நியூட்டன் நியூட்டனுங்கிறாங்களே, அது யாரு என்று கேட்கவும், பட்டி விளக்கத்துவங்கினார்.
ஐசக் நியூட்டன் இங்கிலாந்துகாரர். ஒரு புகழ் பெற்ற விஞ்ஞானி. புவியீர்ப்பு விசை (அதாவது பூமி புட்ச்சு இழுக்கும் ஃபோர்ஸ் - இது குறித்து மேலும் அறிய இந்த இடுகை செல்லலாம் ), நுண்கணிதம் (கால்குலஸ்), இயக்க விதிகள் (விபரம் இங்கு ) போன்ற பலவற்றை கண்டு பிடித்து உலகிற்கு சொன்னவர்.
அப்படியா. நானும் படப்பெயர் ஏதோ “நியூட்” ன்னும் ஆரம்பிக்குதேன்னு ஆர்வமா போய் பார்த்தேன். இது தானா சமாச்சாரம். ... புவியீர்ப்பு விசை தெரியும். அது என்ன இயக்க விதிகள்
பொருளின் இயக்கம் தொடர்பான மூன்று விதிகளை நியூட்டன் உருவாக்கினார். அவை நியூட்டனின் இயக்க விதிகள் எனப்படும். முதல் விதி விசையின் அடிப்படை வரையறையும், இரண்டாவது விதி விசையின் அளவு மற்றும் திசையை பற்றிய வரையறையையும், மூன்றாவது விதி விசையின் தன்மையையும் விளக்குகின்றன (விக்கிபீடியாவிலிருந்து)
- நியூட்டனின் முதல் இயக்க விதி: இவ்விதியின்படி “வெளிவிசையொன்று செயல்பட்டு மாற்றும் வரை எந்த ஒரு பொருளும் தனது ஓய்வு நிலையையோ அல்லது நேர்க்கோட்டில் அமைந்த சீரான இயக்க நிலையையோ மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து அதே நிலையில் இருக்கும்." புற விசைகள் இல்லாத நிலையில், பொருள் ஒன்று தன்னிச்சையாகத் தானே தனது நிலையை மாற்றிக் கொள்ளாத பண்பு நிலைமம்(Inertia) எனப்படும்.
- நியூட்டனின் இரண்டாம் இயக்க விதி: ஒரு பொருளின் மீது செயல்படும் விசைகள் சமன் செய்யப்படாத பொழுது பொருளின் மீது ஏற்படும் விளைவை நியூட்டனின் இரண்டாவது இயக்க விதி விளக்குகிறது. இவ்விதியின்படி, பொருளின் உந்தம் மாறுபடும் வீதம் அதன்மீது செயல்படும் விசைக்கு நேர்த்தகவில் இருக்கும். உந்தம் மாறுபடும் திசை, விசையின் திசையை ஒத்ததாக இருக்கும்
- நியூட்டனின் மூன்றாம் இயக்க விதி: ஒரு பொருளின் மீது செயல்படும் ஒவ்வொரு புறவிசைக்கும் அவ்விசைக்கு சமமானதும், எதிர் திசையிலும் அமைந்த எதிர் விசையை அப்பொருள் தருகிறது.
உதாரணமாக ஒருவர் படகில் துடுப்பை வைத்து நீரை பின் தள்ளுகிறார். (இது வினை) அதனால் படகு முன்னால் செல்கிறது (இது எதிர்வினை)
அப்புறம்
ஒரு காற்றடைத்த பலூனை அப்படியே விட்டு விட்டால் அது சிறிது தூரம் புஸ் என்று செல்கிறது அல்லவா. இங்கு பலூனில் இருந்து வெளிவரும் காற்று வினை. அதனால் அந்த காற்று வரும் திசைக்கு எதிர் திசையில் பலூன் செல்வது எதிர்வினை
ஏவுகணை கூட இந்த விதியின் படிதான் பறக்கிறது. அதன் பின்னால் இருந்து வரும் காற்று வினை. அதனால் ஏவுகணை முன்னால் செல்வது எதிர்வினை
தீபாவளிக்கு நாம் வீட்டில் விடும் தரைச்சக்கரம் சுற்றுவதும் , ராக்கெட் மேலேசெல்வதும் கூட இந்த விதியின்படிதான்
வேற ஏதாவது
துப்பாக்கியிலிருந்து தோட்டா சீறுவது கூட இந்த விதிதான்
அப்படியா
ஆமாம்
துப்பாக்கி, தோட்டா பற்றி சொல்லு. இவ்வளவு வந்த பிறகும் நம்ம ராஜா ஏன் இன்னும் வாளை மட்டும் வைத்திருக்கிறார் என்று கேட்கவும் விக்ரமாதித்தியன் முறைத்தான். பட்டி ஒரு படத்தை வரைந்து காட்டி விட்டு தொடர்ந்தார். ஒரு தோட்டா இப்படி தான் இருக்கும்
இதில் 1 என்று குறிப்பிடப்பட்டுள்ளது தான் தோட்டாகுண்டு. 2 குண்டு பொதியுறை 3. துப்பாக்கி பொடி (கன் பவுடர்) 4. உறையின் பின் பகுதி 5.ப்ரைமர்
துப்பாக்கி தோட்டாவுல இவ்வளவு இருக்கா இதுல அம்புட்டுமா துப்பாக்கியிலிருந்து வருகிறது
1. தோட்டா தான் துப்பாக்கியின் முன்னாலிருந்து வரும்.
2. வெற்று உறை துப்பாக்கியின் பக்கவாட்டிலிருந்து அல்லது மேலிருந்து விழுந்து விடும். சில ஆங்கில படங்களின் தொடர்ந்து சுடும் போது துப்பாக்கியின் மேலிருந்து ஏதோ வந்து கொண்டிருக்குமே. அது இந்த வெற்றுறை தான். இதை குண்டு பொதியுறை; குண்டுப் பொதியுறை; தோட்டா; வெடிச்சுரை; வெடியுறை என்று அழைப்பார்கள்
துப்பாக்கி பொடி என்னவாகும்
அது எறிந்து விடும். அது எறியும் போது ஏற்படும் வாயுக்கள் அதிக அழுத்தத்துடன் இருக்கும். அது உறையின் பின்பகுதி வழியாக் வெளியேறமுயல்வதால் (வினை) தோட்டா முன்னால் உந்தப்படுகிறது (எதிர்வினை)
அது எப்படி எரியும்
5 - அம்மொனியம் நைட்ரேட், லெட் அசைட், பொட்டாசியம் பெர்குளோரைட் போன்ற பொருட்கள் தோட்டாவின் பின் பகுதியில் இருக்கும். துப்பாக்கியின் கருவி இதில் வந்து அழுத்தியதும், இது பற்றிக்கொள்கிறது. நெருப்பு உருவாகிறது. எனவே துப்பாக்கி பொடி முழுவதும் எரிகிறது. அந்த வாயு பின்னோக்கி வர முயல்கிறது. அப்படி வர முயல்கையில் போது முன்னோக்கி தோட்டாவை தள்ளுகிறது
இதற்கு பதில் தோட்டாவின் பின்னால் தீவைத்தாலும் கூட முன்னால் இருக்கும் தோட்டா சீறிப்பாய்ந்து செல்லும்
இது என்ன புது கண்டுபிடிப்பு. ரீல் சுத்துகிறீயா... சும்மா சினிமாவில் யாரோ டூப் விட்டத எல்லாம் சொல்லிக்கிட்டு...
புது கண்டுபிடிப்பு இல்லை. இது தான் பழைய கண்டுபிடிப்பு. அந்த காலத்து பீரங்கிகளில் என்ன செய்வார்கள் தெரியுமா
என்ன செய்வார்கள்
பீரங்கியின் உள்ளே துப்பாக்கி பொடியை நிரப்பி அதன் மேல் ஒரு பெரிய இரும்பு குண்டை வைத்து விட்டு, பின்னால் இருந்து திரியால் பற்ற வைப்பார்கள்
இதுல அவர் பத்த வைக்கிறது தெரியுதா (படங்கள் : விக்கிபிடியாவிலிருந்து பெறப்பட்டவை)
அப்படியா. அப்ப நியூட்டனின் 3ஆவது விதி படத்தில் காட்டப்படுவது போல் தோட்டா மூலம் ஒருவரை கொலவதற்கு துப்பாக்கி தேவையில்லை, தீ மட்டும் போதுமா
போதும்
நான் எஸ்.ஜே.சூர்யா சும்மா பில்டப் விடுகிறார் என்று நினைத்தேன்
இல்லை. அது சாத்தியம் தான். படத்தில் தலைப்பும், இறுதிகாட்சியும் மிக மிக பொருத்தம் தான். பலரும் பழி வாங்கும் கதை என்பதால் (மட்டும்) தான் அந்த தலைப்பு என்று நினைக்கிறார்கள். அது ஒரு விதத்தில் சரி என்றாலும் கூட, எந்த கதை என்றால் கூட இது போல் தோட்டா செலுத்தப்படுதை காட்டினாலே படத்தின் தலைப்பு பொருத்தம் தான்
அது சரி, படம் எப்படி இருக்கிறது என்று மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள்.
இது குறித்து பிரபல பதிவர்கள் எழுதிய விமர்சனம் தெளிவாக கூறுகிறது
- கேபிள் சங்கர் - நியூட்டனின் 3ஆம் விதி - திரைவிமர்சனம்
- லக்கிலுக் - நியூட்டனின் 3ஆம் விதி - திரைவிமர்சனம்
- அதிஷா - நியூட்டனின் மூன்றாவது விதி?
- சக்திவேல் - நியூட்டனின் 3ஆம் விதி - சினிமா விமர்சனம்
- சுரேகா - நியூட்டனின் 3ம் விதி - அட
- மோகன்தாஸ் - தொடர்ச்சியற்ற எண்ணங்கள்
ஆமா, டைட்டிலில் கிட்டத்தட்ட முழு கதையே இருக்கிறது. போக போக அது விரிகிறது. இப்பொழுதெல்லாம் பலரும் டைட்டிலிலேயே அசத்துகிறார்கள்
வேற எந்த சமீபத்திய படத்தில் டைட்டிலில் கதைக்கு சம்மந்தமான காட்சி இருக்கு
யாவரும் நலம் - டைட்டிலில் பிண்ணனியில் தொலைகாட்சி தொழிற்சாலையில் ஒரு தொலைக்காட்சி பெட்டி தயாராவது காட்டப்படும். படத்தில் தொலைக்காட்சி முக்கிய பங்கு வகிக்கிறதே
அட
அருந்ததி படத்தின் டைட்டிலில் முதுகெலும்பில் இருந்து ஆயுதம் செய்வதை காட்டுகிறார்கள். அதே காட்சிகள் பின்னர் படத்திலும் வருகின்றன. அந்த ஆயுதம் கதையில் முக்கிய பங்கு வகிக்கிறதல்லவா
எல்லாம் சரி, வேகமான திரைக்கதை உட்பட பல சிறப்புகள் இருக்கும் படத்தில், ஏன் இப்படி சுமாரா நடிக்கும் கதாநாயகியை போடனும் என்று கேட்கவும் விடை தெரியாத பட்டி திருட்டு முழி முழிக்கிறார். இது தான் சாக்கு என்று வேதாளம் விக்ரமாதித்தனிடம் இந்த கேள்வியை கேட்கிறது.
விக்ரமாதித்யனோ “அதெல்லாம் காரணமாத்தான், நீங்க படையப்பா, பாபா எல்லாம் பாத்திங்களா. சூப்பர் ஸ்டாருக்கு நண்பர்களாக வருபவர்களை பார்த்திருக்கிறீர்களா ?” பட்டி யோசித்து பார்த்தலில் அனைவரும் வயசானவர்கள் என்பதை தவிர வேறு எதுவும் அவருக்கு புலப்படவில்லை.
மன்னர் தொடர்ந்தார் “அப்படி வயசானவங்க சுத்தி நின்னாத்தான் சூப்பர் ஸ்டார் “யூத்”தா தெரிவாரு” ஆஹா ... இதுல இவ்வளவு விஷயம் இருக்கா என்று வேதாளம் வியந்து கொண்டிருக்கும் போதே மன்னர் தொடர்கிறார் “சிம்ரன், ஜோதிகா மாதிரி ஆட்கள் கூட நடிச்சா, எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு திறன் தெளிவாக வெளிப்பட்டு விடுமே :) :) அதனால தான் இந்த கதாநாயகி :) :) :) :)”







34 மறுமொழிகள்:
கலக்கல் டாக்டர் :-)
தோழமையுடன்
பைத்தியக்காரன்
நன்றி சார் :)
வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி என்பதால் கூடுதல் மகிழ்ச்சி :)
வணக்கம் டாக்டர் இதே குண்டுப்பரிசோதனையை பாடசாலைக் காலத்தில் நாங்களும் குமிழ்முனைப்பேனாவின் (பால் பொயிண்ட்) நிப் அல்லது சைக்கிள் டுயூப்பின் வால்வ்ட்யூப் கட்டை பாவித்து பரிசோதித்துள்ளோம்.
பரிசோதனை விளக்கம் :
நிப் அல்லது கட்டையை எடுக்கவும் அதனுள் தீக்குச்சியின் மருந்தை கொஞ்சம் கொஞ்சமாக அடைக்கவும் நிப்பென்றால் இரண்டு அல்லது மூன்று தீக்குச்சிகளின் மருந்துபோதுமானது மற்றது என்றால் ஒரு பத்து அல்லது பன்னிரண்டு தீக்குச்சிகளின் மருந்து தேவைப்படும்.
பின்னர் அதன் பின்பக்கத்தில்(மருந்து அடைத்த பகுதி) ஒரு கம்பியைப் பொருத்தவும், கம்பியைக் கையில் வைத்துக்கொண்டு அல்லது ஏதாவது மரத்தில் பொருத்திவிட்டு கம்பிக்கும் நிப் அல்லது( வால்வ் கட்டை முனையும் )கம்பியும் பொருந்திய இடத்தில் மெழுகுவர்த்தி அல்லது வேறு ஏதாவது வகையில் நெருப்பால் சுடவும் சிறிது நேரத்தில் நிப் அல்லது வால்வ் கட்டை சிறிய சத்ததுடன் வெடித்து சில அடிகள் தூரம் செல்லும்.
கொஞ்சம் தைரியம் உடைய பையன்கள் கையில் பிடித்துக்கொண்டு நெருப்பை பிடித்து இதனைச் செய்வார்கள்.
நியூட்டனின் 3ஆம் விதி பார்த்தபோது இந்த பழைய ஞாபகமும் வந்தது. உங்கள் பதிவில் கலக்கலாக விளங்கப்படுத்தியிருக்கின்றீர்கள்.
ஒட்டு போட்டாச்சு , உக்கார்ந்து பணம் சம்பாதிக்கறது எப்படின்னு ஒரு பதிவு போட்டு இருக்கேன் கொஞ்சம் நம்மளையும் கவனிங்க http://technotamil.blogspot.com/2009/05/blog-post_06.html
வந்தியத்தேவன் சார்
பரிசோதனை தகவல்கள் சுவையாக இருக்கிறது
அப்பாவி தமிழன் சார்
கவனித்து விடுவோம்
//அருந்ததி படத்தின் டைட்டிலில் முதுகெலும்பில் இருந்து ஆயுதம் செய்வதை காட்டுகிறார்கள். அதே காட்சிகள் பின்னர் படத்திலும் வருகின்றன. அந்த ஆயுதம் கதையில் முக்கிய பங்கு வகிக்கிறதல்லவா
எல்லாம் சரி, வேகமான திரைக்கதை உட்பட பல சிறப்புகள் இருக்கும் படத்தில், ஏன் இப்படி சுமாரா நடிக்கும் கதாநாயகியை போடனும் என்று கேட்கவும் விடை தெரியாத பட்டி திருட்டு முழி முழிக்கிறார். //
:))
SUREஷ் சார்
விக்ரமாதித்யன் சொன்ன பதில் சரியா :) :)
அட.. அட.. அட.. இப்படி எழுத உங்களை விட்டா தமிழில் ஆள் இல்லை ! வேதாளம் கேட்ட கடைசி கேள்விக்கு நன்றி ;)
சத்தியமா ஒரு படத்துக்கு இப்படியெல்லாம் விமர்சனம் எழுத முடியுமா? ’டாக்டர் தெ க்ரேட்’
//அட.. அட.. அட.. இப்படி எழுத உங்களை விட்டா தமிழில் ஆள் இல்லை ! //
நன்றி தல :) :)
//வேதாளம் கேட்ட கடைசி கேள்விக்கு நன்றி ;)//
பதில் சரியான்னு சொல்லிபுட்டு போகலாமே
நன்றி அக்னிபார்வை :)
வித்தியாசமா இருக்கு டாக்டரே..!
///Newton's 3rd Law (of Love):
" the force applied while proposing a girl by a boy is equal and opposite to the force applied by the girl while slapping ."///
அப்போ இது இல்லியா மூன்றாவது விதி??
விமர்சனம் அமைத்த விதம் அருமை..
டக்ளஸ் சார்
நன்றி
உருப்புடாதது_அணிமா சார்
நீங்க சொன்னது அணிமாவின் மூன்றாவது விதி
அண்ணா வணக்கம்.
சூப்பர்ண்ணா :)
//Vijay said...
அண்ணா வணக்கம்.
சூப்பர்ண்ணா :)//
நன்றி தலைவரே :) :)
சூப்பர் புருனோ.. நிச்சயம் படத்துக்காக இல்லாவிட்டாலும் தேவையான எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்..
டாக்டர் எப்படி எல்லாத்துலேயும் கலக்குறீங்க!
//இந்த படத்தில் இருப்பது தான் தோட்டா// இதுக்கு பதில்
இந்த படத்தில் இருப்பது தோட்டா தான் என்று சொல்லி இருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்:))))
// நிச்சயம் படத்துக்காக இல்லாவிட்டாலும் தேவையான எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.//
நன்றி வருங்கால இயக்குனரே
//SUREஷ் சார்
விக்ரமாதித்யன் சொன்ன பதில் சரியா :) :)//
இது பதிலுக்காகவே பிறந்த கேள்வி சார் ..,
பொருத்தம் பிரமாதம்
//இந்த படத்தில் இருப்பது தோட்டா தான் என்று சொல்லி இருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்:))))//
சுட்டிக்காட்டியதற்கு நன்றி தலைவரே. மாற்றம் செய்துள்ளேன்
டாக்டர்,
நான் எதிர்பார்க்காத ஒரு தகவலைத் தந்தாலும்....இப்படியெல்லாம் கூடவா யோசிக்க முடியும் என்று மனதில் நிற்பது
\\நானும் படப்பெயர் ஏதோ “நியூட்” ன்னும் ஆரம்பிக்குதேன்னு ஆர்வமா போய் பார்த்தேன்//
அப்ப நியூ? அதுவும் சூர்யா படம்தானே!
//அப்ப நியூ? அதுவும் சூர்யா படம்தானே!//
ஆமாம் சார்
இரு அர்த்த வசனங்கள் இல்லாத எஸ்.ஜே.சூர்யா படம் அது ஒன்றுதான் :) :)
நல்ல இருக்கு ;-)
'ரெண்டாவது வாட்டி இந்தப்படத்தைப் பாப்பியா'என்று வேதாளம் இறுதியாகக் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல விக்கிரமாதித்தனால் முடியவில்லை.உடனே வேதாள்ம் மீண்டும் முருங்கை மரம் ஏறி விட்டது.
இப்படீன்னு முடிவைச் சேத்துக்குங்க.
//கடைக்குட்டி said...
நல்ல இருக்கு ;-)//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
//'ரெண்டாவது வாட்டி இந்தப்படத்தைப் பாப்பியா'என்று வேதாளம் இறுதியாகக் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல விக்கிரமாதித்தனால் முடியவில்//
ஏன் முடியாது. ரொம்ப எளிதான பதில் அது !!!
படத் தலைப்புக்கான விளக்கம் சுவாரஸ்யமா இருக்குங்க...
மருத்துவர் ஐயா அவர்களே....
கலக்கு கலக்குன்னு கலக்கிட்டீங்களே!!!
நியூட்டனின் விதிகளுக்கும் இந்த இடுகையின் தொடர்புக்கும், அப்புறம் தலைப்புக்கும் ஒரு 'சபாஷ்'. :)
சிவாஜி சார்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
ஊர் சுற்றி சார்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
Post a Comment