கலப்படம் இல்லாத மற்றும் சரியாக பதப்படுத்தப்பட்டிருக்கும் பொருட்களே சாப்பிட தகுதியானவை
அவ்வாறு சோதனைக்கு வந்த உணவு பொருட்களில் கலந்திருப்பதாக விஞ்ஞானிகள் ராமதாஸ் மூர்த்தி மற்றும் மோகன்ராம் ஆகியோர் 1984 ஆம் வருடம் கண்டுபிடித்த கலப்படங்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது
இதில் பாலில் நீர் சேர்ப்பதும், அரிசியில் கல் இருப்பதும் அறிந்திருப்பீர்கள். பிற விஷயங்கள் ஆச்சரியப்படுத்தும் !! சில அதிர்ச்சியளிக்கும்
| உணவுப்பொருள் | கலப்பட பொருள் |
| பால் | தண்ணீர், ஸ்டார்ச் |
| அரிசி | கல் |
| பருப்பு | கேசரி பருப்பு |
| மஞ்சள் பொடி | lead chromate |
| தானியா பொடி | சானி பொடி, ஸ்டார்ச் |
| நல்ல மிளகு | காய்ந்த பப்பாளி விதைகள் |
| வத்தல் பொடி | செங்கல் பொடி, மரப்பொடி |
| தேயிலை | மரப்பொடி, பொடிசெய்யப்பட்ட உளுந்து தோல், ஏற்கனவே உபயோகப்படுத்தப்பட்ட தேயிலை |
| கொட்டை வடிநீர் குழம்பி பொடி | பேரிச்சம்பழ பொடி |
| பெருங்காயம் | மண், பிசின் |
| கடுகு | ஆர்ஜிமோன் விதைகள் |
| சமையல் எண்ணை | மினரல் எண்ணைகள், ஆர்ஜிமோன் எண்ணை |
| வெண்ணை | பிற கொழுப்புகள் |
| பச்சை பட்டானி | பச்சை சாயம் |
| நெய் | வனஸ்பதி |
அதன் பிறகு 25 வருடம் ஆகி விட்டது. இப்ப எவ்வளவு புதிய கலப்பட பொருட்கள் உபயோகிக்கப்படலாம். மேலும் எவ்வளவு உணவு பொருட்களில் கலப்பட பொருட்கள் சேர்க்கப்படலாம் என்று சிந்தித்தால் வரும் பதில் கவலைப்படும் படியாகவே உள்ளது



28 மறுமொழிகள்:
பொடிசெய்யப்பட்ட உளுந்து தோல் - இதை எங்கு விற்பார்கள், வாங்கி கலக்க? வினோதமாக/விபரீதமாகவும் இருக்கு.
கொட்டை வடிநீர் - coffee ?
வடுவூர் குமார் சார்
//பொடிசெய்யப்பட்ட உளுந்து தோல் - இதை எங்கு விற்பார்கள், வாங்கி கலக்க? வினோதமாக/விபரீதமாகவும் இருக்கு.//
கடைகளில் தோல் நீக்கப்பட்ட உளுந்து கிடைக்கிறதல்லவா... அப்படி நீக்கப்படும் (உளுந்தின்) தோலை வெளியில் கொட்டாமல் தேயிலையில் சேர்ப்பார்கள் போலும்
//கொட்டை வடிநீர் - coffee ?//
ஆமாம்.
கொட்டை வடிநீர் குழம்பி - காபி
கொட்டை வடிநீர் குழம்பி பொடி - காபிப்பொடி
உபயோகமான தகவல், மக்கள் தெளிவுற வேண்டும்
speed
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
அமரிக்காவில் FDA கடுமையாக கண்காணிப்பது போல இந்தியாவிலும் கலப்படத்துக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்ல ஆசை தான், ஆனால் இது நடக்குமா? உணவகங்களுக்கு கூட அவர்களின் சுத்தத்தை திடீர் சோதனை நடத்தில் "A", "B" என்று க்ரேடு தருகிறார்கள். அதற்கு மேல் சுத்தமில்லாமல் இருந்தால் அந்த ரெஸ்டாரெண்டை மூட வைத்துவிடுவார்கள். சட்டம் கடுமையாக்கப்படவேண்டும் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், இப்படி கலப்படம் செய்பவர்களுக்கு மனசாட்சியே இருக்காதா? அதே கலப்பட பொருட்களை அவர்களின் குடும்பத்தினரும் தானே சாப்பிடுவார்கள்? பொறுப்பில்லாத மனிதர்கள்!
//இப்படி கலப்படம் செய்பவர்களுக்கு மனசாட்சியே இருக்காதா? அதே கலப்பட பொருட்களை அவர்களின் குடும்பத்தினரும் தானே சாப்பிடுவார்கள்? பொறுப்பில்லாத மனிதர்கள்!//
இது தான் என் மனதில் தோன்றியது. பாலில் நீர் கலப்பதாவது பரவாயில்லை. ஆனால் ஆர்ஜிமோன் விதைகளை வைத்து கலப்படம் செய்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை :(
உங்களை தொடர் விளையாட்டுக்கு அழைத்திருக்கிறேன் , நன்றி
ஏற்றுமதி செய்யும் பொருட்களிலும் இந்தக் கலப்பு உண்டா?
மனுசருக்கு நல்லாத்தான் பணப்பேய் பிடிச்சு ஆட்டுது(-:
//ஏற்றுமதி செய்யும் பொருட்களிலும் இந்தக் கலப்பு உண்டா?//
அப்படி செய்தால் மாட்டிக்கொள்வார்கள் அல்லவா
//மனுசருக்கு நல்லாத்தான் பணப்பேய் பிடிச்சு ஆட்டுது(-://
உண்மைதான்
சென்ற ஆண்டு வரை இங்கே பால், ஒரு லிட்டர் 15 ரூபாயாக இருந்தது. திடீரென்று 24 ரூபாயாக ஆக்கி விட்டார்கள். காரணமாகச் சொல்லப்பட்ட விஷயம்: "கலப்படம் இல்லாமல் இருக்கிறதா என்று செக்கிங் செய்கிறார்கள்".
அடப்பாவிகளா இவ்வளவு நாள் கலப்படப் பாலையா கொடுத்துக் கொண்டிருந்தாய் என்று கேட்டேன். "இல்லை சார், முன்னயும் ஒழுங்கா நல்ல பால் தான் கொடுத்திருக்கேன். இப்போ அவங்களுக்கு நெறையா லஞ்சம் கொடுக்க வேண்டி இருக்கு"
பாலின் சுவையிலோ தரத்திலோ எந்த மாறுதலும் இல்லை என்பது தான் நிஜம். இப்போதும் கலப்படப் பாலே கொடுத்து லாபத்தைப் பங்கு போட்டுக் கொண்டிருக்கிறார்களா, அல்லது நல்ல பாலைத் தான் முதலிலும் கொடுத்தார்களா என்பது யாருக்கும் தெரியாது!
ஆனால் ஒருவிஷயம் டாக்டர் சார். கண்ட கண்ட கலப்பட விஷயங்களைச் சாப்பிட்டுத் தான் இந்தியர்கள் உடம்பில் இம்யூனிட்டி அதிகமாகி இருக்கிறது என்று நம்புகிறேன். சார்ஸ் கூடப் பாருங்க, இங்கே ஒண்ணும் செய்ய முடியவில்லை.
//பெருங்காயம் மண், பிசின் //
அதானா வாசனை மண்ணுமாதிரி இருக்கு..
மிக உபயோகமான பதிவு.. கலக்குங்க..
நர்சிம்
//ஆனால் ஒருவிஷயம் டாக்டர் சார். கண்ட கண்ட கலப்பட விஷயங்களைச் சாப்பிட்டுத் தான் இந்தியர்கள் உடம்பில் இம்யூனிட்டி அதிகமாகி இருக்கிறது என்று நம்புகிறேன். சார்ஸ் கூடப் பாருங்க, இங்கே ஒண்ணும் செய்ய முடியவில்லை.
//
சார்ஸ் ஒன்றும் செய்யவில்லை. ஆனால் பல கிருமிகளினால் இந்தியர்களுக்கு அதிகம் பாதிப்பு என்கிறார்களே :)
அது சரி இப்படி கலந்த்திருக்கும் பொருட்களை நம்மாளும் எந்த விஞ்ஞான உபகரணங்கல் இன்றி கண்டுபிடிக்க முடியுமா? ..கண்டுபிடித்து நீக்க முடியுமா?..
//அது சரி இப்படி கலந்த்திருக்கும் பொருட்களை நம்மாளும் எந்த விஞ்ஞான உபகரணங்கல் இன்றி கண்டுபிடிக்க முடியுமா? ..கண்டுபிடித்து நீக்க முடியுமா?.//
பல கலப்படங்களை கண்டு பிடிக்க முடியாது என்பது கசப்பான உண்மை
வாங்க நர்சிம், வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
டாக்டர் சார், உங்களை சினிமா கேள்வி பதில் தொடருக்கு அழைத்துள்ளேன்.
விவரம் என் பதிவில்.
தங்களின் பார்வைக்கு:-
Anonymous said...
//நரசிம்மா said...
1.ஏன் டாக்டர் புருனோ போன்றவ படித்த அதோடு வசதியானவர்கள் கூட சாதி வெறி பிடித்து இட ஒதுக்கீடு கேட்க்கிறார்கள்? டாக்டர்கள் தான் அதிகமாக சம்பாதிப்பவர்கள் இடஒதுக்கீட்டின் மூலம் ஏன் தன் சாதி மக்கள் மட்டும் பயன் பெற நினைக்கிறார்கள்?//
//dondu(#11168674346665545885) said...
யாரைக் கூறினாலும் மருத்துவர் ப்ரூனோவை சாதி வெறியர் எனக் கூறுவதை ஆட்சேபிக்கிறேன். அது அப்பட்டமான பொய்.
// dondu(#11168674346665545885) said...
//aatharaththudan vilakkavum.appothutaan unmai theriyavarum//
ப்ரூனோவை சாதிவெறியர் எனக் கூறியவர்தான் ஆதாரம் அதற்கு தரவேண்டும்.
அன்ப்டன்,
டோண்டு ராகவன்
//
நரசிம்மா இதற்கு என்ன உங்கள் பதில்.
விவாதம் ஆரோக்கியமாக இருப்பது நல்லது.
உங்கள் வக்கீல் வாதத்தை,மருத்துவரை எதிர்த்து தொடங்கலாமே?
புள்ளி விபரங்கள் இருந்தாலும்,சான்றுகள் இருந்தாலும்
உபயோகிக்கவும்.
நீதிபதியாக டோண்டு அவர்கள்.
ஒரு சில முற்பட்ட இனத்தினர் நடத்தும் பத்திரிக்கைகள் இட ஒதுக்கீட்டீன் பலன் தாழ்த்தபட்ட,ஒடுக்கப் பட்ட,பிற்படுத்தபட்ட பிரிவினரிடம் உள்ள நலிந்த வகுப்பினருக்கு கிடைப்பது இல்லை எனவும்
ஏற்கனவே ஒரளவு சமுதாய ரீதியாகவும்,பொருளாதார ரீதியாகவும் முன்னேறிய சில வகுப்பினர் அதை தங்களுக்கு சாதகமாக்கி கொள்கிறார்கள் என்ற செய்தியை உண்மையில்லை என்று சொல்ல முடியுமா?
கலைஞர்,ராமதாஸ் ஏன் பொது உடைமை கட்சிகள் கூட இதைப் பற்றி அதிகமாக கண்டு கொள்வதில்லை.எனவே தான் பொருளாதார அளவுகோல் அந்த ஒடுக்கப்பட்ட மக்களின் நலிந்த பிரிவினருக்கு சாதகமாகும் என்று நன்றாகத் தெரிந்தும் "கீரீமி லேயர் கூடாது" என்கின்றனர்.
இதையும் படியுங்கள்.
1.இட ஒதுக்கீடு தொடரவேண்டும்
2.பொருளாதர அளவுகோலுடன் இதுவரை பயன் பெறாத குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப் படவேண்டும்
3.அரசு வறுமையில் வாடும் ஒடுக்கப் பட்ட ஏழைக் குடுப்பங்களின் குழந்தைகளுக்கு தனிக் கவனத்துடன்
உணவுடன் சிறப்பு கல்வி அளிக்க வேண்டும்.
4.இடஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்களை வசதி படைத்த பிற்பட்ட வகுப்பினரை கொண்டு நிரப்பலாம்.
5.எந்தக் காலக் கட்டத்திலும் இடஒதுக்கீட்டில் உள்ள இடங்கள் பொது ஒதுக்கீட்டுக்கு மாற்றக்கூடாது.
6.இது சாத்தியப் பட்டால் உண்மையான சமத்துவ நீதி கிடைக்கும்
இனி உங்கள் விவாதம் தொடங்கட்டுமே!
ஐயா அனானி,
பொருளாதார அளவுகோலுடன் இது வரை பங்கு பெறாத குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிப்பது நல்லதே
அதே நேரம்
அப்ப்டி பட்ட குடும்பங்களிலிருந்து போதிய மாணவர்கள் இல்லாமல் இடங்கள் காலியாக இருந்தால் அந்த காலி இடங்களை மட்டும் பொருளாதாரத்தில் முன்னேறிய பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அளித்து விட்டு அதன் பிறகும் காலி இடங்கள் இருந்தால் பொருளாதார அளவுகோலுடன் இது வரை பங்கு பெறாத முற்பட்ட குடும்பங்களுக்கு அளித்து பிறகே அதை பொது வகுப்பினருக்கு அளிக்க வேண்டும் என்பது தான் என் நிலை
--
மேலும் இரு வேண்டுகோள்கள்
1. இடப்பங்கீடு தொடர்பாக என் பதிவில் பல இடுகைகள் இருக்கின்றன. அதை ஒரு முறை படியுங்கள்
2. (நீங்கள் வெட்டி ஒட்டிய) இந்த விவாதம் எங்கு நடக்கிறது என்று தெளிவாக கூறுங்கள்
1.இடஒதுக்கீட்டு சலுகைகள் ஒடுக்கப் பட்டோரில் உள்ள நலிந்த பிரிவினருக்கும் கிடைக்கவேண்டும் .
2.முன்னேறிய வகுப்பினர் இதில் குளிர் காய விடக் கூடாது
3.புருனோ போன்றவர்கள் இந்த புனிதப் பணியை தொடங்க வேண்டும்
4.அரசியல் கட்சிகளின் துணையையும் பெற வேண்டும்
5.படிப்பறிவில்லாமல் இருக்கும் எழை எளிய ஒடுக்கபட்ட மக்களுக்கு, அரசு தங்களுக்கு அளிக்கும் சலுகை கள் பற்றிய விழிப்புணர்வை அறியச் செய்தல் இப்போதைய தேவை.
6.தமிழகத்தில் இது ஒரளவுக்கு பரவாயில்லை தந்தை பெரியார்,அண்ணா வுக்கு நமது நன்றிகள் .ஆனால் வட மாநிலங்களில் ?
7.புதியதோர் உலகம் செய்ய அனைவரையும் அழைப்போம்
8.கெடுமதியாளர்களை வெல்வோம்
9.தர்மம் காப்போம்
10.இறுதி வெற்றி நமதே.
இந்த விவாதம் எங்கு நடக்கிறது என்று தெளிவாக கூறுங்கள்
please visit
http://dondu.blogspot.com/
//please visit
http://dondu.blogspot.com/
//
மிக்க நன்றி
அது சரி
அவரது பதிவில் ஒரு இடுகை மட்டும்தான் உள்ளதா
மைரோசாப்ட் உதவி பக்கம் போல் (சரியான, ஆனால் முற்றிலும் உபயோகமில்லாத) ஒரு தகவல்
எழில் அரசு சார்,
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
http://dondu.blogspot.com/
//10/17/2008
சினிமா - மலரும் நினைவுகள்
லக்கிலுக்கின் அழைப்பை ஏற்று இப்பதிவை போடுகிறேன்.//
"சினிமா - மலரும் நினைவுகள்"
52 Comments - Show Original Post
Collapse comments
//நரசிம்மா said...
1.ஏன் டாக்டர் புருனோ போன்றவ படித்த அதோடு வசதியானவர்கள் கூட சாதி வெறி பிடித்து இட ஒதுக்கீடு கேட்க்கிறார்கள்? டாக்டர்கள் தான் அதிகமாக சம்பாதிப்பவர்கள் இடஒதுக்கீட்டின் மூலம் ஏன் தன் சாதி மக்கள் மட்டும் பயன் பெற நினைக்கிறார்கள்?
2.லக்கிலுக் என்ற பதிவர் நீங்கள் உயர்சாதி பெருமை பேசுகிறீர்கள் என்று சொல்லி இருக்கிறார் உங்கள் பதில் என்ன?//
//Anonymous said...
//ப்ரூனோவை சாதிவெறியர் எனக் கூறியவர்தான் ஆதாரம் அதற்கு தரவேண்டும்.//
இட ஒதுக்கீடு என்றுமே பொருளாதார அடிபடையில் இருக்க கூடாது என்று சொல்லும் அவர் கட்டுரைகள் சாதி பற்றுள்ளவர் என்று காட்டுகிறதே
October 19, 2008 9:24 AM
( விவாதம் தொடர்கிறது சார்")
"டோண்டு சாரின் பதிவு : 17.10.2008 "
sir pl visit my blog
www.thogamalaiphc.blogspot.com
Detailed interview of Dr.jayakumar JD dph&pm about PFA on "thinamanikathi" 05.10.2008 www.thogamalaiphc.blogspot.com
//sir pl visit my blog
www.thogamalaiphc.blogspot.com//
நன்றி சார்
விபரங்களை பார்த்தேன்
தங்களைப்போல் அரசு ஊழியர்கள பலரும் வலைப்பதிவு எழுத வேண்டும்.
தாங்கள் தொடர்ந்து எழுதுங்கள்
Post a Comment