நேற்றும் இன்றும் சென்னையில் நடந்த
மெடிடெல் 2008 கருத்தரங்கில் எனது உரை.
ஆங்கிலத்தில் பேசியதை அப்படியே தந்துள்ளேன். அரசு துறைகளில் செயல்படுத்தப்படும் மின்னாளுமை (eGovernance) / கணினி / மென்பொருள் திட்டங்களில் இருந்த நாங்கள் அனுபவ பூர்வமாக கற்றவைகளையே வைத்தே நான் பேசினேன். இதில் நான் கூறிய முக்கியமான் விஷயங்கள்
- “புதிய”, “அதிக விலையுடைய”, “அதிகம் வசதிகள் உள்ள” தொழிற்நுட்பங்கள் இருக்கின்றன் என்ற ஒரே காரணத்திற்காக அவைகளை பயன் படுத்த வேண்டாம்
- பயனர்கள் அந்த மென்பொருளை ஏற்றுக்கொள்வதே ஒரு மின்னாளுமை திட்டத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமே தவிர தொழிற்நுட்பமோ, அதிக எண்ணிக்கையிலான வசதிகளோ, பல நிறங்களுடன் கூடிய பக்கங்களோ அல்ல
- குறைந்த விசைப்பலகை மற்றும் எலி பயன்பாடு இருக்கும் திட்டங்கள் எளிதில் வெற்றி பெறுகின்றன
- ஏற்கனவே பழக்கமான இடைமுகங்கள் மற்றும் படங்கள் அதிகம் உள்ள இடைமுகங்களை எளிதாக பயன் படுத்த முடிகிறது
- குறைந்த “வழுக்கள்” - விரைவில் பயன்பாடு
- இணையம் சார் திட்டங்கள் (web based) Client Server திட்டங்களை விட சிறந்தது
- இடைமுகம் தமிழில் இருந்தால் திட்டம் அதிகம் வரவேற்பு பெறும்
என்னைத்தவிர அரசு தரப்பில் இருந்து பேசிய தகவல் தொழிற்நுட்ப துறை செயலர் திரு.பி.டபிள்யூ.சி.டேவிதார் இ.ஆ.ப அவர்களின் பேச்சில் குறிப்பிட்ட சில விஷயங்கள்
- மின்னாளுமை திட்டங்களில் தொழிற்நுட்பத்தை விட “மாற்றம் மேலாண்மை”யே (change management ) அதிக கவனம் செலுத்த வேண்டிய விஷயம்
- அவரது துறையில் கோப்புகளை மின்மயமாக்குவது குறித்து விவாதம் வந்த போது ஒருவர் கூறியது “ஒரு வருசந்தான் இருக்கு, எங்கள விட்டுடுங்க” (ஓய்வு பெற ஒரு வருடமே இருப்பதால் அவர்கள் கணினிக்கு மாறுவதில், ஒரு புது முறையை படிப்பதில் தயக்கம்)
- தமிழகத்தில் தற்சமயம் குளச்சல், பத்மநாபபுரம், தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், சோளிங்கள் ஆகிய ஐந்து மருத்துவமனைகளில் “மருத்துவ மேலாண்மை திட்டங்கள்” (hospital management system) துவக்கப்பட்டுள்ளன
- சனவ்ரி 20, 2009க்கு பின்னர் இது மேலும் 48 மருத்துவமனைகளுக்கு விரிவு படுத்தப்படும் (தேனி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தருமபுரி, கிருஷ்னகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து மருத்துவமனைகள்)
- அதன் பிறகு, இந்த நிலையங்களில் இருந்து பெறப்படும் கருத்துக்களின் படி மென்பொருளில் மாற்றம் தேவைப்பட்டால் மாற்றம் செய்யப்பட்டு 270 மருத்துவமனைகளுக்கும் விரிவு படுத்தப்படும்
- பின்னர் 1417 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் விரிவு படுத்தப்படும்
வெளிநாடுகளில் (அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள்) மற்றும் நம் நாட்டின் பிற மாநிலங்களில் சுகாதார துறை மற்றும் தகவல் தொழிற்நுட்ப துறையில் பணிபுரியும் பலருடயை உரைகளை கேட்டதுடன் அவர்களுடன் பேசியதில் பல விஷயங்களையும் தெரிந்து கொள்ள முடிந்தது
நேரம் கிடைக்கும் போது மேலும் விரிவாக எழுதிகிறேன்