ஆங்கிலத்தில் பேசியதை அப்படியே தந்துள்ளேன். அரசு துறைகளில் செயல்படுத்தப்படும் மின்னாளுமை (eGovernance) / கணினி / மென்பொருள் திட்டங்களில் இருந்த நாங்கள் அனுபவ பூர்வமாக கற்றவைகளையே வைத்தே நான் பேசினேன். இதில் நான் கூறிய முக்கியமான் விஷயங்கள்
- “புதிய”, “அதிக விலையுடைய”, “அதிகம் வசதிகள் உள்ள” தொழிற்நுட்பங்கள் இருக்கின்றன் என்ற ஒரே காரணத்திற்காக அவைகளை பயன் படுத்த வேண்டாம்
- பயனர்கள் அந்த மென்பொருளை ஏற்றுக்கொள்வதே ஒரு மின்னாளுமை திட்டத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமே தவிர தொழிற்நுட்பமோ, அதிக எண்ணிக்கையிலான வசதிகளோ, பல நிறங்களுடன் கூடிய பக்கங்களோ அல்ல
- குறைந்த விசைப்பலகை மற்றும் எலி பயன்பாடு இருக்கும் திட்டங்கள் எளிதில் வெற்றி பெறுகின்றன
- ஏற்கனவே பழக்கமான இடைமுகங்கள் மற்றும் படங்கள் அதிகம் உள்ள இடைமுகங்களை எளிதாக பயன் படுத்த முடிகிறது
- குறைந்த “வழுக்கள்” - விரைவில் பயன்பாடு
- இணையம் சார் திட்டங்கள் (web based) Client Server திட்டங்களை விட சிறந்தது
- இடைமுகம் தமிழில் இருந்தால் திட்டம் அதிகம் வரவேற்பு பெறும்
- மின்னாளுமை திட்டங்களில் தொழிற்நுட்பத்தை விட “மாற்றம் மேலாண்மை”யே (change management ) அதிக கவனம் செலுத்த வேண்டிய விஷயம்
- அவரது துறையில் கோப்புகளை மின்மயமாக்குவது குறித்து விவாதம் வந்த போது ஒருவர் கூறியது “ஒரு வருசந்தான் இருக்கு, எங்கள விட்டுடுங்க” (ஓய்வு பெற ஒரு வருடமே இருப்பதால் அவர்கள் கணினிக்கு மாறுவதில், ஒரு புது முறையை படிப்பதில் தயக்கம்)
- தமிழகத்தில் தற்சமயம் குளச்சல், பத்மநாபபுரம், தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், சோளிங்கள் ஆகிய ஐந்து மருத்துவமனைகளில் “மருத்துவ மேலாண்மை திட்டங்கள்” (hospital management system) துவக்கப்பட்டுள்ளன
- சனவ்ரி 20, 2009க்கு பின்னர் இது மேலும் 48 மருத்துவமனைகளுக்கு விரிவு படுத்தப்படும் (தேனி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தருமபுரி, கிருஷ்னகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து மருத்துவமனைகள்)
- அதன் பிறகு, இந்த நிலையங்களில் இருந்து பெறப்படும் கருத்துக்களின் படி மென்பொருளில் மாற்றம் தேவைப்பட்டால் மாற்றம் செய்யப்பட்டு 270 மருத்துவமனைகளுக்கும் விரிவு படுத்தப்படும்
- பின்னர் 1417 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் விரிவு படுத்தப்படும்
நேரம் கிடைக்கும் போது மேலும் விரிவாக எழுதிகிறேன்



23 மறுமொழிகள்:
அதான் ரெண்டு நாளா ஆளைக் காணோமா?..சொல்லவே யில்ல.
//“ஒரு வருசந்தான் இருக்கு, எங்கள விட்டுடுங்க” //
இப்படி கூறியவர்கள் எங்களிடமும் இருந்தார்கள் சார்.
ஆன்லைன் ரிப்போர்ட்டிங் செய்யும் வழக்கத்தையும் அவர்களே சிஸ்டம் ஆபரேட் செய்ய அவர்களையே பழக்கிய பின்னர் சிஸ்டம் முன் அமர்வதற்கு போட்டா போட்டி.
ஏதாவது ஒரு ரிப்போர்ட் அனுப்ப வேண்டும் என்று சொல்லிக் கொண்டு சிஸ்டம் முன் அமர்ந்துவிடுகிறார்கள்.
வேலை வாங்குவது ஓரளவு எளிமையாகிக் கொண்டே வருகிறது.
//அதான் ரெண்டு நாளா ஆளைக் காணோமா?..சொல்லவே யில்ல.//
உங்கள் கருத்துக்களையும் கூறுங்கள்
தாம்பரம் மற்றும் பிற மருத்துவமனையில் உள்ள கடைநிலை ஊழியர்களிடம் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு. (நாங்கள் எதிர்பார்க்கவில்லை. புறநோயாளி மற்றும் உள்நோயாளி பதிவு செய்வதுதான் மிகப்பெரிய கடினமான பணியாக இருக்கும் என்று தான் முதலில் எண்ணினோம்)
ஒருவரிடம் பேச்சு கொடுத்தப்போது (இது வசதியா இருக்கா, இல்ல பழய மாதிரி நோட்டுக்கு மாறுவோமா) சொன்னது “ஆபிசர் மாதிரி எங்களுக்கும் கம்பூட்டர் தந்திருக்கீங்க. எவ்வளவு பெரிய விசயம். நாங்க இதுலேயே பதியுறோம் சார்”
//ஆன்லைன் ரிப்போர்ட்டிங் செய்யும் வழக்கத்தையும் அவர்களே சிஸ்டம் ஆபரேட் செய்ய அவர்களையே பழக்கிய பின்னர் சிஸ்டம் முன் அமர்வதற்கு போட்டா போட்டி. //
ஆரம்ப சுகாதார நிலையங்களிலிருந்து அறிக்கைகள் நேரடியாக இணையம் மூலம் சென்னை வருகிறது என்பதை இன்று கருத்தரங்கு வந்திருந்த பலரால் நம்ப முடியவில்லை.
நேரம் இருந்திருந்தால் பூந்தமல்லி அருகில் இருக்கும் நிலையங்களுக்கு அழைத்து சென்று காட்டியிருக்கலாம்
எளிமை மிக முக்கியம்.தற்போது ஏ.என்.சி ஆன் லைனில் ஏற்றுவதில் சிரமம் இருக்கிறது.ஒவ்வொரு முறையும் முகப்பு பக்கத்திற்கு சென்று மீண்டும் தரவுகளை ஏற்ற வேண்டியுள்ளது.மென்பொருட்கள் எளிமையாக இருப்பது பணியாற்றுவோர்களை பயமுறுத்தாது.
இதனை copy செய்வது எப்படி சார்?
மக்களுக்கு போட்டுக் காட்டவேண்டும்.
ஒரு சந்தேகம்....
இதுக்கெல்லாம் நீங்கதான் காரணமா
மின்னஞ்சல் முகவரி தாருங்கள் கோப்பை அனுப்புகிறேன்
//இதுக்கெல்லாம் நீங்கதான் காரணமா//
இதுக்கெல்லாம்னா... ???? தல கொஞ்சம் தெளிவா கேளுங்க தல
//இதுக்கெல்லாம் நீங்கதான் காரணமா//
நமது துறையில் தற்சமயம் செயல்படுத்தப்படும்
மருத்துவமனை மேலாண்மை திட்டம் (HMS) மற்றும் சுகாதார தகவல் மேலாண்மைத்திட்டம் (HMIS) இரண்டிலும் எனது பங்கு இருக்கிறது :) :)
//எளிமை மிக முக்கியம்.தற்போது ஏ.என்.சி ஆன் லைனில் ஏற்றுவதில் சிரமம் இருக்கிறது.ஒவ்வொரு முறையும் முகப்பு பக்கத்திற்கு சென்று மீண்டும் தரவுகளை ஏற்ற வேண்டியுள்ளது.மென்பொருட்கள் எளிமையாக இருப்பது பணியாற்றுவோர்களை பயமுறுத்தாது.//
தாங்கள் அனைவரும் தற்சமயம் பயன் படுத்துவது தற்காலிக formsதான்
விரைவில் இவை அனைத்தும் மாற்றப்பட்டு ஒரே form ஆக வந்து விடும்.
ஒவ்வொருவரும் சிறு அளவில் தகவல் அளித்தால் போதும்
அந்த ஸ்லைட் ஷோவில் பார்க்கும் எனக்கு தொடர்புடைய ஒன்று மட்டும் கண்ணை உறுத்தியது அது இங்கு மட்டும் அல்ல பல அரசாங்க வேலைகளிலும் இந்த குறைபாடு உள்ளது.
செங்கல் சுவர் கட்டப்பட்டவுடன் அதை ஏதோ ஷோகேசுக்கு வைக்கப்போவது போல் சுத்தமாக துடைத்துவைக்கிறார்கள்,உடனே மேல் பூச்சு பூசுவதற்கு யாராவது உயரதிகாரியை அழைத்துள்ளார்களா என்று தெரியவில்லை.இப்படி செய்வதால் கட்டுமான வேலை நேரம் பிடிப்பதும் பொதுஜன பணம் விரையமாவதற்கு ஒரு வழி கிடைப்பதும் தான் வரும்.
மற்றபடி உங்கள் இந்த திட்டம் பற்றி அவ்வளவாக தெரியாத்தால் ஒன்றும் சொல்லமுடியவில்லை.
தகவல்கள் திருடப்படாமல் இருக்க ஏதாவது வழிமுறை இருக்கா?
சிங்கையில் ஒரு முறை ஒரு நோயாளியின் நோய் விபரங்களையும் அவருடைய சொந்த விபரங்கள் மருத்துவமனை மூலம் வெளியானது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
முன்னோடி முயற்சிக்கு வாழ்த்துகள். உரையைத் தமிழிலும் தந்தால் நன்று.
//தகவல்கள் திருடப்படாமல் இருக்க ஏதாவது வழிமுறை இருக்கா?
சிங்கையில் ஒரு முறை ஒரு நோயாளியின் நோய் விபரங்களையும் அவருடைய சொந்த விபரங்கள் மருத்துவமனை மூலம் வெளியானது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.//
வங்கிகளுக்கான மென்பொருட்களுக்கு ஈடான பாதுகாப்பு உள்ளது
ஆனால் உங்கள் கடவுச்சொல்லை மற்றவருக்கு அளித்தால் அவர் உங்கள் விபரங்களை பார்க்க முடியும் :) :)
நன்றி ரவி,
முக்கிய விஷயங்களை தமிழிலும் அளித்துள்ளேனே
பாராட்டுக்கள் டாக்டர். மின்னளுமையில் இன்னும் தமிழகம் போகவேண்டிய தொலைவு நிறைய. இந்நிலையில் உங்கள் முயற்சிகள் நம்பிக்கையூட்டுகின்றன.
கூறிய முக்கியமான் விஷயங்கள் UIயில் கவனம் செலுத்தும் அனைத்து மென்பொருள் நிபுணர்களுக்குமே பயன்படும். குறிப்பிட்ட சில விஷயங்கள் எல்லாமே ஆர்வமூட்டும் தகவல்கள், நம்ம ஊரு அரசு மருத்துவமனைகள்ல என்ன நடக்குதுன்னு ஒரு ஐடியா கடைச்சுது.
காசி சார்,
வருகைக்கும் பாரட்டுக்களுக்கும் நன்றி
கிருபா சார்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
நீங்கள் 1976ல் பிறந்ததாக எங்கோ படித்த நினைவு. நான் 1978. கிருபா “சார்” எல்லாம் போட்டுட்டீயளே... :-((
அனானி சார்
உங்களின் மறுமொழி குறித்து அறிய http://rural-doctors.blogspot.com/ பாருங்கள்
welldone bruno sir....introducing computers will sure make TN health syst the developed of all the indians .....good tht we think international than thinking within india....welldone DR BRUNO sir ...u always rock....
Post a Comment