இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Monday, March 31, 2008

ஆறாவது ஊதிய குழு பரிந்துரைகள் - 5 - பயணப்படி மற்றும் தினப்படி

ஆறாவது ஊதிய குழு பரிந்துரைகள் குறித்த தொடர் பதிவுகளில் இது மூன்றாவது பதிவு. முதல் பதிவை இங்கும் மற்றும் இரண்டாவது பதிவை இங்கும் மற்றும் மூன்றாவது பதிவை (விடுமுறைகள் மாற்றம்) இங்கும் மற்றும் நான்காவது பதிவை (உண்மையான உயர்வு ) இங்கும் காணலாம்

ஆறாவது ஊதிய குழு பரிந்துரைகள் - 5 - பயணப்படி மற்றும் தினப்படி

பல விஷயங்களில் ஆறாவது ஊதியக்குழுவின் மேல் வருத்தம் இருந்தாலும், ஆறாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளில் மிக முக்கியமானதும், ஊழியர்களுக்கு மிகுந்த பலனை தரக்கூடியதும் என்னவென்றால் பயணப்படி, தினப்படி குறித்த பரிந்துரைகள்

இது குறித்து வெகுசன ஊடகங்கள் கண்டு கொள்ளவில்லை. விடுமுறைகளை குறைத்ததை கண்டித்து பேட்டி அளிப்பவர்கள் கூட இது குறித்து ஒன்றும் சொல்ல வில்லை

காரணம் என்னவென்றால் இதனால் பலன் பெறுபவர்கள் மிக மிக சிலரே !!!

சராசரியாக 0.5 % விதத்திற்கும் குறைவான அரசு ஊழியர்களே அடிக்கடி பணி நிறுத்தம் வெளி ஊர் செல்பவர்கள். அதாவது தமிழகத்தில் மொத்தம் ஐயாயிரத்திற்கும் குறைவானவர்களே. எனவே ”நமக்கு லாபம் இல்லாத ஒன்றை பற்றி ஏன் வருத்தப் பட வேண்டும்” என்று நினைத்து இருக்கலாம். மேலும் சென்னையில் (அதுவும் தலைமை செயலகத்தில்) வேலை செய்பவர்கள் இதை ஒரு பொருட்டாகவே மதிப்பது கிடையாது

என்ன பரிந்துரை என்று பார்ப்பதற்கு முன்னர் தற்பொழுதைய நிலை என்னவென்பதை பார்ப்போம். ஒரு அரசு ஊழியர் வேறொரு ஊருக்கு அலுவலக ரீதியாக சென்றால் அவருக்கு

  1. பயணப்படியும்
  2. தினப்படியும்

அளிக்கப்படும்

ஒரு அரசு ஊழியர் எதற்காக வெளியூர் செல்வார்

  1. பயிற்சி, கருத்தரங்கு
  2. ஆய்விற்காக
  3. சில திட்டங்களில் வேலை செய்யும் அலுவலர்கள் தகவல் மற்றும் களநிலவரம் குறித்து அறிய செல்வது
  4. தபால் அளிக்க, விண்ணப்ப படிவங்கள் வாங்க, மாதிரிகள் அளிக்க (கடைநிலை ஊழியர்களே பெரும்பாலும் இப்பணிக்கு அனுப்பப்படுவார்கள்)

பயிற்சி, கருத்தரங்கு போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது பயணப்படி, தினப்படி ஆகியவை அங்கேயே தரப்படும். மேலும் தங்குமிடம் மற்றும் உணவும் பயிற்சி நடக்கும் இடத்திலேயே தரப்படும். அப்படி தரப்படாமல் கூட சில பயிற்சிகள் நடக்கும். ஆனால் பெரும்பாலும் பயிற்சிகளில் தங்குமிடம் மற்றும் உணவு ஒரு பிரச்சனையாக இருக்காது

எனவே இந்த சிக்கலில் அதிகம் பாதிக்கப்படுவது களநிலவரம் குறித்து அறிய செல்லும் அலுவலகர்களும், கடைநிலை ஊழியர்களும்தான்.

கிளை அலுவலகத்திலிருந்து முதன்மை அலுவலகத்திற்கு வரும் கடைநிலை ஊழியர்களின் பாடு மிகவும் பரிதாபத்திற்குரியது. உதாரணமாக விண்ணப்பங்கள், மாதிரிகள், பணிக்கொடை படிவங்கள் போல் என்னவென்றாலும் இவர்கள் சென்னை வந்து அதை எடுத்து போக வேண்டும்

அதாவது மதுரையிலிருக்கும் மாவட்ட கல்வி அலுவலர் / முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு தேவையான விண்ணப்பங்களை தபாலிலோ அல்லது பிற வகைகளிலோ அனுப்பலாம். ஆனால் எதையும் கடைசி நேரத்திலேயே செய்து பழக்கப்பட்ட நம் மக்கள் கடைசி நேரத்தில் ஒரு ஊழியரை கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரச்சொல்லி படிவங்களை எடுத்து வரச்சொல்வார்கள்.

உதாரணமாக ஒரு படிவத்தை ஏப்ரல் 20ஆம் தேதிமுதல் விநியோகம் செய்ய வேண்டும் என்றால், அதை ஏப்ரல் 10ஆம் தேதி அச்சிட்டு தபாலில் அனுப்பலாம். ஆனால் ஏப்ரல் 18ஆம் தேதி அச்சிட்டு தபாலில் அனுப்பினால் 20ஆம் தேதி அந்த படிவத்தை கேட்டு வருபவரிடம் எப்படி அளிப்பது. அதனால் 17ஆம் தேதி தொலைபேசி மூலம் “உங்கள் அலுவலகத்திலிருந்து கடிதத்துடன் ஒருவரை அனுப்புங்கள்” என்று எளிதாக கூறிவிடுவார்கள்.

உடனடியாக மதுரையிலிருக்கும் அலுவலக கடைநிலை ஊழியர் ஒருவரை சென்னை வரச்சொல்வார்கள். அதற்கு அவருக்கு அளிக்கப்படுவது ரயிலில் இரண்டாம் வகுப்பு கட்டணமும் ஒரு நாளைக்கு 75 ரூபாயும் மட்டுமே. இந்த 75 ரூபாயில்தான் அவர்

  • 3 வேளையும் சாப்பிட வேண்டும்
  • நகர் பேருந்து அல்லது ஆட்டோவில் செல்ல வேண்டும்
  • தங்குமிடம் பார்க்க வேண்டும்

அதே போல் ஆய்விற்கு செல்லும் அதிகாரிகளுக்கும் சாப்பாடு மற்றும் தங்குமிடத்திற்கு 100 ரூபாய்தான். (”எனக்கு தெரியுமே, ஆய்விற்கு வருபவர்களுக்கு நாங்கள் தான் ஹோட்டலில் ரூம் போடுவோம்” அப்படி நினைப்பவர்ளுக்கு .... அதுவெல்லாம் விதிவிலக்கு - விதி வேறு)

அதே போல் பிற அலுவலகர்களும். விடுதியில் தங்குவது கட்டுப்படி ஆகாது என்பதால் ஏதாவது சொந்தக்காரர் வீட்டில் தங்க வேண்டும், அல்லது நண்பர்கள் வீட்டில் இடம் பார்க்க வேண்டும்

மருத்துவர்களை பொறுத்த வரை மருத்துவ கல்லூரிகள் இருக்கும் ஊர்கள் என்றால் பிரச்சனையே கிடையாது. கண்டிப்பாக நமது வகுப்பு தோழர், மூத்தவர் (சீனியர்), இளையவர் (ஜூனியர்) யாரவது இருப்பார்கள். நேராக கல்லூரி விடுதிக்கு சென்று விடுவோம். விடுதியில் தங்காதவர் அந்த விடுதியில் குளித்தால் இ.பி.கோ (அல்லது இ.த.ச இந்திய தண்டனை சட்டம்) விதிகளின் படி குற்றமா என்று தெரியவில்லை :) :)

நாம் செல்ல வேண்டிய அலுவலகமும் நம் உறவினர் வீடும் அருகில் இல்லையென்றாலோ, நாம் செல்லும் ஊரில் நம் உறவினர் / நண்பர் வீடு எதுவும் இல்லை என்றாலோ இரயில்நிலையங்களிலோ, பேரூந்து நிலையங்களிலோ அல்லது நாம் செல்லும் அலுவலகத்திலோ குளிக்க வேண்டியது தான்.

தொடர்வண்டி நிலையங்களில் உள்ள அறைகள் நன்றாக பராமரிக்கப்படுவதால் நான் பெரும்பாலும் அவைகளை தான் தேர்ந்தெடுப்பேன். (என் பரிந்துரை : ஒரு / இருநாள் பயணமாக வெளியூர் செல்லும் போது தொடர்வண்டியில் சென்றால் இந்த அறைகளை பயன்படுத்துங்கள். அறை பராமரிப்பு நன்றாக இருந்தால் அந்த நிலைய மேலாளரிடம் இருக்கும் புத்தகத்தில் பாராட்டி எழுதுங்கள். அறை பராமரிப்பு நன்றாக இல்லை என்றாலும் கண்டிப்பாக அதையும் எழுதுங்கள்)

அல்லது அன்று மாலையே திரும்ப வேண்டிய ஒரு நாள் பயணம் மட்டும் என்றால் செல்லவேண்டிய அலுவலகத்திற்கு 9 மணிக்கு முன்னர் சென்று அடையாள அட்டையை காட்டி அங்கிருக்கும் குளியலறையை பயன்படுத்தி குளித்து விடுவேன்.

சில கில்லாடிகள் ரயிலிலேயே (அலம்புக் கிண்ணத்தில் வரும் தண்ணீரை ஒரு கோப்பையில் பிடித்து ) குளித்து விடுவார்கள். இந்த முறையை நான் இது வரை இதை முயன்று பார்த்தது கிடையாது !!


(அலம்புக் கிண்ணம், கழுவற்கிண்ணம், கழுவு தொட்டி, கைத் தொட்டி, கழுவும் தொட்டி, அலம்பகல், கை அலம்பும் கோப்பை ஆகியவை வாசு பேசின் என்ற ஆங்கில சொல்லிற்கு பொருத்தமான தமிழ் பதங்கள்)


இப்படி பட்டவர்களுக்கு ஆறாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் மிகப்பெரிய நிவாரணம்

Pay Range
சம்பளம்
Travel entitlements
பயண முறை
For posts in the grade pay of Rs.9000 and above
9000க்கு மேல் தரச்சம்பளம்
  • J Class by air/AC First Class by train
  • விமானத்தில் J வகுப்பு
  • இரயிலில் குளிர்சாதன முதல் வகுப்பு
For posts carrying grade pay from Rs.6600 to Rs.8400
6600 முதல் 8400 வரை தரச்சம்பளம்
  • Y Class by air/AC First Class by train
  • விமானத்தில் Y வகுப்பு
  • இரயிலில் குளிர்சாதன முதல் வகுப்பு
For posts carrying grade pay from Rs.5400 to Rs.6500
5400 முதல் 6500 வரை தரச்சம்பளம்
  • Y Class by air/AC II Tier Class by train
  • விமானத்தில் Y வகுப்பு
  • இரயிலில் குளிர்சாதன இரண்டடுக்கு
For posts carrying grade pay from Rs.4200 to Rs.4800
4200 முதல் 4800 வரை தரச்சம்பளம்
  • AC II Tier Class by train
  • இரயிலில் குளிர்சாதன இரண்டடுக்கு
For posts carrying grade pay of less than Rs.4200
4200க்கு கீழ் தரச்சம்பளம்
  • First Class/AC III Tier/AC Chair Car by train
  • இரயிலில் முதல் வகுப்பு
  • இரயிலில் குளிர்சாதன முன்றடுக்கு
  • இரயிலில் குளிர்சாதன நாற்காலி வகுப்பு

இது ஒரு மிகப்பெரிய மாறுதல்

இதை விட பெரிய நிம்மதி - தினப்படி பரிந்துரைகள்

Pay Range சம்பளம் Daily Allowance தினப்படிகள்
For posts in the grade pay of Rs.9000 and above
9000க்கு மேல் தரச்சம்பளம்
  • Reimbursement for Hotel accommodation of up-to Rs.5000 per day;
  • Reimbursement of AC taxi charges of up-to 50 Kms. for travel within the city and
  • Reimbursement of food bills not exceeding Rs.500 per day.
  • ரூபாய் 5000 வரை விடுதி கட்டணம் செலவழித்தது திருப்பிக் கொடுக்கப்படும்
  • குளிருட்டப்பட்ட வாகனத்தில் 50 கிலோமீட்டர் வரை உள்ளூரில் செல்லும் கட்டணம் செலவழித்தது திருப்பிக் கொடுக்கப்படும்
  • ரூபாய் 500 வரை உணவு கட்டணம் செலவழித்தது திருப்பிக் கொடுக்கப்படும்
For posts carrying grade pay from Rs.6600 to Rs.8400
6600 முதல் 8400 வரை தரச்சம்பளம்
  • Reimbursement for Hotel accommodation of up-to Rs.3000 per day;
  • Reimbursement of non- AC taxi charges of up-to 50 Kms. per diem for travel within the city and
  • Reimbursement of food bills not exceeding Rs.300 per day.
  • ரூபாய் 3000 வரை விடுதி கட்டணம் செலவழித்தது திருப்பிக் கொடுக்கப்படும்
  • குளிருட்டப்பட்ட வாகனத்தில் 50 கிலோமீட்டர் வரை உள்ளூரில் செல்லும் கட்டணம் செலவழித்தது திருப்பிக் கொடுக்கப்படும்
  • ரூபாய் 300 வரை உணவு கட்டணம் செலவழித்தது திருப்பிக் கொடுக்கப்படும்
For posts carrying grade pay from Rs.5400 to Rs.6500
5400 முதல் 6500 வரை தரச்சம்பளம்
  • Reimbursement for Hotel accommodation of up-to Rs.1500 per day;
  • Reimbursement of taxi charges of up-to Rs.150 per diem for travel within the city and
  • Reimbursement of food bills not exceeding Rs.200 per day.
  • ரூபாய் 1500 வரை விடுதி கட்டணம் செலவழித்தது திருப்பிக் கொடுக்கப்படும்
  • ரூபாய் 150 வரை வாகன கட்டணம் செலவழித்தது திருப்பிக் கொடுக்கப்படும்
  • ரூபாய் 200 வரை உணவு கட்டணம் செலவழித்தது திருப்பிக் கொடுக்கப்படும்
For posts carrying grade pay from Rs.4200 to Rs.4800
4200 முதல் 4800 வரை தரச்சம்பளம்
  • Reimbursement for Hotel accommodation of up-to Rs.500 per day;
  • Reimbursement of travel charges of up-to Rs.100 per diem for travel within the city and
  • Reimbursement of food bills not exceeding Rs.150 per day.
  • ரூபாய் 500 வரை விடுதி கட்டணம் செலவழித்தது திருப்பிக் கொடுக்கப்படும்
  • ரூபாய் 100 வரை வாகன கட்டணம் செலவழித்தது திருப்பிக் கொடுக்கப்படும்
  • ரூபாய் 150 வரை உணவு கட்டணம் செலவழித்தது திருப்பிக் கொடுக்கப்படும்
For posts carrying grade pay of less than Rs.4200
4200க்கு கீழ் தரச்சம்பளம்
  • Reimbursement for Hotel accommodation of up-to Rs.300 per day;
  • Reimbursement of travel charges of up-to Rs.50 per diem for travel within the city and
  • Reimbursement of food bills not exceeding Rs.100 per day.
  • ரூபாய் 300 வரை விடுதி கட்டணம் செலவழித்தது திருப்பிக் கொடுக்கப்படும்
  • ரூபாய் 50 வரை வாகன கட்டணம் செலவழித்தது திருப்பிக் கொடுக்கப்படும்
  • ரூபாய் 100 வரை உணவு கட்டணம் செலவழித்தது திருப்பிக் கொடுக்கப்படும்

இவ்வளவு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பரிந்துரை பற்றி யாரும் பேசாதது ஏன் என்று தெரியவில்லை ???

Friday, March 28, 2008

ஆறாவது ஊதிய குழு பரிந்துரைகள் -3- விடுமுறைகள்

ஆறாவது ஊதிய குழு பரிந்துரைகள் குறித்த தொடர் பதிவுகளில் இது மூன்றாவது பதிவு. முதல் பதிவை இங்கும் மற்றும் இரண்டாவது பதிவை இங்கும் காணலாம்

ஆறாவது ஊதியக்குழுவின் மற்றுமொரு முக்கிய பரிந்துரை - அரசு அலுவலகங்களின் விடுமுறை நாட்கள் 3 ஆக குறைக்கப்பட்டுள்ளது

சனி, ஞாயிறு ஆகிய நாட்களை தவிர சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே அரசு அலுவலகங்கள் மூடி இருக்கும்.

பிற நாட்களில் அரசு அலுவலகங்கள் திறந்து இருக்கும்.

அதே போல Restricted Holidays 2லிருந்து 8 ஆக உயர்த்தப்படுகிறது (தமிழகத்தில் RH 3 நாட்கள் உண்டு)

அதே நேரத்தில் ஏதாவது 2 பண்டிகை நாட்களுக்கு முழு அலுவலகத்தையும் மூட துறைத்தலவருக்கு அதிகாரம் உள்ளது. இந்த இரு நாட்களும் ”local considerations” அடிப்படையில் தீர்மானிக்கப்படும்

என்ன சொல்ல வருகிறார்கள் என்று புரியவில்லை, ஆனால் நான் நினைப்பது என்னவென்றால்
  • தமிழகத்தில் உள்ள வருமான வரி அலுவலகம் பொங்கலன்று மூடியிருக்கும், ஓனம் , ஹோலி அன்றெல்லாம் திறந்திருக்கும்
  • கேரளத்திலுள்ள வருமான வரி அலுவலகம் ஓனமன்று மூடியிருக்கும், பொங்கல், ஹோலி அன்றெல்லாம் திறந்திருக்கும்
  • வட இந்தியாவில் ஹோலி அன்று மூடுவார்கள்
அப்படித்தான் நினைக்கிறேன் :) :)

இது போல் அலுவலகம் மூடும் தினங்களில் அனைவரும் Restricted Holidays துய்த்ததாக கருதப்படுவார்கள்.

ஊதியக்குழுவின் பரிந்துரைகள் குறித்த இந்த இடுகை தொடரின் அடுத்த இடுகைகள்

கல்லூரி கதைகள் : 1 : வெகுளி, அப்பாவி, ”பேக்கு”,விகல்பமின்மை

வெகுளித்தனம், அப்பாவி, “பேக்கு”, விகல்பமின்மை , போன்ற பதங்களை கேட்கும் பொழுதோ அல்லது வாசிக்கும் பொழுது எனக்கு கல்லூரியில் முதல் வருடம் நடந்த இந்த சம்பவம் ஞாபகத்திற்கு வரும் !!!

கல்லூரியில் சேர்ந்த புதிதில் அனைவரும் அப்பாவியாக இருந்த சமயம் .... உடற்கூறியல் பேராசிரியர் தொடர்ந்து மூன்று மணிநேரம் வகுப்பெடுப்பார். இடையே கேள்விகள் வேறு பாய்ந்து வரும். பதில் சொல்லாவிட்டால் தண்டனையாக அந்த பாடப்பகுதி முழுவதையும் ”க்ரே அனாடமி” புத்தகத்திலிருந்து நின்று கொண்டே 5 முதல் 10 தடவை மீண்டுமீண்டெழுது தண்டம் (இம்போசிசன்) எழுத வேண்டும், அதுவும் புத்தகத்தை சுமந்து கொண்டே. நின்றவாரே சுமார் 3000 பக்கம் உள்ள A4 அளவு புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு அதிலிருந்து இரண்டு பக்கம் அளவுள்ள பாடத்தை 10 முறை எழுதுவது என்பது எப்படி என்று கற்பனை செய்து கொள்ளுங்கள் :( :(

அதிலிருந்த தப்பிக்க சுலபமான மற்றும் ஒரே வழி, வகுப்பில் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஒழுங்காக பதில் கூறுவது. ஒழுங்காக பதில் கூற இரு வழிகள். ஒன்று உடற்கூறியல் முழுவதையும் படித்து கரைத்து குடிப்பது. இரண்டாவது வழி, நடத்தப்படும் பாடத்தை ஒழுங்காக கவனிப்பது :) :) இதில் எது நம்மால் செய்யக்கூடியது என்பதை முடிவு செய்வது எளிதுதானே.... எனவே வகுப்பு நடக்கும் பொழுது யாரும் அங்கு இங்கு திரும்ப மாட்டார்கள். கரும்பலகையும், புத்தகமும், பேனாவுமாக கர்மமே கண்ணாக மூன்று மணி நேரம் அமர்ந்திருப்பார்கள். அதன் பின் நடக்கும் வகுப்புகளில் இந்த மாதிரி மீண்டுமீண்டெழுது தண்டம் இல்லையென்பதால், அடுத்து நடக்கும் வகுப்புகளில் கவனம் சிதறுவது இயற்கையே....

அவ்வாறு நடத்தப்படும் எலும்பியல் (ஆஸ்டியாலஜி), திசுவியல் (ஹிஸ்டாலஜி), கதிரியல் (ரேடியாலஜி) போன்ற வகுப்புகளில் பெரும்பாலும் அரட்டை நடக்கும். பேராசிரியரை தவிர இதர விரிவுரையாளர்கள் இந்த வகுப்புகளை எடுத்ததும், இந்த பாடங்கள் முதல் வருடம் பரிட்சையில் முக்கியத்துவம் இல்லாது இருந்ததும், மற்றும் மூன்று முதல் மூன்றரை மணிநேரம் ஒரு வகுப்பில் உட்கார்ந்து இருந்து கவனித்ததால் ஏற்படும் களைப்புமாக இந்த வகுப்புகள் சல சல என்றே இருக்கும்.

அப்படி பட்ட வகுப்பில் ஒரு நாள் ஒரு விரிவுரையாளர் படம் வரைந்து விளக்கி கொண்டிருந்தார். வழக்கம் போல் அரட்டை நடந்து கொண்டிருந்தது. அவரும் அவ்வப்போது சத்தம் அதிகம் வரும் திசையை பார்த்து முறைப்பார். முறைத்தவுடன் அந்த இடத்தில் அமைதி வரும். கொஞ்ச நேரம் கழித்து மறுபடி சல சல என்று சத்தம் ஆரம்பிக்கும்.

இப்படியாக நடந்து கொண்டிருந்த வகுப்பில் படம் வரைந்து கொண்டிருக்கையில் விரிவுரையாளர் கரும்பலகையில் அவர் வரைந்த படத்தில் ஒரு சிறு தவறு செய்து விட்டார். படத்தை தொடரும் பொழுது அந்த தவறை கண்டு பிடித்து சிறிது நேரம் நிதானித்து முழு படத்தையும் வெகு சகஜமாக (அடுத்த படம் வரைய கரும்பலகையை தயார் செய்வது போல்) அழித்து விட்டு திரும்புகையில் எனக்கு பின் வரிசையில் இருந்த என் வகுப்பு தோழர்கள் ”கினி பிக் ஜோக்” (இது பற்றி பிறகு பார்ப்போம். இது U ஜோக்தான்) ஒன்று கூறி சிரித்துக்கொண்டிருந்தார்கள்.

விரிவுரையாளர் மிகுந்த கோபத்துடன் “எக்ஸ்” (பெயர் மாற்றப்பட்டுள்ளது) “ஸ்டாண்ட் அப். யூ ஹவ் டு ஸ்டாண்ட் டில் தி என்ட் அஃப் தி க்ளாஸ்” (எக்ஸ். எழுந்து நில். வகுப்பு முடியும் வரை நீ நின்று கொண்டிருக்க வேண்டும்) என்று கூறவே ஒரே நிசப்தம். எக்ஸ் திருட்டு முழியுடன் மெதுவாக சொன்னான் “ஏன்டா, எல்லாரும் தானே பேசுராங்க, சிரிக்கிறாங்க, பின் என்னை மட்டும் ஏன் நிக்க வைக்கிராங்க”.

நானும் விபரம் இல்லாததால் அவனிடம் “ அது ஒன்னும் இல்லடா, இப்ப அவங்க போர்ட்ல தப்பா வரைஞ்சிட்டாங்க. அப்ப பார்த்து நீ சிரிச்சிட்ட. நீ அவங்க தப்பா வரைஞ்சதை கேலி பண்ணுவதாக நினைச்சு ஒன்ன நிக்க வைச்சுட்டாங்க” என்று கூறி விட்டேன். இது என் அனுமானம் தான். உண்மையில் அதற்கு தான் நிற்க வைத்தார்களா என்று எனக்கு தெரியாது. அந்த நிலையில் உண்மை தெரியமல் நான் அப்படி சொல்லி யிருக்க கூடாதுதான் !!!.

அவ்வளவு தான். புத்தருக்கு போதி மரத்தில் ஞானம் பிறந்ததை போல் நம்ம ஆளுக்கு வகுப்பறையில் ஞானம் பிறந்து விட்டது. நேராக முன்னால் சென்று அனைவருக்கும் கேட்கும் என்று கூட கவலைப்படாமல் “மேடம். நீங்க தப்பா வரைஞ்சதுக்கு நான் சிரிக்கவில்லை. நாங்க வேறு ஜோக் சொல்லித்தான் சிரித்தோம்” சொல்ல “கெட் அவுட் ஆஃப் தி க்ளாஸ்” (வகுப்பை விட்டு வெளியே போ) என்று ஒரு இரைச்சல் தான் கேட்டது

வெகுளித்தனம், அப்பாவி, “பேக்கு”, விகல்பமின்மை , போன்ற பதங்களை கேட்கும் பொழுதோ அல்லது வாசிக்கும் பொழுது எனக்கு கல்லூரியில் முதல் வருடம் நடந்த இந்த சம்பவம் ஞாபகத்திற்கு வரும் !!!

Thursday, March 27, 2008

கொஞ்ச(சு)ம் தமிழ் பதங்களும் எண்ணையும் (ஆயிலும் ) தணிக்கைகளும் கணக்குகளும் !!!

நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே இருக்கும் கல்நெய் (பெட்ரோல்) மற்றும் இடீசலு (டீசல்) விலையினால் ஆயில், எண்ணை, அரசு, கணக்கு என்று பலரும் சூடாக விவாதித்து கொண்டிருக்கிறார்கள். எனவே அதற்கு மாற்றாக சூட்டை தணிக்க ஒரு சின்ன கதை. சிலருக்கு இந்த கதை முன்னமே தெரிந்திருக்கலாம். இருந்தாலும் பலருக்கு இது புதிதாக இருக்கும் என்பதால் கூறுகிறேன்.

பெட்ரோல் என்பதை கல்நெய் என்று எழுதும் போது டீசல் ஏன் டீசலாக இருக்கிறது என்று உங்களுக்கு கேள்வி வரலாம். பெட்ரோல் என்பது petr + ol என்ற இரு மூலச்சொற்களிலிருந்து வந்த சொல். petr என்றால் கல், பாறை என்று பொருள். petrology ol னெபத் என்பது எண்ணை / நெய் / கொழுப்பு / மெழுகு ஆகியவற்றை குறிக்கும் சொல். கொழுப்பில் இருக்கும் அமிலங்களை (fatty acids) oleic acid, linoleic acid போன்ற பதங்களை வைத்து அழைப்பதை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்.

அது சரி, ஆங்கிலத்தில் petr + ol என்று இரு மூலங்களை வைத்து ஒரு புது சொல்லை ஏற்றுக்கொள்கிறார்களே. நாம் ஏன் தமிழில் புதிய சொல்லை உருவாக்கி பயன்படுத்த வேண்டும். நாமும் பெட்ரோல் என்றே அழைக்கலாமே என்று கேள்வி உங்களுக்கு தோன்றலாம்

பதில் எளிதானது தான் : ஆங்கிலம் செம்மொழி அல்ல. தமிழ் செம்மொழி. கல் என்ற சொல்லும், எண்ணை / நெய் என்ற மூலச்சொல்லும் ஏற்கனவே தமிழில் உள்ளன. எனவே இவற்றை பயன் ப்டுத்தி புதிய சொற்களை உருவாக்க வேண்டியது நமது கடமை

அது ஏன் சார் கல்நெய், ஏன் மண் நெய் இல்லை என்று கேட்கிறீர்களா. கச்சா எண்ணையிலிருந்து கல்நெய்யுடன் கிடைக்கும் மற்றொரு எரிபொருளுக்கு நாம் ஏற்கனவே மண்ணென்னை என்று பெயர் வைத்து விட்டோமே :) :)

எல்லாம் சரி, டீசல் ஏன் டீசலாகவே (அல்லது இடீசலு ஆக) இருக்கிறது என்றால், அதற்கும் பதில் எளிது தான்.

டீசல் என்பது அதை கண்டுபிடித்தவரின் பெயர். எனவே அதை அப்படியே பயன்படுத்த வேண்டியது தான்

கெரசின் என்ற சொல் மெழுகு என்ற பொருளை தரக்கூடியது

மெழுகு என்பதும் எண்ணை என்பதும் வேதியதில் அடிப்படையில் அருகருகில் இருப்பவை தான்

சற்று உற்று நோக்கினால் மெழுகு என்பது திடப்பொருளையும், எண்ணை என்பது திரவப்பொருட்களையும் குறிப்பதை கண்டுகொள்ளலாம்

ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலும் மெழுகே பயன்படுத்தப்பட்டது. குளிர் காரணமாக அவை திடமாக இருக்கும். இந்தியாவிலோ எண்ணை. வெப்பம் காரணமா அவை திரவமாக இருக்கும்

இதில் மெழுகு என்பதை பிராணிகளின் கொழுப்பு என்றும், எண்ணை என்பதை தாவரங்களிலிருந்து பெறப்படும் கொழுப்பு என்றும் கருதலாம்

தேவாலயங்களில் மெழுகு ஏற்றப்படுவதும், கோயில்களில் எண்ணை ஏற்றப்படும் நடைமுறை வந்ததற்கு பின்னால் அந்த பகுதி தட்ப வெட்ப சூழ்நிலை ஒரு முக்கிய காரணம்

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த கிரேக்கர் மெகசுதனிசு (மெகஸ்தனிஸ்) சீனிப்பாகை பார்த்து தேனி இல்லாமல் தாவரங்களிலிருந்து பெறப்படும் தேன் என்று கூறியது கூட இந்த பிண்ணனியில் தான் (அமர் சித்திர கதைகளில் மெகசுதனிசு கதை ஒன்று உள்ளது. விரைவில் அதை தமிழில் தர பத்ரியும் பாராவும் மனம் வைப்பார்களாக !!)

ஆண்டு இறுதி தணிக்கை

ஒரு அலுவலகத்தில் பல பொருட்கள் இருக்கும். இவைகளை இருப்பு பதிவேடுகளில் எழுதி கணக்கு வைத்திருப்பார்கள். பெரும்பாலும் இருப்பு பதிவேடுகள் மூன்று வகைப்படும்
  1. நிரந்திர பொருட்களுக்கான இருப்பு பதிவேடு - நாற்காலி, மேசை, மின்விசிறி, வாகனம் போன்றவை இதில் வரும்
  2. நுகர்பொருட்களுக்கான இருப்பு பதிவேடு - காகிதம், மை, தபால் அட்டை, போன்றவை இதில் வரும்
  3. பணப்பதிவேடுகள்
அலுவலகங்களில் வருடாந்திர பொருள் தணிக்கை என்று ஒரு நடைமுறை உண்டு. பொதுவாக மார்ச் 31 அன்று பதிவேடுகளில் உள்ள பொருட்கள் உண்மையிலேயே அதே அளவில் அலுவலகத்தில் உள்ளதா, குறைவாக உள்ளதா, அதிகம் உள்ளதா என்பதை எண்ணி சரிபார்க்க வேண்டும்

ஒரு வேளை அலுவலகத்திலிருக்கும் பொருட்களை வீட்டிற்கு எடுத்து சென்றிருந்தால் பதிவேடுகளில் குறிப்பிட்டிருக்கும் அளவைவிட (ஸ்டாக் பேலன்ஸ்) உண்மையில் இருப்பது (கிரொவுண்ட் பேலன்ஸ்) குறையலாம், ஆனால் (வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு எடுத்து வந்தாலொழிய) கூட வாய்ப்பில்லையே என்று சந்தேகம் வருகிறதா....

நியாயமான சந்தேகம் தான். அடுத்த முறை நாளிதழ்களில் வரும் ”ரேஷன் கடையில் வட்டாச்சியர் ஆய்வு” வகை கட்டுரைகளை படித்தால் போதும் :) :) :) உங்களுக்கு புரிந்து விடும். புரியவில்லை என்றால் மறுமொழியில் கேட்கவும்.

சில அலுவலகங்களில் இதற்காக வேறொரு அலுவலகத்தில் இருந்து ஊழியர்களை நியமிப்பார்கள். அப்படி நியமிக்கப்படும் நபர்களில் சிலர் ஆய்வு செய்வது கிடையாது. ஒரிரண்டு பொருட்களை எண்ணி சரி பார்த்து விட்டு எல்லாம் சரி என்று அறிக்கை அனுப்பி விடுவார்கள்.

சில “நொர்நாட்டியம்” (இந்த சொல் எப்படி தோன்றியது என்று யாராவது கூற முடியுமா) புடித்த அதிகாரிகள் உணவு பெட்டியுடன் வந்து உட்கார்ந்து ஒவ்வொரு பொருளாக எண்ணுவார்கள். சிலர் ஆய்விற்கு / தணிக்கைக்கு செல்லும் அலுவலகத்தின் செலவில் உணவை முடிப்பது உண்டு. பலர் உணவுபெட்டியுடன் (டிபன் பாக்ஸ்) வந்து விடுவார்கள்

பெரும்பாலான அதிகாரிகள் நிரந்திர பொருட்களை (மேசை, நாற்காலி, வாகனங்கள்) மற்றும் பணப்பதிவேடுகளை மட்டும் தீவிரமாக சரி பார்த்து விட்டு நுகர்பொருட்களை (எத்தனை காகிதம், எத்தனை மிலி மை இருக்கிறது) கண்டுகொள்வது கிடையாது.

சரி இப்ப நம்ம கதைக்கு வருவோம்

ஒரு அலுவலகத்தில் இப்படி தான் ஆண்டு ஆய்வு நடந்து கொண்டிருக்கையில் ஆய்வு செய்தவரின் கண்ணில் ”இஞ்சின் ஆயில்” என்று ஒரு பதம் பட்டது. அவரும் அது எங்கே என்று கேட்டவுடன் ஒரு டப்பா காண்பிக்கப்பட்டது.



அந்த அலுவலகத்தில் வாகனமோ, மின் ஆக்கியோ (ஜெனரேட்டர் ) இல்லை. (ஜெனெரேட்டர் என்ற சொல்லுக்கு இனையான பிற சொற்களை விக்சனரியில் காணலாம்)

பின் எப்படி வெறும் இஞ்சின் ஆயில் மட்டும் இருக்கிறது என்று குடைந்ததில், பல வருடங்களாக இஞ்சின் ஆயில் பதிவேடுகளில் இருக்கிறது. எந்த வித மாற்றமோ, உபயோகமே இல்லாமல்.

ஆய்விற்கு சென்றவரோ விடாக்கண்டன். அனைத்து பதிவேடுகளையும் தருவித்து விட்டார். அதன் பின் தான் மர்மம் விலகியது. அந்த அலுவலகத்தில் “ஆயில் இஞ்சின்” ஒன்று இருந்திருக்கிறது.



வருடா வருடம் பதிவேட்டில் கணக்கை எழுதும் பொழுது, ஒரு வருடம் (வேறு பக்கத்தில் மாற்றும் பொழுது) “ஆயில் இஞ்சின்” என்பதை “இஞ்சின் ஆயில்” என்று மாற்றி விட்டு ஆயில் இஞ்சினை விற்று (பணத்திற்கோ பேரிச்சம்பழத்திற்கோ யாருக்கு தெரியும்) ஒரு நூறு ரூபாயில் இஞ்சின் ஆயிலை வாங்கி வைத்துவிட்டார்கள் :) :)

பல வருடங்களாக யாரும் கண்டுபிடிக்க வில்லை. அந்த அலுவலகத்திற்கு ஒரு வாகனம் அளிக்கப்பட்டிருந்தால் இது கண்டு பிடிக்கப்படாமலேயே போயிருக்கும் !

எனவே தணிக்கை செய்யும் பொழுது அனைத்து பொருட்களையும் தீர ஆய்வு செய்வது நலம்.

தணிக்கை, மேற்பார்வை குறித்த பயிற்சி வகுப்புகளில் இந்த கதை பெரும்பாலும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் எங்கு, எப்பொழுது நடந்தது என்று தெரிந்தவர்கள் கூறலாம்

Wednesday, March 26, 2008

இடப்பங்கீடு : நிர்வாக குழப்பங்களும் தீர்வுகளும் : 2 : சதவிகித முறை

இடப்பங்கீடு : நிர்வாக குழப்பங்களும் தீர்வுகளும் குறித்த தொடர் பதிவுகளில் இது இரண்டாவது பதிவு. முதல் பதிவை இங்கு காணலாம்

இடப்பங்கீடு வழங்கப்படும் முறைகளிலேயே மிகவும் எளிதான முறை இதுதான். மற்றும் சிக்கல் இல்லாத முறையும் இது தான்

உதாரணமாக

ஒரு மருத்துவக்கல்லூரியில் 200 இடங்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்

அந்த மருத்துவக்கல்லூரி மத்திய அரசின் கீழ் வருகிறது என்றால் அங்கு 22.5 % இடப்பங்கீடு வழக்கத்தில் உள்ளது. (15+7.5)

அதில்
155 இடங்கள் பொது
30 இடங்கள் எஸ்.சி
15 இடங்கள் எஸ்.டி

எனவே மதிப்பெண் பட்டியலில் 1 முதல் 155 இடங்கள் வரை உள்ளவர்களுக்கு இடம் வழங்கப்படும்

அதில் சிலர் கலந்தாய்விற்கு (கவுன்சலிங்) வர வில்லை என்றால் எத்தனை நபர்கள் வரவில்லையோ அத்தனை நபர்கள் காத்திருப்பு பட்டியலில் இருந்து (அதாவது மதிப்பெண் பட்டியலில் 156 முதல்) அழைக்கப்படுவார்கள். அவர்களுக்கும் இடம் வழங்கப்படும்

பொது பிரிவில் எத்தனை எஸ்.சி. மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்களோ, மதிப்பெண் பட்டியலில் அதற்கு அடுத்து இருக்கும் 30 எஸ்.சி மாணவர்களுக்கு இடம் வழங்கப்படும். அதில் அதில் சிலர் கலந்தாய்விற்கு (கவுன்சலிங்) வர வில்லை என்றால் எத்தனை நபர்கள் வரவில்லையோ அத்தனை நபர்கள் காத்திருப்பு பட்டியலில் இருந்து. அவர்களுக்கும் இடம் வழங்கப்படும்

பொது பிரிவில் எத்தனை எஸ்.டி. மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்களோ, மதிப்பெண் பட்டியலில் அதற்கு அடுத்து இருக்கும் 15 எஸ்.சி மாணவர்களுக்கு இடம் வழங்கப்படும். அதில் அதில் சிலர் கலந்தாய்விற்கு (கவுன்சலிங்) வர வில்லை என்றால் எத்தனை நபர்கள் வரவில்லையோ அத்தனை நபர்கள் காத்திருப்பு பட்டியலில் இருந்து. அவர்களுக்கும் இடம் வழங்கப்படும்.

அந்த 200 இடங்கள் உள்ள மருத்துவக்கல்லூரி தமிழக அரசின் கீழ் வருகிறது என்றால் அங்கு 69 % இடப்பங்கீடு வழக்கத்தில் உள்ளது. (23+3.5+3.5+20+18+1)

அதில்
62 இடங்கள் பொது
46 இடங்கள் பி.சி
07 இடங்கள் முஸ்லிம்
07 இடங்கள் கிருத்தவர்கள்
40 இடங்கள் எம்.பி.சி
36 இடங்கள் எஸ்.சி
02 இடங்கள் எஸ்.டி

எனவே மதிப்பெண் பட்டியலில் 1 முதல் 62 இடங்கள் வரை உள்ளவர்களுக்கு இடம் வழங்கப்படும்

அதில் சிலர் கலந்தாய்விற்கு (கவுன்சலிங்) வர வில்லை என்றால் எத்தனை நபர்கள் வரவில்லையோ அத்தனை நபர்கள் காத்திருப்பு பட்டியலில் இருந்து (அதாவது மதிப்பெண் பட்டியலில் 63 முதல்) அழைக்கப்படுவார்கள். அவர்களுக்கும் இடம் வழங்கப்படும்

பொது பிரிவில் எத்தனை பி.சி. மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்களோ, மதிப்பெண் பட்டியலில் அதற்கு அடுத்து இருக்கும் 46 பி.சி. மாணவர்களுக்கு இடம் வழங்கப்படும். அதில் அதில் சிலர் கலந்தாய்விற்கு (கவுன்சலிங்) வர வில்லை என்றால் எத்தனை நபர்கள் வரவில்லையோ அத்தனை நபர்கள் காத்திருப்பு பட்டியலில் இருந்து. அவர்களுக்கும் இடம் வழங்கப்படும்

பொது பிரிவில் எத்தனை முஸ்லிம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்களோ, மதிப்பெண் பட்டியலில் அதற்கு அடுத்து இருக்கும் 7 முஸ்லிம் மாணவர்களுக்கு இடம் வழங்கப்படும். அதில் அதில் சிலர் கலந்தாய்விற்கு (கவுன்சலிங்) வர வில்லை என்றால் எத்தனை நபர்கள் வரவில்லையோ அத்தனை நபர்கள் காத்திருப்பு பட்டியலில் இருந்து. அவர்களுக்கும் இடம் வழங்கப்படும்


பொது பிரிவில் எத்தனை கிருத்தவ மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்களோ, மதிப்பெண் பட்டியலில் அதற்கு அடுத்து இருக்கும் 7 கிருத்தவ மாணவர்களுக்கு இடம் வழங்கப்படும். அதில் அதில் சிலர் கலந்தாய்விற்கு (கவுன்சலிங்) வர வில்லை என்றால் எத்தனை நபர்கள் வரவில்லையோ அத்தனை நபர்கள் காத்திருப்பு பட்டியலில் இருந்து. அவர்களுக்கும் இடம் வழங்கப்படும்

பொது பிரிவில் எத்தனை எம்.பி.சி. மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்களோ, மதிப்பெண் பட்டியலில் அதற்கு அடுத்து இருக்கும் 40 எம்.பி.சி. மாணவர்களுக்கு இடம் வழங்கப்படும். அதில் அதில் சிலர் கலந்தாய்விற்கு (கவுன்சலிங்) வர வில்லை என்றால் எத்தனை நபர்கள் வரவில்லையோ அத்தனை நபர்கள் காத்திருப்பு பட்டியலில் இருந்து. அவர்களுக்கும் இடம் வழங்கப்படும்

பொது பிரிவில் எத்தனை எஸ்.சி. மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்களோ, மதிப்பெண் பட்டியலில் அதற்கு அடுத்து இருக்கும் 36 எஸ்.சி மாணவர்களுக்கு இடம் வழங்கப்படும். அதில் அதில் சிலர் கலந்தாய்விற்கு (கவுன்சலிங்) வர வில்லை என்றால் எத்தனை நபர்கள் வரவில்லையோ அத்தனை நபர்கள் காத்திருப்பு பட்டியலில் இருந்து. அவர்களுக்கும் இடம் வழங்கப்படும்

பொது பிரிவில் எத்தனை எஸ்.டி. மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்களோ, மதிப்பெண் பட்டியலில் அதற்கு அடுத்து இருக்கும் 2 எஸ்.டி. மாணவர்களுக்கு இடம் வழங்கப்படும். அதில் அதில் சிலர் கலந்தாய்விற்கு (கவுன்சலிங்) வர வில்லை என்றால் எத்தனை நபர்கள் வரவில்லையோ அத்தனை நபர்கள் காத்திருப்பு பட்டியலில் இருந்து. அவர்களுக்கும் இடம் வழங்கப்படும்

இந்த முறையின் சாதகங்கள்
  • இது தான் மிக எளிய வழி, மற்றும் சிக்கலே இல்லாத வழியும் கூட.
இந்த முறையின் பாதகங்கள்
  • பல இடங்கள் இருந்தால் இந்த முறையை கடைபிடிக்கலாம். ஆனால் இடங்கள் குறைவாக உள்ள நேரங்களில் இந்த முறையை கடைபிடித்தால் குழப்பமே.
இந்த முறையால் ஆதாயம் / பாதிப்பு
  • இந்த முறையில் எந்த பிரிவினருக்கும் பாதிப்போ ஆதாயமோ கிடையாது
ஆனால் இடங்கள் குறைவாக உள்ள நேரங்களில் சதவிகித முறையை கடைபிடித்தால் குழப்பம் வரலாம். என்வே அதற்கு உபயோகிக்கப்படும் முறைகள்

1. சுழற்சி முறை - அல்லது சுழற்சி முறைப் பட்டியல்
2. 100 புள்ளி முறைப் பட்டியல் முறை. (முறைப் பட்டியல் = Roster)

அடுத்த இடுகையில் சுழற்சி முறை குறித்து பார்ப்போம்

பி.கு : இடப்பங்கீடு : நிர்வாக குழப்பங்களும் தீர்வுகளும் குறித்த தொடர் பதிவுகளில் இது இரண்டாவது பதிவு. முதல் பதிவை இங்கு காணலாம். உங்களுக்கு தோன்றும் சந்தேகங்கள் பலவற்றுக்கு முதல் பதிவிலோ அல்லது அதில் உள்ள பின்னூட்டங்களிலோ விடை இருக்கலா. எனவே அதையும் ஒரு முறை படியுங்களேன்

இங்கு புதைக்க வேண்டாம் !!

ஒரு கணவனும் மனைவியும் பல இடங்களுக்கு புனித யாத்திரை செல்கிறார்கள். அப்படி செல்லும் போது ஜெருசலேமில் எதிர்பாராத விதமாக திடீரென மனைவி இறந்து விடுகிறார். அங்குள்ள போலிஸ்காரர் சொல்கிறார் “இங்கேயே புதைக்க வேண்டுமென்றால் 1000 ரூபாய் தான் ஆகும். உங்கள் ஊருக்கு அனுப்பி அங்கு நீங்கள் புதைக்க வேண்டுமென்றால் 20000 ரூபாய் ஆகும்”

அதற்கு கணவன் சொல்கிறார் “இங்கு புதைக்க வேண்டாம். 20000 ரூபாய் தருகிறேன். ஊருக்கு அனுப்பி விடுங்கள்”

போலிஸ்காரருக்கு ஆச்சரியம். “உங்களுக்கு உங்கள் மனைவி மீது அவ்வளவு பிரியமா” என்று கேட்கிறார்.

அதற்கு பதில் “2000 வருடங்களுக்கு முன்னர் இங்கு ஒருவரை புதைத்தார்கள். அவர் திரும்ப வந்து விட்டார். நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை”

Tuesday, March 25, 2008

ஆறாவது ஊதிய குழு பரிந்துரைகள் -2- வருடாந்திர ஊதிய உயர்வு

ஆறாவது ஊதிய குழு பரிந்துரைகள் குறித்த தொடர் பதிவுகளில் இது இரண்டாவது பதிவு. முதல் பதிவை இங்கு காணலாம்

இந்த பதிவு வருடாந்திர ஊதிய உயர்வு பற்றி

முதலில் அடிப்படை சம்பளம் என்றால் என்ன, காலமுறை ஊதியம் என்றால் என்ன என்பது குறித்து பார்ப்போம்

ஒருவரின் Scale of Pay 5500-175-9000 என்றால் என்ன ??

அப்படி என்றால் அவர் பணியில் சேரும் பொழுது முதலில் அளிக்கப்படும் அடிப்படை சம்பளம் 5500

இது தான் அடிப்படை. இதை வைத்து தான் அவரின் அகவிலைப்படி (பழைய பெயர் பஞ்சப்படி - Dearness Allowance - DA), Dearness Pay, வீட்டு வாடகை, பிறப்படிகள், அவர் வெளியூர் சென்றால் வழங்கப்படும் தினப்படி எல்லாம் தீர்மானிக்கப்படும்.

175 என்பது அவரின் வருடாந்திர ஊதிய உயர்வு (Increment)

9000 என்பது இந்த அடுக்கில் அவர் 20 வருடம் பணிஉயர்வு இன்றி இருந்தால் பெறக்கூடிய சம்பளம்

அதாவது பணியில் சேரும் பொழுது அடிப்படை சம்பளம் 5500
ஒரு வருடம் கழித்து 5675
இரு வருடங்கள் கழித்து 5850
மூன்று வருடங்கள் கழித்து 6025
நான்கு வருடங்கள் கழித்து 6200
ஐநது வருடங்கள் கழித்து 6375
ஆறு வருடங்கள் கழித்து 6550
ஏழு வருடங்கள் கழித்து 6725
எட்டு வருடங்கள் கழித்து 6900
ஒன்பது வருடங்கள் கழித்து 7075
பத்து வருடங்கள் கழித்து 7250
11 வருடங்கள் கழித்து 7425
12 வருடங்கள் கழித்து 7600
13 வருடங்கள் கழித்து 7775
14 வருடங்கள் கழித்து 7950
15 வருடங்கள் கழித்து 8125
16 வருடங்கள் கழித்து 8300
17 வருடங்கள் கழித்து 8475
18 வருடங்கள் கழித்து 8650
19 வருடங்கள் கழித்து 8825
இருபது வருடங்கள் கழித்து 9000

இதை ஏன் இப்படி விலாவாரியாக கூற வேண்டும் என்று நினைக்கிறீர்களா

கால முறை ஊதியம் (Time Scale of Pay) என்றாலே என்னவென்று தெரியாமல், அது குறித்து தவறான தகவல்கள் சில பதிவுகளில் பரப்ப படுகின்றன. என்வே யாரும் குழம்ப வேண்டாம் என்று தான் இவ்வளவு பெரிய விளக்கம்

சரி, 5500 அடிப்படை ஊதியத்தில் பணி சேரும் ஒருவர் முதல் வருடம் கழித்து 175 ஊதிய உயர்வு பெறுகிறார் என்றால் 6500 அடிப்படை சம்பளத்தில் சேறுபவர் எவ்வளவு பெறுவார். ரூபாய் 200

கீழே உள்ள அட்டவனையில் தரப்பட்டுள்ள விகிதத்தை பாருங்கள்


S-1*2550-55-2660-60-3200
S-2* 2610-60-3150-65-3540
S-2A* 2610-60-2910-65-3300-70-4000
S-3* 2650-65-3300-70-4000
S-4 2750-70-3800-75-4400
S-5 3050-75-3950-80-4590
S-6 3200-85-4900
S-7 4000-100-6000
S-8 4500-125-7000
S-9 5000-150-8000
S-10 5500-175-9000
S-11 6500-200-6900
S-12 6500-200-10500
S-13 7450-225-11500
S-14 7500-250-1200
S-15 8000-275-13500
S-16 9000
S-17 9000-275-9550
S-18 10325-325-10975
S-19 10000-325-15200
S-20 10650-325-15850
S-21 12000-375-16500
S-22 12750-375-16500
S-23 12000-375-1800
S-24 14300-400-18300
S-25 15100-400-18300
S-26 16400-450-20000
S-27 16400-450-20900
S-28 14300-450-22400
S-29 18400-500-22400
S-30 22400-525-24500
S-31 22400-600-26000
S-32 24050-650-26000

இதில் முதல் வரிசயில் உள்ளது ”கிரேடு”
அடுத்த வரிசையில் உள்ளது காலமுறை ஊதியம்

அதில் S-6 முதல் அ-ஆ-இ என்று இருப்பதில்
அ - முதலில் - பணியில் சேரும் போது வழங்கப்படும் அடிப்படை ஊதியம்
ஆ - வருடாந்திர ஊதிய உயர்வு
இ - 20 வருடம் கழித்து பெரும் அடிப்படை ஊதியம்

அதில் S-1* முதல் S-5 வரை அ-ஆ-இ-ஈ-உ என்று இருப்பதில்
அ - முதலில் - பணியில் சேரும் போது வழங்கப்படும் அடிப்படை ஊதியம்
ஆ - முதல் சில வருடங்கள் அளிக்கப்படும் வருடாந்திர ஊதிய உயர்வு
இ - சில வருடம் கழித்து பெரும் அடிப்படை ஊதியம்
ஈ - அடுத்த சில வருடங்கள் அளிக்கப்படும் வருடாந்திர ஊதிய உயர்வு
உ - சில வருடம் கழித்து பெரும் அடிப்படை ஊதியம்

இது தான் கால முறை ஊதியத்தில் உள்ள எண்களின் அர்த்தம். சிலர் பொய் பிராச்சாரம் செய்வது போல் Time Scale of Pay ல் இருக்கும் எண்களுக்கும் Dearness Pay, Dearness Allowanceக்கும் சம்மந்தம் இல்லை :) :) :) அதாவது 8000-275-13500 என்ற காலமுறை ஊதியத்தில் பணி அமர்த்தப்படுபவரின் DPக்கும் DAகும் 13500 என்ற எண்ணுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை :) :) :) மேலும் DA என்பது வருடம் வருடம் மாறுபடும். அதனால் தான் பணியிடங்களுக்கான விளம்பரங்களில் மொத்த சம்பளம் குறிப்பிடப்படுவது கிடையாது. Scale of Pay மட்டுமே குறிப்பிடுவார்கள். இது குறித்து விளக்கமாக மற்றுமொரு இடுகையில் பார்ப்போம்

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தும் ஐந்தாவது ஊதியக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தற்பொழுது கடைபிடிக்கப்படும் நடைமுறைகள்

அப்படி யென்றால் ஐந்தாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி ஒரு அரசு ஊழியருக்கு வருடம் தோறும் அளிக்கப்படும் ஊதிய உயர்வு எவ்வளவு சதவிகிதம்

அடிப்படை சம்பளம் வருடாந்திர ஊதிய உயர்வு சதவிதம்
3200 85 2.66
4000 100 2.50
4500 125 2.78
5000 150 3.00
5500 175 3.18
6500 200 3.08
6500 200 3.08
7450 225 3.02
7500 250 3.33
8000 275 3.44
9000 275 3.06
10325 325 3.15
10000 325 3.25
10650 325 3.05
12000 375 3.13
12750 375 2.94
12000 375 3.13
14300 400 2.80
15100 400 2.65
16400 450 2.74
16400 450 2.74
14300 450 3.15
18400 500 2.72
22400 525 2.34
22400 600 2.68
24050 650 2.70

ஆறாவது ஊதியக்குழு என்ன சொல்கிறது : வருடாந்திர ஊதிய உயர்வு 2.5 சதவிகிதம் என்கிறது. ஏற்கனவே அளிக்கப்படும் வருடாந்திர ஊதிய உயர்வு என்ன என்பது மேலே உள்ள அட்டவனையில் பார்த்தால் தெரியும்

வழக்கமாக ஊதியக்குழு பரிந்துரை அளிக்கப்பட்டவுடன் பொதுமக்களளிடமிருந்துதான் பெருமூச்சு வெளிப்படும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக இந்த முறை அறிக்கை அளிக்கப்பட்ட அன்றே அரசு ஊழியர்கள் தரப்பில் மற்றும் தொழிற்சங்கங்களின் மத்தியில் இவ்வளவு எரிச்சல், ஆதங்கம், ஏமாற்றம் ஏன் என்பது இப்பொழுது புரியுமே :) :) :)

இதுவரை அளிக்கப்பட்ட சராசரி 3 சதவித ஊதிய உயர்வு குறைக்கப்பட்டு 2.5 சதவிதம் ஆக்கப்பட்டுள்ளது. இது அனைத்து தரப்பு ஊழியர்களுக்கும் இழப்பாகும்.

இந்த இடுகை தொடரின் அடுத்த இடுகைகள்


பி.கு 1: தனியார் நிறுவனங்களில் ஊதிய உயர்வு எத்தனை சதவிதம் என்று நண்பர்கள் கூறினால் உபயோகமாக இருக்கும்

பி.கு 2: ஏதேனும் தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்

Monday, March 24, 2008

லினக்ஸ் தளத்தில் NHM எழுதி / எ கலப்பைக்கு ஈடான மென்பொருள் எது

லினக்ஸ் தளத்தில் NHM எழுதி / எ கலப்பைக்கு ஈடான மென்பொருள் எதுவென்று யாராவது கூற முடியுமா.

BOSS லினக்ஸ் இயங்கு தளத்தில் எந்த மென்பொருளும் இல்லாமல் தமிழில் உள்ளிட முடிகிறது
சுசி லினக்ஸ் எண்டர்பிரைஸ் 10 வது பதிப்பில் தமிழில் எழுத தேவையான மென்பொருள் எது

கணினி வல்லூனர்கள் யாராவது தயவு செய்து உதவுங்கள் :) :)

இடப்பங்கீடு : நிர்வாக குழப்பங்களும் தீர்வுகளும்

இடப்பங்கீட்டில் மூன்று அம்சங்கள் உள்ளன
1. ஒரு பிரிவினருக்கு இடபங்கீடு உண்டா இல்லையா
2. உண்டு என்றால் எத்தனை சதவிகிதம்
3. அந்த சதவிகிதம் எந்த விதமாக அளிக்கப்படுகிறது

இதில் முதல் இரண்டும் அரசால் தீர்மானிக்கப்படுகிறது. அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே இதை தீர்மானிக்கிறார்கள். எத்தனை சதவிகிதம் இடப்பங்கீடு என்பது சட்டமன்றத்திலோ நாடாளுமன்றத்திலோ சட்டமாக இயற்றப்படுகிறது. பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி, வலைப்பதிவு உட்பட அனைத்து ஊடகங்களும் இந்த சதவிகிதத்தை பகுத்து ஆராய்கிறார்கள், கருத்து தெரிவிக்கிறார்கள், சண்டை போடுகிறார்கள்

ஆனால் இதில் மிகவும் முக்கியமான விஷயமான ”இடப்பங்கீடு எந்த விதத்தில் வழங்கப்படுகிறது” என்பது அதிகாரிகளாலேயே தீர்மானிக்கப்படுகிறது. இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. ஊடகங்கலும் கண்டு கொள்வது இல்லை.... இதனால் தான் இந்த மூன்றாவது அம்சத்தில் பல குழப்பங்கள் உள்ளன

உதாரணமாக தமிழக அரசு 69 % இட பங்கீடு வழங்கி வருகிறது. இதில் எந்த குழப்பமும் இல்லை தான். ஆனால்
1. ஒருவர் 12ஆவது வகுப்பு முடித்து தமிழக அரசு மருத்துவக்கல்லூரியில் சேரும் போது இந்த 69 சதவிகிதம் அளிக்கப்படும் முறை வேறு
2. அவர் மருத்துவக்கல்லூரி முடித்து தமிழக அரசு மருத்துவக்கல்லூரியில் பட்ட மேற்படிப்பு (எம்.டி, எம்.எஸ்) சேரும் பொழுது இதே 69 சதவிகிதம் அளிக்கப்படும் முறை வேறு
3. அவர் மருத்துவக்கல்லூரி முடித்து தமிழக அரசு வேலையில் சேரும் பொழுது இதே 69 சதவிகிதம் அளிக்கப்படும் முறை வேறு

என்று கேட்டால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் !!!
ஆனால் அது தான் உண்மை

அதே போல் மத்திய அரசில் 22.5 சதவித இடப்பங்கீடு உள்ளது
1. ஒருவர் 12ஆவது வகுப்பு முடித்து மருத்துவக்கல்லூரியில் சேர மத்திய அரசால் நடத்தப்படும் பி.எம்.பி.டி தேர்வு எழுதும் போது அங்கு இந்த 22.5 சதவிகிதம் அளிக்கப்படும் முறை வேறு
2. அவர் மருத்துவக்கல்லூரி முடித்து பட்ட மேற்படிப்பு (எம்.டி, எம்.எஸ்) சேர மத்திய அரசால் நடத்தப்படும் எ.ஐ.பி.ஜி தேர்வு எழுதும் போது இதே 22.5 சதவிகிதம் அளிக்கப்படும் முறை வேறு
3. அவர் மருத்துவக்கல்லூரி முடித்து மத்திய அரசின் கீழ் வரும் எ.ஐ.ஐ.எம்.எஸ் இல் அல்லது ஜிப்மரில் பட்ட மேற்படிப்பு (எம்.டி, எம்.எஸ்) சேர மத்திய அரசால் நடத்தப்படும் தேரிவில் இதே 22.5 சதவிகிதம் அளிக்கப்படும் முறை வேறு


இதற்கு காரணம் இடப்பங்கீடு அளிக்கப்படும் முறைகள் ஒழுங்கு முறைப்படுத்தப்படவில்லை

ஒவ்வொரு அலுவலகமும் ஒவ்வொரு முறையில் இடப்பங்கீடு அளிக்கிறார்கள். இது குறித்து போதிய விழிப்புணர்வும் இல்லை. இது குறித்து பத்திரிகைகளோ பிற ஊடகங்களோ கண்டுகொள்வதும் இல்லை. 69 சதவிகிதம் என்பதில் காட்டும் அக்கறையை யாரும் அது எந்த முறையில் வழங்கப்படுகிறது என்பதில் காட்டுவது இல்லை

எனவே தான் இதில்

  • சில முறைகள் பொது பிரிவினருக்கு பாதகமாகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு சாதகமாகவும் உள்ளன
  • சில முறைகள் பொது பிரிவினருக்கு சாதகமாகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பாதகமாகவும் உள்ளன
  • சில முறைகள் பொது பிரிவினருக்கு பாதகமாகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் பாதகமாகவும் உள்ளன (இவ்வாறு வர முடியாது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இப்படியும் சில முறைகளை கடைபிடிக்கிறார்கள் என்பது தான் வேதனை)
  • சில முறைகள் பொது பிரிவினருக்கு சாதகமாகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் சாதகமாகவும் உள்ளன (இப்படி ஒரு முறை இருந்தால் அதையே எல்லாவிடத்திலும் கடைபிடிக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் அல்லவா - அப்படி கடைபிடிக்க வேண்டும் என்றால் அது என்ன முறை என்றும் , அது எந்த விதத்தில் அனைவருக்கும் சிறந்தது என்றும், பிற முறைகளில் உள்ள பாதக அம்சங்கள் என்ன என்பதையும் காண்போம்)
இந்த இடுகை தொடரின் அடுத்த இடுகைகள்

ஆறாவது ஊதிய குழு பரிந்துரைகள்

ஆறாவது ஊதிய குழு பரிந்துரைகள்

சில முக்கிய பரிந்துரைகளை மட்டும் பார்ப்போம்

  1. சம்பள உயர்வு 01-01-2006 முதல் அமலுக்கு வருகிறது
  2. 2.5 சதவிகித அல்லது 3.5 சதவிகித வருடாந்திர ஊதிய உயர்வு
  3. 2.5 சதவிகித ஊதிய உயர்வு அனைவருக்கும். 3.5 % ஊதிய உயர்வு நன்றாக வேலை பார்ப்பவர்களுக்கும் (அல்லது நன்றாக வேலை பார்ப்பதாக அலுகவலக தலைவர் நினைப்பவர்களுக்கும் !!)
  4. விட்டு வாடகை படி உயர்வு
  5. பயணப்படி யுடன் வரும் தினப்படி உயர்த்தப்பட்டுள்ளது. ஹோட்டலில் தங்கினால் பில்லைக் காட்டலாம் . அதே உனவு பில்லையும் காட்டலாம் (ஒரு நாள் உணவிற்கு 200 ரூபாய்). இதற்கு முன் ஹோட்டல் + உணவிற்கு வெறும் 75 ரூபாய் தான் !!!
  6. Scale of Payக்கு பதில் Running Pay Bands
  7. 33 வருடம் வேலை பார்க்காவிட்டாலும் முழு ஓய்வுதியம்


அது சரி, சம்பள உயர்வு எவ்வளவு.....

இன்று ஒருவர் 5000-150-8000 Scale of Payல் இருக்கிறார் என்றால், அவருக்கு கிடைக்கும் சம்பளம்

அடிப்படை சம்பளம் : 5000
டியர்னெஸ் சம்பலளம் : 2500
பஞ்சப்படி : 3075
மொத்தம் : 10575
இதன் மேல் வீட்டு வாடகைப்படி, மருத்துவப்படி போன்றவை வரும்

இப்பொழுது ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி (பக்கம் 59) அவர் பெறப்போகும் சம்பளம் 12900

இதன் மேல் வீட்டு வாடகைப்படி, மருத்துவப்படி போன்றவை வரும்
எனவே எவ்வளவு கூடியுள்ளது என்றால்
12900 - 10575 = 2325

இதே போல் ஒருவர் 8000-275-13500 Scale of Payல் இருக்கிறார் என்றால், அவருக்கு கிடைக்கும் சம்பளம்

அடிப்படை சம்பளம் : 8000
டியர்னெஸ் சம்பலளம் : 4000
பஞ்சப்படி : 4920
மொத்தம் : 16920
இதன் மேல் வீட்டு வாடகைப்படி, மருத்துவப்படி போன்றவை வரும்

இப்பொழுது ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி (பக்கம் 59) அவர் பெறப்போகும் சம்பளம் 19320. இதன் மேல் வீட்டு வாடகைப்படி, மருத்துவப்படி போன்றவை வரும்
எனவே எவ்வளவு கூடியுள்ளது என்றால்
19320 - 16920 = 2400

என்வே பெரும்பான்மையான அரசு ஊழியர்களுக்கு 8 சதவிகிதம் முதல் 20 சதவிகிதம் வரை மட்டுமே அடிப்படை சம்பலம் கூடியுள்ளது. சில ஊடகங்களில் கூறியுள்ளபடி 40 சதவிகிதம் அல்ல. ஊடகங்களில் வரும் செய்திகளை கேட்டு யாரும் குழப்பமடைய வேண்டாம்

இந்த இடுகை தொடரின் அடுத்த இடுகைகள்

Thursday, March 20, 2008

செலவட்டை வைத்திருக்கிறீர்களா... உஷார் !!

கடனட்டை (கிரடிட் கார்ட்) குறித்த மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்து வருவது வரவேற்கத்தக்கது தான். ஆனால் பலரும், முக்கியமாக என்னைப் போல் கணணி கைநாட்டு நபர்களும் நினைத்துக்கொண்டிருப்பது என்னவென்றால், ”கடனட்டை மட்டும் தான் ஆபத்தானது, செலவட்டையில் ஒரு பிரச்சனையும் இல்லை”.

செலவட்டையில் நீங்கள் உங்கள் பணத்தை மட்டும் தான் செலவழிக்க முடியும். வங்கி கணக்கில் பணம் இல்லையென்றால் செலவழிக்க முடியாது. கடனட்டையில் கடன் வாங்கி, அதனால் வீட்டிற்கு ”விருந்தாளிகள்” வரும் வாய்ப்பு செலவட்டையில் இல்லை என்றாலும், இதிலும் சில அபாயங்கள் இருக்கிறது

முக்கியமாக உங்கள் கடனட்டை / செலவட்டை எண் தெரிந்திருந்தால் அதை வைத்து இணையத்தில் சில மோசடிகள் செய்ய முடியும்.

இது குறித்து பலருக்கும் தெரியும். எனவே தான் பலரும் இணையத்தில் கடனட்டை / செலவட்டை எண்ணை உபயோகித்து எந்த வித பணப்பரிமாற்றமும் செய்வதில்லை.

ஆனால் இன்னொரு பூதமும் உள்ளது

காலையில் ஏதோ ஒரு தொலைக்காட்சியில் பார்த்த செய்தி. (எந்த தொலைக்காட்சி என்று ஞாபகம் இல்லை)

கணவன் மனைவி இருவரும் ஒரு உணவகம் சென்று சாப்பிடுகிறார்கள். சாப்பிட்டதும் பணத்தை கடனட்டை வைத்து கொடுக்கிறார்கள். உணவக சிப்பந்தி கல்லாவில் அதை அளிப்பதற்கு முன்னர் அதை ஒரு கருவியில் வைத்து தேய்த்து பின்னர் அதை கல்லாவில் தருகிறார்.

அதன் பின்னர் அந்த கருவியில் பதிவாகியுள்ள அட்டை விபரங்களை வைத்து அவரும் அவரது நண்பர்களும் போலி அட்டை செய்து நகைகள், உடைகள் எல்லாம் வாங்குகிறார்கள். அவர்களின் போதாத நேரம் ஒரு விமான பயணச்சீட்டும் வாங்கி, அதையும் தங்களின் விட்டிற்கு அனுப்ப சொல்ல, அந்த முகவரியை வைத்து காவல் துறை அவர்களை அமுக்குகிறது

என்வே இதிலிருந்து நான் புரிந்து கொண்டது என்னவென்றால், தா.ப.வவிடமுருந்து (தானியங்கி பணம் வழங்கி தா.கா.இடமிருந்து (தானியங்கி காசாளர் இயந்திர - Automated Teller machine - ATM புழக்கத்தில் / நிகண்டில் இதை விட வேறு சொல் இருந்தால் கூறவும்) பணம் எடுப்பதை தவிர பிற விஷயங்களுக்கு செலவட்டையை பயண்படுத்தாமல் இருப்பது உத்தமம்

வேறு பாதுகாப்பு முறைகள் இருந்தால் அறிந்தவர்கள் கூறினால் உபயோகமாக இருக்கும்.

Wednesday, March 19, 2008

வேர்ட் கோப்பை பி.டி.எஃபாக மாற்றுவது எப்படி

மைக்கிரோசாப்டு வேர்டு கோப்பை பி.டி.எஃபாக மாற்றுவது எப்படி

நேர் வழி

1. காசு கொடுத்து அடோபி அக்ரோபட் வாங்கி உஙக்ள் கணினியில் நிறுவ வேண்டும்

உங்கள் கணினியில் வைரஸ் வர வேண்டுமென்றால் செய்ய வேண்டிய வழி

2. அடோபி அக்ரோபட் திருட்டு நகல் (Pirated Copy - சரியான தமிழ் சொல் தெரிந்ஹ்டால் கூறுங்களேன்) வாங்கி உஙக்ள் கணினியில் நிறுவி அதை பதிவு செய்கிறேன் பேர்வழி என்று ஒரு தம்மாத்துண்டு exe கோப்பை செயல்படுத்தினால் போதும். எனவே எக்காரணம் கொண்டும் இந்த வழிமுறையை கடைபிடிக்க வேண்டாம்

பிற வழிகள் - தொடர்ந்து பல கோப்புகளை இப்படி மாற்ற வேண்டுமென்றால்

1. Open Officeயில் அந்த Word கோப்பை திறந்து பின் "File"-->"Export as PDF" தேர்ந்தெடுக்கவும். இது இரு திறந்த மூல இலவச மென்பொருள். என்வே இதை நீங்கள் தரவிறக்கி கொள்ளலாம். www.openoffice.org

2. PrimoPDF முற்றிலும் இலவசம் http://www.primopdf.com/

3. Shakthi Officeயில் அந்த Word கோப்பை திறந்து பின் "File"-->"Save as PDF" தேர்ந்தெடுக்கவும். இது இலவச மென்பொருள் அல்ல. முறைப்படி வாங்க வேண்டும்


தற்காலிக வழிமுறைகள் - ஒரு சில கோப்புகளை மட்டும் மாற்ற வேண்டுமென்றால்

1. கூகிள் கோப்பு மூலமாக : உங்கள் கோப்பை கூளில் கோப்புகளில் ஏற்றி விடுங்கள். http://docs.google.com/?action=updoc பின்னர் அங்கிருந்து பி.டி.எஃபாக சேமிக்கலாம்


நீங்கள் கூகிள் கோப்புகளில் உங்களுக்கான பிரத்யேக முகவரி வைத்திருந்தீர்கள் என்றால், அந்த முகவரிக்கு உங்கள் கோப்பை மின்னஞ்சலாக அனுப்பலாம்



2. Adobe CreatePDF - அடோபி நிறுவனம் வழங்கும் இலவச சேவை. http://www.adobe.com/products/acrobat/access_onlinetools.html

3. Nitro PDF Desktop 1.77 இந்த மென்பொருளை 30 நாட்கள் இலவசமாக உபயோகிக்கலாம். http://www.nitropdf.com/

தொடர்புள்ள பிற பதிவுகள்

Tuesday, March 18, 2008

தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் ஒரு நாள் அடையாள உண்ணவிரதம்

பிற மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவர்களுக்கு மற்றும் மத்திய அரசு பணியில் உள்ள மருத்துவர்களுக்கு இணையாக சம்பள உயர்வு கோரி தமிழ் நாடு அரசு மருத்துவர்கள் 25.03.2008 ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்கிறார்கள் .

இது வேலை நிறுத்தம் அல்ல.  எனவே பணிகள் பாதிக்கப்படாது.

ஒரு சதவிதம் மதிப்பெண் எடுத்தாலே பொது பிரிவில் ஐ.ஐ.டியில் சேரலாம்

இந்த சுட்டியை சொடுக்கவும்

ஒரு சதவிதம் மதிப்பெண் எடுத்தாலே பொது பிரிவில் ஐ.ஐ.டியில் சேரலாம்

Monday, March 17, 2008

இரயில் கட்டணங்கள் அதிகரித்துள்ளனவா, குறைந்துள்ளனவா

இப்பதிவிற்கு தூண்டுகோள் பாஸ்டன் பாலா சார்

ரயில் கட்டணக்களில் கடந்த 4 வருடங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் எவை

1. டெலஸ்கோப்பிங் வசதி நிறுத்தம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் டெலஸ்கோப்பிங் என்று ஒரு வசதி இருந்தது. உதாரணமாக நெல்லை விரைவு வண்டியில் நீங்கள் சென்னை முதல் மதுரை வரை முன்பதிவு செந்துள்ளீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். வண்டி திண்டுக்கல் போகும் பொழுது உங்களுக்கு நெல்லை செல்ல வேண்டும் என்று செல்லிடப்பேசியில் தகவல் வந்தால், நீங்கள் டிக்கெட் பரிசோதகரிடம் டிக்கெட் வாங்கலாம்.

அவர் உங்களிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு டிக்கெட் தருவார்

எவ்வளவு பனம் என்றால் : சென்னை முதல் நெல்லை கட்டணம் - சென்னை முதல் மதுரை கட்டணம். இது தான் டெலிஸ்கோப்பிங்

இப்பவும் (அதாவது இந்த வசதி நீக்கிக்கொள்ளப்பட்டபின்னும் ) உங்களிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு டிக்கெட் தருவார்

எவ்வளவு பனம் என்றால் : மதுரை முதல் நெல்லை கட்டணம்

வழக்கமாக ரயிலில் செல்பவர்களுக்கு இது எவ்வளவு அதிகம் என்று தெரியும்.

2. காத்திருப்பு பட்டியலில் இருந்து ரத்து செய்தால் (சிறிது) பணம் தண்டம்

3. சென்னையில் இருந்து சென்னை முதல் மதுரை முன்பதிவு செய்தால் கட்டணம் 20 ரூபாய். சென்னையில் இருந்து மதுரை முதல் சென்னை வரை முன்பதிவு செய்தால் கட்டணம் 30 ரூபாய். இதில் ஒரு 10 ரூபாய் தண்டம் தண்டம் நமக்கு. லாபம் ரயில்வேக்கு

4. பயண நேரம் ஒரு நிமிடம் கூட குறையாமலே பல ரயில்கள் “சூப்பர் பாஸ்ட்”... அப்படின்னா... நீங்க நான் எல்லோரும் கூட 20 ரூபாய் கொடுக்கனும்

5. லக்கேஜ் கட்டணம் பல மடங்கு உயர்வு. 2003ஆம் வருடம் ஒரு இரு சக்கர வாகனத்தை 50 ரூபாய்க்கு (நாம் அதே ரயிலில் சென்றால்) ரயிலில் திருநெல்வேலியிலிருந்து மதுரைக்கு அனுப்ப முடியும். நான் மதுரையில் படித்து கொண்டிருந்த சமயம் பல முறை நெல்லை முதல் மதிரை வரை மற்றும் மதுரை முதல் நெல்லை வரை குருவாயூர் ரயிலில், அல்லது கோவை ரயிலில் 50 ரூபாய்க்கு கொண்டு சென்றிருக்கிறேன். இப்பொழுது எவ்வளவு என்றுதான் எல்லோருக்கும் தெரியும். இது தான் இப்பொழுது வெளியே தெரிகிறது. எனவே நான் விரிவாக கூறவில்லை

6. இது எல்லாவற்ரையும் விட சூப்பர் டூப்பர் திட்டம் தான் தட்கால்.

ஆரம்பத்தில் ஒரு கூடுதல் பெட்டியை இணைத்து அதில் உள்ள 72 டிக்கெட்களை மட்டும் தட்கால் என்றார்கள்

உதாரணமாக இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி உள்ள பெட்டிகள் 8 இருக்கும் ரயில்களில், S1, S2, S3, S4, S5, S6, S7, S8 உடன் T9 என்று ஒரு பெட்டி

இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி உள்ள பெட்டிகள் 8 இருக்கும் ரயில்களில், S1, S2, S3, S4, S5, S6, S7, S8, S9, S10, S11, S12 உடன் T13 என்று ஒரு பெட்டி

இதில் உள்ள 72 டிக்கெட்களும் பயண தேதிக்கு முன் தினம் முதல் முன்பதிவு செய்யலாம் என்றார்கள். அதாவது 18 மார்ச் நீங்கள் சென்னை முதல் மதுரை செல்ல வேண்டும் என்றால் மார்ச் காலை 8 மணி முதல் முன்பதிவு செய்யலாம். பண்டிகை காலம், மே மாதம் போன்ற நாட்களில் 8:15 டிக்கெட் தீர்ந்த கசப்பான அனுபவம் நீங்களும் பெற்றிருக்கலாம்

இதில் உள்ள சிறப்பம்சங்கள்

1. ரத்து செய்ய முடியாது. (ஆனால் நீங்கள் ஏற வில்லை என்றால் அடுத்த நபருக்கு ஒதுக்கப்படும் !!!)

2. நீங்கள் எங்கு வேண்டுமானாலும் ஏறலாம் எங்கு வேண்டுமானாலும் இறங்கலாம். அதாவது ரயில் நிற்கும் இடங்களில் :) ஆனால் காசு மட்டும் ரயில் கிளம்பும் இடத்தில் இருந்து சேறும் இடம் வரை. உதாரணமாக நிங்கள் செங்கல்பட்டிலிருந்து திண்டுக்கல் செல்ல வேண்டும். கன்னியாகுமரி விரைவு ரயிலில் நீங்கள் சாதாரண டிக்கெட் வாங்கினால் செங்கல்பட்டு முதல் திண்டுக்கல் வரை காசு கொடுத்தால் போதும்.

ஆனால் தட்கலில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை காசு குடுக்க வேண்டும் !!!

நான் அதே நாள் திண்டுக்கல் முதல் கன்னியாகுமரி வரை முன்பதிவு செய்திருந்தேன் என்றால், நம் இருவருக்கும் ஒரே இடம் தான். ஆனால் நானும் முழு (சென்னை முதல் கன்னியாகுமரி வரை) கட்டணம் தர வேண்டும். நீங்களும் முழு கட்டணம் தர வேண்டும். (நான் சென்னை முதல் திண்டுக்கல் என்று பதிவு செய்திருந்தால் சென்னையில் நான் ஏறவில்லை என்றால் அந்த இடம் வேறு ஒருவருக்கு ஒதுக்கப்படும். நீங்கள் செங்கல்பட்டு முதல் கன்னியாகுமரி கேட்டீர்கள் என்றால் இடம் கிடைக்காமல் போகலாம். எனவே இது குறித்து எரிச்சல் இருந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இது புரிய வில்லை என்றால் பின்னூட்டத்தில் கூறவும். விளக்குகிறேன்)

3. ஒரு டிக்கெட் 150 ரூபாய் அதிகம்.

ஆகா... எப்படி பட்ட திட்டம்...

பொறுங்கள்... இன்னும் முடியவில்லை....

திடீரென்று ஒரு நாள் ஒரு அறிவிப்பு.... இனி தட்கல் என்று தனியாக பெட்டி கிடையாது. தட்கல் டிக்கெட்கள் அனைத்து பெட்டிகளிலும் வழங்கப்படும் என்று.. கூடவே 2 நாட்களுக்கு முன்னர் முன்பதிவு செய்யலாம் என்று இருந்ததை 5 நாட்களுக்கு முன்னர் முன்பதிவு செய்யலாம் என்றும் ஆக்கினார்கள்

அதன் பின் தான் விவகாரமே.

முதலில் 72 இடங்களாக இருந்த தட்கல் திடிரென்று 1/3 ஆக மாறி விட்டது. அதாவது 9 படுக்கை பெட்டி கொண்ட ரயிலில் 3 பெட்டிகள் தட்கல். அல்லது 648 இடங்களில் 216 இடங்கள் தட்கல்

அதாவது சாதாரண திட்டத்தில் உள்ள இடங்கள் தட்கலுக்கு மாற்றப்பட்டுள்ளன. என்வே பெறும்பாலான ரயில்களில் சுமார் ஒரு மாதம் முன்னரே அனைத்து டிக்கெட்களும் காலியாகிறது. எனவே வேறு வழியில்லாமல் தட்களில் பதிவு செய்ய வேண்டும்.

தட்கலில் எவ்வளவு கூடுதல் பணம் வருகிறது என்று ஏற்கன்வே பார்த்தோம்.

இப்பொழுது ஒரு சிறு கணக்கு

2203ல் முத்து நகர் விரைவு வண்டியில் தூத்துக்குடி முதல் சென்னை வரை இரண்டாம் வகுப்பு படுக்கை கட்டனம் ரூபாய் 266.

இடங்கள் 8 x 72 = 576
(அனைவரும் சென்னை முதல் தூத்துக்குடி சென்றாலேயே)
மொத்த கட்டணம் = 576 x 266 = 1,53,216

இதில் சூப்பர் பாஸ்ட் என்று கூறி 20 ரூபாய் கூட்டி விட்டார்கள். நேற்று மாலை 7:45க்கு தூத்துக்குடியிலிருந்து கிளம்பி இன்று காலை 8:45க்கு எழும்பூர் வந்தது. நான் வந்ததால் உறுதியாக கூறுகிறேன் (656 கி.மீ - 13 மணி நேரம் - ஒரு மணிக்கு 50 கி.மீ. இதன் பேர் அதி விரைவு வண்டி.. ம்ம்ம்ம்ம் )

இப்ப மொத்தம் உள்ள 648 இடங்களில் 216 இடங்கள் அதாவது தட்கல்.

கட்டனம் : 266 + 20 + 150 = 436
436 x 216 = 94176

பிற இடங்களில் அனைவரும் சென்னை முதல் தூத்துக்குடி சென்றாலேயே
286 x 432 = 123552

கூட்டிப்பாருங்கள்

123552 + 94176 = 217728

மொத்த பயணிகள் = 648

ஒரு பயணி (இரண்டாம் வகுப்பில் முன் பதிவு செய்பவர்) சராசரியாக தரும் தொகை
217728 / 648 = 336

(இதை வேறு விதமாகவும் கூறலாம். முன்றில் ஒருவருக்கு 150 ரூபாய் அதிகம் என்றால் ஒருவருக்கு 50 ரூபாய் அதிகம். எனவே அதிவிரைவு கட்டணம் 20 ரூபாய் + தட்கல் கட்டணம் 50 ரூபாய் = 70 ரூபாய். 266 + 70 = 336)

அதாவது 2003ல் 266 ரூபாயாக இருந்த கட்டணம் இன்று 336 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2008 - 2009 பட்ஜெட்டில் நமது ரயில்வே அமைச்சர் 12 ரூபாய் குறைத்துள்ளார் :) :) :) :)

இது முற்றிலும் ஒரு பயணியின் பார்வையிலிருந்து எழுதப்பட்டது. ரயில்வே நண்பர்கள் ஏதேனும் தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும். திருத்திக்கொள்கிறேன் :) :) :)

Saturday, March 15, 2008

தமிழ் கேபிள் சேனல்களின் அரட்டை நிகழ்ச்சிகள் WWF மாதிரிதானா ???

எனக்கு பல வருடங்களாக ஒரு சந்தேகம். அரட்டை அரங்கம் போன்ற நிகழ்ச்சிகளில் பேசுபவர்கள் தானாக பேசுகிறார்களா, அல்லது எழுதிவைத்து, ஒத்திகை பார்த்து, நேரம் பார்த்து அழுது, நேரம் பார்த்து சிரித்து பேசுகிறார்களா என்று.


சுருங்க சொன்னால், இது பேச்சு போட்டியா, இல்லை நாடகமா (WWF மாதிரி) என்று குழப்பம் பல வருடங்களாகவே உண்டு

அப்பாடா, இப்பொழுது தான் உண்மை தெரிகிறது

நந்தவனம்: அரட்டை மடங்களும், சில அதிர்ச்சி தகவல்களும் -ஜெஸிலா!

Thursday, March 13, 2008

பள்ளிகளில் தமிழ் படிக்காதவர்கள் வெறும் 2 சதவிதம் தானா ??

இலவசக்கொத்தனார் அவர்கள் தனது வலைப்பூவில் கல்வியாளர் முனைவர் வா செ குழந்தைசாமி அவர்களின் நேர்காணலிருந்து சில பகுதிகளை எடுத்து எழுதியிருந்தார். அதில் எனக்கு நெருடலாக தோன்றிய விஷயம்
பள்ளியில் தமிழைப் படிக்காமல் பிற மொழிகளைப் படித்துத் தேர்ச்சி அடைபவர்கள் எத்தனை பேர்? ஏறத்தாழ இரண்டு சதவிகிதம் மட்டுமே. எடுத்துக்காட்டாக, 1995ல் பள்ளி இறுதியாண்டுத் தேர்வு (SSLC) முடித்தவர்கள் 588,059. இவர்களில் தமிழை முதன்மை மொழியாகக் கொண்டு படித்து முடித்தவர்கள் 576,000. மற்ற மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர்கள் 12,059. எந்த ஆண்டும் சதவிகித அடிப்படையில் இது இரண்டைத் தாண்டாது. இந்த சிலர் தமிழ்ப் படிக்காததால் மொழிக்கு என்ன பெரிய தீங்கு நேரிட்டுவிடும்?
ஏதோ நெருடுகிறது.

10 வது வகுப்பை பல வாரியங்களில் எழுதலாம் (boardக்கு தமிழ் வாரியம்தானே !!)

  1. SSLC.
  2. Matriculation.
  3. Anglo Indian.
  4. CBSE.

இதில் Matriculation மற்றும் Anglo Indian படிப்பவர்கள் 10வது முடிந்தபின் மாநில வாரியத்தில் அல்லது CBSEல் தான் 12 படிக்க முடியும்.

SSLCல் தமிழுக்கு பதில் பிற மொழிகளை (உதாரணம் தெலுங்கு, கன்னடம்) மொழியாக படிப்பது தமிழகத்தின் வட மாவட்டங்களில் (தெலுங்கு - திருவள்ளூர், வேலூர்; கன்னடம் - வேலூர், தர்மபுரி, கிருஷ்னகிரி) பிற மாவட்டங்களில் இது கிட்ட தட்ட கிடையாது என்றே கொள்ளலாம்.

தமிழுக்கு பதில் பிற மொழிகளை (உதாரணம் ஹிந்தி) மொழியாக படிப்பது பெரும்பாலும் Matriculation, Anglo Indian, மற்றும் CBSE வாரியங்களில் தான். இது தமிழகம் முழுவதும் உள்ளது. CBSE முறையில் படிப்பவர்கள் பெறும்பாலும் தமிழை தொடுவது கூட கிடையாது.இவர்களுக்கு தமிழ் எழுத்துக்களே தெரியாது. என் கூட மருத்துவக்கல்லூரிகளில் படித்த நண்பர் ஒருவர் CBSE முறையில் படித்தவர். தாய் தந்தை இருவரும் தமிழர்களாக இருந்தும், 17 வருடங்கள் தமிழகத்தில் இருந்தும் தமிழ் எழுத, ஏன் படிக்க கூட தெரியாது. பேருந்துகளின் பெயர்ப்பலகையை கூட வாசிக்க முடியாது, முதல் எழுத்தை (ஹை) மட்டும் (படமாக) மனப்பாடம் செய்து காலத்தை ஓட்டினார். ஹைகிரவுண்ட் என்பது ஒரு நாள் விடுமுறை முடிந்து வருகையில் மேட்டுத்திடல் என்று மாறியவுடன் தடுமாறி ஆட்டோ பிடித்து வந்து விடுதியில் எங்களிடம் குமையல் வாங்கியது நன்றாக நினைவிருக்கிறது.

SSLC படிக்கும் மாணவர்களை போல் Matriculation, Anglo Indian, மற்றும் CBSE படிக்கும் மாணவர்களையும் கணக்கில் எடுக்கவேண்டுமல்லவா ? தமிழ் படிக்காத ஒரு வகுப்பினரை முற்றிலும் தவிர்த்து விட்டு இப்படி ஒரு கணக்கு கொஞ்சம் நெருடல் தான்.

அடுத்ததாக கடந்த 13 வருடங்களில் (1995 முதல் 2008 வரை) அரசு பள்ளிகளை விட மெட்ரிக் பள்ளிகள் ஆசூர வளர்ச்சி அடைந்துள்ளதை யாரும் மறுக்க முடியாதல்லவா ?? மேலும் தமிழ் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதா அதிகரித்துள்ளாதா என்ற கேள்விக்கு பதில் சொல்வது எளிது தானே ?? எனவே 2008ஆம் வருடம் 1995 வருட கணக்கை எடுப்பதும் நெருடல்தான்.

ஆக தமிழ் நாட்டிலுள்ள அனைத்து வாரியங்களிலும் தமிழ் படிக்காமல் 2008ஆம் ஆண்டு 10வது வகுப்பு தேர்வு எழுதுவது எத்தனை பேர் என்று பார்த்தால் கண்டிப்பாக அது வெறும் 2 சதவிதம் மட்டும் அல்ல. மிகவும் அதிகம். சரியான தகவல் வேண்டும் என்றால் அரசைத்தான் கேட்க வேண்டும்.

இதே விஷயத்தை எழுதியுள்ள பிற பதிவுகள்

Tuesday, March 11, 2008

பெண் குழந்தை சுமை என்று கூறும் விளம்பரத்திற்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை

ஹிந்துஸ்தான் டைம்ஸிலிருந்து
ING Vysya என்னும் ஆயுள் காப்பீடு நிறுவனம் தொலைக்காட்சிகளில் வெளியிட்ட விளம்பரத்தில் “ஹை தோ ப்யாரி லேகின் போஜ் ஹை பாரி” (பாசமானவள் என்றாலும் சுமைதான்) எனவே ஆயுள் காப்பீடு சுமையை குறைக்கும் என்று வந்ததை அடுத்து மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகம் இந்த முடிவை எடுத்திருக்கிறது

மேலும் தெரிந்து கொள்ள ஹிந்துஸ்தான் டைம்ஸ் பக்கம் செல்லுங்கள்

Monday, March 10, 2008

”மிஸ்டர் வாட்சன், இங்கே வாருங்கள். நீங்கள் தேவைப்படுகிறீர்கள்”

”மிஸ்டர் வாட்சன், இங்கே வாருங்கள். நீங்கள் தேவைப்படுகிறீர்கள்” தலைப்பை பார்த்தவுடன் ஏதாவது ஷெர்லக் ஹோம்ஸ் கதை என்று நினைத்திருப்பீர்கள்.

கானன் டாயில் இப்படி கதை எழுதியிருக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால் மேலே குறிப்பிட்டுள்ள வசனம் “Mr. Watson, come here. I want you.” தான் முதன் முதலில் தொலைபேசியில் பேசப்பட்ட வசனம்.

1876 மார்ச் 10 - அதாவது இன்றைக்கு (10-03-2007) சரியாக 132 வருடங்களுக்கு முன்னர் தான் முதன் முதலாக கம்பி மூலம் குரல் அனுப்பப்பட்டது. பாஸ்டனில் தொலைபேசியவர் அலெக்ஸாண்டர் கிராகம் பெல். “தொலைகேட்டவர்” கிராகம் பெல்லின் உதவியாளர் வாட்சன்
இதோ கீழே உள்ள படத்தில் இருப்பவர் தான் அலெக்ஸாண்டர் கிராகம் பெல்



இத்தாலியரான அண்டோனியோ ம்யூசியும் (Antonio Meucci) 1857ல் இது போல் ஒரு கருவியை கண்டுபிடித்ததாக கூறுகிறார்கள்

அன்று உள்ள தொலைபேசி இப்பொழுது எப்படி மாறிவிட்டது ??

நீங்கள் இதை உங்கள் தொலைபேசியில் கூட படித்துக்கொண்டிருக்கலாம்

Tuesday, March 04, 2008

இந்திய அணி பந்து வீச்சின் மூலம் பெற்ற அரிய வெற்றி

எப்பவும் சச்சின் ஒரு சிரியஸில் 2 நூறு, 1 ஐம்பது அடிப்பார். வழக்கமாக அது முதலில் நடந்து விடும். இப்ப ஆஸ்திரேலியாவிற்கு போதாத காலம். சச்சினின் இரு சிறப்பான ஆட்டங்களுமே இறுதி ஆட்டத்தில் நடந்து விட்டது.

இதற்கு முன்னர் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பல ஆட்டங்களை வென்றிருக்கிறார்கள். ஆனால் அவை எல்லை ”ஒரு ஆட்ட மந்திரம்” (one day magic) மட்டுமே. இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் களால் தொடர்ந்து (consistency) ஆட்டங்களை வெல்ல முடிந்ததில்லை. எப்போழுதுமே நாம் நமது மட்டையர்களையே நம்பி இருந்தோம் (அல்லது கும்ப்ளே)

இந்திய அணி பந்து வீச்சின் மூலம் போட்டிகளை வெல்வது, அதுவும் வேகப்பந்து வீச்சின் மூலம் ஒரு கோப்பையை வெல்வது என்பது ஒரு பெரிய மாறுதல். டெஸ்ட் போட்டிகளிலிருந்தே கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக அணியின் பந்து வீச்சு சிறப்பாகவே உள்ளது.

ஆனால் பேட்டிங்கில் இன்னமும் சச்சினை நம்பியே இருப்பது கவலை அளிக்கிறது. சச்சின் 30 ஓட்டங்களுடன் வெளியேறியிருந்தால் நாம் சுமார் 150 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆகியிருப்போம். அதன் பின் வழக்கம் போல் சச்சின் இந்திய அணியை வெற்றி பெற வைப்பதில்லை என்ற அதே பல்லவி

சச்சின் ஆட்டமிழந்தவுடன் என்ன நடந்தது (கடைசி பதினொரு ஒவர்களில் வெறும் 53 ஓட்டங்களுக்கு 5 பேர் வீடு திரும்பியது) என்பதை பார்க்கும் போது ஒரு விஷயம் தெளிவாக தெரிகிறது. சச்சின் ஒய்வு பெறும் நாள் இன்னமும் வரவில்லை. ரோஹித் சர்மா தான் கொஞ்சம் நம்பிக்கை அளிக்கிறார். உத்தப்பா, காம்பிர் பரவாயில்லை. ஆனால் வரும் காலங்களில் உலகின் சிறந்த பந்துவீச்சு அணி என்று புகழ் பெறுவதற்கு இந்திய அணிக்கு வாய்ப்பு அதிகம் உள்ளதாகவே தெரிகிறது. 80களில் மேற்கிந்திய அணிபோல் (வால்ஷ், பிஷப், மார்ஷல், அம்ப்ரோஸ்) அதன் பின்னர் பாகிஸ்தான் (இம்ரான், அக்ரம், வக்கார், அகியுப் ஜாவது, முஷ்டாக், சக்லேன், 90களின் இறுதியில் தென் ஆப்பிரிக்கா (டோனால்ட், போலக், க்ளுஸ்னர், காலிஸ்) என்று பந்து வீச்சால் மிரட்டிய அணிகளைப் போல் அடுத்த ஆண்டுகளில் இந்திய அணியில் பந்து வீச்சு மற்ற அணிகளை மிரட்ட வாய்ப்புகள் பிராகசாம தெரிகிறது

கோடி ரூபாய் கேள்வி - யுவராஜ் சிங் இருக்கும் அணியில் கங்குலிக்கோ, முகமது கைப்பிற்கோ, தினேஷ் கார்த்திக்கிற்கோ ஏன் இடமில்லை


பின் குறிப்பு : சேவாக் (இறுதி ஆட்டத்தில் விளையாடவிட்டாலும்) அணியில் இருப்பதாக கருதுவோம்

Sunday, March 02, 2008

மக்கள் சட்டம்: போலி மருத்துவர்களை உருவாக்க முனையும் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திற்கு எதிராக வழக்கு!

மக்கள் சட்டம்: போலி மருத்துவர்களை உருவாக்க முனையும் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திற்கு எதிராக வழக்கு!

பத்தாவது படிக்கும் சிறுவன் மீது வெறுப்பை உமிழ்ந்தவர்கள் இந்த கூத்தை (பத்தாவது கூட படிக்காதவர்களுக்கு Doctor - கவுரவ Doctorஅல்ல, BSMS - வழங்குவதை) கண்டுகொள்ளாதது ஏன் ??

அதை விட முக்கியம், 5 வருடம் கல்லூரியில் படித்து, அல்லது அதை விட அதிக காலம் குருகுல முறையில் படித்து வைத்தியம் பார்க்கும் நிஜ சித்த மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள்

Saturday, March 01, 2008

அட இப்படி கூடவா விளம்பரம்

இன்று லோக்கல் கேபிள் தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம். ஏதோ ஒரு லாலா கடை.
அனைத்து இனிப்புகளும் சிறந்த முறையில் செய்து தரப்படும். திருநெல்வேலி அல்வா, திருப்பதி லட்டு, ஸ்ரீவல்லிப்புத்தூர் பால்கோவா


திருநெல்வேலி அல்வா, ஸ்ரீவல்லிப்புத்தூர் பால்கோவா எல்லாம் சரிதான. திருப்பதி லட்டுன்னா அது திருப்பதியில் செய்யப்படுவதா, அப்படி என்றால் இவர்கள் பிரசாதத்தை விற்கிறார்களா அல்லது லோக்கல் லட்டு தான் திருப்பதி பெயர் பெற்று விட்டதா.

எப்படி பார்த்தாலும் இது ஏமாற்று வேலைதானே

இப்படி பட்ட 'சொந்த செலவில் சூனியம் வைக்கும் விளம்பரங்கள்' என்ன காட்டுகின்றன
1. நாம் முட்டாள் என்றா அல்லது
2. விளம்பரம் அளிப்பவர்கள் முட்டாளா

தமிழ் எழுத்துலகத்திற்கு இது ஒரு இருண்ட வாரம்

முதலில் சுஜாதா.
இப்போது ஸ்டெல்லா புருஸ்.
இந்த வாரம் தமிழ் தமிழ் எழுத்துலகத்திற்கு ஒரு இருண்ட வாரம்
இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...