இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்
இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

செல்லிடப்பேசி / அலைபேசியில் பயணங்கள் வலைப்பதிவை வாசிக்கலாம் - Read payanangal.in in your mobile

வலைத்தளங்களையும் பிறதளங்களை போலவே இணைய வசதி உள்ள செல்லிடப்பேசியில் வாசிக்கலாம் என்பதை பலரும் அறிந்திருப்பீர்கள். ஆனால் செல்லிடப்பேசியில் நீங்கள் www.payanangal.in என்ற தளத்தை வாசிக்க முயன்றால் அதிக நேரம் எடுப்பதை உணரலாம். (கணினியில் வாசித்தாலேயே அதிக நேரம் எடுப்பதாக பலரும் கூறுகிறார்கள்)

இதனால் தான் பல தளங்களும் செல்லிடப்பேசிகளுக்கென்றே சிறப்பு தளம் ஒன்றை அமைத்துள்ளார்கள்

உதாரணம்
இது போல் பயணங்கள் வலைப்பதிவையும் அலைபேசியில் வாசிக்க தனித்தளம் ஒன்று http://m.payanangal.in/ தளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது

பயணங்கள் தளத்தை இணைய வசதி உள்ள அலைபேசியில் வாசிக்க வலைத்தள முகவரி உள்ளிடும் இடத்தில் m.payanangal.in என்று உள்ளிட்டால் போதுமானது

வாசித்து பாருங்கள். பிடித்திருந்தால் / வசதியிருந்தால் உங்கள் தளத்திற்கும் இது போல் எப்படி அமைப்பது என்று விளக்குகிறேன்

15 மறுமொழிகள்:

மறுமொழி எண்
SUREஷ் (பழனியிலிருந்து) said...

நான் தான் முதல்ல..,

என் ஊர்சுத்திப் பேசியில் தமிழ் எழுத்தை உட்கார வைப்பது எப்படி தல..,

மறுமொழி எண்
ஸ்ரீ.... said...

எனது செல்லில் தற்போது இணைய வசதி இல்லை. இணைப்பு கிடைத்ததும் பயன்படுத்துகிறேன். நல்ல் பதிவு.

ஸ்ரீ....

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//என் ஊர்சுத்திப் பேசியில் தமிழ் எழுத்தை உட்கார வைப்பது எப்படி தல..//

என்ன நிறுவன பேசி
என்ன model

மறுமொழி எண்
அமர பாரதி said...

பார்த்தேன் புருனோ சார். நல்ல வேகத்துடன் நன்றாக உள்ளது, சில எழுத்துரு பிரச்சினைகளுடன் (அவைகள் என்னுடைய மாடலுடன் சம்பந்தப் பட்டவை).

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//நோக்கியா 3500C//

உங்கள் செல்லிடப்பேசி சேவை வழங்குபவரிடல் சொல்லி GPRS சேவையை activate செய்ய சொல்லுங்கள்

மறுமொழி எண்
SUREஷ் (பழனியிலிருந்து) said...

GPRS சேவை உபயோகத்தில் உள்ளது தல.., தமிழ் எழுத்துக்கள் வரவில்லை.., உருக்களை எப்படி இறக்கம் செய்வது என்பதும் தெரியவில்லை.

மறுமொழி எண்
யாரோ ஒருவன் said...

எனது பேசி Windows Mobile 6.1 - ல் இயங்குகிறது (HTC Diamond). ஆனால் தமிழ் பக்கங்கள் மட்டும் படிக்க முடிவதில்லை. உதவமுடியுமா புருனோ?

மறுமொழி எண்
☼ வெயிலான் said...

இது வரை செல்லிடப்பேசியில் தமிழ் எழுத்துக்களை தெரிய வைக்கும் வசதி தான் இருக்கிறது.

Opra மற்றும் Skyfire உலவிகள் மூலம் தமிழ் வலைப்பக்கங்களைப் படிக்கலாம்.

http://get.skyfire.com/ - skyfire உலவி தரவிறக்க முகவரி.

தமிழ் எழுத்துருக்களை நிறுவும் வசதி இல்லை என்றே நினைக்கிறேன்.

மறுமொழி எண்
அப்பாவி தமிழன் said...

படிச்சு தமிழ்10 ல ஓட்டும் போட்டாச்சு , அப்டியே நம்ம பதிவையும் கொஞ்சம் கண்டுக்கோங்க

மறுமொழி எண்
dondu(#11168674346665545885) said...

இந்த உரலுக்கு போய் சம்பந்தப்பட்டவருக்கு உங்களால் ஆன ஆலோசனையை அளிக்குமாறு வேண்டுகிறேன்.
http://sattaparvai.blogspot.com/2009/06/blog-post.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...