இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Sunday, April 05, 2009

கல்லூரி (கற்பனை) கதைகள் : 1. அவள் வருவாளா

என் பதிவிலிருக்கும் பிற கல்லூரிகதைகள் போலல்லாமல் இந்த கதையும் இதில் வரும் பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனை. யாரையும் குறிப்பிடுவது அல்ல

மருத்துவக்கல்லூரி முதலாண்டில் கண்ணனும் மாதவனும் அறைத்தோழர்கள். இருவருக்கும் இடையில் பல விஷயங்களில் ஒற்றுமை இருந்தாலும் ஒரே விஷயத்தில் மட்டும் வித்தியாசம் உண்டு !!

முதலாண்டில் காலையில் 8:30 மணிக்கு உடற்கூறியல் கூடத்திற்கு செல்ல வேண்டும். தலை வரை படுக்கை விரிப்பை போத்திக்கொண்டு படுத்திருக்கும் இருவரும் எழும்புவதே 8 மணிக்கு தான். இவர்கள் எழும்வதற்குள் இவர்களின் அறைத்தோழர் டேனியல் எழுந்து குளித்து சாப்பிட்டு அன்று நடத்தக்கூடிய பாடங்களை மேய்ந்து கொண்டிருப்பார்

நம் கதாநாயகர்களோ வேகவேகமாக பல்தேய்த்து காலைக்கடனை முடித்து குளிக்காமல் குளியலறைக்கு அருகில் தொங்கும் உடைகளை போட்டு, இட்லியையோ பொங்கலையோ அவசர அவசரமாக விழுங்கி ஒரு 8:20 க்கு கிளம்பி ஓட்டமும் நடையுமாக ஓடி 8:30க்கு வருகைப்பதிவேட்டில் Aல் ஆரம்பிக்கும் பெயரை வாசிக்க துவங்கும் போதகர் 8:32க்கு கண்ணன் என்று வாசிக்கும் முன்னர் உள்ளே சென்று விடுவதில் கெட்டிக்காரர்கள்.

வகுப்பு முடிந்து உடற்கூறியல் செய்முறை வகுப்பில் இருக்கும் பார்மலின் மற்றும் பிற வாசத்துடன் மாலை 3 அல்லது நான்கு மணிக்கு அறைக்கு திரும்பி உடன் குளித்து புத்துணர்ச்சியுடன் நூலகம் செல்வது அன்றைய தினத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை.

நூலகம் சென்று உடற்கூறியலோ (அனாடமி), உடலியக்கவியலோ (பிசியாலஜி) அல்லது உயிர்வேதியலோ (பயோகெமிஸ்டிரி) (இவை மூன்றும் தான் முதல் வருட பாடங்கள்) படிப்பார்கள் என்று நீங்கள் நினைத்தால் தவறு. கண்ணன் சட்டம் சார் மருத்துவ புத்தகத்தையும் மாதவன் மாஸ்டர்ஸ் மற்றும் ஜான்சன் எழுதிய பெரிய புத்தகங்களையும் படிப்பார்கள்.

அதன் பிறகு நூலகம் மூடிய பின்னர் இரவு உணவருந்தி விட்டு, அந்தவாரம் / அடுத்தவாரம் இருக்கும் தேர்விற்கு படிக்க ஆரம்பிப்பார்கள். 9 முதல் 10 வரை ஒரு மணி நேரம் படித்து விட்டு, மெதுவாக கிளம்பி சென்று தேநீர் அருந்தி விட்டு (10 முதல் 11 வரை) அப்படியே பொது தொலைபேசியில் வீட்டிற்கு தொலைபேசிவிட்டு (அந்த காலத்தில் செல்லிடப்பேசி எல்லாம் கிடையாதே) மீண்டும் ஒரு மணி நேரம் படித்து விட்டு (11 முதல் 12 வரை) மீண்டும் ஒரு மணி நேரம் தேநீர் குடித்து விட்டு (தேநீர்க்கடை செல்ல 20 நிமிடம், தேநீர் குடிக்க 20 நிமிடம், திரும்பி வர 20 நிமிடம்) அதன் பிறகு தூக்க கலக்கத்தில் படம் வரைவது, “ரிகார்ட்” எழுதுவது போன்ற வேலைகளை பார்த்து விட்டு இரண்டு அல்லது மூன்று மணிக்கு தூங்கினால் அடுத்து காலை 8 மணிக்கு எழும்ப வேண்டியது தான்

அந்த வாரம் எதுவும் தேர்வு இல்லை என்றாலோ அல்லது இருக்கும் தேர்விற்கான பாடங்கள் குறைவு என்றாலோ இரவு படிப்பது / தேநீர்க்கடை செலவதற்கு பதிலாக ஏதாவது திரையரங்கு செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.

இது போல் பல விஷயங்களிலும் இருவருக்கும் ஒற்றுமை தான். சரத்குமார், பிரபுதேவா படங்களை கூட இருமுறை பார்த்திருக்கிறார்கள். இப்படி பல விஷயங்களில் ஒற்றுமை இருந்தாலும் ஒரு விஷயத்தில் மட்டும் இருவரும் இரு துருவங்கள்

அந்த விஷயம் : பெண்களிடம் பழகுவது

பெண்களிடம் பேசும் போது மென்மையாக, நளினமாக பேசுவது கண்ணன் வழக்கம். மாதவனோ வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசுபவன். இதனால் மாதவனிடம் பேசும் பெண்களின் எண்ணிக்கை பம்பரக்காரர்கள் போட்டியிடப்போகும் மக்களவை இடங்களை போலவும், கண்ணனிடம் நன்றாக பேசும் பெண்களின் எண்ணிக்கை கைகாரர்களில் உள்ள கோஷ்டிகளின் எண்ணிக்கை போலவும் இருப்பது இயல்பு தான்.

கண்ணனோ யாரையாவது ஒரு பெண்ணை நினைத்து “அவள் வருவாளா, அவள் வருவாளா” பாடலை ஓலிநாடா தேயும் வரை திரும்ப திரும்ப ஓட விட்டு கடைசியில் அந்த பெண்ணிடம் எப்படி கூறலாம் என்று நினைக்கும் நேரம் பாழாய்ப்போன ரக்‌ஷா பந்தன் வந்து விட இது தான் சமயம் என்று அந்த பெண் ராக்கி கட்டி விடுவார்

கண்ணன் தாடி வளர்த்து அறைக்குள் அடைந்து கிடப்பது எல்லாம் கிடையாது. தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தனை போல் அடுத்த பெண்ணிடம் மனதை பறி கொடுத்து விடுவார். இந்த முறை “என்ன அழகு எத்தனை அழகு” பாடல் ஓலிநாடா தேயும்வரை ஓடும். (வாயிருந்தால் அந்த ஒலிப்பேழை அழும் என்று நாங்கள் எங்களுக்குள் நக்கலடிப்போம்)

ராக்கி கட்டியவிவளிடமே அடுத்த பெண்ணின் பிறந்த நாள் போன்ற விஷயங்களை விசாரிப்பதால் உஷாராகும் அடுத்த பெண்ணும், அடுத்து தீபாவளியோ, பொங்கலோ, மருத்துவர் தினமோ வரும் சமயத்தில் கண்ணன் இல்லாமல் நிறைய வகுப்பு மாணவர்கள் கூட்டமாக இருக்கும் நேரத்தில் ஒட்டப்படாத ஒரு உறையை “இதை கண்ணனிடம் கொடுத்து விடுங்கள்” என்று கூறி தந்துவிடுவார்.

உறை ஓட்டப்படாமல் இருப்பதாலும், கூட்டத்தில் யாராவது ஒருவர் சட்டென்று உள்ளே என்ன உள்ளது என்ற ஆர்வத்தில் திறந்து விடுவார். திறந்து பார்த்தால் “பார் மை லவ்விங் பிரதர்” (அன்பு சகோதரனுக்காக) என்று ஒரு வாழ்த்து அட்டை இருக்கும். அனைவரும் முன்னால் அளிக்கப்படும் வாழ்த்து அட்டை என்பதால் ஒரே நாளில் விஷயம் வகுப்பு முழுவதும் பரவி விடும். அப்படி பரவ வேண்டும் என்பதற்காகத்தானே அது அனைவர் முன்னாலும் அளிக்கப்படுகிறது !!

கண்ணன் அதன் பிறகு வேறு காதலி தேடுவார். கண்ணன் தற்பொழுது எந்த பெண்ணை சுற்றி வருகிறார் என்பது வகுப்பில் அனைவருக்கும் தெரிந்த ரகசியமாயிற்று. இந்த விஷயங்கள் பரவலாக அனைவருக்கும் தெரிய வந்ததால், கண்ணனின் நட்பு வட்டாரம் பெரிதாகியது. முக்கியமாக ராக்கி கட்டியவர்கள் மற்றும் “சகோதரிகளின்” எண்ணிக்கை பெருக அவர்களின் தோழிகளும் கண்ணனிடம் நட்பானார்கள்.

மாதவனோ இவ்வளவு கஷ்டப்பட்ட இல்லை. அறையில் ஸ்டெபி கிராப், மணிஷா கொய்ராலா படங்களை ஒட்டி வைத்திருப்பார்.(அது பம்பாய் படம் வந்த சமயம்) அவர்களை போல் பெண்ணை தேடிக்கொண்டிருந்ததால் (அது போல் யாரும் அந்த கல்லூரியில் படிக்காததால்) மேட்டுத்திடல் (ஹைகிரவுண்ட்) கடையில் ஒரு ராக்கி குறைவாக விற்றதை தவிர வேறு ஒன்றும் நடக்கவில்லை.

மூன்றாம் ஆண்டு கண்ணனும் மாதவனும் வேறு அறைகளுக்கு சென்று விட்டதால் அதன் பிறகு இருவருக்கும் இடையில் பழக்கம் குறைந்தது. அதேப்போல் காலையில் வெவ்வேறு பிரிவுகள் என்பதாலும் சந்திக்கும் வாய்ப்பு குறைவு. அவ்வப்போது விடுதியிலோ உணவகத்திலோ, தேநீர்கடையிலோ சந்திக்கும் போது நலம் விசாரிப்பது மட்டும் தொடர்ந்தது.

வாழ்க்கை வழக்கம் போல் சென்று கொண்டிருந்தது. கண்ணின் அறையிலிருந்து “உனை பார்த்த பின் நான்” பாடல் ஒலிக்கத்தொடங்கியது (அடுத்த ராக்கியோ வாழ்த்து அட்டையோ வந்திருக்க வேண்டும்). மாதவனின் அறை சுவற்றில் ஸ்டெப்பி கிராப்பும், மணிஷா கொய்ராலாவும் மறைந்து ஐஸ்வர்யா ராயும், சிம்ரனும், ஷாலினியும் தோன்றினார்கள்.

கண்ணனின் திறமை பெண்மையாக் பேசுவது என்றால் மாதவனின் தனித்திறன் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசுவது. கல்வி உதவி தொகை வாங்குவது, பயணச்சீட்டு முன்பதிவு செய்வது, மண்டல போக்குவரத்து அலுவலகத்தில் ஏதாவது பிரச்சனை என்றால் (ஓட்டுனர் உரிமம் வாங்குவது, வாகனத்தின் உரிமையாளர் பெயர் மாற்றம்) உதவுவது என்று மாதவனின் நேரம் செலவழிந்து கொண்டிருந்ததால் மாதவனின் நட்பு வட்டமும் விரியத்தொடங்கியது. முக்கியமாக விடுதியிலிருப்பவர்களுக்கு ஏதாவது தேவையென்றால் மாதவனை உதவிக்கு அழைக்கத்துவங்கினார்கள்.

அழைத்தவர்கள் யாருமே ஐஸ்வர்யா ராய் போலவோ அல்லது ஜோதிகா போலவோ இல்லை என்ற வருத்தம் மாதவனுக்கு இருந்ததென்னவோ உண்மைதான்.

சில நாட்களாக கண்ணன் முகத்தில் பதற்றம் தெரிவதையும் கண்ணின் தோழர்கள் அடிக்கடி பெண்கள் விடுதி முன்னர் நிற்பதையும் பார்த்தவர்கள் எதுவும் வித்தியாசமாக (கண்ணனை தொடர்புபடுத்தி) நினைக்கவில்லை. மாணவர் பேரவை / விழா நடத்துவது தொடர்பாக ஏதோ ஒரு பிரச்சனை இருக்கலாம் என்றும் அதற்காக மாணவிகளிடம் அனுமதி / ஆதரவு கேட்கிறார்கள் என்றே நினைத்தார்கள்

அந்த நேரத்தில் மாணவியர் விடுதிக்கு முன்னால் இருக்கும் கல்லூரி நூலகத்தில் நூலகர் “இருந்தாலும் இவளுக்கு இவ்வளவு கொழுப்பு ஆகாது, அவளே சும்மா இருக்கா, இவத்தான் அவளை ஏற்றி விடுகிறாள். விட்டு தொலைய வேண்டியது தானே” என்று ஒரு பெண்ணை யாரிடமோ திட்டிக்கொண்டிருந்தார். ஆர்வம் மேலிடவே பலரும் எட்டிப்பார்த்தார்கள். எட்டிப்பார்த்தவர்களின் கும்பலில் மாதவனும் இருந்தார் நானும் இருந்தேன்

தொடர்ந்து வாசிக்க : 

19 மறுமொழிகள்:

அத்திரி said...

போலாம் ரைட்...................

SUREஷ் said...

//கண்ணன் சட்டம் சார் மருத்துவ புத்தகத்தையும் மாதவன் மாஸ்டர்ஸ் மற்றும் ஜான்சன் எழுதிய பெரிய புத்தகங்களையும் படிப்பார்கள்.
//


ம்ம்ம்ம்... விக்கிபீடியா தொடுப்போட..

ஒரே ஜாலிதான் தல

SUREஷ் said...

//அழைத்தவர்கள் யாருமே ஐஸ்வர்யா ராய் போலவோ அல்லது ஜோதிகா போலவோ இல்லை என்ற வருத்தம் மாதவனுக்கு இருந்ததென்னவோ உண்மைதான்//


முரளிக்கண்ணன் சார் ஒருகதையில் ஒரு பதத்தினை உபயோகப் படுத்தி இருப்பார்..


ரிஜக்ட்ட பீஸ்..(நல்லா அழகா இருக்கும் பெண்கள் கரெக்ட் பண்ணி குடும்ப வாழ்க்கை இழுத்துவிடுவார்களாம். அதில் ரிஜக்ட் ஆன ஆட்கள் படித்து பெரிய வேலைக்கெல்லாம் போவார்களாம்)

SUREஷ் said...

//9 முதல் 10 வரை ஒரு மணி நேரம் படித்து விட்டு, மெதுவாக கிளம்பி சென்று தேநீர் அருந்தி விட்டு (10 முதல் 11 வரை) அப்படியே பொது தொலைபேசியில் வீட்டிற்கு தொலைபேசிவிட்டு (அந்த காலத்தில் செல்லிடப்பேசி எல்லாம் கிடையாதே) மீண்டும் ஒரு மணி நேரம் படித்து விட்டு (11 முதல் 12 வரை) மீண்டும் ஒரு மணி நேரம் தேநீர் குடித்து விட்டு (தேநீர்க்கடை செல்ல 20 நிமிடம், தேநீர் குடிக்க 20 நிமிடம், திரும்பி வர 20 நிமிடம்) அதன் பிறகு தூக்க கலக்கத்தில் படம் வரைவது, “ரிகார்ட்” எழுதுவது போன்ற வேலைகளை பார்த்து விட்டு 2 அல்லது மூன்று மணிக்கு தூங்கினால் அடுத்து காலை 8 மணிக்கு எழும்ப வேண்டியது தான்//





புதிதாக வாங்கிய டிஷ் உபயோகப் படுத்தி ஜெமினி பார்த்திருப்பாங்களே....

புருனோ Bruno said...

அத்திரி சார்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

புருனோ Bruno said...

//புதிதாக வாங்கிய டிஷ் உபயோகப் படுத்தி ஜெமினி பார்த்திருப்பாங்களே....//

தல

அந்த காலத்தில் டிவி எல்லாம் கிடையாது

99 உலகக்கோப்பை வந்த போது பல இடங்களில் டிவியின் விலை குறைந்தது. அப்பொழுது மாணவர்கள் தான் பலரும் டிவி வாங்கினார்கள்

குடந்தைஅன்புமணி said...

//(தேநீர்க்கடை செல்ல 20 நிமிடம், தேநீர் குடிக்க 20 நிமிடம், திரும்பி வர 20 நிமிடம்) //

தேநீர் குடிக்க 20 நிமிடமா? அவ்வளவு பெரிய கோப்பை தேநீரோ? (சும்மா லுலாய்க்கு)
அப்புறம் என்னாச்சு?

புருனோ Bruno said...

//தேநீர் குடிக்க 20 நிமிடமா? அவ்வளவு பெரிய கோப்பை தேநீரோ? //

தேநீர் கடையில் தேநீர் வேண்டும் என்று கூறுவது

தேநீர் வரும் வரை காத்திருப்பது

தேநீர் குடிப்பது

அந்த நேரத்தில் அங்கு ஒலிக்கும் லியோனி பட்டிமன்றங்களை கேட்பது (அந்த காலத்தில் லியோனி பயங்கர பிரபலம்)

என்று அனைத்துயும் சேர்த்தால் 20 நிமிடம் வந்து விடும்

புருனோ Bruno said...

இந்த படிப்பது - தேநீர் குடிப்பது - படிப்பது - தேநீர் குடிப்பது என்பது பெரும்பாலாணவர்களின் பழக்கம் தான்

narsim said...

//மாதவனோ வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசுபவன். இதனால் மாதவனிடம் பேசும் பெண்களின் எண்ணிக்கை பம்பரக்காரர்கள் போட்டியிடப்போகும் மக்களவை இடங்களை போலவும், கண்ணனிடம் நன்றாக பேசும் பெண்களின் எண்ணிக்கை கைகாரர்களில் உள்ள கோஷ்டிகளின் எண்ணிக்கை போலவும் இருப்பது இயல்பு தான்.
//

டாப் கியரில் எகிறுகிறது தலைவரே

புருனோ Bruno said...

நர்சிம் தல

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

தேவகோட்டை ஹக்கீம் said...

\\இதனால் மாதவனிடம் பேசும் பெண்களின் எண்ணிக்கை பம்பரக்காரர்கள் போட்டியிடப்போகும் மக்களவை இடங்களை போலவும், கண்ணனிடம் நன்றாக பேசும் பெண்களின் எண்ணிக்கை கைகாரர்களில் உள்ள கோஷ்டிகளின் எண்ணிக்கை போலவும் இருப்பது இயல்பு தான்//
செம கலக்கல் சாரே!
\\செல்லிடப்பேசி \\
கைப்பேசி என்று சொல்லலாமே...

புருனோ Bruno said...

//\\செல்லிடப்பேசி \\
கைப்பேசி என்று சொல்லலாமே...//

கைபேசி என்பது கையடக்க தொலைபேசி என்ற பொருள் தருகிறது

செல்லிடப்பேசி என்பது செல்லும் இடங்களில் எல்லாம் பேசக்கூடிய தொலைபேசி என்ற பொருள் தருகிறது

அதனால் தான் அந்த சொல்லை பயன்படுத்தினேன்

புருனோ Bruno said...

//செம கலக்கல் சாரே!//

நன்றி சார்

V.RAMACHANDRAN said...

Dear Bruno sir,
interesting and very good
(he he i talk about ur VB link)
Thanks,
V.Ramachandran
Singapore

புருனோ Bruno said...

//(he he i talk about ur VB link)//

அதுக்குத்தானே சார் அந்த சுட்டியை தந்தேன் :) :)

எம்.எம்.அப்துல்லா said...

டாக்டர் அண்ணே,

மருத்துவக் கல்லூரி என்பதை _____ கல்லூரி என்றும், உங்கள் நண்பர்கள் பெயரையும் மாற்றிவிட்டால் அப்படியே எங்கள் கல்லூரியில் நாந்த கதைபோல் உள்ளது

:)

எம்.எம்.அப்துல்லா said...

//செல்லிடப்பேசி என்பது //

செல்லிடப்பேசி என்பது மெத்தச் சரி

புருனோ Bruno said...

அப்துல்லா அண்ணாச்சி,

இதெல்லாம் அனைத்து கல்லூரிகளிலும் நடப்பது தானே

இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...