இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Saturday, April 11, 2009

கல்லூரி (கற்பனை) கதைகள் : 1. அவள் வருவாளா : பாகம் 2

முன்கதை வாசிக்க : கல்லூரி (கற்பனை) கதைகள் : 1. அவள் வருவாளா : பாகம் 1

என் பதிவிலிருக்கும் பிற கல்லூரிகதைகள் போலல்லாமல் இந்த கதையும் இதில் வரும் பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனை. யாரையும் குறிப்பிடுவது அல்ல

அந்த நேரத்தில் மாணவியர் விடுதிக்கு முன்னால் இருக்கும் கல்லூரி நூலகத்தில் நூலகர் “இருந்தாலும் இவளுக்கு இவ்வளவு கொழுப்பு ஆகாது, அவளே சும்மா இருக்கா, இவத்தான் அவளை ஏற்றி விடுகிறாள். விட்டு தொலைய வேண்டியது தானே” என்று ஒரு பெண்ணை யாரிடமோ திட்டிக்கொண்டிருந்தார். ஆர்வம் மேலிடவே பலரும் எட்டிப்பார்த்தார்கள். எட்டிப்பார்த்தவர்களின் கும்பலில் மாதவனும் இருந்தார் நானும் இருந்தேன்

அதன் பிறகு தான் எங்கள் அனைவருக்கும் கண்ணனின் நெருங்கிய நண்பர்கள் மாணவியர் விடுதியை சுற்றி வந்த விஷயம் என்னவென்று தெரியவந்தது.

கடந்த சில வாரங்களாகவே கண்ணன் அவர் வகுப்பில் படிக்கும் கலைவாணி என்ற மாணவிக்கு தினம் ஒரு வாழ்த்து அட்டை அனுப்புவது என்று அஞ்சல் துறைக்கு வேலை வைத்து இருக்கிறார். இவரை பற்றி தெரிந்த அந்த பெண்ணும் அந்த அட்டைகளை கண்டுகொள்ளவில்லை. ஒரு நாள் அட்டை வரவில்லை. தபால்காரர் விடுப்பில் சென்றிருக்கலாம் என்று நினைக்கிறேன் !!.  விடுதி மாணவிகள் சிலர் “என்னக்கா இன்னைக்கு கிரீடீங்கஸ் வரல. இனி போன் தானா” என்று கேலி செய்யவும் கடுப்பான கலைவாணி நேராக துனை முதல்வரிடம் சென்று அட்டைகளை காண்பித்து புகார் அளித்து விட்டார்

“வாழ்த்து அட்டை அனுப்பி” பெரிய குற்றத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமா, வெறும் அறிவுரை மட்டும் போதாதா என்று துனை முதல்வர் நினைத்திருக்க வேண்டும். கண்ணனை அழைத்து ஒரு 15 நிமிடங்கள் திட்டி, மிரட்டி அதன் பிறகு அவன் தோழர்களை அழைத்து “ஒரு வாரத்திற்குள் அவளை புகாரை திரும்ப பெற வைத்தால் நான் நடவடிக்கை எடுக்காமல் விட்டு விடுகிறேன். இல்லை என்றால் கண்டிப்பாக நடவடிக்கை வேண்டும்” என்று மிரட்டவும் ஒவ்வொருவராக வந்து பெண்கள் விடுதியில் சமாதானம் பேசியிருக்கிறார்கள்.

அங்குதான் பிரச்சனையே. கலைவாணியை விடவும் அவளது தோழிகள் சிலர் புகாரை திரும்ப பெற முடியாது என்பதில் வெகு உறுதியாக நின்றதால் சமாதானம் பேச சென்ற அனைவரும் முல்தானில் சேவாகிற்கு பந்து வீசிய பாக் வீரர்களை போல் தொங்கிய முகத்துடன் திரும்பி வந்துக்கொண்டிருந்தனர். அப்படி வீராவேசமாக புகாரை திரும்ப பெறமுடியாது என்று பேசிய தோழிகளில் அதிகம் சத்தம் போட்ட மாணவி செந்தாமரை பற்றி தான் நூலகர் புலம்பி இருக்கிறார்.

அந்த நேரம் நூலகத்தில் இருந்த மாதவன் அப்பொழுது பேச்சுவார்த்தையில் தோல்வியடைந்து வந்த கண்ணனின் தோழர்களில் ஒருவரிடம் சென்று “நீங்க என்ன சொன்னீங்க, அவங்க என்ன சொல்றாங்க” என்று கேட்கவும். கதை கேட்க பெரும் கூட்டம் கூடிவிட்டது

“புகாரை திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள் என்று எவ்வளவோ கெஞ்சி விட்டோம். ஆனால் மீண்டும் இவன் வாழ்த்து அட்டை அனுப்ப மாட்டான் எனப்தற்கு உத்திரவாதம் தர முடியுமா என்று கேட்கிறார்கள். (கண்ணன் வாழ்த்து அட்டை அனுப்ப மாட்டான் என்று) யாராவது உத்திரவாதம் தந்தால் புகாரை திரும்ப பெற்றுக்கொள்வார்களாம். நாங்க வந்துட்டோம்” என்று நொந்து போய் கூறினார். கண்ணனை பற்றி தெரிந்தவர்கள் யாருமே அப்படி ஒரு உத்திரவாதம் தர மாட்டார்கள் !!! என்பதை இது வரை கதை வாசித்து வந்து நீங்கள்கூட அறிவீர்கள் தானே

“இவ்வளவு தானா” என்று கேட்ட மாதவன் “நான் வேண்டுமானால் பேசிப்பார்க்கவா” என்று கேட்கவும் பலரும் அசந்து விட்டார்கள்.

மாதவன் பேசி சமாதானம் வருவது என்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி சரியான அளவில் காவிரியில் தண்ணீர் வருவது போன்றது. ஆண்களிடம் கூட சரியாக பேசாத மாதவனா பெண்களிடம் பேசுவான் என்று அங்கு இருந்த பலரும் அதிசயித்து நின்ற போதும், தலைக்கு மேல் வெள்ளம் போனபின்னர் சாண் போனாலென்ன முழம் போனாலென்ன என்ற நிலையில் “சரி நீ பேசி பாருடா” என்று கூறினார்கள்.

நேராக கிளம்பி பெண்கள் விடுதி வாசல் சென்றார்.

சென்ற வேகத்தில் வந்து விட்டார்.

தொடர்ந்து வாசிக்க : கல்லூரி (கற்பனை) கதைகள் : 1. அவள் வருவாளா : பாகம் 3

7 மறுமொழிகள்:

dharshini said...

me the first :)

புருனோ Bruno said...

வாங்க மேடம்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

Peer said...

// சமாதானம் பேச சென்ற அனைவரும் முல்தானில் சேவாகிற்கு பந்து வீசிய பாக் வீரர்களை போல் தொங்கிய முகத்துடன் திரும்பி வந்துக்கொண்டிருந்தனர்.//

டைமிங் அருமை புருனோ சார்...

புருனோ Bruno said...

Peer சார்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

மணிகண்டன் said...

மாதவா, ஏம்ப்பா உடனே திரும்பி வந்த ?

ப்ருனோ சார்,

தர்ஷினி மேடம் என்ன கருத்து சொன்னாங்க ? அதுக்கு நீங்க நன்றி சொன்னீங்க ? எனக்கு இப்ப இது தெரிஞ்சாகனும் !

புருனோ Bruno said...

//மாதவா, ஏம்ப்பா உடனே திரும்பி வந்த ?//

அடுத்த பகுதியில் காரணம் தெரிந்து விடும்

புருனோ Bruno said...

//தர்ஷினி மேடம் என்ன கருத்து சொன்னாங்க ?//

:)

// அதுக்கு நீங்க நன்றி சொன்னீங்க ?//
:) சொன்னதால் நன்றி

// எனக்கு இப்ப இது தெரிஞ்சாகனும் !//
சரியா ?

இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...