இது குறித்து நம் இலக்கியவாதிகள் புகுந்து விளையாடி விட்டனர்
13ஆம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டில் பார்தோலோமேயசு அங்கிலிகசு என்பவர், முதலை மனிதனை கண்டால் அவனை சாப்பிட்டு விட்டு அழும் என்று எழுதினார்
ஈட்டி ஆட்டு துரை (shakespeare என்ற ஆங்கில ஆசிரியரின் பெயரை எழுத்து பிழையில்லாமல் எழுத shake spear e என்ற mnemonicஐ சொல்லித்தந்த எங்கள் பள்ளி ஆங்கில ஆசிரியர் அருட்தந்தை ஆஸ்வால்ட் ஞாபகத்திற்கு வருகிறார்) தனது ஒத்தெல்லோ நாடகத்தில்
O devil, devil!
If that the earth could teem with woman's tears,
Each drop she falls would prove a crocodile.
Out of my sight!என்று எழுதி முதலையின் விழி சுரப்பி நீருக்கு புதிய அர்த்ததை அளித்து விட்டார்
அதன் பின்னர் முதலைக்கண்ணீர் என்ற பதம் பரவலாக உபயோகத்திற்கு வந்து விட்டது. ஒருவருக்கு தொந்தரவு அளித்து விட்டு அதன் பிறகு வருத்தப்படுவது போல் செயல்படும் செயலை குறிக்க இந்த பதம் ப்ரவலாக பயன்படுத்தப்படுகிறது
தமிழில் இதை விட எளிதில் புரிய கூடிய சொற்தொடர்கள் உள்ளன
- ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறதாம்
- பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது
சரி இப்பொழுது முதலை ஏன் கண்ணீர் விடுகிறது என்று பார்க்கும் முன்னர் மனிதன் உணவு உண்ணும் போது என்ன நடக்கிறது என்று பார்ப்போம்
நம் உடலில் உள்ள நரம்பு மண்டலத்தில் தானியங்கு நரம்பு மண்டலம் (அ) பரிவு நரம்பு மண்டலம் என்று ஒன்று உள்ளது (இது போல் பூள் நரம்பு; மைய நரம்பு மண்டலம்; மையநரம்புத்தொகுதி; மையநரம்புமண்டலம், சுற்றியநரம்புத்தொகுதி; புறநரம்பு மண்டலம் ஆகியவும் நரம்பு மண்டலத்தின் பகுதிகளே)
இந்த தானியங்கு நரம்பு மண்டலத்தில் இரு பிரிவுகள் உள்ளன
- பரிவு நரம்பு மண்டலம் (Sympathetic Nervous System)
- அனுபரிவு நரம்பு மண்டலம் (Parasympathetic Nervous System)
உதாரணமாக பரிவு நரம்பு மண்டலம் தூண்டப்பட்டால் கண்களின் பாப்பா விரிவடையும். அனுபரிவு மண்டலம் தூண்டப்பட்டால் கண்களின் பாப்பா சுருங்கும்
பரிவு மண்டலம் தூண்டப்பட்டால் இதய துடிப்பு அதிகரிக்கும். அனுபரிவு மண்டலம் தூண்டப்பட்டால் இதய துடிப்பு குறையும்
பரிவு மண்டலம் தூண்டப்பட்டால் உணவு பாதை மற்றும் குடலுக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறையும் அனுபரிவு மண்டலம் தூண்டப்பட்டால் உணவு பாதை மற்றும் குடலுக்கு செல்லும் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்
பரிவு மண்டலம் தூண்டப்பட்டால் வியர்வை அதிகரிக்கும்
சுருங்க கூறினால் வேட்டைக்கு செல்லும் போது, யாரையாவது துரத்தும் போது, யாராவது உங்களை துரத்தும் போது, கடன் கொடுத்தவரை பார்க்கும் போது இயங்க வேண்டியது பரிவு நரம்பு மண்டலம். வீட்டில் நிம்மதியாக சாப்பிடும் போது இயங்க வேண்டியது அனுபரிவு நரம்பு மண்டலம்
அனுபரிவு நரம்பு மண்டலம் இயங்கினால் உமிழ்நீர் மற்றும் உணவு பாதை, குடல் ஆகியவற்றிலுள்ள உணவை செறிக்கும் திரவங்கள் அதிகம் சுரக்கும். பரிவு நரம்பு மண்டலம் தூண்டப்பட்டால் வாய் உலர்ந்து விடும். ஐஸ்கிரீமை பார்த்தவுடன், அல்லது பிரியாணி வாசம் காற்றில் வரும்போது நாக்கில் எச்சில் ஊற காரணம் அனுபரிவு நரம்பு மண்டலம். வாடிக்கையாளரிடம் கூறிய நேரத்தில் வேலையை முடிக்காமல் இருக்கும் போது பேச வேண்டி வந்தால் நாக்கு உலர்ந்து போவதற்கு காரனம் பரிவு நரம்பு மண்டலம் :) (ஐஸ்வர்யா ராயை பார்த்து ஜொள்ளு விடுவது, சிறிது அதிகம் மிரண்டால் சிறுவர்கள் அந்த இடத்திலேயே சிறுநீர் கழிப்பது போன்றவையும் இதற்கு தொடர்புடையவையே. அது குறித்து பின்னர் விரிவாக விளக்குகிறேன்)
சரி. இப்பொழுது விஷயத்திற்கு வருவோம்
அனுபரிவு நரம்பு மண்டலத்தின் நரம்புகள் மூளையில் பொது உடலுள்ளுறுப்புக்குரிய அகல் நரம்பு மையம் என்று அழைக்கப்படும் நரம்பு மையங்களில் (Nuclei) இருந்து துவங்குகின்றன
மனித உடலில் இந்த பொது உடலுள்ளுறுப்புக்குரிய அகல் நரம்பு மண்டலத்தில் கீழ்க்காணும் நரம்பு மையங்கள் இருக்கின்றன
- எடிங்கர் வெஸ்ட்பால் நரம்பு மையம் (Edinger Westphal Nucleus) அல்லது உதவி விழியிக்க நரம்பு மையம் (accessory oculomotor nucleus)
- இதிலிருந்து வரும் நரம்பு கண்களில் உள்ள பாப்பாவிற்கு சென்று இந்த மையம் தூண்டப்பட்டால் பாப்பா சுருங்கும்
- மேலுள்ள உமிழ்நீர் (Superior Salivatory) நரம்பு மையம்
- இதிலுள்ள நரம்பு மேண்டிபிலுக்கு அடியில் உள்ள உமிழ்நீர் சுரப்பி (Submandibular Salivary Gland) மற்றும் நாக்கின்கீழுள்ள (Sublingual) உமிழ்நீர் சுரப்பி ஆகியவற்றிற்கு செல்கிறது. இந்த நரம்பு மையம் தூண்டப்பட்டால் இவ்விரு சுரப்பிகளிலிருந்தும் உமிழ்நீர் சுரக்கிறது
- கீழுள்ள உமிழ்நீர் (Inferior) நரம்பு மையம்
- இதிலுள்ள நரம்பு பரோட்டிட் உமிழ்நீர் சுரப்பி சென்று இந்த நரம்பு மையம் தூண்டப்பட்டால் பரோட்டிட் சுரப்பியிலிருந்தும் உமிழ்நீர் சுரக்கிறது
- கண்ணீர் (Lacrimatory) நரம்பு மையம்
- இந்த மையத்திலிருந்து நரம்பு கண்ணீர் சுரப்பி செல்கிறது
- வேகஸ் நரம்பின் பின் (இயக்க) மையம் Dorsal (Motor) Nucleus of Vagus
- இதிலிருந்து தான் இதயம் முதல் உணவு பாதையில் பெருபகுதி உட்பட நரம்புகள் செல்கின்றன
இதில் முக்கிய விஷயங்கள்
- இந்த ஐந்து மையங்களும் ஒரே வகை செல்களிலிருந்து தோன்றியவை
- கண்ணீர் நரம்பு மையம் உமிழ்நீர் நரம்பு மையத்திற்கு வெகு அருகில் இருக்கிறது
பிற நரம்பு மையங்கள் குறித்து அறிய வேண்டும் என்று விரும்பினால் இங்கு செல்லலாம் இது தான் சராசரி மனித உடலில் இருக்கும் நரம்புகளின் இயக்கம்.
ஆனால் முதலைகளை பொறுத்த வரை கண்ணீர்மையம், உமிழ்நீர்மையம் ஆகியவை ஒன்றாக இருப்பதால் அவை உணவை உட்கொள்ளும் போது உமிழ்நீருடன் கண்ணீரும் சேர்ந்து சுரக்கின்றது (கூடவே உணவு பாதையில் உணவை செரிக்கும் திரவங்களும்). முதலை என்று மட்டுமல்ல, பொதுவாக ஊர்வன வகையை சேர்ந்த உயிரினங்களுக்கே இப்படி தான். ஆனால் பல்லி, பாம்பு, ஓனான், ஆமை போன்றவைகளின் கண்களை அவை உணவருந்திய பின்னர் யாரும் கவனிக்காததால் முதலை உணவருந்திய உடன் கண்ணீர் சுரப்பது பெரிய விஷயம் ஆகி விட்டது
இதே போல் மனிதர்களிலும் சிலருக்கு முதலைக்கண்ணீர் நோய்குறியீடு (crocodile tear syndrome) என்று ஒன்று உள்ளது. இவர்கள் உணவை சாப்பிடும் போது அதிகம் கண்ணீர் சுரக்கும். பேசியல் நரம்பு பாதிக்கப்பட்டு பின் அது சரியாகும் போது இந்த நரம்புகள் மாறி சேருவதால் வரும் பாதிப்பு இது. அதே போல் ப்ரே நோய்குறியீடு என்று ஒன்று உள்ளது, இதுவும் நரம்பு மாறி சேருவதால் வருவதே
இந்த இடுகை எழுத தூண்டுகோலாக இருந்த இடுகை இது தான்



19 மறுமொழிகள்:
இருந்தாலும் முதலைக் கண்ணீர் என்பது ஓர் அழகான உவமை.
பல இடங்களில் உபயோகப் படுத்திக் கொள்ள வசதியான உவமை கூட..
அழவேண்டிய அவசியமே இல்லாத கட்டத்தில் கூட கண்ணீரும் கம்பலையுமாக இருப்பவர்களுக்கு பொருளறிந்தே உபயோகப் படுத்தலாம்
Information is wealth! :)
புருனோ ஸாரின் புதிய பதிவைப் பார்த்தவுடனேயே மவுஸினால் கிளிக் செய்ய மனம் குறுகுறு என்கிறதே.. இது எந்த நரம்பு மண்டலத்தின் வேலை..?
அரசியல்வியாதிகள் மக்களைப் பார்த்து பரிதாபப்படுவதைப் போல் பேசுவதற்கு மிகச் சிறந்த உதாரணம் முதலைக் கண்ணீர்தான்..
சுரேஷ் சார், ஊர்சுற்றி சார், உண்மைத்தமிழன் சார்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
தலைவரே அட்டகாசம் பண்ணிட்டீங்க
முரளி சார்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
மேலதிகத் தகவலுக்கு நன்றிங்க!
வாங்க சார்,
நீங்கள் தான் இந்த இடுகைக்கு தூண்டு கோல்
எழுதியது புரிகிறதா.
எதாவது சந்தேகம் இருந்தால் கேட்கலாம்
Excellent!Please try to write more articles related to science.mainly about brain functions.These kind of articles are lacking in Tamil font.But you are doing good.Expecting more often!
கலக்கல் பதிவு மருத்துவரே.. இனி முதலைக்கண்ணீர் என்று யார்சொன்னாலும் உங்கள் பதிவு தான் நினைவிற்கு வரும்..
சுவையான தகவல்கள்..
நல்லா இருக்கியலா... ஸார்?
வணக்கம் சார்.
உங்கள் பதில்?
தமிழகத்தில் மட்டும் சரியான நேரத்திற்கு வேலைக்கு வராமலிருக்கும் வசூல்ராஜாக்கள் 30%. இதை தடுக்க வரும் 2009-ல் இருந்து அரசு மருத்துவமணைகளில் மருத்துவர்கள் தங்கள் வருகை மற்றும் பணிமுடிந்து திரும்பும் நேரத்தையும் குறிப்பிடவும், தேவைப்பட்டால் கைரேகை மூலம் இதை பதிவு செய்யும் பையோ அட்டெண்டன்ஸ் முறை அமுலக்கப்படும் என்று தமிழக மருத்துவ கவுன்ஸில் தலைவர் டாக்டர்.விநாயகம் தெரிவித்துள்ளார். இது நடைமுறையாகும் என நம்புவோமாக!!
சென்னை நகர மருத்துவர் சங்க தலைவர் 'இப்படி அட்டெண்டன்ஸ் முறைகள் திருத்துஅமைக்கப்பட்டால் மருத்துவர்களுக்கு சம்பள உயர்வும் தேவைனு சொல்லியிருக்காரு.
// இது நடைமுறையாகும் என நம்புவோமாக!!//
கண்டிப்பாக
வாரத்திற்கு 100 மணிநேரம் மருத்துவர்களை வேலை பார்க்க சொல்லும் கொத்தடிமை முறை ஒழிய இதுவே (பயோமெட்ரிக் வருகை பதிவேடு) சிறந்த வழி
இதைத்தான் நாங்களும் எதிர்பார்க்கிறோம்
//இதை தடுக்க வரும் 2009-ல் இருந்து அரசு மருத்துவமணைகளில் மருத்துவர்கள் தங்கள் வருகை மற்றும் பணிமுடிந்து திரும்பும் நேரத்தையும் குறிப்பிடவும், தேவைப்பட்டால் கைரேகை மூலம் இதை பதிவு செய்யும் பையோ அட்டெண்டன்ஸ் முறை அமுலக்கப்படும் என்று தமிழக மருத்துவ கவுன்ஸில் தலைவர் டாக்டர்.விநாயகம் தெரிவித்துள்ளார்.//
மருத்துவர் விநாயகம் என்பவர் தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனர்
மருத்துவர் பிரகாசம் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர்
முதலில் சரியான தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்
ஐயா அனானி,
இந்த இடுகைக்கும் உங்களின் மறுமொழிக்கும் சம்பந்தம் இல்லை.
இருந்தாலும் பதில் அளிக்கிறேன்
மருத்துவ கல்வி இயக்குனர் பயன் படுத்தாத சொல்லை வைத்து மருத்துவர்களை குறிப்பிடுகிறீர்கள்
அது சரி நீங்கள் சம்பளம் வாங்காமலா வேலை செய்கிறீர்கள்
மருத்துவர்கள் மட்டும் செய்யும் தொழிலுக்கு ஏற்ற ஊதியம் வாங்கினால் உங்களுக்கு ஏன் இந்த கடுப்பு
நீங்கள் சம்பளம் வாங்காமல் பார்க்கும் பணி என்ன என்று தெரிந்து கொள்ளலாமா
//தமிழகத்தில் மட்டும் சரியான நேரத்திற்கு வேலைக்கு வராமலிருக்கும் வசூல்ராஜாக்கள் 30%.//
ஒரு வாரத்திற்கு 120 மணிநேரம் வரை வேலை செய்யும் 70 சதம் மருத்துவர்கள் இங்கு இருக்கிறார்கள்
மருத்துவர்களின் பணிநேரம் வாரத்திற்கு 100 மணிக்கும் மேல் என்ற உண்மை உங்களுக்கு தெரியுமா
மருத்துவர்களின் மேல் மட்டும் ஏன் இவ்வளவு காழ்ப்புணர்வு என்று தெரியவில்லை.
இப்படி தான் வவ்வால் என்ற ஒரு புரட்டு விபரப்புலி பதிவர் இருந்தார்.
பிற தளங்களையோ புத்தகங்களையோ படிக்காமல், ஒரு முறை கூட தகவல்களை சரிபார்க்காமல் தனக்கு தோன்றியதை எல்லாம் புள்ளி விபரம் என்று கூறி வெறும் பொய்களை மட்டுமே எழுதியவர்.
மருத்துவர்களை பற்றி அவர் எழுதியதில் ஒன்று கூட உண்மை இல்லை
விழுப்புரம் மருத்துவமனை குறித்து http://vovalpaarvai.blogspot.com/2007/12/blog-post.html) நான் கேட்ட ஒரு கேள்விக்கு கூட பதிலளிக்க முடியாத ஆசாமி வவ்வால்
அவர் பொய்யையும் புரட்டையும் மட்டுமே கூறியனார். அவரது தகவல்கள் தவறு என்று நிருபிக்கப்பட்ட பின்னர் ஒரு மறுப்போ, வருத்தமோ தெரிவிக்கக்கூட முன்வராத “நாகரிக” ஆசாமி வவ்வால்.
முக்கியமாக சம்பள ஏற்ற முறை (Scale of Pay) குறித்த அவரது பதிவுகள் மிகச்சிறந்த காமெடி.
படித்து பாருங்கள்.
அவரது தவற்றை சுட்டி காட்டினால் தனி மனித தாக்குதலில் இறங்கி விடுவார். அந்த அளவு ”நாகரிகம்” தெரிந்தவர்
--
மருத்துவத்துறையை விட்டு விடுங்கள் - தமிழ் நாடு அரசு தேர்வாணையம் பற்றி கூட தவறான தகவல்களைத்தான் அவர் தந்தார் (http://kouthami.blogspot.com/2007/12/blog-post.html)
--
ரத்னேஷ் பதிவில் என்னிடம் தானாக வம்பிற்கு வந்தார்.
பொய் தகவல்களை மட்டுமே பரப்பி வந்த அவர், எனது ஆதாரங்கள் மற்றும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் போனதை இங்கு பார்க்கலாம்
நான் ஆதாரங்களை அளித்தவுடன் காணாமல் போய் விட்டார்.
--
தான் ஒரு புரட்டு ஆசாமி என்பது ஆதாரதுடன் வெளிபட்டவுடன் அனானியாக எழுத ஆரம்பித்து விட்டார். இப்பொழுதும் பாதி புரட்டு தான்.
தகவல் வேறு (fact)
கருத்து வேறு (opinion)
நம்பிக்கை வேறு (belief)
தகவல் என்பது தான் உண்மை தகவல் X பொய் தகவல் அல்லது
சரியான தகவல் X தவறான தகவல் என்று வகைப்படும்.
உதாரணம் :
சரியான தகவல் - பெட்ரோல் விலை 50 ரூபாய்
தவறான தகவல் - பெட்ரோல் விலை 25 ரூபாய்
கருத்து என்பதில் சரியான கருத்து, தவறான கருத்து என்று எதுவுமே கிடையாது. ஒருவருக்கு சரியானதாக தோன்றும் கருத்து அடுத்தவருக்கு தவறாக தோன்றலாம்
ஒரு கருத்து - தனியார் எண்ணை சுத்திகரிப்பு நிறுவனங்கள் அரசுடமை ஆக்கப்பட வேண்டும்
வேறு ஒரு கருத்து - பெட்ரோலுக்கு ரேஷன் முறை கொண்டு வர வேண்டும்.
ஒரு கருத்து - பொது இடங்களில் புகைபிடிக்க தடை வேண்டும்
மாற்றுக்கருத்து - பொது இடங்களில் புகை பிடிக்க அனுமதிக்க வேண்டும்
இதில் (opinion) என்பது இடம், பொருள், நேரம், நபர் என்று வேறு படும்.
அடுத்தவர் கூறும் கருத்துக்களை எதிர்க்க வேண்டியது இல்லை. ஆனால் அவர்கள் தாங்கள் கூறும் கருத்துடன் ஏதேனும் தவறான தகவல்களை தந்தால் கண்டிப்பாக எதிர்க்க வேண்டும். உதாரணமாக தனியார் நிறுவனங்களை அரசுடமை ஆக்க வேண்டும் என்று கூற அனைவருக்கும் உரிமை உள்ளது. அது அவரவர் கருத்து. உங்கள் கருத்து வேறென்பதற்காக அவர் தனது கருத்தை மாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது
ஆனால் அப்படி தனியார் நிறுவனங்களை அரசுடமை ஆக்க வேண்டும் என்று (கருத்து) கூறும் ஒருவர் தவறான புள்ளி விபரங்களை தந்தால் (தவறான தகவல்), அந்த புள்ளி விபரங்களுக்கு எதிராக நாம் பேசலாம். (உதாரணம் மருத்துவ கவுன்சில் தலைவர் / மருத்துவ கல்வி இயக்குனர் பெயரை மாற்றி எழுதுவது)
கருத்து சுதந்திரம் என்பதை தவறான பொய் மற்றும் புரட்டு தகவல்களை அளிக்க தரப்பட்ட சுதந்திரம் என்று தவறாக நினைத்து வாய்க்கு வந்ததை எல்லாம் எழுதி (கைக்கு வந்ததை எல்லாம் தட்டச்சு) கடைசியில் வரை பொய்களுடன் இருக்கும், உண்மைக்கு பக்கம் வராமலேயே அடுத்த பெயரில் எழுத ஆரம்பித்த சிலரில் வவ்வாலும் ஒருவர்.
அவ்வளவு தான்
Post a Comment