இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Sunday, September 21, 2008

பன்மனோபாவ ஒழுங்கின்மை நோய் பற்றி ஒரே போலிருக்கும் இரு கதைகள்

இந்த கதை உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்
  • ஒரு சின்ன பையன் இருக்கிறான்.
  • சின்ன வயசிலேயே அவனுக்கு தப்பு செய்கிறவர்களை பார்த்தால் பிடிப்பதில்லை
  • அதனால் அவன் பன்மனோபாவ ஒழுங்கின்மை நோயால் பாதிக்கப்படுகிறான்
    • இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சில நேரம் ஒரு நபரைப்போலவும், மற்ற நேரங்களில் வேறு நபரைப்போலவும் நடந்து கொள்வார்கள்
    • அவர்கள் தாமாகவே நடந்து கொள்வது முதன்மை தன்முனைப்பு என்று அழைக்கப்படும்.
    • வேறு நபரைப்போல் நடந்து கொள்வது மாற்று தன்முனைப்பு என்று அழைக்கப்படும்.
    • அப்படி தாம் இரு வேறு நபர்களாக நடந்து கொள்வதே அவர்களுக்கு தெரியாது
    • சிலர் ஒரு முதன்மை தன்முனைப்பும், ஒரு மாற்று தன்முனைப்பும் உடையவர்களாக இருப்பார்கள்
    • வேறு சிலரோ ஒரு முதன்மை தன்முனைப்பும் பல மாற்று தன்முனைப்புகளும் உடையவர்களாக இருப்பார்கள்
  • நம் கதையின் நாயகன் இயல்பில் பயந்த சுபாவம் உள்ளவன். 
  • ஆனால் அவனது அடுத்த மனோபாவமோ (மாற்று தன்முனைப்போ) எந்த பயமும் இல்லாமல் தவறு செய்பவர்களை (அல்லது அவர்கள் தவறு செய்வதாக நாயகன் நினைப்பவர்களை) கொல்கிறது
  • ஆனால் இந்த கொலைகளை தான் தான் செய்கிறோம் என்று கதாநாயகனுக்கு தெரியவில்லை.
  • ஆனால் கதாநாயகனுக்கு தெரிந்த குற்றவாளிகள் மட்டுமே கொல்லப்படுகிறார்கள்
  • இந்த நேரத்தில் வாலிப வயதில் நம்ம கதாநாயகன் ஒரு பெண்ணைக்காதலிக்கிறான். ஆனால் இதில் கூட பயம் தான்
  • இங்கு கூட மாற்று தன்முனைப்பு தான் வேலை செய்கிறது 
  • நம் கதாநாயகன் மாற்று தன் முனைப்பு பாத்திரமாக ஒரு பிராணியின் மேல் வருகிறான்.
இந்த கதை என்ன வென்று தெரிகிறதா.

இந்திரா சௌந்திரராஜன் எழுதி, பின்னர் நாகா அவர்களின் இயக்கத்தில் மின்பிம்பங்களின் தயாரிப்பில் சன் தொலைக்காட்சியில் 1998-1999 சக்கைபோடு போட்ட “மர்ம தேசம் - விடாது கருப்பு” என்ற தொலைக்காட்சி தொடரின் கதை தான் இது. அதற்கு முன்னர் வந்த விட்டு விடு கருப்பா தொடர்கதையின் கதை யோட்டம் சிறிது மாறுபட்டது

இந்த தொடரின் கதாசரியரின் பெயரையும், அல்லது அதை மேலும் மெருகேற்றிய இயக்குனர் நாகாவின் பெயரையும்  “பெயருக்கு கூட குறிப்பிடாமல்” அதே போல் “சுயமாக சிந்தித்து உருவாக்கப்பட்ட” மற்றொரு கதை 2005 திரைப்படமாக எடுக்கப்பட்டது கூட உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

களம்முதலில் (1997) வந்த கதைஅடுத்து (2004) வந்த கதை
கதாநாயகனின் மாற்று தன்முனைப்பு பாத்திரத்தின் வாகனம்மிருகம் (குதிரை)மிருகம் (எருது)
பாத்திரத்தின் பெயர்கருப்புStranger in Black
தப்பு செய்பவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுகிறார்களாஇல்லைஇல்லை
யார் தண்டிக்கப்படுகிறார்கள்கதாநாயகனுக்கு தெரிந்தவர்கள் மட்டும்கதாநாயகனுக்கு தெரிந்தவர்கள் மட்டும்
தண்டனைஅனைவருக்கும் ஒன்று தான். நபரை பொருத்து மாறுகிறது.

இன்றைய கேள்வி 1:
சும்மா தூங்குபவர்களை கூட கொல்லும் அந்நியன் திறமையை பின் தள்ளி சிபாரிசுக்கு முன்னுரிமை அளிக்கும் சபா அலுவலரை கொல்லாதது போல் சுஜாதாவும் சங்கரும் கதை அமைத்தது ஏன்.

இன்றைய கேள்வி 2:
தேவாவை ஜெராக்ஸ் கடை என்று கேலிச்ய்பவர்களில் / எழுதுபவர்களில் “சிலர்” இதுபோன்ற ”சில” அப்பட்டமான அறிவு திருட்டுக்களை கண்டு கொள்ளாதது ஏன்.

இன்றைய ஆதங்கம் 1:
தண்டனை / கேலி / பகடி / விமர்சணம் என்பதெல்லாம்  செய்யப்பட்ட செயலைப்பொருத்து அமையாமல் செய்த நபரை பொருத்து இருக்கும் நிலை என்று மாறும்

48 மறுமொழிகள்:

வெண்பூ said...

உங்கள் ஆதங்கம் புரிகிறது புருனோ. ஆனால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்பதுதான் நிஜம்.

அதே நேரம் அந்நியனை விடாது கருப்பின் அப்பட்டமான காப்பி என்று கூற முடியாது. கதையின் ஒன்லைன் கண்டிப்பாக மேட்ச் ஆகிறது. அப்படி பார்த்தால் இன்று வெளிவரும் ஒவ்வொரு படமுமே ஏதாவது ஒரு படத்தை / சீரியலை / புத்தகத்தை ஒத்திருக்கும்.

புருனோ Bruno said...

வென்பூ சார்

சிட்னி செல்டனில் Tell me your dreams மற்றும் சந்திரமுகி திரைப்படத்தில் கூட பன்முக ஒழுங்கின்மை நோய் முக்கிய கதாபாத்திரம் தான்(ஒரு பார்த்திபன் படம் கூட உண்டு - பெயர் மறந்து விட்டது - மு.க பார்த்திபன் பற்றி எழுதும் போது பார்த்துக்கொள்ளலாம்)

சொல்லப்போனால் அந்நியனின் வரும் நீதிமன்ற காட்சிக்கும், டெல் மி யுவர் ட்ரீம்ஸின் நீதிமன்ற காட்சிக்கு கூட சில “ஒற்றுமைகள்” (ஒளிப்படத்தை வைத்து நீதிபதியின் மனதை மாற்றுவது) உண்டு.
-

புருனோ Bruno said...

சுஜாதாவின் ஒரு புதினத்திற்கும் (பெயர் ஞாபகம் இல்லை - ஜே.கே என்று நினைக்கிறேன்) ஏர்போர்ட் திரைப்படத்திற்கும் நிறைய வித்தியாசம் உண்டு (பிரதமரை கொல்ல ஹெலிகாப்டரில் தீவிரவாதி வருவது ஒற்றுமை)

புருனோ Bruno said...

எந்த கதைகளை, திரைப்படங்களை எடுத்துக்கொண்டாலும் ஒற்றுமையுள்ள கதைகளா, அல்லது பிரதியெடுக்கப்பட்டதா என்பது இரண்டாவது கதையை எழுதியவரை தவிர யாராலும் உறுதியாக கூற முடியாது :) :)
-
உதாரணமாக மக்கள் என் பக்கம் திரைப்படம் கூட சிட்னி செல்டனின் ஒரு ஆங்கில நாவல் போலிருக்கும்

கரிகாலன் said...

//புருனோ Bruno said...
வென்பூ சார்

சிட்னி செல்டனில் Tell me your dreams மற்றும் சந்திரமுகி திரைப்படத்தில் கூட பன்முக ஒழுங்கின்மை நோய் முக்கிய கதாபாத்திரம் தான்(ஒரு பார்த்திபன் படம் கூட உண்டு - பெயர் மறந்து விட்டது - மு.க பார்த்திபன் பற்றி எழுதும் போது பார்த்துக்கொள்ளலாம்) //


குடைக்குள் மழை ?????????

SP.VR.Subbiah said...

////அதே நேரம் அந்நியனை விடாது கருப்பின் அப்பட்டமான காப்பி என்று கூற முடியாது. கதையின் ஒன்லைன் கண்டிப்பாக மேட்ச் ஆகிறது. அப்படி பார்த்தால் இன்று வெளிவரும் ஒவ்வொரு படமுமே ஏதாவது ஒரு படத்தை / சீரியலை / புத்தகத்தை ஒத்திருக்கும்.///

என்னுடைய கருத்தும் இதேதான் டாக்டர். இது தவிர்க்க முடியாததும் கூட!

புருனோ Bruno said...

//என்னுடைய கருத்தும் இதேதான் டாக்டர். இது தவிர்க்க முடியாததும் கூட! //

உண்மைதான் வாத்தியார் சார். தவிர்க்க முடியாது. ஆனால் என் ஆதங்கம் இப்படி வரும் கதைகள் அல்ல

தண்டனை / கேலி / பகடி / விமர்சணம் என்பதெல்லாம் செய்யப்பட்ட செயலைப்பொருத்து அமையாமல் செய்த நபரை பொருத்து இருக்கும் நிலை என்று வரும்

என் ஆதங்கத்தின் பின்னால் இரு கேள்விகள் இருக்கின்றனவே :)

புருனோ Bruno said...

//குடைக்குள் மழை ?????????//
நன்றி கரிகாலன் சார்

G.Ragavan said...

காப்பியோ டீயோ... அந்நியன் படம் ஒரு குப்பை. அத உறுதியாச் சொல்லலாம்.

புருனோ Bruno said...

//காப்பியோ டீயோ... அந்நியன் படம் ஒரு குப்பை. அத உறுதியாச் சொல்லலாம்.//

மண்வாரியை மண்வாரி என்று அழைத்த உங்களின் மறுமொழி வாசித்த உடன் எனக்கு குபீர் சிரிப்பை வரவழைத்தது.


.

narsim said...

மருத்துவரே..

மிக ஆழமான கேள்விகள்..

உங்கள் ஆதங்கம் தான் எனக்கும்..ஏன் சமூகத்திற்கும் அஃதே..

நல்ல பதிவு..

நர்சிம்

ARUVAI BASKAR said...

//தண்டனை / கேலி / பகடி / விமர்சணம் என்பதெல்லாம் செய்யப்பட்ட செயலைப்பொருத்து அமையாமல் செய்த நபரை பொருத்து இருக்கும் நிலை என்று மாறும்//

நல்ல கேள்வி டாக்டர் .

புருனோ Bruno said...

//உங்கள் ஆதங்கம் தான் எனக்கும்..ஏன் சமூகத்திற்கும் அஃதே..//

நன்றி நர்சிம்

புருனோ Bruno said...

பாஸ்கர் சார்,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

RATHNESH said...

டாக்டர் சார்,

இலக்கியத் திருட்டு என்பது எழுத்தாளர்கள் பலரின் பிறப்புரிமை. எழுதுபவரின் மனசாட்சி மட்டுமே அறியும் கதையின் கருவும் போக்கும் அவருடைய ஒரிஜினல் தானா என்பதை. ஒரே மாதிரியான சிந்தனை என்று நம்பிக்கையின் அடிப்படையில் ஒப்புக் கொள்ளப்பட இருக்கும் வாய்ப்பினை மிஸ்யூஸ் பண்ணுகிற அயோக்கியத் தனம் இது.

ஒரு திரைப்படத்தில் சோவும் மனோரமாவும் எழுத்தாளர்களாக இருப்பார்கள்.கதை திருட்டு சம்பந்தமான கேஸ் ஒன்று நடக்கும். அதில் எப்படி தப்பிக்கிறார் சோ என்பதில் இத்தகைய வண்டவாளங்கள் நகைச்சுவையாக காட்டப்பட்டிருக்கும்

புருனோ Bruno said...

//இலக்கியத் திருட்டு என்பது எழுத்தாளர்கள் பலரின் பிறப்புரிமை. எழுதுபவரின் மனசாட்சி மட்டுமே அறியும் கதையின் கருவும் போக்கும் அவருடைய ஒரிஜினல் தானா என்பதை.//

எனக்கு புரியாத விஷயம் என்னவென்றால் என் கதை “இதை தழுவி எழுதியது” என்று ஒரு வரி கூற ஏன் மனம் வருவது இல்லை என்பது தான்

புருனோ Bruno said...

//ஒரே மாதிரியான சிந்தனை என்று நம்பிக்கையின் அடிப்படையில் ஒப்புக் கொள்ளப்பட இருக்கும் வாய்ப்பினை மிஸ்யூஸ் பண்ணுகிற அயோக்கியத் தனம் இது.//

வழிமொழிகிறேன். நானெல்லாம் “இது இந்த புத்தகத்தை (அல்லது கட்டுரையை) தழுவி எழுதியது (அல்லது மொழி பெயர்த்தது !!) என்று குறிப்பிட தயங்கியதே இலலை

//ஒரு திரைப்படத்தில் சோவும் மனோரமாவும் எழுத்தாளர்களாக இருப்பார்கள்.கதை திருட்டு சம்பந்தமான கேஸ் ஒன்று நடக்கும். அதில் எப்படி தப்பிக்கிறார் சோ என்பதில் இத்தகைய வண்டவாளங்கள் நகைச்சுவையாக காட்டப்பட்டிருக்கும் //

கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் போலிருக்கிறது

TBCD said...

:)

ஷங்கர் கிரிட்டிவிட்டியில் கவனம் செலுத்துவோம்..ஒரிஜினாலிட்டி வேண்டாம் என்று விட்டுவிட்டார் போலிருக்கு....

அவனும் அவளும் said...

*****சும்மா தூங்குபவர்களை கூட கொல்லும் அந்நியன் திறமையை பின் தள்ளி சிபாரிசுக்கு முன்னுரிமை அளிக்கும் சபா அலுவலரை கொல்லாதது போல் சுஜாதாவும் சங்கரும் கதை அமைத்தது ஏன்****

ஒருவேள சுஜாதா சபா செக்ரட்டரி பிராமின் அப்படிங்கறதுனால சங்கர்கிட்ட அவர கொல்லாதீங்கன்னு சொல்லி இருப்பார் (அவரோட ஜாதில உள்ள ஒருத்தர கொன்னா ஜாதி பெருமை என்ன ஆகும்ன்னு நினைச்சி இருப்பாரு)

******தண்டனை / கேலி / பகடி / விமர்சணம் என்பதெல்லாம் செய்யப்பட்ட செயலைப்பொருத்து அமையாமல் செய்த நபரை பொருத்து இருக்கும் நிலை என்று மாறும் ?*******

நீங்க சொல்லுங்க

அவனும் அவளும் said...

விடாது கருப்பு சம்பந்தமா எழுத திடீர்ன்னு ஏன் தோணிச்சு உங்களுக்கு ?

Tulsi said...

வெளிநாட்டுப் படங்களை அப்படியே காப்பி அடிக்கும் பெரிய மனுசங்க, எங்கியாவது எப்பவாவது அட...குறைஞ்சபட்சம் அந்த---- படம்தான் எனக்கு இந்தப் படத்தை எடுக்க ஒரு இன்ஸ்பிரேஷன்( காபி என்பதுக்கான நாகரீகச் சொல்?)ஆக இருந்துச்சுன்னாவது ஒரு சொல் சொல்லலாம் இல்லையா?

ஒருவேளை ஊரறிஞ்ச ரகசியத்தை நாம் ஏன் சொல்லிக்கணுமுன்னு இருப்பாங்களோ? இல்லைன்னா இதுவும் ஒரு மன நோயா?

எல்லாம் இருக்க இப்ப இன்னொன்னும் கேட்டுக்கறேன். எனக்கு ஒரு ப்ராப்ளம் இருக்கு. அதாவது இந்த மது வகைகளைப் பற்றி. என்னதான் ஒயின் உடம்புக்கு நல்லதுன்னு மருத்துவர்கள் சிபாரிசு செஞ்சாலும் இந்தக் குடி வகைகளைப் பார்த்தாலே வெறுப்பு. அதுமட்டுமில்லாமல் குடிக்கறவங்கள் மேல் ஒரு பரிதாபமும் வருவதில்லை. கள்ளச்சாராயச் சாவுகள், அளவுக்குமீறிக் குடிச்சுக் குடல்வெந்து, இல்லேன்னா குடிமயக்கத்தில் வண்டி ஓட்டிக்கிட்டுப்போய் விபத்துலே மாட்டிச் சாகும் ஆட்கள் எல்லாம் பார்த்தால் ஒழியட்டும் சனியன்கள்ன்னு நினைப்பேன். இதுவும் ஒரு மனநோயா?

புருனோ Bruno said...

அவனும் அவளும்,

கருத்திற்கு நன்றி :)

புருனோ Bruno said...

//விடாது கருப்பு சம்பந்தமா எழுத திடீர்ன்னு ஏன் தோணிச்சு உங்களுக்கு ? //

திடீர் அல்ல. படம் வந்த உடன் நான் என் ஆங்கில வலைப்பதிவில் எழுதியது தான் இது.

புருனோ Bruno said...

//ஷங்கர் கிரிட்டிவிட்டியில் கவனம் செலுத்துவோம்..ஒரிஜினாலிட்டி வேண்டாம் என்று விட்டுவிட்டார் போலிருக்கு....//

:) :)

புருனோ Bruno said...

//என்னதான் ஒயின் உடம்புக்கு நல்லதுன்னு மருத்துவர்கள் சிபாரிசு செஞ்சாலும்//

சாமி, அப்படியெல்லாம் கிடையாது.

சில வகை வைன்கள், வெகு குறைவான அளவில் எடுத்தால் மட்டுமே நல்லது.

பொதுவாக அவ்வளவு குறைவான அளவில் யாரும் பருகுவதில்லை

RATHNESH said...

//எனக்கு புரியாத விஷயம் என்னவென்றால் என் கதை “இதை தழுவி எழுதியது” என்று ஒரு வரி கூற ஏன் மனம் வருவது இல்லை என்பது தான்//

நல்லா இருக்குதே கதை. திருடுபவன் எவனாவது, வலிய தானாகவே, "இது இன்ன வீட்டின் பீரோவைத் தழுவி எடுத்தது; இது இன்ன நபரின் பேண்ட் பின் பகுதியைத் தழுவி எடுத்த பர்ஸ்" என்று ஒப்புக் கொண்டால் பாராட்டு விழா வைப்பீர்களா?

புருனோ Bruno said...

//நல்லா இருக்குதே கதை. திருடுபவன் எவனாவது, வலிய தானாகவே, "இது இன்ன வீட்டின் பீரோவைத் தழுவி எடுத்தது; இது இன்ன நபரின் பேண்ட் பின் பகுதியைத் தழுவி எடுத்த பர்ஸ்" என்று ஒப்புக் கொண்டால் பாராட்டு விழா வைப்பீர்களா? //

Ten Commandments, Ben Hur, Day of the Jackal, Jurassic Park, Coma, Da Vinci Code,
போன்றவையெல்லாம் பாராட்டு பெற வில்லையா :) :)

தமிழ் படங்களில் கூட எத்தனையோ படங்களில் நாவலாசிரியருக்கு நன்றி என்றோ (அல்லது கதை : இன்னார் ) என்றோ தெரிவித்திருக்கிறார்களே. அவையெல்லாம் பாராட்டு பெற வில்லையா.

--
பிரச்சனை அடுத்தவர் கதையை உபயோகிக்கப்பது இல்லை. அந்த மூலக்கதை எழுதியவருக்கு ஒரு நன்றி கூட தெரிவிப்பது இல்லை என்பது முதல் பிரச்சனை. அடுத்த பிரச்சனை ஏன் சிலரை காய்ச்சி எடுக்கும் ஊடகங்கல் சிலரை விட்டு விடுகிறார்கள் என்பது தான்

Tulsi said...

இங்கே மருத்துவமனைகளில் தங்கி இருக்கும்போது, ராத்திரி சாப்பாட்டு நேரத்தில் அநேகமா எல்லா நோயாளிகளுக்கும்(?) ஒயின் ஊத்திக்கொடுக்கறாங்க. நான் வேணாமுன்னு சொன்னால்.... என்னை ஒரு விநோதப் பிராணியைப் போல் பார்த்துட்டுப் போவாங்க.

வெண்பூ said...

இது சம்பந்தமான ஒரு விசயம். நாகா பெரிய திரையில் இயக்கிக் கொண்டிருக்கும் முதல் படம் "அனந்தபுரத்து வீடு". அதை தயாரிப்பது ஷங்கரின் "எஸ் பிக்சர்ஸ்". :)

புருனோ Bruno said...

வெண்பூ சார்,

தகவலுக்கு நன்றி

சென்ஷி said...

இவை இரண்டிற்கும் முன்பே சத்யராஜ், அம்பிகா நடித்த ஆளப்பிறந்தவன் என்ற திரைப்படம் வந்துள்ளது. இதே கருவை கொண்டது :)

Sridhar Narayanan said...

அந்நியன் படம் ஒரு குப்பை. அதில் மாற்று கருத்து ஏதுமில்லை.

விடாது கருப்பு, அந்நியன் இரு கதைகளும் பன்மனோபாவ ஒழுங்கின்மை நோய் அடிப்படையில் நாயகர்கள் ஒன்றிற்கு மேற்பட்ட வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பது சரி. ஆனால் அப்பட்டமான காப்பியோ / தழுவலோ சொல்லிவிட முடியாது. சுயநினைவில்லாமல் கெட்டவர்களை போட்டுத் தள்ளுகிறான் என்ற ஒரே ஒரு வரிதான் தொடர்பு. மற்றபடி அந்நியனில் 'கருட புரானம்' பின்புலமாக வரும். விடாது கருப்பு-வில் கருப்பண்ண சாமி வருவார்.

//ஆளப்பிறந்தவன்// அது பன்மனோபாவ ஒழுங்கின்மை நோய் அடிப்படை கிடையாது என்று நினைக்கிறேன். நாடகத்தில் மகாராஜாவாக நடிக்கும் நாயகன் ஒரு சிறுவனின் வேண்டுகோளுக்காக நிஜமாகவே கெட்டவர்களை போட்டுத் தள்ளுகிறார். சுயநினைவோடு.

புருனோ Bruno said...

சென்ஷி,

ஆளப்பிறந்தவனும் மக்கள் என் பக்கமும் ஒரே நாள் வெளிவந்த படங்களா

புருனோ Bruno said...

// சுயநினைவோடு//

இது தான் முக்கியம். சுயநினைவோடு இருந்தால் அது பன்மனோபாவ ஒழுங்கின்மை நோய் கிடையாது. உதாரணம் - வேஷம் போட்டு கொலை செய்யும் சிட்டிசன் போன்ற படங்கள்.

முரளிகண்ணன் said...

ஷங்கர் பிரதி உபகாரமாக நாகாக்கு ஒரு பட வாய்ப்பு கொடுத்துள்ளார். மாளிகைபுரத்து வீடு என டைட்டில். முதலில் மீரா ஜாஸ்மின்னை புக் செய்தார்கள். இப்போது அவர் நடிக்கவில்லை.

புருனோ Bruno said...

//ஷங்கர் பிரதி உபகாரமாக நாகாக்கு ஒரு பட வாய்ப்பு கொடுத்துள்ளார். மாளிகைபுரத்து வீடு என டைட்டில். முதலில் மீரா ஜாஸ்மின்னை புக் செய்தார்கள். இப்போது அவர் நடிக்கவில்லை//

தகவலுக்கு நன்றி :)

முரளிகண்ணன் said...

நாகா பட டைட்டிலாக வெண்பூ கூறியிருப்பதே சரி. அனந்தபுரத்து வீடு என மாற்றி வாசித்துக்கொள்ளுங்கள் ;-))))

வெட்டிப்பயல் said...

டாக்டர், பின்னூட்டத்துல யாராவது சொல்லியிருக்காங்களானு பார்க்கல. அந்நியன் அப்பட்டமாக ஷிட்னி ஷெல்டனின் "Tell Me your Dreams"ன் காப்பி...

இந்த கதையை நான் காப்பி அடிக்கனும்னு காலேஜ் படிக்கும் போது நினைச்சிட்டு இருந்தேன். ஆனா எனக்கு முன்னாடி "ஷ"ங்கர் அடிச்சிட்டாரு :))

வெட்டிப்பயல் said...

ஆஹா.. முதல் பின்னூட்டத்துலயே நீங்க சொல்லிட்டீங்களா? ச்ச.

நீங்க சொன்ன மாதிரி நீதிமன்ற காட்சி, மூணு நபர்கள். ஒண்ணு நார்மல், ஒண்ணு கொலை செய்ய, ஒன்று காதல் (கலை).

அப்பறம் அந்நியனும், ரெமோவும் பேசிக்கிறது. ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கறது. ரெண்டு பேருக்கும் அம்பியை பத்தி தெரியும்.

இதெல்லாம் Tell Me your Dreams தான் :)

வெட்டிப்பயல் said...

////ஆளப்பிறந்தவன்// அது பன்மனோபாவ ஒழுங்கின்மை நோய் அடிப்படை கிடையாது என்று நினைக்கிறேன். நாடகத்தில் மகாராஜாவாக நடிக்கும் நாயகன் ஒரு சிறுவனின் வேண்டுகோளுக்காக நிஜமாகவே கெட்டவர்களை போட்டுத் தள்ளுகிறார். சுயநினைவோடு.//

அவதாரம் படத்துல கடைசியா நாசர் நரசிம்ம அவதாரம் போட்டு அப்படியே மாறுவாரே. அது வருமா?

Sridhar Narayanan said...

புருனோ! முந்தைய மறுமொழி சரியானபடி பதிவானதா என்று சந்தேகம் வந்ததால் மீண்டும் பதிகிறேன். டூப்ளிகேட் ஆக இருந்தால் நிராகரித்து விடுங்கள்.

----------

//கடைசியா நாசர் நரசிம்ம அவதாரம் போட்டு அப்படியே மாறுவாரே. அது வருமா?//

இல்லைன்னு நினைக்கிறேன் பாலாஜி. நாடகத்தில் நடிக்கும் பொழுது அந்த பாத்திரமாக மாறி தீயவனை வதம் செய்யும் காட்சி அது. split personality-ஆக கொள்ள முடியாது. mood-disorder போன்ற வியாதியினால் இம்மாதிரியான உடனடி பெர்ஸனாலிட்டி மாற்றங்கள் நடக்கலாம். அதிக மன அழுத்தம், அல்லது மனச் சிதைவுகள் காரணமாக இருக்கலாம்.

இருந்த மாதிரியே திடீரென்று 'நான் ஆத்தா பேசறேண்டா' என்று சாமியாடும் நபர்களைப் போன்ற ஒரு நிகழ்வு. அந்த நேரத்தில் அவர்களின் பலம் அதீதமானதாக இருக்கும். வெறியாட்டம் ஆடுவார்கள். அந்த நேரத்தில் என்ன சொன்னார்கள் / செய்தார்கள் என்று பின்னர் ஞாபகமே இருக்காது.

இவர்களில் பலருக்கு இது ஒரு நோய் என்றே தெரியாது. இதிலிருந்து தாங்கள் விலகி குணமடைய முடியும் என்பதே தெரியாமல் இம்மாதிரியான mood-disorders நோய்களோடு வாழ்கிறார்கள். சிலருக்கு hallucinations போன்ற புரியாத குரல்கள் துரத்தும். அதை அவர்கள் தெய்வக் குரலாக நினைத்துக் கொள்வது உண்டு.

நம்மிடையே இருந்த / இருக்கும் பல மகான்கள் இம்மாதிரியான சிற்சில மனசிதைவுகள் மூலம் பெரிய ஆற்றல் படைத்தவர்களாக தோற்றமளிக்கிறார்கள். சரியான சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் அவர்களும் சாதாரணன் ஆக மாறியிருப்பார்கள்.

ஆகக் கூடி மானிட வாழ்க்கையில் சிறந்த நிலை சாதாரணனாக எந்தவித சக்தியும் இல்லாதிருப்பதுதான். I am nobody :-)

---------------

புருனோ Bruno said...

//நாகா பட டைட்டிலாக வெண்பூ கூறியிருப்பதே சரி. அனந்தபுரத்து வீடு என மாற்றி வாசித்துக்கொள்ளுங்கள் ;-))//

இதுவும் இந்திரா சௌந்திரராஜன் கதை போலிருக்கிறது

புருனோ Bruno said...

//நீங்க சொன்ன மாதிரி நீதிமன்ற காட்சி, மூணு நபர்கள். ஒண்ணு நார்மல், ஒண்ணு கொலை செய்ய, ஒன்று காதல் (கலை).

அப்பறம் அந்நியனும், ரெமோவும் பேசிக்கிறது. ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கறது. ரெண்டு பேருக்கும் அம்பியை பத்தி தெரியும்.

இதெல்லாம் Tell Me your Dreams தான் //

:)

புருனோ Bruno said...

//நம்மிடையே இருந்த / இருக்கும் பல மகான்கள் இம்மாதிரியான சிற்சில மனசிதைவுகள் மூலம் பெரிய ஆற்றல் படைத்தவர்களாக தோற்றமளிக்கிறார்கள். சரியான சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் அவர்களும் சாதாரணன் ஆக மாறியிருப்பார்கள். //

:)

//ஆகக் கூடி மானிட வாழ்க்கையில் சிறந்த நிலை சாதாரணனாக எந்தவித சக்தியும் இல்லாதிருப்பதுதான். I am nobody :-)//

வழிமொழிகிறேன்

Uday said...

Anniyan, SeveN endra aangila padathin thaluval.

புருனோ Bruno said...

//Anniyan, SeveN endra aangila padathin thaluval.//
தகவலுக்கு நன்றி உதய் சார்

சுரேகா.. said...

அற்புதமான ஆய்வு!

மிகச்சரியா சொல்லியிருக்கீங்க!

பகட்டு, படாடோபத்துக்காக என்னவேணும்னாலும் பண்ணுவாங்க! பேரு போடறதாவது.......?

அதைத்தானே உலகம் நம்பிக்கிட்டிருக்கு!

பார்வையாளர்கள் இன்னும் கூர்மையாகணும்...!

புருனோ Bruno said...

ஆனால் இனி வரும் காலங்களில் (அதிகரித்து உள்ள தகவல் தொடர்புகளால்) இது போன்ற அறிவுத்திருட்டுக்கள் மாட்டிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் :)

இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...