இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்
இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

எழுத்தாளர் / பதிவர் சொக்கனின் சந்தேகத்திற்கு விடை !!

2008 மே 14 எழுதிய இடுகை, எழுத்தாளர் சொக்கன் அவரது பதிவில் கேட்ட ஒரு கேள்விக்கு பதிலாக பொருந்துவதால் சில மாற்றங்களுடன் மீள்பதிவு.


12ஆவது வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு அதில் முதல் மதிப்பெண் பெற்றவர்களின் பேட்டி பல நாளிதழ்களில் வெளிவந்துள்ளது. இளங்கலை மருத்துவம் சேர்வதற்கான விண்ணப்பங்கள் சுட சுட விற்றுக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இது குறித்து கடந்த ஞாயிறு சில மருத்துவர்களோடு பேசிக்கொண்டிருந்தேன்

அதில் சிலர் தற்பொழுது MCh இறுதி ஆண்டு (2009 ஆகஸ்ட்) தேர்வு எழுதுகிறார்கள். வேறு சிலர் இவ்வருடம் (2009 ஆகஸ்ட்) DM இறுதி ஆண்டு தேர்வு எழுதுகிறார்கள். இனி தான் அவர்கள் தங்கள் தொழிலில் இறங்க வேண்டும்

சரி இதிலென்ன செய்தி என்கிறீர்களா.

அவர்கள் 1991 மற்றும் 1992ஆம் ஆண்டு மருத்துவக்கல்லூரியில் (எம்.பி.பி.எஸ் படிக்க) சேர்ந்தவர்கள். அதாவது அவர்கள் மருத்துவக்கல்லூரியில் சேரும் பொழுது, இன்று (2009ஆம் வருடம்) முதல் மதிப்பெண் எடுத்தவர்கள் பிறந்திருக்கவே மாட்டார்கள் !!!!

அதே போல் இன்று முதல் மதிப்பெண் எடுத்து “மருத்துவராவது என் லட்சியம்” என்று கூறும் மாணவன்/மாணவி தங்களின் படிப்பை முடித்து தனியாக தொழில் துவங்கும் பொழுது இவ்வருடம் பிறக்கும் குழந்தைகளில் சிலர் தினத்தந்தியிலோ, தினகரனிலோ “எங்கள் லட்சியம்...... “ என்று பேட்டி கொடுத்துக்கொண்டிருப்பார்கள்.

இளங்கலை படிப்பு
  • 2009 பிப்ரவரி - 12ஆம் வகுப்பு தேர்வு
  • 2009 ஜூலை - மருத்துவக்கல்லுரியில் சேர்வது
  • 2010 ஜூலை - முதல் வருட தேர்வு
  • 2012 பிப்ரவரி - இரண்டாவது கட்ட தேர்வு
  • 2014 பிப்ரவரி - இறுதி கட்ட தேர்வு
  • 2014 மார்ச் - உள்ளிருப்பு மருத்துவ பயிற்சி ஆரம்பம்
  • 2015 மார்ச் - எம்.பி.பி.எஸ் படிப்பு முடிவு (தற்பொழுது எம்.பி.பி.எஸ் படிப்பின் கால அளவு 5 ½ வருடங்கள் அல்ல. முன்னர் அது 5 ½ வருடங்களாக இருந்தது. – 1997ல் இருந்தே ஆறு வருடம் ஆகி விட்டது. 2003 பிப்ரவரியில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள் இப்பொழுதுதான் 2009 மார்ச்சில் தங்களின் படிப்பை முடித்து இருக்கிறார்கள்)
முதுகலை படிப்பு
  • 2015 அல்லது 2016 - தமிழக தேர்வாணையம்
  • 2017 பிப்ரவரி அல்லது மார்ச் - ஆரம்ப சுகாதார நிலையங்களில் நியமனம்
  • 2017 முதல் 2020 வரை - மூன்று வருட கிராமப்புற சேவை
  • 2020 ஜனவரி / பிப்ரவரி - பட்ட மேற்படிப்பு நுழைவு தேர்வு
  • 2020 முதல் 2023 வரை - பட்ட மேற்படிப்பு (எம்.டி அல்லது எம்.எஸ்)
  • 2024 ஆகஸ்ட் - சிறப்பு படிப்பு நுழைவு தேர்வு
  • 2024 ஆகஸ்ட் முதல் 2027 ஆகஸ்ட் வரை - சிறப்பு படிப்பு (டி.எம் அல்லது எம்.சி.எச்)
2027 மே மாதத்தில் (2009 / 2010ல் பிறந்தவர்கள் எழுதிய) 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு !!!!

மேலே கூறியுள்ளது மத்திய தர குடும்பத்திலிருந்து மருத்துவம் படிக்கும் ஒருவரின் கால விபரம். அரசு பணியில் சேராமல் மேற்படிப்பு உடன் படித்தால் இதில் 3 முதல் 4 வருடங்கள் வரை குறையலாம். அவ்வளவு தான்

மருத்துவப்படிப்பு மேலும் ஒரு வருடம் நீடிக்கப்பட்டால் இவர்கள் படித்து முடிக்கும்முன்னே இவ்வருடம் பிறந்த குழந்தைகள் பேட்டி கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.

-oOo-

எழுத்தாளர் சொக்கனின் சந்தேகம் (http://nchokkan.wordpress.com/2009/08/17/ydr/)

வருங்கால எஞ்சினியர்களும் டாக்டர்களும் ஒன்றாகதான் ப்ளஸ் டூ படிக்க ஆரம்பிக்கிறார்கள், அதன்பிறகு, எஞ்சினியர் என்றால் இளமை, டாக்டர் என்றால் முதிர்ச்சி என்கிற அசட்டுத்தனமான Prejudice பிம்பம் எப்படி வருகிறது?
அது Prejudice அல்ல !! டாக்டர் என்றாலே முதிர்ச்சி என்ற பிம்பம் ஏற்பட்ட காரணத்தை கண்டு பிடிப்பது மிக எளிது தான். மருத்துவர்கள் தங்களது தொழிலை ஆரம்பிப்பது 35 வயதிற்கு பிறகு தான்
1994ல் 12ஆம் வகுப்பு படித்து மருத்துவ கல்லூரியில் சேர்ந்த ஒருவர் அவரது படிப்பை முடித்து தொழிலை ஆரம்பிக்க இன்னனும் மூன்று ஆண்டுகள் உள்ளன

அன்று நடந்த விவாதத்தில் பேசப்பட்ட சில கருத்துக்கள்
  • 1991ல் ஒருவர் மருத்துவக்கல்லூரியில் சேராமல் இளங்கலை படித்து தேர்வெழுதி இ.ஆ.பவில் சேர்ந்திருந்தால் அவர் பல வருடங்களுக்கு முன்னரே மாவட்ட ஆட்சித்தலைவராகி இருப்பார். இன்று எதாவது ஒரு துறையின் செயலராகி இருப்பார் - அரசு செயலரின் ஊதியம் / பிற வசதிகள் எவ்வளவு என்று தெரியும் என்று நினைக்கிறேன்
  • 1991ல் ஒருவர் மருத்துவக்கல்லூரியில் சேராமல் பொறியியல் கல்லூரியில் சேர்ந்திருந்தால் இன்று அவர் எத்தனை முறை பதவி உயர்வு பெற்றிருப்பார் ?? இந்த கேள்விக்கு இங்கிருக்கும் பதிவர்கள் பலர் விடை கூறலாம் 
  • 1991ல் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த ஒருவர் இன்று அரசு பணியில் பெரும் ஊதியம் (ஆறாவது ஊதிய குழுவின் பரிந்துரையின் படி)  அனைத்து படிகளையும் சேர்த்து பிடித்தம் இல்லாமல் மாதம் ரூபாய் 33000 முதல் 35000 வரை. கையில் கிடைப்பது மாதம் 28000-30000 வரை. இது 12 வருட படிப்பு மற்றும் மூன்று வருட அனுபவத்திற்கு கிடைக்கும் ஊதியம் :( :( 
-oOo-

67 மறுமொழிகள்:

மறுமொழி எண்
கையேடு said...

நல்ல தகவல் பதிவு டாக்டர்..
எனக்கும் சில கேள்விகள் தோன்றியது இடுகையை வாசித்ததும்.

1.பட்டமேற்படிப்பின் போது அனைவருக்கும் அரசின் உதவித்தொகை வசதியுண்டா அல்லது ஒருசிலருக்கு மட்டும் நுழைவுத்தேர்வு மதிப்பெண் சார்ந்து அளிக்கப்படுமா?

2. மருத்துவ மேற்படிப்பின் போதே, தனது இளங்கலைப் பட்டத்தைக் கொண்டு ஒருவர் தனியாகத் தொழில் முனையலாமா?

3. இளங்கலைப் படிப்பின் இறுதியாண்டில் தமிழகத் தேர்வாணையம் என்று குறிப்பிட்டிருக்கிறீர்களே அதன் பொருள் என்ன? கிராமப்புற சேவைக்கு தனியாகத் தேர்வு முறைகள் உள்ளனவா?

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//1.பட்டமேற்படிப்பின் போது அனைவருக்கும் அரசின் உதவித்தொகை வசதியுண்டா அல்லது ஒருசிலருக்கு மட்டும் நுழைவுத்தேர்வு மதிப்பெண் சார்ந்து அளிக்கப்படுமா?//

அனைவருக்கும் உண்டு

மாதம் ரூபாய் 15000

கல்விக்கட்டணம் ரூபாய் 25000 முதல் 35000 வரை. ஆக கையில் வருவது கொஞ்சம் தான்

--

தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு தமிழகத்தில் கல்விக்கட்டணம் கிடையாது

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//2. மருத்துவ மேற்படிப்பின் போதே, தனது இளங்கலைப் பட்டத்தைக் கொண்டு ஒருவர் தனியாகத் தொழில் முனையலாமா? //

பட்ட மேற்படிப்பின் போது அவர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிய வேண்டும். வாரம் 110 முதல் 120 மணி நேரம் வரை பணி இருக்கும்

சில நேரங்களில் தொடர்ந்து 56 மணி நேரம் கூட பணிபுரிய வேண்டி வரும்

எனவே வெளியில் தொழில் முனைவது ந்டைமுறையில் சாத்தியமில்லை

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//3. இளங்கலைப் படிப்பின் இறுதியாண்டில் தமிழகத் தேர்வாணையம் என்று குறிப்பிட்டிருக்கிறீர்களே அதன் பொருள் என்ன? //

அப்படி குறிப்பிடவில்லையே !!

இளங்கலை படித்து முடித்த பின்னர் தான் அவர் அரசு பணியில் சேர முடியும்

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//கிராமப்புற சேவைக்கு தனியாகத் தேர்வு முறைகள் உள்ளனவா?//

தமிழக அரசு பணியில் நியமிக்கப்படும் மருத்துவர்கள் அனைவரும் அரசு தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்

மறுமொழி எண்
Vijayashankar said...

Very nice post!

No wonder I chose the Engineering stream and already started to think about retirement.... :-) whereas my Doctor friends are jumping from big clinics to X clinics to their own setup ( other than ensuring, their parents wish of marrying the best possible alliance! )

Hats off to you Dr. !

Forget the promotions ... in 12 years, people end up as VP, SVP etc. in private co's or setup their own (if they get venture funds, or earn best @ USA...

Last point - no match for the Dr. status.

மறுமொழி எண்
கையேடு said...

//அப்படி குறிப்பிடவில்லையே//

ஆமாம், எழுதியபின்தான் யோசித்தேன். 2015 என்ற ஆண்டின் கணக்கை வைத்து எழுதிவிட்டேன்.. கல்வியாண்டோடு ஏற்பட்ட குழப்பம்..
நன்றி..

மறுமொழி எண்
nchokkan said...

நன்றி டாக்டர் :) நான் வேடிக்கையா நினைச்சுகிட்டுக் கேட்ட ஒரு கேள்விக்கு இப்படி ஒரு விரிவான பதில் இருக்கும்ன்னு நினைக்கவே இல்லை!

- என். சொக்கன்,
பெங்களூர்.

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//நன்றி டாக்டர் :) நான் வேடிக்கையா நினைச்சுகிட்டுக் கேட்ட ஒரு கேள்விக்கு இப்படி ஒரு விரிவான பதில் இருக்கும்ன்னு நினைக்கவே இல்லை!

- என். சொக்கன்,
பெங்களூர்.//

கருத்திற்கு நன்றி பாஸ்

மறுமொழி எண்
SUREஷ் (பழனியிலிருந்து) said...

இதில் ஒவ்வொரு போட்டித் தேர்வுகளிலும் இடைவெளியில்லாமல் தேர்ச்சி பெற்றால் இந்தக் கணக்கு..,

சில போட்டித்தேர்வுகளுக்கு கூடுதல் ஆண்டுகள் எடுத்தால் இன்னும் வயதாகிவிடும்

மறுமொழி எண்
துளசி கோபால் said...

life begins at 40 ன்னு இருக்கணுமோ(-:

இதுலேயும் நம்ம சமூக அமைப்பின்படி பொண்ணுக்கு 25 வயசானாலே முத்திப்போயிருக்குன்னு பேச்சு.
(நாங்க என்ன காய்கறியா ????)

இந்த அழகிலே மருத்துவம் படிக்கும் பெண்ணை நினைச்சுப் பார்த்தால்......

நியூஸியில் நண்பரின் மகள் 22 வயசில் கடைசிவருசப் படிப்பு முடிஞ்சதும் அன்னிக்கு மாலையே கிளம்பி இந்தியா. அடுத்த ரெண்டாம் நாள் கல்யாணம். மாப்பிள்ளையை மணமேடையில்தான் சந்தித்தாள். அதுக்கு முந்தி நெட்டில் போட்டோ பார்த்துப் பேசுனதோடு சரி.

திருமணத்துக்குப் பின் அவர் இங்கே வந்து உள்ளூர் ரெஜிஸ்ட்ரேஷன் வாங்க மறுபடி 3 வருசம் படிச்சார். மனைவியும் முதுநிலையைத் தொடர்ந்தாங்க. இப்போ எல்லாம் நலமே. மாப்பிள்ளையும் டாக்டர்தான்.

நீண்ட பின்னூட்டத்துக்கு மன்னிக்கணும்.

மறுமொழி எண்
ramachandranusha(உஷா) said...

அன்பின் குறையொன்றுமில்லை,
உங்கள் கேள்விக்கு பதில்- ஏன் தெரியாமல், பெற்றவர்களுக்கு இந்த நீண்ட
படிப்பு பிள்ளைகளால் முடியுமா என்ற பயம், குழப்பம் ஏற்படத்தான் செய்யும். போதக்குறைக்கு
சுற்றமும், நட்புகளும் தரும் பயம் கலந்த அறிவுரைகள்! ஆனால் உண்மையான ஆர்வத்துடன்,
தகுதியுடன் பிள்ளைகள் இருந்தால் அதே பெற்றவர்களால் தடை செய்ய இயலவில்லை.
என் மகன் இந்த வருடம் எம்பிபிஎஸ் சேர்ந்துள்ளான்:-)

மறுமொழி எண்
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ஐயோ பாவம் மருத்துவர்கள்..!

எப்படித்தான் இப்படி கட்டை, கட்டை புத்தகத்தை உருட்டுகடியோ இல்லாட்டி குருட்டுகடியோ ஏதோ ஒண்ணு படிக்குறாங்கன்னே தெரியலை..

பாவம்..!

மறுமொழி எண்
முகமூடி said...

// 2017 முதல் 2020 வரை - மூன்று வருட கிராமப்புற சேவை //

// மருத்துவர்கள் தங்களது தொழிலை ஆரம்பிப்பது 35 வயதிற்கு பிறகு தான் //

அப்போ 2017 முதல் 2020 வரை அவங்க செய்யறதுக்கு பேர் என்னங்க ? அது சேவை, இது தொழில்னு கடி ஜோக் அடிச்சிடாதீங்க :)

அது சரி, (பட்ட முதுகலை)படிப்பை முடித்து தனியா செய்தால்தான் தொழிங்கற மாதிரியே பேசறீங்களே.. அப்போ வெறும் எம்.பி.பி.எஸ் மட்டுமே போதும்னு இருக்கறவங்க பண்றதுக்கு பேரு? வெறும் பி.இ மட்டும் படிச்சிட்டு தட்டு தடுமாறி ரிட்டையர் ஆகும்போது ஒரு ஏ.டி.இ அல்லது அதிகபட்சமா சி.இ ஆகிறவங்க உண்டு. ஆனா முதுகலை மருத்துவர்கள் மாதிரியே இன்னும் கொஞ்ச வருசம் ஆனாலும் பரவாயில்லைன்னு எம்.பி.ஏ {அல்லது} எம்.எஸ்/எம்.இ, எம்.ஃபில், பி.எச்.டி (இது - இடையில் மூணு வருசம் தொழில் நடத்தி பிறகு ஆகும் - முதுகலை டாக்டர் படிப்பை விட அதிக காலம் பிடிக்கும்) {அல்லது} இ.ஆ.ப (பல முறை கோட் அடித்து பிறகு பாஸ் செய்வதற்கென்றே முழு முனைப்போடு சென்னை புறநகரில் லட்சியத்தோடு வாழும் பலர்) அப்படீன்னு வேற பாதையில் போய் சாதா பி.இ வாழ்நாள் லட்சியமாக கருதுவதை சில பல வருடங்களில் கடப்போரும் உண்டு.. இது குறித்து உங்கள பார்வை என்ன?

மறுமொழி எண்
ராம் said...

முகமூடி அவர்களே..நீங்கள் எத்தனை தடவை உங்களுக்காக எம.பி.பி.எஸ் மருத்துவர்களிடம் சென்று இருக்கீறீர்கள்?.. சிறப்பு மருத்துவரிடம் தான் சென்று பரிசோதிக்கவேண்டும் என்று சென்றதுண்டா இல்லையா ? தற்போதைய சூழ்நிலையில் முதுகலை மருத்துவம் படிக்காமல் ஒரு மருத்துவர் தொழில் செய்வது என்பது சாத்தியம் இல்லை..

மறுமொழி எண்
ராம் said...

பி.இ மற்றும் degree படித்தவர்களுக்கு ph.d, IAS என்பது ஒரு option.. ஆனால் மருத்துவம் படிப்பவர்களுக்கு முதுகலை என்பது தேவை மற்றும் கட்டாயம் ..

மறுமொழி எண்
Anonymous said...

// நீங்கள் எத்தனை தடவை உங்களுக்காக எம.பி.பி.எஸ் மருத்துவர்களிடம் சென்று இருக்கீறீர்கள்? //

நிறைய தடவை.. இன்னமும் புறநகரங்களிலும் கிராமங்களிலும் எம்.டியா எம்.பி.பி.எஸ் ஆ என்பதையும் விட கைராசி என்பதற்குத்தான் முக்கியத்துவம் அதிகம். ஆனால் கைராசி/பெயர் பற்றி தெரியாத போது முதுகலைக்கு முக்கியத்துவம் என்பது ஒத்துக்கொள்ளக்கூடியதே.

//பி.இ மற்றும் degree படித்தவர்களுக்கு ph.d, IAS என்பது ஒரு option.. ஆனால் மருத்துவம் படிப்பவர்களுக்கு முதுகலை என்பது தேவை மற்றும் கட்டாயம் ..//

தேவை/கட்டாயம் என்பது சொந்த ஆர்வத்திற்க்காக மட்டுமா அல்லது வருமானம்/மரியாதை பிரதானமா? பி.இ யோடு ஒப்பிட்டால் எம்.பி.பி.எஸ்க்கு கொடுக்கும் காலமும் உழைப்பும் மிகவும் கொடுமை எனும் தொனி தெரியும் வகையில் நிறைய பேரின் எண்ணத்திற்காகவே இதை குறிப்பிடுகிறேன்.. அட, எம்.பி.பி.எஸ் முடித்தவுடன் வருமானத்துக்கு குறைந்தபட்ச கியாரண்டி உண்டு.. பி.இ படித்து வெறும் 800 ரூபாயில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகளை பற்றி உங்களுக்கு தெரியுமா? கிராமப்புற வாய்ப்பில் அரசாங்கம் மருத்துவர்களுக்கு தரும் படி எவ்வளவு என்று தெரியவில்லை. ஆனால் அரசாங்க அலுவலகங்களில் அப்ரண்டிஸ்களுக்கு தரும் படி ரூ.1120 மட்டுமே (என்ன, இந்த வருசம் ஒரு அஞ்சி பத்து மேல பாத்து போட்டு கொடுப்பாங்களா இருக்கும்) அவர்களுக்கு எதிர்கால எதற்கும் உத்தரவாதம் இல்லை. இருந்தும் தரமணியில் இருக்கும் அலுவலகத்தில் எப்போது அப்புரண்டிஸ் பதவி(?!)க்கு விண்ணப்பம் காத்திருப்பு பட்டியல்தான்.

’வேலை தேடிக்கொண்டிருக்கிறேன்’ என்பதே ஒரே தகுதியாக இருக்கட்டும். எம்.பி.பி.எஸ் முடித்துவிட்டு பெண் கேட்டு (கல்யாணத்துக்குத்தான்) பாருங்கள். பி.இ. முடித்துவிட்டும் பாருங்கள். அப்போ தெரியும் மரியாதை. எல்லாம் ”தமிழ் எம்.ஏ”வா மாறி பி.பி.ஓ வை மட்டும் வைத்து பி.இ ஐ எடை போடாதீர்கள். உலகம் ரொம்ப பெரிசு.

மறுமொழி எண்
Ravi said...

//1991ல் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த ஒருவர் இன்று அரசு பணியில் பெரும் ஊதியம் (ஆறாவது ஊதிய குழுவின் பரிந்துரையின் படி) அனைத்து படிகளையும் சேர்த்து பிடித்தம் இல்லாமல் மாதம் ரூபாய் 33000 முதல் 35000 வரை. கையில் கிடைப்பது மாதம் 28000-30000 வரை.//
இது மிகப்பெரிய அநியாயம். இந்த வயதிற்கு, மற்றவரெல்லாம் வாழ்க்கையில் இந்த வயதில் settle ஆகி இருப்பார்கள். இந்த படிப்பிற்கு நீங்கள் கொடுக்கும் விலை மிக அதிகம்.

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//இதில் ஒவ்வொரு போட்டித் தேர்வுகளிலும் இடைவெளியில்லாமல் தேர்ச்சி பெற்றால் இந்தக் கணக்கு..,

சில போட்டித்தேர்வுகளுக்கு கூடுதல் ஆண்டுகள் எடுத்தால் இன்னும் வயதாகிவிடும்//

:( :(

சரியாக சொன்னீர்கள்

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//குறை ஒன்றும் இல்லை !!! said...
ஏங்க.. இந்த விபரம் எல்லாம் அந்த படிப்ப எடுக்கிறதுக்கு முன்னால தெரியாதா?//

அனைவருக்கும் தெரியுமா என்பது சந்தேகமே

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//உண்மையான ஆர்வத்துடன்,
தகுதியுடன் பிள்ளைகள் இருந்தால் அதே பெற்றவர்களால் தடை செய்ய இயலவில்லை.//

:) :)

//என் மகன் இந்த வருடம் எம்பிபிஎஸ் சேர்ந்துள்ளான்:-)//

வாழ்த்துக்கள் :) :)

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ஐயோ பாவம் மருத்துவர்கள்..!

எப்படித்தான் இப்படி கட்டை, கட்டை புத்தகத்தை உருட்டுகடியோ இல்லாட்டி குருட்டுகடியோ ஏதோ ஒண்ணு படிக்குறாங்கன்னே தெரியலை..

பாவம்..!//

ரொம்ப நாள் கழித்து அண்ணன் என் கருத்துடன் இசைந்து மறுமொழி இட்டுள்ளார்

நன்றி அண்ணா

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//அப்போ 2017 முதல் 2020 வரை அவங்க செய்யறதுக்கு பேர் என்னங்க ? அது சேவை, இது தொழில்னு கடி ஜோக் அடிச்சிடாதீங்க :)//

அது சேவை
இது தொழில்

இது தான் உண்மை
இதில் எந்த கடியும் இல்லை சார்

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//அப்போ வெறும் எம்.பி.பி.எஸ் மட்டுமே போதும்னு இருக்கறவங்க பண்றதுக்கு பேரு?//

1960 அது தொழில்

இன்றைய தேதியில் மருத்துவ இளங்கலை மட்டும் படித்த மருத்துவர்கள் மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது என்பது தான் நிதர்சணம்

மறுமொழி எண்
புருனோ Bruno said...

// வெறும் பி.இ மட்டும் படிச்சிட்டு தட்டு தடுமாறி ரிட்டையர் ஆகும்போது ஒரு ஏ.டி.இ அல்லது அதிகபட்சமா சி.இ ஆகிறவங்க உண்டு//

சி.இ என்பது உங்களுக்கு அவ்வளவு இளக்காரமான பதவியா

என்ன கொடுமை சார் இது

மருத்துவம் பற்றி தான் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறீர்கள் என்று நினைத்தேன்

பொறியியல் துறை பற்றி கூட தெரியாதா


--

பொதுப்பணித்துறையில் தமிழகத்தில் எத்தனை சி.இ (chief engineer) உள்ளனர் தெரியுமா ??

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//ஆனா முதுகலை மருத்துவர்கள் மாதிரியே இன்னும் கொஞ்ச வருசம் ஆனாலும் பரவாயில்லைன்னு எம்.பி.ஏ {அல்லது} எம்.எஸ்/எம்.இ, எம்.ஃபில், பி.எச்.டி (இது - இடையில் மூணு வருசம் தொழில் நடத்தி பிறகு ஆகும் - முதுகலை டாக்டர் படிப்பை விட அதிக காலம் பிடிக்கும்)//

அந்த படிப்பு எல்லாம் இருக்கிறது என்பதை நான் மறுக்க வில்லை. ஆனால் அது படித்தால் மட்டும் தான் வேலை கிடைக்கிறது என்ற நிலை இன்னமும் பொறியியல் துறையில் வரவில்லை

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//{அல்லது} இ.ஆ.ப (பல முறை கோட் அடித்து பிறகு பாஸ் செய்வதற்கென்றே முழு முனைப்போடு சென்னை புறநகரில் லட்சியத்தோடு வாழும் பலர்) அப்படீன்னு வேற பாதையில் போய் சாதா பி.இ வாழ்நாள் லட்சியமாக கருதுவதை சில பல வருடங்களில் கடப்போரும் உண்டு.. இது குறித்து உங்கள பார்வை என்ன?//

இ.ஆ.ப குறித்து ஏற்கனவே எழுதிவிட்டேன்

நீங்கள் மறுமொழி எழுதுவதற்கு முன்னர் இடுகையை முழுவதும் வாசிப்பதில்லையா ??

1991ல் ஒருவர் மருத்துவக்கல்லூரியில் சேராமல் இளங்கலை படித்து தேர்வெழுதி இ.ஆ.பவில் சேர்ந்திருந்தால் அவர் பல வருடங்களுக்கு முன்னரே மாவட்ட ஆட்சித்தலைவராகி இருப்பார். இன்று எதாவது ஒரு துறையின் செயலராகி இருப்பார் - அரசு செயலரின் ஊதியம் / பிற வசதிகள் எவ்வளவு என்று தெரியும் என்று நினைக்கிறேன்

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//முகமூடி அவர்களே..நீங்கள் எத்தனை தடவை உங்களுக்காக எம.பி.பி.எஸ் மருத்துவர்களிடம் சென்று இருக்கீறீர்கள்?.. சிறப்பு மருத்துவரிடம் தான் சென்று பரிசோதிக்கவேண்டும் என்று சென்றதுண்டா இல்லையா ? தற்போதைய சூழ்நிலையில் முதுகலை மருத்துவம் படிக்காமல் ஒரு மருத்துவர் தொழில் செய்வது என்பது சாத்தியம் இல்லை..//

//பி.இ மற்றும் degree படித்தவர்களுக்கு ph.d, IAS என்பது ஒரு option.. ஆனால் மருத்துவம் படிப்பவர்களுக்கு முதுகலை என்பது தேவை மற்றும் கட்டாயம் ..//
வழிமொழிகிறேன்

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//நிறைய தடவை.. இன்னமும் புறநகரங்களிலும் கிராமங்களிலும் எம்.டியா எம்.பி.பி.எஸ் ஆ என்பதையும் விட கைராசி என்பதற்குத்தான் முக்கியத்துவம் அதிகம். //

நீங்கள் முகமூடி என்றால் உங்களுக்கான கேள்வி -- லாஸ் ஏஞ்சல்ஸ் கிராமமா ??

//ஆனால் கைராசி/பெயர் பற்றி தெரியாத போது முதுகலைக்கு முக்கியத்துவம் என்பது ஒத்துக்கொள்ளக்கூடியதே.//

கைராசி என்ற பெயரில் கிராமங்களில் போலி மருத்துவர்கள் வைத்தியம் பார்ப்பதும், அங்கு சென்று மருத்துவம் பார்க்க ஆரம்பிக்கும் மருத்துவர்களை மிரட்டுவது, சாளர கண்ணாடியை உடைப்பது போன்ற மிரட்டல் வேலைகள் எல்லாம் நடப்பது உங்களுக்கு தெரியுமா

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//தேவை/கட்டாயம் என்பது சொந்த ஆர்வத்திற்க்காக மட்டுமா அல்லது வருமானம்/மரியாதை பிரதானமா? //

இன்றைய காலக்கட்டத்தில் வருமானம் இல்லாவிட்டால் மரியாதை கிடைக்கும் வாய்ப்பு மிக குறைவுதானே

மறுமொழி எண்
புருனோ Bruno said...

// பி.இ யோடு ஒப்பிட்டால் எம்.பி.பி.எஸ்க்கு கொடுக்கும் காலமும் உழைப்பும் மிகவும் கொடுமை எனும் தொனி தெரியும் வகையில் நிறைய பேரின் எண்ணத்திற்காகவே இதை குறிப்பிடுகிறேன்..//

அது உண்மைதானே

எம்.பி.பி.எஸ்க்கு கொடுக்கும் காலமும் உழைப்பும் மிகவும் கொடுமை என்பதில் உங்களுக்கு என்ன சந்தேகம்

4 வருடத்தை விட 12 வருடம் அதிகமில்லயா

என்ன கொடுமை சார் இது !!

மறுமொழி எண்
புருனோ Bruno said...

// அட, எம்.பி.பி.எஸ் முடித்தவுடன் வருமானத்துக்கு குறைந்தபட்ச கியாரண்டி உண்டு..//

அப்படியா

இந்த வருடம் எம்.பி.பி.எஸ் படித்து முடித்த ஒரு மருத்துவருக்கு உங்களால் வேலை வாங்கி தர முடியுமா ?? மாதம் எவ்வளவு சம்பளத்தில் வேலை வாங்கி தர முடியுமா ??

இல்லை என்றால் எதை வைத்து உத்திரவாதம் (கியாரண்டி) உள்ளது என்று கூறினீர்கள்

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//. பி.இ படித்து வெறும் 800 ரூபாயில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகளை பற்றி உங்களுக்கு தெரியுமா?//

பி.இ. படித்து விட்டு மாதம் 800 ரூபாயில் வேலை செய்யும் ஒரு பட்டதாரி பற்றி கூட எனக்கு தெரியாது

தெரிந்தால் நீங்கள் அவர் என்ன வேலை பார்க்கிறார் என்று ஆதாரத்துடன் கூறுங்கள்

தெரிந்து கொள்கிறோம்

--

அப்படி உண்மையில் இருந்தால் அது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய விஷயம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்

--

நீங்கள் சொன்ன 800 ரூபாய் ஒரு மாதத்திற்காக, அல்லது ஒரு நாளிற்கா அல்லது ஒரு மணி நேரத்திற்கா

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//கிராமப்புற வாய்ப்பில் அரசாங்கம் மருத்துவர்களுக்கு தரும் படி எவ்வளவு என்று தெரியவில்லை//

மாத வருமானம் (ஆறாவது ஊதியக்குழுவின் படி) சுமார் 26,000 முதல் 28,000

மறுமொழி எண்
புருனோ Bruno said...

// ஆனால் அரசாங்க அலுவலகங்களில் அப்ரண்டிஸ்களுக்கு தரும் படி ரூ.1120 மட்டுமே //

இது இன்றைய நிலவரமா அல்லது 1973 நிலவரமா

இது என்ன வகை தொழில்

அவர்களின் வேலை நேரம் என்ன

போன்ற விபரங்களை தெரிவிக்க முடியுமா

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//’வேலை தேடிக்கொண்டிருக்கிறேன்’ என்பதே ஒரே தகுதியாக இருக்கட்டும். எம்.பி.பி.எஸ் முடித்துவிட்டு பெண் கேட்டு (கல்யாணத்துக்குத்தான்) பாருங்கள். பி.இ. முடித்துவிட்டும் பாருங்கள். அப்போ தெரியும் மரியாதை. //

அந்த மரியாதைக்கு காரணம் பி.இ யோடு ஒப்பிட்டால் எம்.பி.பி.எஸ்க்கு கொடுக்கும் காலமும் உழைப்பும் மிகவும் கொடுமை என்பதால்தான் என்பது தான் பொது கருத்து

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//. இந்த படிப்பிற்கு நீங்கள் கொடுக்கும் விலை மிக அதிகம்.//

ரவி சார்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

மறுமொழி எண்
முகமூடி said...

// 1991ல் ஒருவர் மருத்துவக்கல்லூரியில் சேராமல் இளங்கலை படித்து தேர்வெழுதி இ.ஆ.பவில் சேர்ந்திருந்தால் அவர் பல வருடங்களுக்கு முன்னரே மாவட்ட ஆட்சித்தலைவராகி இருப்பார். இன்று எதாவது ஒரு துறையின் செயலராகி இருப்பார் //

1991ல் ஒருவர் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து இளங்கலை மருத்துவம் முடித்தவுடன் இ.ஆ.பவில் சேர்ந்திருந்தால் - இ.ஆ.பவிற்கு வெறும் இளங்கலை போதும் - அவர் மற்ற இளங்கலை இ.ஆ.பவைவிட வெறும் இரு வருடங்களே சீனியாரிட்டி இழக்கிறார் என்பதையும் நினைவில் வையுங்கள்.

// அது சேவை இது தொழில் இது தான் உண்மை //

2017-2020 காலகட்டம் - கிராமத்தில் ஆ.சு.மையத்தில் ஒரு முழுமையான டாக்டராக பணிபுரிவதை - உங்கள் கிராம அனுபவங்கள், உள்ளூர் கோஷ்டி அரசியல் மேலாண்மை பதிவுகள் நான் வெகுவாக ரசித்தவை - எல்லாம் எப்படி படிப்பதற்கான காலகட்டத்தில் 'கணக்கு' செய்துகொள்கிறீர்கள் என்ற எண்ணத்திலேயே என் கேள்விகள் அமைந்தன. மீண்டும் உங்கள் பதிவை "நன்றாக" படித்ததில் ஆ.சு.மை "கடமை" முதுகலைக்கு ஒரு கட்டாய-முன்-தேவை என்பதாக புரிந்து கொள்கிறேன். (ஒரு சைடுகிக் - முழுமையாக படித்தால்தான் பின்னூட்டம் போட வேண்டும் என்ற கொள்கையாலேயே இதுவரை ட்ரூதமிழன் பதிவில் ஒரு பின்னூட்டமும் இட்டதில்லை)

இ.இ என்பதற்கு பதில் சி.இ என்று அடித்துவிட்டேன். பெரும்பாலான 'வெறும்' பி.இக்களின் அதிகபட்ச பயணம் இ.இ மட்டுமே. அவர் வாழ்நாளின் மொத்த சம்பாத்தியம் (மட்டும்) மருத்துவத்துக்கு வெறும் ஆறே வருடங்கள் அதிக காலம் செலவிட்ட மருத்துவரின் மொத்த சம்பாத்தியத்தோடு ஒப்பிடக்கூடிய தகுதியுடையதா என்பதை உங்கள் ஊகத்திற்கே விடுகிறேன்.

லாஸ் ஏஞ்சலீஸ் மாநகரம்தான். (ப்ளாக்கர் ஐடியில் லாகின் செய்தும் அது அனானிமோஸாக காண்பிக்கிறது) நான் குறிப்பிட்டது குறு/சிறு நகரங்கள் மற்றும் கிராமங்கள் குறித்து. என் கல்லூரி பருவம் வரை வாழ்ந்தது ஒரு (பின்தங்கிய) மாவட்ட தலைநகரத்தில். அங்கே மிகப்பிரபல குழந்தைகள் மருந்துவரும் மிகப்பிரபல பெரியவர்கள் மருத்துவரும் வெறும் MBBSதான். அனைத்து முதுகலை மருத்துவரையும் விட அவர்களுக்கு கூட்டம் அதிகம். நான் மேல்நிலை பள்ளி போனபோதுதான் இருவரும் "லீவ் விட்டுவிட்டு" கு.ம DCHம் பெ.ம MDம் கூட சேர்த்துக்கொண்டார்கள். அவர்கள் படிக்க எடுத்த விடுமுறை முடிந்து வந்தும் மூன்றே மாதத்தில் அவர்கள் பழைய கஸ்டமர்கள் மீண்டும் அவர்களிடம். காரணம் மக்களுக்கு அவர்கள் டிகிரியை விட ராசியே முக்கியமாக பட்டதுதான். அவர்கள் முதுகலை முடித்தும் மக்கள் அவர்களிடம் கண்ட ஒரே மாற்றம் கன்சல்டிங் பீஸ் 25/30லிருந்து 50/100ஆக ஆனதுதான் (MD அந்த காலத்திலேயே 1 கோடிக்கு நாஃப்டா லோன் எடுத்து ஐந்து அடுக்கு மருத்துவமனை கட்டி அனைவரையும் மூக்கில் விரல் வைக்க செய்தார். இன்று அவரின் இரு மகன்களும் இளங்கலை மருத்துவம் முடிக்கும் தருவாயில்)

என் நெருங்கிய நண்பர்கள் சிலர் மருத்துவமும் பலர் இஞ்சினியரிங்கும் சேர்ந்தோம். மருத்துவம் கிடைத்தாலும் இஞ்சினியரிங்தான் என்ற வகையறா என்னையும் சேர்த்து எங்கள் கூட்டத்தில் இருந்தது. சிலர் அப்படி மருத்துவம் கிடைத்தும் இஞ்சினியரிங் சேர்ந்தார்கள். அவர்கள் ஆர்வம் அப்படி. மருத்துவம்தான் என்று ஒற்றைக்காலில் இருந்து சிலர் சேர்ந்தார்கள். அவர்கள் ஆர்வம் அப்படி. ஆர்வம் என்று நான் சொல்வது படிக்கும் ஆசையை மட்டும் அல்ல. எப்படிப்பட்ட வாழ்க்கை முறை, எவ்வகை அந்தஸ்து, எவ்வளவு பணம் என்று எல்லாமும்தான்.

ஆகவே இதன் மூலம் ஊர் மக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் --- என்னதான் மருத்துவர்கள் அவர்கள் படிப்பு காலம் குறித்து தற்போதைக்கு சலித்துக்கொண்டாலும் தொலைநோக்கு திட்டத்தின்படி வெறும் ஆறு வருட முதலீட்டில்......... (இதுக்குத்தான் பதிவு பக்கம் ஒதுங்காம இருக்கிறது. ட்ரூதமிழனுக்கே டார்ச் அடிச்சிடுவோம் போலருக்குடா யப்பா)

**

// என் மகன் இந்த வருடம் எம்பிபிஎஸ் சேர்ந்துள்ளான் // இப்பத்தான் பார்த்தேன். கங்ராஜுலேஷன்ஸ் உஷா ஆண்ட்டி. உங்கள டாக்டர் அம்மான்னு (தளபதி படத்துல கலெக்டர் முயற்சியில போர் தண்ணி பீரிட்டு அடிக்கும்போது அந்த ஊர் மக்கள் எல்லாம் ஸ்ரீவித்யாவ நெகிழ்வா கூப்பிடுவாங்களே, அந்த மாதிரி) கூப்பிடலாம்னு ஆசைதான். அதுக்குத்தான் இன்னும் 22 வருசமிருக்கே :))

மறுமொழி எண்
எம்.எம்.அப்துல்லா said...

//உங்கள டாக்டர் அம்மான்னு (தளபதி படத்துல கலெக்டர் முயற்சியில போர் தண்ணி பீரிட்டு அடிக்கும்போது அந்த ஊர் மக்கள் எல்லாம் ஸ்ரீவித்யாவ நெகிழ்வா கூப்பிடுவாங்களே, அந்த மாதிரி) கூப்பிடலாம்னு ஆசைதான். அதுக்குத்தான் இன்னும் 22 வருசமிருக்கே :))

//

ஏன்ணே??? இன்னும் 6 வருஷத்திலேயே டாக்டர் அம்மானு கூப்பிடலாம். பெரிய டாக்டர் அம்மான்னு கூப்பிடதான் 22 வருஷம் ஆகும் :)

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//1991ல் ஒருவர் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து இளங்கலை மருத்துவம் முடித்தவுடன் இ.ஆ.பவில் சேர்ந்திருந்தால் - இ.ஆ.பவிற்கு வெறும் இளங்கலை போதும் - அவர் மற்ற இளங்கலை இ.ஆ.பவைவிட வெறும் இரு வருடங்களே சீனியாரிட்டி இழக்கிறார் என்பதையும் நினைவில் வையுங்கள்.//

நினைவில் வைத்தாகிவிட்டது சார் :)

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//ஆ.சு.மை "கடமை" முதுகலைக்கு ஒரு கட்டாய-முன்-தேவை என்பதாக புரிந்து கொள்கிறேன். //

ஆரம்ப சுகாதார நிலைய பணி என்பது அரசு வேலையில் இருந்தால் மட்டுமே ஒரு கட்டாய முன் தேவை.

அரசு வேலை என்பது நடுத்தர வர்க்கத்திலிருந்து மருத்துவம் படிப்பவர்களுக்கு மட்டுமே முன் தேவை.

ஆக ஆரம்ப சுகாதார நிலைய பணி என்பது நடுத்தர வர்க்கத்திலிருந்து படிப்பவர்களுக்கே முதுகலைக்கு முன்தேவை

வசதியான குடும்பத்திலிருந்து மருத்துவம் படிப்பவர்களின் நிலை வேறு. அவர்களின் இலக்குகள் வேறு. அவர்களின் பாதை வேறு

இதைத்தான் மேலே கூறியுள்ளது மத்திய தர குடும்பத்திலிருந்து மருத்துவம் படிக்கும் ஒருவரின் கால விபரம். அரசு பணியில் சேராமல் மேற்படிப்பு உடன் படித்தால் இதில் 3 முதல் 4 வருடங்கள் வரை குறையலாம். அவ்வளவு தான்
என்று எழுதியிருந்தேன். மேலும் விபரங்களுக்கு http://www.payanangal.in/2008/04/150.html படிக்க வேண்டுகிறேன்

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//(ஒரு சைடுகிக் - முழுமையாக படித்தால்தான் பின்னூட்டம் போட வேண்டும் என்ற கொள்கையாலேயே இதுவரை ட்ரூதமிழன் பதிவில் ஒரு பின்னூட்டமும் இட்டதில்லை)//

:) :)

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//இ.இ என்பதற்கு பதில் சி.இ என்று அடித்துவிட்டேன். //

அது தான் குழப்பம் சார் !!!

உங்களை முகமூடி என்பதற்கு பதில் எல்.ஏ.ஆர் என்றால் விட்டு விடுவீர்களா !!!

சண்டைக்கு வருவீர்கள் அல்லவா :) :) :)

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//பெரும்பாலான 'வெறும்' பி.இக்களின் அதிகபட்ச பயணம் இ.இ மட்டுமே.//

அவர் வெறும் பி.இ ஆக இருந்தால் சி.இ ஆக முடியாதா ????

மறுமொழி எண்
புருனோ Bruno said...

// அவர் வாழ்நாளின் மொத்த சம்பாத்தியம் (மட்டும்) மருத்துவத்துக்கு வெறும் ஆறே வருடங்கள் அதிக காலம் செலவிட்ட மருத்துவரின் மொத்த சம்பாத்தியத்தோடு ஒப்பிடக்கூடிய தகுதியுடையதா என்பதை உங்கள் ஊகத்திற்கே விடுகிறேன் //

17 அல்லது 18 வயதில் கல்லூரியில் சேர்ந்து ஒரு 22 அல்லது 23 வயதில் கேம்பஸ் நேர்காணலில் தேர்வாகும் ஒரு பொறியாளர் பணிபுரிவது 35 வருடங்கள்

ஆனால் அதே 17 அல்லது 18 வயதில் கல்லூரியில் சேரும் மருத்துவர் தொழிலை ஆரம்பிப்பது 40 வயதில் தான். பணிபுரிவது 15 முதல் 20 வருடங்களே

கூட்டி கழித்து பாருங்கள் !! கணக்கு சரியா வரும் (அண்ணாமலை ராதாரவி பாணியில் வாசித்துக்கொள்ளவும்)

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//அங்கே மிகப்பிரபல குழந்தைகள் மருந்துவரும் மிகப்பிரபல பெரியவர்கள் மருத்துவரும் வெறும் MBBSதான்//

எந்த வருடம் சார் !!

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//அவர்கள் ஆர்வம் அப்படி. ஆர்வம் என்று நான் சொல்வது படிக்கும் ஆசையை மட்டும் அல்ல. எப்படிப்பட்ட வாழ்க்கை முறை, எவ்வகை அந்தஸ்து, எவ்வளவு பணம் என்று எல்லாமும்தான்.
//

வழிமொழிகிறேன் !!

மறுமொழி எண்
Anonymous said...

http://kgjawarlal.wordpress.com/2009/08/19/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//கங்ராஜுலேஷன்ஸ் உஷா ஆண்ட்டி. உங்கள டாக்டர் அம்மான்னு (தளபதி படத்துல கலெக்டர் முயற்சியில போர் தண்ணி பீரிட்டு அடிக்கும்போது அந்த ஊர் மக்கள் எல்லாம் ஸ்ரீவித்யாவ நெகிழ்வா கூப்பிடுவாங்களே, அந்த மாதிரி) கூப்பிடலாம்னு ஆசைதான். அதுக்குத்தான் இன்னும் 22 வருசமிருக்கே :)) //

இல்லை சார். 6 வருடம் தான் !!!

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//நல்ல போஸ்ட். டென்டிஸ்ட் ஆவது பரவாயில்லையா?//

இதற்கு நமது முகமூடி சாரின் கருத்து தான் பதில்

ஆர்வம் என்று நான் சொல்வது படிக்கும் ஆசையை மட்டும் அல்ல. எப்படிப்பட்ட வாழ்க்கை முறை, எவ்வகை அந்தஸ்து, எவ்வளவு பணம் என்று எல்லாமும்தான்.

எந்த துறை என்றாலும் அதில் சாதகங்களும் இருக்கின்றன, பாதகங்களும் இருக்கின்றன

அவற்றை (பாதங்களையும்) தெரிந்து கொண்டு முடிவெடுப்பது நலம்

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//ஏன்ணே??? இன்னும் 6 வருஷத்திலேயே டாக்டர் அம்மானு கூப்பிடலாம். பெரிய டாக்டர் அம்மான்னு கூப்பிடதான் 22 வருஷம் ஆகும் :)
//

நன்றி அண்ணா. :) :)

மறுமொழி எண்
முகமூடி said...

ஒரு தகவலுக்காக -

பொறியியல் அப்ரண்டீஸ் குறித்த சுட்டி இதோ : Apprenticeship Training Scheme பொறியியல் பட்டதாரிகளுக்கான

படி கடந்த பத்தாண்டுகளில் நிறைய உயர்த்தியுள்ளார்கள். ரூ.1120 இப்போது ரூ.2600 ஆகியிருக்கிறது.

*

monsterindia தளத்தில் 0-2 வருட அனுபவம், பொறியியல் படிப்பிற்கான வேலை சம்பளத்துடன் என்று தேடியதில் கிடைத்த ஒரு சுட்டி நேரம் கிடைத்தால் நீங்களும் தேடலாம்.
Two years MBA / PGDM in HR/Finance/Marketing & Sales Management from reputed University / Institution. (OR)
Four year BE / B Tech in Mechanical / Production Engineering/ Electrical Engineering from reputed University / Institution
தகுதிக்கு சம்பளம் மாதம் ரூ.6250 (0.70 - 0.80 lacs என்பது வருட சம்பளமாக கொள்கிறேன். ட்ரெயினிக்கு மாதம் அவ்வளவு தருகிறார்கள் என்றால் அந்நிறுவனத்தில் சேர கண்டிப்பாக நான்

முயற்சிப்பேன்). இது விளம்பரம் கொடுத்து தேடும் அளவு வசதியுள்ள ஒரு நிறுவனத்தில்.. அப்படியென்றால் சிறிய நிறுவனங்களில் எவ்வளவு இருக்கும் என்று நீங்களே விசாரிக்கலாம். கோவையில்

ஏகப்பட்ட நிறுவனங்கள் உள்ளன. அவை பெரும்பாலும் டிப்ளமா படித்தவர்களையே வேலைக்கு எடுக்கும். இருப்பினும் கணக்கு காட்டுவதற்காக ஒன்றிரண்டு பொறியாளர்கள் இருப்பார்கள். அவர்கள்

சம்பளம் என்ன என்று கேட்டு பாருங்கள்.

ரூ.800க்கு வேலை என்பது என் கற்பனை அல்ல. இரண்டு வருடங்களுக்கு முன் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஒரு இயந்திரவியல் நிறுவனத்தில் வேலை பார்த்த என் நண்பனின் தம்பி - ஒரு

பட்டதாரி - வாங்கிய சம்பளம். அவன் சொன்னது - ”கம்யூட்டர் படிக்க வசதி/இஷ்டமில்லை. வீட்டில் “எக்ஸ்பீரியன்ஸுக்காக” சும்மா இருக்கலாம். அதற்கு பதில் தொழில் கற்றுக்கொள்ளலாமே என்று இதில் சேர்ந்தேன். இவ்வளவுதான் சம்பளம் தர முடியும் அதற்கு டிப்ளமாவே போதும் என்று என்னை சேர்க்க அவர்கள் தயாரில்லை. நாந்தான் அடம் பிடித்து சேர்ந்தேன். ஓரிரு வருடங்கள் தொழில் கற்று நானே லோன் கீன் போட்டு ஒரு பட்டறை ஆரம்பிக்கலாம். அல்லது அதற்குள் “இரண்டு மூன்று” வருட அனுபவம் கிடைத்திருக்கும், அதை வைத்து கொஞ்சம் கதையும் சேர்த்து வேறு

கம்பெனிக்கு மாறலாம்”

தமிழ்நாட்டில் 250 பொறியியல் கல்லூரிகள் இருப்பதாக அண்ணா பல்கலைக்கழக தளம் சொல்கிறது. சராசரியாக 400 பேர் ஒரு கல்லூரியில் படிப்பதாக கொண்டால் ஒரு வருடம் வெளிவரும் பட்டதாரிகள் 1 லட்சம். இதில் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் வேலை கிடைத்தவர்கள் பாக்கியசாலிகள். மற்ற அனைவரும் போன சிலவருடங்களாக வேலை தேடிக்கொண்டிருப்பவர்கள், வெளி மாநிலங்களிலிருந்து - தி.நகர்/திருவல்லிக்கேணி மேன்ஷன்களில் இருக்கும் மணவாடுகள் எண்ணிக்கை மாத்திரம் பல ஆயிரங்கள் - வந்தவர்கள், குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்யும் டிப்ளமாவே போது பட்டதாரி தேவையில்லை என்று இருக்கும் நிறுவங்கள் என்று பல ப்ரச்னைகளின் நடுவே வாழும் ஐ.டி தவிர்த்த பொறியிலலார்களின் சராசரி சம்பள விகிதம் பொதுஜனத்துக்கு தெரியவே தெரியாது.

*

சரி விடுங்க.. நாம பேசி ஆகப்போறது என்ன.. இந்த கார்ட்டூன பாத்துட்டு இந்த நாள் இனிய நாள்னு வேலைய பார்ப்போம்

மறுமொழி எண்
புருனோ Bruno said...

முகமூடி சார்

சுட்டிகளுக்கு நன்றி

//வெளி மாநிலங்களிலிருந்து - தி.நகர்/திருவல்லிக்கேணி மேன்ஷன்களில் இருக்கும் மணவாடுகள் எண்ணிக்கை மாத்திரம் பல ஆயிரங்கள் - வந்தவர்கள், குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்யும் டிப்ளமாவே போது பட்டதாரி தேவையில்லை என்று இருக்கும் நிறுவங்கள் என்று பல ப்ரச்னைகளின் நடுவே வாழும் ஐ.டி தவிர்த்த பொறியிலலார்களின் சராசரி சம்பள விகிதம் பொதுஜனத்துக்கு தெரியவே தெரியாது.//

உண்மைதான். இதை நான் கூட பார்த்திருக்கிறேன்.

மறுமொழி எண்
புருனோ Bruno said...

// ஐ.டி தவிர்த்த பொறியிலலார்களின் சராசரி சம்பள விகிதம் பொதுஜனத்துக்கு தெரியவே தெரியாது.//

எப்படி மேற்படிப்பு படிக்க முடியாத, படிக்க பணவசதியோ குடும்ப சூழலோ இடம் கொடுக்காத மருத்துவர்களின் கஷ்டங்கள் பொது ஜனங்களுக்கு தெரிவதில்லையோ அது போலவேத்தான் ஐ.டி தவிர்த்த பொறியிலலார்களின் சராசரி சம்பள விகிதம் பொதுஜனத்திற்கு தெரிவதில்லை !!!

மறுமொழி எண்
ராம் said...

Blogger புருனோ Bruno said...

// ஐ.டி தவிர்த்த பொறியிலலார்களின் சராசரி சம்பள விகிதம் பொதுஜனத்துக்கு தெரியவே தெரியாது.//

//எப்படி மேற்படிப்பு படிக்க முடியாத, படிக்க பணவசதியோ குடும்ப சூழலோ இடம் கொடுக்காத மருத்துவர்களின் கஷ்டங்கள் பொது ஜனங்களுக்கு தெரிவதில்லையோ அது போலவேத்தான் ஐ.டி தவிர்த்த பொறியிலலார்களின் சராசரி சம்பள விகிதம் பொதுஜனத்திற்கு தெரிவதில்லை !!!//

மிகவும் நியாயமான விஷயம் .. இரு துறைகளிலும் சிரமப்படும் சகோதரர்கள் உள்ளனர்..கல்வோ என்பது வியாபாரமாகிவிட்ட இன்றைய சூழலில் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பொறியாளர்களும் மருத்துவர்களும் படிப்பை மட்டுமே மூலதனமாக கொண்டு வளர்வது என்பது குதிரைகொம்புதான்.. முகமூடி சார்.. நன்றி ப்ருனோ

மறுமொழி எண்
ராம் said...

மிகவும் நியாயமான விஷயம் .. இரு துறைகளிலும் சிரமப்படும் சகோதரர்கள் உள்ளனர்..கல்வோ என்பது வியாபாரமாகிவிட்ட இன்றைய சூழலில் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பொறியாளர்களும் மருத்துவர்களும் படிப்பை மட்டுமே மூலதனமாக கொண்டு வளர்வது என்பது குதிரைகொம்புதான்.. முகமூடி சார்.. நன்றி ப்ருனோ

மறுமொழி எண்
இலவசக்கொத்தனார் said...

ஐயா முகமூடியார் சமூகத்திற்கு

தாங்கள் அனுப்பிய சுட்டி மூலம் கார்ட்டூனைப் பார்த்தேன். நன்றி.

இப்பவும் நம்ம ஊரில் யானைச் சாணியை மிதித்தால் நல்லது என்று யானைச் சாணியை மிதித்துவிட்டுப் பாகனிடம் காசு கொடுக்கும் வழக்கம் உண்டு.

ஆக அந்த அம்மிணி பையில் தனது தொழிலின் முதலீட்டைத்தான் சேகரிக்கிறார். ஆகையால் அது வேலைக்காவாத வேலை என்ற எண்ணம் பொதுஜனங்களிடையே வந்துவிடக்கூடாது என்பதாலும், அதற்குக் காரணமாக தாங்கள் இருந்ததாக வரலாறு கூறிவிடக்கூடாது என்பதாலும் இந்த பீன்னூட் சாரி பின்னூட்டத்தைப் போடுகிறேன்.

வேண்டும் என்றென்றும் உங்கள் ஆசியும் ஆதரவும்.

இப்படிக்கு உண்மைத் தொண்டன்
இலவசக்கொத்தனார்

மறுமொழி எண்
இலவசக்கொத்தனார் said...

அதாவதுங்க பிகாம் படிக்கும் பொழுதே ஐசிடபிள்யூஏ படிக்க முடியும். ஒழுங்காப் படிச்சா பிகாம் முடிக்கிறதுக்கு முன்னாடி இதை முடிச்சுட்டு இளங்கலை பட்டம் வாங்கின கையோடு வேலைக்குப் போயிடலாம்.

ஆனால் இளங்கலை படிச்ச பிந்தான் சிஏ சேரவே முடியும். (அப்போ இருந்த ரூல்). அந்த எழவை வேற படிச்சு முடிக்க மூணு வருஷம் ஆயிடும். அப்போவும் பாஸாவான்னு சொல்லறதுக்கு இல்லை. பாஸாவறான்னே வெச்சுக்கலாம். இவன் போய் மொத ஆளு சேர்ந்த கம்பெனியில் சேர்ந்தா அதே அக்கவுண்டன்ஸி பிரிவில் இவன் அவனுக்கு மூணு வருஷம் ஜூனியர்.

ஒரே துறையில் இருக்கும் போதே இப்படி எல்லாம் ஆவுதுன்னா சம்பந்தமே இல்லாத டாக்டருக்கும் எஞ்சினியருக்கும் வித்தியாசம் இல்லாமல போவும். அது அது அப்படித்தான்னு போக வேண்டியதுதான்.

ஒருத்தன் நடுத்தர வர்க்கத்துக்காரன் பிஈ படிச்சுட்டு அரசாங்க வேலைதான் வேணும் அப்படின்னு உட்கார்ந்து கிட்டு இருந்தான்னா அவனுக்கு என்ன வேலை எப்போ கிடைக்கப் போவுது? நீங்க அரசாங்க மருத்துவர் ஆகியே ஆவணும் அப்படின்னு சொல்லறீங்களே அதனால கேட்கறேன்.

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//ஒருத்தன் நடுத்தர வர்க்கத்துக்காரன் பிஈ படிச்சுட்டு அரசாங்க வேலைதான் வேணும் அப்படின்னு உட்கார்ந்து கிட்டு இருந்தான்னா அவனுக்கு என்ன வேலை எப்போ கிடைக்கப் போவுது?//

பி.ஈ படிச்ச ஒருவனுக்கு தனியாரில் வேலை கிடைக்கிறது. எம்.ஈ என்பது optionதான் , necessity கிடையாது

மறுமொழி எண் 3, 31, 32 ஆகியவற்றை பாருங்களேன்

அனால் மருத்துவத்துறையில் இன்று மேல்படிப்பு necessity ஆகி விட்டது

--

மருத்துவ இளங்கலை படித்து முடித்து அதன் பிறகு முதுகலை படிக்க தேவை பணம். மேலும் முதுகலை படிக்கும் போது வேறு வருமானம் கிடையாது. அப்பொழுது குடும்பம் நடத்த வேண்டும். பெற்றோரை கவனிக்க வேண்டும். அதற்கு பணம் தேவையல்லவா.

அதனால் தான் நடுத்தர வர்க்கத்தினர் அரசு வேலையில் சேர்ந்து விட்டு அதன் பிறகு பட்ட மேற்படிப்பு படிக்கிறார்கள்

--

அதனால் தான் மேலே கூறியுள்ளது மத்திய தர குடும்பத்திலிருந்து மருத்துவம் படிக்கும் ஒருவரின் கால விபரம் என்றும் அரசு பணியில் சேராமல் மேற்படிப்பு உடன் படித்தால் இதில் 3 முதல் 4 வருடங்கள் வரை குறையலாம் என்று தெளிவாகவே கூறினேன்... பிறந்த நாள் கொண்டாட்டங்கள் எப்படி உள்ளன

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...