இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Friday, July 31, 2009

இணையம் மூலம் பணம் சம்பாதிக்க எளிய வழி - ரூபிமெயில் - Rupee Mail- Easy Way to Earn Online

தினமும் உங்கள் மின்னஞ்சல் கணக்கை திறந்தால் கண்டிப்பாக பல விளம்பரங்கள் வந்து இருப்பதை பார்க்கலாம்

அவற்றை வேறு வழியில்லாமல் படித்து விட்ட அழித்து விடுகிறோம்.

இப்படி விளம்பரம் வாசிக்க காசு தருகிறேன் என்று யாராவது சொன்னால் நம்புவோமா

நானும் முதலில் நம்பவில்லை

அதன் பிறகு “எவ்வளவோ பாத்துட்டோம், இதையும் பாத்துடுவோம்” என்று ரூபிமெயில் தளத்தில் பதிந்தேன்

வாரம் ஒரு முறை அல்லது சில நேரம் இது போன்ற மின்னஞ்சல்கள் வரும்

அதிலுள்ள click here என்ற இணைப்பை (சிகப்பு நிறத்தில் இருப்பது) சுட்டினால் ஒரு விளம்பரம் திறக்கும். உங்கள் கணக்கில் 25 காசுகள் வரவு வைக்கப்படும் !!

இப்படியே சேரும் பணத்தை அவர்கள் வரவு வைத்துக்கொண்டே வருவார்கள். நீங்கள் அந்த பணத்தை எப்பொழுது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம். ரூபாய் 200க்கு குறைவான தொகை என்றால் அஞ்சல் கட்டணம் 20 ரூபாய் பிடித்தம் செய்யப்படும். ரூபாய் 200க்கு அதிகமாக இருந்தால் நீங்கள் அதை எந்த செலவும் இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம்.

நாம் காசோலை கோரிய 15 நாட்களுக்குள் நாம் குறிப்பிடும் முகவரிக்கு அந்த பணம் காசோலையாக அனுப்பப்படும்


அவ்வளவுதான் !!

காசோலையை வங்கியில் போட்டு விட்டு காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது என்று பாட வேண்டியது தான்



20 மறுமொழிகள்:

♠புதுவை சிவா♠ said...

"காசோலையை வங்கியில் போட்டு விட்டு காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது என்று பாட வேண்டியது தான்"

:-)))))))))

வால்பையன் said...

நானும் முயற்சி செய்து பார்க்கிறேன் டாக்டர்!

jackiesekar said...

அப்படியா சொக்கா???

புருனோ Bruno said...

புதுவை சிவா சார்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

புருனோ Bruno said...

//நானும் முயற்சி செய்து பார்க்கிறேன் டாக்டர்!//

சீக்கிரம்

புருனோ Bruno said...

// jackiesekar said...
அப்படியா சொக்கா???//

இது போல் பல முயற்சி செய்து பார்த்தாகிவிட்டது

ஆனால் எதிலும் பணம் வரவில்லை

இதில் பணம் வந்து விட்டதால் தைரியத்துடன் பரிந்துரைக்கிறேன் !!!

SK said...

நல்ல பகிர்வு டாக்டர்.

புருனோ Bruno said...

//SK said...
நல்ல பகிர்வு டாக்டர்.//

நன்றி சார் :)

SK said...

டாக்டர், நான் சார் எல்லாம் இல்லை.

நான் எழுதிய e-mail'ku உங்களுடைய பதிலுக்காக காத்து இருக்கிறேன் சார்.

Prakash said...

செஞ்சாச்சு டாக்டர். ஆமாம் , நெறைய நண்பர்களை நாம் இன்வைட் செய்தால் கூடுதல் காசு தானே?

புருனோ Bruno said...

//நான் எழுதிய e-mail'ku உங்களுடைய பதிலுக்காக காத்து இருக்கிறேன் சார்.//

சென்னை சென்றபின் பதிலளிக்கிறேன்

புருனோ Bruno said...

//செஞ்சாச்சு டாக்டர். ஆமாம் , நெறைய நண்பர்களை நாம் இன்வைட் செய்தால் கூடுதல் காசு தானே?//
ஆமாம்

seidhivalaiyam.in said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

SUREஷ் (பழனியிலிருந்து) said...

உங்கள் பெயர் இங்கு அடிபடுகிறது நண்பரே

ஜி எஸ் ஆர் said...

மதிப்பிற்குரிய டாக்டர் அவர்களுக்கு வணக்கம் ,

நான் துபையில் வசித்து வருகிறேன் எனக்கு கடந்த பத்து நாட்களுக்கு மேலாக தொண்டையில் சளி உள்ளது போலவும் எப்பொழுதும் தொண்டை கரகரப்பாகவும் இருக்கிறது இங்கு மூன்று முறை இரு வேறு மருத்துவமனை சென்று மருத்துவரை கண்டேன் இருவரும் ஒரே மாதிரியான மருந்துகளை தந்தனர் இருப்பினும் எனது பிரச்சினை தீரவில்லை அதில் ஒரு மருத்துவர் எனக்கு அலர்ஜி பிரச்சினை உள்ளது என்றும் இது இங்குள்ள தட்பவெட்ப நிலை காரணமாக இது போன்ற பிரச்சினைகள் வருமென்று கூறுகிறார் எனக்கு இந்த பிரச்சினை காரணமாக மன அழுத்தம் அதிகமாகிறது எனக்கு இருமல் எதுவுமில்லை காய்ச்சல் இல்லை ஆனால் எப்பொழுது காரி துப்பினாலும் எச்சிலோடு கொஞ்சம் வெள்ளை நிற சளியும் சிலநேரம் மஞ்சள் கலந்தது போல சளியும் வருகிறது எப்பொழுதும் தொண்டையில் சளி இருப்பது போல உணர்கிறேன் இது எதனால் இப்படி வருகிறது என் பயத்திற்கு காரணம் என் உடன் வேலை பார்க்கும் நண்பர் ஒருவருக்கு இப்படிதான் எப்பொழுது எச்சில் துப்பினாலும் சளியும் கூட வரும் இறுதியில் அந்த நண்பருக்கு விசா புதுப்பிபதற்காக சென்ற பொழுது அவருக்கு காசநோய் உள்ளதாக சொல்லிவிட்டார்கள் எனக்கு அந்த சம்பவம் நடந்ததிலிருந்து எனக்கு அதுபோல ஏதேனும் பிரச்சினை இருக்குமோ என்று பயம் வருகிறது நான் இங்குள்ள மருத்துவரிடம் என் பிரச்சினையை சொல்லி இது காசநோயாக இருக்குமோ என்ற பயம் வருகிறது தயவு செய்து நீங்கள் எனக்கு உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

புருனோ Bruno said...

//ஆனால் எப்பொழுது காரி துப்பினாலும் எச்சிலோடு கொஞ்சம் வெள்ளை நிற சளியும் சிலநேரம் மஞ்சள் கலந்தது போல சளியும் வருகிறது //

காச நோய்க்கான சளி பரிசோதனை செய்து பார்த்து, அதன்படி தேவையான மாத்திரைகளை சாப்பிடுங்கள்

சரியாகிவிடும்

ஜி எஸ் ஆர் said...

நான் இங்குள்ள மருத்துவரிடம் என் பிரச்சினையை சொல்லி இது காசநோயாக இருக்குமோ என்று கேட்டதற்கு இது சாதரண பிரச்சினை தான் என்றும் அதிகம் கவலை பட தேவைல்லை என்று கூறிவிட்டார்கள்

மேலதிக விபரம் தந்தால் உதவியாக இருக்கும்

ஆ.ஞானசேகரன் said...

நல்லது நானும் முயற்சிகின்ரேன்

SHAFIUDEEN said...

ஹாய். தமிழ் அன்பர்களே! இணையத்தில் பணம் சம்பாதிக்க சில வெப்சைட்களை தேர்ந்து எடுத்துள்ளேன். முதலில் அலர்ட்பே, பேபால் அக்கவுண்ட் பதிவு செய்துக்கொண்டு மற்ற இணையத்தளங்களை பதிவு செய்து விளம்பரங்களை கிளிக் செய்து சம்பாதியுங்கள்
www.shafinew.blogspot.com

SHAFIUDEEN said...

ஹாய். தமிழ் அன்பர்களே! இணையத்தில் பணம் சம்பாதிக்க சில வெப்சைட்களை தேர்ந்து எடுத்துள்ளேன். முதலில் அலர்ட்பே, பேபால் அக்கவுண்ட் பதிவு செய்துக்கொண்டு மற்ற இணையத்தளங்களை பதிவு செய்து விளம்பரங்களை கிளிக் செய்து சம்பாதியுங்கள்www.shafinew.blogspot.com

இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...