இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Thursday, November 27, 2008

சமூக சமத்துவத்திற்காக பதவியை இழக்க துணிந்தவருக்கு கண்ணீர் அஞ்சலிகள்

சமூக சமத்துவத்திற்காக பதவியை இழக்க துணிந்தவருக்கு கண்ணீர் அஞ்சலிகள்
(படம் : விக்கீபிடியாவிலிருந்து )

விசுவநாத பிரதாப் சிங்

  • இந்தியாவின் 10ஆவது பிரதமர்
  • பிரதமராக இருந்த போது பிற்பட்டவர்களுக்கு கல்வி, வேலை கிடைக்க வேண்டுமென்பதற்காக (மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தி) பதவியை இழக்க கூட துணிந்தவர்.
  • மத்திய நிதியமைச்சராக இருந்த போது அமிதாப் பச்சன், அம்பானி ஆகியோரின் வருமான வரியை சரி பார்த்ததால் பதவியை இழந்தவர்
  • மத்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்த போது போபர்ஸ் விவகாரத்தில் உண்மையை வெளிக்கொண்டுவர முயன்றதால் பதவியை இழந்தவர்
  • உத்திரபிரதேசத்தின் 16ஆவது முதல்வர்
  • அங்கு நடைபெற்ற திருட்டு, வழிப்பறியை நிறுத்தியவர்
  • மேலும் விபரங்களுக்கு ஆங்கில விக்கிபீடியாவை பார்க்கவும்
  • தமிழில் வாசிக்க திருவின் வி.பி.சிங்: சில குறிப்புகள்! தளத்திற்கு செல்லவும்

Saturday, November 22, 2008

2008 ஆண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை முடிந்த போது, இடம் கிடைக்க தேவைப்படும் குறைந்தபட்ச மதிப்பெண் என்ன

2008 ஆண்டு மருத்துவ படிப்பிற்கான முதல் சுற்று கலந்தாய்வின்  போது குறைந்த பட்ச மதிப்பெண் தேவை

  • முற்பட்ட வகுப்பினர் - எப்.சி - 197.25 / 200 = 98.625 % (பொது பிரிவில் தேர்வாக)
  • பிற்படுத்தப்பட்டவர்கள் - பி.சி - 195.25 /200 = 97.625 %
  • கிருத்தவர்கள் - பி.சி.சி - 194.50 /200 = 97.250 % (இந்த பங்கீடு பலன் அளிக்கிறது என்பதற்கு இதுவே ஆதாரம்
  • முஸ்லிம்கள் - பி.சி.எம் - 193.25 / 200 = 96.625 %
  • மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் - எம்.பி.சி - 192.50 /200 = 96.250 %
  • அட்டவனை வகுப்பினர் - எஸ்.சி - 187.50 /200 = 93.750 %
  • பழங்குடியினர் - எஸ்.டி - 176.25 / 200 = 88.125 %

என்று இருந்தது. அதில் பலர் இடம் கிடைத்தும் சேராமல் இருந்ததால், காத்திருப்பு பட்டியலில் இருந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அப்படி காத்திருப்பு பட்டியலில் இருந்து தேர்வானவர்களின் குறைந்த பட்ச மதிப்பெண்கள் இது தான்

2008 ஆண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை முடிந்த போது (30-09-2008) அன்று இருந்த நிலை
பிரிவு
அரசு கல்லூரிகளில் MBBS இடம் கிடைக்க தேவைப்படும் குறைந்தபட்ச மதிப்பெண்
சுயநிதி கல்லூர்களில் MBBS இடம் கிடைக்க தேவைப்படும் குறைந்தபட்ச மதிப்பெண்
அரசு கல்லூரிகளில் BDS இடம் கிடைக்க தேவைப்படும் குறைந்தபட்ச மதிப்பெண்
சுயநிதி கல்லூர்களில் BDS இடம் கிடைக்க தேவைப்படும் குறைந்தபட்ச மதிப்பெண்
பொது பிரிவு
197.00
193.75
192.00
-
பிற்படுத்தப்பட்டவர்கள் BC
194.50
191.75
189.50
-
கிருத்தவர்கள் BCC
193.75
192.50
190.50
-
முஸ்லிம்கள் BCM
193.00
191.75
191.75
-
மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் MBC
191.50
188.00
184.25
-
அட்டவனை வகுப்பினர் SC
186.00
180.25
176.75
-
பழங்குடியினர் ST
171.25
156.75
161.00
-

இதிலிருந்து உங்களுக்கு என்ன தெரிகிறது என்று கூறுங்களேன்.
என் கருத்துக்களை நான் கடைசியில் கூறுகிறேன்.
இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...