கேள்வி 1: வெண்குழல்வத்திக்கு தடையா
பதில் 1 : இல்லை. பொது இடங்களில் வெண்குழல் வத்தி பிடித்து அடுத்தவர் முகத்தில் புகை ஊதுவதற்கு மட்டும் தான் தடை
கேள்வி 2: அப்படியானால் புகை பிடிப்பதற்கு தடையில்லையா
பதில் 2: இல்லை. உங்கள் வீட்டினும் , உங்கள் விடுதி அறைக்குள் நீங்கள் புகை பிடிக்க எந்த தடையும் இல்லை
கேள்வி 3: மத்திய அரசு ஒரு பொது மக்களுக்கு எதிரான சட்டம் இயற்றியுள்ளது என்று சொல்கிறார்களே
பதில் 3: கண்டிப்பாக இல்லை. இது பொது மக்களுக்கு எதிரானது அல்ல. புகை பிடிப்பவர்களுக்கு, அதுவும் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு எதிரான சட்டம் தான் இது
கேள்வி 4: ஏன் வெண்குழல்வத்தி விற்பனை தடைசெய்யப்படவில்லை
பதில் 4: ஏனென்றால் புகைப்பிடிக்க தடை ஒன்றும் இல்லை. பொது இடங்களில் புகைபிடிக்கத்தான் தடை. முற்றிலும் தடை செய்யப்பட்ட ஒரு பொருளின் விற்பனையை வேண்டுமானல் தடை செய்யலாமே தவிர அறைக்குள் பயன் படுத்த அனுமதிக்கப்படும் ஒருபொருளை தடை செய்வது எந்த விதத்திலும் நியாயம் அல்ல.
கடையில் விற்கப்படும் அனைத்து பொருட்களையும் நான் பொது இடத்தில் பயன்படுத்த அனுமதி தர வேண்டும் என்பது சரியான வாதமாக எனக்கு தோன்றவில்லை. உதாரணமாக ஆணுறையை எடுத்துக்கொள்ளுங்கள். அதை அறைக்குள் உபயோகிக்க வேண்டும் !!!. “கடையில் விற்பதால் சாலையில், பூங்காவில் புகைபிடிக்க அனுமதிக்க வேண்டும்” என்பது எப்படிப்பட்ட வாதம் என்பதை கடையில் விற்கிறார்கள், அதனால் ஆணுறையை நான் சாலையில் பயன்படுத்துவேன் என்பது எவ்வளவு எப்படிப்பட்ட வாதம் என்று சிந்திப்பது மூலம் புரிந்து கொள்ளலாம்
கேள்வி 5: ஒருவர் வெண்குழல் வத்தி உபயோகிப்பதால் அடுத்தவருக்கு என்ன நஷ்டம்
பதில் 5: ஒருவர் வெண்குழல் வத்தி உபயோகிப்பதால் அவரும் பாதிக்கப்படுகிறார். அந்த புகையை சுவாசிக்கும் அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள்.
உதாரணமாக போதை ஊசி போட்டுக்கொள்வது என்பது 20ஆவது மாடியில் இருந்து தனியாக குதிப்பது என்றால் தனியாக அறைக்கும் புகைபிடிப்பதும் 20ஆவது மாடியில் இருந்து தனியாக குதிப்பது. ஆனால் புகைப்பழக்கம் இல்லாத அடுத்தவர் முன்னிலையில் புகைபிடிப்பது இருபதாவது மாடியில் நின்று கொண்டு, உங்கள் காலுடன் அங்கு நிற்கும் அனைவரில் காலையும் சேர்த்து கட்டிக்கொண்டு நீங்கள் குதிப்பது.
கேள்வி 6: சாலையில் செல்லும் வாகனங்களின் புகையை விட வெண்குழல்வத்தியில் புகை கேடானதா
பதில் 6: ஆம். உதாரணமாக சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களையும் ஒரே போல் பார்க்க கூடாது. பல வாகனங்கள் மாசு கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டு தான் இருக்கின்றன. சில வாகனங்கள் தான் அதிக புகை கக்குகின்றன. ஆனால் அனைத்து வெண்குழல் வத்திகளும் ஒன்று தான்.
கேள்வி 7: விமானங்களில் இருந்து வரும் புகையை விட இது கேடானதா
பதில் 7: ஆம்
கேள்வி 8: எப்படி
பதில் 8: கல்நெய் (பெட்ரோல்) போன்ற வேதிப்பொருட்களை எரிக்கும் போது வருவது பெரும்பாலும் கரியமில வாயு தான். இதனால் புவி வெப்பமடைவது அதிகரிக்கிறது. ஆனால் அதில் இருக்கும் நச்சு வேதிப்பொருட்கள் குறைவு. ஆனால் புகைபிடிப்பதால் ஆயிரக்கணக்கான நச்சு வேதிப்பொருட்கள் புகைப்பவரின் உடலினுள்ளும், அதே நேரம் அருகில் இருக்கும் நபர்களின் உடலினுள்ளும் செல்கின்றன
கேள்வி 9: இது குறித்த விஞ்ஞானப்பூர்வ ஆதாரம் இருக்கிறதா
பதில் 9: இருக்கிறது. பல விஞ்ஞானப்பூர்வ ஆய்வுகளில் வெண்குழல் வத்தியின் ஆபத்து குறித்து தெளிவாக இருக்கிறது. ஆர்வமிருப்பவர்கள் Smoking and Health, the initial report of the Advisory Committee to the Surgeon General of the Public Health Services in 1964, Report of the Royal College of Physicians, London : Smoking or Health 1977 ஆகிய ஆய்வு அறிக்கைகளை படிக்கலாம்
கேள்வி 10: என்னால் புகைபிடிப்பதை நிறுத்த முடியவில்லை. நான் என்ன செய்ய
பதில் 10: வீட்டினுள் புகைபிடிக்க வேண்டியது தான்
கேள்வி 11: நான் காலை யில் 6 மணிக்கே வீட்டை விட்டு கிளம்பி விடுகிறேன். மாலை 8 அல்லது 9 மணிக்கு தான் வீட்டிற்கு அல்லது அறைக்கு திரும்புகிறேன். நான் 12 மணிநேரம் புகை பிடிக்க வில்லை என்றால் என்னால் வேலை செய்ய முடியவில்லை
பதில் 11: வெண்குழல்வத்தியில் இருக்கும் நிகோடின் என்ற பொருள் தான் உங்களை பழக்கவடிமை (Addict) ஆக்குவது. ஆனால் அதிலிருக்கும் பிற பொருட்கள் தான் புற்றுநோயை உருவாக்குகின்றன. எனவே நிகோடினை மட்டும் உட்கொண்டால் நீங்கள் பழக்கவடிமை ஆக இருப்பதை தொடர்ந்தாலும், புற்றுநோய் அபாயங்கள் பெரிதும் குறைகின்றன. அடுத்த முக்கிய விஷயம் – நீங்கள் உட்கொள்ளும் நிகோடினால் அடுத்தவருக்கு பாதிப்பு கிடையாது.
கேள்வி 12: இந்த நிகோடினை மட்டும் எப்படி தனியாக உட்கொள்வது
பதில் 12: கடைகளில் நிகோடின் தோல்திட்டு (Nicotine Patch) கிடைக்கிறது . அதை வாங்கி தோலில் ஒட்டிக்கொண்டால் போதும். இரத்திற்குள் நிகோடின் சென்று கொண்டிருக்கும். அதனால் மூளைக்கு நிக்கோடின் தொடர்ந்து செல்வதால் புகை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் பெருமளவில் கட்டுப்படும்
கேள்வி 13: பொது இடங்களில் இந்த தோல்திட்டை உபயோகிக்க தடையில்லையா
பதில் 13: இல்லை
கேள்வி 14: இது ஒரு தலை பட்சமானதில்லையா
பதில் 14: புகைபிடிப்பதற்கும், தோல்திட்டை பயன்படுத்துவதற்கும் முக்கிய வேறுபாடுகள் இருக்கின்றன
முதல் வேறுபாடு : தோல் திட்டை நீங்கள் மட்டும் பயன் படுத்துகிறீர்கள். (20ஆவது மாடியில் இருந்து தனியாக குதிக்கிறீர்கள்). ஆனால் புகைபிடிப்பது அனைவரையும் பாதிக்கும் செயல். (அனைவரை சேர்த்துக்கொண்டு குதிப்பது)
அடுத்த வேறுபாடு : தோல் திட்டினால் நிகோடினை மட்டும் உட்கொள்கிறீர்கள். (அதாவது முதல் மாடியில் இருந்து குதிக்கிறீர்கள்) புகைபிடிப்பதால் அனைத்து நச்சு பொருட்களையும் உட்கொள்கிறீர்கள்
சுருங்க சொல்ல வேண்டுமானால்
- பொது இடங்களில் புகைபிடிப்பது :
- 20ஆவது மாடியில் நின்று கொண்டு, நிற்பவர்களின் கால்களை உங்களுடன் சேர்த்து கட்டிக்கொண்டு கிழே குதிப்பது
- தனியாக அறைக்குள் புகைபிடிப்பது :
- 20ஆவது மாடியில் நின்று கொண்டு, நீங்கள் மட்டும் கிழே குதிப்பது
- நிகோடின் தோல் திட்டு பயன்படுத்துவது :
- முதல் மாடியில் நின்று கொண்டு, நீங்கள் மட்டும் கிழே குதிப்பது
இப்பொழுது புரிகிறதா
கேள்வி 15 : இந்த நிகோடின் தோல் திட்டு எங்கு கிடைக்கிறது. எவ்வளவு பணம் செலவாகும். கடைகளில் நேரடியாக பெற முடியுமா.
பதில் 15 : விசாரித்து எழுதுகிறேன்.
கேள்வி 16 : இந்த நிகோடின் தோல் திட்டு பயன் படுத்த எரிச்சலாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்
பதில் 16 : நிகோடின் உள்ள பிற பொருட்களும் விற்பனைக்கு உள்ளன
- நிகோடின் பசை Nicotine gum: வாயில் மென்று கொண்டிருக்கலாம்
- நிகோடின் சுவாசிக்கும் கருவி Nicotine inhaler: விக்ஸ் இன்ஹேலர் போல் என்று வைத்துக்கொள்ளுங்கள்
- நிகோடின் மூக்கு தெளிப்பான் Nicotine nasal spray: ஆஸ்துமா நோயாளிகள் மருந்து உட்கொள்ள ஒரு கருவி வைத்திருப்பார்கள் அல்லவா. அது போல்
- நிகோடின் மாத்திரைகள் Nicotine tablet: நாக்கின் அடியில் வைக்க வேண்டியது தான்
பதில் 17 : மறுமொழியில் கேளுங்கள். விளக்க முயற்சிக்கிறேன்
109 மறுமொழிகள்:
excellent explanation sir.
பதில் 4: வாதம் அருமை
நல்ல பதிவு.
அனானி சார் / மேடம்
நன்றி
சரவணகுமாரன் சார் / மேடம்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
இங்கே பொது இடம் என்பது எந்தெந்த இடம். வீட்டைவிட்டு வெளியே உள்ள அத்தனை இடங்களும் பொது இடம் தானா?
சென்னை கோட்டுபுரத்தில் உள்ள சாலை ஒன்றில் ஒரு மரத்தடியில், தனியாக ஒருவன் நின்று புகைக்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அருகில் முப்பது அடி வட்டத்திற்கு ஆள் இல்லை. அது எந்தக் கணக்கில் வரும்? அவனும் பிடிபட்டால் அபராதம் கட்ட வேண்டுமா?
ஊழல் ஏற்படக்கூடாது என்ற நோக்கில் கேட்கிறேன்.
கண்ணில் படுகிறவன் அனைவரிடமும் கற" என்பது உZஅலுக்கு வழி வகுக்கும் என்பது அறியப்பட்டுள்ளதா? இல்லையா? ஆகவே அரசு பொது இடம் எது என்பதை விளக்க வேண்டும்!
அருமையான விளக்கங்கள் புருனோ.. எலக்ட்ரானிக் சிகரெட் பற்றியும் சொல்லியிருக்கலாம். அதனால் எந்த கெடுதலுமே இல்லை என்கிறார்களே! உண்மையா?
//இங்கே பொது இடம் என்பது எந்தெந்த இடம். வீட்டைவிட்டு வெளியே உள்ள அத்தனை இடங்களும் பொது இடம் தானா?//
சட்டத்தில் தெளிவாக இல்லையென்றால் அப்படியே வைத்துக்கொள்ளலாம்
சரியான வாதம் புரூனோ அவர்களே, அதிலியும் அந்த 20 வது மாடியிலருந்து நம்மையும் கட்டிக்கொண்டு குதிக்கிறார்களே, அது மிகச் சரி.
இதுக்கு ஒரு திட்டம் கொண்டு வந்த மாதிரி, பேருந்துல, தொடர் வண்டில தண்ணி அடிச்சிட்டு ஏறிட்டு, பக்கத்துல இருக்கறவன் உயிரை வாங்குவாங்களே அதுக்கு ஒரு திட்டம் கொண்டு வந்தா பராவாயில்லை!!
+ பொது இடங்களில் புகைபிடிப்பது :
20ஆவது மாடியில் நின்று கொண்டு, நிற்பவர்களின் கால்களை உங்களுடன் சேர்த்து கட்டிக்கொண்டு கிழே குதிப்பது
+ தனியாக அறைக்குள் புகைபிடிப்பது :
20ஆவது மாடியில் நின்று கொண்டு, நீங்கள் மட்டும் கிழே குதிப்பது
+ நிகோடின் தோல் திட்டு பயன்படுத்துவது :
முதல் மாடியில் நின்று கொண்டு, நீங்கள் மட்டும் கிழே குதிப்பது//
ரொம்ப அழகா சொல்லி இருக்கிங்க டாக்டர்.. :)
//சென்னை கோட்டுபுரத்தில் உள்ள சாலை ஒன்றில் ஒரு மரத்தடியில், தனியாக ஒருவன் நின்று புகைக்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அருகில் முப்பது அடி வட்டத்திற்கு ஆள் இல்லை. அது எந்தக் கணக்கில் வரும்? அவனும் பிடிபட்டால் அபராதம் கட்ட வேண்டுமா?
ஊழல் ஏற்படக்கூடாது என்ற நோக்கில் கேட்கிறேன்.
கண்ணில் படுகிறவன் அனைவரிடமும் கற" என்பது உZஅலுக்கு வழி வகுக்கும் என்பது அறியப்பட்டுள்ளதா? இல்லையா? ஆகவே அரசு பொது இடம் எது என்பதை விளக்க வேண்டும்! //
வீட்டினுள் புகைபிடித்தால் இது போன்ற தேவையில்லா குழப்பங்கள் வர அவசியமே இல்லையே
டாக்டர் அவர்களே,
இது ஒரு சரியான செயலாக இருக்கலாம். ஆனால் இதை விட 1008 முக்கியமான விஷயங்கள் இருக்கும் போது இதற்கு முக்கியத்துவம் தர வேண்டுமா என்பதுதான் கேள்வி. இருக்கும் போலீஸை வைத்துக்கொண்டு சட்டம் ஒழுங்கையே சரியாக கவனிக்க முடியவில்லை, இந்த நிலையில் அவர்களுக்கு மேலும் வேலைப்பளு அவசியமா? அல்லது சுகாதாரத்தைப் பேணும் மற்ற எல்லா விஷயங்களையும் (கொசு ஒழிப்பு போன்றவை) செய்து முடித்து விட்டோமா?
//அதனால் எந்த கெடுதலுமே இல்லை என்கிறார்களே! உண்மையா?//
கொஞ்சம் ஆராந்து பார்த்து விட்டு இந்த முடிவிற்கு வரலாமே
//இதுக்கு ஒரு திட்டம் கொண்டு வந்த மாதிரி, பேருந்துல, தொடர் வண்டில தண்ணி அடிச்சிட்டு ஏறிட்டு, பக்கத்துல இருக்கறவன் உயிரை வாங்குவாங்களே அதுக்கு ஒரு திட்டம் கொண்டு வந்தா பராவாயில்லை!!//
இந்த திட்டம் வெற்றிபெற்றபின் அமல் படுத்தலாம்
அதற்கு முன்னர் தண்ணியடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை மேலும் கடுமையுடன் அணுகவேண்டும்
//SanjaiGandhi
ரொம்ப அழகா சொல்லி இருக்கிங்க டாக்டர்.. :)//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
//ஆனால் இதை விட 1008 முக்கியமான விஷயங்கள் இருக்கும் போது இதற்கு முக்கியத்துவம் தர வேண்டுமா என்பதுதான் கேள்வி. //
புற்றுநோய்தடுப்பு, அதுவும் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட புற்றுநோய்களுக்கு காரணமான ஒரு நச்சு பொருள் அடுத்தவர் பயன்படுத்துவதால் நீங்கள் பாதிக்கப்படுவதை தடுப்பது மிக முக்கியம்
--
ஒருவர் மட்டும் 20 ஆவது மாடியில் இருந்து குதித்தால் அதனால் பாதிப்பு அவருக்கு. அல்லது கூடவே அவரின் குடும்பத்திற்கு மட்டும் தான்
--
ஆனால் ஒருவர் புகை பிடிக்க வேண்டும் என்பதற்காக அடுத்தவர் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டியது அரசின் முக்கிய கடமை
--
தனியாக வீட்டிற்குள் புகை பிடிக்க எந்த தடையும் இல்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
//இருக்கும் போலீஸை வைத்துக்கொண்டு சட்டம் ஒழுங்கையே சரியாக கவனிக்க முடியவில்லை, இந்த நிலையில் அவர்களுக்கு மேலும் வேலைப்பளு அவசியமா? அல்லது சுகாதாரத்தைப் பேணும் மற்ற எல்லா விஷயங்களையும் (கொசு ஒழிப்பு போன்றவை) செய்து முடித்து விட்டோமா? //
”நமது செயலால் அடுத்தவர் பாதிக்கப்படுகிறார். எனவே நாம் பொது இடங்களில் புகை பிடிக்கக்கூடாது. வீட்டினுள் பிடிக்க வேண்டும்” என்ற மனமாற்றம் தான் நிரந்திர தீர்வு
தான் புகைபிடிப்பதால் தான் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. பிறரும் பாதிக்கப்படுகிறார்கள் என்று அடுத்தவர் முகத்தில் ஊதுபவர்கள் புரிந்து கொண்டால் போதும்
அதுவே மிகப்பெரிய வெற்றி
//அல்லது சுகாதாரத்தைப் பேணும் மற்ற எல்லா விஷயங்களையும் (கொசு ஒழிப்பு போன்றவை) செய்து முடித்து விட்டோமா? //
இல்லைதான். அதற்காக இதை செய்யக்கூடாது எனப்து எந்த விதத்தில் நியாயம்
கொசுவினால் பரப்பப்படும் மலேரியாவை ஒழிக்க முடியவில்லை
மனிதனால் பரப்பப்படும் நூற்றுக்கும் மேலான புற்று நோய்களையாவது குறைக்க நினைப்பது முற்றிலும் சரிதானே
தான் மலேரியாவை பரப்புகிறோம் எனப்து எடுத்துக்கூறினாலும் கொசுவிற்கு புரியாது
ஆனால்
தான் நூற்றுக்கும் மேற்பட்ட புற்று நோய்களை பரப்புகிறோம் என்பதை எடுத்து சொன்னால் மனிதர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன்
//தான் மலேரியாவை பரப்புகிறோம் எனப்து எடுத்துக்கூறினாலும் கொசுவிற்கு புரியாது// உண்மைதான் டாக்டர். மக்களின் உடல் நிலை மேல் இவ்வளவு அக்கறை வைத்திருக்கும் அமைச்சர், மருத்துவ முகாமில் சிகிச்சை எடுத்துக்கொண்டு கண்ணை இழந்தவர்கள், தடுப்பு ஊசி போட்டு உயிரை இழந்தவர்கள் சார்பாக அதை செய்தவர்கள் மேலாவது நடவடிக்கை எடுக்கலாம் இல்லையா?
//உண்மைதான் டாக்டர். மக்களின் உடல் நிலை மேல் இவ்வளவு அக்கறை வைத்திருக்கும் அமைச்சர், மருத்துவ முகாமில் சிகிச்சை எடுத்துக்கொண்டு கண்ணை இழந்தவர்கள், தடுப்பு ஊசி போட்டு உயிரை இழந்தவர்கள் சார்பாக அதை செய்தவர்கள் மேலாவது நடவடிக்கை எடுக்கலாம் இல்லையா? //
அது குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்ற தவறான் ஊகத்தின் அடிப்படையில் உங்கள் மறுமொழி இருக்கிறது
//மருத்துவ முகாமில் சிகிச்சை எடுத்துக்கொண்டு கண்ணை இழந்தவர்கள், //
முற்றிலும் தவறான வார்த்தைகள்
--
கண்பார்வை குறைவுள்ள ஆயிரக்கணக்கான நபர்களுக்கு சிகிச்சை செய்ததில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு பார்வை திரும்ப கிடைத்தது.
சுமார் 50 நபர்களுக்கு பார்வை திரும்ப கிடைக்க வில்லை
இது தான் உண்மை
முழுவதும் பார்வை உள்ள ஒருவர் அறுவை சிகிச்சை செய்த பின் பார்வையிழப்பது போன்ற அர்த்தத்துடன் எழுதப்பட்ட உங்கள் மறுமொழி முழுவதும் தவறானது மட்டும்மல்லாது முட்டாள்தனமானது கூட என்று தெரிவிக்கிறேன்
--
கண்பார்வை இல்லாத ஒருவர் அறுவை சிகிச்சை செய்த பின் பார்வை பெற வில்லை என்றால் அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன - அது ஒருவரின் தவறினால் மட்டுமே என்ற உங்கள் வாதம் முற்றிலும் தவறானது
--
மக்களின் உடல் நிலை மேல் இவ்வளவு அக்கறை வைத்திருக்கும் அமைச்சர், மருத்துவ முகாமில் சிகிச்சை எடுத்துக்கொண்டு பார்வையை திரும்ப பெறாதவர்கள், தடுப்பு ஊசி போட்டு உயிரை இழந்தவர்கள் சார்பாக இது போன்ற சம்பவங்கள் இனி மேல் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது தான் உண்மை
அமைச்சரின் மேல் உள்ள தனிப்பட்ட வெறுப்பு காரணமாக அவர் அறிவிக்கும் திட்டத்தின் சாதக பாதகங்களை அலசாமல் எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் எதிர்ப்பது புத்திசாலி செய்யும் செயலல்ல
டாக்டர் அவர்களே,
//முழுவதும் பார்வை உள்ள ஒருவர் அறுவை சிகிச்சை செய்த பின் பார்வையிழப்பது போன்ற அர்த்தத்துடன் எழுதப்பட்ட// என்ன சொல்கிறீர்கள்? முழுவதும் பார்வை உள்ள ஒருவருக்கு ஏன் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்?
//உங்கள் மறுமொழி முழுவதும் தவறானது மட்டும்மல்லாது முட்டாள்தனமானது கூட என்று தெரிவிக்கிறேன் // நல்லது டாக்டர் அவர்களே. முட்டாள்த்தனமான மறு மொழியை நிறுத்திக்கொள்கிறேன்.
//அமைச்சரின் மேல் உள்ள தனிப்பட்ட வெறுப்பு காரணமாக // எனக்கு அமைச்சர் மேல் எந்த வெறுப்பும் இல்லை. நான் கடந்த 10 வருடங்களாக அமெரிக்காவில் வாழ்பவன். இதை ஏன் கூறுகிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை.
நன்றி.
கண்பார்வை இழந்த அனைவருக்கும் மறுமடியும் பார்வை அளிப்பதற்கு விஞ்ஞானத்தில் வழி இல்லை. (ஆன்மிகத்தில் எப்படி என்று தெரியவில்லை)
எனவே சிகிச்சை பெற்று பார்வை திரும்பாத சிலரை வைத்து மருத்துவத்துறையை மிரட்டும் சமூக விரோதிகளே இது போன்ற தவறான் கருத்துக்களை பரப்ப காரணமாக இருக்கிறார்கள்
--
தடுப்பூசி மரணம் என்பது ஒவ்வாமையினால் ஏற்பட்டது. தடுப்பூசி பெறும் 10,00,000 குழந்தைகளில் 9,99,997 குழந்தைகள் பாதிக்கப்படவில்லை என்பதையும், அதற்கு காரணம் சுகாதார துறை என்பதையும் நினைவில் வைக்க வேண்டும்
--
3 குழந்தைகளின் மரணம் குறித்து விரிவாக ஆராயப்பட்டு, இனிமேல் இது போன்ற துன்பியல் சம்பவங்கள் நடை பெறாமல் இருக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன
--
பிணியாளர் மரணமடைந்தால் அது மருத்துவமனையின் தவறு மட்டும் தான் என்ற நோக்கத்தில் (மருத்துவமனையை மிரட்டி பணம் பறிக்கும்) சமூக விரோதிகளினால் பரப்பப்பட்ட நச்சு செய்திகளினால் படித்த விபரம் அறிந்த வலைப்பதிவரான அமரபாரதி போன்றவர்கள் கூட குழப்பமடைந்துள்ளது வருத்தப்பட வேண்டிய விஷயம் தான்
மிகத்தெளிவான விளக்கங்கள், நன்றி டாக்டர்.! (வீட்டில் பாத்திரம் தேய்ப்பது நீங்கள்தானாமே, அப்பிடியா?)
//என்ன சொல்கிறீர்கள்? முழுவதும் பார்வை உள்ள ஒருவருக்கு ஏன் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்?//
செய்ய வேண்டாம். பார்வை குறைவுள்ளவர்கள் பலர் அறுவை சிகிச்சை செய்ததில் அவர்களில் 1 சதத்தினருக்கு பார்வை திரும்ப கிடைக்கவில்லை என்பது தான் உண்மை ஆனால் உங்களின் வார்த்தைகளின் படி (மருத்துவ முகாமில் சிகிச்சை எடுத்துக்கொண்டு கண்ணை இழந்தவர்கள்) ஏதோ முழுப்பார்வையுள்ளவர்கள் அறுவை சிகிச்சை செய்து குருடானர்கள் என்று பொருள் வருகிறது
அ. இழப்பது என்பது வேறு
ஆ. திரும்ப பெற முடியவில்லை என்பது வேறு
இ. 1 சதவிததினரால் திரும்ப பெற முடியவில்லை. 99 சதவிதத்தினர் திரும்ப பெற்றனர் என்பது வேறு
உண்மையில் நடந்தது இ. ஆனால் நீங்கள் கூறியது அ
//எனக்கு அமைச்சர் மேல் எந்த வெறுப்பும் இல்லை. நான் கடந்த 10 வருடங்களாக அமெரிக்காவில் வாழ்பவன். இதை ஏன் கூறுகிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை.//
பிணியாளர் மரணமடைந்தால் அது மருத்துவமனையின் தவறு மட்டும் தான் என்ற நோக்கத்தில் (மருத்துவமனையை மிரட்டி பணம் பறிக்கும்) சமூக விரோதிகளினால் பரப்பப்பட்ட நச்சு செய்திகளினால் படித்த விபரம் அறிந்த பத்து வருடமாக அமெரிக்காவில் வலைப்பதிவரான அமரபாரதி போன்றவர்கள் கூட குழப்பமடைந்துள்ளது வருத்தப்பட வேண்டிய விஷயம் தான்
//மிகத்தெளிவான விளக்கங்கள், நன்றி டாக்டர்.! (வீட்டில் பாத்திரம் தேய்ப்பது நீங்கள்தானாமே, அப்பிடியா?) //
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. தற்சமயம் விடுதியில் இருக்கிறேன். எனவே உங்களுக்கு யாரோ தவறான தகவல் அளித்துள்ளார்கள் என்று மட்டும் தெரிவித்துக்கொள்கிறேன்
// தல.. வழமை போல நல்ல பதிவு!! //
நன்றி :)
அருமையான பதிவு மருத்துவரே.. அன்புமணி செய்த உருப்படியான ஒரு வேலை இதுதான் என்று நான் நினைக்கிறேன்.
அவர் அமைச்சர் பொறுப்பேற்ற வழி தவறு என்று வாதாடுபவர்கள்கூட இதனைப் பாராட்டத்தான் செய்வார்கள்..
டாக்டர்,
நீங்கள் பிரச்சனையை ஒற்றைத் தன்மையுடையதாகக் குறுக்குகிறீர்கள் என நினைக்கிறேன். சரியான இணைய வசதியில்லாததால் நாளை விரிவாக பின்னூட்டமிடுகிறேன். நானும் ஒரு பதிவிடலாமென நினைக்கிறேன் :)
//நீங்கள் பிரச்சனையை ஒற்றைத் தன்மையுடையதாகக் குறுக்குகிறீர்கள் என நினைக்கிறேன்.//
பிரச்சனையே ஒற்றைத்தன்மைதான் - பொது இடங்களில் மட்டும் தான் தடை. வீட்டில் புகைப்பிடிக்க தடை இல்லை
//சரியான இணைய வசதியில்லாததால் நாளை விரிவாக பின்னூட்டமிடுகிறேன். நானும் ஒரு பதிவிடலாமென நினைக்கிறேன் :) //
மறுமொழியை எதிர்பார்க்கிறேன்
உண்மைத் தமிழன் சார்,
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
புகைப் பிடிப்பவரோட கஷ்டம் புகைப் பிடிப்பவருக்குத்தான் தெரியும்
:)
//புகைப் பிடிப்பவரோட கஷ்டம் புகைப் பிடிப்பவருக்குத்தான் தெரியும்
:) //
சாமி, யார் முற்றிலும் புகைப்பதை நிறுத்த வேண்டும் என்று கூறியது. பொது இடங்களில் மட்டும் தானே தடை
மருத்துவரே கலக்கல் பதிவு... என் வயிற்றெரிச்சலை வாங்கி கட்டி கொண்டீர்கள் , 3 நாட்களாக சரியாக புகைபிடிக்க இயலாமல் , என் நுரையீரல் கதறி அழுகிறது , நீங்க வேற இந்த பாழாப்போன சட்டத்துக்கு இவ்ளோ விளக்கம் குடுக்கறீங்க..
ஊரில் உங்களைப்போல நாலு பேர் வேண்டாம் நீங்கள் ஒருவர் போதும் நாடு உருப்படும்..
வயிறெரிய பின்னூட்டறேன் ,, நன்னா இருங்கோணா...
//மருத்துவரே கலக்கல் பதிவு... என் வயிற்றெரிச்சலை வாங்கி கட்டி கொண்டீர்கள் , 3 நாட்களாக சரியாக புகைபிடிக்க இயலாமல் , என் நுரையீரல் கதறி அழுகிறது , நீங்க வேற இந்த பாழாப்போன சட்டத்துக்கு இவ்ளோ விளக்கம் குடுக்கறீங்க.. //
வீட்டிற்கு போய் தம்மடிக்க வேண்டியது தானே
//ஊரில் உங்களைப்போல நாலு பேர் வேண்டாம் நீங்கள் ஒருவர் போதும் நாடு உருப்படும்..//
ஹி ஹி ஹி
//வயிறெரிய பின்னூட்டறேன் ,, நன்னா இருங்கோணா... //
இருங்கோணா.. ஒரு தம்ம பத்தவச்சிட்டு அடுத்த மறுமொழியை எழுதுங்க் :)
அரிய பொதுநலச் செய்திகள்!
இரைப்பிருமல் காரருக்குத்தான் பக்கத்திலுள்ளவர் புகைபிடிப்பதால் வரும் துன்பம் உடனடியாகத் தெரியும்.
புகைபிடிக்கும் ஒருவர், தன் அன்புக்குரிய இரைப்பிருமல் நோயரான ஒருவர் அப்புகையால் படும் துன்பத்தை அறிந்தால், அதன்பின் புகைக்கவே விரும்ப மாட்டார் என்றே எண்ணுகிறேன்.
இருபதாம் மாடியிலிருந்து கட்டிக்கொண்டு கீழே குதிப்பது மிகப்பொருத்தமான எடுத்துக்காட்டு.
நன்றி மருத்துவர் ஐயா!
அப்புறம்...
வெண்சுருட்டு என்றே சொல்லலாமே!
சரியான நேரத்தில் எழுதப்பட்ட தேவையான கட்டுரை. 20 மாடி விளக்கம் அருமை.
நன்றி! டாக்டர், நான் அபிஅப்பா, மிக்க நன்றி! நான் 6 நாட்களாக விட்டுவிட்டேன்! ஒரு நாளைக்கு 45 கிங்ஸ் என்பது ரொம்ப டூ மச் என்பது நான் தொட்டுவிட்ட தூரம் நினைத்து விட்டுவிட்டேன்!!!ஆனாலும் நண்பர் பாலா போன்றவர்கள் உங்களை தனி ஆளாக்கி குடை குடை என குடைந்ததது மனசுக்கு கஷ்டமாக இருக்கு!!!
நாட்டுல 25% மக்கள் புகை பிடிக்கறாங்க. மிச்சம் 75% மக்களும் இதுனால பாதிக்க படறாங்க. ஆனாலும் இந்த மாதிரி ஒரு சட்டம் போடுவது சரியானு தெரியல. ஒரு ரயில்வே platform, பஸ் ஸ்டாண்ட் எல்லாத்துலையும் smoking area கொண்டு வரலாம். அதன் பிறகு, non smoking area smoke பண்றவங்கள தண்டிக்கலாம். அத தவிர ஒவ்வொரு working placelayum ஸ்மோகிங் ரூம் கொண்டு வரலாம். அதன் பிறகு, வொர்கிங் place வெளில smoking ban பண்ணலாம். இது போன்று எந்த ஒரு முன்னேற்பாடும் இல்லாமல் செய்யப்படும் ஒரு தடை வெறும் பெரியளவில் தான் செயல் படுத்த முடியும். அது அன்புமணி ராமதாசுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் அவர் இதை கொண்டு வர முயற்சி மேற்கொண்டுள்ளார். அதை பாராட்டவே வேண்டும். அவருடைய எண்ணம் நல்லதே ஆனால் செயல்வடிவம் கொடுப்பது இன்றுள்ள நிலையில் நடக்காது.
கடந்த மூன்று வருடங்களாக ஐரோப்பால படிபடியா ஒவ்வொரு நாடும் smoking places restrict பண்ணிக்கிட்டு வராங்க. அத அவங்களால செயல்படுத்தவும் முடியுது. காரணம் அந்த தடைக்கு முன்னால கொஞ்சம் செயல்படுத்தரத பத்தி யோசிக்கறாங்க. அத தவிர மக்களுக்கு கொஞ்சம் அதிகாமவே civic sense இருக்கு. (தனி மனித சுதந்திரம் போச்சுன்னு யாரும் கதறல) . இப்ப எனக்கு தெரிஞ்சி இத்தாலி, நெதர்லாந்து மாதிரியான நாடுகள் restaurant/pub போன்ற எடங்கள்ள smoking ban செஞ்சி இருக்காங்க.
இந்தியா முழுக்க தடைன்னு சொல்றது எனக்கு சிரிப்பு தான் வருது.. இந்தியானா சென்னை, பெங்களூர், பாம்பே, டெல்லி தானோ !
தகவலுக்கு நன்றி!
முதலில், என்னடா வெண்குழல்வத்தி என்று போட்டிருக்காரேனு பார்த்தேன். ஒன்னுமே புரியல... அப்புறம் ஒரு 5 நிமிடம் கழித்து தான் அது சிகரெட் என உணர்ந்தேன்.
இந்த மாதிரி எழுதுனா ரொம்ப கடினமாக இருக்கு... ஆனால் பதிவில் இருந்த அனைத்து விசயம் நன்றாக இருந்தது.
- பாலச்சந்தர் முருகானந்தம்,
http://balachandar.net சொந்த வலைப்பதிவு
http://ulagam.net
உலகம்.net - இலவச தமிழ் வலைப்பதிவுச் சேவை
இதை தவிர secondhand smoking ஆஸ்த்மா, குழந்தைகள் காது வலி, சீழ் பிடிப்பது போன்றவையும் வர காரணமாக இருக்கின்றன. இதுகுறித்து இங்கே http://reallogic.org/thenthuli/?p=194
தமிழ்நம்பி, வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
வடகரை வேலன்,
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
அபி அப்பா சார்
//நன்றி! டாக்டர், நான் அபிஅப்பா, மிக்க நன்றி! நான் 6 நாட்களாக விட்டுவிட்டேன்! ஒரு நாளைக்கு 45 கிங்ஸ் என்பது ரொம்ப டூ மச் என்பது நான் தொட்டுவிட்ட தூரம் நினைத்து விட்டுவிட்டேன்!!!//
விட்டு விட்டது மகிழ்ச்சியான செய்தி
//ஆனாலும் நண்பர் பாலா போன்றவர்கள் உங்களை தனி ஆளாக்கி குடை குடை என குடைந்ததது மனசுக்கு கஷ்டமாக இருக்கு!!//
இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா
மணிகண்டன்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
//முதலில், என்னடா வெண்குழல்வத்தி என்று போட்டிருக்காரேனு பார்த்தேன். ஒன்னுமே புரியல... அப்புறம் ஒரு 5 நிமிடம் கழித்து தான் அது சிகரெட் என உணர்ந்தேன்.
இந்த மாதிரி எழுதுனா ரொம்ப கடினமாக இருக்கு... ஆனால் பதிவில் இருந்த அனைத்து விசயம் நன்றாக இருந்தது.//
ஒரு புது தமிழ் வார்த்தை படிக்க இது ஒரு சந்தர்ப்பம் தானே
பத்மா அரவிந்த் மேடம்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
//வெண்குழல் வத்தி//
சிகரெட்டுக்கு இப்படி ஒருபெயரா???
Anyways I believe smoking is a DISGUSTING habit,புகைப்பிடிப்பவர்கள் கோபித்துக்கொள்ள வேண்டாம்.
நல்ல பதிவு...ஆனால் இந்த சட்டத்தால் அதிகமாக லாபம் அடையபோவது நம்ம காவல் துரையினர்தான்....:)
இனிமே ஓடி ஒளிய வேண்டியதுதான்... என்ன கொடுமை சார் இது?...
தலைவரே..
சரியான நேரத்தில் மிகச்சரியான பதிவு..
உங்கள் வாத்தத்தை நம்ம பதிவுலயும் ஒரு வார்த்தை விடாம போட்டாச்சு..
தொடரட்டும் உங்கள் தொண்டு..
நர்சிம்
:)
டாக்டர்..
பதிவை ஒரு வரி விடாமல் படித்தேன்.இந்தப் பதிவை ப்ரிண்ட் எடுத்து எல்லா பொது இடங்களிலும் வைக்கலாம்! அருமையோ அருமை!!!
very very very useful post.
கலக்கல்!
சீங்கப்பூரீல் பிகைப்புடிப்பதை அரசாங்கம் வலியுருத்தவில்லை!!
டாக்டர்,
இல்லை, உடல்நலம் / அடுத்தவர் உடல்நலம் மட்டுமே சம்பந்தப்பட்டதில்லை இது. சட்டம் எனும்போது அதன் இணை - நிகழ்வுகளான போலீஸ் / அதிகாரம் / அது பிரயோகிக்கப்படும் விதம் என பலவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவேண்டும்.
விமான நிலையத்தில் தனிஅறை புகைக்க என கொடுத்திருக்கிறார்கள். வேறு இடத்தில் யாரும் பிடிப்பதில்லை. அதேபோல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் கொடுத்தால் யாராவது பிடிக்கப் போகிறார்களா என்ன?
வேறு சில புள்ளிகளை என்னுடைய பதிவில் எழுதுகிறேன்.
//சிகரெட்டுக்கு இப்படி ஒருபெயரா???//
ஆமாம் மேடம்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
hayat001
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
//தலைவரே..
சரியான நேரத்தில் மிகச்சரியான பதிவு..
உங்கள் வாத்தத்தை நம்ம பதிவுலயும் ஒரு வார்த்தை விடாம போட்டாச்சு..
தொடரட்டும் உங்கள் தொண்டு..
நர்சிம்//
நன்றி தல
சுந்தரராஜன்...! சார்
:) :) :)
//பரிசல்காரன் said...
டாக்டர்..
பதிவை ஒரு வரி விடாமல் படித்தேன்.//
உற்சாகப்படுத்தியதற்கு நன்றி
//SurveySan said...
very very very useful post.
கலக்கல்!//
வருகைக்கு நன்றி. ஆமா இது குறித்து நீங்கள் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தினால் என்ன
கேள்வி
மத்திய அரசின் சட்டம்
1. புகை பிடிப்பதை தடை செய்துள்ளது
2. பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்துள்ளது
என்ன பதில் வருகிறது என்று பார்ப்போம்
//Vicky said...
சீங்கப்பூரீல் பிகைப்புடிப்பதை அரசாங்கம் வலியுருத்தவில்லை!!//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
டாக்டர்,
இல்லை, உடல்நலம் / அடுத்தவர் உடல்நலம் மட்டுமே சம்பந்தப்பட்டதில்லை இது. சட்டம் எனும்போது அதன் இணை - நிகழ்வுகளான போலீஸ் / அதிகாரம் / அது பிரயோகிக்கப்படும் விதம் என பலவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவேண்டும்.
விமான நிலையத்தில் தனிஅறை புகைக்க என கொடுத்திருக்கிறார்கள். வேறு இடத்தில் யாரும் பிடிப்பதில்லை. அதேபோல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் கொடுத்தால் யாராவது பிடிக்கப் போகிறார்களா என்ன?
வேறு சில புள்ளிகளை என்னுடைய பதிவில் எழுதுகிறேன்.//
சுந்தர் சார்
நீங்கள் ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்
இந்த சட்டம் புகைபிடிப்பதை தடை செய்ய வில்லை. பொது இடங்களில் புகைபிடிப்பதை மட்டும் தான் தடை செய்கிறது
ஆணுறை உதாரணம் புரியவில்லை என்றால் வேறொரு உதாரணம் தருகிறேன்
--
எனக்கு இளையராஜா பாடல் பிடிக்கும்
1. நான் அதை விட்டில் ஒலிபெருக்கியில் சத்தமாக கேட்கலாம் (வீட்டில் புகைபிடிப்பது)
2. அல்லது வெளியிடங்களில் காதுஒலிப்பானில் (ear phone)கேட்கலாம் (நிகோடின் தோல்திட்டு அல்லது மெல்லும் பசை) அடுத்தவருக்கு தொந்தரவில்லாமல்
அதை விடுத்து நான் எங்கு சென்றாலும் இளையராஜா பாடலை 120 டெசிபலில் அலற விடுவேன் என்பது தவறு.
சட்டம் அதை அனுமதிப்பதில்லை !!
---
நீங்கள் வீட்டின் அறையை / சாளரங்களை மூடி கொண்டு 120 டெசிபலில் பாட்டு கேளுங்கள் அல்லது வெளியில் சென்றால் காது ஒலிப்பானில் கேளுங்கள் என்று தானே கூறுகிறோம்
டாக்டர்,
காண்டம் உதாரணம் சரியில்லை :(
சிகரெட் பூங்காக்களிலும் சாலைகளிலும் பிடிக்கலாம், காண்டம் உபயோகிக்க முடியுமா :))
இந்தச் சட்டம் புகைப்பிடிப்பதைத் தடை செய்வதாக நானும் சொல்லவில்லை!. அந்த அளவிற்குக்கூடவா புரியாது எனக்கு...
பதில் அளித்தமைக்கு நன்றி.
//சிகரெட் பூங்காக்களிலும் சாலைகளிலும் பிடிக்கலாம், //
புகைக்கக்கூடாது என்று தான் கூறுகிறோம். நீங்கள் வீட்டிற்குள் புகை பிடியுங்கள். அதை யாரும் தடை செய்யவில்லை
பூங்காவில், சாலையில் புகை பிடிக்கலாம் (அங்கு வருபவருக்கு புற்று நோய் வந்தால் பரவாயில்லை) என்ற எண்ணம் தவறு என்பது என் கருத்து
--
இவ்வளவு நாள் அறியாமல் செய்த தவறுகளை இனி திருத்தலாமே
கிரிக்கெட் விளையாடுவது தனி மனித உரிமை என்று கூறி அண்ணாசாலியில் நான் விளையாடுவேன் என்று அடம் பிடிப்பது சரியில்லையே !!
அது போல் தான் சாலையில் புகை பிடிப்பதும்
--
கிரிக்கெட் விளையாடுவது தனி மனித உரிமை என்று கூறி அண்ணாசாலையில் நான் விளையாடுவேன் என்று அடம் பிடிப்பது சரியில்லையே !!
அது போல் தான் சாலையில் புகை பிடிப்பதும்
--
மிகவும் பயனுள்ள தகவல்கள்..
( முக்கியமா என்னை போல எப்பொழுதும் கையில் வெண்குழல் வைத்து இருப்பவர்களுக்கு)
//உருப்புடாதது_அணிமா //
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
//முக்கியமா என்னை போல எப்பொழுதும் கையில் வெண்குழல் //
தமிழ் சொல் பயன்படுத்தியதற்கு மேலும் சிறப்பு நன்றிகள் பல
நிகோடின் போன்ற பல பொருட்க்கள் (நிகோடின் தோல்திட்டு, நிகோடின் பசை,நிகோடின் மாத்திரைகள் ) உபயோகிப்பதால் , பின் விளைவுகள் வருமா??
( புகை பிடிப்பதை விட குறைவா? அல்லது அதிகமான விளைவா?? )
//நிகோடின் போன்ற பல பொருட்க்கள் (நிகோடின் தோல்திட்டு, நிகோடின் பசை,நிகோடின் மாத்திரைகள் ) உபயோகிப்பதால் , பின் விளைவுகள் வருமா??//
இது குறித்து நான் ஏற்கனவே விளக்கியுள்ளேனே. பதில் 11
//( புகை பிடிப்பதை விட குறைவா? அல்லது அதிகமான விளைவா?? ) //
இது குறித்தும் நான் ஏற்கனவே விளக்கியுள்ளேனே. பதில் 14
புகை பிடிப்பது 20ஆவது மாடியில் இருந்து குதிப்பது.
நிகோடின் தோல்திட்டு அல்லது மெல்லும் பசை முதல் மாடியிலிருந்து குதிப்பது
****** கிரிக்கெட் விளையாடுவது தனி மனித உரிமை என்று கூறி அண்ணாசாலையில் நான் விளையாடுவேன் என்று அடம் பிடிப்பது சரியில்லையே ********
அதையே தான் சுந்தர் கேக்கறாரு ! கிரவுண்டு கட்டி கொடுக்க சொல்லி ! அத பத்தி பேசாம வீட பத்தியே பேசிகிட்டு இருக்கீங்களே.
//அதையே தான் சுந்தர் கேக்கறாரு ! கிரவுண்டு கட்டி கொடுக்க சொல்லி ! அத பத்தி பேசாம வீட பத்தியே பேசிகிட்டு இருக்கீங்களே. //
கிரிக்கெட் விளையாட ஆடுகளம் தேவை. வீட்டில் ஒரு அறைக்குள் கிரிக்கெட் விளையாட முடியாது.
ஆனால் புகை பிடிக்க ஆடுகளம் தேவையில்லை. அப்படி இருக்கியில் எதற்காக ஆடுகளம் கட்டித்தர வேண்டும் என்று புரியவில்லை.
அவரவர் அவரவர் வீட்டினுள் புகை பிடிக்க வேண்டியது தானே
--
நான் ஏற்கனவே இளையராஜா பாடல் வைத்து ஒரு உதாரணம் தந்திருந்தேன். அதன் படி பார்த்தால் இளையராஜா ரசிகர்களுக்கு தனி ஆடுகளம், ரஹ்மான் ரசிகர்களுக்கு தனி ஆடுகளம் என்று சென்று கொண்டே இருக்கும்
--
சரி எனக்கு நடனமாட பிடிக்கும் என்றால் நான் என் வீட்டிலோ அல்லது கலை நிகழ்ச்சிகளிலோ அல்லது சபாக்களிலோ நடனமாட வேண்டியது தான்
--
நடு சாலையில் நடனமாடுவேன், பூங்காவில் நடனமாடுவேன், அல்லது நீங்கள் கூறுவது போல் எனக்கு நடனமாட ஒரு இடம் கட்டி தாருங்கள் என்று கூறுவது நியாயமா
--
சொல்லுங்கள் நண்பரே
--
நண்பரே -- மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன். பொது இடங்களில் புகை பிடிக்கத்தான் தடையே தவிர உங்கள் வீட்டில் புகை பிடிக்க தடையில்லை
--
புகைபிடிக்க தனி ”கிரவுண்டு கட்டி கொடுக்க” சொல்வது போல் பாட்டு கேட்க, நடனம் ஆட, என்று அனைத்து செயல்களுக்கும் தனி இடம் அளிப்பது நடைமுறையில் சாத்தியமா...
You can now get a huge readers' base for your interesting Tamil blogs. Get your blogs listed on Tamil Blogs Directory - http://www.valaipookkal.com and expand your reach. You can send email with your latest blog link to valaipookkal@gmail.com to get your blog updated in the directory.
Let's show your thoughts to the whole world!
டாக்டர், அப்ப ஏன் விமான நிலையங்களில் மட்டும் ‘மைதானம்' கட்டித் தர்ரீங்க? அங்க வர்ரவங்க பணக்காரங்க அப்படிங்கறதுனாலதானே!!
நீங்கள் இந்தப் பிரச்சனைப்பாட்டை over simplify செய்கிறீர்கள் எனத் தோன்றுகிறது :(
இந்த சட்டம் வீட்டினுள் புகை பிடிக்க அனுமதி அளிக்கிறது போதுமா
அதை வைத்து நீங்கள் தான்பிரச்சனையை உருவாக்குகிறீர்கள்
அறைக்கும் புகை பிடிக்க வேண்டியது தானே.
//டாக்டர், அப்ப ஏன் விமான நிலையங்களில் மட்டும் ‘மைதானம்' கட்டித் தர்ரீங்க? அங்க வர்ரவங்க பணக்காரங்க அப்படிங்கறதுனாலதானே!!//
பணக்காரர்கள் யாரும் பேரூந்தில் போவதில்லை என்ற உங்களின் கருத்துடன் எனக்கு உடன்பாடு இல்லை
//நீங்கள் இந்தப் பிரச்சனைப்பாட்டை over simplify செய்கிறீர்கள் எனத் தோன்றுகிறது :( //
இல்லை சுந்தர் சார், நீங்கள் தான் இந்த சட்டத்தை சிக்கலாக்குகிறீர்கள்
--
சுந்தர் சார்,
நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை
1. பொது இடங்களில் புகை பிடிக்க அனுமதித்து அனைவரின் நுரையீரலை பாழ்படுத்த வேண்டுமா
அல்லது
2. அனைத்து கட்டிடங்களிலும் புகை பிடிக்க தனி இடம் வேண்டுமா
எளிய இனிய தேவையான தெளிவான பதிவு. வாழ்த்துக்கள்.
இந்த சட்டம் ஆரம்பநிலைப் புகையாளர்களை அலுத்துப் போய்ப் பழக்கத்தை விட வைக்கும்; நீண்டகாலப் புகையாளர்களின் குழல் எண்ணிக்கையைக் குறைக்கும் என்று நம்புகிறேன்.
அன்புமணியின் பதவி போனபிறகு சட்டத்திலேயே திருத்தம் வரலாம் என்றும் அஞ்சுகிறேன்.
//எளிய இனிய தேவையான தெளிவான பதிவு. வாழ்த்துக்கள்.
இந்த சட்டம் ஆரம்பநிலைப் புகையாளர்களை அலுத்துப் போய்ப் பழக்கத்தை விட வைக்கும்; நீண்டகாலப் புகையாளர்களின் குழல் எண்ணிக்கையைக் குறைக்கும் என்று நம்புகிறேன்.
அன்புமணியின் பதவி போனபிறகு சட்டத்திலேயே திருத்தம் வரலாம் என்றும் அஞ்சுகிறேன். //
ரத்னேஷ் சார்
புகைப்பழக்கமோ, மதுப்பழக்கமோ, அதிகம் ஐஸ்கிரீம் சாப்பிடுவதோ, அதிகம் சாக்கலேட் சாப்பிடுவதோ, பொது இடங்களில் எச்சில் துப்புவதோ, பொது இடங்களில் முக்கு குடைவதோ, ஒலிபெருக்கியை 100 டெசிபலில் அலற விடுவதோ, இரு சக்கர வாக்னம் ஓட்டும் போது தலைக்கவசம் அணியாததோ, அடுத்தவரை கையொப்பம் இட கேட்டுக்கொண்டு பணிக்கு காலதாமதமாக செல்வதோ, தண்ணீரை வீணாக்குவதோ, அறையை விட்டு செல்லும் முன் மின்சாதனங்களை அணைக்காததோ --> சட்டத்தால் திருத்த முடியாது என்பது எனது திட்ட வட்டமான கருத்து
இதற்கு தேவை மனமாற்றம்
இந்த சட்டத்தால் - இது ஏற்படுத்தியுள்ள பொது விவாதங்களால் - இந்தியாவில் புகை பிடிக்கும் 20 லட்சம் நபர்களில்
1 லட்சம் நபர்கள் புகைப்பதை விட்டு விட்டாலோ
1 லட்சம் நபர்கள் புகைக்கும் குழல்களின் அளவை குறைத்தாலோ
புகைக்க நினைக்கும் 1 லட்சம் இளைஞர்கள் இந்த பழக்கத்திற்கு அடிமை ஆகாமல் இருந்தாலோ
அதுவே அமைச்சருக்கு கிடைத்து வெற்றி என்பேன்
//புகைப்பழக்கமோ, மதுப்பழக்கமோ, அதிகம் ஐஸ்கிரீம் சாப்பிடுவதோ, அதிகம் சாக்கலேட் சாப்பிடுவதோ, பொது இடங்களில் எச்சில் துப்புவதோ, பொது இடங்களில் முக்கு குடைவதோ, ஒலிபெருக்கியை 100 டெசிபலில் அலற விடுவதோ, இரு சக்கர வாக்னம் ஓட்டும் போது தலைக்கவசம் அணியாததோ, அடுத்தவரை கையொப்பம் இட கேட்டுக்கொண்டு பணிக்கு காலதாமதமாக செல்வதோ, தண்ணீரை வீணாக்குவதோ, அறையை விட்டு செல்லும் முன் மின்சாதனங்களை அணைக்காததோ//
புதிதாக சில விஷயங்கள் சொல்லித் தந்திருக்கிறீர்கள்.
//இந்தியாவில் புகை பிடிக்கும் 20 லட்சம் நபர்களில்
1 லட்சம் நபர்கள் புகைப்பதை விட்டு விட்டாலோ
1 லட்சம் நபர்கள் புகைக்கும் குழல்களின் அளவை குறைத்தாலோ
புகைக்க நினைக்கும் 1 லட்சம் இளைஞர்கள் இந்த பழக்கத்திற்கு அடிமை ஆகாமல் இருந்தாலோ//
இது நடக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
அன்புமனிக்குப் பிறகும் இந்தச் சட்டம் இதே உறுதியுடன் இருக்குமா?
உபயோகமான விளக்கங்கள்...தனியே குதிப்பதிலும் மற்றவர்களுக்கு பாதிப்பு உள்ளது. ஜ்யோவ்ராம் சுந்தரின் பதிவில் எனது எதிர்வினையை எழுதியுள்ளேன்.
சிகரெட்டு என்றே எழுதிவிடலாமே.
//இது நடக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.//
:) :)
//அன்புமனிக்குப் பிறகும் இந்தச் சட்டம் இதே உறுதியுடன் இருக்குமா?//
வாய்ப்பு குறைவு.
ஆனால் நிரந்திர தீர்விற்கு சட்டம் தேவை யில்லை. மனமாற்றம் தான் தேவை என்பதால் இச்சட்டம் இருக்கும் வரை மனமாற்றம் அடைந்தவர்களால் குறையும் நோய்களே பெரிய வெற்றி எனலாம்
//உபயோகமான விளக்கங்கள்...தனியே குதிப்பதிலும் மற்றவர்களுக்கு பாதிப்பு உள்ளது. ஜ்யோவ்ராம் சுந்தரின் பதிவில் எனது எதிர்வினையை எழுதியுள்ளேன்.//
வக்கீல் சார். நானும் அவரது கேள்விகளில் பெரும்பாண்மையானவைகளுக்கு ஏற்கனவே இந்த பதிவிலேயே விடை அளித்து விட்டேன். சில புது கேள்விகளுக்கு அடுத்த இடுகையில் விடை அளிக்கலாம் என்று உள்ளேன்
//சிகரெட்டு என்றே எழுதிவிடலாமே.//
புது தமிழ் வார்த்தை பழக்கத்திற்கு கொண்டு வரலாம் என்று தான் :) :)
ஜ்வயோரம் கேட்டிருப்பதை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று நினைக்கிறேன்!
ஒன்று விமானநிலையங்களிலும் புகைபிடிக்க ஒதுக்கி இருக்கும் தனி இடத்தை ரத்து செய்யலாம்!
அல்லது பேருந்து/ரயில் நிலையங்களிலும் தனி இடம் ஒதுக்கலாம்!
தங்களுக்கென்று தனி இடம் ஒதுக்கி கொடுத்துவிட்டால் பிறகு ஏன் வெளியில் புகைபிடிக்கப் போகிறார்கள் என்பதுதான் அவரது கேள்வி. (என்னுடையதும் கூடத்தான்)
விமானத்தில் பயணிப்பவர்கள் கூடத்தான் வீட்டிலேயே புகைபிடித்துவிட்டு வந்து விமானத்தில் ஏறலாமே!
//ஜ்வயோரம் கேட்டிருப்பதை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று நினைக்கிறேன்!
ஒன்று விமானநிலையங்களிலும் புகைபிடிக்க ஒதுக்கி இருக்கும் தனி இடத்தை ரத்து செய்யலாம்!
அல்லது பேருந்து/ரயில் நிலையங்களிலும் தனி இடம் ஒதுக்கலாம்! //
பேரூந்து நிலையம் என்றால் என்ன --> கோயம்பேடு பேரூந்து நிலையமா அல்ல சைதாப்பேட்டை பேரூந்து நிலையமா.
தமிழகத்தில் 10 விமான நிலையங்களும் 500 பேரூந்து நிலையங்களும், 5000 பேரூந்து நிறுத்தங்களும் இருக்கின்றன....
//தங்களுக்கென்று தனி இடம் ஒதுக்கி கொடுத்துவிட்டால் பிறகு ஏன் வெளியில் புகைபிடிக்கப் போகிறார்கள் என்பதுதான் அவரது கேள்வி. (என்னுடையதும் கூடத்தான்)//
ஏன் ஒதுக்க வேண்டும் என்பது என் கேள்வி. நான் சத்தமாக பாட்டு கேட்க தனி இடம் ஒதுக்குவீர்களா, அல்லது மூக்கு குடைய ஒவ்வொரு பேரூந்து நிலையத்திலும் தனி இடம் ஒதுக்க கோர முடியுமா
இப்படி தனி இடம் கேட்பதே தவறு என்கிறேன்
//விமானத்தில் பயணிப்பவர்கள் கூடத்தான் வீட்டிலேயே புகைபிடித்துவிட்டு வந்து விமானத்தில் ஏறலாமே! //
ஏறலாம். விமான நிலையத்தில் இடம் ஒதுக்கியது கூட தவறு தான். சுட்டி காட்டியதற்கு நன்றி
நண்பர் சுந்தர் என்ன எழுதுகிறார் என்றே சில வரிகளை படித்தால் புரியவில்லை. திகைப்பாகவும் இருக்கிறது. உதாரணமாக அவர் கூறுவது “ஒரு நண்பர் பேசும்போது சொன்னது : சிகரெட் / பீடி என்பது முழுக்க முழுக்க bio product (இயற்கையிலிருந்து வருவது), இதனால் என்ன பெரிய தீங்கிருக்கமுடியும்.”
ஊமத்தங்காய், அரளி விதை, பாம்பு விஷம் ஆகியவையும் முழுக்க முழுக்க bio product (இயற்கையிலிருந்து வருவது) என்று தெரியாதா
என்ன கொடுமை சார் :(
மிகவும் நல்ல விளக்கமான பதிவு.
இதில் என் நிலைபாடு இது தான்.
சாலையோரங்களில் சிறுநீர்கழிக்க கட்டப்பட்டிருக்கும் கழிவறைகள் போல (அதுவே சரியா இல்லைன்னு சொல்லக்கூடாது) புகைப்பவருக்கான அறைகளை அரசு கட்ட வேண்டும்.
அரசு, தனியார் அலுவலகங்களில் புகை பிடிக்க தனி இடம் ஒதுக்க அனுமதி அளிக்கவேண்டும்.
இதனை செய்ய முடியாது எனில் இந்தியாவில் அனைத்து புகையிலை சாதனங்களையும் முடக்க முன்வரவேண்டும்.
நல்ல பதிவு. Smoking not only makes a person nearby uncomfortable, but also poses health risk due to passive smoking. Now this action will surely reduce atleast exposure to passive smoking to some extent.
தல வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...
அமுதா மேடம்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...
//நான் சத்தமாக பாட்டு கேட்க தனி இடம் ஒதுக்குவீர்களா, அல்லது மூக்கு குடைய ஒவ்வொரு பேரூந்து நிலையத்திலும் தனி இடம் ஒதுக்க கோர முடியுமா
//
சத்தமாக பாட்டு கேட்கவும், மூக்கு குடையவும் விமான நிலையத்தில் இடம் இருக்குமேயானால் பேருந்து நிலையத்திலும் ஒதுக்கலாம்! (கோயம்பேடு, சைதாப் பேட்டை, கண்ணம்மா பேட்டை..etc)
இது பற்றி நீங்களோ நானொ விவாதித்துக் கொண்டிருப்பது எவ்விதத்திலும் பயன் தராது என்றே எண்ணுகிறேன்! :)
புகைபிடித்தல் உடல் நலனுக்குக் கெடுதி மட்டுமே! அவருக்கும் அடுத்தவருக்கும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை!
ஒரு மத்திய அமைச்சராலேயே முடியாதது நம்மால் முடிந்துவிடுமா என்ன?
இது போன்ற விஷயங்களில் கண்டிப்பாக சட்டம் இயற்றி செயல்படுத்தியும் காட்டிய அம்மா அவர்களின் ஆளுகைத் திறனைப் பாராட்டியே ஆக வேண்டும்!
//இதனை செய்ய முடியாது எனில் இந்தியாவில் அனைத்து புகையிலை சாதனங்களையும் முடக்க முன்வரவேண்டும்//
ஹிஹி! என்ன தல இது! சின்னப்புள்ளத் தனமா? அப்புறம் அவருக்கு இருக்கிற மந்திரி போஸ்டையும் விட்டுட்டு நடுத் தெருவுலதான் இருக்கணும்!
பின்றீங்களே...!
மிகச்சரியான நேரத்தில் , சரியான பதிவு!
அப்புறம்...
உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது..!
//சத்தமாக பாட்டு கேட்கவும், மூக்கு குடையவும் விமான நிலையத்தில் இடம் இருக்குமேயானால் பேருந்து நிலையத்திலும் ஒதுக்கலாம்! (கோயம்பேடு, சைதாப் பேட்டை, கண்ணம்மா பேட்டை..etc)//
நாங்கள் கூறுவது, விமான நிலையத்தில் ஒதுக்கியதே தேவை இல்லாத ஒரு விஷயம் என்று
சுரேகா சார்,
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
மருத்துவர் புரூனோ
புகைப்பிடித்தலுக்கும் SIDS(Sudden Infant Death Syndrome) என்ற நோய்க்கும் இருக்கும் தொடர்பு நிறைய பேருக்கு தெரிவதில்லை. பொது வாகனப்போக்குவரத்தில் அல்லது பொது இடங்களில் கைகுழந்தைகளோடு வரும் பெண்களோ அல்லது கர்பமாக இருக்கும் பெண்களோ இந்த புகைப்பிடிப்பவர்களால் அவதிப்படுவதைப்பற்றி நேரம் இருக்கும் போது விளக்கவும் ப்ளீஸ்.
மருத்துவர் புரூனோ
புகைப்பிடித்தலுக்கும் SIDS(Sudden Infant Death Syndrome) என்ற நோய்க்கும் இருக்கும் தொடர்பு நிறைய பேருக்கு தெரிவதில்லை. பொது வாகனப்போக்குவரத்தில் அல்லது பொது இடங்களில் கைகுழந்தைகளோடு வரும் பெண்களோ அல்லது கர்பமாக இருக்கும் பெண்களோ இந்த புகைப்பிடிப்பவர்களால் அவதிப்படுவதைப்பற்றி நேரம் இருக்கும் போது விளக்கவும் ப்ளீஸ்.
//புகைப்பிடித்தலுக்கும் SIDS(Sudden Infant Death Syndrome) என்ற நோய்க்கும் இருக்கும் தொடர்பு நிறைய பேருக்கு தெரிவதில்லை. பொது வாகனப்போக்குவரத்தில் அல்லது பொது இடங்களில் கைகுழந்தைகளோடு வரும் பெண்களோ அல்லது கர்பமாக இருக்கும் பெண்களோ இந்த புகைப்பிடிப்பவர்களால் அவதிப்படுவதைப்பற்றி நேரம் இருக்கும் போது விளக்கவும் ப்ளீஸ்.//
கண்டிப்பாக எழுதுகிறேன். வெண்குழல் வத்தியினால் ஏற்படும் தீங்குகள் அனேகம். ஒவ்வொன்றாக எழுத வேண்டும்
//ஒருவேளை கதையை நம்பாமல் டெக்னாலஜி, வன்முறை, கவர்ச்சி இதை எல்லாம் நம்பி படமெடுக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.//
உண்மை. இன்று வரும் படங்களின் கதையை புத்தகமாக போட்டால் அதை ஒரு முறைகூட படிக்க முடியுமா என்ற சந்தேகம் இருக்கிறது.
//மேலும் 80,90களில் மும்பை இறக்குமதிகள் குறைவு என்பதால் குறிப்பிடும் அளவுக்கு நடிக்கக்கூடிய நடிகைகளும் இருந்தார்கள்(ரேவதி, நதியா, சுஹாசினி). இப்போதெல்லாம் சும்மா வாயசைப்புக்கு மட்டுமே கதாநாயகிகள். //
இன்று நடிகர்களுக்கே நடிக்க வாய்ப்பு குறைவாகத்தானே இருக்கிறது. யோசித்து பார்த்தால், கதாநாயகியின் நடிப்பை நம்பி எடுக்கப்பட்ட கடைசி படம் “கண்ணத்தில் முத்தமிட்டால்” என்று நினைக்கிறேன் (ஹூம்..... ம்ம்... அல்லது சந்திரமுகி)
//நீங்கள் குறிப்பிடும் படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.//
:) :)
Post a Comment