காலுறை நாற்றத்திற்கு காரணம் கிருமிகளின் வளர்ச்சியே
இதை தடுக்க இரு வழிமுறைகள் உள்ளன
- ஒரு காலுறையை 8 முதல் 12 மணி நேரத்திற்கு மேல் பயன் படுத்தாமல் அடுத்த காலுறையை மாற்றி விடுவது (அதிகம் வியர்க்கும் நபர்களுக்கு 8 மணி நேரம் - குறைவாக வியர்வை என்றால் 12 மணி நேரம்)
- தினமும் காலுறை அணிந்த பின், சப்பாத்து அணியும் முன்னர் விரல் பகுதியில் மேல் பக்கம் ஒரு சொட்டு, பாதப்பக்கம் ஒரு சொட்டு மற்றும் குதிகால் பக்கம் ஒரு சொட்டு என்று ஒவ்வொரு காலிலும் மூன்று சொட்டுக்கள் டெட்டால் விட்டு விடுங்கள். பிறகு பாருங்கள் மாற்றத்தை
இதை தினமும் செய்ய வேண்டும். டெட்டால் என்று மட்டுமல்ல, சாவ்லான் போன்ற கிருமி நாசினிகளை கூட பயன்படுத்தலாம்
36 மறுமொழிகள்:
எங்களை போன்ற வழக்குரைஞர்களுக்கு தேவையான நல்ல மருத்துவ குறிப்பு..
என்னைப் போன்ற ஊர்சுற்றிகளுக்கு தேவையான நல்ல மருத்துவக் குறிப்பு.
மிக்க நன்றி டாக்டர் ஸார்..
ஒரு சந்தேகம்..
"சப்பாத்து" என்றால் என்ன..?
//"சப்பாத்து" என்றால் என்ன..?//
நான் சுட்டி தந்துள்ளேனே
http://ta.wiktionary.org/wiki/shoe
வக்கீல் சார்,
உண்மைத் தமிழன் சார்,
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
மிக மிக உபயோகமான குறிப்பு டாக்டர். நன்றி
எழுத்தாளர் சார்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
100 வீதம் பருத்தியில் நெய்த காலுறை சற்று விலை அதிகமானாலும்; நாளுக்கு ஒரு சோடி என அணிந்தால்;அதிக வெப்ப நாடுகளுக்கும்; அதிகம் வியர்ப்பவர்களுக்கும்... காலில் உருவாகும் நாற்றத்தைத் தவிர்க்கலாம்.
சப்பாத்து என்பது காலணி.. இது ஒரு போத்துக்கேய மொழிச் சொல்
Dr. Bruno!
I believe our sweat is acidic! Dettol contains some sort of phenol which is acidic as well I believe. As you say it works!
BUt I thought something like a base (NaHCO3) would act as a good deodorizer! :-)
Just a thought!
//I believe our sweat is acidic!//
The problem is not just sweat. There are also other agents like sebum and desquamated epithelium which act like a culture media
வியர்வை மட்டும் பிரச்சனையல்ல. சீபம் மற்றும் இறந்த செல்கள் கூட நுண்ணுயிர்கள் பல்கி பரவ வழி வகுக்கின்றன
// Dettol contains some sort of phenol which is acidic as well I believe. As you say it works!//
Dettol is an entiseptic which prevents multiplication of bacteria
டெட்டால் கிருமி நாசினி. எனவே கிருமிகளின் பெருக்கத்தை தடுக்கிறது
//BUt I thought something like a base (NaHCO3) would act as a good deodorizer! :-)//
Here we prevent multiplication of bacteria and so there is no smell
கிருமிகளின் பெருக்கத்தை தடுத்தால் நாற்றம் வருவதில்லை
i will try this tomorrow...seems to be good idea!
வாங்க வக்கீல் சார்
முயன்று பார்த்த பின் பலருக்கும் பரிந்துரைக்கவும் :)
யோகன் பாரிஸ்(Johan-Paris) சார்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
சில நாட்களாகவே இது பெரும் பிரச்சனையாக இருந்த்து.. இப்ப சரியாகிவிடும் என் நினைக்கிறேன்..நன்றி மருத்துவர் ஐய்யா!
:)))))))
பயனான குறிப்புகள் ! நன்று !
___________
ஆண்களுக்கான காலுரை மற்றும் உள்ளாடைகள் நாற்றம் அடிக்காமல் இருக்க வேண்டுமென்றால் அணியாமல் இருப்பது தான் நல்லது ! சுருளிராஜன் வழிமுறைகளை பின்பற்றனும் !
:))
ஆமா தல.. நல்ல பயனுள்ள குறிப்பு..
என்னைப் போன்ற ஓடுகாலிகளுக்கு நல்ல குறிப்பு :)
இந்த சிக்கல்களையெல்லாம் தவிர்ப்பதற்காகவே நான் காலுறை அணியாமல் சப்பாத்து போட்டுக்கொண்டு திரிகிறேன் (பல நேரங்களில்),
நல்ல பதிவு..
5 ஜோடி காலுறை வாங்கி நாளுக்கு ஒன்று மட்டுமே அணிந்து, வீக்கெண்டில் அய்ந்தையும் துவைத்து உலர்த்தி வரும் வாரத்தில் அணிந்து வந்தால் சிவன் கோயில் குல நாசம் என்ற கதையாய் கிருமிகள் அண்டாமல் கமகமவென்று தினம் சென்று வரலாம்.
முக்கியமா அடுத்தவன் காலுறையைத்திருடக்கூடாது
மருத்துவரே,
வாய் துர்நாற்றம் போன்று, மழை நேரத்தில் நனைந்துவரும் அவரவர் காலுரை துர்நாற்றம் அவரவர்களுக்கு தெரிவதில்லையே ஏன் ? இத்தனைக்கும் காலுக்கும் மூக்குக்கும் போதிய இடைவெளிவேறு இருக்கிறது.
புதசெவி
அக்னி பார்வை சார்,
கோவி.கண்ணன் சார்,
எழுத்தாளர் நர்சிம்,
எம்.எம்.அப்துல்லா சார்,
பிரேம் சார்,
அனானி சார் / மேடம்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
//வாய் துர்நாற்றம் போன்று, மழை நேரத்தில் நனைந்துவரும் அவரவர் காலுரை துர்நாற்றம் அவரவர்களுக்கு தெரிவதில்லையே ஏன் ?//
நமது உடலின் புலன் உறுப்புகளின் செயல்பாடுகளில் acclimatisation என்ற ஒரு concept உள்ளது
தொடர்ந்து ஒரு வாசம் வந்தால் அது விரைவில் மூளையால் கவனிக்கப்படாது
நீங்கள் அணிந்து கொள்ளும் வாசனை திரவியங்களின் மணம் சில நேரங்களுக்கு பிறகு உங்களுக்கு தெரியாது, புதிதாக வரும் பிறருக்கு தெரிகிறதே, அது போல் தான் நாற்றமும் !!
வாய் துர்நாற்றம் எப்படி தடுப்பது ஒரு பதிவு போடவும்.
நன்றி
***வியர்வை மட்டும் பிரச்சனையல்ல. சீபம் மற்றும் இறந்த செல்கள் கூட நுண்ணுயிர்கள் பல்கி பரவ வழி வகுக்கின்றன
டெட்டால் கிருமி நாசினி. எனவே கிருமிகளின் பெருக்கத்தை தடுக்கிறது
கிருமிகளின் பெருக்கத்தை தடுத்தால் நாற்றம் வருவதில்லை
1/21/2009 10:55 PM***
உங்கள் விளக்கத்திற்கு நன்றி, டாக்டர் புருனோ! :)
டாக்டர் சார்,
தலைப்பில் 'காலுரை' என்று வந்திருக்கிறதே... கவனிக்கவில்லையா?
டாக்டர் சார்,
தலைப்பில் 'காலுரை' என்று வந்திருக்கிறதே... கவனிக்கவில்லையா?
//டாக்டர் சார்,
தலைப்பில் 'காலுரை' என்று வந்திருக்கிறதே... கவனிக்கவில்லையா?//
சுட்டி காட்டியதற்கு நன்றி
Hi,
We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com. Please check your blog post link here
Please register yourself on the Tamil Blog Directory to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.
Thanks
Valaipookkal Team
உபயோகமான பதிவு.
இளவஞ்சி எழுதிய இந்தப் பின்னூட்டம் நினைவுக்கு வந்தது இப்பதிவைப்பார்த்ததும் :-)
மிகுந்த பயனுள்ள குறிப்புகள்.நன்றி
பயனுள்ள தகவல்கள் ஐயா.
சப்பாத்து என்ற சொல் ஸ்பானிய மொழிச்சொல். 'Zapato'
2009ல இதுவரைக்கும் வெறும் இரண்டே பதிவுகள்.
ஏன் சார் இப்படி ?
பினாத்தல் சுரேஷ் சார்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
சே.வேங்கடசுப்ரமணியன் சார்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
Gafoor சார்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
// மணிகண்டன் said...
2009ல இதுவரைக்கும் வெறும் இரண்டே பதிவுகள்.
ஏன் சார் இப்படி ?//
வேலை பளு தான் காரணம் சார்.
Post a Comment