இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Sunday, July 27, 2008

உங்கள் உலாவி தளங்களின் / வலைப்பதிவுகளின் பழைய வழங்கியின் தரவுகளை காட்டினால் என்ன செய்யலாம்

இந்த இடுகையின் தூண்டுகோல் ரவியின் மன்றத்தில் மயூரேசன் எழுப்பிய வினா
ரவி எனக்கு ஒரு புதுமையான அனுபவம் இப்ப!!
எனது வலைப்பதிவை புதிய வழங்கிக்கு மாற்றிய பின்னர், மீண்டும் மீண்டும் பழைய வழங்கியில் இருக்கும் தரவுகளையே என் உலாவி காட்டுகின்றது. மற்ற நண்பர்களுக்கு அது சரியாக்க் காட்டுகின்றது. என்ன பிரைச்சனையாக இருக்கும்?
உ+ம் mayuonline.com/css/index.html (புதிய வழங்கியில் உண்டு, பழையதில் இல்லை)
என்ன கொடுமை பார்த்தீங்களா??
இது போல் அனுபவம் பலருக்கும் நேர்ந்திருக்கும். உங்கள் வலைப்பதிவையோ அல்லது பிற தளங்களையோ புதிய வழங்கிக்கு மாற்றிய பின்னும், பழைய வழங்கியில் உள்ள கோப்புகளே உலாவியில் தெரியும். ஆனால் மற்றவர்களுக்கு புதிய வழங்கியில் உள்ள தரவுகள் தெரியும். நீங்களை உங்கள் பக்கத்தை மொழிபெயர்த்து பார்த்தால், புதிய வழங்கியில் உள்ள தரவுகள் தெரியும்

அப்படியென்றால் பிரச்சனை என்ன.

ஒருவருக்கு புதிய வழங்கியில் உள்ள கோப்புகள் தெரிகிறது, மற்றவருக்கு தெரியவில்லை என்றால் பிரச்சனைக்கு காரணம், உங்கள் தளம் அல்ல


இதற்கு காரணம் உங்களின் வலைசேவை வழங்கும் நிறுவனத்தின் DNS பதிவுகள் (records) மாறுவதில் ஏற்படும் கால தாமதமே

தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம் தங்களின் வழங்கி நிறுவனம் (Server Provider) (புது வழங்கி நிறுவனமோ அல்லது பழைய வழங்கி நிறுவனமோ) அல்ல .

அதற்கு காரணம் தங்களின் இணையசேவை அளிக்கும் நிறுவனம்தான். (Internet Provider)

உங்கள் தளம் மட்டும் அல்ல, என் தளத்தை நான் ஒரு வழங்கியிலிருந்து வேறு வழங்கிக்கு மாற்றினாலோ, ரவி அவரின் தளத்தை வேறு வழங்கிக்கு மாற்றினாலோ உங்களுக்கு அது தாமதாமாகத்தான் தெரியும்

இதனால் தான் opendns பயன்படுத்த அறிவுறுத்துகிறார்கள்

தங்களின் வலைசேவை வழங்குபவர்கள் ஒரு DNS எண்ணை அளித்திருப்பார்கள். தங்களின் கணினியில் அதை உள்ளீடு செய்யாமல்

Preferred DNS Server 208.67.222.222 and
Alternate DNS Server 208.67.220.220

என்று உள்ளீடு செய்யுங்கள்.

வித்தியாசத்தை உணர்வீர்கள் :) :)
--
பின் குறிப்பு : இது என் அனுபவத்தில் கற்ற பாடம்

4 மறுமொழிகள்:

Mayooresan said...

பதிவிற்கு நன்றி.
புரோக்ஸி மூலம் பார்த்தபோது சரியாக இருந்தது. சும்மா உலாவியில் பார்க்க பிழையாக இருந்த்து. இப்போ உண்மை தெரிந்தது.

புருனோ Bruno said...

வேறு சில பிரச்சனைகளுக்கும் கூட opendns உதவலாம்

ஸ்ரீ.... said...

டாக்டர்,

நல்ல பதிவு. விக்கிபீடியா குறித்த எனது பதிவை வாசிக்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன். (என்னை நினைவிருக்கிறதா..?)

ஸ்ரீ....

புருனோ Bruno said...

//டாக்டர்,

நல்ல பதிவு. விக்கிபீடியா குறித்த எனது பதிவை வாசிக்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன். (என்னை நினைவிருக்கிறதா..?)
//

வாசித்து ஓட்டு போட்டு விட்டேன் :)

இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...