இப்படியும் சிலர் : இதய தானம் குறித்த சில கேள்விகளும் பதில்களும் இடுகைக்கு வந்த மறுமொழிகளுக்கும் பதிவர் தெக்கிட்டானின்உடலுறுப்புகள் தானமா,பதறும் நெஞ்சு : Donation of Organs! இடுகைக்கு வந்த மறுமொழிகளுக்கும் விளக்கமளிக்க இந்த இடுகை
உதிரக்கொடை (இரத்த தானம் ) :
- ஒருவர் உடம்பில் ஓடும் சுமார் 5 லிட்டர் (5000 மில்லி லிட்டர்) இரத்ததில் இருந்து சுமார் 350 மிலி பெறப்படுவது இரத்த தானம்
- எத்தனை முறை வேண்டுமானாலும் அளிக்கலாம்
- சில நாட்களில் இரத்தம் மீண்டும் ஊறி விடும்
- தானம் பெற்றவருக்கும் தானம் அளித்தவரின் இரத்தமும் ஒரே வகையாக இருக்க வேண்டும் என்பது அவசியம்
- பலன் : பிணியாளருக்கு. ஒவ்வொரு முறையும் ஒரு உயிரை காக்கலாம்
கண் கொடை (கண் தானம்) :
- ஒருவர் இறந்த பின் அவரது கண்கள் எடுக்கப்படும்.
- இயற்கை மரணம் என்றாலும் எடுக்கப்படும்
- மூளை சாவு என்றாலும் எடுக்கப்படும்
- கண்கள் எடுக்கப்பட்ட பின் பிரேத உடல் உறவினர்களிடம் அளிக்கப்படும்
- எடுக்கப்பட்ட கண்களின் விழித்திரை அடுத்த நபருக்கு பொருத்தப்படும்
- தானம் பெற்றவருக்கும் தானம் அளித்தவரின் இரத்தமும் ஒரே வகையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
- பலன் : விழித்திரை நோயால் பார்வையிழந்த இரு நபர்களுக்கு
எலும்பு கொடை (எலும்பு தானம்) :
- ஒருவர் இறந்த பின்னரே அவரது எலும்புகள் எடுக்கப்படும்
- இயற்கை மரணம் என்றாலும் எடுக்கப்படும்
- மூளை சாவு என்றாலும் எடுக்கப்படும்
- பிரேத உடல் உறவினர்களிடம் அளிக்கப்படும்
- எலும்பு வங்கி இருக்கும் ஊர்களிலேயே இது கடை பிடிக்கப்படுகிறது
- எடுக்கப்பட்ட எலும்புகள் எலும்பு வங்கியில் வைக்கப்படும்.
- தானம் பெற்றவருக்கும் தானம் அளித்தவரின் இரத்தமும் ஒரே வகையாக இருக்க வேண்டும் என்பது அவசியம்
- இது தவிர இருவரின் HLAக்களும் முரணாக இருக்க கூடாது
- பலன் : பல பிணியாளர்களுக்கு
உறுப்புக்கொடை (உறுப்பு தானம்) :
- மூளை சாவு என்றால் மட்டுமே எடுக்கப்படும்
- சிறுநீரகங்கள், ஈரல், இதயம், நுரையீரல், தோல் உட்பட பல உறுப்புகள் எடுக்கப்படும்
- பிரேத உடல் உறவினர்களிடம் அளிக்கப்படும்
- தானம் பெற்றவருக்கும் தானம் அளித்தவரின் இரத்தமும் ஒரே வகையாக இருக்க வேண்டும் என்பது அவசியம்
- இது தவிர இருவரின் HLAக்களும் முரணாக இருக்க கூடாது
- பலன் : பல பிணியாளர்களுக்கு
உடல்கொடை (உடல்தானம்) :
- இயற்கை மரணம் என்றால் மட்டுமே பெறப்படும்
- உடல் உறவினர்களிடம் அளிக்கப்படாது
- உடல் உடற்கூறியல் பிரிவில் வைக்கப்படும். முதல் வருட மாணவர்கள் உடற்கூறியல் குறித்து படித்த அறிவதற்காக உடல் பயன்படும்
- அவ்வாறு தானம் அளிக்கப்பட்ட உடலிருந்து கண்களும், எலும்புகளும் எடுக்கப்படலாம். இவை பிணியாளர்களுக்கு பயன் படும்
- பலன் : கண்களால் இருவருக்கு, எலும்புகளால் பல பிணியாளர்களுக்கு, மற்றும் மருத்துவ மாணவர்களுக்கு
மூளை சாவு பற்றிய சில விபரங்கள் மருத்துவர் டெல்பின் விக்டோரியாவின் உடல் உறுப்புகள் தானம் இடுகையில் இருக்கின்றன
வழக்கம் போல் உங்களின் சந்தேகங்களை மறுமொழியில் கேட்கலாம்
23 மறுமொழிகள்:
புரூனோ சார்,
50 வயதுக்கும் குறைவான அகவையில் நீரிழிவு உள்ளவர்கள் உதிரக் கொடை (இரத்த தானம்) செய்ய முடியாது தானே ?
//புரூனோ சார்,
50 வயதுக்கும் குறைவான அகவையில் நீரிழிவு உள்ளவர்கள் உதிரக் கொடை (இரத்த தானம்) செய்ய முடியாது தானே ? //
எய்ட்ஸ், மலேரியா, சிபிலிஸ், மஞ்சள்காமாலை வகை B, மஞ்சள்காமாலை வகை C, போன்ற தொற்று வியாதிகள் இருப்பவர்களை தவிர பிறர் உதிரக்கொடை செய்யலாம்.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் உதிரக்கொடை செய்யக்கூடாது என்பது பழைய சித்தாந்தம்.
Skin is an organ, in fact it's the largest organ. It can be donated after death.
-kalvetu
Doc,
I am not sure Is 'skin' is tissue ?. Pl. correct/edit/delete - Thanks
-Kalvetu
தோல் ஒர் உறுப்பு தான்.
அதுவும் கூட தானமாக பெறப்படுகிறது.
உங்கள் தகவல் சரிதான்.
ஆனால் வருங்காலத்தில் செயற்கை தோல் (அல்லது பிணியாளரின் தோல் திசுக்களை வைத்து பரிசோதனைக்கூடத்தில் தயாரிக்கப்படும் தோல்) பெரும் அளவு புழக்கத்திற்கு வர இருப்பதால் தோல் மாற்று அறுவை சிகிச்சையின் அளவு குறைய வாய்ப்புள்ளது
--
மேலும் 50 சதத்திற்கு மேல் தீப்புண் உள்ளவர்களுக்கே அடுத்தவரிடமிருந்து தோல் தேவை
இல்லையென்றால் அவர்களின் உடலின் பிற இடங்களிலிருந்தே தோலை பெற்றுக்கொள்ளலாம்
கல்வெட்டு சார்
தோல் மிகப்பெரிய உறுப்பு என்பது சரியான தகவல்தான்
டாக்டர் , நாம் தானமாக கொடுக்கப்படும் ரத்தம் சோதனைகளுக்கு பிறகு அன்றே நோயாளிக்கு செலுத்தப்படுமா?
//டாக்டர் , நாம் தானமாக கொடுக்கப்படும் ரத்தம் சோதனைகளுக்கு பிறகு அன்றே நோயாளிக்கு செலுத்தப்படுமா?//
அது பிணியாளரின் பிணியைப்பொருத்து மாறுபடும். சில வகை நோய்களுக்கு அன்றே செலுத்தப்படும். சில வகை நோய்களுக்கு ஒரு வாரம் முன் பெற்ற குருதியை செலுத்தலாம்
நன்றி டாக்டர், இவ்வளவு விரைவில் இத்தனை பதிவுகள் கிடைத்திருக்கிறது மிக்க மகிழ்ச்சி.
தெகா சார்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
நல்ல விவரமான பதிவு. ஒரே ஒரு கேள்வி. அறுவைசிகைச்சுக்கு பின் (கண் தானம் என்று வைத்துக்கொள்வோம்) முகம் விகாரமாகுமா? உடலை எத்தனை மணி நேரம் வைத்திருக்கலாம்?
//நல்ல விவரமான பதிவு.//
நன்றி சார்
//அறுவைசிகைச்சுக்கு பின் (கண் தானம் என்று வைத்துக்கொள்வோம்) முகம் விகாரமாகுமா? உடலை எத்தனை மணி நேரம் வைத்திருக்கலாம்?//
உடல் விகாரமாகாது. எத்தனை மணி நேரம் என்பதற்கும் இந்த தானத்திற்கும் சம்மந்தம் இல்லை
உடல் தானம், கண் தானம் செய்வதற்கான முறைகள் என்ன என்று
விவரமாக எழுத முடியுமா ? இது சம்பந்தமாக தெரிந்து கொள்ளவோ அல்லது தானம் அளிக்கவோ யாரை அணுகவேண்டும் ?
படித்தேன் டாக்டர் ஸார்..
கண் தானம், உடல் தானம் இவற்றைச் செய்வதற்கான வழிமுறைகள்.. அரசு மருத்துவமனையை அணுக வேண்டிய முறைகள் பற்றிச் சொல்லுங்களேன்.
//உடல் தானம், கண் தானம் செய்வதற்கான முறைகள் என்ன என்று
விவரமாக எழுத முடியுமா ? இது சம்பந்தமாக தெரிந்து கொள்ளவோ அல்லது தானம் அளிக்கவோ யாரை அணுகவேண்டும் ?//
விரிவாக எழுதுகிறேன்
//கண் தானம், உடல் தானம் இவற்றைச் செய்வதற்கான வழிமுறைகள்.. அரசு மருத்துவமனையை அணுக வேண்டிய முறைகள் பற்றிச் சொல்லுங்களேன்//
இது குறித்து தனி இடுகை எழுதுகிறேன்
கோவி சார் சொன்ன உடன உதிரக்கொடைன்னு மாத்தி இருக்கீங்க ! அவரு ஒவ்வொண்ணுத்துக்கும் சொல்லனுமா ? ( கண் , எலும்பு, உறுப்பு, உடல் - கொடை தான் )
IAM IN USA. I AM SHOCKED TO SEE MY SON'S DRIVERS' LICENCE. IN THE BACK OF THE LICENCE, IT IS PRINTED,"ORGAN DONATOR". IT WAS BOTHERING ME FOR A LONG TIME. BUT WHEN I SAW THE TAMIL STUDEN HITHENDRAN'S NEWS ABOUT HIS DONATION OF BODY PARTS, I AM CHANING MY ATTITUDE AND APPRECIATING MY SON'S SENSE OF DEVOTION TO FELLOW HUMAN BEINGS.
//கோவி சார் சொன்ன உடன உதிரக்கொடைன்னு மாத்தி இருக்கீங்க ! அவரு ஒவ்வொண்ணுத்துக்கும் சொல்லனுமா ? ( கண் , எலும்பு, உறுப்பு, உடல் - கொடை தான் )//
மாற்றி விடுகிறேன்
தமிழன் சார்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
Sir,
I am living in Namakkal. I am 34 years old. how do i donate my body?
What are the procedures for body donation?
Kavitha.K.
Namakkal.
//Sir,
I am living in Namakkal. I am 34 years old. how do i donate my body?
What are the procedures for body donation?
Kavitha.K.
Namakkal.//
உங்கள் வாரிசுகளிடம் அனுமதி வாங்கி விட்டீர்களா
Post a Comment