இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Thursday, July 31, 2008

தமிழைக்கூட தமிழில் கற்பது கடினமா ?? எங்கே செல்லும் இந்த பாதை

இந்த இடுகைத்தொடர் சிறந்த இடுகையாக தமிழ் மொழி, கலாச்சாரம், வரலாறு, தொல்லியல் பிரிவில் 2008ஆம் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டது
இடம் : முதலிடம்

-oOo-

இன்றைய இந்து நாளிதழில் வந்த தமிழ் வழிக்கல்விக்கு எதிரான கட்டுரை ஒன்று என்னை பயங்கரமாக் கடுப்பேற்றி விட்டது. தவறான தகவல்களுடன் கட்டுரைகளை எழுதுவது துப்பறியும் இதழ்கள் மட்டும் தான் என்ற நிலையிலிருந்து சமிப காலங்களில் தினசரிகள் கூடநினைத்தை எல்லாம் எழுதும் போக்கு அதிகரித்து வருகிறது. சமீபத்திய உதாரணம் வன்முறை தடுப்பு சட்டம் குறித்து நேற்று திணமனியின் வந்த தவறான தலையங்கம் அதை விட இன்றைய இந்து கட்டுரை வருத்தமளிக்கக்கூடியதாக உள்ளது.

கட்டுரையின் சில “அரிய” கருத்துக்களும், அதற்கு என் விளக்கம் / கருத்துகளும் கீழ் உள்ளது. முழு கட்டுரையையும் தமிழ் படுத்தாததாலும் எனது மொழி மாற்றததால் கருத்து மாற வாய்ப்பு உள்ளதாலும் ஆங்கில வரிகளையும் சேர்த்து அளித்திருக்கிறேன்
பள்ளி படிப்பு சவாலாகும் இந்த கால கட்டத்தில் மாணவர்களுக்கு மேலும் ஒரு சவால் - மொழி (At a time when school education has become quite demanding, students with Tamil as the medium of instruction seem to be having an additional challenge – that of language.)
தமிழ் கற்பது பாரமாம். ம்ம்ம்ம்ம்

பேச்சு தமிழும் எழுத்து தமிழும் வேறு என்பதால் மாணவர்கள் புரிந்து கொள்ள கஷ்டப்படுகிறார்கள் என்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள் (Since spoken Tamil is considerably different from formal, written, Tamil, understanding concepts becomes difficult, say teachers.)
அப்படியா. ஆசிரியர்கள் தானே கூறுகிறார்கள். யாராவது மாணவர்களிடம் கேட்க வேண்டியது தானே

புவி ஈர்ப்பு சக்தி போன்ற சொற்கள் பேச்சு தமிழில் உபயோகிக்கப்படுவது இல்லை. (“Words such as puvi eerpu sakthi (gravity) are hardly used in conversational Tamil. Scholars perhaps use it while delivering a formal speech. Otherwise, our spoken Tamil is largely different from what the child reads in textbooks,” says the teacher of a Corporation school. )
இது குறித்து பதிவர் பத்ரி தனது பதிவில் ஒரு அருமையான கேள்வி கேட்டுள்ளார் “எதைச் சொல்லி அழ? (“புவி ஈர்ப்பு விசை”) இதில் எது கஷ்டம்? புவியா, ஈர்ப்பா, சக்தி அல்லது விசையா? அனைத்தும் தினசரிப்புழக்கத்தில் உள்ளவைதானே? புவியியல் என்பதுதானே பள்ளிக்கூடப் பாடத்தின் பெயர். “பூமி புட்ச்சு இழுக்கும் ஃபோர்ஸ்” என்று அதற்குப் பெயர் வைக்கவேண்டும் என்றா இந்த ஆசிரியர் விரும்புகிறார்?” அது சரி, கிராவிட்டி என்ற சொல் மட்டும் பேச்சு வழக்கில் உள்ளதா. புதிதாக எந்த சொல்லையும் கற்று தருவதற்கு பள்ளிகளுக்கு தடை எதுவும் உள்ளதா. பேச்சு வழக்கில் உள்ள சொற்களை மட்டும் போதிப்பதற்கு பள்ளி எதற்கு. ஆசிரியர்கள் எதற்கு என்ற கேள்வி எழாமல் இல்லை.

ஆசிரியர்கள் கூட புரிந்து கொள்ள சிரமப்படுகிறார்கள் (“Sometimes, even teachers find it difficult to understand,” she says, on condition of anonymity.)
மாணவர்கள் புரிந்து கொள்ள சிரமப்படுகிறார்களா ??

ஆங்கிலம் போன்ற மொழிகளில், பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும் ஒன்றாக இருந்தாலும் அவற்றை தனியாக பார்க்கிறார்கள். (Even for a language such as English, where the written and spoken forms are the same, there is a practice of looking at the two independently. )
ஆங்கிலத்தில் வேறு ஒரு பிரச்சனை உண்டு என்பதை இவர்கள் ஏன் மறந்தார்கள். ஆங்கிலத்தில் எழுத்துகளுக்கும் உச்சரிப்பிற்கும் சம்மந்தம் கிடையாதே

ஒரே எழுத்துக்கள் / ஒரே வார்த்தை பல முறைக்ளில் உச்சரிக்கப்பட வேண்டும். (the aeroplance என்பதில் உள்ள theயும் the blog என்பதில் உள்ள theவும் ஒரே போலாகவா உச்சரிக்கப்படவேண்டும். read என்பது ரெட், ரீட் என்று இரு உச்சரிப்பு உள்ளதா இல்லையா) பல வார்த்தைகள் ஒரே போல் உச்சரிக்கப்படும் (red, read இரண்டும் ரெட் தான்) சிக்கலான மொழி தானே ஆங்கிலம். அப்படிபட்ட மொழியா எளிது ?? ஆனால் எழுத்தும் உச்சரிப்பும் ஒரே போல் உள்ள மொழியா தமிழ் கடினமா ?? என்ன கொடுமை சார் இது

ஆனால் தமிழில், இதற்கு வழி கண்டுபிடிக்க வேண்டும் (“But in Tamil, which is more complex, we are yet to find a solution to bridge the gap,” says the headmaster of a government higher secondary school. “Some students assign a colloquial equivalent to the difficult words in order to understand. But the process is cumbersome,” he adds.)
மாணவர்களுக்கு பிரச்சனையா அல்லது ஆசிரியர்களுக்கு பிரச்சனையா என்று தான் தெரியவில்லை :) :(

இந்த பிரச்சனை உயர் வகுப்புகளில் பெரிதாகிறது (And the problem, teachers say, gets compounded as the child goes to higher classes. )
அடப்பாவி :(

அறிவியல் போன்ற பாடங்களை படிக்க மட்டும் சிரமம் இல்லை. தமிழில் கூட அவர்கள் சிக்கலான பதங்களை கற்ற வேண்டும். வேறு வழியில்லாததால் அவர்கள் மனப்பாடம் செய்கிறார்கள். (“Children find it hard not only while learning subjects such as science. Even in Tamil itself, they have to constantly learn very complex terms. Without any choice, they resort to memorising without any understanding,” says a class VI teacher of a government-aided school in Central Chennai.)
இவர்கள் என்ன கூற வருகிறார்கள் என்று புரியவில்லை. திருக்குறளுக்கு தமிழில் அளிக்காமல் ஆங்கிலத்தில் விளக்கம் அளிக்க வேண்டுமா, அல்லது பாட புத்தகத்திலிருந்து அம்மா என்ற சொல்லை நீக்கி விட்டு மம்மி என்று எழுத வேண்டுமா

பேச்சு மற்றும் எழுத்து மொழிகளுக்கு இடையில் உள்ள வித்தியாசம் கற்பதை கடினப்படுத்துகிறது. (The disparity between the spoken and written forms of Tamil could make the learning process more tedious, experts in linguistics agree. Languages with this inequality are categorised as diglossic. The classic form is often used in writing and sometimes, in public speaking. The spoken language, however, is simpler and far more informal. )
இருபேச்சு (டைக்கிலாசிகு) மொழிகள் என்று பார்த்தால் அதில் தமிழ் போல் பல மொழிகள் உள்ளன. செந்தமிழ் (எழுத மற்றும் மேடை பேச்சுகளில் உபயோகிப்பது) மற்றும் இயற்தமிழ் (பேச்சு வழக்கு) என்று இரு வகைகள் இருப்பது ஒன்றும் புதிதல்ல.

அந்த கால திரைப்பட வசனங்கள் கூட செந்தமிழ் தான். கல்கியின் எழுத்துக்கள் இயற்தமிழாக (ஆனால் அதே நேரம் இலக்கண சுத்தமாக) இருந்த்தது தான் இன்று கூட பொன்னியின் செல்வனையோ அவரின் (அமரர் கல்கியின் ) பிற எழுத்துக்களையோ படித்தாலும் சலிப்பதில்லை. நமக்கு அவை நேற்று எழுதப்பட்டது போல் தெளிவாக புரிகிறது.

செந்தமிழுக்கும் இயற்தமிழுக்கும் உள்ள வேறு பாடு அனைவரும் அறிந்ததே. செந்தமிழ் என்பது தமிழகம் முழுவதும் ஒன்று தான். பேச்சு தமிழ் என்பது கோவையில் வேறு, சென்னையில் வேறு, மதுரையில் வேறு, நெல்லையில் வேறு, நாகர்கோவிலில் வேறு.

இதில் இது போல் இரண்டு வகை இருப்பதால் மாணவர்கள் கற்க சிரமப்படுகிறார்கள் என்று கூறுவது உச்ச கட்ட நகைச்சுவை. இங்கிலாந்தில் பேசப்படும் ஆங்கிலம் வேறு. அமெரிக்க ஆங்கிலம் வேறு. ஏன் அமெரிக்காவிலேயே கிழக்கில் உள்ள உச்சரிப்பு வேறு. மேற்கில் உள்ள உச்சரிப்பு வேறு. அதனால் அமெரிக்கர்கள் ஆங்கிலத்தை தவிர்த்து விட்டு உலகம் முழுவதும் ஒரே போல் உச்சரிக்கப்படும் , பேசுவதைப்போலவே எழுதப்படும் லத்தீனை மட்டுமே பள்ளிகளில் போதிக்க வேண்டும் என்று ஏதாவது அமெரிக்க ஊடகங்கள் எழுதுகின்றனவா ??.

ஆங்கிலம் போன்ற மொழிகளில் இந்த பிரச்சனை இல்லை. (But for languages such as English, this difference hardly exists.)
ஆங்கிலத்தில் உள்ள பிரச்சனை இதை விட பெரிது. அதை நாம் ஏற்கனவே பார்த்து விட்டோம். தமிழில் உள்ள பாடங்களை மனப்பாடம் செய்யும் (வீட்டில் மற்றும் தெருவில் தமிழ் பேசும் சிறார்கள்) ஆங்கிலத்தில் உள்ள பாடங்களை புரிந்து படிப்பார்களா ???
(“While it is very effective when children study through their mother tongue, we should also see how close the written form is to the way a language is spoken,” says N. Deivasundaram, Professor and Director of the Linguistic Studies unit, Department of Tamil Language, University of Madras. This difference is true of most classical languages, he says.)

(“And in Tamil, there are so many regional dialects in spoken form. We have almost arrived at a common spoken form (as is used in films or mainstream). But written Tamil is simple only in mainstream Tamil newspapers and magazines. We need to focus on school textbooks to make learning easier,” he points out.)

(The Tamil Nadu Textbook Corporation is the authorised agency for the printing and supply of textbooks. The content is under the purview of the Directorate of School Education.

When contacted, Director of School Education P. Perumalsamy said the textbook committees were consciously trying to make the content more accessible. “We are trying to use simple language wherever possible. Only the technical terms cannot be simplified in subjects such as science,” he says. )
இந்த இந்து கட்டுரையின் முக்கிய குறைபாடுகள்
  1. மாணவர்களிடம் கேட்காமல் ஆசிரியர்களிடமும், சில “மொழியியல் அறிஞர்களிடமும்” மட்டுமே கருத்து கேட்டு அதை வைத்து முடிவு கட்டுவது
  2. தமிழின் “இருபேச்சு” பிரச்ச்னையை மட்டும் பிடித்து கொண்டு தொங்கி ஆங்கிலத்தில் உள்ள இதை விட பெரிய பிரச்சனைகளை மறந்தது அல்ல மறைத்தது
  3. அரசு (மாநகராட்சி) பள்ளிகள், மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை மட்டும் குறிவைத்து எழுதியுள்ளது (இதை உங்களில் எத்தனை பேர் கவனித்தீர்கள் என்று தெரியவில்லை)
என் கருத்துக்கள்

பாடம் புரியாததற்கு முக்கிய காரணம் அது நடத்தப்படும் மொழி அல்ல. அதற்கான காரணங்கள்
  1. காலத்திற்கு ஒப்பாத பாடத்திட்டம்
  2. மோசமான பாடநூல்
  3. நடத்த தெரியாத / முடியாத ஆசிரியர்கள்
  4. கேவலமான தேர்வு முறை
அப்படியென்றால் செய்ய வேண்டிய வழிகள் என்ன
  1. காலத்திற்கு ஏற்ற பாடத்திட்டம் - 1000 வருடங்களுக்கு முன்னர் நமது இலக்கியங்கள், இதிகாசங்கள் அனைத்தும் த்லைமுறை தலைமுறையாக மன்ப்பாடம் செய்யப்பட்டே காப்பாற்றப்பட்டு வந்தன. எழுதியதை பிரதி எடுப்பதில் (காகிதம் கண்டுபிடிப்பதற்கு முன்) உள்ள நடைமுறை சிரமங்களால் வேதங்கள் முதல் இதிகாசங்கள் வரை அனைத்தும் மனப்பாடம் செய்யப்பட்டே அடுத்த தலைமுறைக்கு வழங்கப்பட்டன. எனவே மனப்பாடம் செய்வது தான் படிப்பதில் முக்கிய விசயம் என்றாகியது. இதனால் தான் மனப்பாடம் செய்யும் திறனுக்கு அதிக முக்கியம் வழங்கப்பட்டு பிற திறன்கள் பின்னுக்கு தள்ளப்பட்டன. இன்று வரை அதே எண்ணதில் கல்வி முறை அமைந்திருப்பது கொடுமை
  2. சுவாரசியமான தரமான பாடநூல்கள் - பாடநூல்களை சரியாக மட்டும் எழுதினால் போதாது. சுவாரசியமாகவும் எழுத வேண்டும்
  3. ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி. ஒவ்வொரு வருடமும் குறைந்தது 10 நாட்களாவது ஆசிரியர்களுக்கு மாற்றப்பட்ட பாடத்திட்டம் மற்றும் பிற மாற்றங்கள் குறித்த பயிற்சி கண்டிப்பாக தேவை
  4. தேர்வு முறை மாற்றம் : மனப்பாடம் செய்யும் திறனை மட்டுமே சோதிக்கும் தேர்வு முறை மாற்றப்பட வேண்டும். அனைத்து திறன்களையும் சோதிக்க வேண்டும்
இவற்றில் கடந்த வருடம் சில பள்ளிகளில் ஒரு புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தினார்கள் - செய்ல் முறை கல்வி, 5ஆம் வகுப்பு வரை தேர்வு இல்லை போன்ற நல்ல திட்டங்கள் இருந்தாலும் “எம்புள்ள என்ன மார்க்குன்னு எனக்கு தெரியனும்” என்று சில பெற்றோர்கள் குரலெழுப்பியதால் அந்த திட்டம் தள்ளாடுகிறது.

இன்று பள்ளி கல்வி முடித்து கல்லூரியில் சேரும் மாணவர்களில் 75 சதவிததினருக்கு ஒரு விடுப்பு விண்ணப்பம் கூட முறையாக எழுத தெரியவில்லை என்பது வேதனை தானே (ஆங்கிலத்திலும் எழுத தெரியவில்லை, தமிழிலும் எழுத தெரியவில்லை என்பது கூடுதல் வேதனை)

இதை சரிசெய்வதற்கு ஆயிரம் வழிகள் இருக்க “சில காரனங்களுக்காக” , “சில விளைவுகளை எதிர்நோக்கி” ஊடகங்கள்
  1. தமிழ் வழி கல்விக்கு எதிராகவும்,
  2. இலவச கல்விக்கு எதிராகவும்
  3. அரசு பள்ளிகளுக்கு எதிராகவும்
எழுதுவது வேதனையளிக்கும் விடயம்.

கல்வி குறித்த எனது முந்தைய இடுகைகள்

வன்முறை தடுப்பு சட்டம் குறித்த திணமனியின் தவறான தலையங்கத்திற்கு என்ன அவசரம்

இன்றைய (29 சூலை 2008) திணமனி இதழில் முற்றிலும் தவறான கருத்துக்களோடு ஒரு தலையங்கம் வந்துள்ளது. அதற்கு வரிக்கு வரி பதில்கள்
//சட்டத்திற்கு என்ன அவசரம்?//
பொருள் இழப்பு மற்றும் உயிர் இழப்பை காக்க இது அவசரமே. இது குறித்து நான் விபரமாகவே எனது இடுகைகளில் எழுதியுள்ளேன்
//ஊயிர் காக்கும் மருத்துவப் பணியில் உடுபட்டிருப்பவர்கள் சிறிய தவறுகளுக்குக்கூட தாக்கப்படுவதும், கடுமையான சட்டவிதிகளின் பேரில் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்படுவதும் நியாயமில்லைதான். //
அப்பாடா உண்மையை சொல்லீட்டீங்க
//ஆதேநேரத்தில், ஆவர்கள் ஏந்தவிதக் கட்டுப்பாடுக்கும் ஆப்பாற்பட்டவர்களாகவும், ஏத்தகைய தவறுகள் ஈழைத்தாலும் சட்டத்திற்கு ஊள்படாதவர்களாகவும் ஈருப்பது ஏன்பது ஐற்புடையதல்ல.//
தவறான தகவல். இந்த சட்டம் என்பது மருத்துவர்களோ மருத்துவமனையோ தாக்கப்படுவதற்கு எதிரானது தானே தவிர, (அதாவது அவர்களுக்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிரானது) அவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் சட்டபூர்வ நடவடிக்கைக்கு எதிரானது அல்ல
//ஆந்திர மாநிலத்தைத் தொடர்ந்து, சமீபத்தில் தமிழகத்திலும் ஆரசு ஃர் ஆவசரச் சட்டத்தின் மூலம் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவி-யர்கள், செவி-ய மாணவர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்களுக்குப் பாதுகாப்பு ஆளிக்க முற்பட்டிருக்கிறது. மருத்துவ சேவையின் தரத்துக்கும், முறையான சிகிச்சைக்கும் நோயாளிகளுக்கு ஊத்தரவாதம் ஆளிக்கப்படாமல், மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு ஏன்பது மக்கள் விரோத நடவடிக்கையாக ஆல்லவா தெரிகிறது.//
உத்திரவாதத்திற்கு போதிய சட்டங்கள் இருக்கின்றன. மருத்துவமனைகள் வன்முறை கும்பலால் தாக்கப்படுவதை தடுக்கத்தான் இந்த சட்டம்.
//சமீபகாலமாகத் தனியார் மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், செவி-யர் கல்லூரிகள் ஏன்று புற்றீசல்கள்போலப் பெருகிவிட்ட நிலைமை. ஆதிக மருத்துவர்களும், மருத்துவமனைகளும், பரவலாக்கப்பட்ட மருத்துவ சேவையும் ஆடிப்படைத் தேவை ஏன்பதை மறுப்பதற்கில்லை. ஆதேநேரத்தில், தரமான மருத்துவச் சேவையும், முறையான வைத்தியமும் தரப்படுவதும் முக்கியமல்லவா?//
தரமான மருத்துவச்சேவையையும், முறையான வைத்தியத்தையும் இந்த சட்டம் தடுக்க வில்லை
//மருத்துவர்களுக்கு முன்பிருந்த சேவை ஊணர்வு முற்றிலுமாக மறைந்து, ஆதை ஓரு தொழிலாக நினைத்துச் செயல்படுபவர்கள்தான் ஆதிகம். ஈந்த நிலையில் ஆவர்களைப் பாதுகாக்க ஈப்படி ஓரு சட்டம் தேவைதானா ஏன்பதுதான் கேள்வி.//
கண்டிப்பாக. உங்களுக்கு ஒரு சேவையின் மீது குறைபாடு இருந்தால் அது குறித்து விவாதியுங்கள். தவறு என்று தோன்றினால் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள். அல்லது காவல் துறையிடம் புகார் அளியுங்கள். அதை விடுத்து மருத்துவமனையை நொறுக்குவதற்கும், பணியாளர்களை தாக்குவதற்கும் அனுமதி வேண்டும் என்று கேட்பது சரியா. அதைத்தான் இந்த சட்டம் தடுக்கிறது.
//ஆரசின் ஆவசரச் சட்டத்தின்படி, மருத்துவத் துறையைச் சேர்ந்த பதிவு செய்துள்ள டாக்டர்கள், செவி-யர்கள், மருத்துவ மற்றும் செவி-ய மாணவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களைத் தவறான சிகிச்சை, சிகிச்சை சம்பந்தமான கருத்து வேறுபாடு மற்றும் கட்டணத்தின்மீது ஆதிருப்தி போன்றவைக்காக யாராவது தாக்க முற்பட்டால், ஆவர்கள் ஈனி ஆபராதத்துடன் மூன்று முதல் பத்து இண்டுகள் சிறைத்தண்டனை ஆனுபவிக்க வேண்டி வரும்.//
அவர்கள் ”தாக்க” முற்பட்டால் தான் தண்டனையே தவிர, அவர்கள் மருத்துவ கவுண்சிலிலோ, காவல்துறையிலோ, நுகர்வோர் நீதிமன்றத்திலோ புகார் அளிக்க எந்த தடையும் கிடையாது
// ஆதுமட்டுமல்ல, இத்திரத்தில் மருத்துவமனைக்கோ, ஆங்கிருக்கும் கருவிகளுக்கோ சேதம் ஐற்படுத்தினால் நீதிமன்றத்தின் ஊத்தரவுப்படி சேதப்படுத்தியவர் நஷ்ட உடும் கொடுக்க வேண்டும்.//
இதில் என்ன தவறு. என்ன சொல்ல வருகிறார்கள். யார் மேலாவது கோபம் வந்தால் அவர் வீட்டையோ அலுவலகத்தையோ அடித்து நொறுக்க சட்டப்படி அனுமதி கேட்கிறாரா
//முன்னாள் ஊச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி லக்கோதி ஓரு வழக்கில் வழங்கி ஈருக்கும் தீர்ப்புப்படி, ஏந்தவொரு மருத்துவரைக் கைது செய்வதற்கோ, ஆவர்மீது நடவடிக்கை ஏடுப்பதற்கோ, ஈன்னொரு தகுதி வாய்ந்த மருத்துவர், சம்பந்தப்பட்ட மருத்துவரின் சிகிச்சையில் தவறு நடந்திருக்கிறது ஏன்று எர்ஜிதம் செய்ய வேண்டும் ஏன்று கூறப்பட்டிருக்கிறது.//
இதில் என்ன தவறு
// ஆதுமட்டுமல்ல, தகுந்த காரணங்கள் ஈருந்தாலொழிய ஆவர்களை ஜாமீனில் விடுதலையாக முடியாத பிரிவுகளில் கைது செய்யக்கூடாது ஏன்றும் முந்தைய தீர்ப்புகள் பல ஈருக்கின்றன.//
இதுவும் சரிதானே
//தவறான ஆல்லது சந்தேகப்படும்படியான சூழ்நிலையில் ஓரு நோயாளி ஈறந்தால், சம்பந்தப்பட்ட மருத்துவரையோ, மருத்துவம் சார்ந்த எழியரையோ ஜாமீன் பெறக்கூடிய பிரிவுகளில்தான் கைது செய்ய வேண்டும் ஏன்கிற மருத்துவர்கள் சங்கக் கோரிக்கையில் வேண்டுமானால் நியாயம் ஈருக்கிறது. //
சரி
//இனால் தாங்கள் கைது செய்யப்படவே கூடாது, தங்களது தவறுகள் தட்டிக் கேட்கப்படக் கூடாது ஏன்று மருத்துவர்களோ, மருத்துவப் பணியாளர்களோ கோருவதை ஏப்படி ஐற்றுக் கொள்வது? //
அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களும் அப்படி கேட்கவில்லை. தாங்கள் வன்முறை கும்பல்களால் தாக்கப்படக்கூடாது என்பதே கோரிக்கை
//ஆதை ஆரசு ஐன் ஐற்றுக் கொண்டது?//
அதை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. அரசு வன்முறைத்தாக்குதலுக்கு எதிராகத்தான் பாதுகாப்பு அளிக்கிறதே தவிர, சட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிராக எந்த தடையும் கிடையாது.
//நன்கொடைகள் கொடுத்து மருத்துவப் பட்டங்கள் பெறும் மருத்துவர்களில் பலர், முறையாக மருத்துவம் கற்றவர்களா ஏன்கிற இராய்ச்சியில் நாம் ஈறங்க வேண்டாம். இனால், ஆவர்கள் ஏந்தவிதத் தவறும் செய்ய மாட்டார்கள் ஏன்பதற்கு யார் ஊத்தரவாதம் ஆளிக்க முடியும்? //
நுகர்வோர் நீதிமன்றம்
காவல்துறை
நீதிமன்றம் ஆகியவை மூலம் நடக்கும் சட்டபூர்வமான நடவடிக்கைகளில் இந்த சட்டம் தலையிடாது
//ஈன்டர்நெட்டில் படித்துத் தங்களது மருத்துவ ஆறிவை வளர்த்துக் கொண்டுள்ள நோயாளிகளின் காலம் ஈது. ஏத்தனை மருத்துவர்கள் தங்களது மருத்துவ ஆறிவை மேலும் வளர்த்துக் கொள்கிறார்கள் ஏன்பதும் கேள்விக்குரிய விஷயமாக ஈருக்கிறது./
இதற்கும் இந்த சட்டத்திற்கும் என்ன சம்மந்தம் !! அப்படி அறிவை வளர்த்துக்கொள்ளும் நோயாளிகள் செய்யும் அரைகுறை வைத்தியத்தால் நிகழும் கூத்துக்களே பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்
//ஈந்தப் பிரச்னையை முறையான பொதுச் சர்ச்சைக்கு ஊட்படுத்தி, சட்டமன்றத்தில் விவாதித்து நிறைவேற்றாமல், ஆவசரச் சட்டத்தின் மூலம் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆமைச்சர் நிறைவேற்றி ஈருப்பது ஐன்? //
பல மருத்துவமனைகள் தாக்கப்படுவதால். மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் தேவைப்பட்டது பகடிவதை (ragging) தடுப்பு, பெண்பகடி (eve teasing) தடுப்பு ஆகியவை கூட அவசரச்சட்டங்கள்தானே
//தவறான சிகிச்சைகள் ஆதிகரித்து வரும் வேளையில், வரிந்து கட்டிக்கொண்டு தமிழக ஆரசு மருத்துவர்களைக் காப்பாற்ற முனைந்திருப்பது ஐன்?//
மருத்துவமனைகளை சட்டப்படியான நடவடிக்கைகளிலிருந்து இந்த சட்டம் காப்பாற்றவில்லை. சட்ட விரோத நடவடிக்கைகளிலிருந்தே காக்கிறது
//மணப்பாறையில் பள்ளியில் படிக்கும் தனது மகனை வைத்து நோயாளிகளுக்கு ஆறுவை சிகிச்சை நடத்திய டாக்டர் தம்பதியினர் ஈந்த ஆவசரச் சட்டம் பிறப்பிக்கப்படுவதுவரை பொறுத்திருந்திருக்கலாம்.
ஆவசரப்பட்டுவிட்டார்கள்.//
அவர்கள் மீது எடுக்கப்படும் சட்டபூர்வமான நடவடிக்கைகளுக்கும் இந்த சட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை.

அவர்களின் மருத்துவமனை வன்முறையால் தாக்கப்படுவதை தான் இந்த சட்டம் தடுக்கலாமே தவிர சட்ட நடவடிக்கைகளை அல்ல.

சட்டத்தை படித்து பார்த்து தலையங்கள் எழுதியிருக்கலாம்
அவசரப்பட்டுவிட்டார்கள் !!!

Tuesday, July 29, 2008

குயிலும் கூகிளும் Cuil and Google comparison

ஒரு புது தேடுபொறி அறிமுகமாகி உள்ளது குயில் அல்லது கூயில்

துவக்கும் பொழுதே பலத்த சத்தத்துடன் துவங்கியுள்ளார்கள். என்ன தான் செய்திருக்கிறார்கள் என்ற ஆர்வத்துடன் எட்டி பார்த்தால் தமிழில் தேட முடியவில்லை

சரி, ஆங்கிலத்திலாவது தேடித்தான் பார்ப்போமே என்றால் tnpsc book என்று தேடினேன். வந்த பதிலை, இதே சொற்களை கூகிளில் தேடினால் என்ன வருகிறது என்று பாருங்கள்.

சரி, அடுத்து AIIMS என்று தேடினால் ஒன்றுமே இல்லை. கூகிளில் AIIMS என்று தேடினால் முக்கிய தளங்கள் அனைத்தும் வருகிறது.

பிற்சேர்க்கை : இடுகையின் இறுதியில் பார்க்கவும்

சரி நமக்கு (அல்லது மருத்துவ துறைக்கு)தான் நேரம் சரியில்லை என்று தமிழ்மணத்தை தேடினால் வரும் பக்கத்தையிம், இதே சொல்லுக்கு கூகிள் தரும் பக்கத்தையும் பாருங்கள்

இப்பத்தானே ஆரம்பித்து இருக்கிறார்கள். போக போக சரியாகும் என்று நினைப்பவர்களுக்கு, அவர்களின் தளத்தில் உள்ள வாசகம்
The Internet has grown exponentially in the last fifteen years but search engines have not kept up—until now. Cuil searches more pages on the Web than anyone else—three times as many as Google and ten times as many as Microsoft.
கூகிளைப்போல் மூன்று மடங்கு பக்கங்களை தேடுவதாக கூறுகிறார்கள். ஆனால் வரும் முடிவுகள் கூகிளை விட சிறப்பாக இல்லையென்றாலும் கூட பரவாயில்லை. கூகிள் அளவு கூட இல்லையே.

ஆனாலும் இதில் சில சிறப்புகள் இருக்கின்றன

1. அவர்கள் முடிவுகளை அளிக்கும் விதம் வித்தியாசமாக இருக்கிறது. உதாரணமாக kuselan என்று தேடினால் அந்த பக்கத்திலேயே தமிழ் ந்டிகர்கள், இந்திய நடிகர்களைப்பற்றி வருகிறது

2. அதே போல் manmohan singh என்று தேடினால் அமைச்சரவை பற்றிய விபரங்கள் வருகின்றன. sachin tendulkar முடிவு பக்கத்தில் உலக கோப்பை மற்றும் பிற விபரங்கள் வருகின்றன

தற்பொழுதைய கருத்து : தேடுபவர்களுக்கு பல சிறப்பான வசதிகளை செய்து தர முயல்கிறார்கள். ஆனால் முடிவுகளில் ஒரு நேர்த்தி வரும் வரை அடக்கி வாசிக்கலாம்.

பிற்சேர்க்கை : முதல் முறை AIIMS என்று தேடியபோது ஒன்றும் இல்லை. மறுமுறை AIIMS என்று தேடினால் இந்த பக்கம் வருகிறது.
இதில் என்ன விசேஷம் என்றால் வலது புறம் உள்ள பகுப்புகளை பாருங்கள். அது நான் தேடிய மன்மோகன் சிங் குறித்த பகுப்புகள். அவற்றுக்கும் AIIMS என்ன தொடர்பு என்று தெரியவில்லை.

இப்பொழுது அவர்களின் பக்கத்திலுள்ள மற்றொரு வரிகள்
Cuil analyzes the Web, not its users

Privacy is a hot topic these days, and we want you to feel totally comfortable using our service. Because Cuil analyzes Web pages and not click-throughs, we don’t need to know your search history and habits. So our privacy policy is very simple: when you search with Cuil, we do not collect any personally identifiable information, period. We have no idea who sends queries: not by name, not by IP address, and not by cookie. Your search history is your business, not ours. We don’t need to keep logs of our users’ search activity, so we don’t.
என்ன கொடுமை சார் இது.

அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று நான் கூறவில்லை. ஆனால் உண்மையை சொன்னால் நல்லாயிருக்கும் என்று தானே கூறுகிறேன்

Monday, July 28, 2008

சாதி சான்றிதழ் வழங்குவது அரசின் எந்த துறை

எனது முந்தைய இடுகை முற்பட்ட வகுப்பினர் பெறும் போலி பிற்பட்ட வகுப்பு சான்றிதழ்கள் குறித்த மறுமொழி ஒன்றில் பதிவர் ஹரிஹரன் என்பவர் ஒரு ஆதாரமில்லாத முழு பொய் ஒன்றை கூறியிருந்தார்
அதுவும் தமிழகத்தில் 95% பிற்படுத்தப்பட்டவர்களால் நடத்தப்படும் பிற்படுத்தோர் துறையில் "இடஒதுக்கீடு சாதிச்சான்றிதழ்" அமோகமாக விற்பனை செய்யப்படுவது பிற்படுத்தப்பட்டோர்களால் தான் என்பதும் தங்களுக்குத் தெரிந்ததே!
சாதி சான்றிதழ் அளிப்பது எந்த துறை என்று கூட தெரியாமல், அதை தெரிந்து கொள்ள கூட முயற்சிக்காமல், இது போன்ற தவறான தகவல்களை பரப்புவது வருத்தமளிக்கிறது.

இது போல் அனைவருக்கும் தெரிந்த விஷயங்களிலேயே பொய்யை உண்மை போல் எழுதினால் பதிவர்கள் நடுவில் நம்பகத்தன்மை குறையும் என்பது என் கருத்து.

இடப்பங்கீட்டை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக பொய்களையும் தவறான செய்திகளையும் தொடர்ந்து பரப்புவதை பதிவர் ஹரிஹரன் போன்றவர்கள் நிறுத்தி, உண்மையை எழுதுவார்கள் என்று நம்புவோம்

சரி, தமிழகத்தில் சாதி சான்றிதழ் அளிக்கும் துறை எது - தமிழக அரசின் வருவாய் துறை.

வருவாய் துறையினர் அளிக்கும் சான்றிதழ்கள் எவை
  • சாதி சான்றிதழ் Community Certificate
  • பிறப்பிட / இருப்பிட சான்றிதழ் Nativity / Residential Certificate
  • வருமான சான்றிதழ் Income Certificate
  • குடியுரிமை சான்றிதழ் Nationality Certificate
  • வாரிசு சான்றிதழ் Legal Heirship Certificate
  • கடன் தீர் ஆற்றல் சான்றிதழ் Solvency Certificate
  • பிறப்பு சான்றிதழ் இறப்பு சான்றிதழ் Birth and Death Certificate
  • ஆதரவற்ற குழந்தைகளுக்கான சான்றிதழ் Certificate for Destitute Children
  • ஆதரவற்ற விதவைகளுக்கான சான்றிதழ் Destitute Widow Certificate
  • சாதி மறுப்பு திருமண சான்றிதழ் Inter-Caste Marriage Certificate
  • பள்ளி சான்றிதழ்கள் தொலைந்தற்கான சான்றிதழ் Certificate for the loss of School Certificate
  • கைவிடப்பட்ட சான்றிதழ் Deserted Women Certificate


அடுத்த இடுகை : தமிழக அரசு கல்வி நிலையங்களில் போல் சாதி சான்றிதழ்களை எப்படி கண்டுபிடிக்கிறார்கள்

Sunday, July 27, 2008

முற்பட்ட வகுப்பினர் பெறும் போலி பிற்பட்ட வகுப்பு சான்றிதழ்கள்

பதிவர் ஹரிஹரன் தனது பதிவில் ஒரு முக்கிய விஷயத்தை வெளிபடுத்தியுள்ளார்.

முற்பட்ட சமுகத்தை சேர்ந்த சிலர் பணம் கொடுத்து பிற்படுத்தப்பட்டோர் என்று சான்றிதழ் பெறுகிறார்கள் என்பதை ஆதாரத்துடன் குமுதம் இதழ் வெளிக்கொண்டுவந்திருப்பதாக தெரிவிக்கிறார். (பிற்பட்ட வகுப்பு சான்றிதழால் பலன் பெறக்கூடிய ஒரே வகுப்பு முற்பட்டவர்கள் என்று குழந்தைக்கு கூட தெரியும். போலி வருமான சான்றிதழ், போலி மதிப்பெண் சான்றிதழ் போன்றவை வேண்டுமென்றால் அனைவருக்கும் பொது எனலாம்
)
`சாதிகள் இல்லையடி பாப்பா!' என்று பாடிய சுப்பிரமணிய பாரதிக்கு சாதிச் சான்றிதழ்! அதுவும் பிற்படுத்தப்பட்டவர் என்று!

அப்படித்தான் பாரதியாருக்கும் வகுப்பு மாறி இடம் ஒதுக்கப்பட்டது. பாரதி மறைந்து எண்பத்தேழு ஆண்டுகளுக்குப் பின்பு, `புதுப்பேட்டையில் இருக்கிறார். அவருக்கு ஜாதி கிடையாது. ஆனால் சான்றிதழ் வேண்டும்!' என்று நாம் கேட்ட இரண்டாவது நாளே நாடார் சமூகத்தில் அவரைச் சேர்த்து நம்மை பிரமிக்க வைத்துவிட்டனர்!

சாதியும், முறையும் எப்படி இருந்தால் என்ன, தவறு செய்கிறார்களா? இல்லையா? என்பதுதான் முக்கியம் என்று நாமும் அதைப் பெரிதுபடுத்தவில்லை. ஆனாலும் பேச்சுக்கு, ``இந்த சர்டிஃபிகேட் ஒரிஜினல்தானா?'' என்று கேட்டோம்.

``இது செல்லாத இடம் ஒன்று இந்தியாவில் இல்லை! என்னவொன்று இதனுடைய நகலை மட்டும் அலுவலகத்தில் இருந்து அப்புறப்படுத்திவிடுவோம்!'' என்று சர்வசாதாரணமாகச் சொல்கிறார்கள். இதைச் செய்ய தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட புரோக்கர்கள் ஓர் அமைப்பாகவே செயல்படுகிறார்களாம்.

ஆக, பாரதியார் நாடார் ஆவதும்; குஷ்பு மறவர் ஆவதும் இவ்வளவு எளிது என்றால், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடெல்லாம் யாருக்காக? எதற்காக? எதுவாயினும், விற்கப்படுவது சான்றிதழ் அல்ல சமூக நீதி என்பதைப் புரிந்துகொண்டு, அதன் காவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்தால் சரி!.
நல்ல கேள்விகள் ஐயா......

பாரதியார் நாடார் ஆவதும்; குஷ்பு மறவர் ஆவதும் இவ்வளவு எளிது என்றால், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடெல்லாம் யாருக்காக? எதற்காக?......
இப்படி பிற்பட்டவர்களுக்கு அரசு அளிக்கும் சலுகையை ஏமாற்றி பெறும் முற்பட்டவர்கள் பற்றி தோலுரித்து காட்டியதற்கு ஐயா ஹரிகரனுக்கு கோடி நமஸ்காரங்கள்

என்னைபோல் இடப்பங்கீடு ஆர்வலர்களும் ஐயா ஹரிஹரனுக்கு நன்றி கூறுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன் ;) :) ;) :)

இதை வெளிக்கொண்டுவந்த குமுதம் இதழுக்கும் நமது நன்றிகள்

இது போல் நடக்கும் மோசடிகளை ஐயா ஹரிஹரன் தொடர்ந்து வெளிகொண்டுவந்து ஏமாற்று பேர்வழிகளின் முகமூடிகளை கிழிப்பார் என்று எதிர்பார்க்கிறேன் ;) :) ;) :)

மேலும் அவர் மற்றொரு அதிர்ச்சி தகவலையும் அளிக்கிறார்
பி.குறிப்பு 2:
தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7 கோடி, கொடுக்கப்பட்ட இட ஒதுக்கீடு ஜாதிச் சான்றிதழ் அடிப்படையிலான மக்கள் தொகை 10 கோடிக்கும் மேல்??
ஆத்தாடி.... இது எப்படி என்று யோசித்தால், பதிலும் அவர் பதிவிலேயே இருக்கிறது
குறிப்பு 3:
இனி தமிழ்நாட்டுல போங்கடா புள்ளகுட்டிங்கள டிஸ்கவுண்டட் இடஒதுக்கீடு ஜாதிச்சான்றிதழ் வாங்கிட்டு படிக்க வைங்கடான்னு சொல்லிக்கலாம்!
அடப்பாவிகளா, அப்படி என்றால் மற்ற மாநிலம், மற்ற நாட்டிலிருந்து எல்லாம் முற்பட்ட வகுப்பினர் (பிற்பட்டவர்கள் என்ற) போலி சான்றிதழ் வாங்கி இங்கு தமிழக அரசு தீப்பெட்டி தொழிற்சாலையில் வெந்து அப்படியும் படித்து மதிப்பெண் பெரும் மாணவி செல்வி போன்றவர்களுக்கு அளிக்கும் சலுகையை சட்ட விரோதமாக அனுபவிக்கிறார்களா. இது குறித்து இந்த குறிப்புகளை எழுதிய ஹரிஹரன் ஐயா தான் விளக்க வேண்டும் :)

ஐயா, ஹரிஹரன் ஐயா.... உங்களுக்கு புண்ணியமாக போகும். அப்படி பட்டவங்க யாராவது உங்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தால் தயது செய்து சொல்லுங்கள். புகார் அளித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்

பின் குறிப்பு 1 : இடப்பங்கீடு குறித்த விபரங்கள், மற்றும் சில கருத்துகள் எனது பழைய இடுகையில் உள்ளன : தமிழகத்தில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 500 மாணவர்களின் ஜாதி என்ன

பின் குறிப்பு 2 : சொ.செ.சூ என்றால் என்ன

பிற்சேர்ப்பு : சாதி சான்றிதழ் குறித்த அடுத்த இடுகை

சாதி சான்றிதழ் வழங்குவது அரசின் எந்த துறை

அரசு மரு‌த்துவ‌க் க‌ல்லூ‌ரிக‌ளி‌ல் த‌மி‌ழ் வ‌ழி‌யி‌ல் மரு‌த்துவ‌க் க‌ல்‌வி!

வெப்துனியா தளத்திலிருந்து
த‌மிழக‌த்‌தி‌ல் செ‌ன்னை ‌ஸ்டா‌‌ன்‌லி, மதுரை, த‌ஞ்சாவூ‌ர் ஆ‌‌கிய மூ‌ன்று அரசு மரு‌த்துவ‌க் க‌ல்லூ‌ரிக‌ளி‌‌ல் த‌மி‌ழ் வ‌ழி‌மரு‌த்துவ‌க் க‌ல்‌வி அ‌றிமுக‌ப்படு‌த்த‌ப்பட உ‌ள்ளது.

இ‌ந்த த‌மி‌ழ் வ‌ழி‌மரு‌த்துவ‌க் க‌ல்‌வி முறை நட‌ப்பு‌க் க‌ல்‌வி ஆ‌ண்டான 2008-09 முத‌ல் அமலு‌க்கு வரு‌‌கிறது. எ‌ம்.‌பி.‌பி.எ‌ஸ். முதலா‌ம் ஆ‌ண்டு பாட‌ங்களான, உட‌ற்கூறு இய‌ல் (அனாட‌மி), உட‌ல் இய‌ங்‌கிய‌ல் (‌பி‌சியால‌ஜி), உ‌‌யிரி வே‌தி‌யிய‌ல் ( பயோ கெ‌மி‌ஸ்‌ட்‌ரி) ஆ‌கிய பாட‌ங்க‌ள் த‌மி‌ழ் வ‌ழி‌யி‌ல் க‌ற்‌பி‌க்க‌ப்படு‌கிறது.

த‌மி‌ழ் வ‌ழி‌க் கல்‌வியை ‌விரு‌ம்பு‌ம் மாணவ‌ர்க‌ள் ம‌ட்டு‌ம் இதனை‌த் தே‌ர்வு செ‌ய்து படி‌க்கலா‌ம். த‌மி‌ழ் வ‌ழி நூ‌ல்க‌ள் தயா‌ரி‌க்க‌ப்படு‌ம். பாட‌ங்களை‌ த‌மி‌ழி‌ல் க‌ற்று‌த் தர ஆ‌‌சி‌ரிய‌ர்களு‌க்கு‌ உ‌ரிய ப‌யி‌ற்‌சி அ‌ளி‌க்க‌ப்படு‌ம்.

இ‌ந்த க‌ல்லூ‌ரிக‌ளி‌ல் வழ‌க்க‌ம்போ‌ல் ஆ‌ங்‌கில வ‌ழி மரு‌த்துவ‌ப் பாட‌ங்களு‌ம் க‌ற்‌பி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று த‌மி‌ழ்நாடு டா‌க்ட‌ர் எ‌ம்.‌ஜி.ஆ‌ர். மரு‌த்துவ‌ப் ப‌ல்கலை‌க் கழக துணைவே‌ந்த‌ர் ‌மீ‌ர் மு‌ஸ்தபா உசே‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

தமிழ் வழி மருத்துவக்கல்வி என் கருத்துக்களை எனது பழைய இடுகையில் காணலாம் தமிழ் வழி மருத்துவக்கல்வி - சில கருத்துக்கள்

இதில் முக்கிய விஷயங்கள்
  • த‌மி‌ழ் வ‌ழி‌க் கல்‌வியை ‌விரு‌ம்பு‌ம் மாணவ‌ர்க‌ள் ம‌ட்டு‌ம் இதனை‌த் தே‌ர்வு செ‌ய்து படி‌க்கலா‌ம்.
  • இ‌ந்த க‌ல்லூ‌ரிக‌ளி‌ல் வழ‌க்க‌ம்போ‌ல் ஆ‌ங்‌கில வ‌ழி மரு‌த்துவ‌ப் பாட‌ங்களு‌ம் க‌ற்‌பி‌க்க‌ப்படு‌ம்

உங்கள் உலாவி தளங்களின் / வலைப்பதிவுகளின் பழைய வழங்கியின் தரவுகளை காட்டினால் என்ன செய்யலாம்

இந்த இடுகையின் தூண்டுகோல் ரவியின் மன்றத்தில் மயூரேசன் எழுப்பிய வினா
ரவி எனக்கு ஒரு புதுமையான அனுபவம் இப்ப!!
எனது வலைப்பதிவை புதிய வழங்கிக்கு மாற்றிய பின்னர், மீண்டும் மீண்டும் பழைய வழங்கியில் இருக்கும் தரவுகளையே என் உலாவி காட்டுகின்றது. மற்ற நண்பர்களுக்கு அது சரியாக்க் காட்டுகின்றது. என்ன பிரைச்சனையாக இருக்கும்?
உ+ம் mayuonline.com/css/index.html (புதிய வழங்கியில் உண்டு, பழையதில் இல்லை)
என்ன கொடுமை பார்த்தீங்களா??
இது போல் அனுபவம் பலருக்கும் நேர்ந்திருக்கும். உங்கள் வலைப்பதிவையோ அல்லது பிற தளங்களையோ புதிய வழங்கிக்கு மாற்றிய பின்னும், பழைய வழங்கியில் உள்ள கோப்புகளே உலாவியில் தெரியும். ஆனால் மற்றவர்களுக்கு புதிய வழங்கியில் உள்ள தரவுகள் தெரியும். நீங்களை உங்கள் பக்கத்தை மொழிபெயர்த்து பார்த்தால், புதிய வழங்கியில் உள்ள தரவுகள் தெரியும்

அப்படியென்றால் பிரச்சனை என்ன.

ஒருவருக்கு புதிய வழங்கியில் உள்ள கோப்புகள் தெரிகிறது, மற்றவருக்கு தெரியவில்லை என்றால் பிரச்சனைக்கு காரணம், உங்கள் தளம் அல்ல


இதற்கு காரணம் உங்களின் வலைசேவை வழங்கும் நிறுவனத்தின் DNS பதிவுகள் (records) மாறுவதில் ஏற்படும் கால தாமதமே

தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம் தங்களின் வழங்கி நிறுவனம் (Server Provider) (புது வழங்கி நிறுவனமோ அல்லது பழைய வழங்கி நிறுவனமோ) அல்ல .

அதற்கு காரணம் தங்களின் இணையசேவை அளிக்கும் நிறுவனம்தான். (Internet Provider)

உங்கள் தளம் மட்டும் அல்ல, என் தளத்தை நான் ஒரு வழங்கியிலிருந்து வேறு வழங்கிக்கு மாற்றினாலோ, ரவி அவரின் தளத்தை வேறு வழங்கிக்கு மாற்றினாலோ உங்களுக்கு அது தாமதாமாகத்தான் தெரியும்

இதனால் தான் opendns பயன்படுத்த அறிவுறுத்துகிறார்கள்

தங்களின் வலைசேவை வழங்குபவர்கள் ஒரு DNS எண்ணை அளித்திருப்பார்கள். தங்களின் கணினியில் அதை உள்ளீடு செய்யாமல்

Preferred DNS Server 208.67.222.222 and
Alternate DNS Server 208.67.220.220

என்று உள்ளீடு செய்யுங்கள்.

வித்தியாசத்தை உணர்வீர்கள் :) :)
--
பின் குறிப்பு : இது என் அனுபவத்தில் கற்ற பாடம்

Saturday, July 26, 2008

திறன் குறைந்த கணினிகளுக்கு ஒரு இயங்குதளம்

சிடாக் வழங்கும் பாஸ் இயங்குதளத்தை ஒரு குறுந்தகட்டில் தருகிறார்கள்

ஒரு குறுந்தகடு மூலம் இயங்கு தளத்தை வன் தகட்டில் நிறுவலாம். அல்லது மற்றொரு குறுந்தகடு மூலம் இயங்கு தளத்தை வன்தட்டில் நிறுவாமலேயே உபயோகிக்கலாம்.

நான் சோதித்து பார்த்தவரையில் முதல் குறுந்தட்டு மூலம் எளிதாக இயங்கு தளத்தை நிறுவ முடிகிறது. அதே போல் இரண்டாவது குறுந்தகடு சிக்கல் இல்லாமல் இயங்கியது. நெட்வோர்க்கில் இருக்கும் கணினியில் இதை சொருகி ரீபூட் செய்தால் தானாகவே நெட்வோர்க் அமைப்புகளை கண்டுபிடித்து விடுகிறது. எந்த சிரமமும் இல்லாமல் உலாவியில் இணையத்தை மேயலாம்.

ஒரு “குறைந்த பட்ச தேவை மென்பொருள்களுடன்” இயங்குதளம் மூலம் பழைய கணினிகளை இயக்க முடியும் என்று பதிவர் பத்ரி கூறியிருந்தார்

குறுந்தகட்டில் இருந்தே இயங்கும் இயங்குதளத்தை வடிவமைப்பது சிரமம் அல்ல (சிடாக் பாஸ் தளத்தில் இருந்து சில மென்பொருட்களை நீக்கினால் போதும்)

அப்படி ஒரு குறுந்தகட்டில் இருந்தே 128 MB RAM கணினியில் இயங்கும் இயங்குதளத்தை - தமிழ் உள்ளீடும் வசதி, ஒபன் ஆபிஸ், பயர் பாக்ஸ், மெஸஞர் உடன் - யாராவது அளித்தால் கண்டிப்பாக அது மிகப்பெரிய வெற்றி அடையும். ஏனென்றால் அப்படி பட்ட ஒரு இயங்கு தளத்திற்கான சந்தை திறந்தே உள்ளது. கழிக்கப்பட்ட நிலையில் உள்ள பல கணினிகள் (குறைந்த பட்சம் உலாவியகங்களிலாவது) உபயோகிக்கப்படலாம்

ஊதிய சங்கை ஊதி விட்டேன். விரைவில் “வன் தகட்டில் நிறுவாமலேயே கணினியை தமிழில் உபயோகிக்க கூடிய NHM OS" வரும் என்று நினைக்கிறேன்.

:) :) :)

தீப்பெட்டி தொழிற்சாலையில் இருந்து கல்லூரிக்கு செல்ல உதவி தேவை

இந்து நாளிதழின் செய்தி

தற்பொழுது ஆங்கிலத்தில் - விரைவில் தமிழிலும் பதிவிடுகிறேன்

Dalit girl’s dream of becoming a doctor under threat P. Sudhakar

TIRUNELVELI: A Dalit girl’s dream of becoming a doctor is under threat since her family working in a fireworks manufacturing unit near Sattur is unable to pay the fee though she has secured a seat in the Tuticorin Medical College on merit.

When M. Jeeva, a school teacher came to know that J. Selvi of Achchankulam near Panaiyadipatti in Sivakasi taluk has scored 1,078 marks in Plus Two in March 2008, she asked her to apply for MBBS since her cut off mark for medicine is 189.

Fearing ‘financial burden on her parents due to her higher studies’, she refused immediately and prepared to join one of the fireworks manufacturing unit close to her village to augment the family’s income.

However, Ms. Jeeva discussed her case with her husband Michael Raj, Station Master of Sattur Railway Station, who asked his son to buy an application for Ms. Selvi. With the help of D. Aram, State president of Doctors’ Association for Social Equality (DASE) and doctor in Sattur Government Hospital, he convinced the poor girl and persuaded her to apply for MBBS.

Help from doctors

“When she went to Chennai for counselling, a group of budding doctors from Madras Medical College helped Ms. Selvi, who got a seat in Tuticorin Medical College on merit,” said Dr. Aram.

Ms. Selvi’s father R. Jayaraj, who has to feed the family of five members with his monthly salary of Rs.1,300, initially was not in a mood to admit her in I MBBS. However, the girl’s sustained persuasion forced him to get a loan from a moneylender and admit her in the I year of MBBS.

“Now he is worried about the impending expenditure on books, hostel fee, clothe etc. and seeking assistance from philanthropists,” Dr. Aram said.

Those who want to help Ms. Selvi may contact Dr. Aram at 94432 44633.

செய்தியை மொழிபெயர்க்க நேரமில்லாததால் தற்பொழுது அப்படியே பதிகிறேன்.

நான் உங்களின் கவனத்திற்கு அளிக்க விரும்பிய முக்கிய விஷயங்கள்

1. மாணவியின் மதிப்பென் - 94.5 %
2. மாதம் 1300 ரூபாய் ஊதியம உள்ள 5 குழந்தைகள் உள்ள ஒரு குடும்பத்தில் உள்ள ஒரு குழந்தை 94.5 சதம் மதிப்பெண் பெரும் வகையில் நமது கல்வித்துறை செயல்படுகிறது

3. தமிழக அரசின் கல்வி சார் திட்டங்களான இலவச கல்வி, இலவச புத்தகங்கள், இலவச பேரூந்து பயனம், இலவ்ச மிதிவண்டி, இலவச மதிய சத்துனவு எல்லாம் வீண் என்று கருத்து கூறியவர்களின் முகத்தை காண ஆசை

வேண்டுகோள் 1 : மாணவி செல்விக்கு உதவ விரும்பும் நல்ல உள்ளங்கள் (நூறு ரூபார் மணியார்டர் கூட உதவிதான்) தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : 94432 44633 (Dr. Aram).

வேண்டுகோள் 2 : என் வேண்டுகோளை, மீள் பதிவாகவோ, தொடர் மின்னஞ்சலாகவோ செய்யவும். (புகைப்படங்கள், சர்தார் நகைச்சுவைகள் என்று நாம் அனுப்பும் தொடர் மின்னஞ்சலுக்கு இடையில் இப்படி ஒரு மின்மடலையும் அனுப்பலாமே)

Friday, July 25, 2008

ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில்...... பகுதி 1

இந்த இடுகைத்தொடரின் முந்தைய இடுகைகள்
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் என்ன வேறுபாடு என்றால் கீழ்க்கண்டவற்றை கூறலாம்,

1. மரபணுச் சரம் (நிறமி) : ஆணின் உயிரணுக்களில் (Cell) இருப்பது ஒரு X மற்றும் ஒரு Y மரபணுச்சரம். பெண்ணின் உயிரணுக்களில் இருப்பது இரண்டு X மரபணுச்சரம். இது தவிர இருவருக்குமே மேலும் 44 (22 ஜோடி) மரபணுச்சரங்கள் உண்டு [ஜோடி - தமிழ் சொல் என்ன]

2. இனஉறுப்புகள் - ஆணுக்கு விரைகள். பெண்ணுக்கு சினைப்பைகள். அதே போல் பிற உறுப்புகளும் மாறுபடும். ஆணுக்கு விந்து சிறுகுமிழ், சுக்கிலவகம், விந்துக்குழாய் போன்றவைகளும் பெண்ணுக்கு முட்டைப் பைக்குழாய், கர்ப்பப்பை, பெண் இனச்சேர்க்கை உறுப்பு போன்றவைகளும் இருக்கும்.

3. இனச்சேர்க்கை உறுப்புகள் - ஆணுக்கு ஆண் இனச்சேர்க்கை உறுப்பு, பெண்ணுக்கு பெண் இனச்சேர்க்கை உறுப்பு. [இதற்கு இணையாக உள்ள பல அறிய தமிழ்சொற்களை இந்த வருட துவக்கம் முதல் தமிழ் வலைப்பதிவுகளை வாசிப்பவர்கள் அறிந்திருப்பார்கள்]

4. நாளமில்லாச் சுரப்பி சுரக்கும் இயக்குநீர்: ஆண் என்றால் அதிக அளவில் டெஸ்டோஸ்டிரோன் மற்றும் சிறிய அளவில் ஈஸ்ட்ரஜன். பெண் என்றால் அதிக அளவில் ஈஸ்ட்ரஜன், ப்ரொஜஸ்ட்ரன் போன்றவை மற்றும் சிறிய அளவில் டெஸ்டோஸ்டிரோன்

5. உடல் வாகு / பிற உடல் மாற்றங்கள் : ஆண் என்றால் மீசை, தாடி. பெண் என்றால் நீண்ட தலைமுடி. அது போல் குரலில் வேறுபாடு . இந்த வித்தியாசங்களுக்கு நாளமில்ல சுரப்பிகள் சுரக்கும் இயக்குநீரே முக்கிய காரணம் ஆகும். இது போல் ஆண் என்றால் பெண்களை விட அதிக (சக்தியுள்ள) எலும்புகள், தசைகள். பெண் என்றால் ஆணை விட பெரிய இடுப்பெலும்பு. (ஒரு எலும்பை வைத்து அது ஆணா, பெண்ணா என்று கூறிவிடலாம் - சில விதிவிலக்குகள் உண்டு - அதைத்தானே பார்க்க போகிறோம் !!). அது போல் ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலில் முடி வளரும் இடங்கள், மற்றும் வளரும் விதம் வேறு. இது தவிர பெண்ணிற்கு மார்பகங்கள், தோலுக்கு அடியில் அதிக கொழுப்பு, அதனால் வளைவுகள் என்று சில “வெளிப்புற” வித்தியாசங்கள்.

6. உளவியல்: மனதளவில் ஆணிற்கும் பெண்ணிற்கும் பல வேறுபாடுகள் உள்ளன. இது குறித்து அனைவரும் பரவலாக அறிந்திருப்பீர்கள். (பல நகைச்சுவை படங்கள், சம்பவங்கள் தொடர் மின்மடல்களில் வந்தன, வருகின்றன, வரும்). இருந்தாலும் சில உதாரணங்களை மட்டும் கூறுகிறேன்.

ஒரு வருகைப்பதிவேடு அளவு 200 பக்க புத்தகத்தை ஒரு ஆண் எப்படி கொண்டுசெல்வான் - கையில் வைத்துக்கொண்டு
ஒரு நக்கீரன் அளவு 200 பக்க புத்தகத்தை ஒரு பெண் எப்படி கொண்டுசெல்வாள்- மார்பில் அனைத்துக்கொண்டு

இது போல் நடை, பேச்சு என்று வித்தியாசங்களை கூறிக்கொண்டே போகலாம்

இது வரை பார்த்ததை மீண்டும் ஒரு முறை மீள் பார்வை பார்க்கலாம்

ஆணுக்கும் பெண்ணிற்கும் உள்ள பால் வேறுபாடு என்பதை கீழ்கண்டவாறு 4 முக்கிய வகையாக பிரிக்கலாம்

1. மரபணு பால் (Genetic Sex) - இதில் மரபணுச்சர பால் (Chromosomal Sex) அடங்கும்
2. இன உறுப்புகள் பால் (Gonadal Sex)
3. புறத்தோற்ற பால் Phenotype - இதில் இனச்சேர்க்கை உறுப்புகள் பால் (external Genitalia) நாளமில்லாச் சுரப்பி சுரக்கும் இயக்குநீர் பால் (Hormonal Sex) உடல் வாகு / பிற உடல் மாற்றங்கள் (Secondary Sexual Characters) ஆகியவை அடங்கும். இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இனச்சேர்க்கை உறுப்புகளை நான் இங்கு பகுத்திருக்கிறேன்
4. உளவியல் பால் (Psychological Sex)

அவ்வளவு தானா. இதில் என்ன பெரிதாக இருக்கிறது என்று கொட்டாவி விட துவங்கியிருப்பீர்கள்.

இப்படி உள்ள நான்கு கூறுகளுமே, அதாவது (1. மரபணு பால், 2. இன உறுப்புகள் பால், 3. புறத்தோற்ற பால் , 4. உளவியல் பால்)

1. மரபணு பால் - ஆண்
2. இன உறுப்புகள் பால் - ஆண்
3. புறத்தோற்ற பால் - ஆண்
4. உளவியல் பால் - ஆண்
என்று இருந்தாலும் பிரச்சனை இல்லை

அல்லது

1. மரபணு பால் - பெண்
2. இன உறுப்புகள் பால் - பெண்
3. புறத்தோற்ற பால் - பெண்
4. உளவியல் பால் - பெண்
என்று இருந்தாலும் பிரச்சனை அல்ல

ஆனால்,

சிலருக்கு
1. மரபணு பால் - ஆண்
2. இன உறுப்புகள் பால் - ஆண்
3. புறத்தோற்ற பால் - ஆண்
4. உளவியல் பால் - பெண்
என்பதும்

சிலருக்கு
1. மரபணு பால் - ஆண்
2. இன உறுப்புகள் பால் - ஆண்
3. புறத்தோற்ற பால் - பெண், ஆனால் நாளமில்லாச் சுரப்பி சுரக்கும் இயக்குநீர் ஆண்களை போலிருக்கும்
4. உளவியல் பால் - பெண்
என்பதும்

வேறு சிலருக்கு (உதாரணம் Hypospadiasis)
1. மரபணு பால் - ஆண்
2. இன உறுப்புகள் பால் - ஆண்
3. புறத்தோற்ற பால் - பெண்
4. உளவியல் பால் - பெண்
என்பதும்

வேறு சிலருக்கு (உதாரணம் CAH)
1. மரபணு பால் - பெண்
2. இன உறுப்புகள் பால் - பெண்
3. புறத்தோற்ற பால் - ஆண்
4. உளவியல் பால் - ஆண்
என்பதும் தான் பிரச்சனையே.

வாசிப்பவர்களின் ஆதரவை பொறுத்து .... தொடரும்

பின்குறிப்பு : ஆபாசமாக இருக்கும் வரிகளை / சொற்களை கூறுவும்
இந்த இடுகைத்தொடரின் அடுத்த இடுகைகள்

Wednesday, July 23, 2008

மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் ஏன் தேவைப்பட்டது

"தமிழ்நாடு மருத்துவச் சேவை புரிவோர் மீதான வன்முறை மற்றும் மருத்துவச் சேவை மையங்களின் சொத்துக்களுக்கு ஏற்படும் சேதம் ஆகியவற்றைத் தடுப்பதற்கான அவசரச் சட்டம், 2008' என்ற சட்டத்தை நமது வசதிக்காக மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் என்று அழைப்போம்.

சென்ற இடுகையில் இந்த சட்டத்தினால் பாதி பிரச்சனைகள் தான் தீரும் என்றேன். ஆனாலும் இந்த சட்டம் ஏன் தேவை. சட்டசபையில் சட்டமாக இயற்றமல் அவசரகாலச்சட்டமாக இயற்றவேண்டிய அவசியம் என்ன போன்ற விஷயங்களை இந்த இடுகையில் பார்க்கலாம்.

மருத்துவமனைகளின் மீது உள்ள மக்களின் அதீத எதிர்பார்ப்பு மற்றும் தொடர்ந்து ஊடகங்களில் வரும் ”பாதி உண்மைகள்” போன்றவற்றால் ஒரு மருத்துவமனையில் நியாயமான சேவை வழங்கப்பட்டாலே அதை குறையாக பார்க்கும் போக்கு அதிகரித்து வருகிறது

உதாரணமாக, வலைப்பதிவர் ஒருவர் கூறிய “குறை”
கருவிகள் வைத்திருந்தும் மற்ற மருத்துவ மனைகளுக்கு மக்கள் செல்வதற்கு காரணம், அரசு அதிகாரிகளைப் போல அரசு மருத்துவர்கள் 'சைடில்' வருமானம் பார்ப்பதிலேயே குறியாக இருப்பதுதான். உதாரணத்திற்கு சொல்வதென்றால், தலைநகரத்தில் உள்ள மிகப் பெரிய அரசு தலைமை மருத்துவமனையில் (ஆசியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமனை என்று வேறு மறு பெயர் - மூதறிஞர இராஜாஜி கூட இங்கு தான் மருத்துவம் பார்த்துக் கொண்டார்), இதய அறுவைச்சிகிச்சைப் பிரிவில், ஜெனரேட்டரே இல்லாமல் அறுவைச் சிகிச்சை நடந்த்து வருகிறது தெரியுமா ?. என் தந்தையை சில வருடங்களுக்கு முன் இந்த மருத்துவமனையில் தான் சேர்த்தேன். நாங்கள் செய்த புண்ணியம், எங்களுக்கு தெரிந்த ஒருவர் அந்த மருத்துவமனையில் வேலைப் பார்த்து வந்தார்.அவர் சொல்லிய பிற்பாடு நாங்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று தனியார் மருத்துவ மனைகளுக்கு ஓடினோம்.
இது போன்ற “குறை தேடும் காமாலை கண்களை” வைத்து பார்த்தால் எதை பார்த்தாலும் எரிச்சல் வரும்.
//, ஜெனரேட்டரே இல்லாமல் அறுவைச் சிகிச்சை நடந்த்து வருகிறது தெரியுமா ?//
அறுவை சிகிச்சை நடந்து வருகிறது என்று நீங்களே கூறுகிறீர்கள்.

ஐயா அறிவுடைநம்பி.

நீங்கள் என்ன கூற வருகிறீர்கள்

மின் ஆக்கி இல்லையென்றால் வைத்தியம் செய்ய கூடாதா. இது போல் காரணங்களை காட்டி அறுவை சிகிச்சையை ரத்து செய்ய வேண்டுமா.

//அரசு மருத்துவர்கள் 'சைடில்' வருமானம் பார்ப்பதிலேயே குறியாக இருப்பதுதான். //

இது பொய் குற்றச்சாட்டு. அப்படி வருமானம் பார்க்க வேண்டுமென்றால் மின் ஆக்கி இல்லாத காரணத்து காட்டி அறுவை சிகிச்சையை ரத்து செய்யலாமே.

தயவு செய்து இப்படி பொய் குற்றச்சாட்டுகளை அளிப்பதை தவிர்க்கவும்.

பார்த்தீர்களா, இவ்வளவு கஷ்டப்பட்டு, போதிய வசதிகள் இல்லாவிட்டால் கூட வைத்தியம் பார்க்கும் அரசு மருத்துவருக்கு எவ்வளவு கெட்ட பெயர் என்று.

ஒரு பிணியாளர் இறந்தாலோ அல்லது அறுவை சிகிச்சை வெற்றிபெற வில்லை என்றாலோ அதற்கு காரணம் மருத்துவமனையின் தவறு மட்டும் தான் என்ற சிந்தனை அதிகரித்து உள்ளது. அவருக்கு நோய் இருந்ததால் தான் அவர் மருத்துவமனையில் சேர்ந்தார் என்பதை கூட மறந்து விடுகிறார்கள். (அப்படியில்லாமல் நோய் எதுவும் இல்லாத ஒருவர் செய்து கொள்ளும் சிகிச்சை குடும்பக்கட்டுபாடு என்பதால் தான் அதற்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்படுகிறது. இதனால் தான் என்ன பிரச்சனை என்றாலும் குடும்பக்கட்டுபாடு சிகிச்சையில் தவறு என்று பொய் புகார் அளிக்கும் போக்கு இருப்பதை நாம் ஏற்கனவே பார்த்தோம்)

இது தவிர வன்முறையில் இறங்கி பின்னர் ”உணர்ச்சி வசப்பட்டு அடித்து விட்டோம்” என்று சப்பைக்கட்டு கட்டலாம் என்ற வசதி இருப்பதால் மருத்துவமனைகளின் மேல் வன்முறைகள் அதிகரித்தவாறு இருந்தன. (இதில் ஒரு சோகம் / சிந்திக்க வேண்டிய விஷயம் - லட்சக்கணக்கில் பணம் வாங்கும் எந்த மருத்துவமனையும் அடிவாங்க வில்லை !!!! - அடி வாங்கியவர்களெல்லாம் சிறு மருத்துவமனைகள் / அரசு மருத்துவமனைகள் தான் :) :) :) )

இதெற்கெல்லாம் முத்தாய்ப்பாக, இந்த அவசரச் சட்டம் பிறப்பிப்பதற்கு காரணமாக இருந்தது பொன்னேரியில் சென்ற மாதம் நடந்த சம்பவம்.

பொன்னேரியில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த ஒருவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அவரது உறவினர்கள் இருவர் அங்குள்ள அரசு மருத்துவமனை வந்து பிணியாளர் ஊர்தியை கேட்டிருக்கிறார்கள். மருத்துவ அலுவலர் தர மறுத்திருக்கிறார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிக்கு தான் பிணியாளர் ஊர்தி அளிக்கப்படவேண்டும் என்பதால் தர முடியாது என்று கூறிய அவரை அடித்து விட்டார்கள்.

இதே நிலைமை தொடர்வது நல்லதல்ல என்பதால் தான் இந்த அவசரச்சட்டம்

இப்பொழுது எழும் கேள்வி : விழிப்புணர்வு தான் நிரந்தர தீர்வு என்ற நிலையில் இந்த சட்டம் (தற்காலிக தீர்வு) தேவையா
பதில் : தேவைதான்

ஒருவனுக்கு மீனை அளிக்காதே, மீன் பிடிக்க கற்றுக்கொடு என்பது சரிதான். ஆனால் ஒரு வாரம் சாப்பிடாமல் பசியோடு அரை மயக்கத்தில் இருப்பவனுக்கு. மீன் கற்று கொள்ளுங்கள்... பாடம் 1, பாடம் 2 என்றா சொல்வோம். ஒருவன் பசியோடிருக்கையில் அவனால் எதையும் கற்றுக்கொள்ள முடியாது. முதலில் அவன் பசியை போக்க வேண்டும். அதன் பின்னர் தான் கற்றுக்கொடுக்க முடியும். எனவே முதலில் மீனை (தற்காலிக தீர்வு) அளித்து அதன் பின்னர் மீன் பிடிக்க கற்று கொடுப்பதே (நிரந்தர தீர்வு) சிறந்தது. பசியோடு, அதுவும் பசியால் அரைமயக்கத்தில் இருப்பவனிடம் முதலில் மீனைக்கொடுங்கள். அதன் பின் பசி தீர்ந்த பின் மீன் பிடிக்க கற்றுக்கொடுக்கலாம்

தண்ணீரில் மூழ்கிக்கொண்டிருப்பவனை பார்த்து, நீச்சல் கற்றுக்கொள். முதலில் வலது கை, பின் கால், என்று யாரவது பாடம் நடத்த முடியுமா நீச்சல் சொல்லிக்கொடுப்பது தான் சிறந்த வழி, ஆனால் ஒருவன் முழ்கிக்கொண்டிருந்தால் என்ன செய்வோம். தண்ணீரில் மூழ்கும் ஒருவனுக்கு தேவை ஒரு கயிறு. நீச்சல் பாட புத்தகம் அல்ல

எப்படி விவசாயிகளின் தற்கொலையை தடுக்க கடன் தள்ளுபடி சிறந்த வழிமுறை / நீண்ட கால தீர்வு இல்லையென்றாலும் அந்த தருணத்தில் தேவைப்பட்டதோ அதே போல், இந்த சட்டம் தற்பொழுது தேவை.

பின் குறிப்பு : நமது நாட்டில் (அனைத்து நாடுகளிலும்) அனைத்து சட்டங்களுமே தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. தவறாக பயன்படுத்தக்கூடும் என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே ஒரு சட்டத்தை தேவையில்லை என்று கூறினால் நாட்டின் எந்த சட்டமுமே இருக்க முடியாது

அடுத்த இடுகை

மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் ஏன் தேவைப்பட்டது

இந்த இடுகை இங்கு மாற்றப்பட்டுள்ளது

அரசு டாக்டர்களை தாக்கினால் 10 வருடம் சிறை! - என் கருத்துக்கள்

தமிழக அரசின் அவசரச்சட்டம் குறித்த என் கருத்துக்கள்

முதலில் பத்திரிகைகளில் வந்த விபரங்கள்
டாக்டர்கள் அல்லது மருத்துவமனைகளைத் தாக்குவோருக்கு மூன்று ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கவும், ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீட்டை வசூலிக்கவும் அவசரச் சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. டாக்டர்கள் மட்டுமன்றி, நர்ஸ்கள், மருத்துவம் மற்றும் நர்சிங் மாணவர்கள், துணை மருத்துவப் பணியாளர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கவர்னர் கையெழுத்திட்டுள்ள, "தமிழ்நாடு மருத்துவச் சேவை புரிவோர் மீதான வன்முறை மற்றும் மருத்துவச் சேவை மையங்களின் சொத்துக்களுக்கு ஏற்படும் சேதம் ஆகியவற்றைத் தடுப்பதற்கான அவசரச் சட்டம், 2008' என்றழைக்கப்படும் இச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

மருத்துவச் சேவையில் ஈடுபட்டிருப்போர் மீது வன்முறையை ஏவிவிட்டு அவர்களைக் காயப்படுத்துவதும், மருத்துவச் சேவை மையங்களின் சொத்துக்களைச் சேதப்படுத்துவதும் தமிழகத்தில் அதிகரித்து வருவதால், மருத்துவர்களிடையே பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், மருத்துவச் சேவைக்கே தமிழகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, வன்முறையில் ஈடுபடுவோரைத் தண்டிக்கவும், அதை ஜாமீனில் வர முடியாத குற்றமாகக் கொண்டு வரவும், சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வசூலித்து தருவதும் அவசியமாகிறது. சட்டசபைக் கூட்டத் தொடர் தற்போது நடக்காததால் இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படுகிறது.பதிவு செய்யப்பட்ட டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ மாணவர்கள், நர்சிங் மாணவர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள் உட்பட மருத்துவச் சேவை புரிவோருக்கு எதிரான வன்முறைகளுக்கு இதன் மூலம் தடை விதிக்கப்படுகிறது. மேலும், தமிழகத்தில் உள்ள மருத்துவ மையங்களின் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கவும் தடை விதிக்கப்படுகிறது.

இதன்படி, வன்முறையில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம். இதன்மூலம், மருத்துவச் சமூகத்தினர் எவ்வித அச்சமும் இன்றி தங்களது பணியை மேற்கொள்ளலாம்.எந்த ஒரு நபரும் தனியாகவோ, கூட்டாகவோ அல்லது அமைப்பு மூலமோ மருத்துவச் சேவை புரிவேர் மீது வன்முறையில் ஈடுபட்டால், அவர்களுக்குக் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளும், அதிகபட்சம் 10 ஆண்டுகளும் அபராதத்துடன் சிறை தண்டனை விதிக்கப்படும். இச்சட்டத்தின் கீழ் காணப்படும் குற்றச் செயல் எதுவும் ஜாமீனில் வெளிவர முடியாதவை. சொத்துக்களுக்கு ஏற்படும் சேதத்துக்கான இழப்பீட்டை கோர்ட் நிர்ணயிக்கும்.

அவ்வாறு இழப்பீட்டைத் தராத நபர்களிடம், தமிழ்நாடு வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் வசூலிக்கப்படும்.

மாநில, மத்திய அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடத்தும் மருத்துவ மையங்கள், நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் எந்தவொரு தனியார் மருத்துவமனைகள், பிரசவத்துக்கு முன்பும், பின்பும் சிகிச்சையளிக்கும் தனியார் மகப்பேறு மருத்துவமனைகள், எந்தவொரு நோய், உடல் காயம், மனநிலை சிகிச்சை போன்றவற்றை அளிக்கும் மையங்கள், இல்லங்களுக்கும் இச்சட்டம் பொருந்தும்.

சொத்து என்பது, மருத்துவர்கள் அல்லது மருத்துவ மையங்கள் சொந்தமாகவோ, பாதுகாப்பிலோ அல்லது தங்கள் கட்டுப்பாட்டிலோ வைத்திருக்கும் அசையும் அல்லது அசையா சொத்துக்கள், மருத்துவச் சாதனங்கள், மருத்துவ இயந்திரங்கள் ஆகியவையாகும். இவற்றுக்கு ஏற்படும் சேதத்துக்கு இழப்பீடு கோரலாம். இதேபோல, வன்முறை சம்பவங்கள் என்பது, மருத்துவச் சேவை புரிவோரை பணி செய்யவிடாது தடுத்தல், இடையூறு செய்தல், உயிருக்கு ஆபத்து விளைவித்தல் மற்றும் காயப்படுத்துதல் ஆகியவை ஆகும்.

இவ்வாறு அவசரச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இனி இது குறித்த விளக்கங்கள்

ஒரு மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை தவறு என்றால் அது குறித்து முறையாக புகார் செய்து இழப்பீட்டை பெறுவது குறித்து எந்த தடையும் இல்லை

ஆனால் பிணியாளர் இறந்தவுடன், மருத்துவமனை செலவழித்துள்ள மருந்து மற்ற இதர பொருட்களின் பணத்தை அளிக்காமல் கண்ணாடியை உடைத்து கலவரம் செய்து பணம் பறிக்கும் போக்கே இதன்மூலம் தடை செய்யப்பட்டுள்ளது.

சரி என் கருத்துக்கள்

ஒரு மருத்துவமனை தாக்கப்படுவதற்கு இரு கூறுகள்

1. மருத்துவமனை மேலான எரிச்சல்

2. கோபப்படுவது போல் நடித்து கூப்பாடு போட்டு எதையாவது உடைத்தால் / யாரையாவது அடித்தால், ஏற்கனவே செய்து கொண்ட சிகிச்சைக்கு கட்டணம் செலுத்த வேண்டாம், முடிந்தால் மேலும் மிரட்டி பணம் வாங்கலாம் என்ற எண்ணம் (அப்படி நடப்பதில்லை என்று கூற தயாராகுபவர்கள் கொஞ்சம் அக்கம் பக்கம் விசாரித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்)

இதில் இந்த சட்டம் செய்யக்கூடியது என்ன - இரண்டாவது கூற்றத்தான் தடுக்கிறது. கட்டப்பஞ்சாயத்து செய்து மருத்துவமனை / மருத்துவரிடமிருந்து பணம் பறிக்கும் போக்கை இந்த சட்டம் தடுக்கும்.

மருத்துவமனை மேலான எரிச்சலை ஒன்றும் செய்ய முடியாது. (அது அதிகரிக்கத்தான் செய்யும் என்பது தான் என் கருத்து).


சரி முதலாவது கூற்றை பார்ப்போம் - எரிச்சல் வரும் காரணங்கள் என்ன

1. நோய் பற்றிய சரியான புரிந்து கொள்ளுதல் இல்லாமை. மெத்த படித்த வலைபதிவர்கள் பலர் எழுதும் சில கருத்துக்களை பார்தாலே மருத்துவத்துறை பற்றிய புரிந்து கொள்ளுதல் எந்த அளவில் உள்ளது என்று தெரியும். இதில் படிக்காதவர்களை பற்றி கேட்கவே வேண்டாம்.

2. மனித உடலை ஒரு கருவியாக நினைத்து அனைவரும் ஒன்று என்று நினைப்பது

3. மருத்துவமனை செலவு குறித்த அறியாமை. ஒரு வீடு கட்ட ஆகும் 5 லட்ச ரூபாயில் கொத்தனார், மேஸ்திரி, சித்தாள் கூலி 1 லட்சம். பொருட்கள் 4 லட்சம் என்று தெளிவாக தெரிந்து கொள்ளும் மக்கள், ஒரு அறுவை சிகிச்சைக்காகும் 10,000 ரூபாய் முழுவதும் மருத்துவரின் கட்டணம் என்று நினைப்பது. அதனால் மருத்துவர்கள் அதிகம் சம்பாதிப்பதாக நினைப்பது

4. பிணியாளர் இறப்பது மருத்துவமனையின் தப்பு மட்டும் என்றும், மருத்துவர்கள், மருத்துவமனைகள் அனைவரையும் உயிர் பிழைக்க வைக்க வேண்டியவர்கள் என்றும் ஒருவர் இறந்து விட்டாலோ அல்லது அறுவை சிகிச்சை வெற்றி பெற முடியவில்லை என்றாலோ அது மருத்துவரின் தவறு மட்டுமே என்று நினைப்பது

வேறு எந்த காரணங்களுக்காக உங்களுக்கு எரிச்சல் வருகிறது என்று மறுமொழியில் கூறுங்கள்.

இந்த எரிச்சலை குறைப்பது போதிய விழிப்புணர்வு மூலம் மட்டுமே முடியும். சட்டத்தால் அல்ல என்பது என்கருத்து.

அடுத்த இடுகைகள்

Sunday, July 20, 2008

தமிழ் இலக்கியங்களில் !! மருத்துவம் - பகுதி 1

பழந்தமிழ் இலக்கியங்களிலும் காவியங்களிலும் மருத்துவம் தொடர்பான குறிப்புகள் பல கிடைக்கின்றன. உதாரணமாக இந்த பாடலை எடுத்துக்கொள்வோம். (எனது மிக குறைந்த தமிழ அறிவை வைத்து இடுகை எழுதப்பட்டுள்ளது. தவறுகளை சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்கிறேன்)
மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும் உடல் வேறு வகிர்களாக
கீண்டாலும் பொகுந்துவிக்கும் ஒரு மருந்தும் படைகலங்கள் கிளைப்பது ஒன்றும்
மீண்டேயும் தம் உருவை வேருளுவதும் ஒர் மெய்ம்மருந்தும் உள வீர
ஆண்டேகி கொணர்தி
இதிலிருந்து தெரிவது என்ன

மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும் - இறந்தவர்களை (அக்காலத்தில் மூச்சு நிற்பதை / இதயத்துடிப்பு நிற்பதைத்தான் இறப்பாக கருதினார்கள் - ஆனால் இன்று சில காரணங்களினால் முச்சு நின்றாலும் மூளை இறக்க வில்லை என்றால் சில மருந்துகள் செலுத்துவதன் மூலம் மறுபடியும் சுவாசம் / இதயத்துடிப்பை கொண்டுவர வல்ல மருந்துக்கள் இருக்கின்றன). அந்த காலத்திலேயே அப்படியான மருந்துக்களை நம் தமிழர்கள் பயன் படுத்தினார்கள் என்பதற்கு சான்றாக இந்த வரிகளை எடுத்துக்கொள்ளலாமா ???

இதய துடிப்பு நின்ற 4 (அல்லது அதிக பட்சம் 8 நிமிடங்களுக்கு) மட்டும் தான் முளை உயிரோடு இருக்கும். அதற்குள் இதயம் மறுபடியும் துடித்தால் அந்த நபர் பிழைத்துக்கொள்வார். 8 நிமிடங்களுக்கு பிறகு இதயம் துடித்தால் அதன் பிறகு ஆசாமி பிழைத்தாலும் கோமாதான் :) :) நினைவு திரும்ப வாய்ப்பே கிடையாது
-
ஆனால் ஒரு பிரபல திரைப்படத்தில் இதைக்கூட அபத்தமாக காட்டியிருப்பார்கள். எந்த படம் தெரிகிறதா :)
-

உடல் வேறு வகிர்களாக கீண்டாலும் பொகுந்துவிக்கும் ஒரு மருந்தும் - கத்தியால் கீரப்படும் உடல் பகுதிகளை இணைக்கும் மருந்து (அல்லது அறுவை சிகிச்சை முறை) நவீன மருத்துவத்தில் கண்டுபிடிக்கப்பட்டது கடந்த 200 வருடங்களில் தான். ஆனால் தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னரே அது போல் மருத்துவ முறைகள் இருந்தனவா

படைகலங்கள் கிளைப்பது ஒன்றும் - இதற்கு சரியான தமிழ் அர்த்தம் மறுமொழியில் யாராவது கூற முடியுமா.

மீண்டேயும் தம் உருவை வேருளுவதும் ஒர் மெய்ம்மருந்தும் - இதற்கும் சரியான தமிழ் அர்த்தம் தேவை. எனக்கு தெரிந்து இது செயற்கைஉறுப்புப் ஒப்பனையை குறிக்கலாம். மேல் விபரங்களை சகலகலாவல்லவன் பதிவர்கள் தெரிவிக்கலாம்.

மற்றுமொரு பாடல்
நில்லா உலகின் நிலை நேர்மையினால்
வல்லாரும் உணர்ந்திலார் மன் உயிர் தாம்
பல்லாயிரம் கோடி பரந்துளதால்
இல்லாதன இல்லை
இலக்குமரா
என்ற பாடல் என்னைப்பொருத்தவரை பல்லுயிரியத்தையே குறிக்கிறது. பல்லுயிரியம் குறித்த மேலதிக விபரங்களை இந்த ஆங்கில விக்கிபீடியா கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்

தமிழர்களின் மருத்துவம், கட்டிடக்கலை (உதாரணம் கல்லனை), கப்பல் செலுத்தும் திறன் குறித்த தகவல்கள் குறித்து யாராவது ஆய்வு செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. முனைவர் பட்டத்திற்கான சிறந்த தலைப்புகள் இவை என்பது என் கருத்து

பின் குறிப்பு 1 : தவறுகளை சுட்டிகாட்டவும், மேலதிக விபரங்களை பகிர்ந்து கொள்ளவும் வேண்டுகிறேன்

பின் குறிப்பு 2 : இந்த பாடல்கள் எந்த நூல், யார் எழுதியது என்று பலருக்கும் தெரியலாம், அப்படி தெரியாவிட்டாலும் அதை கண்டுபிடிப்பது எளிது என்பதால் நேரடியாக குறிப்பிடவில்லை

Thursday, July 17, 2008

மறந்து போகாத சில: விஞ்ஞானப் பாதையில் செல்ல வேண்டிய தமிழ் மருத்துவம்

படித்ததில் பிடித்தது

மறந்து போகாத சில: விஞ்ஞானப் பாதையில் செல்ல வேண்டிய தமிழ் மருத்துவம்

கம்பராமாயணத்தில் மருத்துவம் குறித்து என்ன இருக்கிறது என்று அடுத்த இடுகையில் பார்ப்போம்

அரசு மருத்துவமனைகள் சுகாதாரம் இல்லாமல் இருப்பதற்கு யார் காரணம்

மங்களூர் சிவா அவர்களின் பதிவில் இட்ட பின்னூட்டம் சற்று பெரிதானதால் இங்கு தனி இடுகையாக
சுகாதாரமில்லாமல் அங்கு செல்வதால் வேறேதும் நோய் வந்துவிடுமோ என அஞ்சும் அளவிலேயே உள்ளது
கொஞ்சம் மனசாட்சி தொட்டு சொல்லுங்கள்

அரசு மருத்துவமனை சுவரில் வெற்றிலை துப்புவது யார் – மருத்துவரா, இல்லை அங்கு வரும் நீங்களா (நீங்கள் என்பது மங்களூர் சிவா ஒருவரை மட்டும் அல்ல, அனைத்து பொதுமக்களையும் தான்)

அரசு மருத்துவமனை படிக்கட்டில் பாதி இட்லியையும் மீதி சட்னியையும் வீசுவது யார் – செவிலியரா அல்லது நீங்களா

ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தினுள் மாடு, பன்றி மேய்ப்பது – ஆய்வக நுட்பனரா அல்லது நீங்களா

அதை தடுக்கும் மருத்துவ அலுவலரிடம் அந்த பகுதி அரசியல்வாதி மூலம் பேசுவது மருந்தாளுனரா அல்லது நீங்களா

மருத்துவமனை என்று மட்டும் அல்ல ஏறத்தாழ அனைத்து அரசு அலுவலகங்களும் இப்படி இருக்க காரணம் அரசு ஊழியர்களா, நீங்களா ??

மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள் நண்பர்களே

கலவரத்தில் விவேகம் பேரூந்து, கே.பி.எண் எல்லாம் பத்திரமாக போகும் போது அரசு பேரூந்து மட்டும் உடைவதற்கு காரணம் போக்குவரத்து துறையா, பொது மக்களா.

விடை அளியுங்கள்

அரசு மருத்துவமனைகளுக்கு செல்லலாம் எனில் பெரும்பாலான நூற்றுக்கு 99 சதவிகித அரசு மருத்துவமனைகள் போதிய வசதிகள், மருத்துவர்கள் இல்லாமல் சுகாதாரமில்லாமல் அங்கு செல்வதால் வேறேதும் நோய் வந்துவிடுமோ என அஞ்சும் அளவிலேயே உள்ளது. (டாக்டர் புருனே மன்னிக்க)
இதில் மன்னிக்க என்ன இருக்கிறது.

வசதிகள் மற்றும் மருத்துவர்கள் என்று பார்த்தால், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்களும் வசதிகளும் இருக்கின்றன.

நீங்கள் ஒவ்வொரு ஊரிலும் ஒரு இதய அறுவை சிகிச்சை நிபுனர் மற்றும் இதய அறுவை சிகிச்சை அரங்கு வேண்டும் என்று நினைத்தால் அந்த வசதி இல்லைதான்.

அரசு மருத்துவர்களையும், வசதிகளையும் சரியாக பயன்படுத்தாத தவறை செய்வது மக்கள் தான்.

எப்படி பிராட்வேயில் நகர பேரூந்தில் ஏறி மதுரை செல்ல முடியாதோ அதே போல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டயாலிஸஸ் செய்ய முடியாது. எப்படி கடற்கரை தொடர்வண்டி நிலையத்தில் இருந்து மின்சார வண்டியில் கோயம்புத்தூர் செல்ல முடியாதோ அதே போல் ஹோசூர் மருத்துவமனையில் இதயஅறுவை சிகிச்சை செய்ய முடியாது.

இது குறித்து “வசதி இல்லை”, “மருத்துவர் இல்லை” என்று நீங்கள் நினைத்தால் அது மருத்துவரின் தவறோ, மருத்துவமனையின் தவறோ, அரசின் தவறோ கிடையாது
!!!!

சென்னையில் இருந்து மதுரை செல்ல வேண்டுமென்றால் கோயம்பேட்டில் விரைவு பேரூந்தில் தான் செல்ல வேண்டும். கோயம்புத்தூர் செல்ல வேண்டும் என்றால் சேரன் அல்லது நீல மலை :) :) விரைவு வண்டிதான்.

அது போல் டயாலிஸஸ், இதய அறுவை சிகிச்சை வசதிகள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் உள்ளன

மேலும் விபரங்களுக்கு என் பதிவில் உள்ள இடுகைகளை பாருங்கள்

Monday, July 07, 2008

ஆதமும் ஏவாளும் சாப்பிட்ட பழம் என்ன

ஆதமும் ஏவாளும் சாப்பிட்ட பழம் என்ன என்ற கேள்விக்கு நீங்கள் உடனடியாக ”ஆப்பிள்” என்று சொல்வீர்கள் என்று தெரியும்

விவிலியம் என்ன சொல்கிறது என்று பார்ப்போமா.
Genesis 2:9 And out of the ground made the LORD God to grow every tree that is pleasant to the sight, and good for food; the tree of life also in the midst of the garden, and the tree of the knowledge of good and evil.

Genesis 2:17 but of the tree of the knowledge of good and evil, thou shalt not eat of it; for in the day that thou eatest thereof thou shalt surely die.'
அது என்ன “நன்மை மற்றும் தீமை குறித்த அறிவின் மரம்”... இதை விட ஞானப்பழம் என்ற பெயர் பொருத்தமாக உள்ளதா

எத்தியோபியர்கள் படிக்கும் ஈனோகின் புத்தகத்தில் (31:4) இந்த மரம் குறித்து விளக்கப்பட்டிருக்கிறது. “ அது புளிய மரம் போலிருந்தது. அதன் பழங்கள் மெல்லிய திராட்சைபழங்களை போலிருந்தன, அதன் வாசனை பரவியிருந்தது”

யூதர்களின் தல்முத் என்ற புத்தகம், அந்த பழம் திராட்சை என்கிறது. மற்றொரு தல்முத கதை ஏவாள் அந்த பழத்திலிருந்து வைன் அருந்தினாள் என்கிறது. அதை அத்திப்பழம் என்றும், கோதுமை என்றும் கூட கருதுகிறார்கள்

மேல்நாட்டு ஓவியர்கள் மட்டுமே அந்த பழத்தை ஆப்பிள் ஆக்கினார்கள். (அவர்களுக்கு தெரிந்த பழம் அதுதான்). அதனால் தான் மேல் நாட்டு (ஐரோப்பிய) ஓவியங்களில் அந்த மரம் ஆப்பிள் மரமாகவும் அந்த பழம் ஆப்பிளாகவும் காட்டப்படுகின்றன. அவர்கள் (ஐரோப்பிய ஓவியர்கள்) என்ன செய்வார்கள். அவர்களுக்கு தெரிந்த பழத்தை ஓவியத்தில் வரைந்து விட்டார்கள். ஒரு வேளை ரவி வர்மா, இந்த காட்சியை வரைந்திருந்தால் தேங்காய் வரைந்திருக்கலாம்

சிலர் அந்த பழம் மாதுளை என்று கூட சொல்கிறார்கள்.

மேலும் விபரங்களுக்கு விக்கிபிடியா கட்டுரையின் சுட்டி இது தான்

Thursday, July 03, 2008

சரியான கேள்வி கேட்பது எப்படி

நமது வாழ்க்கையில் நாம் விடைகளை தேடி ஒடிக்கொண்டேயிருக்கிறோம்...

தினமும் நம்மை சுற்றியுள்ள கேள்விகளுக்கு விடை தேவை

அதில்
  • சில கேள்விகள் நம்மிடம் கேட்கப்படுபவை :உதாரணம் : ஏன் இன்னமும் வேலையை முடிக்கவில்லை
  • சில கேள்விகள் விடைகளை கண்டு பிடிக்க நாம் கேட்பவை : அலுவலகத்திற்கு செல்லும் பேரூந்து எப்பொழுது வரும்
இதில் முதல் வகை கேள்விகள் மீது நமக்கு பெரிய அளவில் கட்டுப்பாடு கிடையாது.
ஆனால் இரண்டாவது வகை கேள்விகள் (நாமே எழுப்பும் வினாக்கள் ) நம்முடைய முழு கட்டுப்பாட்டில் உள்ளன.

எனவே சரியான விடை தேவையென்றால் நமக்கு நாமே எழுப்பும் கேள்வியானதும் சரியாக இருக்க வேண்டியது அவசியம்.

இது குறித்து எனக்கு மேலாண்மை வகுப்புகளில் கூறப்பட்ட கருத்துகள் மற்றும் நான் சிந்தித்த சிலவற்றை கூறலாம் என்று தான் இந்த பதிவு.

பொறுப்புத் துறப்பு : கீழுள்ள கதை நிஜமா, கற்பனையா என்று தெரியாது.

பனிப்போர் உச்சத்தில் இருந்த நேரத்தில் அமெரிக்காவிற்கும் உருசியாவிற்கும் இடையில் வான்வெளியில் யார் பெரியவர் என்ற போட்டி இருந்தது. உருசியா முதலில் விண்வெளிக்கு மனிதனை அனுப்ப அமெரிக்க நிலவிற்கு மனிதனை அனுப்பியதாக சொல்ல என்று ஒரே போட்டிதான்

எனவே வான்வெளி குறித்த ஆராய்ச்சி கூடங்களில் என்ன நடக்கிறது என்றும், என்ன ஆராய்ச்சிகள் நடக்கின்றன என்றும் பரம இரகசியமாக வைத்திருந்தார்கள்.

அப்படிபட்ட நேரத்தில் விண்வெளியில் ஓடங்களை அனுப்பும் பொழுது குறிப்புகளை குறிக்க அமெரிக்கர்கள் சிரமப்பட்டார்கள்

பவுண்டேன் பேனாவை உபயோகித்தால் அதிலுள்ள மை முழுவதும் வெளியே வந்துவிடுகிறது. பந்து முனை பேனாவை உபயோகித்தால் அதில் உள்ள (அடர்த்தி அதிகமுள்ள மை) இறங்கவே இல்லை. என்ன செய்வது என்று யோசித்ததில், புதிதாக ஒரு மையை கண்டுபிடிக்க வேண்டும் என்று பல மில்லியன் டாலர்களை செலவழித்து ”ஜெல்” போன்ற மையை கண்டுபிடித்தார்கள்.

அதை வைத்து விண்வெளியில் குறிப்புகளை எழுதினார்கள் (இன்று என்றால் நேரடியாக கணினியிலேயே உள்ளிடலாம்).

வழக்கம் போல் இதையும் பரம இரகசியமாக வைத்திருந்தார்கள். ஆனால் உருசியர்கள் என்ன செய்கிறார்கள், எப்படி எழுதுகிறார்கள், அவர்கள் மை எதாவது கண்டுபிடித்துள்ளார்களா என்று குழப்பம் வேறு.

பனிப்போர் முடிந்த பின், இரு நாடுகளும் சகஜமான பின் அமெரிக்காவும், உருசியாவும் கூட்டு சேர்ந்து விண்வெளி சோதனைகள் நடத்திய போது, ஒரு அமெரிக்க விஞ்ஞானி சொன்னாராம்
அமெரிக்கர் : பார்த்தீர்களா, விண்வெளியில் எழுதிவதற்கென்று நாங்கள் பல மில்லியன் டாலர்களை செலவு செய்து ஒரு மை கண்டுபிடித்துள்ளோம். நீங்கள் இது போல் மை கண்டுபிடித்துள்ளீர்களா

உருசியர் : இல்லை. நாங்கள் குறிப்புகளை பென்சில் வைத்தே எழுதுகிறோம்.
இதிலிருந்து தெரிய வேண்டியது என்ன வென்றால்
அமெரிக்கர்கள் கேட்ட கேள்வி : விண்வெளியில் எந்த மையை வைத்து எழுதுவது
உருசியர்கள் கேட்ட கேள்வி : விண்வெளியில் எப்படி எழுதுவது
அமெரிக்கர்களின் கேள்வி சரியான கேள்வி அல்ல. அவர்கள் கேள்வி கேட்கும் பொழுதே சரியான விடையானது வராதவகையில் கேள்வி அமைக்கப்பட்டு உள்ளது

நமது தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழிலிலும் சரியான கேள்விகளை கேட்கவில்லை என்றால் தவறான விடைகள் வரலாம்

உதாரணமாக நீங்கள் மாலை வேலை முடிந்து பேரூந்து நிறுத்தத்தில் நிற்கிறீர்கள்

நீங்கள் “எந்த பேரூந்தில் செல்லலாம்” என்று யோசித்தால் பேரூந்தை மட்டும் தான் பார்ப்பீர்கள். அப்படியில்லாமல் “எப்படி செல்லலாம்” என்று யோசித்தால், அந்த வழியாக வரும் உங்கள் பக்கத்து வீட்டுக்காரரின் வாகனம் கண்ணில்படும். அதில் தொற்றிக்கொள்ளலாம்.

பின் குறிப்பு :
பொன்னியின் செல்வன் குறித்த பல விவாதங்களில் கேட்கப்படும் ஒரு கேள்வி “ஆதித்த கரிகாலனை யார் கொன்றது” . என்னைப்பொருத்த வரையில் இது சரியான கேள்வி அல்ல.

ஆதித்த கரிகாலன் தன்னைத்தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் அல்லது இயற்கையாக (அதிர்ச்சியில்) மரணமடைந்திருக்கலாம் அல்லது விஷம் அளிக்கப்பட்டு அதனால் மரணமடைந்திருக்கலாம். மேலே கேட்கப்பட்ட கேள்வியில் முதல் இரு வாய்ப்புகளுக்கு முற்றிலும் இடமில்லை (அதிர்ச்சி என்றாலோ விஷம் என்றாலோ அவர் மீது கத்தி வீசியது யார் என்று ஒரு துனைக்கேள்வி வரும்)

எனவே சரியான கேள்விகள் :
  • “ஆதித்த கரிகாலன் எப்படி மரணமடைந்தார்” என்ற கேள்விக்கு இயற்கை மரனம், தற்கொலை, (வேறொருவர் மீது வீசப்பட்ட கத்தி பட்டதால்) விபத்து , கொலை என்று நான்கு பதில்கள் வரும். ஆனால் “ஆதித்த கரிகாலனை யார் கொன்றது” என்ற கேள்வியில் பல பதில்களுக்கு வாய்ப்பு இல்லாமல் இருப்பதை கவனியுங்கள்.
  • அவர் மீது கத்தி வீசியது யார் / அல்லது விஷம் அளித்தது யார் ?
இரண்டும் தனித்தனி கேள்விகள். சில நேரங்களில் இரண்டு கேள்விகளுக்கும் தனியாக விடைகாண வேண்டிவரலாம் என்று பொன்னியின் செல்வனில் நந்தினி-வீரபாண்டியன் உறவும் பக்கவாட்டு சிந்தனையும் இடுகையில் ஏற்கனவே பார்த்து விட்டோம்
இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...