எலிசபத் ராஸ் முதலில் கூறியது ஐந்து நிலைகள் தான். (மறுப்பு, கோபம், பேரம், மனச்சோர்வு, ஏற்றுக்கொள்ளுதல்). சோதித்தல் என்பது பின்னர் சேர்க்கப்பட்டது. அதே போல் அதிர்ச்சி என்ற நிலையும் பின்னர் சேர்க்கப்பட்டது தான்
ஆக, ஒரு துக்க நிகழ்வை எதிர்க்கொள்ளும் மனித மனம் கீழ்க்கண்ட எழு நிலைகளை கடந்து வருகிறது
- அதிர்ச்சி
- மறுப்பு
- கோபம்
- பேரம்
- மனச்சோர்வு
- சோதித்து பார்த்தல்
- ஏற்றுக்கொள்ளுதல்
உதாரணம் 1 : தேர்வில் தேர்ச்சியடையாத மாணவனின் மனநிலை
(பின்குறிப்பு : ஒரு 3 மணி நேரத்தில் 15 கேள்விகளுக்கு அளிக்கப்படும் விடையை வைத்து “தோல்வி” என்ற அடைமொழியை பயன்படுத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது)
தேர்வு முடிவு வரும் வரை, அவனது இயல்பான நடவடிக்கைகள் இருந்து கொண்டிருக்கும். நண்பர்களுடன் அரட்டை, கிரிக்கெட், தொலைகாட்சி, என்ற அவனது இயல்பு வாழ்க்கையை நாம் “நிலையான நிலை” என்று அழைப்போம்
(படம் உதவி : குசும்பன் )
இப்பொழுது தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்
- அதிர்ச்சி : முடிவை பார்த்தவுடன் அல்லது கேட்டவுடன் அவன் அதிர்ச்சி அடைகிறான். தலையை ஆட்டி சம்மதம் என்றாலும் உள்ளுக்குள் அந்த செய்தியின் தாக்கம் செல்ல சிறிது நேரம் ஆகிறது. சிலருக்கு நாக்கு உலர்ந்து விடும். தொண்டை அடைப்பது போன்ற நிகழ்வுகள் நடப்பதும் உண்டு.
- மறுப்பு : “இல்லை. நான் கட்டாயம் தேர்ச்சி பெற்று இருப்பேன்”. “இதில் ஏதோ தவறு”. “இந்த நாளிதழ் தவறாக அச்சிட்டுள்ளது. அடுத்த நாளிதழை வாங்கி பார்ப்போம்”
- கோபம் : அனைவர் மேலும் கோபம். விடைத்தாளை திருத்தியவர் மேல் கோபம். அதிகம் 10 நிமிடம் தராத தேர்வரங்க ஆசிரியர் மேல் கோபம். கத்துவது, எதையாவது தூக்கி எறிவது, அடுத்தவர்களிடம் எரிந்து விழுவது என்று சம்பந்தப்பட்ட நபர் அதிகம் “செயல்படுவதால்” இது “செயல்படும் நிலை”
- பேரம் : எத்தனை தாள்களில் தேர்வாக வில்லை. ஒரே ஒரு தாள் தானா, பல தாள்களா
- மனச்சோர்வு : அறைக்குள் அடைந்து கிடப்பது. ஒழுங்காக சாப்பிடாமல் இருப்பது. யாரிடமும் பேசாமல் இருப்பது என்று வழக்கமான அளவை விட குறைந்த அளவே வேலை செய்வதால் “செயல்படா நிலை”
- சோதித்தல் : மதிப்பெண் பட்டியலை சென்று பார்த்தல்
- ஏற்றுக்கொள்ளுதல் : அடுத்த தேர்விற்கு தயாராகுதல்
விபத்து என்று செய்தி வரும் வரை, அவனது இயல்பான நடவடிக்கைகள் இருந்து கொண்டிருக்கும். அலுவலகம் செல்வது, தொழிற்சாலை செல்வது, கூட்டங்கள், கேளிக்கை, கிளப்புக்கு சென்று சீட்டு விளையாடுவது என்ற அவரது இயல்பு வாழ்க்கையை நாம் “நிலையான நிலை” என்று அழைப்போம்
இப்பொழுது தொழிற்சாலையில் விபத்து என்றவுடன் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்
- அதிர்ச்சி : செய்தியை கேட்டவுடன் முதலில் நடப்பது அதிர்ச்சி தான். தலையை ஆட்டி சம்மதம் என்றாலும் உள்ளுக்குள் அந்த செய்தியின் தாக்கம் செல்ல சிறிது நேரம் ஆகிறது. சிலருக்கு நாக்கு உலர்ந்து விடும். தொண்டை அடைப்பது போன்ற நிகழ்வுகள் நடப்பதும் உண்டு. நெஞ்சு வலி வரலாம். முச்சடைக்கலாம். ஏற்கனவே இதய நோயாளி என்றால் மாரடைப்பு கூட வரலாம்.
- மறுப்பு : “இல்லை, என் தொழிற்சாலையில் இருக்காது. அங்கு விபத்து நடப்பதற்கு வழியே இல்லையே. வேறு ஏதாவது இடத்தில் இருக்கலாம்”
- கோபம் : கத்துவது, எதையாவது தூக்கி எறிவது, அடுத்தவர்களிடம் எரிந்து விழுவது என்று சம்பந்தப்பட்ட நபர் அதிகம் “செயல்படுவதால்” இது “செயல்படும் நிலை”
- பேரம் : “எவ்வளவு சேதம்”, “அதில் எவ்வளவு விபத்து காப்பீடு உள்ளது”, “கொஞ்சமாவது தேறுமா”
- மனச்சோர்வு : அறைக்குள் அடைந்து கிடப்பது. ஒழுங்காக சாப்பிடாமல் இருப்பது. யாரிடமும் பேசாமல் இருப்பது என்று வழக்கமான அளவை விட குறைந்த அளவே வேலை செய்வதால் “செயல்படா நிலை”
- சோதித்தல் : ”விபத்து எப்படி நடந்தது” “யார் தவறு” “இனி இப்படி நடக்காமல் தடுப்பது எப்படி”
- ஏற்றுக்கொள்ளுதல் : “எப்படியும் அந்த டிவிசனை இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும் என்று நினைத்தேன்” “இனி செய்துவிட வேண்டியது தான்”
- பொருந்தி வருவது தெளிவாக தெரிந்தால் நீங்கள் மூன்றாவது நிலையை தாண்டி நான்காவது, ஐந்தாவது, ஆறாவது அல்லது ஏழாவது நிலையில் உள்ளீர்கள்
- கோபப்பட்டால் மூன்றாவது நிலை
- அந்த உதாரணம் பொருந்தாது என்று கூறினால் இரண்டாவது நிலை
- முதல் நிலையில் இருப்பவர் இந்த இடுகையை வாசிக்கும் வாய்ப்பு குறைவு


34 மறுமொழிகள்:
சிறப்பான பதிவு.தேர்ச்சியடையாத மாணவனின் நிலையின் விவரிப்பு அழகு..
இதே நிலையை, ஊதிய உயர்வு இல்லை என்ற செய்தியுடன் ஒப்பிட்டால்.. மிக சரி.
//ஊதிய உயர்வு இல்லை என்ற செய்தியுடன் ஒப்பிட்டால்.. மிக சரி.//
இல்லை !!
ஊதிய உயர்வு இல்லை என்பது ஒன்றும் பெரிய துக்க நிகழ்வு அல்ல. அது அதீத எதிர்ப்பார்ப்பு நிறைவேறாமல் போவது தான்
--
வேலையிழப்பு என்பது துக்க நிகழ்வு
--
அதனுடன் ஒப்பிடலாம்
நல்ல பதிவு புரூனோ!!
ரொம்ப எழுதக்காணோமே!!
அற்புதமான இடுகை. ஏன் கொஞ்ச நாளாக எழுதவில்லை?
ஸ்ரீ....
சமீபகாலமாக, தமிழ் வலைப்பதிவுகளைப் படித்து வருகிறவன் என்ற முறையில், இந்த ஏழையும் தாண்டி, அருவருப்பு, வாந்தி, வெறுப்பு, இந்த இடத்தை விட்டு நகர்ந்தால் தேவலை, இவர்களெல்லாம் என்றைக்குத் திருந்துவார்களோ என்ற ஏக்கம், இன்னும் நிறைய symptoms தெரிய வருகிறதே, இவற்றையெல்லாம் எதில் சேர்ப்பது:-((
பிடிக்காத துக்க செய்தியை மனிதர்கள் எதிர்கொள்ளும் ஏழு நிலைகள் - The Kübler-Ross Grief Cycle
சுவிட்சர்லாந்து
///
நிலை எண் 8 > அந்த எழவு வீட்டில் சென்று சுண்டல் விற்றல்...
//நல்ல பதிவு புரூனோ!!
ரொம்ப எழுதக்காணோமே!!//
நன்றி பாஸ்
நேரமின்மைதான் காரணம் :)
//அற்புதமான இடுகை. ஏன் கொஞ்ச நாளாக எழுதவில்லை?
ஸ்ரீ....
//
நன்றி தலைவரே. சமீப காலமாக
வேலைப்பளு கொஞ்சம் அதிகம்
//சமீபகாலமாக, தமிழ் வலைப்பதிவுகளைப் படித்து வருகிறவன் என்ற முறையில், இந்த ஏழையும் தாண்டி, அருவருப்பு, வாந்தி, வெறுப்பு, இந்த இடத்தை விட்டு நகர்ந்தால் தேவலை, இவர்களெல்லாம் என்றைக்குத் திருந்துவார்களோ என்ற ஏக்கம், இன்னும் நிறைய symptoms தெரிய வருகிறதே, இவற்றையெல்லாம் எதில் சேர்ப்பது:-((//
இந்த மறுமொழிக்கு பொருந்தும் இடுகைகள் ஏதாவது இந்த தளத்தில் இருந்தால் கூறவும். திருந்த, திருத்த தயார்
--
கிரிக்கெட் விளையாடியிருக்கிறீர்களா சார்
அனைத்து பந்துக்களையும் அடிக்க வேண்டும் என்பது இல்லை. தலைக்கு மேல் செல்லும் பந்துகளையும், ஆப் திசைக்கு வெளியில் செல்லும் பந்துகளையும் விட்டு விடவேண்டும்
அனைத்து பந்துகளையும் ஆட வேண்டும் என்று நினைத்தால் சிக்கல் தான்
--
வலையுலகம் என்பது கங்கை போல், பூவும் வரும்,பிணமும் வரும். நீங்கள் தேர்வு செய்வது உங்கள் பொறுப்பு
பூவை எடுத்து சூடிக்கொள்ளலாம். அல்லது உங்கள் வீட்டை அலங்கரிக்கலாம்
நீங்கள் அகோரி என்றால் பிணத்தை சாப்பிடலாம். மற்றவர்கள் பூவு வரும் திசையை மட்டும் கவனிப்பது நலம்
//பிடிக்காத துக்க செய்தியை மனிதர்கள் எதிர்கொள்ளும் ஏழு நிலைகள் - The Kübler-Ross Grief Cycle
சுவிட்சர்லாந்து ///
நிலை எண் 8 > அந்த எழவு வீட்டில் சென்று சுண்டல் விற்றல்...//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தல
அருமையான பாடம் டாக்டர்
//அருமையான பாடம் டாக்டர் //
நன்றி பாஸ்
மிக நல்ல பதிவு. விபரமாகக் கூறியுள்ளீர்கள்.
நல்ல விளக்கம். எனக்கும் இதே நிலைகள்தான் வருகின்றன. :)
ஆனா சிலர் 'தற்கொலை' போன்ற முடிவுகளுக்குச் செல்கின்றனர். இது இந்த பகுப்பில் எங்கே பொருந்துகின்றது?
ஒருவேளை இந்த நிலைகள் வராமல் - 3ல் இருந்து -> பழிவாங்குதல்,
6ல் இருந்து -> தற்கொலை என்று செல்கிறவர்கள் மனச்சிதைவுக்கு உள்ளானவர்களா?
உண்மையிலேயே அந்த துக்க செய்தி திணிக்கப்பட்டது எனில் அதை எதிர்க்க வேண்டுமல்லவா? அதை சந்தோஷமாக மாற்ற முயல வேண்டுமல்லவா?
இது எங்கேயிருந்து ஆரம்பிக்கிறது? 6 - சோதித்துப் பார்த்தலில் இருந்தா?
//நல்ல விளக்கம். எனக்கும் இதே நிலைகள்தான் வருகின்றன. :)
ஆனா சிலர் 'தற்கொலை' போன்ற முடிவுகளுக்குச் செல்கின்றனர். இது இந்த பகுப்பில் எங்கே பொருந்துகின்றது?//
மனச்சோர்வு
//டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...
மிக நல்ல பதிவு. விபரமாகக் கூறியுள்ளீர்கள்.//
நன்றி சார்
//ஒருவேளை இந்த நிலைகள் வராமல் - 3ல் இருந்து -> பழிவாங்குதல்,
6ல் இருந்து -> தற்கொலை என்று செல்கிறவர்கள் மனச்சிதைவுக்கு உள்ளானவர்களா?//
இதை பொதுப்படுத்த முடியாது !!!
//உண்மையிலேயே அந்த துக்க செய்தி திணிக்கப்பட்டது எனில் அதை எதிர்க்க வேண்டுமல்லவா? அதை சந்தோஷமாக மாற்ற முயல வேண்டுமல்லவா?
இது எங்கேயிருந்து ஆரம்பிக்கிறது? 6 - சோதித்துப் பார்த்தலில் இருந்தா?//
ஆமாம்
நல்ல பதிவு doctor
நல்ல பகிர்வு, டாக்டர். 6 வது நிலையில் இருக்கிறேன்.
//T.V.Radhakrishnan said...
நல்ல பதிவு doctor//
நன்றி சார்
// பீர் | Peer said . நல்ல பகிர்வு, டாக்டர். 6 வது நிலையில் இருக்கிறேன்.//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சார்
good article. thanks.
நன்றாக மனதில் பதியும்படி விவரித்து எழுதியுள்ளீஈகள்.
நன்றி!
// SP.VR. SUBBIAH said...
நன்றாக மனதில் பதியும்படி விவரித்து எழுதியுள்ளீஈகள்.
நன்றி!//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி வாத்தியார் சார்
//நாடோடிப் பையன் said...
good article. thanks.//
வருகைக்கும் கருத்திற்கு நன்றி பாஸ்
ப்ருனோ எனக்கு Campus France கொடுத்த புத்தகத்தில் இதே போல் ஒன்று உள்ளது. ஸ்டீபென் ரைன்ச்மித் என்பவர் எழுதியுள்ளார். புதிதாக ஒரு நாட்டிற்கு சென்று ஒரு மாணவன் படும் பாதிப்பை ஆறு கட்டங்களாக சொல்கிறார்கள்.
நீங்கள் சொன்னதை அதிர்ச்சிக்கு மட்டுமல்லாமல் ஒரு வேறு மாதிரியான / புதிய முற்றிலும் இதுவரை எதிர்கொள்ளாமல் இருக்கும் சூழ்நிலைக்கு ஒப்பிடலாமா ?
பி.கு : நல்ல பகிர்வு :)
ரவி ஆரம்பிச்ச சுவாரசிய பதிவர்கள் விருதுல உங்களை கோத்து விட்டுருக்கேன். நேரம் கிடைக்கும்போது நீங்களும் எழுதுங்க.
sakalakala Dr Dr .. :) Super Bruno :)
IT field umm.. 23 am pulikesi um nu.. Oru Padam edukalam nu eruken...Yenna solarenga :)
//நீங்கள் சொன்னதை அதிர்ச்சிக்கு மட்டுமல்லாமல் ஒரு வேறு மாதிரியான / புதிய முற்றிலும் இதுவரை எதிர்கொள்ளாமல் இருக்கும் சூழ்நிலைக்கு ஒப்பிடலாமா ?//
அதற்கு acclimatization நிலைகள் இருக்கின்றன (உதாரணம் புகுந்த வீட்டிற்கு செல்லும் மருமகள்)
இதிலிருந்து சற்று மாறுபட்டது அது
--
//ரவி ஆரம்பிச்ச சுவாரசிய பதிவர்கள் விருதுல உங்களை கோத்து விட்டுருக்கேன். நேரம் கிடைக்கும்போது நீங்களும் எழுதுங்க.
//
கண்டிப்பா எழுதுறேன் தல. சிறிது நேரம் தாருங்கள்.
//sakalakala Dr Dr .. :) Super Bruno :)
IT field umm.. 23 am pulikesi um nu.. Oru Padam edukalam nu eruken...Yenna solarenga :)
//
எடுங்க பாஸ்
அற்புதமான பதிவு
//கதிர் - ஈரோடு said...
அற்புதமான பதிவு//
நன்றி சார்
Post a Comment