இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Tuesday, July 29, 2008

குயிலும் கூகிளும் Cuil and Google comparison

ஒரு புது தேடுபொறி அறிமுகமாகி உள்ளது குயில் அல்லது கூயில்

துவக்கும் பொழுதே பலத்த சத்தத்துடன் துவங்கியுள்ளார்கள். என்ன தான் செய்திருக்கிறார்கள் என்ற ஆர்வத்துடன் எட்டி பார்த்தால் தமிழில் தேட முடியவில்லை

சரி, ஆங்கிலத்திலாவது தேடித்தான் பார்ப்போமே என்றால் tnpsc book என்று தேடினேன். வந்த பதிலை, இதே சொற்களை கூகிளில் தேடினால் என்ன வருகிறது என்று பாருங்கள்.

சரி, அடுத்து AIIMS என்று தேடினால் ஒன்றுமே இல்லை. கூகிளில் AIIMS என்று தேடினால் முக்கிய தளங்கள் அனைத்தும் வருகிறது.

பிற்சேர்க்கை : இடுகையின் இறுதியில் பார்க்கவும்

சரி நமக்கு (அல்லது மருத்துவ துறைக்கு)தான் நேரம் சரியில்லை என்று தமிழ்மணத்தை தேடினால் வரும் பக்கத்தையிம், இதே சொல்லுக்கு கூகிள் தரும் பக்கத்தையும் பாருங்கள்

இப்பத்தானே ஆரம்பித்து இருக்கிறார்கள். போக போக சரியாகும் என்று நினைப்பவர்களுக்கு, அவர்களின் தளத்தில் உள்ள வாசகம்
The Internet has grown exponentially in the last fifteen years but search engines have not kept up—until now. Cuil searches more pages on the Web than anyone else—three times as many as Google and ten times as many as Microsoft.
கூகிளைப்போல் மூன்று மடங்கு பக்கங்களை தேடுவதாக கூறுகிறார்கள். ஆனால் வரும் முடிவுகள் கூகிளை விட சிறப்பாக இல்லையென்றாலும் கூட பரவாயில்லை. கூகிள் அளவு கூட இல்லையே.

ஆனாலும் இதில் சில சிறப்புகள் இருக்கின்றன

1. அவர்கள் முடிவுகளை அளிக்கும் விதம் வித்தியாசமாக இருக்கிறது. உதாரணமாக kuselan என்று தேடினால் அந்த பக்கத்திலேயே தமிழ் ந்டிகர்கள், இந்திய நடிகர்களைப்பற்றி வருகிறது

2. அதே போல் manmohan singh என்று தேடினால் அமைச்சரவை பற்றிய விபரங்கள் வருகின்றன. sachin tendulkar முடிவு பக்கத்தில் உலக கோப்பை மற்றும் பிற விபரங்கள் வருகின்றன

தற்பொழுதைய கருத்து : தேடுபவர்களுக்கு பல சிறப்பான வசதிகளை செய்து தர முயல்கிறார்கள். ஆனால் முடிவுகளில் ஒரு நேர்த்தி வரும் வரை அடக்கி வாசிக்கலாம்.

பிற்சேர்க்கை : முதல் முறை AIIMS என்று தேடியபோது ஒன்றும் இல்லை. மறுமுறை AIIMS என்று தேடினால் இந்த பக்கம் வருகிறது.
இதில் என்ன விசேஷம் என்றால் வலது புறம் உள்ள பகுப்புகளை பாருங்கள். அது நான் தேடிய மன்மோகன் சிங் குறித்த பகுப்புகள். அவற்றுக்கும் AIIMS என்ன தொடர்பு என்று தெரியவில்லை.

இப்பொழுது அவர்களின் பக்கத்திலுள்ள மற்றொரு வரிகள்
Cuil analyzes the Web, not its users

Privacy is a hot topic these days, and we want you to feel totally comfortable using our service. Because Cuil analyzes Web pages and not click-throughs, we don’t need to know your search history and habits. So our privacy policy is very simple: when you search with Cuil, we do not collect any personally identifiable information, period. We have no idea who sends queries: not by name, not by IP address, and not by cookie. Your search history is your business, not ours. We don’t need to keep logs of our users’ search activity, so we don’t.
என்ன கொடுமை சார் இது.

அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று நான் கூறவில்லை. ஆனால் உண்மையை சொன்னால் நல்லாயிருக்கும் என்று தானே கூறுகிறேன்

36 மறுமொழிகள்:

அதிஷா said...

\\ அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று நான் கூறவில்லை. ஆனால் உண்மையை சொன்னால் நல்லாயிருக்கும் என்று தானே கூறுகிறேன் \\

செம பஞ்ச்

;-))))))))

நான் கூட என் பேர போட்டு பார்த்தேன் அது பலான சைட்டுல்லாம் காட்டுது

அவ்வ்வ்வ் ;-((((((((

ரவிசங்கர் said...

இதை coolனு உச்சரிக்கணுமாம்.

**

ஒவ்வொரு நாளும் எழுதிக் கலக்குறீங்க. வாழ்த்துகள் :)

ரவிசங்கர் said...

சர்ச்சைக்குரிய இடுகைகளை எழுதினாலும் மறுமொழிப் பெட்டியைத் திறந்து வைத்திருக்கும் கொள்கைக்கு இன்னொரு பாராட்டு :)

புருனோ Bruno said...

//நான் கூட என் பேர போட்டு பார்த்தேன் அது பலான சைட்டுல்லாம் காட்டுது

அவ்வ்வ்வ் ;-((((((((//

அவர்கள் அமைதியாக் துவங்கியிருந்தால் பரவாயில்லை.

”ஓவர் பிடப்” அளித்தது தான் எரிச்சலை ஏற்படுத்திவிட்டது

புருனோ Bruno said...

//இதை coolனு உச்சரிக்கணுமாம். //

ஆகா ... இது வேறயா

கயல்விழி said...
This post has been removed by the author.
புருனோ Bruno said...

//ஒவ்வொரு நாளும் எழுதிக் கலக்குறீங்க. வாழ்த்துகள் :)//

நன்றி :) :)

கயல்விழி said...

\\ அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று நான் கூறவில்லை. ஆனால் உண்மையை சொன்னால் நல்லாயிருக்கும் என்று தானே கூறுகிறேன் \\

சினிமா பஞ்ச்?

நன்றாக கம்பேர் பண்ணி இருக்கிறீர்கள். நெகடிவ் ரிவ்யூ மட்டுமல்லாமல் பாசிடிவ் ரியூவும் கொடுத்து இருக்கிறீர்கள்.

இவர்கள் முழுமையாக தங்களை சரி செய்துக்கொண்டு பிறகு விளம்பரப்படுத்தி இருக்கலாம். முதல் இம்ப்ரெஷன் மிக முக்கியம், அதில் தவறிவிட்டார்கள்.

புருனோ Bruno said...

//சர்ச்சைக்குரிய இடுகைகளை எழுதினாலும் மறுமொழிப் பெட்டியைத் திறந்து வைத்திருக்கும் கொள்கைக்கு இன்னொரு பாராட்டு :)//

அண்ணா... இந்த மறுமொழியை இந்த இடுகையில் இட்ட ”நுண்ணரசியல்” எதுவாது இருக்கா

எனக்கு தெரிந்து சமீபத்தில் எழுதியதில் சர்சசை இல்லாதது இது மட்டும் தான் என்று நினைக்கிறேன் :) :) :) :)

புருனோ Bruno said...

//இவர்கள் முழுமையாக தங்களை சரி செய்துக்கொண்டு பிறகு விளம்பரப்படுத்தி இருக்கலாம். முதல் இம்ப்ரெஷன் மிக முக்கியம், அதில் தவறிவிட்டார்கள். //

இரண்டே வரிகளில் முத்தாய்ப்பாக கூறிவிட்டீர்கள் .

அதை விட என்னை எரிச்சல் படுத்தியது உண்மைக்கு தொலைவில் இருக்கும் அவர்களின் சில் / பல கருத்துக்கள்

புருனோ Bruno said...

நான் சோதித்த வரையில், அவர்கள் குழந்தை (infant) இல்லை, இன்னமும் பிறக்கவேயில்லை (fetus)

முரளிகண்ணன் said...

தகவலை விட தங்கள் பதில்கள் மிகவும் சுவராசியம்

புருனோ Bruno said...

//தகவலை விட தங்கள் பதில்கள் மிகவும் சுவராசியம்//

:) :) :)

கோவி.கண்ணன் said...

//அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று நான் கூறவில்லை. ஆனால் உண்மையை சொன்னால் நல்லாயிருக்கும் என்று தானே கூறுகிறேன் //

தசவதாரம் கமல் வசனம் தான் உடனே ஞாபகம் வருது.

கடவுள் இல்லைன்னு நான் எங்கே சொன்னேன் ?
இருந்தால் நல்லா இருக்கும்.
:)

ஸ்ரீதர் நாராயணன் said...

கூல்-பற்றிய முதல் தமிழ் பதிவு. வாழ்த்துகள் :-)

முதலில் - அதைக் 'கூல்' என்றுதான் உச்சரிக்க சொல்கிறார்கள். நீங்கள் சொல்லும் 'குயில்' தமிழில் அழகாகத்தான் இருக்கிறது. ஆனால் அது 'கூல்'ஆகத்தான் இருக்க விரும்புகிறது போல. :-)

hype-க்கு காரணம் கூகுளின் பெருந்தலைகள் 'கூல்'லிலே பங்காற்றுவதால்.

AIIMS வைத்து தேடினால் எனக்கும் 'more' கேடக்கிரியில் இதே டாபிக்குகள்தான் தோன்றின.

தேடு பொறிகள் பயனாளர்கள் உபயோகம் அதிகரிக்க அதிகரிக்க நல்ல ரிசல்டுகளை தர முடியும். நீங்கள்தான் முதல் ஆளாக AIIMS தொடங்கியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். போகப் போக 'AIIMS'-ல் 'பயணங்களும்' ஒரு பக்கமாக வர வாய்ப்பு இருக்கிறது. :-))

பகீ said...

புருனோ உங்கள் ஒப்பீடு தொடர்பாக எனக்கு அவ்வளவு திருப்தி இல்லை. பிறக்கவே இல்லை என்று சொல்கின்ற நீங்கள் எவ்வாறு அவர்கள் சரிஇல்லை என்று சொல்ல முடியும்??

நான் என் பதிவில் http://oorodi.com/?p=519 சொல்லி இருப்பது போன்று அவர்கள் முதலிட்டிருக்கும் முதல் சாதாரணமானதல்ல.

அவர்கள் கூகிளை விட 120 பில்லியன் பக்கங்களையே அதிகமாக தேடுவதாக கூறி இருக்கிறார்கள். மூன்று மடங்கல்ல.

இப்பவே எது நல்லது எண்டு சொல்லாமல் பாப்பம் கொஞ்ச நாள் பொறுத்து.

venkatramanan said...

Philip Lensen இன் அண்மைய இடுகை:http://blogoscoped.com/archive/2008-07-29-n10.html
ரெட்டிட்டில் ஒருவர் சொல்வது(http://www.reddit.com/comments/6trj2/former_google_employees_prepare_rival_search/ )
“It’s a great search engine if you’re not interested in finding what you’re looking for.”

ராஜ நடராஜன் said...

// இதை coolனு உச்சரிக்கணுமாம். //

ரவிசங்கரின் மேலேயுள்ள பின்னூட்டத்தில் வெட்டியது.நானும் கூட இட்லி சாப்பிடும்போது பத்திரிகையில் பார்த்தது கூல் ன்னுதான் உச்சரிக்கணுமாம்.நம்முடைய வசதிக்கு குயிலாகவும் தமிழ்நாட்டைத்தாண்டி கூல்ன்னு சொல்வதும் நல்லது.

அப்புறம் தொட்டதுக்கெல்லாம் மொட்டத்தலை ரஜனி சொல்ற கூல்வேற.எனக்குத் தெரிந்ததை சொல்லிப்புட்டேன்.

ராஜ நடராஜன் said...

// அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று நான் கூறவில்லை. ஆனால் உண்மையை சொன்னால் நல்லாயிருக்கும் என்று தானே கூறுகிறேன் //

நான் கடவுள் இல்லையென்று எங்கு சொன்னேன்.கடவுள் இருந்தால் நல்லாயிருக்குமே என்றுதான் சொல்லுகிறேன்:)

சரவணகுமரன் said...

//நான் கூட என் பேர போட்டு பார்த்தேன் அது பலான சைட்டுல்லாம் காட்டுது

:)

புருனோ Bruno said...

கோவி சார், வருக :) :)

புருனோ Bruno said...

//முதலில் - அதைக் 'கூல்' என்றுதான் உச்சரிக்க சொல்கிறார்கள். நீங்கள் சொல்லும் 'குயில்' தமிழில் அழகாகத்தான் இருக்கிறது. ஆனால் அது 'கூல்'ஆகத்தான் இருக்க விரும்புகிறது போல. :-)//

முடிவுகள் கூல் ஆகின்றனவா பார்க்கலாம்

புருனோ Bruno said...

//தேடு பொறிகள் பயனாளர்கள் உபயோகம் அதிகரிக்க அதிகரிக்க நல்ல ரிசல்டுகளை தர முடியும்.//

ஒரு நான்கு மாதம் பொறுத்திருந்து பார்ப்போம்

புருனோ Bruno said...

//பிறக்கவே இல்லை என்று சொல்கின்ற நீங்கள் எவ்வாறு அவர்கள் சரிஇல்லை என்று சொல்ல முடியும்??//

பிறக்காத அவர்கள் தாங்கள் 20 வயதாகிவிட்டதாக கூறுவது தான் சரியில்லை என்று கூறினேன். மற்றப்படி அவர்களின் முயற்சிகளையும் குறிப்பிட்டுள்ளேன் :)

புருனோ Bruno said...

//அவர்கள் கூகிளை விட 120 பில்லியன் பக்கங்களையே அதிகமாக தேடுவதாக கூறி இருக்கிறார்கள். மூன்று மடங்கல்ல.//

அவர்களின் பக்கதில் இருந்து - Cuil searches more pages on the Web than anyone else—three times as many as Google and ten times as many as Microsoft.

புருனோ Bruno said...

//“It’s a great search engine if you’re not interested in finding what you’re looking for.”//

விரைவில் இந்த நிலைமையிலிருந்து மாறுவார்கள் என்று நினைக்கிறேன்

புருனோ Bruno said...

//.நம்முடைய வசதிக்கு குயிலாகவும் தமிழ்நாட்டைத்தாண்டி கூல்ன்னு சொல்வதும் நல்லது.//

:) :)

புருனோ Bruno said...

//// அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று நான் கூறவில்லை. ஆனால் உண்மையை சொன்னால் நல்லாயிருக்கும் என்று தானே கூறுகிறேன் //

நான் கடவுள் இல்லையென்று எங்கு சொன்னேன்.கடவுள் இருந்தால் நல்லாயிருக்குமே என்றுதான் சொல்லுகிறேன்:)//

:) :)

அதைவைத்து தான் நான் எழுதினேன் :)

புருனோ Bruno said...

சரவணகுமரன்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

அவனும் அவளும் said...

ப்ருனோ சார், நான் முதல் முறையா AIIMS தேடினாலும் அதே primeminister தான் வருது.
அதுனால அவங்க சொல்றது உண்மையா இருக்குமோன்னு தான் ninaikaraen.

Anonymous said...

Hi Doc,
i found something very subtle in the new search engines effort. The result layout goes horizontal! This is in tune with the times. WIDESCREEN in laptops, palmtops, in LCD monitors, Hybrid TV/comps... are the trends of the time. Google still goes vertically and not suitable for wide screens. Page maybe fluid but awkward!

then it is not about number of pages indexed but relevancy is the Key and i dont thing someone can beat Google in that!! But in China Google is the runner up to a local search Engine! IMO 50/50 chance for Cuil to succeed!

Osai Chella as anony

புருனோ Bruno said...

//அதுனால அவங்க சொல்றது உண்மையா இருக்குமோன்னு தான் ninaikaraen.//

அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று நான் கூறவில்லையே :) :) :)

புருனோ Bruno said...

//The result layout goes horizontal! This is in tune with the times. WIDESCREEN in laptops, palmtops, in LCD monitors, Hybrid TV/comps... are the trends of the time. Google still goes vertically and not suitable for wide screens. Page maybe fluid but awkward!//

உண்மை. ஆனால் உள்ளே சரக்கு சரியாக இருக்க வேண்டும்.

மொந்தை எப்படி இருந்தாலும் கள் சரியில்லை என்றால் அடுத்த முறை யாரும் கடைப்பக்கம் வர மாட்டார்கள் :)

புருனோ Bruno said...

//IMO 50/50 chance for Cuil to succeed!//

ஆனால் அதற்கு முடிவுகளின் தரம் முன்னேற வேண்டும்.

SEO said...

No one is going to Beet Google, (கூகுளுக்கு போட்டி கூகிள் தான்) , any how we have to wait.

புருனோ Bruno said...

வருக SEO, வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...