பூமியில் இருந்து பார்க்கும் போது ஒரு கிரகத்தின் பிண்ணனியில் எந்த நட்சத்திர கூட்டம் தெரிகிறதோ அதுவே அந்த கிரகம் இருக்கும் வீடு என்று அழைக்கப்படுகிறது
சந்திரன் :
சந்திரன் பூமியை ஒரு முறை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் காலம் சுமார் ஒரு மாதம்.
இன்று பூமியில் இருந்த பார்த்தால் சந்திரனின் பின்னால் ஒரு நட்சத்திர கூட்டம் தெரியும். மூன்று நாட்கள் கழித்து பார்த்தால் அடுத்த நட்சத்திர கூட்டம், அதன் பிறகு மூன்று நாட்கள் கழித்தால் அதற்கு அடுத்த நட்சத்திர கூட்டம். சந்திரனுக்கு பின்னால் எந்த நட்சத்திர கூட்டம் தெரிகிறதோ சந்திரன் அந்த வீட்டில் இருப்பதாக கூறுவார்கள்
சூரியன் :
பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் காலம் 1 ஆண்டு. ஆக இன்று சூரியனுக்கு பின்னால் எந்த நட்சத்திர கூட்டம் தெரிகிறதோ அந்த வீட்டில் சூரியன் இருப்பதாக ஜோதிடர்கள் கூறுகிறார்கள். ஒரு மாதம் கழித்து சூரியன் அடுத்த வீட்டிற்கு போய் விட்டதாக கூறுவார்கள்
சூரியன் இடம் மாறுவதில்லை. ஆனால் பூமி இடம் மாறுகிறது. நாம் பூமியில் இருப்பதால் பூமி இடம் மாறும் போது சூரியனுக்கு பின்னால் தெரியும் நட்சத்திரங்கள் மாறுகிறது. அவ்வளவு தான்
உதாரணமாக டெண்டுல்கர் சேப்பாக்கத்தில் ஆடிக்கொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர் பந்தை எதிர்கொள்ளும் நிலையில் இருக்கிறார். இப்பொழுது நடுவர் இடத்திலிருந்து பார்த்தால் அவர் வாலாஜா முனையில் இருக்கிறார். அதே நேரம் காப்பாளரின் இடத்திலிருந்து பார்த்தால் அவர் சேப்பாக்கம் முனையில் இருக்கிறார். சச்சின் என்னவோ அவரிடத்தில் இருந்தாலும், பார்ப்பவர்கள் எங்கிருந்து பார்க்கிறார்களோ அதை பொருத்து அவர் எங்கிருக்கிறார் என்பது மாறுகிறதல்லவா
அதே போல் சூரியன் ஒரே இடத்தில் இருந்தாலும், பூமி சூரியனை சுற்றி வருவதால், பூமி கடக நட்சத்திர கூட்டம் பக்கம் இருக்கும் போது சூரியன் மகர ராசியில் இருப்பதாக நமக்கு தெரியும். பூமி மகர நட்சத்திர கூட்டங்களின் பக்கம் திசையில் வரும் போது சூரியன் கடகராசியில் இருப்பதாக தோன்றும்
வியாழன் / குரு :
குரு என்றழைக்கப்படும் வியாழன் கிரகம் சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் நேரம் 12 ஆண்டுகள். ஆக ஒவ்வொரு வீட்டில் குரு பகவான் இருப்பது ஏறத்தாழ ஒரு ஆண்டு
சனி :
அதே போல் சனி எனப்படும் சனிகிரகம் ஒரு முறை சூரியனை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் நேரம் 30 ஆண்டுகள். ஆக ஒவ்வொரு வீட்டிலும் சனி பகவான் இருப்பது ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகள்.
சந்திர சுழற்சியின் விளைவுகள்
சந்திரன் பூமி சுற்றி வருவதால் ஏதாவது விளைவுகள் ஏற்படுகிறதா என்று கேட்டால், அதற்கான பதில் - ஆமாம்
இது குறித்து பக்கம் பக்கமாக ஆதாரங்கள் அடுக்கினாலும், இதை நம்பாதவர்கள் நம்பப்போவதில்லை. என்றாலும் சில கேள்விகள் மட்டுமே
- கடல்களில் அதிக நீர்மட்டம், மற்றும் குறைந்த நீர்மட்டம் (spring and neap tides) எதனால் ஏற்படுகிறது என்று தெரியுமா
- நண்டு என்று பிடிக்கப்பட்டாலும் அதில் சதை ஒரே அளவில் தான் இருக்குமா அல்லது அமாவாசை / பௌர்ணமி என்று சதை அளவு மாறுபடுமா
பூமி சூரியனை சுற்றி வருவதால் ஏற்படுவது பருவநிலைகள் என்று அனைவருக்குமே தெரிந்திருக்கும். மேமாதம் வெயிலடிப்பதும் டிசம்பர் மாதம் குளிரடிப்பதற்கும் இதுவே காரணம்.
குருவின் சுழற்சி
சூரிய மண்டலத்தின் மிக பெரிய கிரகங்களான குருவும், சனியும், சூரியனை சுற்றி வருவது பூமியில் பாதிப்புகளை ஏற்படுத்தகிறதா என்று சிறிது ஆராய்ந்து பார்த்தில் பல விஷயங்களை கண்டு பிடித்துள்ளார்கள்
மரங்களை வெட்டிய பின்னர் பார்த்திருக்கிறீர்களா. அதில் வளையம் வளையமாக இருக்கும் .இதை வருடாந்திர வளையங்கள் (annular rings) என்று அழைப்பார்கள். அடர்த்திகுறைவாக உள்ள பெரிய பகுதியானது நீர் அதிகம் உள்ள நேரங்களில் அந்த மரம் வளர்ந்திருப்பதையும், அடர்த்தி அதிகமாக உள்ள பகுதியானது நீர் குறைவாக உள்ள நேரத்தில் மரம் வளர்ந்திருப்பதையும் காட்டும். ஆக ஒரு வருடத்திற்கு ஒரு அடர்த்தி குறைவான ஒரு வளையமும், அடர்த்தி மிகுதியான ஒரு வளையமும் ஏற்படுகிறது. இந்த இரு வளையங்களையும் சேர்த்தே வருடாந்திர வளையங்கள் என்று அழைக்கிறார்கள்
இப்படி பட்ட வருடாந்திர வளையங்கள் எல்லா வருடமும் ஒரே போல் இருப்பதில்லை. ஒவ்வொரு வருடமும் மாறுபடுகின்றன. ஆனால் சில வருடங்களுக்கு ஒரு முறை மட்டும் அதில் ஒரு ஒழுங்கு தெரிகிறதாம்
எத்தனை வருடங்கள் தெரியுமா ??
எத்தனை வருடங்களுக்கு ஒரு முறை குறிஞ்சி மலர் ஒழுங்காக மலர்கிறதோ அத்தனை வருடங்கள்
சனியின் சுழற்சி
இது போல் சனி யின் சுழற்சி 30 வருடங்களுக்கு ஒருமுறை. இதுவும் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது
இப்பொழுது வேறு ஒரு சிறு கணக்கிற்கு வருவோம்
நீங்கள் உங்கள் வீட்டிலிருந்து அலுவலகம் செல்ல 12 வழிகள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்ளுங்கள். தினமும் ஒரு வழியில் செல்கிறீர்கள். ஆக ஒவ்வொரு 12 நாட்களுக்கு ஒரு முறை நீங்கள் அதே வழியில் செல்வீர்கள்.
அதே போல் நீங்கள் 12 வித வாகனங்களில் செல்லலாம் என்று வைத்துக்கொள்ளுங்கள்.ஒரு வாகனத்தில் 12 நாட்கள் செல்ல வேண்டும். அதற்கு அடுத்த 12 நாட்கள் அடுத்த வாகனம் என்று வைத்துக்கொள்ளுங்கள்
நீங்கள் ஒரு வாகனத்தில் ஒருவழியில் சென்றால் மீண்டும் அதே வாகனத்தில் அதே வழியில் செல்ல 144 நாட்கள் ஆகிவிடும் அல்லவா
ஒரு வேளை நீங்கள் ஒரு வாகனத்தில் 6 நாட்கள் தொடர்ந்து செல்ல வேண்டும் என்றால், நீங்கள் முதல் 6 நாட்கள் வாகனம் 1 - பாதை 1 முதல் 6 வரை, அடுத்த 6 நாட்கள் வாகனம் 2 - பாதை 6 முதல் 12 வரை - அடுத்த 6 நாட்கள் வாகனம் 3 பாதை 1 முதல் 6 வரை, என்று மாறி மாறி சென்று கொண்டிருந்தால், 72 நாட்கள் கழித்து நீங்கள் அதே வாகனம், அதே வழியில் செல்லலாம்
ஒரு வேளை நீங்கள் ஒரு வாகனத்தில் மூன்று நாட்கள் தான் செல்ல முடியும் என்றால் 36 நாட்கள் கழித்து அதே வழியில் அதே வாகனத்தில் செல்லலாம்
ஒரு வேளை நீங்கள் ஒரு வாகனத்தில் இரண்டரை நாட்கள் தான் செல்ல முடியும் என்றால் 60 ஆண்டுகள் நாட்கள் கழித்து தான் அதே வாகனம் அதே வழியில் செல்ல முடியும்
-oOo-
குரு ஒரு வீட்டில் இருக்கும் காலம் ஒரு ஆண்டு. குரு ஒரு வீட்டில் இருப்பதால் சில விளைவுகள் ஏற்படலாம்.
சனி ஒரு வீட்டில் இருக்கும் காலம் இரண்டரை ஆண்டுகள். சனி ஒரு வீட்டில் இருப்பதால் சில விளைவுகள் ஏற்படலாம்
ஒரு வருடம் சனியின் விளைவுகளும் குருவின் விளைவுகளும் சேர்ந்து ஏற்படுத்தும் விளைவுகள், மீண்டும் அதே போல் ஏற்படுவது 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை.
இன்று சனி ஒரு வீட்டிலும் குரு ஒரு வீட்டிலும் இருக்கிறார்களோ, அவர்களிருவது அந்தந்த வீடுகளில் இருப்பது அறுபது ஆண்டுகள் கழித்துதான் என்பதால் இவ்வாறு நிகழ்கிறது
-oOo-
இப்படியான அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறை கால மாற்றங்கள் மற்றும் பருவ மாற்றங்கள் ஏற்படுவதை கணித்த முன்னோர்கள் 60 ஆண்டுகளை ஒரு தொகுப்பாக வைத்து அவற்றிற்கு பெயர் சூட்டி உள்ளார்கள்.அது மட்டுமல்லாது அந்த ஆண்டுகளில் என்ன நடந்தது என்பதை பாடல்களாகவும் குறித்து வைத்து சென்றுள்ளார்கள்
-oOo-
உதாரணமாக பார்த்திப ஆண்டிற்கான (2005 ஏப்ரல் 15 முதல் 2006 ஏப்ரல் 14) சித்தர் இடைக்காடர் இயற்றிய வெண்பாவில் “ராஜர் அநியாந் செய்வார் ரதமேறு மாரி இனிதாம் விளைவுமுளவாம்” என்று உள்ளது. !! 2005ல் மழை எப்படி இருந்தது என்று தெரியவில்லை என்றால் 2005 ஜூலையில் மும்பையில் இருந்தவரிடமோ 2005 நவம்பரின் சென்னையில் இருந்தவரிடமோ கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ளலாம். பார்த்திபன் என்பது அர்ஜுனனின் பெயர் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். அர்ஜூனன் மழைக்கடவுள் இந்திரனின் மகன் என்றும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் !!! சமீப காலங்களிலேயே 2005ல் தான் ஒரே நாளில் அதிகம் மழை பெய்தது என்று நினைக்கிறேன்
அதே போல் 2009 ஏப்ரல் 15 முதல் 2010 ஏப்ரல் 14 வரை நடைபெற்றுக்கொண்டிருப்பது விரோதி வருடம். . இந்த வருடத்திற்கும் பாடல் இருக்கிறது
நீடு விரோதி நிலத்தில் மழைமிகுதி!சனி சிம்மத்திலிருந்து கன்னிராசிக்கு செல்லும், குரு மகரத்திலிருந்து கும்ப ராசிக்கு செல்லும் ஆண்டுகள் விரோதி ஆண்டுகள். அப்படிப்பட்ட “விரோதி ஆண்டில் மழை நன்றாக பெய்யும். இதனால், காடு கழனியெல்லாம் நல்ல அமோக விளைச்சல் கிடைக்கும். பல தேசங்களுக்கிடையில் மற்றும் அத்தேசங்களில் தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடு உண்டாகி, அதனால் நாடுகளிடையே போர் ஏற்படலாம்.போரினால் அழிவு எற்படும். ஒரு வகை நோய் வந்து சேரும்” என்று இடைகாடர் கூறியுள்ளார் !!
மேடு காடெல்லாம் விளைவுண்டாம்! - நீடும்
அரசர் போராலே யழிவு முலகம்!
திரமிகு நோய் சேருமெனச் செப்பு!
157 மறுமொழிகள்:
மிகவும் பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு நன்றி
நாங்க என்னைக்காவது மருத்துவம் பற்றி பதிவை எழுதி இருக்கோமா :)?
இப்படி எங்க அடிமடியில் கைவைக்கலாமா :)?
அருமை. உங்கள் முயற்சி பாராட்டுகுரியது. தொடருங்கள்.
அறுபது ஆண்டுகளுக்கான விளக்கம் எளிமை மற்றும் அருமை.
ஆமாம் இந்த அறுபது ஆண்டுகள் தமிழ் ஆண்டுகளா :) ?
60 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக நிகழ்வுகள் ஒரே போல இருக்கும் என்கிறீர்களா?
60 ஆண்டுக்கு முன்னால் யாராவது கணிப்பொறியில் ஜோதிடம் பேசி இருப்பார்களா? எப்படி 60 வருடத்திற்கு மறுபடியும் அப்படியே இருக்கும் என சொல்ல முடியும் :)
ஏதோ என்னால் முடிந்த கேள்வி :)
//ஆமாம் இந்த அறுபது ஆண்டுகள் தமிழ் ஆண்டுகளா :) ?//
திருமறைக்காடு தமிழ் ஊரா வேதாரண்யம் தமிழ் ஊரா :) :) :)
//அதனால் நாடுகளிடையே போர் ஏற்படலாம்.//
உள்நாட்டுப் போராகக் கூட இருக்கலாமோ...,
//60 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக நிகழ்வுகள் ஒரே போல இருக்கும் என்கிறீர்களா?//
இது அறிவினா
--
ஒரு போல் இருக்காது
ஆனால் கால மாற்றங்கள், பருவ நிலை மாற்றங்கள் ஒன்று போல் உள்ளது அல்லவா
--
2001 டிசம்பரில் நீங்கள் வலைப்பதிவு எழுதவில்லை
2009 டிசம்பரில் வலைப்பதிவு எழுதியுள்ளீர்கள்
இதை secular trend என்று அழைப்பார்கள்
--
ஆனால் 2001 மே மாதத்தை விட 2001 டிசம்பரில் குளிர் அதிகம். 2009 மே மாதத்தை விட 2009 டிசம்பரில் குளிர் அதிகம்
இதை seasonal trend என்று அழைப்பார்கள்
--
Seasonal Trend வேறு, secular trend வேறு
--
எப்படி பூமியில் சுழற்சியால் சில விஷயங்கள் 12 மாதத்திற்கு ஒரு முறை திரும்ப நடக்கிறதோ (கவனிக்கவும், அனைத்து விஷயங்களும் அல்ல) அதே போல் எப்படி குருவின் சுழற்சியால் சில விஷயங்கள் (உதாரணம் குறிஞ்சி மலர் பூப்பது) 12 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கிறது, எப்படி சனியின் சுழற்சியால் சில விஷயங்கள் 30 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கிறது
அது போல் சில விஷயங்கள் (அனைத்து விஷயங்களும் அல்ல) 60 வருடத்திற்கு ஒரு முறை நடந்து கொண்டிருக்கின்றன
//அதனால் நாடுகளிடையே போர் ஏற்படலாம்.//
இருக்கலாம் தல
மாமியார் மருமகள் சண்டையாக கூட இருக்கலாம் !! யாருக்கு தெரியும் :) :) :)
குமார் சார்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
//அறுபது ஆண்டுகளுக்கான விளக்கம் எளிமை மற்றும் அருமை.//
வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது சுவாமி
//சச்சின் என்னவோ அவரிடத்தில் இருந்தாலும், பார்ப்பவர்கள் எங்கிருந்து பார்க்கிறார்களோ//
சச்சின் என்றொரு சூரியன்...,
இதோ மீண்டும் நான் :)
//Seasonal Trend வேறு, secular trend வேறு //
போர் ஏற்படுவது seasonal trend-ஆ?
secular trend-ஆ?
போர் ஏற்படுவது இயற்கையாக நடக்காத பட்சத்தில் எப்படி அறுபது வருட பாடலில் கூற முடியும்?
//இதோ மீண்டும் நான் :)
//Seasonal Trend வேறு, secular trend வேறு //
போர் ஏற்படுவது seasonal trend-ஆ?
secular trend-ஆ?//
போர் ஏற்படுவடுது seasonal trend. ஆனால் போரில் வெறும் கையால் அடித்ததிலிருந்து, கற்களை கொண்டு அடித்தாக மாறி, அம்பு, ஈட்டி, விஷ அம்பு, பிரம்மாஸ்திரம், துப்பாக்கி, பீரங்கி, விமானம் மூலம் குண்டு வீச்சு, அணுஆயுதம் என்று மாறி வருவது secular trend (இந்த என்பது மதச்சார்ப்பற்ற என்ற பொருளில் அல்ல) Of or pertaining to long-term non-periodic irregularities, especially in planetary motion. என்ற பொருளில் (http://en.wiktionary.org/wiki/secular பார்க்கவும்)
//ஆனால்
போர் ஏற்படுவது இயற்கையாக நடக்காத பட்சத்தில் எப்படி அறுபது வருட பாடலில் கூற முடியும்?//
போர் ஏற்படும் சூழல் என்பது cyclical என்பதால் கூற முடியும் !!
உதாரணம் : காவிரி பிரச்சனை என்பது இயற்கையாக் நடப்பதில்லை. ஆனால் அது இயற்கை (மழை) கூறு ஒன்றை சார்ந்துள்ளது அல்லவா
//சச்சின் என்றொரு சூரியன்...,//
சூரியன் தொடர்ந்து ஜொலித்தாலும், யார் வேண்டுமென்றாலும் அவரவர் முகத்திற்கு முன்னர் கையை வைத்துக்கொண்டு சூரியன் மறைந்து விட்டது என்று சொல்லலாம் அல்லவா !!!!
ஆனால் உண்மை என்னவென்றால் ஞாயிற்றை கைமறைப்பார் இல் !!!
அது போல் தான் இதுவும்
//திருமறைக்காடு தமிழ் ஊரா வேதாரண்யம் தமிழ் ஊரா//
வருட பெயர்களில் ஜெய, விஜய, பிரப, விரோதி என்றெல்லாம் வருகிறதே அது ஆரிய வாடை வீசும் சொற்கள் அல்லவா?
திருமறைக்காடு போல இதற்கும் “சுத்தமான” தமிழ் வார்த்தை உண்டா?
//போர் ஏற்படும் சூழல் என்பது cyclical என்பதால் கூற முடியும் !!//
என்றால் உலக அமைதி என்பதற்கு சாத்தியமே இல்லையா?
போர் என்பது இரு நாடுகளுக்கு நடப்பது என்பது என் மொழி அறிவு.
காவிரி பிரச்சனை போல ஈராக், பாலஸ்தீனம், இலங்கையில் என்ன இயற்கை தொடர்பு இருக்கிறது?
//வருட பெயர்களில் ஜெய, விஜய, பிரப, விரோதி என்றெல்லாம் வருகிறதே அது ஆரிய வாடை வீசும் சொற்கள் அல்லவா?
திருமறைக்காடு போல இதற்கும் “சுத்தமான” தமிழ் வார்த்தை உண்டா?//
நீங்கள் தான் சொல்லவேண்டும் !! ஒரு வேளை
ஆனால் இந்த 60 வருடம் குறித்து பாடல்கள் தமிழில் உள்ளன என்பதால் ஒரு காலத்தில் இவை தமிழ் பெயர்களாகவே இருந்திருக்க வேண்டும். திருமறைக்காடு வேதாரண்யாம் ஆனது போல், திருநெல்வேலி தின்னவேலி ஆனது போல் கால ஓட்டத்தில் மறைந்திருக்க வேண்டும். நாம் தேடிக்கண்டுபிடித்து விடுவோம். கவலைப்படாதீர்கள் !!
வரப்பு தகராறு, கால்வாயை திறப்பதில் இரு ஊர்களுக்குள் இருக்கும் பிரச்சனை கூட சண்டை சச்சரவு தானே
//காவிரி பிரச்சனை போல ஈராக், பாலஸ்தீனம், இலங்கையில் என்ன இயற்கை தொடர்பு இருக்கிறது?//
எனக்கு (தற்சமயம்) தெரியவில்லை. ஆனால் எனக்கு தெரியவில்லை என்பதாலேயே தொடர்பு இல்லை என்று கூற முடியவில்லை.
உங்கள் காவி உடைக்கும், உங்கள் தொழிலிற்கும் என்ன தொடர்பு என்று எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு தெரியாது என்பதால் தொடர்பே இல்லை என்று நான் கூற முடியாதல்லவா :) :) ஒரு வேளை நாளை தெரியவரலாம். தெரிந்தவுடன் கூறுகிறேன் :) :)
அண்ணே..
நீங்க டாக்டரேட் வாங்கினது மருத்துவத்துலதான..?
ஜோதிடக் கலையையும் பிட்டு, பிட்டு வைக்குறீங்க..?
எழுதுங்க. எழுதுங்க..
மொதல், மொதல்லா ஒருத்தருக்கு ராசிபலன் சொல்லணும்னு உங்க மனசு சொல்லுச்சுன்னா எனக்குச் சொல்லுங்கண்ணே..
ஏற்கெனவே எனக்கு வருஷக்கணக்கா ஏழரை சனிதான் நடக்குதுன்னு நினைச்சுக்கி்ட்டிருக்கேன்..
ஆனா இப்பத்தான் வர்ற 29-ம் தேதிதான் சனி பகவான் என் ராசியான கன்னிக்குள்ள வர்றாராம்..
அதுனால நிலைமை இன்னும் மோசமாகி கோமா நிலைமைக்கு போயிருவேனா.. இல்லாட்டி ஒரேயடியா..?
கொஞ்சம் சொல்லுங்கண்ணே..!
எளிமையா விளக்கியிருக்கின்றீர்கள் . பின்னூட்ட கருத்துப்பரிமாறல்களும் பல விஷயங்கள் சொல்கின்றன.
(ஓட்டு போட்டாச்சு)
//# கடல்களில் அதிக நீர்மட்டம், மற்றும் குறைந்த நீர்மட்டம் (spring and neap tides) எதனால் ஏற்படுகிறது என்று தெரியுமா//
புவீஈர்ப்பு விசையில் ஏற்படும் மாற்றங்களினால் என்று படித்திருக்கிறேன்.
எல்லாரும் பாத்துக்குங்க டாக்டர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுறார். அதனால இது கோஸ்ட் ரைட்டிங் கிடையாது :)
---------------------------------
அறுபது வருட சுழற்சி தனிமனித ஜாதகத்தில் ஏதாவது செய்யுமா?
உதாரணமாக விரோதி ஆண்டான இவ்வருடம் பிறந்த குழந்தைகள் இப்படி இருக்கும் என ஓரளவேனும் கூறமுடியுமா?
பிறந்த வருடத்திற்கும் நடப்பு வருடத்திற்கும் தொடர்புபடுத்தி ஏதேனும் பலன் கூற இயலுமா?
டாக்க்க்க்க்க்டர்ர்ர்ர்ர்ர்...
நல்லா இருக்கு :-)
ஸ்வாமியும் நீங்களும் உரையாடுவது சுவாரஸ்யமாகவும், விஷயத்துடனும் இருக்கிறது.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
Good I am watching
அக்மார்க் மாதிரி புர்னோமார்க்..கலக்கல் தலைவரே..தகவல்கள்..அரியவை..அறியவேண்டியவை.
டாக்டர் இந்த நண்டு கதையும் மரத்தின் கதையும் கொஞ்சம் விளக்கமாக பின்னர் எழுதுங்களேன்.. ரொம்பவே அர்வமாயிருக்கு.. இல்ல சுட்டி கொடுத்தாலும் சரி..
//ஆனால் கால மாற்றங்கள், பருவ நிலை மாற்றங்கள் ஒன்று போல் உள்ளது அல்லவா//
அறுபது ஆண்டுகளுக்கு முன் இருந்த புவியின் வெப்பம் இன்றும் அப்படியா இருக்கிறது டாக்டர்?
இப்போது பருவ நிலைமாற்றங்கள் சீரற்று இருந்தாலும் அடுத்த அறுபதுக்கான சுற்றில் சரியான காலத்தில் சரியாகிவிடும் என்கிறீர்களா?
அதே போல் பனிக்காலம் 1, 2 என்று பலவாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்ததே அப்போது இருந்த பருவ கால மாற்றங்களும் இந்த 60 ஆண்டு சுழற்சிக்குள் வருமா??
/////நாங்க என்னைக்காவது மருத்துவம் பற்றி பதிவை எழுதி இருக்கோமா :)?
இப்படி எங்க அடிமடியில் கைவைக்கலாமா :)?////
ப்ரூனோ அவர்கள் உங்களுக்கு மறைமுகமாக உதவி செய்கிறார் சுவாமிஜி.
அவர் எழுதும்போது, ஜோதிடத்தின் மீது நம்பிக்கையில்லாதவனைக் கூட அவருடைய ஆக்கங்கள் நிமிர்ந்து உட்காரவைக்கிறது. என்னமோ இருக்கிறது, அதனால்தான் மருத்துவரும் எழுதுகிறார் என்ற குறுகுறுப்பில் அவனும் ஜோதிடத்தைப் படிக்கத் துவங்குகிறான்.
துவங்குகிறவனை, உள்ளே இழுத்துப்போடுவது மட்டுமே நம்முடைய வேலை:-))))))
ரொம்ப எளிமையான விளக்கங்கள் டாக்டர்.
ஏகப்பட்ட புள்ளி விபரங்கள். விஜய்காந்த் படம் அதிகம் பாக்காதீங்க. :))
அடுத்த பகுதிக்கு வெய்ட்டிங்க்.
@ஸ்வாமி நல்லா அடிச்சு ஆடுங்க. விடாதீங்க டாக்டரை. :))
//நீங்க டாக்டரேட் வாங்கினது மருத்துவத்துலதான..?
ஜோதிடக் கலையையும் பிட்டு, பிட்டு வைக்குறீங்க..?
//
அண்ணா நான் மருத்துவத்தில் இளங்கலை தான் (MBBS) அதில் இன்னமும் டாக்டரேட் (PHD) வாங்கவில்லை :) :) :)
//ஜோதிடக் கலையையும் பிட்டு, பிட்டு வைக்குறீங்க..?//
இதில் அடிப்படை கணிதமே
எனவே கணிதத்தில் ஈடுபாடு இருந்தால் இந்த அடிப்படைகளை எளிதில் புரிந்து கொள்ளலாம்
//எளிமையா விளக்கியிருக்கின்றீர்கள் . பின்னூட்ட கருத்துப்பரிமாறல்களும் பல விஷயங்கள் சொல்கின்றன.
(ஓட்டு போட்டாச்சு)//
நன்றி மேடம்
////# கடல்களில் அதிக நீர்மட்டம், மற்றும் குறைந்த நீர்மட்டம் (spring and neap tides) எதனால் ஏற்படுகிறது என்று தெரியுமா//
புவீஈர்ப்பு விசையில் ஏற்படும் மாற்றங்களினால் என்று படித்திருக்கிறேன்.
//
அது புவி ஈர்ப்பு (gravitational force of earth)அல்ல. சந்திர ஈர்ப்பு (gravitational force of moon) !!
//எல்லாரும் பாத்துக்குங்க டாக்டர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுறார். அதனால இது கோஸ்ட் ரைட்டிங் கிடையாது :)//
ஓஹோ....
இது ஆவிஎழுத்தா என்று சோதித்து பார்க்கத்தான் இத்தனை அறிவினாக்களா :) :) :)
//அறுபது வருட சுழற்சி தனிமனித ஜாதகத்தில் ஏதாவது செய்யுமா?
உதாரணமாக விரோதி ஆண்டான இவ்வருடம் பிறந்த குழந்தைகள் இப்படி இருக்கும் என ஓரளவேனும் கூறமுடியுமா?//
முடியும் என்றே நினைக்கிறேன்
இது குறித்து சீனர்களின் ஜோதிட முறையில் நிறைய எழுதியிருக்கிறார்கள்
அவர்கள் குருவை பிரதானமாக எடுத்து கொண்டிருக்கவேண்டும்
அவர்கள் ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒரு மிருகத்தின் பெயரை சூட்டுகிறார்கள். 12 ஆண்டுகள் கழித்து அதே மிருகம் !!
http://www.chinese.new-year.co.uk/calendar.htm
அந்த நாட்காட்டியில் கூட ஒரு சுழற்சி அறுபது ஆண்டுகள் தான்
The Chinese Lunar New Year is the longest chronological record in history, dating from 2600BC, when the Emperor Huang Ti introduced the first cycle of the zodiac. Like the Western calendar, The Chinese Lunar Calendar is a yearly one, with the start of the lunar year being based on the cycles of the moon. Therefore, because of this cyclical dating, the beginning of the year can fall anywhere between late January and the middle of February. This year it falls on February 12th. A complete cycle takes 60 years and is made up of five cycles of 12 years each.
The Chinese Lunar Calendar names each of the twelve years after an animal. Legend has it that the Lord Buddha summoned all the animals to come to him before he departed from earth. Only twelve came to bid him farewell and as a reward he named a year after each one in the order they arrived. The Chinese believe the animal ruling the year in which a person is born has a profound influence on personality, saying: "This is the animal that hides in your heart."
Rat 1924 1936 1948 1960 1972 1984 1996
Ox 1925 1937 1949 1961 1973 1985 1997
Tiger 1926 1938 1950 1962 1974 1986 1998
Rabbit 1927 1939 1951 1963 1975 1987 1999
Dragon 1928 1940 1952 1964 1976 1988 2000
Snake 1929 1941 1953 1965 1977 1989 2001
Horse 1930 1942 1954 1966 1978 1990 2002
Sheep 1931 1943 1955 1967 1979 1991 2003
Monkey 1932 1944 1956 1968 1980 1992 2004
Rooster 1933 1945 1957 1969 1981 1993 2005
Dog 1934 1946 1958 1970 1982 1994 2006
Boar 1935 1947 1959 1971 1983 1995 2007
Sexagenary Cycle பற்றி மேலும் அறிய
http://en.wikipedia.org/wiki/Sexagenary_cycle
//டாக்க்க்க்க்க்டர்ர்ர்ர்ர்ர்...
நல்லா இருக்கு :-)
ஸ்வாமியும் நீங்களும் உரையாடுவது சுவாரஸ்யமாகவும், விஷயத்துடனும் இருக்கிறது.
தோழமையுடன்
பைத்தியக்காரன்//
நன்றி சார் :) :)
//supersubra said...
Good I am watching//
கருத்திற்கு நன்றி சார்
//நர்சிம் said...
அக்மார்க் மாதிரி புர்னோமார்க்..கலக்கல் //
நன்றி பாஸ்
//.தகவல்கள்..அரியவை..அறியவேண்டியவை.//
இதற்கு பெயர் நர்சிம்மார்க் தலைவரே
//அறுபது ஆண்டுகளுக்கு முன் இருந்த புவியின் வெப்பம் இன்றும் அப்படியா இருக்கிறது டாக்டர்? //
நல்ல கேள்வி
உண்மையில்
புவியின் வெப்பம் secular trend ஆக உயர்ந்து கொண்டே செல்கிறது என்று கூறுபவர்கள் பலர் இருப்பதால் உங்களுக்கு இந்த கேள்வி தோன்றியிருக்க வேண்டும்
2004 முதல் 2007 காலக்கட்டங்களில் பூமியிம் வெப்பம் குறைவாகவே இருந்தது. ஆனால் கரிமில வாயூ குறையவில்லை. எனவே புவியின் வெப்பம் seasonal trend தான் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள்.
--
ஏதாவது புரிந்ததா :) :) :)
இது தனி இடுகை எழுத வேண்டிய விஷயம்
//துவங்குகிறவனை, உள்ளே இழுத்துப்போடுவது மட்டுமே நம்முடைய வேலை:-))))))//
:) :) :)
//ஏகப்பட்ட புள்ளி விபரங்கள். விஜய்காந்த் படம் அதிகம் பாக்காதீங்க. :))
//
:) :) :)
மிகவும் அருமையாக உங்களுக்கே உரிய உங்கள் ட்ரேட் மார்க் உதாரணங்களோடு அருமையாக இருக்கிறது!
//நாங்க என்னைக்காவது மருத்துவம் பற்றி பதிவை எழுதி இருக்கோமா :)?//
ஓம்கார் கமெண்டை ரசித்தேன்
nice one. i clued with this
பயனுள்ள தகவல்கள் .தொடருங்கள்.
ரொம்ப எளிமையான அழகான விளக்கம் புருனோ.
// குசும்பன் said...
மிகவும் அருமையாக உங்களுக்கே உரிய உங்கள் ட்ரேட் மார்க் உதாரணங்களோடு அருமையாக இருக்கிறது!//
நன்றி சார்
agrred that thastrology is based on mathematics. But why do our people run to kovils to 'escape' from the effects of these cycles?
கலக்கீட்டிங்க டாக்டர்
அபாரம்
அப்புறம் ஏன் மருத்துவரே 'சித்த' மருத்துவத்த விட்டுட்டு "அலோபதி" யில தொழில் நடத்துறீங்க?
When I was in grade school, I had a classmate with smallpox marks.
That was the tail end of eradication of small pox in the world. There were some seniors afflicted by polio. That was also the time of polio eradication through vaccine. Many parts of Africa even today face Aids Crisis. To equate human diseases with planetary movements, in a genaric way does not make any sense. Scientists studying astrology should bolster their claim with solid data.
Climate changes happen.Unusual rains do not follow a predictable cycle. In the west they have a term called 'hundred year flood'. Unfortunately this never happens only every hundred years. U.S faces the threat of tornadoes and Hurricanes every year. If Astrologers could predict these things it would be a great boon to the general public.
I am not againt Astrology. Astrologers should join hands with
Scientists to do systematic research on these matters!
அப்ப ஜோசியம் உண்மைன்னு சொல்லறிங்களா...???
உண்மை தமிழன் கன்னி ராசியா?
// agrred that thastrology is based on mathematics. But why do our people run to kovils to 'escape' from the effects of these cycles? //
கோயில்களும் கணித முறைப்படி கட்டப்பட்டிருக்கலாம் அல்லவா !!
//அப்புறம் ஏன் மருத்துவரே 'சித்த' மருத்துவத்த விட்டுட்டு "அலோபதி" யில தொழில் நடத்துறீங்க?//
நான் அலோபதியில் தொழில் நடத்துவது சரி
ஆனால் நான் சித்த மருத்துவத்தை விட்டு விட்டேன் என்று யார் கூறினார்கள்
//When I was in grade school, I had a classmate with smallpox marks.
That was the tail end of eradication of small pox in the world. There were some seniors afflicted by polio. That was also the time of polio eradication through vaccine. Many parts of Africa even today face Aids Crisis. To equate human diseases with planetary movements, in a genaric way does not make any sense. Scientists studying astrology should bolster their claim with solid data.//
அதெல்லாம் secular trend ஐயா.
//அப்ப ஜோசியம் உண்மைன்னு சொல்லறிங்களா...???//
முழுப்பொய் இல்லைன்னு சொல்றேன்
//உண்மை தமிழன் கன்னி ராசியா?//
:)
//nice one. i clued with this//
நன்றி சார் / மேடம்
//T.V.Radhakrishnan said...
பயனுள்ள தகவல்கள் .தொடருங்கள்.
//
நன்றி சார்
//TKB காந்தி said...
ரொம்ப எளிமையான அழகான விளக்கம் புருனோ.
மறுமொழி எண் 44 அளிக்கப்பட்ட நாள் மற்றும் நேரம் 8/20/2009 4:09 PM
//
நன்றி சார்
//முரளிகண்ணன் said...
கலக்கீட்டிங்க டாக்டர்
அபாரம்
//
நன்றி சார்
ஐயா அனைத்தும் சரியே அனால் குறிஞ்சி பூப்பது குருவின் செயல் என்பது தவறு. சூரியனில் கரும் புள்ளிகள் ஊண்டு (sun's Black spots). எந்த ஆண்டு கரும் புள்ளிகள் அதிகம் உள்ளதோ அந்த வருடம் குறிஞ்சி பூக்கும். 12 ஆண்டுக்கு ஒரு முறை அதிகம் இருக்கும் இது உன்ன்மை. யார் வேண்டுமென்றாலும் கொடைக்கானல் சென்று அங்கு உள்ள ஒப்செர்வடோரியில் செக் செய்யலாம். அங்கு புகைபடங்கள் உள்ளன. குறிஞ்சி திடீர் என்று சில இடங்களில் பூப்பது உண்டு. அப்போதும் சூரியனில் கரும் புள்ளிகள் அதிகம் தோன்றி மறைவது தான் காரணம். எந்த இடத்தில தோன்றி மறைகிறதோ அந்த இடம் உலகின் எங்கு நிலை படுகிறதோ அந்த இடத்தில குறிஞ்சி இருந்தல் பூக்கும். குரு தான் கரணம் என்று நீங்கள் நம்பினால் நம்புங்கள். அனால் குரு சடனாகி தோன்றி மறைவது இல்லை.அறிவியல் உண்மைகளை ஏற்று கொள்ளும் மன பக்குவம் இருந்தால் செக் செய்து விட்டு ஒத்து கொள்ளுகள். எங்கோ இருக்கும் கோள்கள் எப்படி மனிதனை பாதிக்கிறது என்பதற்கு இது ஒரு உதரணம்.
//ஐயா அனைத்தும் சரியே அனால் குறிஞ்சி பூப்பது குருவின் செயல் என்பது தவறு. சூரியனில் கரும் புள்ளிகள் ஊண்டு (sun's Black spots). எந்த ஆண்டு கரும் புள்ளிகள் அதிகம் உள்ளதோ அந்த வருடம் குறிஞ்சி பூக்கும். 12 ஆண்டுக்கு ஒரு முறை அதிகம் இருக்கும் இது உன்ன்மை. //
அது ஏன் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிகம் வருகிறது என்று கூறுங்களேன்
இங்கு http://en.wikipedia.org/wiki/Sunspot என்ன கூறியுள்ளார்கள் என்றால்
It has been speculated that there may be a resonant gravitational link between a photospheric tidal force from the planets, the dominant component by summing gravitational tidal force (75% being Jupiter's) with an 11-year cycle.
ஆதாரம்
http://www.newscientist.com/article/mg18124394.100-jupiters-influence.html
//யார் வேண்டுமென்றாலும் கொடைக்கானல் சென்று அங்கு உள்ள ஒப்செர்வடோரியில் செக் செய்யலாம். அங்கு புகைபடங்கள் உள்ளன. குறிஞ்சி திடீர் என்று சில இடங்களில் பூப்பது உண்டு. அப்போதும் சூரியனில் கரும் புள்ளிகள் அதிகம் தோன்றி மறைவது தான் காரணம். எந்த இடத்தில தோன்றி மறைகிறதோ அந்த இடம் உலகின் எங்கு நிலை படுகிறதோ அந்த இடத்தில குறிஞ்சி இருந்தல் பூக்கும்.//
// குரு தான் கரணம் என்று நீங்கள் நம்பினால் நம்புங்கள். அனால் குரு சடனாகி தோன்றி மறைவது இல்லை.//
எப்படி நிலவின் ஈர்ப்பு சக்தி பூமியில் நீர் மட்டங்களை பாதிக்கிறதோ அது போல் வியாழனின் ஈர்ப்பு சக்தி சூரியனை பாதிக்கிறது என்பது ஒரு சாராரின் கூற்றும்
//அறிவியல் உண்மைகளை ஏற்று கொள்ளும் மன பக்குவம் இருந்தால் செக் செய்து விட்டு ஒத்து கொள்ளுகள். எங்கோ இருக்கும் கோள்கள் எப்படி மனிதனை பாதிக்கிறது என்பதற்கு இது ஒரு உதரணம். //
நன்றி சார்
சூரியனில் தோன்றும் கரும்புள்ளிகளுக்கும் வியாழனின் சுழற்சிக்கும் சம்மந்தம் உள்ளது என்ற கருத்தின் படி,
குறிஞ்சி மலர் பூப்பதற்கு காரணம் சூரியனில் கரும்புள்ளி
சூரியனில் கரும்புள்ளிக்கு காரணம் வியாழனின் சுழற்சி
என்று வைத்துக்கொள்ளலாமா
//புவியின் வெப்பம் secular trend ஆக உயர்ந்து கொண்டே செல்கிறது என்று கூறுபவர்கள் பலர் இருப்பதால் உங்களுக்கு இந்த கேள்வி தோன்றியிருக்க வேண்டும்//
ஆனால் அதுதானே உண்மையும் கூட.. கடந்த 150 ஆண்டுகளில் ஏறத்தாழ 2 டிகிர அளவிலே புவியின் வெப்பநிலை அதிகரித்துத் தானே இருக்கிறது..
//2004 முதல் 2007 காலக்கட்டங்களில் பூமியிம் வெப்பம் குறைவாகவே இருந்தது. ஆனால் கரிமில வாயூ குறையவில்லை. //
இப்படியான ஏற்றயிறக்கம் எப்போதுமே உண்டுதானே டாக்டர். அதனடிப்படையில் புவிவெப்பமடைதலை எப்படி மறுதலிக்க முடியும். மேலும் இப்படியான ஏற்றயிறக்கங்கள் இருந்த போதும் கடந்த 100 ஆண்டுகளில் புவியின் வெப்பநிலை சீராக அதிகரித்துக்கொண்டுதானே இருக்கிறது.
ஆனாலும், சில கேள்விகள்.
இப்படிக் கோள்கள் மற்றும் சூரியன், சந்திரனின் ஈர்ப்பு விசைகளினடிப்படையில் பூமியின் தட்பவெட்பத்திலும், வானிலையிலும் மாறுதல்கள் நடைபெறுவது, மற்றும் அதனடிப்படையில் உயிர்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்வது எல்லாம் ஏற்கனவே வானவியலிலும், உயிரியலிலும் விளக்கப் பட்டவைதானே டாக்டர். இப்பொது ஜோதிடம் என்ன புதிதாகக் கண்டுபிடுத்துவிட்டது என்பது புரியவில்லை..
//ஆனால் அதுதானே உண்மையும் கூட.. கடந்த 150 ஆண்டுகளில் ஏறத்தாழ 2 டிகிர அளவிலே புவியின் வெப்பநிலை அதிகரித்துத் தானே இருக்கிறது..//
ஆனால் 2004 முதல் 2007 வரை வெப்பம் குறைந்ததே !!!
//இப்படியான ஏற்றயிறக்கம் எப்போதுமே உண்டுதானே டாக்டர்.//
உண்டு
// அதனடிப்படையில் புவிவெப்பமடைதலை எப்படி மறுதலிக்க முடியும்.//
// மேலும் இப்படியான ஏற்றயிறக்கங்கள் இருந்த போதும் கடந்த 100 ஆண்டுகளில் புவியின் வெப்பநிலை சீராக அதிகரித்துக்கொண்டுதானே இருக்கிறது.//
இதற்கு ஆதாரம் தர முடியுமா
உதாரணமாக சென்னையில் 1950ல் வெப்பம் _____ டிகிரி
ஆனால் 2008ல் ____ டிகிரி என்று
//ஏற்கனவே வானவியலிலும், உயிரியலிலும் விளக்கப் பட்டவைதானே டாக்டர். இப்பொது ஜோதிடம் என்ன புதிதாகக் கண்டுபிடுத்துவிட்டது என்பது புரியவில்லை..//
வானவியலிலும் உயிரியலிலும் விளக்கப்படுபவைதான் ஜோதிடத்திலும் கூறப்படுகிறது என்று தானே கூறுகிறீர்கள் :) :)
//ஆனால் அதுதானே உண்மையும் கூட.. கடந்த 150 ஆண்டுகளில் ஏறத்தாழ 2 டிகிர அளவிலே புவியின் வெப்பநிலை அதிகரித்துத் தானே இருக்கிறது.. //
அனைத்து ஊர்களிலும் அதிகரித்து உள்ளதா. அல்லது சில ஊர்களில் (இடங்களில்) மட்டும் அதிகரித்து சில ஊர்களில் (இடங்களில்) குறைந்துள்ளதா
ஆதாரம் தர முடியுமா :) :) :)
இரண்டு டிகிரி செல்சியசா இரண்டு டிகிரி பாரண்ஹீட்டா
தமிழகத்தில் இது போல் 2 டிகிரி அதிகரித்து உள்ளதா. அப்படி என்றால் எந்த பகுதிகளில் அதிகரித்து உள்ளது
--
கரியமில வாயு அதிகரித்து உள்ளது. நான் கேட்பது வெப்பம் அதிகரித்து உள்ளதா என்பது பற்றி
பயனுள்ள தகவல்கள் சார்
கண்டிப்பாக டாக்டர் எல்லா இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்திருக்க வேண்டும் என்றில்லை. சில இடங்களில் அதிகரித்தும் குறைந்தும் இருக்கிறது..
ஆனால், குறிப்பிட்டுச் சென்னைபற்றிய புள்ளிவிபரங்கள் என்னிடம் இல்லை. உங்களிடம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நான் குறிப்பிட்டது இரண்டு டிகிரி பாரண்கீட்...
இதற்கு உங்களிடமே ஆதாரங்கள் இருக்கும் என்று நம்புகிறேன். அதனால் தனியாகச் சுட்டி தேவையில்லை.
//கரியமில வாயு அதிகரித்து உள்ளது. நான் கேட்பது வெப்பம் அதிகரித்து உள்ளதா என்பது பற்றி//
எல்லா இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்திருக்க வேண்டும் என்றில்லை.
//வானவியலிலும் உயிரியலிலும் விளக்கப்படுபவைதான் ஜோதிடத்திலும் கூறப்படுகிறது என்று தானே கூறுகிறீர்கள் :) :)//
இல்லை டாக்டர், வானவியலும் உயிரியலும் கண்டுபிடித்துக் கூறியபின், ஜோதிடம் அதனை தேவையான இடங்களில் தேவைக்கேற்றவாறு உரிமை கொண்டாடுகிறது என்று கூறவந்தேன்.. :)
உதாரணமாக இதே இடுகையில் உள்ள நோய் பற்றி உங்களது இடுகை ஏன் 2/3 மாதங்களுக்கு முன்னர் வெளிவரவில்லை.
//கண்டிப்பாக டாக்டர் எல்லா இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்திருக்க வேண்டும் என்றில்லை. சில இடங்களில் அதிகரித்தும் குறைந்தும் இருக்கிறது..//
அப்படி என்றால் புவி வெப்பம் மற்றும் புவி குளிர்ச்சி என்று தானே கூற வேண்டும். ஏன் புவி வெப்பம் என்று கூறுகிறீர்கள்
//ஆனால், குறிப்பிட்டுச் சென்னைபற்றிய புள்ளிவிபரங்கள் என்னிடம் இல்லை. உங்களிடம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.//
சென்னை என்று இல்லை. ஏதாவது இந்திய ஊர் !!
//நான் குறிப்பிட்டது இரண்டு டிகிரி பாரண்கீட்...
இதற்கு உங்களிடமே ஆதாரங்கள் இருக்கும் என்று நம்புகிறேன். அதனால் தனியாகச் சுட்டி தேவையில்லை.//
என்னிடம் பூமியின் வளி மண்டலத்தில் இருக்கும் கரியமிலவாயூவின் அளவு உயர்ந்து வருவதற்கான ஆதாரம் இருக்கிறது ஆனால் பூமியின் வெப்பம் உயர்ந்து வருவதற்கான ஆதாரம் இல்லை !!! :) :) அது தான் உங்களிடம் கேட்கிறேன்
//எல்லா இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்திருக்க வேண்டும் என்றில்லை.//
அப்படி என்றால் அது ஏன் பூவி வெப்பமடைதல். சிகாகோ வெப்பமடைதல் அல்லது டெட்ராய்ட் வெப்பமடைதம் என்று மட்டும் வைத்துக்கொள்ளலாமே
////வானவியலிலும் உயிரியலிலும் விளக்கப்படுபவைதான் ஜோதிடத்திலும் கூறப்படுகிறது என்று தானே கூறுகிறீர்கள் :) :)//
இல்லை டாக்டர், வானவியலும் உயிரியலும் கண்டுபிடித்துக் கூறியபின், ஜோதிடம் அதனை தேவையான இடங்களில் தேவைக்கேற்றவாறு உரிமை கொண்டாடுகிறது என்று கூறவந்தேன்.. :)//
60 வருடம் சுழற்சி குறித்து ஜோதிடம் சொன்னது எப்பொழுது
வானவியல் சொன்னது எப்பொழுது
உயிரியல் சொன்னது எப்பொழுது என்று கூற முடியுமா
//உதாரணமாக இதே இடுகையில் உள்ள நோய் பற்றி உங்களது இடுகை ஏன் 2/3 மாதங்களுக்கு முன்னர் வெளிவரவில்லை.//
எனக்கு நேரம் இருக்கவில்லை. அவ்வளவு தான்
ஆனால் இந்த இடைக்காடர் பாட்டும் வெளிவந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது சார்
// அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
பயனுள்ள தகவல்கள் சார்//
நன்றி சார் !!
புவியின் சராசரி வெப்பநிலை என்று இன்றிலிருந்து கூறுகிறேன். :)
http://zfacts.com/metaPage/lib/zFacts-CO2-Temp.gif
தமிழகத்தில் ஏதோவொரு மலைப்பகுதி, சரியாக நினைவில்லை டாக்டர், ஏற்காடு அல்லது நீலகிரி என்று நினைக்கிறேன், அதன் தாக்கம் பற்றி வாசித்த நினைவு. அது குறித்து தேடிப் பார்த்துக் கிடைத்தால் பின்னர் பகிர்கிறேன்.
//எனக்கு நேரம் இருக்கவில்லை. அவ்வளவு தான்//
:(
அப்படியானால், இந்நோய் பற்றி முன்னரே தெரியும் கால அவகாசம் இல்லாததால் எழுதவில்லை.. :(
இது அனைவரும் வருந்த வேண்டிய விடயமே..
//60 வருடம் சுழற்சி குறித்து ஜோதிடம் சொன்னது எப்பொழுது
வானவியல் சொன்னது எப்பொழுது
உயிரியல் சொன்னது எப்பொழுது என்று கூற முடியுமா//
ஜோதிடம் வானவியலிடமிருந்துதான் தோன்றியது என்று உங்களைப் போன்றோரும் அடிக்கடி குறிப்பிடுகிறீர்களே அப்படியானால் வானவியல் தானே முதலில் சொல்லியிருக்கும்.
உயிரியல் எப்போது சொன்னது என்று தெரியாது டாக்டர். உங்களிடம் விடையிருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஆனால், எது எப்போது தோன்றியிருந்தாலும், ஜோதிடத்தில் மனித குலத்திற்குப் பொதுவான, மற்றும் முன்னிறுத்தும் கோட்பாடுகளை அதனுடைய அடிப்படைகளைக் கொண்டே நிகழ்வுகளை விளக்குவதோ அல்லது நிரூபனம் செய்து காட்டும் ஒரு சர்வதேச அளவிலான அமைப்போ ஜோதிடர்களுக்கிடையே கூட இல்லை டாக்டர்.
இன்றைக்கு இது just curiosity of simple calculations என்ற அடிப்படையில் தனி மனிதர்களிடம் இருக்கிறது அவ்வளவுதான். கடவுள் நம்பிக்கை போல இதுவும் ஒரு சிலரின் நம்பிக்கைகள் அவ்வளவுதான் டாக்டர், அது வளரவில்லை அல்லது வளர்த்துக் கொள்ளவில்லை. உங்களுக்கு இதனை ஏற்றுக் கொள்வதில் சிக்கல் இருக்கலாம், ஆனால் அதுதான் உண்மை.
ஜோதிடம் பற்றி இனி இவ்வுரையாடலைத் தொடர விருப்பம் இல்லை டாக்டர்.
என்னைப் பொருத்த வரையில் ஜோதிடம் ஒரு காலவிரயம்.
ஏற்கனவே முதல் பின்னூட்டத்தில் குறிப்பிட்டது போல், மரம் மற்றும் நண்டு குறித்த விளக்கச் சுட்டிகள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். மற்றும் புவி வெப்பநிலை மாறுபாடு குறித்து ஏதாவது விரிவாகப் பேசலாம், பகிர்ந்து கொள்ளலாம்.
ராகுவும் கேதுவும் எங்க இருக்குன்னு சொன்னீங்கன்னா உங்களுக்கு புண்ணியமாப் போகும்
கையேடு சார்,
http://zfacts.com/metaPage/lib/zFacts-CO2-Temp.gif படத்தில் சில சந்தேகங்கள் இருக்கின்றன
1. அதில் இருக்கும் 0 என்பது என்ன
2. குலோபல் வெப்பம் என்றால் என்ன
--
//:(
அப்படியானால், இந்நோய் பற்றி முன்னரே தெரியும் கால அவகாசம் இல்லாததால் எழுதவில்லை.. :(//
எந்த நோய் பற்றி நீங்கள் கூறுகிறீர்கள் !!!
இங்கு “ஒரு” நோய் குறித்து நான் எங்காவது பேசியிருக்கிறேனா
//இது அனைவரும் வருந்த வேண்டிய விடயமே..//
நான் ஒருவன் ஜோதிடத்தில் சனியில் சுழற்சி பற்றி எழுதாதது அனைவரும் வருந்த வேண்டிய விஷயமா. :) :) :)
//ஜோதிடம் வானவியலிடமிருந்துதான் தோன்றியது என்று உங்களைப் போன்றோரும் அடிக்கடி குறிப்பிடுகிறீர்களே அப்படியானால் வானவியல் தானே முதலில் சொல்லியிருக்கும்.//
இது உங்கள் ஊகம்.
அதற்கு முன்னர் வானவியல் என்று நீங்கள் எவற்றை எல்லாம் கூறுகிறீர்கள் என்று தெளிவாக விளக்கிவிட்டால் நல்லது
ஏனென்றால் விரோதி ஆண்டில் நோய் பரவும் என்று எனக்கு தெரிந்த அளவில் வானவியலில் இல்லை. ஜோதிடத்தில் இடைக்காடர் எழுதிவைத்துள்ளார். நீங்கள் கூறிய ஏற்கனவே வானவியலிலும், உயிரியலிலும் விளக்கப் பட்டவைதானே என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதால் அந்த கருத்திற்கு தான் நான் விளக்கம் கேட்டேன்.
இது குறித்து நீங்கள் முதலில் கூறியது இப்படிக் கோள்கள் மற்றும் சூரியன், சந்திரனின் ஈர்ப்பு விசைகளினடிப்படையில் பூமியின் தட்பவெட்பத்திலும், வானிலையிலும் மாறுதல்கள் நடைபெறுவது, மற்றும் அதனடிப்படையில் உயிர்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்வது எல்லாம் ஏற்கனவே வானவியலிலும், உயிரியலிலும் விளக்கப் பட்டவைதானே டாக்டர்.
இப்பொழுது கூறுவது அப்படியானால் வானவியல் தானே முதலில் சொல்லியிருக்கும்.
ஆக நீங்கள் உறுதியாக தெரிந்து கூறுகிறீர்களா அல்லது ஊகத்தின் அடிப்படையில் கூறுகிறீர்களா என்பதே தெளிவில்லை
முதலில் உறுதியான தகவல் போல் கூறினீர்கள். இப்பொழுது ஆதாரம் கேட்டவுடன் ஊகம் போல் கூறுகிறீர்கள் :) :) :)
நல்ல தகவல்கள் டாக்டர்.
//ஒரு வேளை நீங்கள் ஒரு வாகனத்தில் இரண்டரை நாட்கள் தான் செல்ல முடியும் என்றால் 60 ஆண்டுகள் நாட்கள் கழித்து தான் அதே வாகனம் அதே வழியில் செல்ல முடியும்//
குழப்புகிறதே டாக்டர்?
..............................
ஒரு சந்தேகம், 60 வருடத்திற்குப் பிறகு டெண்டுல்கர் சேப்பாக்கத்தில் ஆடினால், (அல்லது ஆடவில்லை என்றால்) அப்போதும் நீங்கள் அவரைத்தான் உதாரணம் சொல்வீர்களா? ;)
//உயிரியல் எப்போது சொன்னது என்று தெரியாது டாக்டர். உங்களிடம் விடையிருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.//
நீங்கள் கூறிய கருத்தின் மீது எனக்கு உடன்பாடு இல்லை என்பதால் நான் ஆதாரம் கேட்டால் அந்த ஆதாரத்தை நீங்கள் தானே அளிக்க வேண்டும்
என்னிடம் ஆதாரம் இருந்தால் நான் உங்கள் கருத்துடன் இசைந்து சென்றிருப்பேனே. நானே அந்த ஆதாரத்தை அளித்திருப்பேனே. ஏன் அதற்கு ஆதாரம் கேட்கவேண்டும்
:) :) :)
//ஆனால், எது எப்போது தோன்றியிருந்தாலும், ஜோதிடத்தில் மனித குலத்திற்குப் பொதுவான, மற்றும் முன்னிறுத்தும் கோட்பாடுகளை அதனுடைய அடிப்படைகளைக் கொண்டே நிகழ்வுகளை விளக்குவதோ அல்லது நிரூபனம் செய்து காட்டும் ஒரு சர்வதேச அளவிலான அமைப்போ ஜோதிடர்களுக்கிடையே கூட இல்லை டாக்டர்.//
உண்மை
சித்த மருத்துவம், ஆயூர்வேதம் போன்றவைகளும் இதே நிலையில் தான் இருக்கின்றன
//இன்றைக்கு இது just curiosity of simple calculations என்ற அடிப்படையில் தனி மனிதர்களிடம் இருக்கிறது அவ்வளவுதான். கடவுள் நம்பிக்கை போல இதுவும் ஒரு சிலரின் நம்பிக்கைகள் அவ்வளவுதான் டாக்டர், அது வளரவில்லை அல்லது வளர்த்துக் கொள்ளவில்லை. உங்களுக்கு இதனை ஏற்றுக் கொள்வதில் சிக்கல் இருக்கலாம், ஆனால் அதுதான் உண்மை.//
எனக்கு இதை (இந்த கருத்தை) ஏற்றுக்கொள்ள சிக்கல் எதுவும் இல்லை.
ஆனால் புவி வெப்பம் என்பதை ஏற்றுக்கொள்வதில் இன்னமும் சிக்கல் இருக்கிறது :) :) புரிகிறதா :) :)
//ஜோதிடம் பற்றி இனி இவ்வுரையாடலைத் தொடர விருப்பம் இல்லை டாக்டர்.
என்னைப் பொருத்த வரையில் ஜோதிடம் ஒரு காலவிரயம்.//
உங்கள் கருத்தை மதிக்கிறேன் !!
//மற்றும் புவி வெப்பநிலை மாறுபாடு குறித்து ஏதாவது விரிவாகப் பேசலாம், பகிர்ந்து கொள்ளலாம். //
புவி வெப்பநிலை மாறுபாடு என்பது குறித்த தெளிவான புள்ளி விபரங்கள் எதுவும் இல்லை
உதாரணமாக நீங்கள் அளித்த படத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் இருக்கும் 0 என்பது எதை குறிக்கிறது என்று விளக்கம் எங்கு கிடைக்கும்
நல்ல தகவல்கள் டாக்டர்.
//ஒரு வேளை நீங்கள் ஒரு வாகனத்தில் இரண்டரை நாட்கள் தான் செல்ல முடியும் என்றால் 60 ஆண்டுகள் நாட்கள் கழித்து தான் அதே வாகனம் அதே வழியில் செல்ல முடியும்//
குழப்புகிறதே டாக்டர்?
இல்லை. நான் தவற்றை திருத்தி விட்டேனே
ஒரு வேளை நீங்கள் ஒரு வாகனத்தில் இரண்டரை நாட்கள் தான் செல்ல முடியும் என்றால் 60 நாட்கள் கழித்து தான் அதே வாகனம் அதே வழியில் செல்ல முடியும்
//ஒரு சந்தேகம், 60 வருடத்திற்குப் பிறகு டெண்டுல்கர் சேப்பாக்கத்தில் ஆடினால், (அல்லது ஆடவில்லை என்றால்) அப்போதும் நீங்கள் அவரைத்தான் உதாரணம் சொல்வீர்களா? ;)//
சிறந்த மட்டையாளரை உதாரணம் சொல்வேன்
அறுபது வருடம் என்ன, பத்து வருடம் கழித்து கூட சச்சினை விட சிறந்த மட்டையாளர் யாராவது இருந்தால், அவரை உதாரணம் சொல்வேன்
ஊகங்கள் பற்றிய கேள்விகளுக்கு நாளை பதிலளிக்கிறேன் டாக்டர்.. ஆனால், அமைப்பு சார்ந்த கேள்விக்கு இன்னும் உங்களிடமிருந்து பதில் வரவேயில்லை.. நழுவிக்கொண்டேயிருக்கிறீர்கள்..
இவ்விடுகை பன்றிக்காய்ச்சல் பற்றிய முந்தைய இடுகையின் தொடர்ச்சி என்று எண்ணியே உரையாடிக்கொண்டிருந்தேன்.
விரிவாக மீண்டும் நாளை பேசலாம்..
//ராகுவும் கேதுவும் எங்க இருக்குன்னு சொன்னீங்கன்னா உங்களுக்கு புண்ணியமாப் போகும்//
பூமி சூரியனை சுற்றி வரும் planeம் சந்திரன் பூமியை சுற்றி வரும் planeம் ஒன்றல்ல
இரண்டும் வெவ்வேறு planeகள்
The lunar nodes are the orbital nodes of the Moon, that is, the points where the orbit of the Moon crosses the ecliptic (which is the apparent path of the Sun across the heavens against the background stars). The ascending node is where the moon crosses to the north of the ecliptic. The descending node is where it crosses to the south.
Eclipses occur only near the lunar nodes: Solar eclipses occur when the passage of the Moon through a node coincides with the new moon; lunar eclipses occur when it coincides with the full moon. The Moon's distance to the nodes will be less than about 1.5°.[1]
The lunar nodes precess rather quickly around the ecliptic, completing a revolution (called a draconitic or nodical period, the period of nutation) in 6793.5 days or 18.5996 years
அவை இரண்டும் virtual points. அந்த இடத்தில் இருக்காது !!
----
நீங்கள் கண்ணாடியில் பார்த்தால் உங்கள் உருவம் தெரிகிறதல்லவா. ஆனால் கண்ணாடிக்கு அந்தப்பக்கம் நீங்கள் நிற்பதில்லையே.. அது போல் !!
The lunar orbit is inclined by about 5 degrees on the ecliptic: hence the Moon can be up to about 5 degrees North of the ecliptic, and as much South of the ecliptic. The ecliptic is inclined by about 23.4° on the celestial equator, the plane that is perpendicular to the rotation axis of the Earth. As a consequence, once during the 18.6-year nodal period, when the ascending node of the Moon's orbit coincides with the vernal equinox, then the Moon reaches extreme northern and southern declinations. Then it also has its extreme northern and southern azimuth points of rising and setting on the horizon; its extreme lowest and highest altitude when crossing the meridian; and potentially extreme late first sightings of the new moon. Furthermore, occultations by the Moon of the bright star group the Pleiades, which are over 4° North of the ecliptic, occur during a comparatively brief period once every nodal period.
இந்தப் படத்தை பாருங்கள்
//ஊகங்கள் பற்றிய கேள்விகளுக்கு நாளை பதிலளிக்கிறேன் டாக்டர்.. ஆனால், அமைப்பு சார்ந்த கேள்விக்கு இன்னும் உங்களிடமிருந்து பதில் வரவேயில்லை.. நழுவிக்கொண்டேயிருக்கிறீர்கள்..//
எது அமைப்பு சார்ந்த கேள்வி என்று கூறுங்கள். பதிலளிக்கிறேன்
நான் எந்த கேள்விக்கும் நழுவவில்லை. நீங்கள் தான் கேள்வி கேட்காமல் நழுவுகிறீர்கள் :) :) :)
எந்த கேள்வி என்றாலும் பதிலளிக்க நான் தயார்.
//இவ்விடுகை பன்றிக்காய்ச்சல் பற்றிய முந்தைய இடுகையின் தொடர்ச்சி என்று எண்ணியே உரையாடிக்கொண்டிருந்தேன்.//
அப்படி நான் எங்குமே சொல்லவில்லையே
என் பதிவின் பிற இடுகைகளை பாருங்கள். இடுகைத்தொடர் என்றால் தெளிவாக முந்தையை இடுகைகள் இவை, அடுத்த இடுகைகள் இவை என்று நான் குறிப்பிட்டு இருக்கிறேன்
---
மீண்டும் ஊகம் தானா
---
சரி கேள்வியை கேளுங்கள் பதிலளிக்கத்தயார்
//விரிவாக மீண்டும் நாளை பேசலாம்..//
நான் தயார்
நீங்கள் கேள்வியை கேட்கலாம்.
கேள்வி கேட்காமல் நான் நழுவினேன் என்று சொல்வது கொஞ்சம் கூட சரியில்லை கையேடு சார்
இரண்டு சுழல்(periodic) நிகழ்வுகள் வெவ்வேறு சுழற்சிக்காலங்களில்(period) நிகழ்ந்தால், அவற்றால் இரண்டு மதிப்புகள் X,Y சுழற்சித்தன்மையுடன் தொடர்ந்து மாறிக்கொண்டிருந்தால், இவற்றின் நேர்சார் கூட்டுமதிப்பு (linear) சார்ந்திருக்கும் இன்னொரு மதிப்பும் சுழற்சித்தன்மையுடன் இருக்கும். அதன் சுழற்சிக்காலம் இரண்டு சுழற்சிக்காலங்களின் மீச்சிறு மடங்காகத்தானே இருக்க வேண்டும்.
முறையே 1 ஆண்டு, 2.5 ஆண்டுகள் சுழற்சிக்காலங்கள் கொண்ட இரண்டு நிகழ்வுகளின் கூட்டு விளைவின் சுழற்சிக்காலம் 5 ஆண்டுகளாகத்தானே இருக்க வேண்டும்.
எனது புரிதலில் கோளாறு இருந்தால் தெரியப்படுத்தவும்.
//முறையே 1 ஆண்டு, 2.5 ஆண்டுகள் சுழற்சிக்காலங்கள் கொண்ட இரண்டு நிகழ்வுகளின் கூட்டு விளைவின் சுழற்சிக்காலம் 5 ஆண்டுகளாகத்தானே இருக்க வேண்டும்.//
சுழற்சிக்காலம் 12 மற்றும் 30
Period of Total Cycle = 12 years for Jupiter and 30 years for Saturn
1 வருடம் என்பதும் 2.5 வருடம் என்பதும் மொத்த சுழற்சி காலத்தில் 1/12 கால அளவே
ஆக நீங்கள் கூறிய 5 x 12 = 60 ஆண்டுகள்
//எனது புரிதலில் கோளாறு இருந்தால் தெரியப்படுத்தவும். //
நீங்கள் 1 வருடம் என்பதை சுழற்சி காலமாக எடுத்துள்ளீர்கள். சுழற்சி காலம் 12 வருடங்கள்
12, 30 ஆண்டுகள் சுழற்சிக்காலம் கொண்ட இரண்டு நிகழ்வுகளின் கூட்டு விளைவின் சுழற்சிக்காலம் 60 ஆண்டுகள்தான். கணக்கு சரிதான். 1,2.5 எண்களை நான் சுழற்சிக்காலங்கள் என்று அவசரத்தில் எண்ணி விட்டேன். முழுமையாக படிக்காமல் கடைசிக்குத் தாவுவதன் விளைவு :)
ஆனால், நீங்கள் கூறியுள்ள பாதை, வாகன அனாலஜி தவறு என்று நினைக்கிறேன். ஏன் இதை ஒரு permutation ஆக நினைக்கிறீர்கள் என்று குழம்புகிறேன்! ( தூக்கக் கலக்கத்தில் மறுபடியும் தவறாகப் புரிந்து கொண்டேனோ தெரியேன்.)
//ஆனால், நீங்கள் கூறியுள்ள பாதை, வாகன அனாலஜி தவறு என்று நினைக்கிறேன். ஏன் இதை ஒரு permutation ஆக நினைக்கிறீர்கள் என்று குழம்புகிறேன்! ( தூக்கக் கலக்கத்தில் மறுபடியும் தவறாகப் புரிந்து கொண்டேனோ தெரியேன்.)//
உதாரணமாக 5 நாட்களை எடுத்துக்கொள்வோம்
நாள் 1 : வழி 1 வாகனம் 1 + வழி 1 வாகனம் 1
நாள் 2 : வழி 2 வாகனம் 1 + வழி 2 வாகனம் 1
நாள் 1 : வழி 3 வாகனம் 1 + வழி 3 வாகனம் 2
நாள் 1 : வழி 4 வாகனம் 2 + வழி 4 வாகனம் 2
நாள் 1 : வழி 5 வாகனம் 2 + வழி 5 வாகனம் 2
(நாளை முதல் பாதி, இரண்டாம் பாதியாக பிரியுங்கள்)
(வருடத்தையும் முதல் பாதி இரண்டாம் பாதியாக பிரியுங்கள்)
வருடம் 1 : குரு மேஷம் சனி மேஷம் + குரு மேஷம் சனி மேஷம்
வருடம் 2 : குரு ரிஷபம் சனி மேஷம் + குரு ரிஷபம் சனி மேஷம்
வருடம் 3 : குரு மிதுனம் சனி மேஷம் + குரு மிதுனம் சனி ரிஷபம்
வருடம் 4 : குரு கடகம் சனி ரிஷபம் + குரு கடகம் சனி ரிஷபம்
வருடம் 5 : குரு சிம்மம் சனி ரிஷபம் + குரு சிம்மம் சனி ரிஷபம்
இப்படியே 60 வரை போட்டு பாருங்கள்
//எது அமைப்பு சார்ந்த கேள்வி என்று கூறுங்கள். பதிலளிக்கிறேன்//
மன்னிக்கவும் டாக்டர். அதற்கான பதில் முதல் பின்னூட்டத்தில் இல்லாததால் நான் பின்னூட்டிவிட்டுச் சென்றுவிட்டேன், பின்னர்தான் உங்களது மற்றைய பின்னூட்டங்களைக் கண்டேன். அதைத் தவிர்த்துவிடுங்கள் மன்னிக்கவும்.
ஊகம்1: உயிரியல் பற்றி:
எனக்கு குறிப்பாக உயிரியல் எந்த ஆண்டில் சூழலுக்குத் தகுந்தார்போல் தகவமைத்துக் கொள்வது என்கின்ற தத்துவத்தை முன்மொழிந்தது என்றுதான் தெரியவில்லை என்று கூறினேன். எனக்குத்தெரிந்து பரிணாமக் கொள்கைதான் அதை மிகச் சிறப்பாக செய்தது, ஆனால், அதற்கு முன்னர் ஏதேனும் குறிப்புகள் உள்ளனவா என்பதுகுறித்து தேடிப்பார்க்கவேண்டும்.
உயிரியல் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது என்பதனை நான் எந்த அர்த்தத்தில் பயன்படுத்துகிறேன் என்று விளக்கிவிடுகிறேன். உயிரியல் ஒரு கருத்தை முன்மொழிந்தது வேண்டுமானால், ஜோதிடத்திற்குப் பின் இருக்கலாம் அல்லது முன்னும் இருக்கலாம். ஆனால், அதேகருத்தை ஆதாரப்பூர்வமாக ஆய்வுரீதியாக உயிரியல் ஜோதிடத்திற்கு முன்னரே செய்துவிட்டது. உதாரணமாக சூழலுக்குத் தகுந்தது போல தகவமைத்துக் கொள்வது என்பதை இன்று வரை ஆதாரப்பூர்வமாக நிரூபித்துக் கொண்டேயிருக்கிறது உயிரியல்.
கருத்தை பொத்தாம் பொதுவாக முன்மொழியும் காலங்களில் ஏற்ற இறக்கம் இருக்கலாம், ஆனால், முன்மொழிந்த கருத்தை ஆதாரத்தோடு நிரூபனம் செய்கிறது உயிரியல், அந்த வகையில் பல இடங்களில் ஜோதிடத்திற்கு முன்னரே உயிரியல் தனது கருத்துக்களை ஆதாரப்பூர்வமாக நிரூபனம் செய்து இருக்கிறது செய்துகொண்டும் இருக்கிறது.
நான் மேற்கூறியது தவறு என்றால்? ஒரு நண்டின் வாழ்க்கைச் சுழற்சிமுறையை விளக்கும் ஜோதிட நூலை மேற்கோள் காட்டுங்கள். எந்த ஆண்டு? எந்த ஜோதிடர் நண்டுகளின் வாழ்க்கை முறையக் கொண்டு தனது ஜோதிடக் கருத்தாகிய சுழற்சி முறையை நிரூபனம் செய்தார்? இந்த நிரூபனம் கடல்நண்டுகளுக்கு மட்டுமா அல்லது கோடைக்காலங்களில் தண்ணீரே இல்லாத வயல் வெளிப் பொந்துகளுக்குள் வாழும் நண்டுகளுக்கும் பொருந்துமா? இப்படியான நண்டுகள் பற்றிய case studies ஜோதிடத்தில் உண்டா?
இரண்டு சுழற்சி முறையும் ஒன்றாகயிருக்கிறது பார் என்று மேம்போக்காக ஓட்டிச் செல்லக்கூடாது முறையாக விரிவாக ஜோதிடத்தின் துணையோடு விளக்கவேண்டும்.
மேலும் நீங்கள் சதைப்பகுதியின் அளவின் மாறுபாடு பற்றிதான் குறிப்பிட்டிருக்கீறீர்கள், ஏன் அதன் கண்கள் பாதிப்படைவதில்லையா? இல்லையென்றால் ஒரே நண்டில் சதைப்பகுதி மாற்றம் கொள்வது எதனால்? இது போன்ற சுழற்சி முறை பாதிப்புகள் மனிதனது அனைத்து செல்களுக்கும் உண்டா? இது போன்ற கேள்விகள் குறித்து ஜோதிடம் என்ன கூறுகிறது.
ஒரு செல் உயிரி பல செல் உயிரியாக மாறியதற்கு ஜோதிடத்தின் கிரக அமைப்புகள் என்ன விளக்கத்தை முன்மொழிகின்றன? சூழலுக்குத் தகுந்தார்போல மாற்றம் பெறுவது பற்றியும் செல்களின் இறப்பு பற்றி ஜோதிடம் என்ன குறிப்பிடுகிறது? ஒரு மனிதனது உடலில்ஒருவேளை கிரகங்களின் தாக்கத்தால் பாதிப்புகள் ஏற்படுமா? அப்படி ஏற்பட்டால், அவனது அனைத்து செல்களும் பாதிப்பிற்குள்ளாகுமா? ஆம் என்றால் விளக்கம் தேவை இல்லையென்றால் ஏன் அப்படியில்லை? அல்லது செல்களை ஜோதிடம் உயிராக மதிக்கிறதா இல்லையா?
ஜோதிடம் என்பது உயிரியல் தத்துவம் அல்ல என்று ஒற்றை வரியில் கூறிவிட்டுச் செல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
ஊகம்2: நோய் பற்றி:
இன்றைய தேதியில் தமிழகத்தில் யாரிடம் சென்றும் இப்பாடலைப் பற்றி குறிப்பிட்டு பெரும்நோய் வந்து சேரும் என்று கூறியிருக்கிறார் என்று கூறினால் அவர்கள் உடனடியாக இப்போது பரவிவரும் ஃப்ளூ பற்றிதான் ஊகிப்பார்கள்.
இல்லை!!! அந்தப் பாடலில் அவர் குறிப்பிடும் நோயும் அதுவல்ல, நீங்களும் தற்போதைய ஃப்ளூவை நினைத்து இப்பாடலை இப்போது இங்கே பகிரவில்லை என்றால்?அவர் என்ன நோயைக் குறிப்பிடுகிறார்? அது எப்போது வரும்? தற்போது வந்திருக்கும் நோய் பற்றி ஏன் குறிப்பிடவில்லை.
மேலும், இடைக்காடரது ஊகத்தைத்தான் நீங்கள் இப்போது முன்மொழிகிறீர்கள். அதைவிடக் கொடுமை அவர் உலகம் அழியும் என்றிருக்கிறார். ஆனால், நீங்களோ வசதியாக நாடுகளுக்கிடையே போர் ஏற்படும் மற்றும் அழிவு வரும் என்று சுருக்கிக்கொள்கிறீர்கள். அப்படியானால் இடைக்காடரது பார்வையில் உலகம் என்பது என்ன?
ஊகம் 2 பற்றி அறிந்து கொள்ள வாசகர்களின் நேர்மையின் மீது நம்பிக்கை வைத்து ஒரு சுவாரஸ்யமான சோதனைச் செய்வோம் (உங்களுக்கு விருப்பமிருந்தால்). உங்களது இடுகையிலிருந்து இடைக்காடரது பாடலையும் அதன் விளக்க வரிகளையும் தனியானதொரு இடுகையாக இட்டு வாசகர்களின் கருத்தைக் கேளூங்கள் பெரு நோய் வந்து சேரும் என்ற விளக்கத்திற்கு அவர்களுக்கு உடனடியாக என்ன தோன்றியது என்று பின்னூட்டட்டும். முடிவு எப்படியிருக்கிறதோ அதனடிப்படையில், உங்களுக்கு உங்களது மொழிவன்மையை மேம்படுத்திக்கொள்ள உதவியாகயிருக்கும், எனது வாசிப்பின் நேர்மையை அதிகப்படுத்திக்கொள்ள எனக்கும் உதவியாக இருக்கும். ஏன் இதை என்னுடைய பதிவில் செய்யக்கூடாது என்று தொன்றலாம், உங்கள் பதிவிற்கு இருக்குமளவிற்கு எனது பதிவிற்கு outreach கிடையாது அதனால்தான்.
// இப்படிக் கோள்கள் மற்றும் சூரியன், சந்திரனின் ஈர்ப்பு விசைகளினடிப்படையில் பூமியின் தட்பவெட்பத்திலும், வானிலையிலும் மாறுதல்கள் நடைபெறுவது, மற்றும் அதனடிப்படையில் உயிர்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்வது எல்லாம் ஏற்கனவே வானவியலிலும், உயிரியலிலும் விளக்கப் பட்டவைதானே டாக்டர்//
இங்கே எனது மொழியில் இருக்கும் ஏற்கனவே பற்றி மேலே விளக்கிவிட்டேன்.
இவ்வரிகளில் நான் குறிப்பிட்டது புவியின் தட்பவெப்ப நிலையில், மாறுதல்கள் உண்டாகும் என்பதை சூரியன், பூமி பற்றிய வானவியல் ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளன, பின்னர் பூமியின் தட்பவெப்ப நிலை பற்றி விரிவாக அலசச் சூழலியல் அல்லது சுற்றுச்சூழல் அறிவியல் என்ற துறை பின்னர் வந்திருக்கலாம்.
மேலும், சூழலுக்கு ஏற்றார் போல், உயிரிகள் தங்களைத் தகவமைத்துக் கொள்வது என்பதை உயிரியல் குறிப்பிட்டிருக்கிறதுதானே. மிகவும் நுட்பமாக இவ்வுறவு எந்த ஆண்டு யாரால் முன்மொழியப்பட்டது என்பதுதான் தெரியவில்லை என்று கூறினேன். அப்படி எனக்குத் தெரிந்த உதாரணம் வேண்டுமென்றால் நான் டார்வினிடம்தான் தஞ்சம் அடைவேன். அதற்கு முன்னர் ஏதாவது குறிப்புகள் இருக்கிறதா என்பதை உயிரியல் நிபுணர்கள்தான் குறிப்பிடவேண்டும்.
அதெல்லாம் கிடையாது நீ ஏன் முன்னர் அப்படிக் கூறினாய் என்றால் மன்னித்துவிடுங்கள். இனி தெளிவாக உரையாடுகிறேன்.
இப்போது நீங்கள் கூறுங்கள் ஜோதிடத்தில் எந்த ஆண்டு உயிர்கள் சூழலுக்குத் தகுந்தார் போல் தகவமைத்துக் கொள்வது முன்மொழியப்பட்டது, யாரால் முன்மொழியப்பட்டது? இதற்கான நிரூபனத்திற்கு அவர்கள் செய்த முயற்சிகள் என்ன?
இப்போது வெப்பநிலை குறித்து சுருக்கமாகவும் விரிவாகவும்: what is your zero? அறிவியலில் மிகவும் முக்கியமான மற்றும் சுவாரஸ்யமான கேள்வி இது? நான் மிகவும் இரசித்த கேள்வியும் கூட..
பொதுவாக வெப்பநிலை வேறுபாடுதான் முக்கியம் அல்லது குறைவான error ஐக் கொடுக்கும். மேலும், நான் அளித்த வரைபடம் 1981-1994 வரையிலான வெப்ப நிலையை அடிப்படையாகக் கொண்டு வெப்பநிலை வேறுபாட்டைக் கணக்கிட்டது என்று கருதுகிறேன். ஆக்சிஜன் ஐசோடோப் ஒன்றின் உதவியுடன் வெப்பநிலையைக் கணக்கிடுவார்கள் என்று நினைவு. எப்படி?? என்றால் மீண்டும் ஒரு வெள்ளோட்ட வாசிப்பு செய்துவிட்டுத்தான் விளக்க வரவேண்டும். மேலும், புவிப்பரப்பிற்கான வெப்பநிலையை பூமியின் கருப்பொருளின் வெப்ப விரவல் குறித்த அறிவுடன் கண்டுபிடிக்கப்பட்ட மாதிரியைப் பயன்படுத்துவார்கள் என்று கருதுகிறேன்.
மேலும், கணக்கிடுதல் முறை, மற்றும் வெப்பநிலையை விடுத்து வெப்பநிலை மாறுபாட்டைக் கொள்ளவேண்டும் என்பதற்கே தனியாக இரண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார் JE Hanson என்பவர். இதற்கான ஆதார மூலங்களான ஆய்வுக்கட்டுரைகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன். வெள்ளியிரவுக்குள் மீண்டும் விரிவான விளக்கத்துடன் வருகிறேன்.
மன்னிக்கவும் டாக்டர் கொஞ்சம் அலுவல் அதிகம் அக்கட்டுரைகளைத் தேடவேண்டும்.
இந்த நேரத்தில் உங்களிடம் வாயைக்கொடுத்திருக்கவே கூடாது என் தவறுதான். :)
//இன்றைய தேதியில் தமிழகத்தில் யாரிடம் சென்றும் இப்பாடலைப் பற்றி குறிப்பிட்டு பெரும்நோய் வந்து சேரும் என்று கூறியிருக்கிறார் என்று கூறினால் அவர்கள் உடனடியாக இப்போது பரவிவரும் ஃப்ளூ பற்றிதான் ஊகிப்பார்கள்//
என் ஊகமும் ஸ்வைன் ஃபுளூதான் கையேடு. WHO எபிடெமிக்னு சொன்னதுக்கு அப்புறம் அது பெரு நோய் இல்லைன்னு நான் சொல்ல மாட்டேன். :) அதுக்கு மெல்பர்ன்ல வாக்சினேஷன் கண்டு பிடிச்சாச்சு. இன்னும் மூன்று மாதங்களில் தயாராகி விடுமாம.
//உயிரியல் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது என்பதனை நான் எந்த அர்த்தத்தில் பயன்படுத்துகிறேன் என்று விளக்கிவிடுகிறேன். உயிரியல் ஒரு கருத்தை முன்மொழிந்தது வேண்டுமானால், ஜோதிடத்திற்குப் பின் இருக்கலாம் அல்லது முன்னும் இருக்கலாம். ஆனால், அதேகருத்தை ஆதாரப்பூர்வமாக ஆய்வுரீதியாக உயிரியல் ஜோதிடத்திற்கு முன்னரே செய்துவிட்டது. உதாரணமாக சூழலுக்குத் தகுந்தது போல தகவமைத்துக் கொள்வது என்பதை இன்று வரை ஆதாரப்பூர்வமாக நிரூபித்துக் கொண்டேயிருக்கிறது உயிரியல்.//
கையேடு சார்
முதலில் கூறியது யார் என்பது வேறு
முதலில் நிருபித்தது யார் எனப்து
வேறு
--
விஞ்ஞான ரீதில் இதனால் இது வருகிறது என்று நிருபிக்க வழிமுறைகள் உள்ளன
--
அப்படி நிருபிப்பதற்கு முதல் நிலை temporal association என்று கூறப்படும்
--
அதன் பிறகு
2. Strength of Association
3. Specificity of Association
4. Consistency of Association
5. Biological Plausibility
6. Coherence of Association என்று மொத்தம் ஆறு நிலைகள் இருக்கின்றன
உதாரணமாக புகை பிடித்தால் நுரையீரல் புற்று நோய் வரும் என்று விஞ்ஞான சொல்கிறது என்றால் அதை பிராட்போர்ட் ஹில் விதிகளின் படி நிருபித்துள்ளார்கள்
--
ஜோதிட ரீதியில் பல கருத்துகள் முதல் நிலையிலேயே உள்ளன
--
முதலில் அஸ்திவாரம் கட்டியது யார் என்ற கேள்விக்கும் முதலில் வீட்டை கட்டி முடித்தது யார் என்ற கேள்விக்கும் வித்தியாசம் உள்ளது
--
முதலில் வீட்டை கட்டி முடிப்பது பெரிய விஷயம் தான். ஆனால் முதலில் வீட்டை கட்டியவர் தான் முதலில் அஸ்திவாரம் கட்டியவை என்று முடிவெடுக்க முடியாதல்லவா :) :) :)
//நான் மேற்கூறியது தவறு என்றால்? ஒரு நண்டின் வாழ்க்கைச் சுழற்சிமுறையை விளக்கும் ஜோதிட நூலை மேற்கோள் காட்டுங்கள்.//
நீங்கள் நண்டு சாப்பிடுபவர்களிடம் நேரடியாக கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
பின் குறிப்பு. இது temporal association மட்டும் தான். இன்னும் மீதி ஐந்து விதிகளும் பூர்த்தி செய்யப்படவில்லை
//நான் மேற்கூறியது தவறு என்றால்? ஒரு நண்டின் வாழ்க்கைச் சுழற்சிமுறையை விளக்கும் ஜோதிட நூலை மேற்கோள் காட்டுங்கள். எந்த ஆண்டு? எந்த ஜோதிடர் நண்டுகளின் வாழ்க்கை முறையக் கொண்டு தனது ஜோதிடக் கருத்தாகிய சுழற்சி முறையை நிரூபனம் செய்தார்? இந்த நிரூபனம் கடல்நண்டுகளுக்கு மட்டுமா அல்லது கோடைக்காலங்களில் தண்ணீரே இல்லாத வயல் வெளிப் பொந்துகளுக்குள் வாழும் நண்டுகளுக்கும் பொருந்துமா? இப்படியான நண்டுகள் பற்றிய case studies ஜோதிடத்தில் உண்டா?//
நண்டு சாப்பிடுபவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி சார் இது. நீங்கள் தப்பான கேள்வி கேட்கிறீர்கள். தப்பானவர்களிடம் கேட்கிறீர்கள் :) :) :)
//இரண்டு சுழற்சி முறையும் ஒன்றாகயிருக்கிறது பார் என்று மேம்போக்காக ஓட்டிச் செல்லக்கூடாது முறையாக விரிவாக ஜோதிடத்தின் துணையோடு விளக்கவேண்டும்.//
இதை விளக்க வில்லை என்றால் அது பொய் என்று ஆகிவிடுமா !!
கையேடு சார்,
எந்த ஒரு விஞ்ஞான் கோட்பாடும் முதலில் hypothesis நிலையில் தான் இருக்கும்
அதற்கான காரண காரணிகள் கண்டுபிடிக்கப்படுவது அதற்கு பிறகு தான்.
இது அனைத்து விதிகளுக்கும் பொருந்தும்
மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் மின்சக்தி electronகளினால் உண்டாகிறது என்று தெரியாது என்பது உங்களுக்கு தெரியுமா
//ஜோதிடம் என்பது உயிரியல் தத்துவம் அல்ல என்று ஒற்றை வரியில் கூறிவிட்டுச் செல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.//
சரியென்று நிருபிக்கப்பட்ட hypothesis தவிர மீதி எல்லாம் தவறாகிவிடாது.
அது தவறென்றால் அது தவறென்று நிருபிக்கப்பட வேண்டும். உயிரியல் என்றாலும் சரி, ஜோதிடம் என்றாலும் சரி
உதாரணம் : சூரிய கிரகணம் பாம்பு சூரியனை சாப்பிடுவதால் என்ற hypothesis தவறு என்று நிருபிக்கப்பட்டுள்ளது
////அப்ப ஜோசியம் உண்மைன்னு சொல்லறிங்களா...???//
முழுப்பொய் இல்லைன்னு சொல்றேன்//
ஜோசியத்தில் எதுவெல்லாம் உண்மையென்று சொல்கிறீங்களா?
மிகவும் ஆவலுடன் - ஊர்சுற்றி.
//ஆனால் கால மாற்றங்கள், பருவ நிலை மாற்றங்கள் ஒன்று போல் உள்ளது அல்லவா//
இதற்கும் ஜோசியத்திற்கும் என்ன சம்பந்தம்?
//இல்லை!!! அந்தப் பாடலில் அவர் குறிப்பிடும் நோயும் அதுவல்ல, நீங்களும் தற்போதைய ஃப்ளூவை நினைத்து இப்பாடலை இப்போது இங்கே பகிரவில்லை என்றால்?அவர் என்ன நோயைக் குறிப்பிடுகிறார்? அது எப்போது வரும்? தற்போது வந்திருக்கும் நோய் பற்றி ஏன் குறிப்பிடவில்லை.//
நோய் வர வாய்ப்புள்ளது அது H1N1ஆக இருக்கலாம், H2N8 ஆக இருக்கலாம்
அது நோய் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளதை தவிர எந்த நோய் என்று இல்லை என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்
//மேலும், இடைக்காடரது ஊகத்தைத்தான் நீங்கள் இப்போது முன்மொழிகிறீர்கள். அதைவிடக் கொடுமை அவர் உலகம் அழியும் என்றிருக்கிறார். ஆனால், நீங்களோ வசதியாக நாடுகளுக்கிடையே போர் ஏற்படும் மற்றும் அழிவு வரும் என்று சுருக்கிக்கொள்கிறீர்கள். அப்படியானால் இடைக்காடரது பார்வையில் உலகம் என்பது என்ன?//
poetic licence தெரியுமா
// இப்படிக் கோள்கள் மற்றும் சூரியன், சந்திரனின் ஈர்ப்பு விசைகளினடிப்படையில் பூமியின் தட்பவெட்பத்திலும், வானிலையிலும் மாறுதல்கள் நடைபெறுவது, மற்றும் அதனடிப்படையில் உயிர்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்வது எல்லாம் ஏற்கனவே வானவியலிலும், உயிரியலிலும் விளக்கப் பட்டவைதானே டாக்டர்//
பூமியின் தட்பவெட்பத்திலும், வானிலையிலும் மாறுதல்கள் நடைபெறுவது, மற்றும் அதனடிப்படையில் உயிர்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்வது எல்லாம் ஏற்கனவே வானவியலிலும், உயிரியலிலும் விளக்கப் பட்டிருக்கிறது
ஆனால் விரோதி ஆண்டில் நோய் பரவும் என்பது விளக்கப்படவில்லி என்பது என் கருத்து
//வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது சுவாமி// :(
உங்கள் வசிஷ்டர் அவர் பதிவில் ஜோதிடம் பற்றி அவர் கூறிய சில கருத்துகளுக்கு எதிரான என் கேள்விகளுக்கு பதில் சொல்லவே இல்லை. அதை நான் தனி இடுகையாக இடலாம் என்று இருக்கிறேன்.
ஸ்வாமி ஓம்கார் said...
// காவிரி பிரச்சனை போல ஈராக், பாலஸ்தீனம், இலங்கையில் என்ன இயற்கை தொடர்பு இருக்கிறது?//
தனிமனித வாழ்க்கைக்கு ஜோதிடம் அவ்வளவு சரியா பொருந்திவரும் என்று கூறும் ஒரு மாமணி, இப்படி சில்லியாக கேள்விகள் கேட்பது... எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை.
//இங்கே எனது மொழியில் இருக்கும் ஏற்கனவே பற்றி மேலே விளக்கிவிட்டேன்.
இவ்வரிகளில் நான் குறிப்பிட்டது புவியின் தட்பவெப்ப நிலையில், மாறுதல்கள் உண்டாகும் என்பதை சூரியன், பூமி பற்றிய வானவியல் ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளன, பின்னர் பூமியின் தட்பவெப்ப நிலை பற்றி விரிவாக அலசச் சூழலியல் அல்லது சுற்றுச்சூழல் அறிவியல் என்ற துறை பின்னர் வந்திருக்கலாம்.
//
இவ்வரிகளில் நான் குறிப்பிட்டது புவியின் தட்பவெப்ப நிலையில், மாறுதல்கள் உண்டாகும் என்பதை சூரியன், பூமி பற்றிய வானவியல் ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளன
ஆனால் எந்த ஆண்டில் எம்மாதிரி விளைவுகள் அதிகம் ஏற்படும் என்று வானியல் கூறியதற்கு முன்னரே ஜோதிடம் கூறிவிட்டது என்பது என் கருத்து
//மேலும், சூழலுக்கு ஏற்றார் போல், உயிரிகள் தங்களைத் தகவமைத்துக் கொள்வது என்பதை உயிரியல் குறிப்பிட்டிருக்கிறதுதானே//
ஆனால் சனியும், குருவும் இந்த நிலையில் வான மண்டலத்தில் இருக்கும் போது இப்படி நடக்கும் என்று உயிரியல் கூறவில்லை என்றே நினைக்கிறேன்
//அதெல்லாம் கிடையாது நீ ஏன் முன்னர் அப்படிக் கூறினாய் என்றால் மன்னித்துவிடுங்கள். இனி தெளிவாக உரையாடுகிறேன்.//
உங்கள் உரையாடலில் பல பகுதிகள் தெளிவில்லாமல் வெறும் ஊகத்தில் அடிப்படையில் தான் இருக்கின்றன !!!
//இப்போது நீங்கள் கூறுங்கள் ஜோதிடத்தில் எந்த ஆண்டு உயிர்கள் சூழலுக்குத் தகுந்தார் போல் தகவமைத்துக் கொள்வது முன்மொழியப்பட்டது, யாரால் முன்மொழியப்பட்டது? இதற்கான நிரூபனத்திற்கு அவர்கள் செய்த முயற்சிகள் என்ன?//
உயிர்கள் சூழலுக்குத் தகுந்தார் போல் தகவமைத்துக்துக்கொள்வது என்பது உயிரியல் கோட்பாடு. அதை எப்படி சார் ஜோதிடத்தில் கூறுவார்கள் . என்ன கொடுமை சார் இது
//what is your zero? அறிவியலில் மிகவும் முக்கியமான மற்றும் சுவாரஸ்யமான கேள்வி இது? நான் மிகவும் இரசித்த கேள்வியும் கூட..//
நான் கேட்ட கேள்விக்கு வெகு எளிதான ஒரு பதில் உள்ளது
30 டிகிரி அல்லது 31 டிகிரி !!
//நான் அளித்த வரைபடம் 1981-1994 வரையிலான வெப்ப நிலையை அடிப்படையாகக் கொண்டு வெப்பநிலை வேறுபாட்டைக் கணக்கிட்டது என்று கருதுகிறேன். //
1880 என்று அப்படத்தில் உள்ளது என்று கருதுகிறேன்
//ஆக்சிஜன் ஐசோடோப் ஒன்றின் உதவியுடன் வெப்பநிலையைக் கணக்கிடுவார்கள் என்று நினைவு.//
பிரச்சனை அதுவல்ல
நான் அவர்கள் எப்படி கணக்கிட்டார்கள் என்று கேட்கவில்லை
அந்த புள்ளிவிபரங்களை எப்படி வரைபடத்தில் கொண்டு வந்துள்ளார்கள் என்று புரியவில்லை
உதாரணமாக அவர்கள் Y axisல் 20 டிகிடி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் என்று இருந்தால் நான் இந்த கேள்வி கேட்டிருக்கமாட்டேன்
ஆனால் உங்கள் Y axisல் -1.0 முதல் +1.0 இருக்கிறது. இது செல்சியசா, பாரன்ஹீட்டா அலல்து வேறு அளவா என்று புரியவில்லை !! :) :) :)
//மேலும், கணக்கிடுதல் முறை, மற்றும் வெப்பநிலையை விடுத்து வெப்பநிலை மாறுபாட்டைக் கொள்ளவேண்டும் என்பதற்கே தனியாக இரண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார் JE Hanson என்பவர். இதற்கான ஆதார மூலங்களான ஆய்வுக்கட்டுரைகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன். வெள்ளியிரவுக்குள் மீண்டும் விரிவான விளக்கத்துடன் வருகிறேன்.//
வாங்க சார். நீங்கள் உடனடியாக பதிலளிக்கவேண்டும் என்பதில்லை. நிதானமாகவே கூறலாம்.
--
அதே போல் உங்களால் உடனடியாக நிருபிக்க முடியவில்லை என்ற ஒரே காரணத்திற்காக புவி வெப்பமடைவது கோட்பாடு தவறு என்று நான் கூறமாட்டேன்
--
உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் விடையளித்து விட்டேன் என்றே எண்ணுகிறேன். நான் கூறியதில் ஏதாவத் சந்தேகங்கள் இருந்தால் கேட்கவும் :) :)
//இப்படியான அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறை கால மாற்றங்கள் மற்றும் பருவ மாற்றங்கள் ஏற்படுவதை கணித்த முன்னோர்கள் 60 ஆண்டுகளை ஒரு தொகுப்பாக வைத்து அவற்றிற்கு பெயர் சூட்டி உள்ளார்கள்.அது மட்டுமல்லாது அந்த ஆண்டுகளில் என்ன நடந்தது என்பதை பாடல்களாகவும் குறித்து வைத்து சென்றுள்ளார்கள்
-oOo-
உதாரணமாக பார்த்திப ஆண்டிற்கான (2005 ஏப்ரல் 15 முதல் 2006 ஏப்ரல் 14) சித்தர் இடைக்காடர் இயற்றிய வெண்பாவில் “ராஜர் அநியாந் செய்வார் ரதமேறு மாரி இனிதாம் விளைவுமுளவாம்” என்று உள்ளது. !! 2005ல் மழை எப்படி இருந்தது என்று தெரியவில்லை என்றால் 2005 ஜூலையில் மும்பையில் இருந்தவரிடமோ 2005 நவம்பரின் சென்னையில் இருந்தவரிடமோ கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.//
இந்த பாடல்களும் ஜோதிடமும் ஒன்றாப் பின்னிப் பிணைந்தவையா?
பாடல்கள் இயற்றப்பட்ட காலத்தில் ஜோதிடம் எந்த நிலைமையில் இருந்தது?
பாடலில் கூறப்பட்ட கருத்து தமிழகம் அல்லது இந்தியாவின் எல்லைக்கு உட்பட்டதா இல்லை 'பிஜி' தீவிற்கும் இதே பாடல் பொருந்துமா?
//
//இன்றைய தேதியில் தமிழகத்தில் யாரிடம் சென்றும் இப்பாடலைப் பற்றி குறிப்பிட்டு பெரும்நோய்