இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Tuesday, March 24, 2009

மாணவனின் உயிரும் கல்லூரி முதல்வரின் நடத்தையும் - இரு சம்பவங்கள்

நான் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் போது நடந்த சம்பவம் வேறு ஒரு சோக நிகழ்வால் இன்று திடீரென்று நினைவுக்கு வந்தது

ஒரு நாள் மாலை சுமார் 4 மணியளவில் இரு சக்கர வாகன விபத்தில் அடிபட்ட என் வகுப்பு தோழன் ஒருவன் எங்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான். மயக்க நிலையில், அவசர வார்டில் சேர்க்கப்பட்டதில் பரபரப்பு.

தலைக்குள் இரத்தக்கட்டு உள்ளதா என்பதை கண்டறிய உடனடியாக சி.டி.ஸ்கேன் எடுக்க வேண்டும் என்பதால் சி.டி.ஸ்கேன் டெக்னீசியனை (தொழிற்நுட்பனர்) அவசரமாக அழைத்ததில் அவர் பதற்றத்தில் சாவியை வீட்டில் வைத்து விட்டு வந்து விட்டார்.

மீண்டும் விட்டிற்கு சென்றால் நேரமாகும் என்பதால் என்ன செய்வது என்று அந்த தொழிற்நுட்பனரும் மற்றொரு ஊழியரும் தயங்கிய நிலையில் கொஞ்சம் தெனாவட்டு அதிகம் உள்ள ஒருவர் பூட்டினுள் ஒரு இரும்பு கம்பியை நுழைக்க, அதை விட அதிகம் தெனாவட்டு உள்ளவர் ஒரு ஸ்பெனரால் ஓங்கி போட அந்த பூட்டு உடைந்து விட்டது. ஸ்கேனும் எடுத்தாகி விட்டது. இரத்தக்கட்டு எதுவும் இல்லை என்றாலும் கபால எலும்பு உடைந்திருப்பதும் தெரியவந்து அனைவரும் நொந்து விட்டனர்

அரசு அலுவலகங்களில் முறையான விதிமுறைகளின் படி அல்லாமல் பூட்டை உடைப்பது எனப்து இ.த.சவின் (இந்திய தண்டனை சட்டம் - இந்தியன் பீனல் கோட் - இ.பி.கோ) பல பிரிவுகளின் கீழ் குற்றம் என்பதால் பூட்டை உடைத்த இருவரும் தயங்கி தயங்கி ஒரு 6 மணி வாக்கில் கல்லூரி முதல்வரை பார்த்து “சார் நம்ம ஸ்டூடண்ட் ஆர்.டி.ஏ (ரோட் டிராபிக் ஆக்சிடண்ட் - சாலை விபத்து) ஹெட் இஞ்சரின்னு அட்மிட்டட், (தலைக்காயம் ஏற்பட்டதால் சேர்க்கப்பட்டுள்ளார்) ஸ்கேன் ரூம் பூட்டில் எதோ கோளாறு, கொஞ்சம் வேகமாக திறந்ததில் உடைந்து விட்டது. அது தான் உங்களிடம் சொல்லி.........” என்று இழுக்க, முதல்வரோ “எப்படி ஆச்சு, இப்ப எப்படி இருக்கிறான்” என்று பதற்றத்துடன் கேட்டார்

“பேஸ் ஆப் ஸ்கல் பிராக்சர், அன்கான்சியஸ் தான்” (கபால எலும்பின் அடிப்பாகம் உடைந்துள்ளது, மயக்கத்தில் தான் உள்ளான்) என்று கூறவும். சட்டென்று எழுந்தவர், “சரி வாங்க பார்ப்போம்” என்று கிளம்பி விட்டார். பூட்டை பற்றி மேலும் ஒரு வார்த்தை கூட கேட்க வில்லை. வெளியில் வரும் போதே நிர்வாக அலுவலரை அழைத்து “சிடி ஸ்கேன் ரூம் கீ லாஸ்ட், பெர்மிட்டட் டூ பிரைக் ஓபன் த லாக் இன் பிரண்ட் ஆப் டீன்னு ஒரு ஆர்டர் ரெடி பண்ணி அக்சிடண்ட் வார்ட் கொடுத்து விடுங்கள், ஐ வில் சைன் டூடே இட்செல்ப்” (ஸ்கேன் அறையின் பூட்டிற்கான சாவி தொலைந்து விட்டதால் முதல்வர் முன்னிலையில் பூடடை உடைக்க ஆணை. இன்றே நான் கையொப்பம் இடுகிறேன்) என்று கூறிவிட்டு அவசர பிரிவிற்கு வந்து விட்டார்

வந்து மாணவனை பார்த்து விட்டு, பெற்றோருக்கு தெரிய படுத்தி விட்டீர்களா என்று விசாரித்து விட்டு, விடுதியில் தங்கி படிக்கும் மாணவன் என்று தெரிந்த உடன் அங்கேயே உட்கார்ந்து விட்டார்.

பொதுவாக மருத்துவ கல்லூரி முதல்வர்கள் எந்த ஒரு பிரிவிற்கு வந்தாலும் 5 நிமிடங்களுக்கு மேல் அங்கு இருப்பது அபூர்வம். யாராவது அமைசச்ர் வந்து உள்நோயாளியாக சேர்ந்தாலே வந்து பார்த்து விட்டு உடனடியாக சென்று விடுவார்கள்.

அப்படி இருக்க அவர் உட்கார்ந்ததில் எங்களுக்கு பயம் அதிகரித்து விட்டது. அவர் அறுவை சிகிச்சை நிபுணர் என்பதால் சாலை விபத்துக்களில் பாதிக்கப்படும் நூற்றுக்கணக்கான நோயாளிகளை பார்த்திருப்பார். எனவே ஏன் இங்கேயே உட்காருகிறார். நிலைமை மோசமா என்று பயங்கர குழப்பம்.

ஒரு 7 மணி வாக்கில் கொஞ்சம் தைரியம் உள்ள சிலர் தயங்கி தயங்கி முதல்வரிடம் சென்று “சார் நீங்க இங்கேயே இருக்கீங்களே. காப்பி எதாவது வாங்கி வரவா ” என்று கேட்க அவரும் கேட்டவர்களின் முகத்தை பார்த்து விட்டு “பயப்படாதீங்க, ஹி வில் ரிகவர் (அவன் குணமடைந்து விடுவான்) அவங்க பேரண்ட்ஸ் வரும் வரை ஐ வில் வெய்ட். ஐ அம் த கார்டியன் டில் ஹிஸ் பேரண்ட்ஸ் கம். லெட் மீ இன்பார்ம் ஹிஸ் பேரண்ட்ஸ் மைசெல்ப்” (பெற்றோர் வரும் வரை நான் காத்திருக்கிறேன். விடுதி மாணவன் என்பதால் பெற்றோர் வரும் வரை நான் தானே பொறுப்பு, அவர்கள் வந்தவுடன் அவர்களிடம் கூறிவிட்டு நான் செல்கிறேன்) என்று கூறிய பின்னர் தான் எங்களுக்கு சிறிது ஆறுதல்

அதன் பின் 8 மணி அளவில் பெற்றோர் வந்தபின், அவர்களிடம் ஆறுதல் கூறிவிட்டு தான் கிளம்பினார் முதல்வர் மரு.வி.எஸ்.பாலசுப்பிரமணியன்.(எம்.எஸ்)

மாதா, பிதா, குரு, தெய்வம் !! என்பதின் மேலும் ஒரு பரிமாணத்தை உணர வைத்த நிகழ்வு அது

பின் குறிப்பு 1 :  “உண்மையை சொல், நீதானே பூட்டை உடைத்தது” / “பாரன்சிக்ல டெஸ்ட் பண்ணி பூட்டு உண்மையில் பிரச்சனை இருந்ததா என்று கண்டுபிடிக்கவா” என்று ஒரு வார்த்தை கூட கேட்காமல் பூட்டை உடைப்பதும் சாவி வைத்து திறக்குமிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின் என்ற 292ஆம் குறளின் கோட்பாட்டின் படி ஆணை போட சொன்னதால் “ஒரு நீண்ட காலம் இழுக்கக்கூடிய” பிரச்சனை ஒரே மணி நேரத்தில் தீர்ந்தது

பின் குறிப்பு 2 : அடிபட்ட மாணவன் 3 வாரம் கழித்து மறுபடியும் இருசக்கர வாகனம் ஓட்ட ஆரம்பித்து விட்டான். அதற்கு அடுத்த நாள் அவனது தாய் எங்களிடம் ஒரு ஸ்கேல்பலை (அறுவை சிகிச்சை செய்ய பயன்படும் கத்தி) வாங்கி அந்த வாகனத்தில் இரு டயர்களையும் வெட்டி விட்டார்

இந்த சம்பவம் ஞாபகம் வர காரணமான சோக சம்பவத்தை இனி பார்ப்போம்

கரக்பூரில் இருக்கும் ஐ.ஐ.டியில் 3ஆம் ஆண்டு படிக்கும் மாணவன் ரோகித் குமார்
கடந்த மார்ச் 20ஆம் தேதி முதல் தலைவலியால் அவதிப்பட்டு வந்திருக்கிறான். ஐ.ஐ.டி வளாகத்தினுள்ளேயே இருக்கும் பி.சி.ராய் மருத்துவமனையில் சிகிச்சையும் எடுத்துள்ளான்.

கடந்த 22ஆம் தேதி தலைவலி அதிகமாகவே மறுபடியில் மருத்துவமனையில் காண்பித்து விட்டு மாணவர் விடுதிக்கு திரும்பும் வழியில் வலிப்பு ஏற்பட்டு மயக்கமடைந்து, வந்து கொண்டிருந்த ரிக்‌ஷாவிலிருந்து கீழே விழுந்து அடிபடுகிறது.

நண்பர்களால் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படும் போது அங்குள்ள மருத்துவர், நாடித்துடிப்பு குறைவதையும், கண்களின் பாப்பாக்கள் விரிவடைவதையும் பார்த்து விட்டு கொல்கத்தாவிற்கு சென்று நரம்பியல் நிபுணரிடம் காட்டுமாறு கூறுகிறார்.

அங்குள்ள பிணியாளர் ஊர்தியில் மாணவனை ஏற்றி அனுப்ப (வண்டிக்கு பெட்ரோல் போட, மற்றும் சில பாரங்களை நிரப்ப) 3 மணி நேரம் ஆகிறது. அந்த பிணியாளர் ஊர்தி எப்பேற்பட்டது என்பதை http://209.97.214.175/~scholars/wordpress/?p=1024 காணலாம்
இப்படிப்பட்ட பிணியாளர் ஊர்தியில் கிட்டத்தட்ட மயக்க நிலையில் உள்ள மாணவனை இரு மாணவர்கள் மற்றும் ஒரு மருந்தாளுனர் துணையுடன் அனுப்பிய நிலையில், வண்டி கொல்கத்தாவை நோக்கி செல்லும் வழியில் திடீரென ரத்த வாந்தி எடுத்ததால் (கொல்கத்தா செல்லும் வழியில்) மிட்னாப்பூரில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவரோ, ”வரும் போதே மரணம்” (brought dead / dead on arrival.) என்கிறார்.

இந்த செய்தி கரக்பூர் ஐ.ஐ.டியினுள் காட்டுத்தீயை போல் பரவுகிறது. ஏனென்றால் பி.சி.ராய் மருத்துவமனையில் வசதிகள் போதவில்லை என்று உள்சுற்று இதழில் (in house magazine) கட்டுரை எழுதியதற்காக நிர்வாகம் அந்த இதழை 6 மாதம் நிறுத்தி வைத்துள்ளது. (http://preprocess.blogspot.com/2005/10/story-that-shut-down-scholars-avenue.html) இன்றோ வசதி குறைவால் ஒரு மாணவனை இழந்துள்ளார்கள்

இவை எல்லாம் மாணவர்கள் வெளியில் உலவகத்தில் இருந்து பதிவில் ஏற்றியவை. ஏன் ஐ.ஐ.டியினுள் இணைய இணைப்பு கிடையாதா என்று தானே கேட்கிறீர்கள்

இவ்வளவு களேபாரம் நடந்தபின்னரும் ஐ.ஐ.டியின் இயக்குனர் மாணவர்களிடம் பேச முன்வரவில்லை. அதனால் அவரிடம் பேசுவதற்கு பதில் அவர் வீட்டு கண்ணாடியிடமும்
பூந்தொட்டிகளிடமும் (இந்த படங்கள் http://picasaweb.google.com/scholarsavenuekgp/ReactionsInPictures இருந்து பெறப்பட்டவை)
அவரது சீருந்திடமும் பேசிவிட்டார்கள்

இதை விட கொடுமை என்னவென்றால் அங்குள்ள ஒரு துணை இயக்குனர் கூறியதாக பதிவுகளில் எழுதப்படும் வார்த்தைகள். அதை அப்படியே ஆங்கிலத்தில் தந்துள்ளேன்
(Whats the big deal. people die everyday)
என்ன சொல்வது என்று தெரியவில்லை :(

ஆசிரியர் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பதை தவிர என்ன சொல்வது என்று தெரியவில்லை :(

25 மறுமொழிகள்:

SUREஷ் said...

சின்ன ரிஸ்க் எடுக்க த்லமை தயாராக இருந்தால் பல பிரச்சனைகள் புஸ்.....

T.V.Radhakrishnan said...

நல்ல ஒரு தலைமை...சரித்திரத்தையே மாற்றும்

வெண்பூ said...

ஆச்சர்யமான இரு துருவங்கள். இரண்டுமே நம்புவதற்கு கடினமாக இருக்கிறது டாக்டர்..

நையாண்டி நைனா said...

மருத்துவ கல்லூரியின் முதல்வரை வணங்கி போற்றுகிறேன், அதை வெளிகொணர்ந்த உங்களுக்கும் எனது பாராட்டுகள்.

இரண்டாவது சம்பவத்திற்கு நான் இப்போதைக்கு எதுவும் சொல்லவில்லை.
தவறுகள் திருத்தப்படவேண்டும்.

Sumathi. said...

ஹலோ சார்,

முதல் பகுதியை படிச்சவுடனே, அந்த மாமனிதரை கையெடுத்து கும்பிடத் தோன்றியது. உடனே அடுத்த பகுதியை படித்த உடன், காசு பணம் தான் உலகத்திலே எல்லாமே என்றானவுடன் சக மனிதர்களிடத்தில் எப்படி மனிதத் தன்மையை எதிர்பாக்கமுடியும்? என தோன்றியது. பாவம் அந்த மாணவரும்,அவன் பெற்றவர்களும். அவர்களுக்கு மன ஆறுதலைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்.

ராஜ நடராஜன் said...

உங்கள் நேரடி அனுபவத்திலும் தகவல் அனுபவத்திலும் உள்ள கால இடைவெளியில் மனிதம் விட்டு மனிதம் இழக்குறோமோ?

குசும்பன் said...

//பெற்றோர் வரும் வரை நான் காத்திருக்கிறேன். விடுதி மாணவன் என்பதால் பெற்றோர் வரும் வரை நான் தானே பொறுப்பு,//

இது ஒன்றே போதும் அவரின் மேல் நல் மதிப்பு வருவதற்கு.

புருனோ Bruno said...

சுரேஷ் சார்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

புருனோ Bruno said...

ராதாகிருஷ்ணன் சார்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

ஜோசப் பால்ராஜ் said...

மருத்துவர் அய்யா,
அந்த காலத்துல தலைமை பதவிக்கு வந்தவங்க தகுதியாலயும், திறமையாலயும் தலைமை பதவிக்கு வந்தாங்க. ஆனா இப்ப தலைமைக்கு வரவங்க எப்டி வராங்கன்னு தான் நமக்கு தெரியுமில்ல? கட்சி மாறி வந்தவங்களுக்கு துணை வேந்தர் பதவி கிடைச்சதயும் நாம பார்த்தோம்ல..

SUREஷ் said...

//ஜோசப் பால்ராஜ் said...

மருத்துவர் அய்யா,
அந்த காலத்துல தலைமை பதவிக்கு வந்தவங்க தகுதியாலயும், திறமையாலயும் தலைமை பதவிக்கு வந்தாங்க. ஆனா இப்ப தலைமைக்கு வரவங்க எப்டி வராங்கன்னு தான் நமக்கு தெரியுமில்ல?//


புருனோ அவர்கள் இன்னும் கல்லூரி மாணவர். அவர் சொன்ன முதல் சம்பவம் நடந்து வெகுநாட்களெல்லாம் ஆகவில்லை என்பதை தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன்.

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணே நான் படித்த கல்லூரியில் நடந்த ஒரு சம்பவம்...

மாணவர் ஒருவர் யாருக்கும் தெரியாமல் மோட்டாரை உடைத்து விட்டனர். முதல்வர் தாளாளரிடம் அந்த மாணவனுக்கு எவ்வளவு ஃபைன் போடலாம் என்கின்றார். அவர் ஒரு தொகையைச் சொன்னவுடன் “அவன் யாரென்று தெரியவில்லை, எனவே தலைமைப் பொறுப்பில் இருக்கும் நானே பொறுப்பேற்று அந்தத் தொகையைக் கட்டிவிடுகின்றேன் என்று பணம் கடிவிட்டார். செய்தி அறிந்த அந்த மாணவன் கதறி அவர் காலில் விழுந்தான்(தன்னெஞ்சறிவது...). அந்த நல்ல மனிதர் பேராசிரியர்.முகமது அலி.

Maddy said...

எம்.எம்.அப்துல்லா ..ur anectode about the teacher is great..As a former IIT -Kharagpur researcher, i know the pathetic services of B.C.Roy Hospital. IIT is getting crores of rupees from Govt. funding. Why dont they invest on a simple Ambulance service? My condolences to the victim.

புருனோ Bruno said...

//ஆச்சர்யமான இரு துருவங்கள். இரண்டுமே நம்புவதற்கு கடினமாக இருக்கிறது டாக்டர்.//

உண்மைதான் சார்.அதனால்தான் இரண்டாவது சம்பவத்தை ”ஆதாரங்களுடன்” எழுதினேன் - என் நடையினால் திரிந்து விடக்கூடாது என்பதால் தான் அங்கங்கே screenshotsம் இணைத்தேன்

புருனோ Bruno said...

நையாண்டி நைனா சார்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

புருனோ Bruno said...

சுமதி மேடம்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

புருனோ Bruno said...

ராஜ நடராஜன் சார்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

// உள்ள கால இடைவெளியில் மனிதம் விட்டு மனிதம் இழக்குறோமோ?//

சிந்திக்க வேண்டிய விஷயம், ஆனால் இரு சம்பவங்களுக்கும் இடையில் 50 ஆண்டுகள் வித்தியாசம் ஒன்றும் இல்லையே

புருனோ Bruno said...

குசும்பன் சார்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

புருனோ Bruno said...

ஜோசப் பால்ராஜ் சார்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

புருனோ Bruno said...

அப்துல்லா சார்

நெகிழ வைக்கும் நிகழ்ச்சி
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

ஷண்முகப்ரியன் said...

உங்கள் பதிவு இன்றுதான் எனது கணிணியில் திறந்தது,டாக்டர்.
இரண்டு வேறுபட்ட மனிதர்களைத் தொட்ட விதம் நன்றாக இருந்தது.
மனிதனின் உடல் நோய்களை வகைப் படுத்துதல் போல் அவனது மன்தின் நோய்களையும் வகைப் படுத்த முடிந்தால் மருத்துவர்களுக்கு சிகிச்சை அளிக்க இன்னும்வசதியாக இருக்கும் என்று நினைக்கிறேன் டாக்டர்.

புருனோ Bruno said...

ஷண்முகப்ரியன் சார்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

//மனிதனின் உடல் நோய்களை வகைப் படுத்துதல் போல் அவனது மன்தின் நோய்களையும் வகைப் படுத்த முடிந்தால் //

வகைப்படுத்தலாம்

ஆனால் அதில் பலவிஷயங்கள் “நோய்” என்ற பதத்தில் பொருந்தாதே

அக்னி பார்வை said...

Excellent blog..

I have no words to say really, there are good peoples in the world

அக்னி பார்வை said...

Excellent blog..

I have no words to say really, there are good peoples in the world

அக்னி பார்வை said...

Excellent blog..

I have no words to say really, there are good peoples in the world

இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...