இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Sunday, April 20, 2008

செய்தியோடைகள் குறித்த சில சுட்டிகள் மற்றும் இந்த பதிவின் செய்தியோடை மாற்றம் குறித்த ஒரு அறிவிப்பு

ஒர் அறிவிப்பு : இந்த பதிவின் செய்தியோடை மாற்றப்பட்டுள்ளது.


இந்த வலைப்பதிவிற்கு (எந்த வலைப்பதிவிற்கும்) நேரடியாக (உலாவி மூலம்) வராமல் செய்தியோடை மூலமாகவும் இடுகைகளை தொடர்ந்து வாசிக்கலாம் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அப்படியில்லாமல் செய்தியோடை (செய்தி + ஓடை) என்ற சொல்லையே இப்பொழுது தான் முதலில் கேட்கிறீர்கள். (அல்லது இதற்கு முன்னர் கேள்விப்பட்டிருந்தாலும் அது என்னவென்று தெரியாது) என்றால் கீழ்க்கண்ட சுட்டிகள் உங்களுக்கு உதவும்


நீங்கள் ஏற்கனவே செய்தியோடை மூலம் இந்த பதிவை வாசிப்பவராக இருந்தால் கூட பழைய செய்தியோடைக்கு பதிலாக இத்தளத்தின் புதிய மேம்படுத்தப்பட்ட செய்தியோடையை உபயோகிக்க வேண்டுகிறேன். புதிய செய்தியோடையை பெற இங்கு சுட்டவும்

Friday, April 18, 2008

அமரர் கல்கியின் எழுத்துக்கள்

அமரர் கல்கியின் எழுத்துக்கள் அனைத்தையும் திரட்டி கீழ்க்கண்ட தளத்தில் வைத்துள்ளார்கள்

http://yogeshmsc.googlepages.com/kalkinovels.html

தளம் வடிவமமைத்தவருக்கு கல்கியின் ரசிகர்கள் மற்றும் அனைத்து தமிழர்கள் சார்பாக நன்றி

Thursday, April 17, 2008

2007 வருட தமிழக மருத்துவ பட்டமேற்படிப்பு மதிப்பெண் பட்டியல்

எனது முந்தைய பதிவில் இந்த ஆண்டு (2008) தமிழக மருத்துவ பட்டமேற்படிப்பு (MD/MS etc)மதிப்பெண் பட்டியலில் முதல் நூறு இடங்களை பெற்றவர்களின் பெயர், மற்றும் சமுக விபரங்களை தந்திருந்தேன்.

சில சந்தேகங்கள் எழுந்தன.

எனவே 2007 வருட தமிழக மருத்துவ பட்டமேற்படிப்பு மதிப்பெண் பட்டியல்

இதில்

OC - முற்படுத்தப்பட்ட வகுப்பினர் - Forward Caste
BC - பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - Backward Community
MBC - மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - Most Backward Community
SC - அட்டவனை வகுப்பினர் - Scheduled Community

முதலில் உள்ள எண் அவர்களில் தேர்வு எண். கடைசியாக உள்ள எண் தான் “ரேங்க்”

20185 IYAPPAN P BC 01
24076 RAJESHWARI N OC 02
23067 ARUNKUMAR R BC 03
23468 S RAMKUMAR BC 04
26927 KUMAR P BC 05
27177 SENTIL PRABU R BC 06
23513 SATHYAN V K BC 07
23623 VADIVELU R BC 08
26003 ABDUL AZEEM B BC 09
23098 BHARATHI S BC 10
24166 SENTHIL KUMAR A BC 11
20695 ANU MAITHRAYEE K MBC 12
24169 SENTHIL KUMAR K BC 13
27179 SELVA RENGA RAJU R MBC 14
23144 ESWARAN A BC 15
23406 PREM SOLOMON I BC 16
21110 SARATH BALAJI B BC 17
23979 MURUGESA LAKSHMANAN S MBC 18
26304 MARIAPPAN M BC PRI 19
27062 PUNITHA MANI N BC 20
27714 RAJA RAJESWARI K S MBC 21
27543 KARAMATH S P BC 22
27137 SARATH BABU A N BC 23
20592 TAMIL SELVI K BC 24
23551 SIVANANDAM S BC 25
23237 KARTHI S BC 26
20131 DINESH KUMAR K BC 27
26300 MANJULA P BC 28
21287 VIGNESH M MBC 29
26953 MALATHI G BC 30
20982 NISAMUDEEN K M BC 31
23490 SANTHAKUMAR C MBC 32
27973 VINOTH KUMAR TK SC 33
23514 SAVITHA V OC 34
21454 SENTHIL KUMAR K BC 35
27170 SENTHIL KUMAR R BC 36
24503 JEGAN A MBC 37
24021 PRABHU V A MBC 38
23169 GOWRI MANOHARI S BC 39
27189 SHATISH KUMAR M BC 40
23312 MEENATCHI R BC 41
27962 VIJAYA LAKSHMI PALANISAMY MBC 42
26842 HARRINI K OC 43
27372 ANIL ARORA OC 44
23279 LAVENYA R P BC 45
27216 SOMASEKAR R D R BC 46
26612 USHA P BC 47
23911 KASTHURI V BC 48
24048 PRIYA B T BC 49
20220 KALI RAJ G BC 50
21469 SUDHA A BC 51
26255 KIRUTHIKA CHANDRASEKARAN BC 52
27090 RAMESH KUMAR T BC 53
26751 BHARANI K BC 54
24087 RAMACHANDRAN P BC 55
23297 MANOHARAN M BC 56
23546 SINGARAM R MBC 57
26692 ANBU SELVAN P BC 58
24399 ARUN KUMAR S MBC 59
23981 MUTHU KRISHNAN V BC 60
20367 PETER JAYARAJ X BC 61
23448 RAMANAN R OC 62
23663 VIKRAMAN G OC 63
20197 JAYAPRAKASH V BC 64
20972 NANDINI BALASUBRAMANIAN OC 65
27192 SHILPHA KUMAR BC 66
26273 LAKSHMI PRIYA G BC 67
23436 RAJAVEL K BC 68
24581 MADHU SHANKAR G BC 69
23375 POORANI DEVI A BC 70
23915 KAVITHA M BC 71
23626 VANI D BC 72
27162 SELVARAJ P SC 73
26395 PRAVEEN KUMAR J BC 74
23044 ANURADHA G BC 75
21350 HARI SANKAR C N B BC 76
20777 DHANASEKARAN S BC 77
26379 PRABHAKAR A BC 78
23515 SELVAGANESAN K BC 79
24605 MARIMUTHU S BC 80
24596 MANIVANNAN N MBC 81
23077 BABU S R BC 82
20171 HARI SUDAN S OC 83
26282 MADHU S BC 84
20135 DIVYA S BC 85
23229 KANCHANA MALA S BC 86
24823 SHANKAR S BC 87
21082 RAVINDRAN B BC 88
23562 SRIKUMAR S OC 89
23065 ARUNA R PATIL MBC 90
26103 CATHERINE LEELA P BC 91
27392 ARUN C SC 92
26363 PALANIVELRAJAN C BC 93
27280 THIRUMAL VALAVAN K BC 94
20154 GEETHA S BC 95
23846 HEMACHANDREN M MBC 96
23008 AHAMED N M S BC 97
23560 SRIDHAR B MBC 98
26411 RADHA SHAKUNTALA R BC 99
23196 JAINAB SULTHANA J BC 100

2007 வருட தமிழக மருத்துவ பட்டமேற்படிப்பு மதிப்பெண் பட்டியலில் முதல் 100 இடங்களில்
முற்படுத்தப்பட்ட வகுப்பினர் 9 பேரும்
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 74 பேரும்
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 15 பேரும்
அட்டவனை வகுப்பினர் 3 பேரும் உள்ளனர்

அதே போல் 2005 ஆண்டு எம்.பி.பி.எஸ் நுழைவு மதிப்பெண் பட்டியலில் முதல் 430 இடங்களில்

முற்படுத்தப்பட்ட வகுப்பினர் 38 பேரும்
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 321 பேரும்
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 57 பேரும்
அட்டவனை வகுப்பினர் 14 பேரும் உள்ளனர்

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.


உங்களில் சில / பல கேள்விகளுக்கு
முந்தைய பதிவிலோ, அல்லது அதிலுள்ள பின்னூட்டங்களிலோ
விடை இருக்கலாம்

Monday, April 14, 2008

தமிழக மருத்துவ பட்டமேற்படிப்பு மதிப்பெண் பட்டியல்

இந்த ஆண்டு (2008) தமிழக மருத்துவ பட்டமேற்படிப்பு (MD/MS etc)மதிப்பெண் பட்டியலில் முதல் நூறு இடங்களை பெற்றவர்களின் பெயர், மற்றும் சமுக விபரம். (The following is the list of TOP 100 Rankers in Tamil Nadu PG Medical Entrance Exam 2008 conducted on 24.02.2008 - English has been added following a surge of non-tamil visitors to this post)

இதில் In this

BC - பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - Backward Community
MBC - மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - Most Backward Community
BCM - முஸ்லிம் வகுப்பினர் - Muslim
BCC - கிருத்தவ வகுப்பினர் - Christian
OC - முற்படுத்தப்பட்ட வகுப்பினர் - Forward Caste

இந்த வருடம் மட்டுமல்ல. கடந்த பத்து வருடங்களாகவே இதே போல் தான் பட்டியம் இருக்கிறது. For the past 10 years, the list is more or less the same

1 34809 RAJENDRAN K BC
2 37527 BASKAR C MBC
3 39139 DAHLIA MARY A BCC
4 34745 KRITHIGA M BC
5 39350 MURALI KRISHNAN P BC
6 34383 PRINCEY RAJAKUMARI E BCC
7 30457 SIVA KUMAR V BC
8 33237 BALAMMA SUJATHA BC
9 38517 GANGA DEVI R BC
10 33181 PRIYADARSENE P MBC
11 37452 BALAJI V BC
12 38911 GEETHA K BC
13 34698 SUNDARESWARAN N MBC
14 34866 RAJ GANESH R MBC
15 33599 KALPANA K BC
16 33431 SELVANANDHINI G BC
17 30663 ANAND KUMAR R BC
18 33226 RATHINA BALAN I BC
19 34828 SUNDARA RAJA PERUMAL R BC
20 33249 SUBASHINI R BC
21 39128 VASANTHI P BC
22 37421 SANGEETHA G BC
23 37954 MOHIDEEN ASHRAF A BCM
24 33296 MANOKARAN S BC
25 37599 BHAVANI V K BC
26 33713 ARUNKUMAR N BC
27 35316 KAVITHA S BC
28 37303 SENTHIL KUMAR A BC
29 30692 BANUMATHY S BC
30 31016 BALAMURUGAN S BC
31 37969 SEENIVASAN S MBC
32 33659 NARMADHA DEVI T G BC
33 37540 CHITRA DEVI V BC
34 34891 VIVEK PRAVEEN R BC
35 38853 ARAVIND KUMAR P BC
36 30134 SANGEETHA S BC
37 35457 GOVINDARAJAN N BC
38 30478 BHUVANESWARAN N MBC
39 34738 RAMYA PRIYA M R BC
40 39132 ARUNDHAVAKIRUBA S MBC
41 39012 ANANDADURAI D BCC
42 38946 SANGEETHA A BC
43 33365 AARTHI C K BC
44 33300 ILAVARASAN K BCC
45 30041 DIANA T BCC
46 30447 HEMALATHA S BC
47 34969 ASHOK KUMAR M BC
48 30853 SEENIAMMAL P BC
49 39306 GANESAN R BC
50 38274 SIVASANKAR M BC
51 37318 THYAGARAJAN N MBC
52 34924 SENTHIL KUMAR C S MBC
53 35103 MURUGAN S BC
54 35307 RADHA MANI M BC
55 31042 PRIYADHARSINI R MBC
56 33870 VIMAL RAJ P BC
57 38550 ANAND KUMAR V BC
58 33941 RAJA SEKARAN S BCC
59 34670 MAHESH BABU C R BC
60 30178 VIJAYA KARTHIKEYAN M BC
61 37573 ARUL MURUGAN C BC
62 38287 SARAVANA KUMAR S BC
63 35448 DHANAPAL VIJAYA MBC
64 37754 VIJAYAN B BC
65 35318 MAHESWARI S BC
66 37608 REVATHI A BC
67 34347 SENTHIL C BC
68 37030 SASIKALA R BC
69 33819 ASHOK INDERSEN BC
70 30994 MOHANA PRAMILA K BC
71 38238 SARAVANAN A MBC
72 37266 RAJ KUMAR S BC
73 30114 GOWRI SANGEETHA K MBC
74 33299 GANESH K BC
75 37727 RAJESH KUMAR V BC
76 30583 VIGNESHWARAN P BC
77 34493 KATHIRAVAN R BC
78 34431 VIDHUBALA S MBC
79 33179 SENTHIL S MBC
80 38658 RIJAPHIN R BCC
81 30030 PHILITSEN V BCC
82 34380 APARNA MATHUR OC
83 38016 VIDHYA K MBC
84 30650 RAJESH J BCC
85 33905 KUMAR M BC
86 37862 NANDA RAJALAKSHMI D BC
87 39146 SANGEETHA T S BC
88 33099 SATHISH KUMAR A BC
89 38079 KARTHIKEYAN S MBC
90 37962 GOBINATHAN S BC
91 39448 NARNADHA S BC
92 30236 SAGINA MOHANDAS BCC
93 34612 PRADEEP KUMAR K MBC
94 33358 GERALD ANAND RAJA X BCC
95 30283 SRI DEVI S BC
96 33998 BHARATHI P MBC
97 34141 ANNAPOORANI R OC
98 34750 SUDHAKARAN M MBC
99 33008 PRAVEEN RAVISHANKARAN BC
100 39074 KUNGUMA PRIYA R MBC


எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான தர வரிசை பட்டியலும் கிட்டத்தட்ட இதே போல்தான் உள்ளது. The Merit List for MBBS is also similar to this. In 2005 (when there was an Entrance Exam), In the MBBS Admission Merit list the top 430 Rankers in the General Merit List had

38 Forward Community Students
321 BC students.
57 MBC students.
14 SC students.

அதே போல் 1950ஆம் ஆண்டிலும், 1970ஆம் ஆண்டிலும் இந்த பட்டியல் எப்படி இருந்தது என்பதை பார்த்தால், இடப்பங்கீட்டினால் ஏற்படும் சமுக மாற்றம் புலப்படும். If you can compare these lists with the rank list in 1950, 1970, 1990, any one can see the change

யாருக்காவது சந்தேகம் இருந்தால் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் "மருத்துவ கல்வி இயக்குனர், 162, பெரியார் சாலை, சென்னை" என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். If there are any doubts, you can apply a petition under Right to Information Act to Director of Medical Education, 162, EVR Periyar Road, Chennai - 600010

கருத்துகள் வரவேற்கப்படுகிறது. Opinion Welcome

Thursday, April 10, 2008

பிற்படுத்தப்பட்டோர்க்கு 27 சதவிதம் இடப்பங்கீடு - உச்ச நீதிமன்றம்

கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்டோர்க்கு 27 சதவிதம் இடப்பங்கீடு வழங்கும் மத்திய அரசின் சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

”க்ரீமி லேயர்” பிற்படுத்தப்பட்டோர் இடப்பங்கீட்டின் போது பிற்படுத்தப்பட்டோராக கருதப்படாமல் பொது வகுப்பினராகவே கருதப்படுவர்.

தீர்ப்பு விரைவில் வரும் என்றும், அது இப்படிதான் இருக்கும் (இடப்பங்கீடு செல்லும், “க்ரீமி லேயருக்கு” பலன் கிடையாது) என்றும் நான் சில நாட்களுக்கு முன்னரே என் நண்பரிகளிடம் அடித்து கூறியிருந்தேன்.

ஏற்கனவே இடப்பங்கீடு குறித்த இடுகைத்தொடரில் அதியமான் அவர்களின் சில கருத்துக்களுக்கு எதிர் கருத்து கூறும் பொழுது
”க்ரீமி லேயர்” குறித்து பின்னர் விவாதிக்கலாம் என்று கூறியிருந்தேன். இப்பொழுது நேரம் வந்து விட்டது.

அதற்கு (விரிவான அடுத்த இடுகைக்கு) முன் சில கேள்விகள்

”க்ரீமி லேயர்” என்பது வருமானத்தை வைத்து வரையருக்கப்பட்டால்

1. எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை அந்த வருமானத்தை மாற்ற வேண்டும் ?

2. அனைத்து இடங்களிலும் ஒரே வருமானம் தானா. (உதாரணமாக பள்ளி ஆசிரியராக சேர 2 லட்சம் மேல் வருட வருமானம் உள்ள குடும்பங்களில் உள்ளவர்கள் ”க்ரீமி லேயர்” என்றால் IASக்கும் அதே 2 லட்சம் தானா ?

உங்கள் கருத்தை கூறுங்களேன். என் கருத்து அடுத்த இடுகையில்

பின்குறிப்பு : இரண்டாவது கேள்விக்கு விடையளிக்கும் முன்னர் இதை படித்தால் விடை எளிது

Wednesday, April 09, 2008

வாகனம் ஓட்டும் பொழுது "டயர்" வெடித்தால் என்ன செய்ய வேண்டும்

அண்மையில் மின்னஞ்சலில் வந்தது

நாற்சக்கர வாகனம் ஓட்டும் பொழுது "டயர்" வெடித்தால் என்ன செய்ய வேண்டும்

நிறுத்துக் கருவியை (ப்ரேக்) ஓங்கி அழுத்தாதீர்கள்
வேகம் அதிகரிக்கும் சாதனத்திலிருந்து (ஆக்ஸிலெரேட்டர்) காலை எடுத்து விடுங்கள்
திசை மாற்றியை (ஸ்டீரிங்) கெட்டியாக பிடித்துக்கொள்ளுங்கள்
நேரான பாதையிலேயே வாகனத்தை செலுத்துங்கள்
மெதுவாக வாகனத்தை ஒரு பக்கமாக (இந்தியாவில் இடது) திருப்புங்கள்
வாகனம் நின்றபின் டயரை மாற்றி விடுங்கள்

இந்த தகவலை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்புங்கள்

பி.கு :
டயர் என்பதற்கு சரியான தமிழ் சொல் என்ன ?
ப்ரேக், ஆக்ஸிலெரேட்டர் போன்றவைகளுக்கு பொருத்தமான தமிழ சொல் என்ன ?

Monday, April 07, 2008

கல்வியின் விலை - 3 - எங்கே செல்லும் இந்த பாதை

இந்த இடுகைத்தொடர் சிறந்த இடுகையாக செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள் பிரிவில் 2008ஆம் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டது
இடம் : முதலிடம்

-oOo-

இந்த இடுகைத்தொடரின் முந்தைய இடுகைகள்
வாங்கு திறனுக்கும் கல்விக்கும் என்ன சம்மந்தம்

முக்கியமான விஷயம் வாங்குதிறன் குறைகிறது என்றால் அந்த பொருளை (அல்லது சேவையை) யாரும் வாங்குவது இல்லை என்று அர்த்தம் இல்லை.
வாங்குதிறன் குறையும் பொழுது, பனம் அதிகம் உள்ளவர்களுக்கு மட்டும் தான் அந்த சேவை என்று ஆகிவிடும்.

உதாரணமாக டென்னிஸ், கோல்ப் ஆகிய விளையாட்டுக்களை எடுத்துக்கொள்வோம். ஏன் நடுத்தட்டு அல்லது பின் தட்டு மக்களிடமிருந்து ஒரு விளையாட்டு வீரர் கூட கிடையாது. ஏனென்றால் டென்னிஸ் பயிற்சி கட்டணம், டென்னிஸ் அரங்கு கட்டணம் ஆகியவை நடுத்தட்டு மக்களின் வாங்குதிறனுக்கு அப்பாற்பட்டே உள்ளது.

பில்லியார்ட்ஸ், ஸ்னூக்கர் போன்ற விளையாட்டுகளை விளையாட தேவைப்படும் அரங்கு, மேஜை ஆகியவைகளின் விலை நடுத்தர மக்களின் சம்பளம் / வருமானம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு உள்ளதாலே நடுத்தர பின்தட்டு மக்களிடமிருந்து ஒரு பில்லியார்ட்ஸ், ஸ்னூக்கர் விளையாட்டு வீரர் இல்லை.

கேரம் பலகையும், அதன் உபகரணங்களும் (போரிக் அமிலம் உட்பட) நடுத்தர வாங்குதிறனுக்கு உள்ளே இருப்பதால் தான் இளவழகியால் அந்த விளையாட்டை விளையாட முடிந்தது.

எந்த துறையிலும் பணம் இருப்பவருக்கு வாய்ப்பு அதிகமும், பணம் இல்லாதவர்களுக்கு வாய்ப்பு குறைவாகவும் உள்ளது அனைவருக்கும் தெரிந்த உண்மை. அது தனி விவாதத்திற்குரிய விஷயம். ஆனால் பணம் (சம்பளம் / வருமானம்) குறைவாக உள்ள குடும்பத்தில் இருக்கும் நபர் சில துறைகளுக்குள் நுழைவது குறித்து நினைத்து பார்க்க கூட முடியாத நிலைமை உள்ளது என்பதை சுட்டிக்காட்டவே இந்த உதாரணம்.

இனி நம் பிரச்சனைக்கு வருவோம்.

முதலில் இந்த இடுகைத்தொடரின் முதல் இடுகைக்கு வந்த ஒரு கருத்து
உங்கள் கேள்வி (ஆதங்கம்)மிக நியாயமான ஒன்று.ஆனால் பொதுவாக தற்சமயம் (real estate boom) ஒரு சிலர் தாங்கள் நடத்தும் நிறுவனங்களை மூடுவதாக சில பத்திரிக்கை செய்திகளில் படித்தேன்(to sell the land ).உண்மையா?.
இது முற்றிலும் உண்மை !!!

உதாரணமாக நீங்கள் இட்லி கடை ஒன்றை நடத்தி வருகிறேன். தினகும் 50 இட்லி சுட்டு 2 ரூபாய்க்கு விற்க உங்களுக்கு ஆகும் செலவு ரூபாய் 80. உங்களுக்கு 20 ரூபாய் லாபம் கிடைக்கிறது. மாதம் 600 ரூபாய். அது போதவில்லை என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள். இட்லியின் விலையை 2.5 ரூபாய் ஆக்குவீர்கள். உடன் தினமும் 50 இட்லி வியாபாரம் ஆன கடையில் இப்பொழுது 30 இட்லி தான் வியாபாரம் ஆகிறது. எனவே விலையை குறைக்கலாமா, ஏற்றலாமா என்று யோசித்து கொண்டிருக்கும் வேளையில் நான் வந்து "கடையை என்னிடம் தாருங்கள். நான் 3 லட்சம் தருகிறேன்". இதை அஞ்சலக மாத வருமான திட்டத்தில் செலுத்தினால் மாதம் 2000 ரூபாய் கிடைக்கும், வேலை இல்லை. சொகுசாக இருக்கலாம் என்று கணக்கு பார்த்துவிட்டு கடையை விற்று விடூவீர்கள் அல்லவா.
அது தான் நடக்கிறது.

இந்த சுழலில் முதலில் மாட்டியது திரையரங்குகள். 1990களில் 10 ரூபாய் கட்டணத்தில் திரைப்படம் காண்பித்து கொண்டிருந்த திரையரங்குகள் மூடப்பட்டு வணிக வளாகங்களாகவும், கல்யாண மண்டபங்களாகவும் மாறின. 25 ரூபாய் கட்டணத்தில் திரைப்படம் காண்பித்து கொண்டிருந்த திரையரங்குகள் 120 ரூபாய் கட்டணத்திற்கு மாறின

திரையரங்குகளின் மொத்த எண்ணிக்கை குறைந்ததோ கூடியதொ இல்லை அப்படியே இருந்ததோ, அவைகளை பகுத்து பார்த்தால், 1993ல் இருந்ததை விட, 2008ல்
  • 20 ரூபாய் கட்டணத்தில் நாம் திரைப்படம் பார்க்கக்கூடிய திரையரங்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது
  • 120 ரூபாய் கட்டணத்தில் நாம் திரைப்படம் பார்க்கக்கூடிய திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது (இந்த அரங்குகளின் அடிப்படை / ஆடம்பர வசதிகள் அதிகம் என்பதும் உண்மை. பிரச்சனை அடிப்படை வசதியினால் கூடும் கட்டணம் பற்றியல்ல. ஆடம்பர வசதியினால் கூடும் கட்டணம் பற்றி)
இப்பொழுது கல்வித்துறைக்கு வருவோம். கடந்த ஆண்டுகளாக கல்வி நிறுவனக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதில் சந்தேகமில்லை. இன்னும் வரும் ஆண்டுகளில் கூடத்தான் வாய்ப்புகள் உள்ளன

அதே போல் அடுத்த பத்தாண்டுகளில்
  • மாதம் 200 ரூபாய் (மற்றும் அதற்கு கீழும், இலவசமாகவும்) கல்விக்கட்டணம் வாங்கும் பள்ளிகளின் எண்ணிக்கை குறையுமா அல்லது அதிகரிக்குமா
  • மாதம் 200 ரூபாயக்கு மேல் கல்விக்கட்டணம் வாங்கும் பள்ளிகளின் எண்ணிக்கை குறையுமா அல்லது அதிகரிக்குமா
என்று சிந்தித்தால் எனக்கு தோன்றும் விடை பயமாக இருக்கிறது

உங்களுக்கு என்ன தோன்றுகிறது ??

--தொடரும்.

கல்வியின் விலை - 2 - விலைவாசியும் வாங்கு திறனும்

இந்த இடுகைத்தொடர் சிறந்த இடுகையாக செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள் பிரிவில் 2008ஆம் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டது
இடம் : முதலிடம்

-oOo-

எனது முந்தைய பதிவில் (மெட்ரிகுலேஷன் / தனியார் பள்ளிகளின் மறுபக்கம்) மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்த முடியாததால் மூடப்படும் தனியார் பள்ளி குறித்து சில கேள்விகளை (எழில் அவர்கள் கூறியபடி ஆதங்கம்) எழுப்பியிருந்தேன். மேலும் சில கருத்துக்கள் இந்த பதிவில்.....

கடந்த பதினைந்து வருடங்களாக விலைவாசி அதிகரித்து வருகிறது என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. அதே போல் சம்பளமும், வருமானமும் அதிகரித்து வந்துள்ளன.

ஆனால் அனைத்து பொருட்களும் விலை உயர்ந்துள்ளதா என்றால் இல்லை என்று தான் பதில் கூற வேண்டும்

சில பொருட்களின் விலை குறைந்துள்ளது - உதாரணமாக செல்லிடப்பேசி, கணனி போன்றவைகளை கூறலாம்

சில பொருட்களின் விலை அப்படியே உள்ளது - எனக்கு தெரிந்து 6x4 மேக்ஸி புகைப்படம் அச்சிடும் (அல்லது வேறு சொல் என்ன) கட்டணம் பதினைந்து வருடங்களாக 5 ரூபாய் தான்

பெரும்பாலான பொருட்களின் விலை கூடியுள்ளது
  • தங்கத்தை எடுத்துக்கொண்டால் 1993ல் இருந்ததை விட 2.5 முதல் 3 மடங்கு விலை கூடியுள்ளது
  • பெட்ரோலை எடுத்துக்கொண்டால் 1993ல் இருந்ததை விட 2.5 முதல் 3 மடங்கு விலை கூடியுள்ளது
  • பேரூந்து கட்டணம் 2.5 முதல் 3 மடங்கு
இப்பொழுது மற்றுமொரு கோனத்தில் இதை அனுகுவோம்
[முதலில் ஒரு பொறுப்பெல்லை மொழி அல்ல்து உரிமைத் துறப்பு (தமிழ் வலைப்பதிவு மொழியில் டிஸ்கி) - நான் பொருளாதார நிபுனர் அல்ல]

பொருளாதார ரீதியாக மூன்று அடுக்குகளை நாம் பல வருடங்களாகவே கூறிக்கொண்டுவருகிறோம் -
  • மேல்தட்டு அல்லது பொருளாதார ரீதியாக முன்னேறியவர்கள்,
  • நடுத்தட்டு அல்லது நடுத்தரவர்க்கம்,
  • பின்தட்டு அல்ல்து பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள்-
1993ல் இருந்து இன்று (2008) ஒரு பொருளின் (அல்லது சேவையின்) விலை
  • 2.5 முதல் 3 மடங்கை விட அதிகம் உள்ளதா, அல்லது,
  • 2.5 முதல் 3 மடங்கு உள்ளதா இல்லை
  • 2.5 முதல் 3 மடங்கை விட குறைந்துள்ளதா (அப்படியே உள்ள விலை, மற்றும் விலை குறைவு)
என்று பார்த்து இதை மூன்று அடுக்காக பிரிப்போம்

உதாரணமாக, 1993ல் 10 ரூபாய்க்கு விற்ற ஒரு பொருள், 2008ல்
  • 30 ரூபாயை விட அதிகமாகி விட்டதா
  • 25 முதல் 30 ரூபாய் உள்ளதா
  • 25 ரூபாயை விட கம்மியாகி விட்டதா - அது 10 ரூபாயில் இருந்தாலும் (உதாரணம் புகைப்படம், பத்து ரூபாயைவிட குறைந்தாலுல் (உதாரணம் செல்லிடப்பேசி) இந்த அடுக்கிலேயே வைப்போம்
என்று பார்த்தால் சில விஷயங்களை புரிந்து கொள்ளலாம்

1993 ஒரு பொருள் (அல்லது சேவை) அனைத்து மக்களாலும் பயன்படுத்தப்பட்டது (அல்லது அவர்கள் பயன்படுத்தும் எல்லைக்குள் இருந்தது) என்று வைத்துக்கொள்ளுங்கள்.
  • இன்று அப்பொருளின் விலை உயர்வு மூன்று மடங்கிற்குள் மட்டும் இருந்தால் மட்டுமே அனைவராலும் பயன்படுத்த முடியும்
  • இன்று அது மூன்று மடங்கை விட அதிகம் உயர்ந்து விட்டது என்றால் அதை பின் தட்டு மக்களால் பயன்படுத்த முடியாது.
  • மேலும் விலை உயர்ந்தால் நடுத்தட்டு மக்களாலும் கூட பயன்படுத்த முடியாது
1993 ஒரு பொருள் (அல்லது சேவை) மேல்தட்டு மற்றும் நடுத்தட்டு மக்களால் பயன்படுத்தப்பட்டது (அல்லது அவர்கள் பயன்படுத்தும் எல்லைக்குள் இருந்தது) என்று வைத்துக்கொள்ளுங்கள்.
  • 2.5 மடங்கை விட விலையுயர்ந்தாலோ, விலை அப்படியே இருந்தாலோ, அல்லது விலை குறைந்தாலோ பின் தட்டு மக்கள் கூட பயன்படுத்த முடியும்
  • 2.5 மடங்கு உயர்ந்தால் நடுத்தட்டு மற்றும் மேல்தட்டு மக்களால் பயன்படுத்த முடயும்.
  • இன்று அது மூன்று மடங்கை விட அதிகம் உயர்ந்து விட்டது என்றால் அதை நடுத்தட்டு மக்களால் பயன்படுத்த முடியாது.
1993 ஒரு பொருள் (அல்லது சேவை) மேல்தட்டு மக்களால் மட்டும் பயன்படுத்தப்பட்டது (அல்லது அவர்கள் பயன்படுத்தும் எல்லைக்குள் இருந்தது) என்று வைத்துக்கொள்ளுங்கள்.
  • 2..5 மடங்கை விட குறைவாக விலையுயர்ந்தால் நடுத்தட்டு கூட பயன்படுத்த முடியும். விலை அப்படியே இருந்தாலோ அல்லது விலை குறைந்தால் அனைவரும் பயன்படுத்தலாம்.
  • 2.5 மடங்கு உயர்ந்தால் மேல்தட்டு மக்களால் பயன்படுத்த முடியும்.
  • இன்று அது மூன்று மடங்கை விட அதிகம் உயர்ந்து விட்டது என்றால் அதை மேல்தட்டு மக்களிலேயே சிலர்தான் பயன்படுத்த முடியும்.

எனவே வாங்கு திறன் (பர்சேசிங் பவர்) என்பது அனைத்து பொருட்களுக்கும் ஒன்றல்ல. இது பொருளுக்கு பொருள் மாறுபடும்.

அதேபோல் வாங்கு திறன் (பர்சேசிங் பவர்) என்பது அனைத்து மக்களுக்கும்  ஒன்றல்ல. இது அவரவரின் பொருளாதார நிலையை பொருத்து. கடந்த பதினைந்து ஆண்டுகளில், ஒரு விளம்பர பலகை எழுதுபவரின் வாங்கு திறனை விட அடோபியில் விளம்பரங்களை வடிவமைத்து அச்சிடுபவரின் வாங்கு திறன் கூடியுள்ளது.

அப்படியென்றால் எந்தெந்த பொருட்களின் வாங்குதிறன் அதிகரித்து உள்ளது
  • ஒரு பொருளின் விலை 2.5 முதல் 3 மடங்கை விட குறைந்துள்ளது
    • கார் - மாருதி 800
  • ஒரு பொருளின் விலை அப்படியே உள்ளது
    • புகைப்படம்,
    • பெப்சி, கோக் !!! (அதே பத்து ரூபாய் தானே)
  • ஒரு பொருளின் விலை குறைந்துள்ளது
    • கணிப்பொறி, மடிக்கணனி, இணைய இனைப்பு கட்டனம்
    • செல்லிடப்பேசி,

அப்படியென்றால் எந்தெந்த பொருட்களின் வாங்குதிறன் அப்படியே உள்ளது
  • 2.5 முதல் 3 மடங்கு அதிகரித்து உள்ளது
    • பெட்ரோல்,
    • தங்கம்
எந்தெந்த பொருட்களின் வாங்குதிறன் குறைந்து உள்ளது
  • 2.5 முதல் 3 மடங்கை விட அதிகமாகி உள்ளது என்றால் அந்த பொருளின் வாங்குதிறன் குறைந்துள்ளது.
    • திரைப்பட கட்டணம்
    • திரையரங்குகளில் விற்கப்படும் உணவு பொருட்களின் கட்டணம்
    • கல்விக்கட்டணம்
இதே விவாதம் தொடரும் அடுத்த பதிவு : கல்வியின் விலை - 3 - எங்கே செல்லும் இந்த பாதை

Sunday, April 06, 2008

கல்வியின் விலை - 1 - மெட்ரிகுலேஷன் / தனியார் பள்ளிகளின் மறுபக்கம்

இந்த இடுகைத்தொடர் சிறந்த இடுகையாக செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள் பிரிவில் 2008ஆம் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டது
இடம் : முதலிடம்

-oOo-

இன்று குமுதம் ரிப்போட்டரில் (10.04.2008 பக்கம் 36-37) படித்த ஒரு செய்தி என்னுள் பல கேள்விகளை எழுப்பியுள்ளது

முதலில் செய்தி என்னவென்று பார்ப்போம்

1. சிறுமுகையில் (இது மேட்டுப்பாளையம் அருகில் உள்ள ஒரு ஊர். சவுத் இந்தியா விஸ்கோஸ் என்று ஒரு தொழிற்சாலை இங்கு இருந்தது) உள்ள காந்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் "நிர்வாக காரணங்களுக்காக அடுத்த கல்வியாண்டில் இருந்து (2008 - 2009) ஆறாம் வகுப்பு முதல் பன்னிரென்டாம் வகுப்பு வரை இயங்காது"
2. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்ப்பதற்கு ஏதுவாக மூன்று மாதங்களுக்கு முன்னரே அறிவித்திருக்கிறார்கள்.
3. இதை எதிர்த்து மறியல் போராட்டம் (படம் வேறு போட்டிருந்தார்கள்)
4. பெற்றோர்கள் கூறும் புகார் - ஆசிரியர் பயிற்சி பள்ளி நடத்துவதற்காக பள்ளியை மூடுகிறார்கள்
5. பள்ளி தரப்பு கூறுவது- (1) 12ஆம் வகுப்பில் பத்து மாணவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். (2) பள்ளியில் படிக்கும் 700 மாணவர்களில் 200 மாணவர்கள் மட்டுமே கட்டணம் செலுத்தியுள்ளார்கள் (3) அரசு விதிகளின் படி பள்ளி நடத்த எங்களுக்கு 1.5 கோடி தேவை (4) இதுவரை பள்ளி நடத்த 20 லட்சம் ரூபாய் வங்கி கடன் வாங்கி மாதம் 20,000 வட்டி செலுத்துகிறோம் (5) எங்கள் வீட்டு நகைகள் அடமானத்தில் இருக்கின்றன (குமுதம் ரிப்போட்டர் பக்கம் 37) (6) தமிழக அரசு அறிவித்துள்ள நிபந்தனைகளின்படி பார்த்தால் தமிழ்நாட்டில் வரும் கல்வி ஆண்டில் மட்டும் 3000 பள்ளிகள் மூடப்படக்கூடிய நிலையில் உள்ளது.

இதில் எனக்கு எரிச்சல் ஏற்படுத்திய விஷயம் கட்டுரை எழுதப்பட்டுள்ள விதம். கட்டுரை முற்றிலும் ஒரு சார்பாக பள்ளி கூட நிர்வாகத்தை குறை கூறும் விதமாக எழுத்தப்பட்டுள்ளது

சரி, இப்பொழுது என்ன தான் பிரச்சனை / நிலவரம் என்று பார்ப்போம்


ஒரு பள்ளிக்கூடம் நடத்த வேண்டுமென்றால் அந்த நிர்வாகம் பல துறைகளிடமிருந்தும் அங்கீகாரம் அல்லது அனுமதி பெற வேண்டும்.

அதில் முக்கியமாக கல்வி துறை, தீயனைப்புத்துறை, சுகாதாரத்துறை. மேலும் கட்டிடத்தின் உறுதி குறுத்து ஒரு சான்றிதழ் (இது யார் அளிக்க வேண்டும் என்று ஞாபகம் இல்லை)

சரி,

இதில் உள்ள விதிகள் சிலவற்றை பார்ப்போமா
  1. ஆரம்ப பள்ளியானால் ஒரு மாணவனுக்கு (அல்லது மாணவி) வகுப்ப்றையில் 9.5 சதுர அடி இடம் வேண்டும்
  2. உயர் நிலை பள்ளியானால் ஒரு மாணவனுக்கு (அல்லது மாணவி) வகுப்ப்றையில் 11 சதுர அடி இடம் வேண்டும். அதாவது 40 மாணவர்கள் இருக்கும் ஒரு வகுப்பறை 440 சதுர அடி இருக்க வேண்டும் (சுமாராக 20 x 22 அடி)
  3. 100 சதுர அடிக்கு குறைவாக அறைகள் இருக்க கூடாது
  4. வகுப்பறை நீள்சதுரமாக இருக்க வேண்டும், நீளம் : அகலம் :: 3:2
  5. வகுப்பறையின் நீளம் 35 அடிக்கு மேல் இருக்க கூடாது
  6. ஒரு வகுப்பறையில் 40க்கு மேல் மாணவர்கள் இருக்க கூடாது
  7. வகுப்பறையின் உயரம் 10 அடி
  8. ஒவ்வொரு அறைக்கும் 2 வாசல்கள் இருக்க வேண்டும்
  9. வகுப்பறைகள் நடமாடும் பாதையாக உபயோகப்படுத்தக்கூடாது
  10. ஒரு வகுப்பின் ஒரு பக்கம் கண்டிப்பாக வெரண்டா (தாழ்வாரம் என்ற சொல் பொருத்தமானதா ??) இருக்க வேண்டும்
  11. சாளரங்கள், தரையின் பரப்பளவிற்கு 20 சதம் இருக்க வேண்டும்
  12. சாளரங்கள் 2.5-3 அடி தரையிலிருந்து மேல் இருக்க வேண்டும்
  13. காலதர் (காற்றுவாரி சன்னல், காற்றோட்டி, காற்றோட்டம்வழங்கி, வென்டிலேட்டர் மருத்துவமனையில் இன்னொரு வென்டிலேட்டர் உண்டு. அதன் செயல் வேறு) தரையின் பரப்பளவிற்கு 2 சதவிதம் இருக்க வேண்டும் அல்லது ஒரு மாணவனுக்கு 48 சதுர இன்சுகள் இருக்க வேண்டும்
  14. ஆசிரியர்களுக்கு மாணவர்களுக்கும் தனித்தனி கழிப்பறைகள்
  15. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி கழிப்பறைகள்
  16. 100 மாணவர்களுக்கு 6 சிறுநீர்க்கழிப்பிடங்கள் (20 இன்சுகள் அகலம்)
  17. 50 மாணவர்களுக்கு 1 கழிப்பறை
  18. 25 மாணவிகளுக்கு 1 கழிப்பறை
  19. பாதுகாக்கப்பட்ட குடிதண்ணிர்
  20. முதலுதவி பெட்டி இருக்க வேண்டும்

நீங்கள் படித்த, நீங்கள் பார்த்த, உங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் எத்தனை பள்ளிகள் மேற்குறிப்பிட்ட விதிகளின் படி அங்கீகாரம் பெற முடியும் ?? இது தவிர, எத்தனை மாடிகள் கட்டலாம், விளையாட்டுக்கூடம், சாப்பாட்டு அறை, சமையலறை குறித்தும் விதிகள் உண்டு.

இந்த விதிகள் எல்லாம் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டவை. எனவே மலைத்தளங்களில் உள்ள பள்ளிகள் (தற்பொழுது மாத கல்விக்கட்டணம் 5000 ரூபாய்க்கு கீழ் இருக்காது !! கொஞ்ச நாட்களுக்கு முன்னர் தொலைக்காட்சியில் ஒரு பள்ளியை காட்டி விட்டு வருட கட்டணம் 1,44,000 என்று போட்டார்கள் :) ) இந்த விதிமுறைகளின் படி கட்டப்பட்டன.

அது தவிர இப்போதைய காலகட்டத்தை எடுத்தால் லாப நோக்கில்லாமல் கட்டப்பட்ட / நடத்தப்படும் பள்ளிகள், மறைமாவட்டங்களால் (டயோசீஸ்) நடத்தப்படும் பள்ளிகள், தொழிற்சாலைகளுடன் இனைந்த, அந்த தொழிற்சாலை நிர்வாகத்தால் நடத்தப்படும் பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், எஸ்.பி.ஓ.ஏ போன்ற சில பள்ளிகள் பெரும்பாலான (16,17,18 தவிர பிற) விதிகளை கடைபிடிக்கின்றன.

ஆனால் தமிழகத்தில் உள்ள மொத்த பள்ளிகளில் நான் மேலே கூறியவை எத்தனை சதம் என்பதும் அனைவரும் அறிந்ததே. பெரும்பாலான பள்ளிகளில் இந்த விதிமுறைகள் பொருந்தாது.

அப்படியென்றால் பல (60) வருடங்களாக இவர்கள் எப்படி பள்ளியை நடத்தினார்கள் ?? அரசும் எப்படி அனுமதி வழங்கியது ??

கொஞ்சம் தோண்டிப்பார்த்தால் அளிக்கப்பட்ட அனுமதி சில விதிமுறைகளுக்குட்பட்டு / அல்லது நிபந்தனைகளுக்குட்பட்டு என்று இருக்கும் (அதாவது கூட்டனி அமைக்கும் போது சொல்வார்கள் அல்லவா, நிபந்தனையற்ற ஆதரவு, நிபந்தனையுடன் ஆதரவு என்று - அது போல் !!)

இவ்வளவு நாள் கண்டுக்காமல், 2008ல் திடீரென கிடுக்கி பிடி போடுவதன் காரணம் என்ன

திடீரெனறு கூறவில்லை. கடந்த நான்கு வருடங்களாகவே கூறிக்கொண்டிருக்கிறார்கள். சிறுக சிறுக கூறி, இரண்டு மூன்று வாய்தா எல்லாம் அளித்து தற்பொழுது அரசு மிகவும் உறுதியாக விதிகளை கடைபிடிக்கிறது. இவ்வாறு கடுமையாக விதிகள் கடைபிடிக்கப்படுவதற்கான காரணம் கும்பகோனத்தில் 16-07-2004 நடந்த ஒரு துயர சம்பவம் இதில் கவனிக்க வேண்டிய விஷயம். புதிதாக எந்த விதியும் உருவாக்கவில்லை. பழைய விதியைத்தான் கடைபிடிக்கிறோம். விதிகளை கடைபிடிப்பதற்கே நமக்கு மரணம் தேவைப்படுவது சோகமான, சற்று எரிச்சலான, அதே சமயம் கவலைப்படவேண்டிய, மாற்றப்படவேண்டிய விஷயம். புது மாணவர்களை பகடிவதை (ரேக்கிங்) செய்யக்கூடாது என்ற விதி பல வருடங்களாக உள்ளது 1996 (நாவரசு மரனம்) முதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது . பெண்களைப் பகடி/எள்ளல் செய்தல் (ஈவ் டீசிங்) தவறு என்பதை சரிகா ஷா தான் சொல்லவேண்டி இருந்தது. திரையரங்குகள் குறித்த விதிகளை கடைபிடிக்க டெல்லியில் ஒரு தீவிபத்து தேவைப்பட்டது. குறுகலான சந்தில் பல மாடி கட்டிடம் கட்டக் கூடாது என்ற விதியையும் "சூடு" பட்ட பின் தான் கடைபிடிப்போம் என்று நினைக்கிறேன்

சரி இனி சிறுமுகை பள்ளிக்கு வருவோம்

அங்கீகாரம் இல்லாமல் மாணவர்களை சேர்த்து பின்னர் அவர்களுக்கு தேர்வுசீட்டு (தேர்வு நுழைவுச்சீட்டு, தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு; தேர்வுக்கூட நுழை ஒப்புதல் சீட்டு) பெற முடியாமல் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம் செய்து, உண்ணாவிரதம் இருந்து அவர்களை தனிப்பயிற்சிப்பள்ளி (டூடோரியல்) மாணவர்களாக தேர்வு எழுதவைக்கும் சில பள்ளிகளை விட சிறுமுகை காந்தி பள்ளி நிர்வாகம் மிகவும் பொறுப்பாக, நேர்மையாக 2008 மார்ச் மாதமே "அடுத்த வருடம் (2009)" அங்கீகாரம் கிடையாது என்று கூறி விட்டார்கள். ஒரு "அறிவாளி" இந்த அறிவிப்பு தேர்வு நேரம் என்று கோபப்படுகிறார். ஏன் சார், 2009ல் தேர்வு எழுத முடியாது என்று 2008 மார்சிலேயே கூறி விட்டார்களை, பின் எதற்கு இப்படி கரித்து கொட்டுகிறீர்கள் . அவர்கள் இதை மறைத்து 2009 ஜனவரியில் தேர்வு சீட்டு பெறுவதில் சிக்கல் வந்தாலோ, இல்லை, மாணவர்களை வகுப்பில் சேர்த்து விட்டு 2008 ஆகஸ்டில் அங்கீகாரம் பெறமுடியாமல் வேறு பள்ளி செல்லுங்கள் என்று கூறினால் தானே தவறு ??

எனது கேள்விகள்

01. முன்னதாகவே பள்ளியை முடுகிறோம் என்று கூறுவது தவறா ? (கல்வியாண்டின் முடிவிலோ அல்லது இடையிலோ அவர்கள் கூறவில்லையே)

02. ஒரு தனி நபர் ஏன் கை காசை போட்டு பள்ளி நடத்த வேண்டும் ? அவருக்கு என்ன கட்டாயம் ?

03. கல்விப்பணி புனிதமானது தான். நான் மறுக்கவில்லை. ஆனால் தான் பட்டினி இருந்து, தனது பிள்ளைகளையும் பட்டினி போட்டாவது பள்ளி நடத்த வேண்டுமா. (பிச்சை எடுத்த கற்றல் நன்று. ... .பிச்சை எடுத்து கற்பித்தல் ???)

04. பள்ளியை மூடுவது சிறந்ததா, இல்லை கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்று கூறுகிறீர்களா ?

05. பள்ளியை மூடும் நிர்வாகம், சான்றிதழ்களை தர மறுக்கிறதா (அல்லது அது போல் ஏதாவது பிரச்சனையா). நம் காசோடு மாயமாகும் நிதி நிறுவனங்கள் முன் ஆர்ப்பாட்டம் செய்வது சரி. அடுத்த வருடம் மூடுகிறோம் என்று முன்னதாகவே (கட்டணம் வாங்கும் முன்னர், மாண்வர்களை சேர்க்கும் முன்னர்) அறிவித்த ஒரு தனியார் பள்ளியும் நிதி நிறுவனமும் ஒன்றா ??

06. மாணவர்கள் மீது அதிக கட்டண சுமையை திணிக்க விரும்பாமல் இப்பள்ளி மூடப்படுகிறது. தனியார் பள்ளிகள் கொள்ளை அடிக்கின்றன / மெட்ரிக் பள்ளிகள் அக்கிரமம் என்றெல்லாம் அழும் / எழுதும் பத்திரிகைகளும், ஊடகங்களும், ஒரு சில பதிவர்களும், இது போன்ற நிகழ்வுகள் குறித்து ஏன் வாய் திறக்க வில்லை ??

07. ஏற்கனவே மாணவர்கள் இல்லாமல் பல கிராமப்புற பள்ளிகள் மூடப்படுவது தினசரி நிகழ்வாகிவிட்டது. மாணவர்கள் இல்லாததற்கு காரணம் (1) நகர் புறங்களுக்கு மக்கள் செல்வது (2) தமிழகத்தில் அளவிற்கு அதிகமாக கடைபிடிக்கப்பட்ட குடும்ப கட்டுபாடு. 
பள்ளி மூடப்படுவதற்கு காரணம் "50 மாணவர்களுக்கு 3 ஆசிரியர்கள்" என்று "துப்பறிந்து" எழுதும் ஊடகங்கள் (என் வரிப்பணம் வீணாகிறது என்று சில அறிவு ஜீவிகளின் புலம்பல் வேறு கட்டாயம் அந்த கட்டுரையுடன் பெட்டி செய்தி யாக இருக்கும்).... கிராமப்புற மாணவன் படிக்க கூடாது என்று உள்நோக்கமே இது "வரி வீனாகிறது" கட்டுரையாக வருகிறது என்பது என் கருத்து. உங்கள் கருத்து என்ன ?.
மாடு மேய்த்துக்கொன்டிருந்தவனை சாப்பாடு போட்டு பள்ளிக்கு அழைத்த காலம் போய், இன்று பள்ளிக்கு வருபவனை பள்ளியை மூடி விட்டு அடுத்த ஊருக்கு போ என்றால் அதன் விளைவு என்னவாக இருக்கும் ??

08. ஒரு ஊரில் இருக்கும் 10 தனியார் பள்ளிகளில் 4 மூடப்பட்டால் பிற பள்ளிகளின் கட்டணம் உயருமா, குறையுமா ?? ஏற்கனவே "சிக்கன நடவடிக்கை" யாக அரசு பள்ளிகள் மூடப்படுகின்றன. இப்படி தனியாரும் மூடும் இதே நிலைமை தொடர்ந்தால், (கண்டிப்பாக தொடர சாத்தியக்கூறுகள் உள்ளன), இது போல் பல தனியார் பள்ளிகளும் மூடு விழா நடத்தினால், கல்வி என்பது மேட்டுக்குடிகளுக்கு மட்டும் என்று ஆகும் நாளை (ஐம்பது வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலைமை) நோக்கி நாம் போகிறோமா ??

09. ஒரு தனி நபர் இந்த தொழில் செய்ய வேண்டும், அதுவும் அவர் நஷ்டப்பட்டாலும் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம், மறியல் செய்ய நமக்கு உரிமை உள்ளதா??

10. மெட்ரிக் பள்ளிகள் / தனியார் பள்ளிகள் என்றாலே வெறுப்புடன் எழுதும் ஊடகங்கள் / ஒரு சில பதிவர்கள் இனைந்து ஒரு பள்ளியாவது நடத்தி 500 மாணவர்களுக்காவது கல்வி கற்பிக்கத்தயாரா ??

11. விதிமுறைகளின் படி பள்ளி நடத்த முடியாது. விலக்கு அளிக்க வில்லை என்றால் மூடத்தான் வேண்டும் எனறு அனைத்து பள்ளிகளும் கூறினால் அரசு என்ன செய்ய வேண்டும். விதிமுறைகளை தளர்த்தலாமா, இல்லை கறாராக விதிகளை (பள்ளிகள் மூடப்படும் அபாயம் இருந்தாலும்) கடைபிடிக்க வேண்டுமா ??

உங்களின் கருத்தை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்

இந்த இடுகை தொடரின் அடுத்த பதிவுகள்

Wednesday, April 02, 2008

கற்றது தமிழ் : 1 : மார்ச் 2008

சென்ற மாதம் நான் தமிழில் புதிதாத கற்ற / உபயோகித்த சொற்களை வரிசைபடுத்த இந்த பதிவு. நான் பயன்படுத்தும் தமிழ் சொற்கள் பெரும்பாலும் tamilvu.org தளத்தில் உள்ளவையே. அப்படி இல்லாமல் நானாக புதிதாக உருவாக்கிய பதங்கள் நீல நிறத்தில் உள்ளன

சொற்கள் குறித்த உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. இதை விட சிறந்த தமிழ் சொல் வழக்கத்தில் / புழக்கத்தில் / நிகண்டில் இருந்தால் கூறவும்

தடங்கலில்லா மின் வழங்கி (த.மி.வ ) - UPS
தானியங்கி பணம் வழங்கி (தா.ப.வ) - ATM
செலவட்டை - Debit Card
தானியங்கி பணம் வழங்கி அட்டை - ATM Card

அடிப்படை சம்பளம் - Basic Pay
அகவிலைச்சம்பளம் - Dearness Pay (DP)
அகவிலைப்படி / பஞ்சப்படி - Dearness Allowance (DA)
மருத்துவப்படி - Medical Allowance
விட்டு வாடகை படி - House Rent Allowance (HRA)
பயணப்படி - Travelling Allowance (TA)
தினப்படி - Daily Allowance (DA)
வருடாந்திர ஊதிய உயர்வ - Increment
கால முறை ஊதியம் - Time Scale of Pay
சம்பள ஏற்றமுறை - Pay Scale
தொகுப்பூதியம் - Consolidated Pay
செலவழித்தது திருப்பிக் கொடு - Reimburse

(இரயிலில்) குளிர்சாதன இரண்டடுக்கு - AC II Tier (Train)
(இரயிலில்) முதல் வகுப்பு - First Class (Train)
(இரயிலில்) குளிர்சாதன முன்றடுக்கு - AC III Tier(Train)
(இரயிலில்) குளிர்சாதன நாற்காலி வகுப்பு - AC Chair Car (Train)
(இரயிலில்) குளிர்சாதன முதல் வகுப்பு - AC First Class (Train)

வேலை முறைப் பட்டியல் - Roster
சுழற்சி முறைப் பட்டியல் - Rotation Roster
100 புள்ளி முறைப்பட்டியல் - 100 point Roster

தணிக்கை - Audit
மேற்பார்வை - Supervision
இருப்பு பதிவேடு - Stock Register

பேராசிரியர் - Professor
விரிவுரையாளர்கள் - Lecturers
மீண்டுமீண்டெழுது தண்டம் - Imposition
உடற்கூறியல் - Anatomy
எலும்பியல் - Osteology
திசுவியல் - Histology
கதிரியல் - Radiology

Tuesday, April 01, 2008

கல்லூரி கதைகள் : 2 : வட இந்திய மாணவர்கள்

கல்லூரி கதைகள் : 2 :

அடுத்து வரும் பல கல்லூரி கதைகள் எங்களுடன் படித்த வட இந்திய மாணவர்கள் சம்பந்தப்பட்டது.

மேலும்
  • கிராமப்புற சேவை, கட்டாய சேவை, (இரண்டும் ஒன்று கிடையாது - கிராமப்புற சேவை வேறு, கட்டாய சேவை வேறு),
  • இடஒதுக்கீடு,
  • சிறப்பு மருத்துவர் பற்றாக்குறை, மருத்துவக்கல்லூரிகளில் சிறப்பு மருத்துவர் பற்றாக்குறை, அதே சமயம் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள இடங்களுக்கு அதிக போட்டி

போன்ற விஷயங்களை வரும் வாரங்களில் அலச இருக்கிறோம். இவை அனைத்திலும் இந்த வட இந்திய மாணவர்கள் தமிழகத்தில் படிப்பது (மற்றும் வட மாநிலங்களில் படிக்க செல்லும் நம் மாணவர்கள் அங்குள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களாலேயே மிரட்டப்படுவது, படிக்க முடியாமல் திரும்புவது) முக்கிய இடம் பெறுவதால் ஒரு சிறு முன்னுரை

தமிழக மருத்துவக்கல்லூரிகளில் உள்ள இடங்கள் அனைத்தும் மாநில அரசால் நிரப்பப்படுவது கிடையாது. இதில் 15 % இடங்களுக்கான மாணவர்கள் மத்திய அரசு நிறுவனமான ஏ.ஐ.ஐ.எம்.எஸ் நடத்தும் நுழைவு தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மீதி 85 % இடங்கள் மட்டுமே மாநில அரசால் (சுகாதார துறையின் கீழ் இடங்கும் மருத்துவக்கல்வி இயக்குனரகத்தால்) நிரப்பப்படுகிறது.

இந்த 15 சதவிகிதத்தில் பெரும்பாலும் வட இந்திய மாணவர்களே வருவார்கள். தமிழ் நாட்டு மாணவர்கள் மிகவும் குறைவு தான். இதற்கு பல காரணங்கள்
1. அந்த நுழைவுத்தேர்வு சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும்.
2. இந்த தேர்வின் முடிவுகள் (நான் படித்த காலங்களில்)தமிழக அரசு முடிவுகளை விட மிகவும் பின்னர் வெளியிடப்பட்டு வந்தது (தற்பொதைய ஒழுங்கு படுத்தி உள்ளார்கள்)

நான் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த வருடம் மார்ச் மாதத்தில் 12ஆம் வகுப்பு தேர்வும், ஏப்ரல் மாதத்தில் நுழைவு தேர்வும் நடந்தது. மே மாதம் இரு முடிவுகளும் வெளியிடப்பட்டன. ஜூன் இரண்டாம் வாரத்தில் தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது. ஜூன் கடைசியில் கட்டணம் செலுத்தி ஜூலை 1ஆம் தேதி முதல் எங்கள் கல்லூரி பயணம் ஆரம்பித்தது

அதன் பின்னர் மெதுவாக தான் இந்த அனைத்திந்திய நுழைவுத்தேர்வு முடிவு வந்தது. அப்பொழுது நாங்கள் எல்லாம் உடற்கூறியல் (அனாடமி)பிரிவு பிளப்பாய்வு (டிஸ்ஸெக்‌ஷன்) அரங்கில் பார்மலின் வாடையுடன் இருந்ததால் அது பற்றி கவலைப்படவில்லை. எனவே என் இடம் காத்திருப்பு பட்டியலில் இருந்த ஒரு மாணவனுக்கு ஒதுக்கப்பட்டது.

ஏ.ஐ.ஐ.எம்.எஸ் நிறுவனம் இரண்டு தேர்வுகளை நடத்துகிறது
1. ஏ.ஐ.ஐ.எம்.எஸ் ல் உள்ள 40 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கான தேர்வு
2. நான் மேலே கூறிய அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும் உள்ள 15 % இடங்களுக்கான தேர்வு

இதில் ஏ.ஐ.ஐ.எம்.எஸ் ல் உள்ள 40 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கான தேர்வு ஜூன் மாதத்தில் நடத்தப்பட்டு ஒரு வாரம் / இரு வாரங்களில் முடிவு வெளியிடப்படும். அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும் உள்ள 15 % இடங்களுக்கான தேர்வு மே மாததில் நடத்தப்பட்டு ஜூலையில் தான் முடிவு வெளியிடப்படும்

மொத்தமாக தமிழகத்தில் 1000 இடங்கள் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள் (சும்மா ஒரு கணக்கிற்கு. இது நிஜ எண்ணிக்கை அல்ல) இதில் 850 மாநில அரசிற்கு. 150 மத்திய அரசிற்கு.

இதில் ஒரு சுட்சுமம் இருக்கிறது.
இந்த (அனைத்திந்திய) தேர்வு முடிவு மே மாதமே வந்திருந்தால் நான் அதில் சேர்ந்திருப்பேன் (நான் மட்டும் அல்ல. தமிழகத்தில் சுமார் 50 மாணவர்களாவது இரண்டிலும் தேர்ச்சி பெற்றிருப்பார்கள்).
எனவே மத்திய அரசு தேர்வு மூலம் சேரும் மாணவர்களில்
100 பேர் வட இந்தியர்கள்
50 பேர் தமிழர்கள்
நாங்கள் 50 பேரும் தமிழக அரசு தேர்விலும் தேர்ந்தெடுக்கபட்டிருப்பதால், இங்கு காத்திருப்பு பட்டியலில் இருக்கும் 50 மாணவர்களுக்கு இடம் கிடைக்கும்
ஆக மொத்தம் 850 + 50 = 900 தமிழர்கள்

ஆனால் (அனைத்திந்திய) தேர்வு முடிவு மிக தாமதமாக வந்ததால் நாங்கள் அனைவரும் மாநில அரசின் இடங்களிலேயே சேர்ந்து விட்டோம். மத்திய அரசில் உள்ள எங்கள் இடங்கள் காலியிடங்களாக கருதப்பட்டு அனைத்திந்திய தேர்வு காத்திருப்பு பட்டியலில் உள்ள வர்களுக்கு இடம் அளிக்கப்பட்டது

ஆக தாமதமான முடிவு என்பது முதலில் மாநில தேர்வு பட்டியலை வெளியிடும் மாநிலங்களுக்கு பாதகமாகவே இருந்தது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது தமிழகம் மற்றும் மகாராஷ்டிரம். மகாராஷ்டிரத்தில் உள்ள அனைத்திந்திய நுழைவுத்தேர்வு இடங்களில் பெரும்பாலும் வட இந்தியர்களே உள்ளனர் !!!

இப்படி தாமதமாக அனைத்திந்திய தேர்வுபட்டியல் வெளியிடப்படுவதால் நம்மாநில மருத்துவ மாணவர்கள் இடங்களை இழக்கிறார்கள் என்று கண்டுபிடித்தவுடன் நம் மக்கள் அடுத்த வருடம் ஜூலை வரை மூச்சு காட்ட வில்லை. அந்த வருடம் வட இந்திய மாணவர்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே சேர்ந்தனர்.

அடுத்த வருடம் அவர்களும் ஆகஸ்ட் வரை முடிவு வெளியிட வில்லை. அவர்கள் விடாக்கண்டன் என்றால் நம்ம ஆட்கள் கொடாக்கண்டனாக இருந்துவிட்டார்கள். இதை பார்த்த மகாராஷ்டிர மருத்துவ கல்வி துறையும் அலுங்காமல் காது குடைந்து கொண்டிருந்தார்கள். அதன் பின்னர் இதற்கு சட்டம் கொண்டு வந்ததும், இந்த விஷயங்கள் உச்ச நீதிமன்றம் வரை சென்றதும் தனிக்கதை

இப்படியாக சுமார் 300 இடங்கள் வரை நாம் அனைத்திந்திய மாணவர்களுக்கு வழங்குவதால் வருடத்திற்கு தமிழகத்திற்கு 250 மருத்துவர்கள் கிடைப்பதில்லை என்பது தெரிந்தவுடன் மெதுவாக போராட்டங்கள் ஆரம்பித்து உள்ளன. அதே போம் தமிழகத்தில் உள்ள 914 மருத்துவ மேற்படிப்பு இடங்களில் 50 சதவிகிதம் , 457 இடங்கள் அனைத்திந்திய தேர்வு மூலம் நிரப்பப்படும்.

சரி இனி கதைக்கு வருவோம்.

இப்படியாக அனைத்திந்திய தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னையில் படித்துக்கொண்டிருந்த இரு மாணவர்களுக்கு கிண்டியில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகம் செல்ல வேண்டி வந்தது.

யாரோ ஒருவர், கிண்டி வரை மின்சார ரயிலில் செல்லுங்கள். அங்கிருந்து பல்கலைக்கழகம் அருகில்தான் என்று கூறிவிட இவர்களும் வழக்கமாக மின்சார இரயிலில் வீடு செல்லும் ஒரு சென்னை மாணவனுடன் சேர்ந்து கொண்டு இரயில் ஏறி, கின்டியில் இறங்கவும் பயணச்சீட்டு பரிசோதகர் வந்து விட்டார்.

வழக்கமாக மின்சார இரயிலில் வீடு செல்பவர் தனது சீசன் பயணச்சீட்டை காட்டி விட்டார். அடுத்தவர்களிடம் டிக்கெட் என்று கேட்கவும்,

டாக்டர் 1 : டிண்ட் டேக் (எடுக்க வில்லை)
பரிசோதகர் : வை (ஏன் )
டாக்டர் 1 : கண்டக்டர் டிண்ட் கம் (நடத்துனர் வர வில்லை )
பரிசோதகர் : :(
டாக்டர் 2 : இதர் டு கிண்டி க்யா டிக்கெட் . லாங் டிஸ்டண்ட் ஒன்லி டிக்கெட்

பரிசோதகர் கடுப்பாகி இருவரையும் நிலைய மேலாளரிடம் (அல்லது எந்த அதிகாரி என்று தெரியவில்லை) கூட்டி செல்ல, மேற்படி விசாரனையில் டாக்டர் 1 அந்தமானிலிருந்து வந்தார் என்றவுடன் அவர் மேல் பரிதாபப்பட்டு !!! (அங்கு இரயில் கிடையாது :) :) :) அவர் இது வரை இரயிலில் சென்றது கிடையாது என்று தெரிந்தவுடன்) விட்டு விட்டார்கள்.

டாக்டர் 2விடமிருந்து (பீகாரி) தண்டம் (பைன்) வாங்கியபின் தான் விட்டார்கள்

கூட சென்னை மாணவன் ஒருவன் சென்றதால் இந்த கதை வெளி வந்தது. இவர்கள் தனியாக சென்று என்னென்ன கூத்து அடித்தார்கள் என்று யாருக்கு தெரியும் ???
இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...