என் கருத்து.
கடந்த நூற்றாண்டில் நாம் கண்டுபிடித்த கருவிகளின் (New Instruments) எண்ணிக்கை வேண்டுமானால் குறைவாக இருக்கலாம்.
ஆனால் Invention / Fabrication / Modification of Process என்று புதிய நடைமுறைகளை கண்டுபிடித்ததில் நாம் யாருக்கும் எந்த விதத்திலும் குறைவில்லை என்று உறுதியாக கூறலாம்
நம் ஆட்கள் கண்டுபிடித்த சில விஞ்ஞான நடைமுறைகள்
- முவுருளி கணக்குகருவியில் (ஆட்டோ மீட்டர்) சூடு வைப்பது. சூடு வைப்பது என்றால் என்னவென்று தெரியாதவர்கள் சென்னையில் மூவுருளியில் பயணம் செய்து பாருங்கள்
- தேர்வு எழுத புத்தகத்தை ”மைக்ரோ செராக்ஸ்” செய்வது
- செய்து அதை வைத்து தேர்வில் பார்த்து எழுதுவது :)
- திரையரங்கில் ஒளிப்படக் கருவியில் (வீடியோ கேமராவில்) திரைப்படத்தை படம் பிடித்து அதை குறுந்தகட்டில் விநியோகிப்பது (ஒரு 15 வருடம் முன் கேமரா பிரிண்ட் என்று ஒரு பதம் கேள்விப்பட்டீருக்கிறீர்களா)
- மூன்று அல்லது நான்கு நபர்களுடன் ஒரே இரு சக்கர வாகனத்தில் செல்வது
- HP நிறுவனம் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து கண்டுபிடிக்கும் அச்சு மையுறைகளை (cartridge) மறுநிரப்பு (மீள்நிரப்பு) செய்வது
- அலைபேசியில் ”மிஸ்டு கால்” அளிப்பது
- சிங்கிள் டீ
பிற்சேர்க்கை : விடுபட்டவை
1 : வாஷிங் மெஷினை லஸ்ஸி தயாரிக்க உபயோகப்படுத்துவது (நன்றி பதிவர் முரளி கண்ணன்)
எனவே
நம் மக்களின் விஞ்ஞான அறிவு எந்த விதத்திலும் குறைவு அல்ல என்று தெரிந்து கொள்ளலாம்
இவ்வளவு இருந்தும் நம்மை தடுப்பது. (அல்ல முன்னேற விடாமல் தடுப்பது) என்ன / எவை என்று அடுத்த இடுகையில் பார்க்கலாம்
அதற்கு முன் ஒரு கேள்வி :
மின்னனு வாக்கு பதிவு இயந்திரம், கோகோ கோலாவின் சுருக்க விதிமுறையை விட அதிகம் ரகசியமாக பாதுகாக்கப்படும் தேர்தல் மை போன்றவைகள் இந்தியாவில் இந்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டவை தானே



40 மறுமொழிகள்:
டாக்டர் இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன்.
வாஷிங் மெஷினை லஸ்ஸி தயாரிக்க உபயோகப்படுத்துவது போல
நன்றி மு.க
பட்டியலில் சேர்த்து விட்டேன்
ஆஹா...ஆஹா...கேட்கவே காதுக்கு குளு குளுன்னு இருக்கு :)))
இரண்டு விசயங்கள்
1.ஸ்க்ரீன் பிரிண்ட் இன்றும் உள்ளது.
2.சென்னையில் கடந்த ஒரு வருடமாக நான் இதுவரை மீட்டர் போடும் ஆட்டோவை பார்த்ததே இல்லை :(
விடுபட்டவை:
1. உணவுத்துறையில் : குஷ்பூ இட்லி... (எனக்கு ரொம்ப பிடிச்சது)
2. சமூகத்துறையில் : கொய்யா இலையை தேய்த்தால் தண்ணி / தம்மு வாசனை போய்விடும் என்ற அறிவியல் உண்மை
3. வங்கித்துறையில் : மீட்டர் வட்டி
புளியங்கொட்டையை பயன்படுத்தி டீத்தூள் தயாரிப்பது,
மிளகு , பருப்பு போன்றவற்றில் அதேபோல் உள்ள கற்களை கலப்பது,
இன்னும் எத்தனையோ உள்ளன .
நாங்களா எதையும் கண்டுபிடிக்கவில்லை ?
//காதுக்கு குளு குளுன்னு இருக்கு :)//
:) :)
//1. உணவுத்துறையில் : குஷ்பூ இட்லி... (எனக்கு ரொம்ப பிடிச்சது)//
ஹி ஹி ஹி
//2. சமூகத்துறையில் : கொய்யா இலையை தேய்த்தால் தண்ணி / தம்மு வாசனை போய்விடும் என்ற அறிவியல் உண்மை//
இதே துறையில் ஏகப்பட்ட கண்டுபிடிப்புகள் (ஏலக்காய்) இருக்கின்றன
//3. வங்கித்துறையில் : மீட்டர் வட்டி//
ஆமாம், ரன் வட்டி என்று கூட இருக்கிறது
//புளியங்கொட்டையை பயன்படுத்தி டீத்தூள் தயாரிப்பது,
மிளகு , பருப்பு போன்றவற்றில் அதேபோல் உள்ள கற்களை கலப்பது,//
சரியாக சொன்னீர்கள்
பாலில் தண்ணீர்
அரிசியில் கல்
பருப்பில் கேசரி பருப்பு
மஞ்சள் பொடியில் lead chromate
தானியா பொடியில் சானி பொடி
நல்ல மிளகில் பப்பாளி விதைகள்
வத்தல் பொடியில் செங்கல் பொடி
தேயிலையில் மரப்பொடி
கொட்டை வடிநீர் குழம்பி பொடியில் பேரிச்சம்பழ பொடி
பெருங்காயத்தில் மண், பிசின்
கடுகுடன் ஆர்ஜிமோன்
சமையல் எண்ணையுடன் மினரல் எண்ணைகள்
வெண்ணையில் பிற கொழுப்புகள்
பட்டானியில் பச்சை சாயம்
நெய்யில் வனஸ்பதி
இவை எல்லாம் ஹைதராபாத்தில் உள்ள தேசிய உணவு கழகத்திற்கு (National Institute of Nutrition) 1984 ஆம் வருடம் சோதனைக்கு வந்த உணவு பொருட்களில் கலந்திருப்பதாக விஞ்ஞானிகள் ராமதாஸ் மூர்த்தி மற்றும் மோகன்ராம் ஆகியோர் கண்டுபிடித்த கலப்படங்கள்
அதன் பிறகு 25 வருடல் ஆகி விட்டது. இப்ப எவ்வளவு முன்னேறி இருப்போம் :)
jokes apart, I would like to say that, India was ruled by British and other western countries for 200 years and most of the discoveries and inventions are during this period. We would never know how many 'indian ideas' are lifted by those countries for their 'own' credits.
//jokes apart, I would like to say that, India was ruled by British and other western countries for 200 years and most of the discoveries and inventions are during this period. We would never know how many 'indian ideas' are lifted by those countries for their 'own' credits. //
இதில் நீங்கள் சொல்வது those countries --> இந்தியாவில் இருந்த மூன்று நாடுகள்
இங்கிலாந்து
பிரான்சு - பாண்டிச்சேரி காரைக்கால் போன்ற இடங்கள் மட்டும்
போர்த்துகல் - கோவா மட்டும்
இப்பொழுது நீங்கள் மறுமுறை பார்த்தீர்கள் என்றால் நீங்கள் கூறும் அந்த 200 வருடங்களில் இந்த மூன்று நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டவை வேண்டுமானால் இந்தியர்களுடைய கண்டுபிடிப்பாக இருக்கலாம்
அவை எத்தனை என்பது தெரிந்த விஷயம் தானே
அதே இங்கிலாந்து அமெரிக்காவை ஆண்ட போது தான் பெஞ்சமின் பிராங்களினில் கண்டுபிடிப்புகள் வெளிவந்தன
அதே இங்கிலாந்து இந்தியாவை ஆண்ட போது தான் சர்.சி.வி.ராமன் நோபல் பரிசு பெற்றார். ராமானுஜத்தில் கணித சூத்திரங்கள் இங்கிலாந்து விஞ்ஞானியால் பதிபிக்கப்பட்டது
ராக்கெட் தொழிற்நுட்பம் போன்ற சில நுட்பங்கள் திப்பு சுல்தானிடமிருந்து ஆங்கிலேயர் பெற்றார்கள் என்றால் கூட நீங்கள் கூறும் ”We would never know how many 'indian ideas' are lifted by those countries for their 'own' credits.” என்பது அதிக அளவில் மிகைப்படுத்தப்பட்டதாகவே தோன்றுகிறது
நல்ல தகவல் திரட்டு..... இங்க செய்தித்தாள் vending m/cல ஒரு வெள்ளிப் பணத்தைப் போட்டுட்டு ஒரு நாலஞ்சு செய்தித்தாள் எடுத்து, New Jersey to New York இரயில்ல சக நண்பர்களுக்கு விநியோகம்.
இப்படி நிறைய....
//ஆனால் Invention / Fabrication / Modification of Process என்று புதிய நடைமுறைகளை கண்டுபிடித்ததில் நாம் யாருக்கும் எந்த விதத்திலும் குறைவில்லை என்று உறுதியாக கூறலாம்
//
இதிலேயும் நம்மை தூக்கி சாப்பிடுபவர்கள் சீனர்கள். தாஜ்மகலையே டூப்ளிகேட் செய்து வைத்து அவர்கள் நாட்டுக்கு சுற்றுலா பயணிகளை ஈர்கிறார்கள்.
you too in the மொக்கை கோதா? :)
டைம் இருந்தா, இதுக்கு ஒரு பதில் போடுங்க - http://surveysan.blogspot.com/2008/09/blog-post_28.html
மருத்துவர் அய்யா,
நீங்க இந்த தலைப்புல பெரிய ஆராய்சிக் கட்டுரை எழுதி, நம்மவர்கள் கண்டு பிடிச்சதயெல்லாம் ஆதாரத்தோட வெளியிட்டுருப்பிங்க, படிச்சுட்டு பெருமை பட்டுக்கலாம்னு வந்தேன். ஆனா வருத்தப்பட வேண்டிய கண்டுபிடிபுகளப்பத்தி எழுதியிருக்கீங்க.
நம்ம ஊர்ல இருக்க ஆராய்சி நிறுவனங்கள் எல்லாம் அடிப்படை அறிவியல் ஆய்வுகளத் தாண்டி ஒரு குறிபிட்ட பொருளை அல்லது மருந்தை நோக்கிய ஆராய்சியில் ஈடுபடுவதில்லை என்பதால் தான் நம் நாட்டில் இருந்து கண்டுபிடிப்புகள் எதுவும் வருவதில்லை என ஒரு கருத்து உள்ளது. அடிப்படை அறிவியல் ஆய்வுப்படிப்பை இங்கு முடித்துவிட்டு, நம்மவர்கள் வெளிநாடுகளில் சென்று பொருள்சார்ந்த ஆய்வுகளில் ஈடுபட்டு கண்டுபிடிப்புகளை மேற்கொள்கின்றார்கள் . இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
Dear Bruno,
I'm reading ur blog for some time. I expected some useful info from you as a doctor.
Still it is fun filled.
:-))
//இங்க செய்தித்தாள் vending m/cல ஒரு வெள்ளிப் பணத்தைப் போட்டுட்டு ஒரு நாலஞ்சு செய்தித்தாள் எடுத்து, New Jersey to New York இரயில்ல சக நண்பர்களுக்கு விநியோகம்.//
ஒரு ரூபாய் நாணயத்தில் நூலை ஒட்டி அதை வைத்து திரும்ப திரும்ப பொது தொலைபேசியில் உபயோகிப்பது போல் தானே :)
கருத்திற்கு நன்றி :)
கோவி சார், சுவையான தகவலுக்கு நன்றி
//you too in the மொக்கை கோதா? :)//
சர்வேசன், இதே இடுகையில் நமது கண்டுபிடிப்புகள் பற்றியும் எழுதியிருக்கிறேன். (யாரும் அது குறித்து கருத்து கூறவில்லை )
ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு வெளிவர இரண்டு விஷயங்கள் தேவை
1. அறிவியல் அறிவு
2. பரிசோதனைக்கூடம் மற்றும் அது தொடர்பான வசதிகள்
--
நம்மிடம் அறிவு இருக்கிறது என்றும், மூளைத்திறனை பொருத்த வரை நாம் கூறைவில்லை என்றும் ஆணித்தரமாக நிருபிப்பதற்காகவே இந்த பட்டியல்.
இதில் கூறப்பட்டவைகளை பார்த்தால் இவை அனைத்தும் பரிசோதனைக்கூடங்களோ பிற வசதிகளோ தேவைப்படாத கண்டுபிடிப்புகள். அது போல் ஆவனப்படுத்துதல் தேவைப்படாத கண்டுபிடிப்புகள்லை
அறிவு இருக்கிறது என்ற நிலையில் நாம் எங்கு பின் தங்கி இருக்கிறோம் என்று ஆராய வேண்டும்
அடுத்த தொடர் இடுகையில் ஒவ்வொரு காரணமாக பார்ப்போம்.
நாம் பின் தங்கி இருப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று இங்கு ஆவணப்படுத்துதல் முறையாக இல்லாததே (low or non existent documentation) என்ற என் கருத்தை வலியுறுத்தி கூற இது போன்ற ஆதாரங்கள் தேவைப்படுகின்றன
//நீங்க இந்த தலைப்புல பெரிய ஆராய்சிக் கட்டுரை எழுதி, நம்மவர்கள் கண்டு பிடிச்சதயெல்லாம் ஆதாரத்தோட வெளியிட்டுருப்பிங்க, படிச்சுட்டு பெருமை பட்டுக்கலாம்னு வந்தேன். //
பெருமை படத்தக்க இரண்டு கண்டுபிடிப்புகளை (உதாரணத்திற்கு) கூறியிருந்தேனே. கவனிக்க வில்லையா :) :) :)
//ஆனா வருத்தப்பட வேண்டிய கண்டுபிடிபுகளப்பத்தி எழுதியிருக்கீங்க.//
நான் கடைசியாக அளித்த இரு உதாரணங்க்ளை யாருமே கண்டுகொள்ளாதது எனக்கு சிறிது வருத்தமே :(
ஜோசப் சார், நான் கூற வந்ததை நீங்கள் கூறிவிட்டீர்கள்.
இதில் அனைத்து கண்டுபிடிப்புகள் குறித்தும் வருத்தப்பட வேண்டியதில்லை என்றாலும் சில கண்டுபிடிப்புகள் வருத்தப்படவேண்டியவையே
நம் கண்டுபிடிப்புகள் பெரும்பாலும் பணம் சம்பாதிப்பது (முவுருளி கணக்கு கருவிக்கு சூடு, உணவில் கலப்படம்) அல்லது பணத்தை சேமிப்பது (சிங்கிள் டீ, அலைபேசியில் ”மிஸ்டு கால்” அளிப்பது, HP நிறுவனம் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து கண்டுபிடிக்கும் அச்சு மையுறைகளை (cartridge) மறுநிரப்பு (மீள்நிரப்பு) செய்வது) என்றே இருப்பதற்கு காரணம் என்ன என்று ஆராயந்தால் உங்களுக்கு ஒரு எளிய உண்மை புலப்படும்
நம் நாடு வறுமையில் இருக்கிறது
நம் மக்களுக்கு முதல் தேவை ப்ணம்
Necessity is the mother of invention.
பணம் சம்பாதிக்க, அல்லது பணத்தை சேமிப்பது நமது முதல் குறிக்கோள் என்பதால் அது குறித்த கண்டுபிடிப்புகளை நோக்கி நமது மூளைத்திரனில் பெரும்பகுதி செலவழிக்கப்படுகிறது என்று ஆவனப்படுத்தத்தான் இந்த முன்னோட்ட இடுகை
//Dear Bruno,
I'm reading ur blog for some time. I expected some useful info from you as a doctor.
Still it is fun filled.
:-))//
இதுவரை அளித்த தகவல்களின் use இது தொடர்பாக இனி வரும் இடுகைகளில் இருக்கும் :) :)
மேலும் நான் மேலே கூறிய மறுமொழிகளை படித்தால் நான் கூற வரும் கருத்தை அறியலாம்
//நம்ம ஊர்ல இருக்க ஆராய்சி நிறுவனங்கள் எல்லாம் அடிப்படை அறிவியல் ஆய்வுகளத் தாண்டி ஒரு குறிபிட்ட பொருளை அல்லது மருந்தை நோக்கிய ஆராய்சியில் ஈடுபடுவதில்லை என்பதால் தான் நம் நாட்டில் இருந்து கண்டுபிடிப்புகள் எதுவும் வருவதில்லை என ஒரு கருத்து உள்ளது. //
உண்மை.
காரணமும் உள்ளது.
ஒரு புது மருந்தை கண்டுபிடிக்க ஆகும் செலவை விட ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட மருந்தை reverse engineering செய்வதற்கு ஆகும் செலவு குறைவு என்பதால் தான் இங்கு கண்டுபிடிப்புகள் குறைவு
இதிலும் முக்கிய காரணம் பொருளாதாரமே.
அடுத்த காரணம் ஆவனப்படுத்துதக் இங்கு மிக மிக குறைவு, இது குறித்து விளக்கமாக தொடர் இடுகைகளில் எழுதுகிறேன்
// நம்மவர்கள் வெளிநாடுகளில் சென்று பொருள்சார்ந்த ஆய்வுகளில் ஈடுபட்டு கண்டுபிடிப்புகளை மேற்கொள்கின்றார்கள் . இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்//
உண்மைதான். இங்கும் முக்கிய காரணம் பொருளாதாரம் தான்.
எழை நாடுகள் எதையும் கண்டுபிடிக்க வில்லையா என்ற கேள்வி எழுப்பும் முன்,
துணிவாங்கி அதை தைத்தால் ஆகும் செலவை விட ஆயத்த ஆடையை (ரெடிமேட்) வாங்கினால் ஆகும் செலவு 10 சதவிதம் என்றால் ஒரு பொதுசனம் என்ன செய்வார் என்று யோசித்து பார்க்க வேண்டும்
ப்ரூனோ அவர்களே!
என்னுடைய ஆதங்கப்பதிவை இங்கே கோட் பண்ணியதற்கு நன்றி.
இந்தியர்கள் பொதுவாக சரியாக ரிலேட்டெட் ஆர்டிகிள்ஸையும் கோட் பண்ணுவதில்லை. நீங்கள் அதற்கு விதிவிலக்கு.
நான் நீங்கள் சீரியசாக ஒரு லிஸ்ட் கொடுத்திருக்கிறீர்களோ என்று என்னை சரிசெய்ய வந்தேன். :-)
//நான் நீங்கள் சீரியசாக ஒரு லிஸ்ட் கொடுத்திருக்கிறீர்களோ என்று என்னை சரிசெய்ய வந்தேன். :-) //
சீரியஸ் லிஸ்ட் அடுத்த தொடர் இடுகைகளில் வரும். இந்த லிஸ்ட் compile செய்ததன் காரணத்தை மறுமொழிகளில் விளக்கியுள்ளேன்
//நான் நீங்கள் சீரியசாக ஒரு லிஸ்ட் கொடுத்திருக்கிறீர்களோ என்று என்னை சரிசெய்ய வந்தேன். :-)//
வருண் சார்
இந்த இடுகையிலேயே இரு கண்டுபிடிப்புகளின் பட்டியல் இருக்கிறது
ஏன் யாருமே அதை ”சீரியஸ்” என்று எடுத்தக்கொள்ளவிலலை என்று எனக்கு புரியவில்லை
இதுல பிளாக் ரைட்டிங்ல மொக்கை நம்ம மக்கள் இல்ல உலகம் பூராவா மருத்துவரே..?
கலக்கல் பதிவு.. வாரு வாருனு வாரிட்டீங்க..
நர்சிம்
ஜவுளித்துறையில் சாயக்கலவைக்கு பயன்படும் இயந்திரங்கள் இரண்டு லட்சம் அல்லது மூன்று லட்சம் ஆகும். அந்த வேலையை வெறும் 25/50 லிட்டர் pressure cooker களை வைத்து தில்லியில் குடிசத்தொழிலாகப் பலர் செய்து வருகிறார்கள். இதுவும் நமது கண்டுபிடிப்புத்தான்
இப்படியா பண்ணுவிங்க
நானும் உண்மைன்னு நம்பி வந்தேன் இப்படி மூத்த்ரசந்துக்குள்ள வச்சு அடிச்ச மாதிரி அடிச்சிட்டிங்களே
****************மின்னனு வாக்கு பதிவு இயந்திரம்********இந்தியாவில் இந்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டவை தானே*************
அப்படியா ? இந்தியதேவைக்கு முறைப்படுத்தபட்டதுன்னு வேணும்னா சொல்லலாம்.
//ஜவுளித்துறையில் சாயக்கலவைக்கு பயன்படும் இயந்திரங்கள் இரண்டு லட்சம் அல்லது மூன்று லட்சம் ஆகும். அந்த வேலையை வெறும் 25/50 லிட்டர் pressure cooker களை வைத்து தில்லியில் குடிசத்தொழிலாகப் பலர் செய்து வருகிறார்கள். இதுவும் நமது கண்டுபிடிப்புத்தான் //
தகவலுக்கு நன்றி வாத்தியார் சார்
//இப்படியா பண்ணுவிங்க
நானும் உண்மைன்னு நம்பி வந்தேன் இப்படி மூத்த்ரசந்துக்குள்ள வச்சு அடிச்ச மாதிரி அடிச்சிட்டிங்களே //
இடுகையை கடைசி வரை படிகக்வில்லையா. நமது கண்டுபிடிப்புகளும் இருக்கின்றனவே
//அப்படியா ? இந்தியதேவைக்கு முறைப்படுத்தபட்டதுன்னு வேணும்னா சொல்லலாம்.//
சொல்லலாம்
கணினியை முறைப்படுத்தப்பட்ட கால்குலேட்டர் என்றும் இங்க்ஜெட் அச்சு எந்திரத்தை முறைப்படுத்தப்பட்ட எழுதுகோல் என்றும் சொன்னால், நீங்கள் கூறியது சரி
நிறைய , அழகாக,நகைச்சுவையாக நல்ல தமிழில் சொல்லியிருக்கீங்க!
வாழ்த்துக்கள்! -
ஆனால்...அந்த HP refilling மட்டும் கொஞ்சம்
மாறிப்போச்சு!
இந்த விஷயத்தில் நாம கில்லாடி இல்லை!
அவுங்க நாட்டுக்காரங்கதான்...
கேஸெல்லாம் போட்டு அதை தடுக்கப்பாத்தாங்க!
ஆனாலும் REFILLERs க்கு சாதகமா தீர்ப்பு வந்துடுச்சு!
அதுவும்...என் கம்பெனி கார் வாங்கினா நான் சொல்ற கம்பெனி டயர்தான் வாங்கணும் அதுவும் . நாங்களே காத்தடிச்சு வச்சிருப்போம்னு சொல்ற மாதிரி இருக்குன்னே தீர்ப்பு வந்திருக்கு..!
எடுத்துக்காட்டா ஒரு REFILLING company
site போய்ப்பாருங்க!
http://www.scc-inc.com
நன்றி !
//ஆனாலும் REFILLERs க்கு சாதகமா தீர்ப்பு வந்துடுச்சு!//
தகவலுக்கு நன்றி
//கலக்கல் பதிவு.. வாரு வாருனு வாரிட்டீங்க..//
நன்றி நர்சிம்
என்னது, லஸ்ஸி தயாரிக்க வாஷிங் மெஷினா? அதில் திரும்பவும் துணி துவைக்க மாட்டார்கள் என நம்புகிறேன். இல்லை என்றால் அந்த லஸ்ஸியை குடிக்கும் மக்களின் நிலை என்னவாகும்? :(
சமையல் டிபார்ட்மெண்டில் இந்தியர்களின் கண்டுபிடிப்பை யாராலும் மிஞ்ச முடியாது. இட்லியிலேயே ஒரு 100 வகை இருக்கும்!
//என்னது, லஸ்ஸி தயாரிக்க வாஷிங் மெஷினா? அதில் திரும்பவும் துணி துவைக்க மாட்டார்கள் என நம்புகிறேன். இல்லை என்றால் அந்த லஸ்ஸியை குடிக்கும் மக்களின் நிலை என்னவாகும்? :(//
உணவகங்களில் உள்ள பெரிய தோசைக்கல்லில் தோசை ஊத்துவதற்கு முன்னர் ஒரு விளக்குமாறு (வாரியல்) மூலம் எண்ணையை பரப்புவார். அந்த வாரியல் அதற்கு மட்டும் பயன் படும் (தரை பெருக்க அல்ல) என்ற நம்பிக்கை போல் லஸ்ஸி தயாரிக்கும் துணி துவைக்கும் பொறி அதற்கு மட்டும் பயன் படும் என்று நம்புவோமாக
Post a Comment