால் முறைகேடுகள் பலவற்றுக்கு முழுமையான ஊற்றுக்கண்ணாகிவிட்ட
"சாதிசார்ந்த இடஒதுக்கீட்டை" கண்மூடித்தனமாக ஆதரிக்கும் உங்கள் நம்பகத்தன்மை இறங்கிவிட்டதாக கருதப்படக் வேண்டியதா?? :-))
//வெரிபிகேஷன் என்பது கல்வி உதவி தகுதிச் சான்றிதழ் புகைப்படத்துடன் கூடியதாக எம்பெட்டட் கைரேகை/கண்விழி -ஐரிஸ் இமேஜ் வெரிபிகேஷன் உள்ளதாக பகுத்தறிவுடன் செய்யவேண்டும்!//
கண்டிப்பாக விரைவில் அது நடைமுறைப்படுத்தப்படும்
//தொழிலதிபர் மகன் //
எனவே தொழிலதிபர் ஒரு மாதம் / ஒரு வருடம் 1 லட்சம் நஷ்டமடைந்திருக்கலாம். அடுத்த வருடம் 10 லட்சம் லாபம் பெற்றிருக்கலாம்.
மாத வருமாணம் உள்ளவர்களின் வருமானம் தான் சரிபார்க்க முடியும் என்பது உங்களுக்கு தெரியாதா.
இப்பொழுது தெரிகிறதா பொருளாதார ரீதியாக இடப்பங்கீடு எவ்வளவு அபத்தம் என்று :) :)
//எந்த துறையானலும் தமிழக அரசு வேலையில் குறைந்த பட்சம் 60-75%% பேர் பிற்படுத்தப்பட்டவர்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.//
ஐயா,
நீங்கள் முதலில் கூறியது 95%
தற்பொழுது கூறுவது 60 %
என்ன நடக்கிறது
//சாதிச்சான்றிதழ் தரப்படும் துறை எது என்று எனக்குத் தெரியாதது என் மீதான நம்பகத்தன்மையை மேம்படுத்தவே செய்கிறது டாக்டர்!//
ஐயா,
ஒரு விஷயம் தெரியாதது என்பதால் யாரையும் குற்றம் சொல்ல முடியாது.
ஆனால் தெரியாததை கூட தெரிந்தது போல் கூறுவது , அதுவும் பொய்யை கூறுவது தான் நம்பகத்தன்மை சார்ந்த விஷயங்கள்.
சாதி சான்றிதழ் பற்றி தெரியாத நீங்கள், அது எந்த துறை என்று கூட தெரியாதா நீங்கள் எழுதிய “"இடஒதுக்கீடு சாதிச்சான்றிதழ்" அமோகமாக விற்பனை செய்யப்படுவது ” வார்த்தைகள் தான் உங்கள் நம்பகத்தன்மையை தீர்மானிக்கின்றன என்பது உங்களுக்கும், உங்களுக்கு ஆதரவாக இங்கு தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுபவர்களுக்கும் புரியும் என்று நினைக்கிறேன் :) :) :)
எனவே தொழிலதிபர் ஒரு மாதம் / ஒரு வருடம் 1 லட்சம் நஷ்டமடைந்திருக்கலாம். அடுத்த வருடம் 10 லட்சம் லாபம் பெற்றிருக்கலாம்.
இரண்டாண்டுகளில் நிகரலாபம் 4.5லட்சம்!
வருமான வரி கட்ட 1.5 லட்சம் ஆண்டு வருமானம் இருந்தால் போதும்!
//இப்பொழுது தெரிகிறதா பொருளாதார ரீதியாக இடப்பங்கீடு எவ்வளவு அபத்தம் என்று //
எது பொருளாதர அபத்தம்! ஆண்டுவருமானமாக நிகர லாபம் 4.5 லட்சம் அபத்த வருமானமா? சொல்லுங்க பப்ளிக்!
:-))
//அனைவருக்கும் தெரிந்த உண்மையான, அரசியல்வாதிகளால் முறைகேடுகள் பலவற்றுக்கு முழுமையான ஊற்றுக்கண்ணாகிவிட்ட
"சாதிசார்ந்த இடஒதுக்கீட்டை" கண்மூடித்தனமாக ஆதரிக்கும் உங்கள் நம்பகத்தன்மை இறங்கிவிட்டதாக கருதப்படக் வேண்டியதா?? :-))//
சாதி சார்ந்த இடப்பங்கீடு என்பது சமூக முன்னேற்றத்திற்கான முக்கிய காரணி என்பது தான் அனைவருக்கும் தெரிந்த, பல முறை நிருபிக்கப்பட்ட விஷயம்.
நீங்கள் கூறிய “அரசியல்வாதிகளால் முறைகேடுகள் பலவற்றுக்கு முழுமையான ஊற்றுக்கண்ணாகிவிட்ட” என்பது நீங்கள் முன்பு கூறியது போல் ஆதாரமில்லாத, உங்களாலேயே புனையப்பட்ட ஒரு பொய்.
அவ்வளவு தான்.
நான் உண்மையை கூறுகிறேன்.
நான் கூறுவது உண்மை என்பதற்கு ஆதாரம் தருகிறேன்.
நீங்களோ பொய் கூறுகிறீர்கள். நீங்கள் கூறியது பொய் என்பதற்கும் ஆதாரம் தருகிறீர்கள் :) :) :)
இது தான் வித்தியாசம்
//இரண்டாண்டுகளில் நிகரலாபம் 4.5லட்சம்!
வருமான வரி கட்ட 1.5 லட்சம் ஆண்டு வருமானம் இருந்தால் போதும்!//
முதல் வருடம் 10 லட்சம் லாபம் பெற்றவர் வருமான வரி செலுத்த வேண்டுமா.
அப்படி என்றால் 10 லட்சத்திற்கா அல்லது 4.5 லட்சத்திற்கா
ஹரிஹரன் சார், நீங்களே சொல்லுங்க
அல்லது முதல் வருடம் ஒருவர் 1 லட்சம் சம்பாதிக்கிறார்.
அடுத்த வருடம் 10 லட்சம் சம்பாதிக்கிறார்
முதல் வருடம் அவர் 1 லட்ச ரூபாய்க்கு வருமான வரி கட்ட வேண்டுமா
அல்லது
5.5 லட்சத்திற்கு கட்ட வேண்டுமா
-
என்ன கொடுமை சார் இது
//எந்த துறையானலும் தமிழக அரசு வேலையில் குறைந்த பட்சம் 60-75%% பேர் பிற்படுத்தப்பட்டவர்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.//
ஐயா,
நீங்கள் முதலில் கூறியது 95%
தற்பொழுது கூறுவது 60 %
என்ன நடக்கிறது//
புருனோ ஐயா,
தமிழகத்தில் அரசு வேலைகளில் குறைந்தபட்சம் 60% பிற்படுத்திக்கொண்டவர்கள் இருந்தாலும் சான்றிதழில் மட்டும் பிற்பட்டு, மிகவும் பிற்படுத்தப்பட்டுக்கொண்டே செல்வதைப் புரிந்து கொள்ளும் உங்களுக்கு இது புரியவில்லையா??
//அத்துடன் இரண்டாவது, மூன்றாவது தலைமுறையாக கல்வி உதவித் தகுதிக்கு முன்னுரிமை இவர்களுக்கு சாதி அடிப்படையிலே போய்ச்சேராமல் முதல் தலைமுறை கல்வி உதவித் தகுதி பெறுவோருக்கு முதல் முன்னுரிமை தரப்படும் வகையில் எம்பெட்டட் வெரிபிகேஷன் அமைக்கப்படவேண்டும் //
அதற்கு மாற்ற வேண்டியது சரிபார்க்கும் முறையையல்ல. இடப்பங்கீடு பற்றிய சட்டத்தை
புரிகிறதா
//சாதி சார்ந்த இடப்பங்கீடு என்பது சமூக முன்னேற்றத்திற்கான முக்கிய காரணி என்பது தான் அனைவருக்கும் தெரிந்த, பல முறை நிருபிக்கப்பட்ட விஷயம்.//
இது 100% முதல் தலைமுறை வாய்ப்பு தேவைப்படுவோர் எனும் அளவில் செயல்படுத்தப்படவில்லை என்பதும் பலமுறை நிரூபிக்கப்பட்ட விஷயமே!
உ-ம் : எம்.பி, எம்.எல்.ஏ, கலெக்டர், மத்திய மாநில மந்திரிகளின் வாரிசுகள் பிற்படுத்தப்பட்டவர்கள் என்பது சமூக நோய்க்கான பெரும் காரணி!
//அதற்கு மாற்ற வேண்டியது சரிபார்க்கும் முறையையல்ல. இடப்பங்கீடு பற்றிய சட்டத்தை//
இரண்டும் இண்டக்ரேட்டடாக அமையவேண்டும்! வெறும் சட்ட திருத்தம் மட்டும் பலனளிக்காது!
வெரிபிகேஷன் மிக நவீனப்படுத்தப்பட்டே ஆகவேண்டும்!
இட்ஸ் தி நீட் ஆஃப் த அவர்!
//தமிழகத்தில் அரசு வேலைகளில் குறைந்தபட்சம் 60% பிற்படுத்திக்கொண்டவர்கள் இருந்தாலும் சான்றிதழில் மட்டும் பிற்பட்டு, மிகவும் பிற்படுத்தப்பட்டுக்கொண்டே செல்வதைப் புரிந்து கொள்ளும் உங்களுக்கு இது புரியவில்லையா?? //
பதிவர் ஹரிஹரன்
நீங்கள் முதலில் கூறியது : ”அதுவும் தமிழகத்தில் 95% பிற்படுத்தப்பட்டவர்களால் நடத்தப்படும் பிற்படுத்தோர் துறையில்”
இது குறித்து பதிவர் TBCD ஆதாரம் கேட்டார்.
அதற்கு நீங்கள் அளித்த பதில் ”எந்த துறையானலும் தமிழக அரசு வேலையில் குறைந்த பட்சம் 60-75%% பேர் பிற்படுத்தப்பட்டவர்கள் ”
இதைத்தான் நான் சுட்டிக்காட்டினேன்.
எப்படி இரு வேறு எண்களை தருகிறீர்கள்.
இதற்கு பதிலளியுங்கள். எது தவறு என்று கூறுங்கள். அல்லது இரண்டுமே தவறு என்றால் அதை தெரிவியுங்கள். அல்லது நீங்கள் கூறியது சரி என்றால் ஆதாரம் அளியுங்கள்.
//வெரிபிகேஷன் மிக நவீனப்படுத்தப்பட்டே ஆகவேண்டும்!
இட்ஸ் தி நீட் ஆஃப் த அவர்! //
அதை யாரும் மறுக்கவில்லை.
ஆனால் நீங்கள் சுட்டிகாட்டிய விஷயம் என்பது சரிபார்த்தல் பற்றி அல்ல.
நீங்கள் கூறிய கூற்றை சரிபார்க்க தற்போதைய சட்டத்தில் தேவை இல்லை.
மரு.புருனோ
குமுதம் எழுதியதன் அடிப்படையில் அரிகரன் எழுதியுள்ளார்.குமுதத்தில்
வெளியானது பொய் அவர்களுக்கு
யார் சாதிச் சான்றிதழ் வழங்குகிறார்கள் என்பது தெரியவில்லை என்றால் பிழை
யாருடையது.குமுதம் எழுதியுள்ளது
பொய், சாதிச்சான்றிதழ் பெறும்
முறையில் தவறு நடக்க வாய்ப்பில்லை என்றால் அதை
எழுதுங்கள்.
மரு.புருனோ
குமுதம் எழுதியதன் அடிப்படையில் அரிகரன் எழுதியுள்ளார்.குமுதத்தில்
வெளியானது பொய் அவர்களுக்கு
யார் சாதிச் சான்றிதழ் வழங்குகிறார்கள் என்பது தெரியவில்லை என்றால் பிழை
யாருடையது.குமுதம் எழுதியுள்ளது
பொய், சாதிச்சான்றிதழ் பெறும்
முறையில் தவறு நடக்க வாய்ப்பில்லை என்றால் அதை
எழுதுங்கள்.
//மரு.புருனோ
குமுதம் எழுதியதன் அடிப்படையில் அரிகரன் எழுதியுள்ளார்.//
அதை வைத்து அவரது கற்பனை / விருப்பங்களை எல்லாம் உண்மை போல் எழுதியது தான் வருத்தம்
//குமுதத்தில்
வெளியானது பொய்//
இல்லை. உண்மை. போல் சாதி சான்றிதழ்கள் உண்மைதான்
//அவர்களுக்கு
யார் சாதிச் சான்றிதழ் வழங்குகிறார்கள் என்பது தெரியவில்லை என்றால் பிழை
யாருடையது.//
சாதி சான்றிதழ் வழங்குவது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை என்று எழுதியது குமுதமா, ஹரிஹரனா
//குமுதம் எழுதியுள்ளது
பொய்,//
இல்லை. போலி சான்றிதழ்களை பெறுபவர்கள் இருக்கிறார்கள்
// சாதிச்சான்றிதழ் பெறும்
முறையில் தவறு நடக்க வாய்ப்பில்லை என்றால் அதை
எழுதுங்கள்.//
ஆனால் இது போன்ற போலி சான்றிதழ்கள் - அலுவலகத்தில் நகலில்லாத சான்றிதழ்கள் - (குமுதம் கூறியிருப்பதை கவனியுங்கள் - என்னவொன்று இதனுடைய நகலை மட்டும் அலுவலகத்தில் இருந்து அப்புறப்படுத்திவிடுவோம்!) மூலம் ஒன்றும் சாதிக்க முடியாது என்பது உண்மை.
இது குறித்து சந்தேகம் இருந்தால் வருவாய்துறை Lr.RA.5(3) / 63136 / 2004 : தேதி 03 .08.2004 மற்றும்
Rc.No.Q2/108518/1995, தேதி 07.12.1995 ஆகிய அரசு ஆவணங்களை பார்க்கவும்
இது குறித்து நான் கூறிவிட்ட பின்னும் தொடர்ந்து பொய்களை கூறியது பதிவர் ஹரிஹரன் தான்.
கேட்ட கேள்விகளுக்கு அவர் விளக்கம் அளிக்கவில்லையே.
சாதியின் உட்பிரிவை மாற்றி சான்றிதழ் வாங்குவது,
மதத்தை மறைத்து சான்றிதழ் வாங்குவது
போன்றவை நடக்கின்றன
அப்படி பட்ட சான்றிதழ்களின் நகலும் அசலும் ஒரே போல் தான் இருக்கும்
மறுமுறை கள ஆய்வு செய்தால் தான் உண்மை தெரியவரும்
ஆனால் இது போல் அலுவலக நகலில்லாத சான்றிதழ்கள் அலுவலகத்தில் சரிபார்க்கப்படும்பொழுதே பல்லிளித்துவிடும் !!!
//நீங்கள் முதலில் கூறியது : ”அதுவும் தமிழகத்தில் 95% பிற்படுத்தப்பட்டவர்களால் நடத்தப்படும் பிற்படுத்தோர் துறையில்”
இது குறித்து பதிவர் TBCD ஆதாரம் கேட்டார்.
அதற்கு நீங்கள் அளித்த பதில் ”எந்த துறையானலும் தமிழக அரசு வேலையில் குறைந்த பட்சம் 60-75%% பேர் பிற்படுத்தப்பட்டவர்கள் ”
இதைத்தான் நான் சுட்டிக்காட்டினேன்.
எப்படி இரு வேறு எண்களை தருகிறீர்கள். //
புருனோ ஐயா,
தமிழக அரசுத்துறை வேலைகளுக்கு 69% சாதிசார் இட ஒதுக்கீடு வழியாக 69% பேர் பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் ஆவர்.
மீதமிருக்கும் 31% ஓப்பன் கோட்டாவில் 50-60 சதவீதம் மீண்டும் பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடியினரே வேலைவாய்ப்பு பெறுகின்றனர்
ஆக நடைமுறையில் தமிழக அரசுத்துறைகளில் பணிபுரிவோர்
69 +19 = 88% சதவீதத்தினர் பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் தானே புருனோ ஐயா!
இப்படி 1980களில் இருந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக 69% இடஒதுக்கீடு செய்து தரப்பட்டு தமிழகத்தில் வேலைவாய்ப்பு, மற்றும் கல்வியில் 88% சதவீதம் சாதிசார்பாகவே இடஒதுக்கீடு தந்தும் தமிழகம் மட்டும் ஆண்டுக்கு ஆண்டு புதுசு புதுசாக மிகவும் பிற்படுத்தப்படவேண்டும் எனும் சாதிகளை மாஸ் புரொடக்ஷனில் உருவாக்கிவருகிறதே!
வாழ்க பகுத்தறிவுக்குழந்தையான சாதிச்சான்றிதழ் இடஒதுக்கீட்டுமுறை!!
//தமிழக அரசுத்துறைகளில் பணிபுரிவோர்
69 +19 = 88% சதவீதத்தினர் பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் தானே புருனோ //
இல்லை.
தமிழக அரசு பணிகளில் தற்சமயம் பணியில் சேருபவர்களில் 85 சதம் பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் என்று வேண்டுமானால் கூறலாமே தவிர
நீங்கள் கூறியபடி தமிழக அரசுத்துறைகளில் ”பணிபுரிவோர்” என்றால் அவர்களில் பலர் 1970களில் பணியில் சேர்ந்தவர்கள். அப்பொழுது இடப்பங்கிடு 50 சதம் தான்.
எனவே உங்கள் கூற்றில் தவறு இருக்கிறது
ஐயா ஹரிஹரன்
நீங்கள் முதலில் கூறியது
”அதுவும் தமிழகத்தில் 95% பிற்படுத்தப்பட்டவர்களால் நடத்தப்படும் பிற்படுத்தோர் துறையில்”
நீங்கள் கூறியது முழுப்பொய் என்பதால அதற்கு ஆதாரம் கேட்டவுடன் நீங்கள் கூறியது
”எந்த துறையானலும் தமிழக அரசு வேலையில் குறைந்த பட்சம் 60-75%% பேர் பிற்படுத்தப்பட்டவர்கள்”
இது கூட தவறு. ஆனால் இப்படி (முதல் கருத்துடன் இணைந்து வராத) ஒரு கருத்தை கூறும் நீங்கள் உங்களின் முதல் கருத்து தவறென்று கூறியிருக்கலாம். :) :)
அப்படி கூறததால்தான் கேட்டோம்
அதற்கு நீங்கள் என்ன கூறுகிறீர்கள்
“88% சதவீதத்தினர் பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் தானே புருனோ ஐயா!”
முதலில் கூறியது BC = 95
அடுத்து கூறியது BC = 75
தற்சமயம் கூறுவது BC + MBC + SC + ST = > 70
நீங்கள் கடைசியில் கூறியதிலாவது சிறிது உண்மை இருக்கிறது. தவறும் இருக்கிறது(அதில் உள்ள தவற்றை மேல் மறுமொழியில் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.)
இப்பொழுது கூறுங்கள்
உங்கள் முதல் இரண்டும் கருத்தும் பொய்தானே !!!
தவறான கருத்து / தகவலை தெரிவிப்பது ஒன்றும் மாபெரும் குற்றம் அல்ல. ஆனால் முதல் கருத்திற்கு ஒப்பாத அடுத்த கருத்தை கூறும் பொழுது விளக்கம் அளித்தல் நலம்.
அல்லது தாங்கள் மாட்டியது போல் முழிக்க வேண்டியிருக்கும்.
--
பொய் சொல்லி வகையாக மாட்டிக்கொண்ட தங்களை காப்பாற்ற அறை எடுத்து யோசித்து BC + MBC + SC + ST சேர்த்து சொன்னால் தப்பிக்கலாம் என்ற ஆலோசனை வழங்கியவருக்கு வாழ்த்துக்கள் :) :) :)
அவர் கூட “முதல் சொன்னது தவறு என்று கூறிவிட்டு பிறகு அடுத்த மழுப்பல் விளக்கத்தை அளிக்கவும்” என்று உங்களுக்கு ஆலோசனை வழங்கவில்லையா :) :) :)
ஹரிஹரன் சொல்வது பற்றி தெரியாது...
ஆனால் என்னிடம் MBC சான்றிதழ் உள்ளது...
என்னுடைய தந்தையார் அதற்காக கையூட்டு கொடுத்ததாக கேள்விப்பட்டதுண்டு...
இதுவரை அந்த பல அரசுதுறைகளின் முத்திரைகள் பொறித்த அந்த பெரிய காகிதத்தால் உபயோகம் எதுவும் இல்லை என்றாலும்...
கையூட்டு பெற்றுக்கொண்டு MBC சான்றிதழ் கொடுக்கப்படுகிறது என்பது உண்மைதான்...
நானே சாட்சி...வேண்டும் என்றால் ஸ்கேன் செய்து அளிக்கிறேன்...!!!
டாக்டர் புருனோ பதிவில் இட்ட இந்த பின்னூட்டத்தை ஹரிஹரன் அவர்களுக்கும் போடுகிறேன்...
//ஆனால் என்னிடம் MBC சான்றிதழ் உள்ளது...//
நீங்கள் FCஆ அல்லது MBCதானா
//என்னுடைய தந்தையார் அதற்காக கையூட்டு கொடுத்ததாக கேள்விப்பட்டதுண்டு...//
MBCஐ MBC என்று பெறுவதற்காக அளிக்கப்ட்ட கையூட்டா அல்லது FCஐ MBC என்று பெறுவதற்காக அளிக்கப்ட்ட கையூட்டா
//இதுவரை அந்த பல அரசுதுறைகளின் முத்திரைகள் பொறித்த அந்த பெரிய காகிதத்தால் உபயோகம் எதுவும் இல்லை என்றாலும்...//
மிக்க மகிழ்ச்சி. அதை வைத்து பிற்பட்டவர் நலத்துறைக்கு விண்ணப்பித்தால் கல்வி உதவி தொகை உண்டு தெரியுமா.
//கையூட்டு பெற்றுக்கொண்டு MBC சான்றிதழ் கொடுக்கப்படுகிறது என்பது உண்மைதான்...//
MBCஐ MBC என்று பெறுவதற்காக அளிக்கப்ட்ட கையூட்டா அல்லது FCஐ MBC என்று பெறுவதற்காக அளிக்கப்ட்ட கையூட்டா என்று கூறுங்கள்
//நானே சாட்சி...வேண்டும் என்றால் ஸ்கேன் செய்து அளிக்கிறேன்...!!!//
வேண்டாம் மேலே கேட்ட கேள்விக்கு பதில் தந்தால் போதும்
//டாக்டர் புருனோ பதிவில் இட்ட இந்த பின்னூட்டத்தை ஹரிஹரன் அவர்களுக்கும் போடுகிறேன்...//
நீங்கள் அளிக்கும் பதிலையும் அங்கு போட்டு விடுங்கள்
Post a Comment