முன்கதை :
பொறுப்பு துறப்பு : சில பல காரணங்களுக்காக கதையின் இந்த பகுதியில் உள்ள ஊரும், பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன.
சண்டை போட்ட படோலாவும் தினேஷும் முகத்தை உர் என்று வைத்து உட்கார்ந்திருக்கிறார்கள். படோலாவின் சட்டையில் இரு பொத்தான்களை காணவில்லை. தினேஷோ கையை உதறிக்கொண்டிருக்கிறான்.
என்னடா ஆச்சு என்று கையை பார்த்தால் டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூனில் ஜெர்ரியிடம் அடி வாங்கிய டாமின் மண்டை வீங்குமே அது போல் வலது கை மணிக்கட்டு பகுதி புஸ் என்று வீங்கியிருந்தது
யாராவது கையை தொட்டால் வலிக்குது என்று தமிழிலும், இந்தியிலும் மாறி மாறி கத்திக்கொண்டிருந்தான். மறுபடி எங்கள் விரிவுரையாளரிடம் காட்டியபோது “பிராக்சர் போலிருக்கு சார்” என்ற எங்கள் சந்தேகத்தை அவர் உறுதிபடுத்தினார்.
பேரூந்து ஓட்டுனரிடம் சொல்லி, அடுத்து வந்த பொது தொலைபேசி நிலையத்தில் வண்டியை நிறுத்தி, தர்மபுரியில் இருக்கும் அவரது நண்பரை தொடர்பு கொண்டு ஓசூரில் எலும்பு முறிவு நிபுணர் எங்கிருப்பார் என்பதை கேட்டறிந்து செல்வதென்று முடிவானது.
அதற்குள் சுற்றுலா மனநிலை முற்றிலும் மாறி எரிச்சலும், கடுப்புமே அங்கு மேலோங்கியது. தினேஷும் படோலாவும் சண்டை போடுவது முதல் முறை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். விடுதி உணவகத்தில் (மெஸ்), கிரிக்கெட் மைதானத்தில், மிதிவண்டிநிறுத்துமிடத்தில் என்று எந்த இடத்தை வேண்டுமென்றாலும் கண்ணிமைக்கும் நொடிப்பொழுதில் போர்க்களம் ஆக்கி விடுவார்கள். இங்கும் வந்து இந்த தொல்லையா என்ற கடுப்பு தான் அனைவரிடமும் இருந்தது.
ஓசூர் சென்று அங்கு ஒரு எலும்பு முறிவு மருத்துவமனைக்கு சென்று சேர்வதற்கு முன்னரே அந்த மருத்துவர் எங்களுக்காக காத்துக்கொண்டிருந்தார். சுற்றுலா வந்துள்ள கல்லூரி மாணவர்கள் எலும்பு முறிவு மருத்துவரை தேடுகிறார்கள் என்று எங்கள் விரிவுரையாளரின் நண்பர் இவருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். இவரும் ஏதோ விபத்து / அல்லது கால் தடுக்கி விழுந்து விட்டார்கள் / பேரூந்தின் மாடியிலிருந்து விழுந்து விட்டார்கள் என்று எண்ணிக்கொண்டிருந்திருக்க வேண்டும். “அடி எப்படி பட்டது” (mode of injury) என்று கேட்ட தெரிந்தவுடன் நொந்து போயிருக்க வேண்டும். ஆனால் வெளிக்காட்டவில்லை. “நார்திஸ் ஆர் லைக் திஸ்” (இவங்க இப்படித்தான்) என்று முடித்துக்கொண்டார். அவர் கல்லூரியில் படிக்கும் போது அவருடன் அவர் வகுப்பில் இதே போல் சில நார்தி பசங்கள் படித்திருப்பார்கள் தானே !! அவருக்கு தெரியாதா !!
ஊடுகதிர் சோதனை செய்து (எக்ஸ் ரே) எலும்பு முறிவு தான் என்று உறுதிபடுத்திக்கொள்ள ஆகும் நேரத்தில் பேரூந்தில் இருந்த அனைவரும் இறங்கி மருத்துவமனையில் இருக்கும் அலம்புக் கிண்ணத்தில் (வாஷ் பேசின்) பல் துவக்க ஆரம்பித்து விட்டனர். சிலர் மருத்துவமனையை சுற்றி பார்க்க கிளம்பினோம்
மருத்துவமனையின் வசதிகளையும், கட்டுமானத்தையும் பார்த்து அனைவரும் வியந்து கொண்டிருந்தார்கள்
பெயர் பலகையில் டாக்டர்.ரகு MS Ortho என்றும் அதன் அருகில் டாக்டர்.காயத்ரி MBBS என்றும் இருந்தது. அதே கண்டவுடன் என் வகுப்பு தோழி ஒருவர் “நம்ம சீனியர் காயத்ரி கூட ஓசூரில் இருப்பதாகத்தானே சொன்னாங்க. ஒரு வேளை அவங்கலாக இருக்கலாமா” என்று சந்தேகம் எழுப்ப, சரி நேரடியாகவே கேட்டுக்கொள்ளலாம் என்று நினைத்து விட்டு விட்டோம்
அது வரை மருத்துவமனையின் கட்டமைப்பை, வசதிகளை பார்த்து வியப்பு மட்டுமே வந்த பெண்களிடமிருந்து இப்பொழுது (அது அவர்களுக்கு பழக்கமானவரின் மருத்துவமனை என்று அறிந்தவுடன்) சிறிது பெருமூச்சும் வந்தது. “காயத்ரி அக்கா கொடுத்து வைச்சவுங்க, நல்லா செட்டில் ஆகிட்டாங்கள்ள” கொஞ்சம் பொறாமைதான். அது இல்லாத பெண்களும் உண்டா ?? அவரும் ஒரே கல்லூரியில் படித்ததால், ஒரே விடுதியில் தங்கியதால் நல்ல பழக்கம் இருந்திருக்க வேண்டும். சீனியர்களை "அக்கா/மேடம்" என்று பெண்களும், “ஸார்” என்று ஆண்களும் அழைப்பது மருத்துவக்கல்லூரிகளில் உள்ள நடைமுறை)
இதற்குள் ஊடுகதிர் படத்தை பார்த்து எலும்பு முறிவை உறுதிப்படுத்தி மாவு கட்டு போட்டபின் அனைவருக்கும் காபி வந்தது. “இப்படி ஒரு மேட்டருக்கு சண்டை போட்ட இவனுக்கு ஓசி வைத்தியமே டூ மச். இதில் இவ்வளவு பேருக்கும் ஓசி காபி வேறயா” என்று அவர் மனதில் நினைத்திருக்க வேண்டும் !!
காபி குடிக்கும் போது நான் ஆரம்பித்தேன்
நான் : சார், நீங்க எந்த காலேஜ்.
அவர் : ஜிப்மர்
நான் : எந்த பேட்ச்
அவர் : 88 பேட்ச்
நான் : அப்படியா, உங்க Mrs திருநெல்வேலி தானே எந்த பேட்ச்.
அவர் : 92 ஆ, 93ன்னு...ம்ம்ம்ம் 94ஆ இருக்குமோ
என் வகுப்பு தோழி ஒருவர் : 93 பேட்ச்ல காயத்ரின்னு ஒரு சீனியர் உண்டு. அவங்கலா இருக்குமோன்னு ஒரு சந்தேகம்
அவர் : இருங்க கேட்டு சொல்றேன் என்று அவர் அறைக்கு சென்று தொலைபேசியை எடுக்கவும் என்னடா பொண்டாட்டி எந்த பேட்ச் என்று கூட தெரியாமல் ஒருத்தன் இருக்கிறானே என்று நாங்கள் நொந்து போனோம்.
அவர் திரும்பி வந்து புன்னகையுடன் “93 பேட்ச்தானாம்” என்று கூறிவிட்டு “பிராக்டிஸ் பிசியா, அதனால தான் இதெல்லாம் சரியா தெரியல” என்று வேறு கூறினார். அதன் பிறகு எல்லாரும் வேகவேகமாக காபி குடித்து விட்டு வரிசையாக பேரூந்தில் ஏறினோம்
சிறிது நேரம் முன்னர் மருத்துவமனையை “காயத்ரி அக்கா கொடுத்து வைச்சவுங்க” என்று கூறியவரே இப்பொழுது பேரூந்தில் ஏறும் போது கூறினார் “காயத்ரி அக்கா பாவம்ல”
(இந்த கதை) முற்றும்
கல்லூரி நினைவுகள் பிரிதொரு சமயம் தொடரும்
10 மறுமொழிகள்:
//சிறிது நேரம் முன்னர் மருத்துவமனையை “காயத்ரி அக்கா கொடுத்து வைச்சவுங்க” என்று கூறியவரே இப்பொழுது பேரூந்தில் ஏறும் போது கூறினார் “காயத்ரி அக்கா பாவம்ல”//
உலகம் முழுவதும் உள்ள சற்று கசப்பான உண்மை.
//“நார்திஸ் ஆர் லைக் திஸ்” (இவங்க இப்படித்தான்) என்று முடித்துக்கொண்டார். அவர் கல்லூரியில் படிக்கும் போது அவருடன் அவர் வகுப்பில் இதே போல் சில நார்தி பசங்கள் படித்திருப்பார்கள் தானே !! அவருக்கு தெரியாதா !!//
பிறதுறைகளிலும் இப்படித்தானோ....
//பிறதுறைகளிலும் இப்படித்தானோ....//
அப்படித்தான் நினைக்கிறேன்
உங்கள் கல்லூரியில் எப்படி ??
காயத்ரி அக்கா, ரகு சார், கணவன் மனைவி தானான்னு விசாரிச்சீங்களா இல்லையா ? !! இல்லாட்டி நீங்க guess பண்ணினீங்களா ?
என்ன சார், இவ்வளவு சீக்கிரம் கல்லூரி அனுபவம் முடிச்சுட்டீங்க ?
நல்லா போயிட்டு இருந்தது. இப்படி பாதில நிறுத்திட்டீங்களே. ஏதாவது பிரச்சனையா டாக்டர்?
///இந்த கதை
முற்றும்///
கதை ????!!!!
//காயத்ரி அக்கா, ரகு சார், கணவன் மனைவி தானான்னு விசாரிச்சீங்களா இல்லையா ? !! இல்லாட்டி நீங்க guess பண்ணினீங்களா ?//
அதெல்லாம் அவரிடம் கேட்கும் முன்னரே விசாரித்து விட்டோம்
//என்ன சார், இவ்வளவு சீக்கிரம் கல்லூரி அனுபவம் முடிச்சுட்டீங்க ?//
நல்லா பாருங்க சார்
(இந்த கதை) முற்றும்
பிற சம்பவங்கள் (கல்லூரி நினைவுகள் பிரிதொரு சமயம்) தொடரும் !!!
//நல்லா போயிட்டு இருந்தது. இப்படி பாதில நிறுத்திட்டீங்களே. ஏதாவது பிரச்சனையா டாக்டர்?//
இந்த கதை அவ்வளவுதான் சார்
பிற சம்பவங்கள் இருக்கின்றன
நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்
/////இந்த கதை
முற்றும்///
கதை ????!!!!//
இந்த அத்தியாயத்தில் பெயர்கள் மாற்றப்பட்டதால் அது கதையாகிவிட்டது :) :)
hi dr.bruno,
ur post brought back my memories abt my college life!i'm a stanlean.most of the guys try their luck in proposing to girls during their tour.hope to read more from u!
Post a Comment