இந்த வலைப்பதிவிற்கு (எந்த வலைப்பதிவிற்கும்) நேரடியாக (உலாவி மூலம்) வராமல் செய்தியோடை மூலமாகவும் இடுகைகளை தொடர்ந்து வாசிக்கலாம் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அப்படியில்லாமல் செய்தியோடை (செய்தி + ஓடை) என்ற சொல்லையே இப்பொழுது தான் முதலில் கேட்கிறீர்கள். (அல்லது இதற்கு முன்னர் கேள்விப்பட்டிருந்தாலும் அது என்னவென்று தெரியாது) என்றால் கீழ்க்கண்ட சுட்டிகள் உங்களுக்கு உதவும்
- செய்தியோடைகள் குறித்த ஒரு எளிய விளக்கத்தை பதிவர் காசி அவர்கள் ஆர் எஸ் எஸ் (அல்ல்து ஆடம்) செய்தியோடை - ஒரு எளிய விளக்கம் என்ற இடுகையில் எழுதியுள்ளார்கள்.
- மேலும் விபரங்களை அறிய விரும்புபவர்கள் RSS ஓடை - ஓர் அறிமுகம் என்ற கட்டுரையை படிக்கலாம்
நீங்கள் ஏற்கனவே செய்தியோடை மூலம் இந்த பதிவை வாசிப்பவராக இருந்தால் கூட பழைய செய்தியோடைக்கு பதிலாக இத்தளத்தின் புதிய மேம்படுத்தப்பட்ட செய்தியோடையை உபயோகிக்க வேண்டுகிறேன். புதிய செய்தியோடையை பெற இங்கு சுட்டவும்
0 மறுமொழிகள்:
Post a Comment