21ஆம் நூற்றாண்டில் துவக்கத்தில் கோலிவுட் பல பிரச்சனைகளால் சிறிது தடுமாற்றத்துடன் தான் சென்று கொண்டிருந்தது. முக்கியமாக திருட்டு விசிடி மற்றும் கேபிள் தொலைக்காட்சிகளினால் திரையரங்குகள் மூடப்படுவது தினசரி நிகழ்வாக இருந்தது. பல துறைகளிலும் ஒரு தேக்க நிலை இருந்தது.
சென்ற தலைமுறையின் நடிகர்கள், நடிகைகள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள் அனைவரும் தங்களின் பழைய கலைப்படைப்புகளை முந்த முடியாத நிலையில் அவர்களது பணித்தடத்தின் இறங்குமுகத்தில் இருந்தனர்.
இசையமைப்பாளர்கள்
கிட்ட தட்ட 10 வருடங்களாக இந்தியாவையே கட்டி போட்டிருந்த ரஹ்மான் பாம்பே ட்ரீம்ஸ் நாடகத்திற்கு இசையமைக்க இங்கிலாந்து சென்றதும். அங்கிருந்தே பாபா இசையமைத்ததும் பாபா பாடலை கேட்ட பலரும் இளையராஜாவிற்கு பின்னர் ரஹ்மான். அதற்கு பின்னர் யார் என்று பார்த்துக்கொண்டிருக்கையில் “எனக்கும் ராஜா / ரஹ்மான் அளவு பாடல்கள் மற்றும் பிண்ணனி இசையில்” கலக்கத்தெரியும் என்று நான்கு இசையமைப்பாளர்கள் தங்களின் திறனை வெளிக்காட்டியது 2003ல் தான். (அந்த நான்கு பேரில் மூவரால் அதன் பின்னர் அந்த படங்களை விட சிறந்த படங்கள் அளிக்க முடியவில்லை என்பது வேறு விஷயம்). அதில் ஒருவர் மற்ற மூவரையும் ஒரே பாடலில் மிரட்டி விட்டார். மீதி மூவர் இசையமைத்த அனைத்து பாடல்களும் ஒலிபரப்பானது / ஒளிப்பரப்பானதை விட நான்காவது இசையமைப்பாளரின் ஒரே ஒரு பாடல் பண்பலை வானொலியிலும், தொலைகாட்சிகளிலும் அதிகம் முறை வந்தது.
இந்த வருடம் தான் சன் குழுமம் தனது பண்பலை ஒலிபரப்பை ஆரம்பித்தது. எனவே பாடல்கள் பிரபலம் அடைய மற்றொரு வழி திறந்தது. அதுவும் கூட இசையமைப்பாளர்களுக்கு உதவியாக இருந்திருக்கலாம்
வித்யாசாகர்
கானடா ராகத்தில் மட்டும் தான் மெலடி பாடல்களை தருவார் என்று கூறப்பட்ட வித்யாசாகர் தன்னால் திரையிசையின் அனைத்து பரிமாணங்களையும் ஆள முடியும் என்று காட்டிய படம் அன்பே சிவம். இந்த படத்தில் இவரின் பாடல்களும் பிண்ணனி இசையும் அனைவரையும் நிமிர்ந்து பார்க்க வைத்தது.
இளையராஜாவோ ரஹ்மானோ செய்திருந்தால் கூட இவ்வளவு தான் செய்திருக்க முடியும் என்ற வகையில் காட்சியமைப்புகளுக்கு ஏற்ற பிண்ணனி இசையும், அனைத்து வகையான பாடல்களும் என்று ராஜாவும் ரஹ்மானும் தங்களின் படைப்புத்திறனின் உச்சத்தில் இருந்த போது தந்த படங்களுடன் போட்டி போடக்கூடிய வகையில் அன்பே சிவம் படத்தின் இசை இருந்தது.
தான் ஒரு “ஒரு திரைப்பட மாயை” அல்ல என்பதை இயற்கை மூலம் மறுபடியும் அதே வருடம் நிருபித்தார். அதன் பின்னர் இந்த அளவு முழுமையான இசையை அவர் வேறு எந்த ப்டத்திலும் அளித்ததாக தெரியவில்லை (ரா ரா ஒரே பாடல் மட்டும் விதிவிலக்கு). தமிழ் சினிமாவில் சிறந்த படங்களின் வரிசையில் அன்பே சிவம் மற்றும் இயற்கை இரு படங்களுக்கும் இடம் உண்டு என்பது என் கருத்து
ஹேரிஸ் ஜெயராஜ் (ஆரிசு செயராசு)
மின்னலே படத்தில் அறிமுகமாகி “வசீகரா” அனைவராலும் முனுமுனுக்கப்பட்ட பாடலானும் “பாடல் மட்டும் பரவாயில்லை, பிண்ணனி இசை சரியில்லை” என்ற விமர்சணம் இவர் மீது இருந்து கொண்டிருந்தது.
லேசா லேசாவில் அனைத்து பாடல்களும் அருமை. பிண்ணனி இசையும் அருமை. அதே போல் பாடல்கள் மற்றும் இசைக்காக காக்க காக்க படமும் பேசப்பட்டது. ஆனால் அதன் பிறகு வந்த படங்களில் கூட இவர் பாடல்களுடன் தனது கவனத்தை நிறுத்துவது போல் தான் உள்ளது. (கஜினியின் பிண்ணனி இசை கேட்டிருக்கிறீர்களா – ஒரு மாலை இளவெயில் நேரம் பாடலையும் அந்த படத்தின் பிண்ணனி இசையையும் அமைத்தது ஒரே கலைஞர் என்றால் நம்புவது சிரமம்).
யுவன் சங்கர் ராஜா
தனது பதினெட்டாவது வயதில் அரவிந்தனில் ஆரம்பித்த இவரின் இசைப்பயணத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் (ஜோதிகா கதாநாயகியாக நடித்த முதல் படம் - கதாநாயகன் - வேறு யார் - சூர்யா தான் !!), ரிஷி, தீனா, நந்தா, மௌனம் பேசியதே, துள்ளுவதோ இளமை போன்ற பல படங்களின் பாடல்கள் பேசப்பட்டாலும், பிண்ணனி இசையிலும் இவர் மிரட்ட ஆரம்பித்தது இந்த வருடம் வெளிவந்த காதல் கொண்டேன் திரைப்படத்திலிருந்து தான்
தீனா
2000 முதல் 2002ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் பெறும்பாலனவர்கள் “ஹம்” செய்த பாடல் “கண்ணின் மணி” தான். கல்லூரிகளுக்கு இடையில் நடக்கும் பல மெல்லிசை போட்டிகளில் / பாட்டு போட்டிகளில் கூட அந்த பாடல் அந்த நேரம் பரவலாக இடம்பெற்றது.
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் ஏற்பட்ட வைரமுத்து ரஹ்மான் ஊடலால் ரஹ்மான் பிற பாடலாசிரியர்களுடன் இணைந்து தெனாலி போன்ற படங்களை அளிக்க ஆரம்பித்த நேரத்தில் மணிரத்னத்தின் கண்ணத்தில் முத்தமிட்டால் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு தீனாவிற்கு வந்ததாக கூறுவார்கள் (திரைகளஞ்சியம் முரளிகண்ணன் இது உண்மையா என்று கூறுவார் என்று எதிர்பார்க்கிறேன்).
ஆனால் மீண்டும் வைரமுத்துவையும் ரஹ்மானையும் சேர்த்து மணிரத்னம் வேலை வாங்கி ”வெள்ளைப்பூக்களையும்”, “விடை கொடு எங்கள் நாடேயையும்”, “ஒரு தெய்வம் தந்த பூவேயையும்” தந்து விட்டார். தீனா காத்திருக்க வேண்டி வந்தது. அதே நேரம் கிடைத்த வாய்ப்பை தவறவிடவில்லை.
மிடில் கிளாஸ் மாதவன், கிங் போன்ற படங்களுக்கு இசையமைத்தார். “மன்மத ராசா” என்ற ஒரே பாடல் மூலம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார். ஆனால் அதற்கு பின்னர் அந்த அளவு அவரால் கவனத்தை தக்க வைக்க முடியவில்லை
நடிகர்கள்
2002 ஆகஸ்டில் வெளிவந்த பாபா படத்தை அடுத்து (இசையமைப்பாளர்களுக்கு இடத்தை அளித்தது போல் :) !!) கதாநாயகர்களுக்கும் ஒரு வெற்றிடம் இருந்தது.
விக்ரம்
எம்.ஜி.ஆர் – சிவாஜிக்கு பின்னர் ரஜினி – கமல். அடுத்த தலைமுறையில் யார் என்ற கேள்வி வந்த நிலையில், நானே வசூல் ராஜா என்று சாமி படத்திலும், நானே நடிப்பிலும் ராஜா என்று பிதாமகன் படத்திலும் விக்ரம் அசத்தினார்.
தில் - தூள் என்ற இருபடங்களின் வெற்றிக்கு அடுத்தாக வந்த சாமியின் இமாலய வெற்றியை பார்த்து (அதற்கு முந்திய வருடம் – 2002ல் பாபா வழங்கிய) ரஜினியே மிரண்டது நிஜம். 2003 மே மாதத்தில் தமிழகத்தில் வாலிபர்கள் அந்த படத்தை குறைந்தது மூன்று முறையாவது பார்த்திருப்பார்கள். தில், தூள், சாமி என்று விக்ரம் காட்டில் பெய்த மழை பிதாமகனிலும் தொடர்ந்தது.
மாதவன்
”நகர மேல் தட்டு இளைஞன்” என்ற பிம்பத்திலிருந்து (city guy image) மாதவன் வெளிவர மற்றும் இவருக்கு நடிக்க தெரியும் என்று அனைவரும் அறிய உதவிய அன்பே சிவம் மற்றும் நளதமயந்தி ஆகிய படங்கள் 2003ல் வெளிவந்தவை தான்.
சூர்யா
மிடுக்கான காவல்துறை அதிகாரியாக (காக்க காக்க) நடிக்கவும் முடியும், லேகியம் விற்பவனாக (பிதாமகன்) நடிக்கவும் முடியும் என்று சூர்யா காண்பித்ததும் இந்த வருடம் தான். காக்க காக்க படத்தின் வெற்றியை தொடர்ந்து காவல் துறை அதிகாரிகளை கதாநாயகனாக சித்திரித்து பல படங்களை வந்தது.
தமிழ் ரசிகர்களின் நல்ல நேரம், பிதாமகனின் வெற்றியை தொடர்ந்து அது போல் படங்கள் வராததால் தப்பித்தார்கள் :)
தனுஷ்
முதல் படம் 2002ல் வந்திருந்தாலும் அவரது இரண்டாவது படமான காதல் கொண்டேனும், மூன்றாவது படமான திருடா திருடியும் வெளிவந்தது 2003ல் தான். தில், தூள், சாமி என்று விக்ரம் கலக்கிய கலக்கலுக்கு தனுஷின் “ஹாட்டிரிக்” சற்றும் குறையவில்லை
2003ல் வெளிவந்த தமிழ் படங்கள் குறித்த பிற விஷயங்களை அடுத்த இடுகையில் பார்ப்போம்
Centre's decision for quota in medical PG not binding on states, says SC
-
http://timesofindia.indiatimes.com/india/Centres-decision-for-quota-in-medical-PG-not-binding-on-states-says-SC/articleshow/5293122.cms
NEW DELHI: In a ru...
2 days ago





29 மறுமொழிகள்:
எதை பதிவாக போட்டால் மக்கள் அதிகம் படிப்பார்கள் என புரிந்துகொண்ட புருனோ அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
:)
//எதை பதிவாக போட்டால் மக்கள் அதிகம் படிப்பார்கள் என புரிந்துகொண்ட புருனோ அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
:)//
ஹி ஹி ஹி :) :)
சாமி. கடந்த சில வாரங்களாக மருத்துவத்துறை பற்றி எத்தனை கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்
இப்படி ஒரு சினிமா கட்டுரை எழுதியதற்கு இப்படி போட்டு தாக்குகிறீர்களே
இது நியாயமா சாமி :)
1990 - 2000 வரையில் தேவாவும் செம பிக்கப் இல்லையா ?
ஓளவை சண்முகி, ஆசை இன்னும் பல படங்களில் கலக்கினார்
//1990 - 2000 வரையில் தேவாவும் செம பிக்கப் இல்லையா ?
ஓளவை சண்முகி, ஆசை இன்னும் பல படங்களில் கலக்கினார்//
அண்ணாமலை, பாட்ஷா ஆகிய முக்கிய படங்களை விட்டு விட்டீர்கள் சார் :)
தமிழ் சினிமாவில் சிறந்த படங்களின் வரிசையில் அன்பே சிவம் மற்றும் இயற்கை இரு படங்களுக்கும் இடம் உண்டு என்பது என் கருத்து//
தலைவரே இதில் மாற்றுக்கருத்தே இல்லை மருந்து மாத்திரையை விட சினிமாவை கரைச்சி கடிச்சிட்டிங்க போல
நல்ல பதிவு
//(ஆரிசு செயராசு)/
பாத்தாருன்னா உடனே சூசைட் தான்!
டாக்டர்,
உங்கள் ஸ்பெஷாலிட்டியே வெரைட்டிதான். எடுக்கும் சப்ஜெக்ட்டை முடிந்தளவுக்கு அக்குவேறு ஆணிவேராக அலசுகிறீர்கள். வாழ்த்துக்கள். தொடருங்கள். தொடர்கிறோம்.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
நான் அப்பவே சொன்னேன்...இந்த முரளிகண்ணன்கூட சேராதீங்க,சேராதீங்கன்னு. கேட்டீங்களா?? :)))
//தலைவரே இதில் மாற்றுக்கருத்தே இல்லை மருந்து மாத்திரையை விட சினிமாவை கரைச்சி கடிச்சிட்டிங்க போல
நல்ல பதிவு//
எப்பவும் மருந்து பற்றி மட்டும் எழுதிக்கொண்டிருந்தால் போர் அடிக்குமே தலைவரே
//பாத்தாருன்னா உடனே சூசைட் தான்!//
சூசைடு !!
( ட் என்று முடியலாமா ??)
//தொடருங்கள். தொடர்கிறோம்.//
நன்றி தலைவரே
//நான் அப்பவே சொன்னேன்...இந்த முரளிகண்ணன்கூட சேராதீங்க,சேராதீங்கன்னு. கேட்டீங்களா?? :)))//
ஹி ஹி ஹி
ஹி ஹி ஹி
In Kaadhal Konden 3 songs were copied from English songs..For details
http://www.itwofs.com/tamil-yuvan.html
பக்கா! பக்கா!!
தொடர்ந்து எழுதுங்கள்..
நிறைய பதிவை எதிர்பார்கின்றேன்!
நம்ம பக்கங்களுக்கும் வாங்க..
ஓட்ட குத்துங்க!!
ஆஹா..நம்ம புருனோ சாரா..கலக்கிட்டீங்க போங்க..
ரா..ரா பாடலுக்கு மட்டும் இசை கன்னட இசையமைப்பாளர்(ஆப்தமித்ரா இசையமைப்பாளர்) என எங்கோ படித்த ஞாபகம்...
பதிவு நல்லா இருக்கு... ஆனா ஏதோ முற்றுப் பெறாத ஃபீலீங்...வாழ்த்துக்கள்..
//“பாடல் மட்டும் பரவாயில்லை, பிண்ணனி இசை சரியில்லை” //
தல,
இப்படி சொல்லிட்டீங்களே. மின்னலே எல்லா பாட்டுமே ஹிட்டாச்சே. பாட்டு வந்தது நான் காலேஜ் முதல் வருஷம் படிக்கும் போது. படம் செகண்ட் இயர்.
இரு விழி உனது.. இமைகளும் உனது. கனவுகள் மட்டும் எனதே எனது. இந்த பாட்டை இப்ப கேட்டாலும் அழகான கதை கரு மனசுல வரும்... அதே மாதிரி தான் கஜினி பாட்டும்...
நீங்க சொன்ன மாதிரி ஹாரிஸ் பேக்ரவுண்ட் மியூசிக் செம்ம சொதப்பலா தான் இருக்கும். நான் பின்னாடி டைரக்டர் ஆனா பாட்டுக்கு ஹாரிஸ், பின்னணிக்கு யுவன்னு ஒரு ஐடியா வெச்சிருக்கேன் ;)
ராம் சார்
தகவலுக்கு நன்றி
//கலையரசன் said...
பக்கா! பக்கா!!
தொடர்ந்து எழுதுங்கள்..
நிறைய பதிவை எதிர்பார்கின்றேன்!//
நன்றி சார்
//T.V.Radhakrishnan said...
ஆஹா..நம்ம புருனோ சாரா..கலக்கிட்டீங்க போங்க..//
நன்றி சார்
//தமிழ்ப்பறவை said...
ரா..ரா பாடலுக்கு மட்டும் இசை கன்னட இசையமைப்பாளர்(ஆப்தமித்ரா இசையமைப்பாளர்) என எங்கோ படித்த ஞாபகம்...
பதிவு நல்லா இருக்கு... ஆனா ஏதோ முற்றுப் பெறாத ஃபீலீங்...வாழ்த்துக்கள்..//
தகவலுக்கு நன்றி
2003ஆம் வருடம் குறித்து மேலும் ஒரு இடுகை உள்ளது
Vijay - Thirumalai vanthu action hero aanathum 2003la thaan.
//இப்படி சொல்லிட்டீங்களே. மின்னலே எல்லா பாட்டுமே ஹிட்டாச்சே. பாட்டு வந்தது நான் காலேஜ் முதல் வருஷம் படிக்கும் போது. படம் செகண்ட் இயர். //
அது அந்த படத்திற்கு மட்டும் சொன்னதல்ல
//நீங்க சொன்ன மாதிரி ஹாரிஸ் பேக்ரவுண்ட் மியூசிக் செம்ம சொதப்பலா தான் இருக்கும். நான் பின்னாடி டைரக்டர் ஆனா பாட்டுக்கு ஹாரிஸ், பின்னணிக்கு யுவன்னு ஒரு ஐடியா வெச்சிருக்கேன் ;)//
லேசா லேசாவில் பிண்ணனி இசையும் நன்றாக இருக்கும்
// வெட்டிப்பயல் said...
Vijay - Thirumalai vanthu action hero aanathum 2003la thaan//
ஆமாம தலைவரே
சேர்க்க மறந்து விட்டேன்
//(ஆரிசு செயராசு)/
:)
கஜினி பேக்கரவுண்டு மீஜிக்தான் என் ரிங்டோன் ( லவ் தீம் - வயலின் இசை)
மொத்தத்தில் சல்லதொரு பதிவு.
டாக்டர்,
பட்டய கிளப்பீட்டிங்க.
அசத்தல்.
அழகான, ஆழமான அலசல் டாக்டர்..!
இவ்வளவு யோசிச்சு தூளா எழுதியிருக்கீங்க!
அருமையான பதிவு புருனோ.. எனக்கென்னவோ.. ஹாரிஸின் பிண்ணனி இசை காக்க காக்கவுக்கு அப்புறம் கெளதமின் படஙக்ளில் நன்றாக் இருந்ததாகவே தெரிகிறது.
You Are Posting Really Great Articles... Keep It Up...
We recently have launched a website called "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...
தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
http://www.namkural.com.
நன்றிகள் பல...
- நம் குரல்
Post a Comment