- கல்லூரி (கற்பனை) கதைகள் : 1. அவள் வருவாளா : பாகம் 1
- கல்லூரி (கற்பனை) கதைகள் : 1. அவள் வருவாளா : பாகம் 2
என் பதிவிலிருக்கும் பிற கல்லூரிகதைகள் போலல்லாமல் இந்த கதையும் இதில் வரும் பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனை. யாரையும் குறிப்பிடுவது அல்ல
நேராக கிளம்பி பெண்கள் விடுதி வாசல் சென்றார். சென்ற வேகத்தில் வந்து விட்டார். “வாசல் யாருமே இல்லடா. எல்லாரும் உள்ளே போயிட்டாங்க, நாளைக்கு கிளாசில் பேசிக்கலாம்” என்று கூறவும், வாயிற்காப்போனிடம் கூறி விடுதியில் இருப்பவர்களை அழைக்க வேண்டும் என்ற நடைமுறை மாதவனுக்கு தெரியாததுதான் பிரச்சனை என்பது புரிந்தது
கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்று எண்ணிய நான், “வா, அவங்களை கூப்பிடலாம்” என்று கூறி மாதவனை கையோடு கூட்டிக்கொண்டு விடுதி சென்று வாயிற்காப்போனிடம் கலைவாணியை அழைத்து வர சொன்னேன்.
சிறிது நேரத்தில் கலைவாணி, செந்தாமரை மற்றும் அவர்களின் தோழிகள் பலர் வந்து விட்டனர். மாதவன் பெண்கள் விடுதிக்கு வருவது முதல் முறை என்பதாலும் அவரது சமாதான பேச்சு திறன் !! பற்றி அனைவரும் அறிந்திருந்ததாலும் ஆர்வம் மேலிட்டால் அனைவரும் வந்திருக்க வேண்டும்
நூலக வாசலில் அனைவரும் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்
மாதவன் : அவன் பாவம். தெரியாமல் பண்ணி விட்டான். கம்ப்ளெயிண்டை வித்ரா பண்ணிடுங்க
(வழக்கம் போல் நேரடியாக விஷயத்திற்கு வந்து விட்டார்)
செந்தாமரை வேகமாக தலையை ஆட்டியபடி : இவனுக்கு இதே வேலைதான். ஒரு தடவை பட்டால் தான் புத்தி வரும்
(கலைவாணி ஒன்றும் சொல்லவில்லை)
மாதவன் : இவ்வளவு பட்டதே போதும். இனி செய்ய மாட்டான்னு நினைக்கிறேன். ப்ளீஸ். எனக்காக வாபஸ் வாங்கிடுங்க
செந்தாமரை கையை நீட்டிக்கொண்டே : சரி. வித்ரா பண்ணிட்ட பிறகு அவன் மறுபடி இப்படி கிரீட்டீங் கார்டு அனுப்பினா என்ன செய்ய. அவன் அனுப்ப மாட்டானு நீ கேரண்டி தர்ரீயா (என்னைப்பார்த்து) இல்ல நீ தர்றீயா
மாதவன் : ம்ஹூம். தர முடியாது. ஆனா
செந்தாமரை : ஆனா நோனா. பிறகு ஏன் நீ பேசுற . நேரத்தை வீணாக்கிட்டு. ஆளாளுக்கு வந்து பேசுறீங்க. ஆனா யாருக்குமே கேரண்டி தர தைரியம் இல்லை
மாதவன் : அடுத்த முறை அவன் கிரீடிங் கார்ட் அனுப்பினா நீங்க தாராளமா கம்ப்ளெயிண்ட் பண்ணுங்க. நான் உங்களிடம் வந்து இப்படி கேட்க மாட்டேன் அப்படிங்கிற கேரண்டியை நான் தர்ரேன். என்னால் அவ்வளவு தான் தர முடியும்.
என்ன கூறுகிறார் என்பது எனக்கு புரிவதற்கு சில வினாடிகள் ஆனது
கலைவாணி மற்றும் பலரும் மாதவனை நோக்கி புரியாமல் பார்க்கிறார்கள் : என்னது
மாதவன் : இந்த பாருங்க. இப்ப கார்டு அனுப்பினான்னு அவன் மேல நீங்க கம்ப்ளெயிண்ட் பண்ணியிருக்கிறீர்கள். இந்த கம்ப்ளெயிண்ட் வித்ரா பண்ணிக்கிட்டா திரும்ப கம்ப்ளெயிண்ட் பண்ண முடியாதுன்னு அப்படி எதுவும் கிடையாது. அவன் திரும்ப ஏதாவது செய்தா நீங்க திரும்ப கம்ப்ளெயிண்ட் பண்ணுங்க. நான் கண்டிப்பா வரமாட்டேன். அது மாதிரி வேற யாரும் திரும்ப கெஞ்ச மாட்டாங்கன்னு நினைக்கிறேன். சரிதானே.
(இந்த வித்தியாசமான அணுகுமுறை இப்பொழுது எனக்கு நன்றாக புரிகிறது)
நான் : இது சரிதானே. உங்கள இந்த கம்ப்ளெயிண்டைத்தானே வாபஸ் வாங்க சொல்றோம். இனி கம்ப்ளெயிண்ட் பண்ண மாட்டேன்னு எழுதி தர சொல்லலேயே. இப்ப வித்ரா பண்ணிடுங்க. எதாவது பிரச்சனை என்றால் திரும்ப கம்ப்ளெயிண்ட் பண்ணிக்கலாம்
தோழிகள் சிலர் (முகம் தெளிவடைகிறது): இது கூட சரியாத்தான் இருக்கு.
மாதவன் : சரிதானே
கலைவாணி (சிறிது குழப்பம் மற்றும் சிறிது தெளிவுடன்): இப்ப நான் என்ன செய்ய வேண்டும்
மாதவன் : வி.பி.கிட்ட போய். “அஸ் த கன்சர்ண்டு பெர்சன் ஹஸ் அபாலஜைஸ்ட், ஐ வுட் லைக் டு வித்ரா தி கம்ப்ளெயிண்ட்” (சம்மந்தப்பட்டவர் மன்னிக்க வேண்டியதால் புகாரை திரும்ப பெறுகிறேன்) அப்படின்னு எழுதி குடு
செந்தாமரை (குழப்பத்துடன்): இவ கிட்ட பிரச்சனை பண்ண மாட்டான். வேற யாருகிட்டயாவது பிரச்சனை பண்ணினா
நான் : அவங்களை கம்ப்ளெயிண்டு கொடுக்க சொல்லு (நான் மனதிற்குள் என்ன நினைத்திருப்பேன் என்று நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள் :) )
செந்தாமரை : ??
மாதவன் : சரிதானே
கலைவாணி : நீ சொல்றேனு வித்ரா பண்ணுறேன். அடுத்து என்ன பிரச்சனைனாலும் உன்னைத்தான் புடிப்போம்
மாதவன் : சரி
நாங்கள் இருவரும் சிரித்துக்கொண்டே திரும்பி வரவும் அனைவரும் ஆச்சரியத்துடன் வந்து என்ன நடந்தது என்று கேட்கவும் “வித்ரா பண்ண அக்ரி பண்ணிட்டாங்க” (திரும்ப பெற சம்மதித்து விட்டார்கள்) என்று கூறவும் அனைவருக்கும் அதிர்ச்சி + மகிழ்ச்சி.
மாதவன் சமாதானம் பேசுகிறான் என்ற செய்தி பரவ அங்கு கண்ணன் அலறி அடித்துக்கொண்டு (மாதவன் பேசினால் உள்ளதும் போய்விடும் என்ற பயத்தில்) ஓடி வந்தது, பெண்கள் விடுதியிலிருந்து ஒரு குழு துனை முதல்வர் அலுவலகத்திற்கு சென்றது, செல்லும் சமயம் கண்ணனை முறைத்துக்கொண்டே சென்றது எல்லாம் சுமார் பத்து நிமிடம் கழித்து சமநேரத்தில் நடந்தது.
அடுத்த அரை மணி நேரத்தில் புகார் திரும்பப்பெறப்பட்ட செய்தி கல்லூரி முழுவதும் பரவியது. அத்துடன் மாதவன் உறுதி அளித்ததால் புகார் திரும்பப்பெறப்பட்டது என்ற செய்தியும் சேர்ந்தே பரவியது. கண்ணனை பற்றி அரைகுறையாக தெரிந்தவர்களே உறுதி அளிக்க தயங்கிய நேரத்தில், கண்ணனை பற்றி முழுவதும் தெரிந்த மாதவன் எப்படி அவன் சார்பாக “இனி அவன் இப்படி செய்ய மாட்டான்” என்று உறுதி அளித்தான் என்ற வியப்பும் மாதவன் மேல் சிறிது பரிதாபமும் அங்கு அனைவருக்கும் தோன்றியிருக்க வேண்டும். மாதவன் என்ன உறுதி அளித்தார் என்பது எங்களை தவிர பிறருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லையே
அதன் பிறகு கண்ணன் அமைதியாகி விட்டார். கல்லூரி படிப்பு முடிக்கும் வரை வேறு எந்த பிரச்சனையும் இல்லை. ராக்கிகள் குறைவாக விற்றதாக கேள்வி. அதே போல் தேர்வு நேரங்களில் கண்ணன் அறையிலிருந்து “வெற்றி நிச்சயம்” “சிங்கம் ஒன்று புறப்பட்டதே ஆகிய பாடல்கள்” கேட்டன. மாதவன் அறை சுவற்றில் இருந்து ஐஸ்வர்யா ராயும், சிம்ரனும் மறந்து மறைந்து ஜோதிகாவும், விந்தியாவும் தோன்றினார்கள்.
சமீபத்தில் அந்த நூலகரை ஒரு தொடர்வண்டி பயணத்தில் சந்திக்க நேர்ந்தது. எங்கள் வகுப்பு மாணவர்களை பற்றி அவர் விசாரிக்கும் போது ஒவ்வொருவரையும் பற்றி கூறிக்கொண்டு வந்தேன். கண்ணன், மாதவன் ஆகியோர் எங்கிருக்கிறார் என்று கூறவும், அவருக்கு புகார் ஞாபகம் வந்திருக்க வேண்டும். புகார் தொடர்பாக நடந்த கூத்துக்களை நினைவு கூர்ந்து சிரித்துக்கொண்டிருந்தோம்
“எந்த தைரியத்தின் மாதவன் உத்திரவாதம் அளித்தான்” என்ற கேள்வி அவரை குடைந்து கொண்டிருந்திருக்க வேண்டும். அடக்க முடியாமல் கேட்டே விட்டார் “அந்த கம்ப்ளெயிண்டை வித்ரா பண்ண எப்படி தைரியமா கேரண்டி தந்தான் ?”
நான் நடந்தது என்னவென்று விளக்கவும் அவர் ஒரே வரியில் கூறினார் “சரியான லேட்டரல் திங்கிங் அப்ரோச்”. இன்று சிந்தித்து பார்க்கும் போது தெளிவாக புரிவது. பலராலும் தீர்க்க முடியாத அந்த பிரச்சனையை மாதவன் அணுகி வெற்றி பெற்றதற்கு காரணம் என்னவென்றால் அவரது அணுகுமுறை (இந்த பிரச்சனையை தீர்த்த உரையாடல்) கூட பக்கவாட்டு சிந்தனையின் அடிப்படையில் அமைந்ததுதான். பக்கவாட்டு சிந்தனை குறித்த எனது முந்தைய பதிவுகள்
- சரியான கேள்வி கேட்பது எப்படி
- பொன்னியின் செல்வனில் நந்தினி-வீரபாண்டியன் உறவும் பக்கவாட்டு சிந்தனையும்
- உத்திரவாதம் - புகார் திரும்பப்பெறலாம்
- உத்திரவாதம் இல்லை - புகார் திரும்ப்பெறமுடியாது
- மறுபடி தொந்திரவு இல்லை - புகார் திரும்பப்பெறப்படும்
- மறுபடி தொந்திரவு - புகார் திரும்ப்பெறப்படாது
இரு கோடி நிலைகளுக்கு (extreme situations) இடையில் ஒரு நிலையை அந்த குழப்ப காரணியை அகற்றி விட்டு சிந்தித்ததாலேயே இந்த பிரச்சனை தீர்ந்தது என்று கூறலாம்.
இந்த பிரச்சனையில் உத்திரவாதம் (என்ற குழப்ப காரணியை) என்பதை பின் தள்ளி
- உத்திரவாதம் இல்லை என்றாலும் கூட(மீண்டும் புகார் அளிக்க வாய்ப்பு இருப்பதால்) மறுபடி தொந்திரவு இல்லை - புகாரை திரும்ப பெறலாம்
உங்கள் கருத்து என்ன ??
9 மறுமொழிகள்:
//சரியான லேட்டரல் திங்கிங் அப்ரோஸ்//
நல்ல தீம் சார்...
This would've been a very good motivational piece or a lateral thinking piece, if not for your disclaimer at the beginning -- it's not a real story -- like with all stories, the ending is decided by the writer (you), and whatever method our hero had taken, it would've ended the same way -- I would have loved to see this happen in real life.
This is the reason why stories and real life intersect rarely ;-)
On the whole, this is a nice story and I enjoy reading your real-life stories and experiences about a field that I could've chosen after college :-)
பீர் சார், வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
Lumbergh-in-training சார்
disclaimer போடாவிட்டால் டின் கட்டிவிடுவார்கள் :) :)
Yes Sir
Its think "out of box"
Thanks
V.Ramachandran
சரி தல....
கதை கற்பனையாகவே இருக்கட்டும்...
கிரீட்டிங் கார்டு ஃபோன் ஆக மாறியதா இல்லையா சொல்லுங்க தல...
//செந்தாமரை : ஆனா நோனா. பிறகு ஏன் நீ பேசுற . நேரத்தை வீணாக்கிட்டு. ஆளாளுக்கு வந்து பேசுறீங்க. ஆனா யாருக்குமே கேரண்டி தர தைரியம் இல்லை//
இது எங்க ஏரியா பாஷையாத் தெரியுதே,,,,,,,
//Yes Sir
Its think "out of box"
Thanks
V.Ramachandran//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சார்
//கதை கற்பனையாகவே இருக்கட்டும்...//
ஹி ஹி ஹி
//கிரீட்டிங் கார்டு ஃபோன் ஆக மாறியதா இல்லையா சொல்லுங்க தல...//
இல்ல தல. அதன் பிறகு கண்ணன் அமைதியாகி விட்டார். கல்லூரி படிப்பு முடிக்கும் வரை வேறு எந்த பிரச்சனையும் இல்லை. ராக்கிகள் குறைவாக விற்றதாக கேள்வி. அதே போல் தேர்வு நேரங்களில் கண்ணன் அறையிலிருந்து “வெற்றி நிச்சயம்” “சிங்கம் ஒன்று புறப்பட்டதே ஆகிய பாடல்கள்” கேட்டன. மாதவன் அறை சுவற்றில் இருந்து ஐஸ்வர்யா ராயும், சிம்ரனும் மறந்து மறைந்து ஜோதிகாவும், விந்தியாவும் தோன்றினார்கள்.
Post a Comment