தமிழர்களில் சிறந்த திரையிசையமைப்பாளராக இந்தியாமுழுவதும் மட்டுமின்றி உலக அளவிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஏ.ஆர்.ரகுமான் இரண்டு ஆஸ்கர் விருதுகள் பெற்றது அனைவரும் அறிந்த பழைய செய்தி
2009 அக்டோபர் 6 அன்று அவரது பாடலான “ஜெய் ஹோ” மிக பிரபலமடைந்ததால் அந்த சொல்லை ஆங்கில சொல்லாகவே ஏற்றுக்கொண்டுள்ளார்கள்
திறமை இருந்தால் ஆஸ்கர் பட்டியலிலும் இடம் பிடிக்கலாம், பாடல் பிரபலமடைந்தால் ஆங்கில அகராதியிலும் இடம் பிடிக்கலாம்
ஆக்ஸ்போர்ட் பல்கலைகழக ஆங்கில அகராதி மற்றும் மரியம் வெப்ஸ்டர் போன்ற ஆங்கில மொழி அகராதிகளில் கீழ்க்கண்ட சொற்களின் மூலம் தமிழ் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள்
- Anicut அனைக்கட்டு
- Appam - ஆப்பம் / அப்பம்
- Cash - காசு
- Catamaran கட்டுமரம்
- Cheroot சுருட்டு
- Corundum 'ruby', குருந்தம் kuruntam or குருவிந்தம் kuruvintam (Source: OED)
- Coir கயிறு
- Curry கறி
- Godown கிடங்கு
- Idli இட்லி idli (Source: OED)
- Illupi இலுப்பை
- Kabadi/kabaddi கபடி கபடி
- Maldivian மலை தீவு - மாலத்தீவு
- Moringa முருங்கை
- Mulligatawny மிளகுத்தண்ணீர்
- Nadaswaram/nagaswaram நாகஸ்வரம் / நாதஸ்வரம்
- Pariah பறையர்
- Pandal பந்தல்
- Pongal பொங்கல்
- Poonga oil புங்கை எண்ணை
- Poppadom - பப்படம் அப்பளம்
- Portia tree பூவரசு
- Sambar சாம்பார்
- Sangam சங்கம்
- Tamil தமிழ்
- Tutenag துத்தநாகம்
- Vetiver வெட்டிவேர்
- Anaconda - ஆனை கொண்டான் - பல அகராதிகளில் இது சிங்கள சொல்லான henakaňdayā, "whipsnake" என்பதிலிருந்து வந்ததாக கூறுகிறார்கள்
- Coolie - கூலி : தமிழா / இந்தியா ??
- Rice - இதன் மூலம் கிரெக்க "oruza" (μαγειρ.) என்றாலும் கிரேக்கர்களுக்கு அந்த சொல்லை சொல்லி கொடுத்ததே அவர்களுடன் வாணிக தொடர்பிலிருந்த அரிசி விளையும் மண்ணின் சொந்தக்காரர்களான் தமிழர்களாகத்தான் இருக்க வேண்டும் என்பது ஒரு சாரரின் கருத்து (John Thorley's 1969 "The development of trade between the Roman Empire and the East under Augustus", printed in Greece & Rome, 16:2 at pp. 222).
- Betel - வெற்றிலை
- Copra - கொப்பர
- Eight எட்டு
- Malayalam - மலையாளம்
- One ஒன்னு
- Mango - மாங்கா
- Teak - தேக்கு
- Tope தோப்பு
72 மறுமொழிகள்:
அடடா நல்ல ப்திவு அவசியமான பதிவும் டாக்டர் சார்
வாங்க சார்
மின்னல்வேக மறுமொழிக்கு நன்றி
டாக்டருக்கும் -ve ஒட்டு விழுதா?
//T.V.Radhakrishnan said...
டாக்டருக்கும் -ve ஒட்டு விழுதா?//
அதுவும் இது போல் ஒரு சர்ச்சை எதுவும் இல்லாத இடுகைக்கே :) :) :)
காரணத்தைதான் நீங்களே உங்கள் இடுகையில் (http://tvrk.blogspot.com/2009/06/blog-post_07.html) கூறிவிட்டீர்களே
அருமையான தகவல்
நல்ல தகவல்கள்...
நல்ல தகவல்.நன்றியுடன் ஒரு ஓட்டு.
guru, mantra??
ஓட்டுக்கள் போட்டாச்சு தல..,
mantra, தமிழ்காரவுகளா..,
நல்ல இடுகை. குரு இந்தி சொல் கிடையாது Guru என்று எழுதுவதால் அது இந்தி அல்ல, தோசையை Dosa ன்னு எழுதுவதால் அது தமிழ் இல்லை என்று ஆகிடுமா ? தகவலுக்காகச் சொன்னேன். குரு என்றால் ஒளி என்று பொருள். வடமொழியில் குருவை ஆச்சார்யா என்பார்கள். குரு தமிழ் சொல்தான்.
இன்னும் நிறைய தமிழ் சொற்கள் ஆங்கிலத்தில் இருக்கு,
வெற்றி - Victory
குளிர்ச்சி, குளுகுளு - Cool
வேண்டும், வேண்டி - Want
வெவ்வேறு, வேறு - various
சரண் - surrender
குறிப்பு, நோட்டம் - Note
வாய் - Voi(ce)
பொட்டு (திடல்) - Spot
பஞ்சு - Sponge
பேச்சு - Speech
இன்னும் இருக்கு சட்டுன்னு நினைவு வரலை. :)
கலக்கல் டாக்டர்.அசத்தல் பதிவு.
நல்ல ஒரு ஆய்வு..
சிந்திக்க வேண்டிய தொடர்புகள்.
எத்தனையோ விஷயங்களை நாம் உச்சரிப்பால் மாற்றம் அடைய செய்கிறோம் என்பதற்கு கொப்பரா/கயிர் ஒரு உதாரணம்.
ஆரஞ்சு எனும் சொல்லும் நம் மொழியிலிருந்து சென்றது என கேள்விப்பட்டுள்ளேன்.
நிறைய இது போல மொழி தொடர்புகளை ஆங்கிலம், ஜெர்மன், தமிழ்,சமஸ்கிருதம் என சொல்லலாம். பிரஞ்சில் அனேக தமிழ் வார்த்தைகளை கண்டிருக்கிறேன்.
உங்கள் பணி தொடரட்டும்...
//குரு என்றால் ஒளி என்று பொருள். வடமொழியில் குருவை ஆச்சார்யா என்பார்கள். குரு தமிழ் சொல்தான்//
குரு என்பது வடமொழி சொல் தான்.
தமிழிலும் இது குரு என கூறப்படுகிறது. ஆச்சாரியன் என்பதன் தமிழ் திரிபு ஆசிரியன்.
ஆன்மீக வழிகாட்டி - குரு
பொதுவான அறிவு கொடுப்பவர் - ஆச்சாரியன்.
வேத மந்திரங்களில் குரு எனும் சொல் உண்டு.
குருர் பிரம்மா குருர் விஷணுர் குரு தேவோ மஹேஸ்வரஹ குரு- சாட்சாத் பரப் பிரம்மா தஸ்மை ஜ குருவே நமஹ
மற்றும் ஒரு தக்ஷிணா மூர்த்தி மந்திரம்..
குரவே ஸர்வ லோகா நாம்
பீஷஜே பவ ரோகிணாம்
நிதயே ஸர்வவித்யா நாம்
தட்சிணா மூர்த்தியே நமஹா.
/நல்ல இடுகை. குரு இந்தி சொல் கிடையாது Guru என்று எழுதுவதால் அது இந்தி அல்ல, தோசையை Dosa ன்னு எழுதுவதால் அது தமிழ் இல்லை என்று ஆகிடுமா ? தகவலுக்காகச் சொன்னேன். குரு என்றால் ஒளி என்று பொருள். வடமொழியில் குருவை ஆச்சார்யா என்பார்கள். குரு தமிழ் சொல்தான்./
சரியாகச் சொன்னீர்கள்
//குரு என்பது வடமொழி சொல் தான்.
தமிழிலும் இது குரு என கூறப்படுகிறது. ஆச்சாரியன் என்பதன் தமிழ் திரிபு ஆசிரியன்.
ஆன்மீக வழிகாட்டி - குரு
பொதுவான அறிவு கொடுப்பவர் - ஆச்சாரியன். //
ஆசான் என்கிற தமிழ் சொல்லின் வடமொழி திரிபே ஆச்சார்ய என்று ஒரு கருத்தும் இருக்கிறது.
சமயத்தலைவர்களை குரவர் என்று சொல்வது தமிழ்வழக்கு, குரு மணி என்றால் ஒளி பொருந்திய மணி என்றும் சொல்லுவார்கள். அதனால் அது வடசொல் என்றெல்லாம் அடித்துக் கூறிவிட முடியாது.
மேலும் சுட்டி1
சுட்டி2
//ஆசான் என்கிற தமிழ் சொல்லின் வடமொழி திரிபே ஆச்சார்ய என்று ஒரு கருத்தும் இருக்கிறது.
//
ஆசிரியன் என்ற சொல்லுக்கும் ஆச்சாரியா என்ற சொல்லும் தொடர்பு உண்டு. ஆசான் என்பதற்கு தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. மருவி இருக்கலாம்.
குரு எனும் சொல்லில் ஒலிக்கும் “கு” எனும் சொல்லின் ஓசை வட மொழி அழுத்தம் உண்டு.
தமிழில் க எனும் ஒரு சொல் மட்டுமே உண்டு. தமிழில் 'கா' தொடர்புகளை இடத்திற்கு தக்க மாற்றி பயன்படுத்துவது உண்டு. காரணம் வடமொழி சொல்லில் காஹ் எனும் ஓசை அதிகம்.
கங்கா எனும் சொல் தமிழ் சொல் அல்ல. காவேரி எனும் சொல்லில் இருக்கும் நெடில் கா-வின் அதே ஓசை கங்கா எனும் சொல்லின் முடிவில் இல்லை. அது போன்றதே. குரு என்னும் சொல்லும் குணம் என்னும் வேறு ஒலி நயம் இருக்கிறது.
வடமொழியிலிருந்து எடுக்கப்படவைகளில் இந்த ஓசை வேறுபாடு இருக்கும்.
(மேலும் ஒரு உதாரணம் - பாஸ்கர் / பாண்டியன்).
இதே போல நிறைய தமிழ் வார்த்தைகள் சமஸ்கிருதத்தில் இருக்கிறது. அது நீண்ட பட்டியல் உண்டு.
//கங்கா எனும் சொல் தமிழ் சொல் அல்ல. காவேரி எனும் சொல்லில் இருக்கும் நெடில் கா-வின் அதே ஓசை கங்கா எனும் சொல்லின் முடிவில் இல்லை. அது போன்றதே. குரு என்னும் சொல்லும் குணம் என்னும் வேறு ஒலி நயம் இருக்கிறது.
//
ஸ்வாமி தஞ்சையை thanjai என்று தான் எழுதமுடியும், அதில் j (ஜெ) இருக்கிறது என்பதற்காக அதை வடசொல் என்று சொல்லிவிட முடியாது காவேரி யை kaveri என்று எழுதுவதில்லை Cauvery என்றே எழுதுவதால் அதுவும் வடசொல் என்றாகிவிடாது. ஒலியின் ஓசையை வைத்து வடசொல் மற்றும் அல்ல என்பது சரியான வாதம் இல்ல. தங்கையை thagai என்று தான் சொல்கிறோம் அது Ga வருகிறது என்பதற்காக தங்கை வடசொல் ஆகிவிடுமா ? கங்கா வடசொல் தான் அதே போல் கங்கை என்பது அதற்கு வழங்கப்படும் தமிழ்ச் சொல் என்று சொல்வது தவறாகாது.
ஆகவே ஓசையை வைத்து சொற்களை இனம் காணுவது சரியெனப் படவில்லை.
:)
விவரம் என்பது விவரி, விவரித்தல் என்று சொல்லின் பெயர்ச் சொல் சுருக்கம், அதை விபரம் (Vibaram) என்று எழுதுவதால் அது வடசொல் என்றாகிவிடுமா ? இங்கே விபரம் என்ற சொல்லில் 'ப' போலி என்பார்கள் இலக்கண ஆசான்கள்.
//ஆசிரியன் என்ற சொல்லுக்கும் ஆச்சாரியா என்ற சொல்லும் தொடர்பு உண்டு. ஆசான் என்பதற்கு தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. மருவி இருக்கலாம்.//
தொடர்புகள் குறித்து நான் இணைத்த சுட்டியில் இருக்கிறது.
அவரது பாடலான “ஜெய் ஹோ” மிக பிரபலமடைந்ததால் அந்த சொல்லை ஆங்கில சொல்லாகவே ஏற்றுக்கொண்டுள்ளார்கள்--//
இந்த செய்தியை நானும் படிச்சேன்.மற்றபடி எப்போதாவதுதான் பதிவு போடுறீங்க அப்படி போட்டாலும் நச்சுன்னு போ்டுதாக்கிறியலே... அது எப்படி?
என் பக்கம் சார்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
மணிநரேன் சார்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
ராஜ நடராஜன் சார்
வருகைக்கும் கருத்திற்கும் ஓட்டிற்கும் நன்றி
//guru, mantra??//
இது குறித்த விரிவான உரையாடல் கீழே இருக்கிறது
கோவியாருக்கும் சாமிக்கும் நன்றி :)
//ஓட்டுக்கள் போட்டாச்சு தல..,//
நன்றி தல
//mantra, தமிழ்காரவுகளா..,//
சாமியும், கோவியும் பிரிச்சு மேஞ்சுட்டாக :)
திரு கோவி.கண்ணன்,
தங்கைக்கு வரும் கா வேறு.
கங்கை எனும் தமிழ் வார்த்தையில் வரும் கா போல ஒலிக்கிறது.
கொஞ்சம் ஆழமான பார்வை தேவையோ?
//விவரம் என்பது விவரி, விவரித்தல் என்று சொல்லின் பெயர்ச் சொல் சுருக்கம், அதை விபரம் (Vibaram) என்று எழுதுவதால் அது வடசொல் என்றாகிவிடுமா ? இங்கே விபரம் என்ற சொல்லில் 'ப' போலி என்பார்கள் இலக்கண ஆசான்கள். //
விவரண் என்பது வடமொழி சொல்.
அருகில் இருக்கும் தொலைதொடர்பு நிலையத்தில்(இந்தியாவில்) சென்றால் அங்கே அலுவலர் முன் வடமொழி(இந்தி) எழுதி இருப்பார்கள். தமிழில் “தகவல்”
ஒலி நயமே மொழித்தொடர்பை வேறுபடுத்துகிறது. தயிர்வடை என்பதை கர்நாடகாவில் வேறுமாதிரி சொல்வார்கள். காரணம் அவர்களுக்கு “த” உச்சரிப்பு தடித்து வரும். பெங்காலிகளுக்கு 'வ' உச்சரிப்பு சரியாக வராது. வஸந்தி என்பதை பஸந்தி என்பார்கள்.
தஞ்சாவூர் என்பதுக்கு ஆங்கிலத்தில் தான் “j" வரும். மேலும் நீங்கள் கூறியதில் ஆங்கில உச்சரிப்பில் அதை தாஞ்சூர் என்றே சொல்லிகிறார்கள். இதை சுட்டிக்காடியே நான் மொழி உச்சரிப்பு பேதம் உண்டு என்கிறேன்.
கலைஞர், ஞானி என்பவை ஆங்கிலத்தில் எழுதும் பொழுது சிரமம். அதனால் அதை வடமொழி என கூற முடியாது. நான் கூறி உச்சரிப்பு பேதத்தை சரியாக புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.
கோவியாரே
பட்டியலை பெரிதாகியதற்கு நன்றி
//இன்னும் இருக்கு சட்டுன்னு நினைவு வரலை. :)//
சலுவை - saliva
காசுக்கு எட்டு - cashew nut
ஆறு + அஞ்சு சுளை - orange
என்று கூட சொல்லலாம்
//கலக்கல் டாக்டர்.அசத்தல் பதிவு.//
நன்றி தல
சாமி மற்றும் கோவியாருக்கு பல நன்றிகள்
இடுகையை மேலும் சுவாரசியமாக்கியது உங்களின் மறுமொழிகளே
திகழ்மிளிர் சார்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
//அவரது பாடலான “ஜெய் ஹோ” மிக பிரபலமடைந்ததால் அந்த சொல்லை ஆங்கில சொல்லாகவே ஏற்றுக்கொண்டுள்ளார்கள்--//
இந்த செய்தியை நானும் படிச்சேன்.மற்றபடி எப்போதாவதுதான் பதிவு போடுறீங்க அப்படி போட்டாலும் நச்சுன்னு போ்டுதாக்கிறியலே... அது எப்படி?
//
வாழ்த்துக்கு நன்றி தல :) :) :)
எல்லா புகழும் இறைவனுக்கே
//விவரண் என்பது வடமொழி சொல்.
அருகில் இருக்கும் தொலைதொடர்பு நிலையத்தில்(இந்தியாவில்) சென்றால் அங்கே அலுவலர் முன் வடமொழி(இந்தி) எழுதி இருப்பார்கள். தமிழில் “தகவல்”//
விரித்தல் - மேலும் விரித்தல் தான் விவரித்தல் அது எப்படி வேற்றுச் சொல்லாகும், கருத்த > கறுகருத்த என்பது போல் வழங்கும் சொல்வழக்கு. அடுக்குத்தொடரின் சுறுக்கம். நீங்கள் நினைபது போல் விவரனில் இருந்து விபரம் வந்திருக்க வாய்ப்பில்லை. விவரத்திற்கு தகவல் என்பது தற்காலத்தில் வழங்கப்படும் புதிய சொல்.
வடமொழி(இந்தி) - உங்களுக்கு வடமொழி என்றால் அது இந்தி யா ?
நான் ஹிந்தியைத் தான் இந்தி என்றும் சமஸ்கிரதத்தை வடமொழி என்று நினைத்திருக்கிறேன் :)
//mantra//
திரம் - திறன் - திறமை
மனம் + திரம் > மந்திரம்
(மனத் திறம்)
இயங்கு + திரம் > இயந்திரம்
(இயங்கும் திறம்)
தன் + திரம் > தந்திரம்
(தன்னுடைய திறம்)
இதெல்லாம் என்ன மொழிச் சொல் ?
:)
பிறவி, பிறப்பு,, பெற்று (பெத்து) - Birth
//வடமொழி(இந்தி) - உங்களுக்கு வடமொழி என்றால் அது இந்தி யா ?
நான் ஹிந்தியைத் தான் இந்தி என்றும் சமஸ்கிரதத்தை வடமொழி என்று நினைத்திருக்கிறேன் :)//
வடக்கில் வழங்கும் மொழி வடமொழி தானே? :)
இந்தி என்ற மொழி சமஸ்கிருதத்தின் வழக்கு மொழி அல்லது பிற மொழிகலவை எனலாம். ஆங்கிலம் எப்படி லத்தீன் மொழி சார்பு உடையதோ அது போல.
//திரம் - திறன் - திறமை
மனம் + திரம் > மந்திரம்
(மனத் திறம்)
இயங்கு + திரம் > இயந்திரம்
(இயங்கும் திறம்)
தன் + திரம் > தந்திரம்
(தன்னுடைய திறம்)
இதெல்லாம் என்ன மொழிச் சொல் ?//
மந்த்ரா -வடமொழி
தமிழில் - மாத்திரை
மந்த்ரா - தந்திர - யந்த்ரா இவை வடமொழியே.
வடமொழிசொல்லை தமிழாக்கும் பொழுது விகுதியில் ஒரு ஒற்று வரும்.
க்ருஷ்ண - கிருஷ்ணன்
(தமிழ் சொல் கண்ணன் :))
ராம-இராமன்
அதபோலத்தான் யந்திரா இங்கே இயந்திரம் ஆகியது.
உங்கள் மொழியாடல் வேடிக்கையாக இருக்கிறது.
பூ-சாரி - பூவை தொடுப்பவர்- பூசாரி.
என்பதை போல் இருக்கிறது. பூஜாரி என்பதன் தமிழ் சொல் பூசாரி அன்றோ:)
சுத்தம் - அசுத்தம் என்ன மொழி?
தூய்மை - தூய்மையின்மை என்ன மொழி?
தூரம் - என்ன மொழி?
தொலைவு - என்ன மொழி?
மத்ய - என்ன மொழி? (மத்யானம்)
நடு - என்ன மொழி?
ஆல் இன்த கேம் :)
பாவம் புருனோ ஐயாவோட பின்னூட்ட பெட்டி வெடிச்சுட போகுது.:)
நாளைக்கு இன்னொரு பதிவுல நம்ம தொழிலை காட்டுவோம். இன்னைக்கு போதும். :)
மற்ற சொற்களெல்லாம் சரி ஆனால் One ஒன்னு, Eight எட்டு ????
//பாவம் புருனோ ஐயாவோட பின்னூட்ட பெட்டி வெடிச்சுட போகுது.:)//
கண்டிப்பா வெடிக்காது
இது போல் எத்தனை மறுமொழி பெட்டிகளில் நான் சாத்து சாத்து என்று சாத்தியிருக்கிறேன் :) :)
//நாளைக்கு இன்னொரு பதிவுல நம்ம தொழிலை காட்டுவோம். இன்னைக்கு போதும். :) //
இல்லை தொடரலாம்
மிகவும் சுவாரசியமாக உள்ளது :) :)
//பூ-சாரி - பூவை தொடுப்பவர்- பூசாரி.
என்பதை போல் இருக்கிறது. பூஜாரி என்பதன் தமிழ் சொல் பூசாரி அன்றோ:)//
ஸ்வாமியின் டாகால்டிக்கு ஓ !
பூவினால் செய்யப்படுவது பூசை. இதை பூஜை என்று எழுதுவதால் அது வடமொழியில் இருந்து வந்தது என்றாகிவிடுமா ? பூவுக்கு வடமொழியில் புஷ்பம்.
நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பூசாரி என்பதின் வடமொழி மருவல் பூஜாரி.
எந்த ஒரு பண்புப் பெயர் சொல்லுக்கும் பண்புப் பெயர் + பெயர் சொல் சேர்ந்தே வரும், பூஜாரியை பிரித்துக்காட்டுங்கள் வருகிறதா பார்போம் ?
இரவு + வண்ணன் > இராவண்ணன் > இராவணன் அதாவது கருப்பு நிறத்தோன். இராவன் என்று எழுதுவதால் அது வடமொழி ஆகிவிடுமோ ?
//க்ருஷ்ண - கிருஷ்ணன்
(தமிழ் சொல் கண்ணன் :))
//
க்ருஷ்ணன் என்றாலும் கருமை நிறத்தோன் என்றே பொருள், ஷ்யாம்சுந்தர் என்றும் சொல்லுவார்கள். கருணன், கர்ணன், கண்ணன், கர்ணா இவையெல்லாம் கருமை என்ற பண்புப் பெயர் ஒட்டி வருபவையே.
//தூரம் - என்ன மொழி?
தொலைவு - என்ன மொழி?
மத்ய - என்ன மொழி? (மத்யானம்)
நடு - என்ன மொழி?
//
தூரம் - இதுவடமொழி
மத்ய - இதுவும் வடமொழி
மைய, மையம், நடு இவை தமிழ்
தொலைவு - இது தமிழ்தான். ஆனால் நாம இதையெலாம் சரியாக பயன்படுத்துகிறோமா ?
மந்திரம், தந்திரம், யந்திரம் இவை யாவும் பண்பு பெயர்ச் சொல்கள், இதை வடமொழியில் பகுத்துக் காட்டுங்கள். மூல மொழியில் பகுப்பில்லாது பண்புப் பெயர்கள் அமையாது என்பதே இலக்கண விதி.
//நாளைக்கு இன்னொரு பதிவுல நம்ம தொழிலை காட்டுவோம். இன்னைக்கு போதும். :)//
முன்னொட்டு, பின்னொட்டு, திரிபு, மரூஉ, போலி, இலக்கண போலி இவற்றையும் கொஞ்சம் கவணத்தில் வைத்துக் கொள்ளுங்கள்
//ஸ்வாமியின் டாகால்டிக்கு ஓ !
//
எனது டாகால்டியை பாராட்டியதற்கு நன்றி.
எனக்கு மொழி அறிவை காட்டிலும் பொது அறிவு கொஞ்சம் உண்டு.
எந்த மொழி இலக்கணமும் தெரியாது ஆனால் அடைப்படை தெளிவு உண்டு.
//பூவினால் செய்யப்படுவது பூசை. இதை பூஜை என்று எழுதுவதால் அது வடமொழியில் இருந்து வந்தது என்றாகிவிடுமா ? பூவுக்கு வடமொழியில் புஷ்பம்.
நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பூசாரி என்பதின் வடமொழி மருவல் பூஜாரி.
எந்த ஒரு பண்புப் பெயர் சொல்லுக்கும் பண்புப் பெயர் + பெயர் சொல் சேர்ந்தே வரும், பூஜாரியை பிரித்துக்காட்டுங்கள் வருகிறதா பார்போம் ?
//
பூஜை செய்பவன் பூஜாரி
ஆசனம் செய்பவன் ஆசாரி.
பூஜை எனும் சொல் வடமொழி.
தமிழில் அதற்கு வழிபாடு என்ற சொல் உண்டு.
பூஜை என்பதே ஆரியர்கள் கொண்டுவந்தது என ஆரம்பித்துவிடாதீர்கள். அந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை.
:)
இரவு + வண்ணன் > இராவண்ணன் > இராவணன் அதாவது கருப்பு நிறத்தோன். இராவன் என்று எழுதுவதால் அது வடமொழி ஆகிவிடுமோ ?
இராமாயணம்,மஹாபாரதம் இரு இதிஹாசங்களும் முதலில் வட மொழியில் இருந்தன. பிறகுதானே தமிழ்ப்படுத்தப்பட்டது?
வால்மீக்கிக்கு பிறகுதானே கம்பர்? அப்புறம் எப்படி இராவணன் - மருவி இராவன் ஆகமுடியும்? லாகிஜ் மிஸ்ஸிங்.
//க்ருஷ்ணன் என்றாலும் கருமை நிறத்தோன் என்றே பொருள், ஷ்யாம்சுந்தர் என்றும் சொல்லுவார்கள். கருணன், கர்ணன், கண்ணன், கர்ணா இவையெல்லாம் கருமை என்ற பண்புப் பெயர் ஒட்டி வருபவையே.//
க்ருஷ்ணா என்றால் கருமை என்பது வடமொழி சொல்தான். க்ருஷ்ணி என்றால் கரிய நிறத்தாள் என அர்த்தம் (க்ருஷ்ணி - காளி).
தமிழ் திரைபாடல்களை பாருங்கள்..
க்ருஷ்ணா கருமை நிற க்ருஷ்ணா என்றோ..
க்ருஷ்ணன் வருவான் கதை சொல்லுவான்..
என்றோ பாடவில்லை.
க்ருஷ்ண பக்ஷம், சுக்ல பக்ஷம் என்பதை தேய்பிரை, வளர்பிறை என கூறுவார்கள்.
சுக்லம் என்றால் வெண்மை என பெயர். இதற்கு மேலும் விளக்கம் உங்களிடம் உண்டு என நினைக்கிறேன். :)
கர்ணம் - காது.
கர்ணன் - காதில் விஷேஷத்துடன் பிறந்தவன்.
காதுக்கும் கர்ணனுக்கும் தான் சம்பந்தம். கருணைக்கும் கர்ணனுக்கும் சம்மந்தம் இல்லை.
பண்பு பெயர்களை நமக்கு ஏற்றது போல எப்படி வேண்டுமானாலும் பிரிக்கலாம். ஆனால் அதில் லாஜிக் இருக்கவேண்டும்.
இந்தி எப்படி சமஸ்கிருதம் மற்றும் அரபி கலந்து ஒலிக்கிறதோ அது போல ஒவ்வொரு மொழியிம் சில விஷயங்களை காலப்போக்கில் உள்வாங்கிக்கொள்ளும்.
ஆங்கில அகராதி பற்றிய பதிவில் நாம் செய்யும் கலாட்டா கொஞ்சம் ஓவர்தான் என நினைக்கிறேன்.
திரு புருனோ...
//
சலுவை - saliva
காசுக்கு எட்டு - cashew nut
ஆறு + அஞ்சு சுளை - orange//
சலுவை ஏற்றுக்கொள்ள முடிகிறது.
cashew nut எப்படி? நட் என்றால் கொட்டை என முன்பே சொல்வழக்கு ஆங்கிலத்தில் உண்டே?
நாரைங் - என்பது எலும்மிச்சை சார்ந்த பழவகையின் பொதுப்பெயர்.
இதை மேலும் சுவையாக (இலக்கணத்துடன்) தெய்வத்தின் குரலில் காஞ்சி பெரியவர் விளக்கி உள்ளார்.
நானும் கோவியாரும் இதில் இணைந்து குழப்பிய குட்டையில் “ஆம்பிள் டண் பிரிஜ்” கதை ஆகிவிடும் என நினைக்கிறேன்.
//இராமாயணம்,மஹாபாரதம் இரு இதிஹாசங்களும் முதலில் வட மொழியில் இருந்தன. பிறகுதானே தமிழ்ப்படுத்தப்பட்டது?
வால்மீக்கிக்கு பிறகுதானே கம்பர்? அப்புறம் எப்படி இராவணன் - மருவி இராவன் ஆகமுடியும்? லாகிஜ் மிஸ்ஸிங்.//
கம்பருக்கு முன்பே இராமனும் சீதையும் தமிழில் உண்டு, சங்க இலக்கிய குறுந்தொகை பாடல்களில் அந்த குறிப்பு உண்டு. நண்பர் குமரன் அண்மையில் காட்டுகளுடன் அதனை எழுதி இருந்தார். ஆகவே எழுதப்பட்ட வரலாற்று என்பது கிடைத்த தரவுகளின் அடிப்படையில் எழுதுவது.
அதை வைத்து எது முந்தியது பிந்தியது என்று சொல்லிவிட முடியாது. அகழ்வாராய்ச்சிகளில் முதுமக்கள் தாழிகள் கிடைக்கின்றன, அவற்றை ஆராய்ந்து அவற்றின் காலமும், புதிய தகவல்களும் கிடைக்கப் பெற்றால் காலம் குறித்த முந்தைய, பிந்தய என்கிற தகவல்கள் அடிப்பட்டுவிடும்.
தொல்காப்பியம் தான் நமக்கு கிடைத்திருக்கிறது என்பதை வைத்து தொல்காப்பியனுக்கு முன்பு தமிழே இல்லை என்று சொல்வது சரியாகுமா ?
//அவரது பாடலான “ஜெய் ஹோ” மிக பிரபலமடைந்ததால் அந்த சொல்லை ஆங்கில சொல்லாகவே ஏற்றுக்கொண்டுள்ளார்கள்--//
உண்மையில் மகிழ வைக்கும் செய்தி..
பகிர்வுக்கு நன்றிகள் பல
//வால்மீக்கிக்கு பிறகுதானே கம்பர்? அப்புறம் எப்படி இராவணன் - மருவி இராவன் ஆகமுடியும்? லாகிஜ் மிஸ்ஸிங்.//
லாஜிக் இருக்கு சாமி.
இராவணன் திராவிடன் தானே
அப்படி என்றால் அவனுக்கு திராவிட மொழியில் தானே பெயர் இருக்க முடியும், ஆரிய மொழியில் இருக்க முடியாது அல்லவா :) :) :)
//cashew nut எப்படி? நட் என்றால் கொட்டை என முன்பே சொல்வழக்கு ஆங்கிலத்தில் உண்டே?//
இது என்ன என்று ஆங்கிலேயர்கள் கேட்டதற்கு காசுக்கு எட்டு என்று நம்மக்கள் சொன்னதை தவறாக புரிந்து கொண்டவர்கள் அந்த பெயரை வைத்தார்கள் எனபது செவி வழி செய்தி
கங்காரு என்றால் என்ன அர்த்தம் தெரியுமா??
அடடே.. அதன் பத்து லட்சமாவது வார்த்தைப் போட்டியில ஜெய்ஹோ ஜெயிச்சிடிச்சா? வாழ்த்துகள்..
பகிர்விற்கு நன்றி டாக்டர்.
தல கேட்டது வேற..,
மந்த்ரான்னு தமிழ்ல ஒருத்தர், இந்தில ஒருத்தர் இருக்காக...
அவுகள்ல தமிழ்காரக தமிழேதானா.., இந்தில இருக்கறவுக தமிழுக்கு வந்ததால அவுகளயும் தமிழ்ன்னு சொல்லிறலாமான்னு கேட்டேன்..
ஆனால் பெரியவுக பேசறத பார்த்தா ஒதுங்கி வேடிக்கை பார்க்கலாம்னு இருக்கேன். நிறைய சொல்லிக் கொடுக்கறாக..,
தல இத அப்படியே தாய்மொழியில் மருத்துவம் இடுகையோட தொடர்பு படுத்திப் பார்க்கலாமா? இன்னும் சுவை கூடும்.
கங்காருன்னா..... என்னன்னு கேட்டா கங்காருன்னே பதில் சொல்லலாமுன்னு கேள்விப் பட்டேன்.
அப்படியா தல...
50போட்டாச்சு
நான் சென்ற பின்னூட்டத்தில் தாய்மொழி என்று சொல்லியிருக்கிறேன். இது அனைவருடைய தாய்மொழிக்கும் பொருந்தும்.
Could you give us the link related to this please?
குரு என்பது தமிழ்ச்சொல் என்பதை இன்னும் விளக்கமாகப் படிக்க
இந்த இரு படங்களைப் பெரியதாக்கிப்
பார்க்கவும்
முதல் படம்
இரண்டாம் படம்
இன்னும் தமிழைத் தெளிவாக அறிந்துக் கொள்ள
பாவாணர் அவர்கள், முனைவர் கு. அரசேந்திரன் அவ்ர்கள், ஈழத்துப் பாவாணர் அவர்களின் புத்தங்களைப் படித்தால் போதும்
அன்புடன்
திகழ்
//திறமை இருந்தால் ஆஸ்கர் பட்டியலிலும் இடம் பிடிக்கலாம், பாடல் பிரபலமடைந்தால் ஆங்கில அகராதியிலும் இடம் பிடிக்கலாம்//
Yes. Gulzar's talent has proved that.
அருமையான பதிவு. நிறைய ஆங்கில வார்த்தைகளுக்கான தமிழ்ச் சொற்களை அறிய முடிந்தது. இன்னும் நிறைய சொற்கள் தாருங்கள்.
ஸ்ரீ....
//மந்த்ரான்னு தமிழ்ல ஒருத்தர், இந்தில ஒருத்தர் இருக்காக...//
அண்ணா. இது உங்களுக்கே நியாயமா இருக்கா :)
//கங்காருன்னா..... என்னன்னு கேட்டா கங்காருன்னே பதில் சொல்லலாமுன்னு கேள்விப் பட்டேன்.
அப்படியா தல...//
விக்கிபீடியாவிலிருந்து
A common myth about the kangaroo's English name is that 'kagaroo' was a Guugu Yimidhirr phrase for "I don't understand you." According to this legend, Captain James Cook and naturalist Sir Joseph Banks were exploring the area when they happened upon the animal. They asked a nearby local what the creatures were called. The local responded "Kangaroo", meaning "I don't understand you", which Cook took to be the name of the creature.
அதே போல் தான் நம்மூரில் முந்திரியை காட்டி இது என்ன என்று கேட்கவும், நமது ஆட்கள் விலைகேட்கிறார்கள் என்று நினைத்து காசுக்கு எட்டு என்று கூறவும் அதை அவர்கள் கேஷ்ஷுநட் ஆக்கி விட்டதாகவும் கூறப்படுகிறது
:)
ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குகள் குத்தியாச்சி !
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
இது தொடர்ச்சிக்கு :)
//
Yes. Gulzar's talent has proved that.
//
வீ அவர்களே
குல்சாரின் திறமை மட்டும் அல்ல. அது ஒன்றும் புதிதான ஒரு வார்த்தை அல்ல. அல்லது முன்பே வா என் அன்பேவா என்று வார்த்தை விளையாட்டும் அல்ல. வழக்கமாக பல ஆண்டுகளாக புழக்கத்தில் இருக்கும் சொற்றொடர் தான்.
அந்த சொற்றொடரை தற்சமயம் உலகம் முழுவதும் கொண்டு சென்றதில் இசையமைப்பாளரின் பங்கு மிக அதிகமே
இதை நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன்
--
என்ன கொடுமை இது சரவணன்
அது
ஆரம்பிச்சுட்டாங்கயா
வந்துட்டான்னயா
இது எப்படி இருக்கு
ஆகிய சொற்கள் / சொற்தொடர்கள் பிரபலமடைந்ததில் அந்த வசனகார்த்தாக்களின் பங்கை விட அதிகம் பாராட்டுக்கள் யாருக்கு உரியது என்று நினைக்கிறீர்கள்
--
உங்களை சொல்லி குற்றமில்லை
வெறும் சாதத்தை பிரியாணி என்று ஏமாற்றி விற்கும் பிராடு (மோசடி) சமையல்காரர்கள் இருக்கும் ஊரில் சுவையான சாம்பார் வைப்பவனுக்கும் மரியாதை குறைவுதான்
--
போலி சாமியார்கள் இருக்கும் போது சித்தர்களை யாரும் கண்டுகொள்ளாதது நடப்பது தானே
//
ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குகள் குத்தியாச்சி !
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
இது தொடர்ச்சிக்கு :)
//
எப்படி அண்ணா :) :) இது சாத்தியம்
திகழ்மிளிர் சார்
தகவல்களுக்கு ”ஸ்பெஷல்” (சிறப்பு) நன்றி
www.Tamilers.com
You Are Posting Really Great Articles... Keep It Up...
We have launched a Tamil Bookmarking site called "www.Tamilers.com" which brings more traffic to all bloggers
தமிழர்ஸ்.காம் தளத்தில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.
அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்
தமிழர்ஸின் சேவைகள்
இவ்வார தமிழர்
நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.
இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்
இவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.
இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்
இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்
சிறந்த தமிழ் வலைப்பூக்கள்
Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.
This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.
"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.
இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்
சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்
இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.
நன்றி
உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
தமிழர்ஸ்
தமிழர்ஸ் பிளாக்
//
புருனோ Bruno said...
எப்படி அண்ணா :) :) இது சாத்தியம்
//
ஐபிக்கு ஒண்ணூ குத்தலாமே....
வூட்டில் இருக்கும் கணிணியில் ஒண்ணு..
அலவலகத்தில் என் கணிணியில் ஒண்ணு...
:)
தமிழ் வேர்ச்சொற்களாக இங்கே பேசப்படும் அனைத்தையும் தொகுத்து தனிப்பதிவாகப் போடுங்கள் Dr.
***
இறைவனை (சிலை/படம்..) பூக்களால் அழகு செய்வது. பூச்சூடல்,பூச்செய்தல் ,பூசை
பூசை = பூ + செய்
**
பெரியவா புஸ்தகத்தை மேற்கோள் காட்டும்ம்போதே ஓம்காரின் சமஸ்கிரக விருப்பம் தெரிகிறது. :-)))
வாழ்த்துகள்!
உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.
உங்கள் வருகைக்கு நன்றி,
அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.எப்படி இணைக்கவேண்டு்ம் என்ற விவரங்களுக்கு Tamilers Blog
தமிழர்ஸின் சேவைகள்
இவ்வார தமிழர்
நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.
இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்
இவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.
இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்
இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்
சிறந்த தமிழ் வலைப்பூக்கள்
Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.
This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.
"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.
இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்
சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்
இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.
நன்றி
உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
தமிழர்ஸ்
தமிழர்ஸ் பிளாக்
அன்புள்ள டாக்டர் அவர்களே,
"பல புக்மார்க்கிங் தளங்களிலும் ஒரே சொடுக்கில் வாக்களிக்கும் வசதி - வடிவமைப்பு புருனோ :"
முதலில் உங்களது ஒரு மிக பெரிய நன்றி.உங்களது உழைப்பு அந்த டூல்பாரில் தெரிந்தது
மிகவும் மகிழ்ச்சி எங்களது தளத்தினை நீங்கள் உங்களது டூல்பாரில் இணைத்தது எங்களுக்கு மிகவும் சந்தோசம், பெருமையும் கூட
உங்களது ஆதரவை என்றும் நாடும் தமிழர்ஸ்...
எங்களிடம் இருந்து உங்களது ஏதேனும் உதவி வேண்டுமென்றால்
நாங்கள் அதை செய்ய காத்திருக்கிறோம்.
மிகுந்த மகிழ்ச்சி மற்றும் புன்னகையுடன் இந்த பின்னூட்டம் இடுகிறோம்
நன்றி
உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
தமிழர்ஸ்
தமிழர்ஸ் பிளாக்
//தமிழர்ஸ் - Tamilers said...//
தற்சமயம் அந்த வசதி முன்னோட்ட நிலையில் உள்ளது.
உங்களது மின்னஞ்சல் முகவரி என்ன
Mr.Govi.Kannan...how come you never ashamed of showing off your ignorance publicly.
for a change, why don't you just speak/write about what you know
(atleast do some research before you do so..please)
hats off to swami.omcar for his patience to put up with
Mr."what i think is right" aka "Know all"
Geez..
+
நல்ல தகவல் டாக்டர். நன்றி.
Thanks for the timely post.
Yes today is his Birthday. He who has taken the Indian music into the international (Oscar) Level.
Our best wishes to the Mozarat of Madras, our beloved Ar Rahmaan.
Post a Comment