இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Saturday, August 22, 2009

நண்டும் சந்திரனும் சூரியனும் கடல் நீர் மட்டமும்

நான் சென்ற சூரியனும் சந்திரனும் குருவும் சனியும் விரோதி ஆண்டுபலனும் மழையும் நோயும் !! என்ற இடுகையில் பூமியின் துனைக்கோள் சந்திரனின் சுழற்சி, பூமியின் சுழற்சி, மற்றும் குரு, சனி ஆகிய கிரகங்களின் சுழற்சி ஆகியவை பூமியின் வாழ்க்கையை பாதிக்கவல்லது என்று எழுதியிருந்தேன்

சந்திரன் குறித்த பகுதியில் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தேன்

சந்திர சுழற்சியின் விளைவுகள்
சந்திரன் பூமி சுற்றி வருவதால் ஏதாவது விளைவுகள் ஏற்படுகிறதா என்று கேட்டால், அதற்கான பதில் - ஆமாம்

இது குறித்து பக்கம் பக்கமாக ஆதாரங்கள் அடுக்கினாலும், இதை நம்பாதவர்கள் நம்பப்போவதில்லை. என்றாலும் சில கேள்விகள் மட்டுமே
  1. கடல்களில் அதிக நீர்மட்டம், மற்றும் குறைந்த நீர்மட்டம் (spring and neap tides) எதனால் ஏற்படுகிறது என்று தெரியுமா
  2. நண்டு என்று பிடிக்கப்பட்டாலும் அதில் சதை ஒரே அளவில் தான் இருக்குமா அல்லது அமாவாசை / பௌர்ணமி என்று சதை அளவு மாறுபடுமா
இது குறித்து பதிவர்கள் கையேடு அவர்கள் நண்டுகளுக்கும் கிரக அமைப்புகளுக்கும் நேரடித்தொடர்பு இருக்கிறது என்றால் நீரூபியுங்கள் என்று ஒரு அபார கேள்வியை கேட்டிருந்தார்.

நண்டுகளுக்கும் சந்திரனுக்கும் நேரடித்தொடர்பு இருக்கிறது என்றால் நீரூபியுங்கள் என்று கேட்டிருந்தால் நிருபிக்கலாம். ஆனால் நான் சொல்லாத நண்டு-குரு அல்லது நண்டு -சனி உறவை எப்படி நிருபிக்க முடியும்... என்ன கொடுமை சார் இது :) 


நண்டுகளுக்கும் சந்திரனுக்கும் நேரடித்தொடர்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு விடை தெரிய மூன்று வழிகள் உள்ளன
  1. வழக்கமாக, அடிக்கடி நண்டு சாப்பிடுபவர்களிடம், நண்டு பிடிப்பவர்களிடம், உணவகங்களில் நண்டு சமைப்பவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வது
  2. சுமார் 200 நண்டுகளை வைத்து ethics committee யிடம் அனுமதி வாங்கி ICMRல் பதிந்து triple blind randomised control study செய்து அளவு மாறுபடுகிறதா என்று கண்டறிந்து, அப்படி மாறுபடும் அளவின் arithmetic mean எவ்வளவு, geometric mean எவ்வளவு, range எவ்வளவு, standard deviation எவ்வளவு, variance எவ்வளவு, அது null hypothesis படி வருகிறதா, நண்டின் எடைமாற்றம் standard curveல் இருக்கிறதா, அல்லது அது positive skewed distributionஆ, அதில் regression to mean வருமா போன்ற பல விஷயங்களை ஆராய்வது
  3. ஏற்கனவே இது குறித்து ஆராய்ந்து இருப்பவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்ப்பது
கிட்டத்தட்ட அனைத்து விஞ்ஞான கோட்பாடுகளுக்கும் இது பொருந்தும். உதாரணமாக மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் கம்பியை தொட்டால் ஷாக்கடிக்குமா என்று தெரியவேண்டுமென்றால்
  1. மின் துறையில் பணிபுரிபவர்களிடம், அல்லது மின்சாதனங்களை பழுது பார்ப்பவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்
  2. நீங்களே தொட்டு பார்க்கலாம்
  3. தினத்தந்தி, தினகரனின் “மின்சாரம் பாய்ந்து ஒருவர் பரிதாப சாவு” என்று செய்தி இருக்கிறதா என்று பார்க்கலாம்
நண்டுகளுக்கும் சந்திரனுக்கும் நேரடித்தொடர்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு விடை தெரிய முதல் வழியை கடைபிடிக்க இயலவில்லை / முடியவில்லை / விருப்பமில்லை என்றால் சோதனை செய்து பார்க்கலாம். 
அதற்கு நேரமும் வசதியும் இல்லை என்றால் விஞ்ஞானிகள் ஏற்கனவே செய்த சோதனை முடிவுகளை பார்க்கலாம்


1985 முதல் 1987 வரை, ஒரிசா கடற்கரையில் கோவாவில் உள்ள National Institute of Oceanography நிறுவனத்தால் செய்யப்பட்ட ஆராய்ச்சி
  • ஆராய்ச்சியாளர்கள் : அனில் சட்டர்ஜி, விஜயகுமார், பருலேக்கர்
  • சஞ்சிகை : Asian Fisheries Science 5 (1992) : 123-128
ஜனவரி 1997 முதல் டிசம்பர் 2001 வரை வடகிழக்கு பிரேசிலில், பரைபா என்ற இடத்தில் செய்யப்பட்ட பரிசோதனை
  • ஆராய்ச்சியாளர்கள் : அல்பெர்டோ நிஷைதா, நிவால்டொ நார்டி, ரொமொலொ அல்வேஸ்
  • சஞ்சிகை : Journal of Ethnobiology and Ethnomedicine 2006, 2:1doi:10.1186/1746-4269-2-1 http://www.ethnobiomed.com/content/2/1/1
சோதனை முடிவுகளில் சில :

  • The knowledge on the phases of the moon is a critical factor for the survival of the traditional communities living on coastal zones exploiting the mangrove ecosystem resources, because the lunar cycle affects the biology of the animals and the gatherers collection activities (Alves RRN, Nishida AK: A ecdise do caranguejo-uçá, Ucides cordatus (Crustacea, Decapoda, Brachyura) na visão dos caranguejeiros. Interciencia 2002, 27(3):110-117. 
  • The influence of the phases of the moon and the tide variations on activities of crab gatherers were reported by Alves and Nishida [19] and by Nordi [10]. Nordi N: A captura do caranguejo-uçá (Ucides cordatus) durante o evento reprodutivo da espécie: o ponto de vista dos caranguejeiros. Volume 9. Revista Nordestina de Biologia; 1994:41-47. 
  • Alves and Nishida  pointed out that gatherers of the land crab 'caranguejo uçá' (Ucides cordatus) in Paraíba associate the phases of the moon and the tide variations with the distinct phases of the life cycle of that crustacean, including ecdysis, mating, and spawning. These authors confirmed the gatherers' observation that the ecdysis of U. cordatus is influenced by the tidal cycle
1959ல் அமெரிக்காவில் செய்யப்பட்ட சோதனை
  • ஆராய்ச்சியாளர் : மிரியம் பென்னெட்
  • சஞ்சிகை : Journal of Comparative Physiology A: Neuroethology, Sensory, Neural, and Behavioral Physiology http://www.springerlink.com/content/m1r56780tk56383w/
ஆராய்ச்சி முடிவுகளில் சில
  • These results show that although the phases of such cycles can be set in adaptive relationships with actual tidal events in the organism's natural environment, the cycles are correlated primarily with lunar events.
சந்திரனால் ஏற்படும் நீர்மட்டங்கள் கடல் வாழு உயிரினங்களை பாதிக்கிறது என்று தெளிவாக கூறும் மற்றொரு ஆராய்ச்சி முடிவுகள் http://cat.inist.fr/?aModele=afficheN&cpsidt=16767986

கையேடு சார்
ஜோ சார்

ஆதாரங்கள் போதுமா ??

அல்லது சுமார் 200 நண்டுகளை வைத்து ethics committee யிடம் அனுமதி வாங்கி ICMRல் பதிந்து triple blind randomised control study செய்து அளவு மாறுபடுகிறதா என்று கண்டறிந்து, அப்படி மாறுபடும் அளவின் arithmetic mean எவ்வளவு, geometric mean எவ்வளவு, range எவ்வளவு, standard deviation எவ்வளவு, variance எவ்வளவு, அது null hypothesis படி வருகிறதா, நண்டின் எடைமாற்றம் standard curveல் இருக்கிறதா, அல்லது அது positive skewed distributionஆ, அதில் regression to mean வருமா போன்ற பல விஷயங்களை ஆராய்ந்து சொன்னால் தான் ஏற்றுக்கொள்வீர்களா

மேலும் ஆதாரங்கள் வேண்டுமென்றால் சொல்லுங்கள். சுட்டி தருகிறேன். இதற்கு மேல் இங்கு எழுதினால், பிற வாசகர்கள் என்னை ரவுண்டு கட்டி விடும் அபாயம் இருக்கிறது

இதை படிப்பதற்கு பதில், நண்டு கடையில் விசாரிக்கும் எளிய முறையை தேர்ந்தெடுத்தவர்கள், இன்னேரம் ஏப்பம் விட்டுக்கொண்டிருப்பார்கள் !!

23 மறுமொழிகள்:

kumar said...

விளக்கம் அருமை

சின்ன அம்மிணி said...

மறுபடியும் படிச்சிட்டு வர்றேன். சில இடத்துல புரியலை

T.V.Radhakrishnan said...

present sir

புருனோ Bruno said...

// kumar said...
விளக்கம் அருமை//

நன்றி சார்

புருனோ Bruno said...

// சின்ன அம்மிணி said...
மறுபடியும் படிச்சிட்டு வர்றேன். சில இடத்துல புரியலை//

சந்திர சுழற்சி நண்டின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்றவரையிலாவது புரிகிறதா

புருனோ Bruno said...

// T.V.Radhakrishnan said...
present sir//


:)

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//நீங்களே தொட்டு பார்க்கலாம்//

நல்ல யோசனை.....

//இதற்கு மேல் இங்கு எழுதினால், பிற வாசகர்கள் என்னை ரவுண்டு கட்டி விடும் அபாயம் இருக்கிறது
//

நண்டுக்கு ஒரு குணம் உண்டு தல.., பிடிச்சா விடாதாம். நீங்களும் இப்போது நண்டைப் பிடித்துள்ளீர்கள்.........,

புருனோ Bruno said...

வாங்க தல...

நான் நண்டை பிடித்துள்ளேனா, நண்டு என்னைப்பிடித்துள்ளதா

கடகராசிதான் சந்திரனின் சொந்த வீடு என்பது துனைக்கதை !!

Jawarlal said...

என் ப்ளாக்குக்கு வர்றப்போ சிண்டு முடிஞ்ச நீங்க
உங்க ப்ளாக்குலே நண்டு பிடிச்சிருக்கீங்க
ரெண்டுமே நல்லா இருக்குன்னு கண்டு சொல்லத்தான் வந்தேன்.

http://kgjawarlal.wordpress.com

ஊர்சுற்றி said...

டாக்டர் வணக்கம்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள புள்ளிவிபரங்கள் மிகச்சரி என்றே இருக்கட்டும்.

நண்டுக்கும் சந்திரனுக்கும் மட்டுமே தொடர்பு என்பதும் ஒரு பக்கம் இருக்கட்டும்.

ஆனால் நீங்கள் முந்தைய இடுகையில் குறிப்பிட்டபடி குருவிற்கும், சனிக்கும், பூமியின் காலநிலைக்கும் உள்ள தொடர்புகளை விளக்கும் புள்ளிவிபரங்கள் இருந்தால் தெரிவிக்கவும்.

ஊர்சுற்றி said...

இடைக்காட்டுச் சித்தர் எத்தனை வருடம் உயிருடன் வாழ்ந்தார்?
60 வருடத்திற்கு ஒருமுறை நிகழும் நிகழ்வுகளை எத்தனை தடவை சீராக நடந்திருக்கிறது என்று உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்?
2005, 2009 க்கு விளக்கம் கொடுக்க முன்வரும் நீங்கள் 2007, 2008 க்கும் கொடுங்களேன். 2010, 2011 க்கும் விளக்கம் கொடுத்தால் பொதுஜனங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.
ஜோதிடம் இயற்கை நிகழ்வுகளைத்தாண்டி தனிமனித வாழ்க்கையையும் தீர்மானிக்கும் கணக்கீட்டியலாக பரிணாமித்திருக்கிறதே! - நீங்கள் முந்தைய இடுகையில் குறிப்பிட்டுள்ள ஜோதிடம் இந்த ஜோதிடத்தில் உள்ளடங்கியதா?


'இல்லை கிரகங்களுக்கும் புவி பருவகாலத்திற்கும் மனித வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பு வெறும் hypothesis தான். ஆனாலும் நிரூபிக்கப்படாததால் அது முழுப்பொய் என்று ஆகிவிடாது' என்றீர்கள் என்றால் - நான் இத்தோடு விடைபெற்றுக்கொள்கிறேன்.

நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு புருனோ,

என்னிடம் இக்கேள்வியை கேட்டிருந்தால்....
நண்டுக்கும் சந்திரனுக்கும் என்ன சம்பந்தம் என கேட்டால், கடகராசியின் வடிவம் நண்டு என சொல்லுவேன்.

இப்படி பக்கங்கள் இணைத்து மஞ்சள் பூசி எல்லாம் காண்பிக்க தெரியாது :).

உங்கள் பணி அபாரம்.

----------------------------------

என் பங்குக்கு சில கேள்விகள்.

இடைகடார் என்பவர் சித்தர் என எப்படி சொல்ல முடியும். அந்த பாடல்கள் அவர்தான் எழுதினார் என எந்த கமிட்டியை வைத்து நீங்கள் நிரூபணம் செய்வீர்கள்? இதற்கு நீங்கள் சொன்ன 3 விதி உதவுமா?


குதம்பை சித்தர்னு ஒருத்தர் இருந்தாராமே அவர் குதம்பை அணிந்ததால் குதம்பை சித்தர் என சொல்லுகிறார்கள்.

இடைகடார் சித்தர் இடையில் கிட்டார் வைத்திருந்தாரா?

பதிவுக்கு இக்கேள்வி மிகவும் முக்கியம். இதை நிரூபித்துவிட்டுதான் நீங்கள் பிறருக்கு பதில் சொல்ல வேண்டும் :)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

என்ன உலகமடா இது..?

ஒரு டாக்டரே ஜாதகத்தை நம்புறார்.. ஜாதகத்தை பிட்டு, பிட்டு வைக்குறாரு..

தலைக்கு வைச்சுத் தூங்குற சைஸுக்கு அஞ்சு புஸ்தோகம் எழுதிட்டாரு..

என்ன கேள்வி கேட்டாலும் மஞ்சள் பூசியே பதில் சொல்லி அடிக்கிறாரு.. இன்னும் வேப்பிலை மட்டும்தான் ஐயா கைல இல்லை..

ஒரு தபாவாச்சும் இவர் ஊட்டாண்ட பூந்து ஓட்டுப் போடாம போலாம்னு பார்த்தா முடியுதா..?

கை ஆட்டோமேட்டிக்கா அங்கன போய் கிளிக்கு பண்ணுது..!

இந்த டாக்டர் ஏதோ வசிய மருந்து வைச்சிருக்கிறாரு டோய்..!

புருனோ Bruno said...

//என் ப்ளாக்குக்கு வர்றப்போ சிண்டு முடிஞ்ச நீங்க
உங்க ப்ளாக்குலே நண்டு பிடிச்சிருக்கீங்க
ரெண்டுமே நல்லா இருக்குன்னு கண்டு சொல்லத்தான் வந்தேன்.//

நன்றி பாஸ்

புருனோ Bruno said...

ஊர்சுற்றி சார்

எனக்கு ஜோதிட அறிவு மிக மிக குறைவு !!

நீங்கள் வேறு மிகவும் அறிவுப்பூர்வமான கேள்விகளை கேட்டுள்ளீர்கள்

மேலும் ஜோதிடம் கற்று விட்டு உங்கள் கேள்விக்கு பதிலளிக்கிறேன் :) :) :) :)

புருனோ Bruno said...

//என்னிடம் இக்கேள்வியை கேட்டிருந்தால்....
நண்டுக்கும் சந்திரனுக்கும் என்ன சம்பந்தம் என கேட்டால், கடகராசியின் வடிவம் நண்டு என சொல்லுவேன்.
//

8/22/2009 7:07 AM
அளிக்கப்பட்ட மறுமொழி எண் 8 பாருங்கள்

புருனோ Bruno said...

//இடைகடார் சித்தர் இடையில் கிட்டார் வைத்திருந்தாரா? //

என்ன கொடுமை சாமி இது :) :) :) :)

புருனோ Bruno said...

//என்ன கேள்வி கேட்டாலும் மஞ்சள் பூசியே பதில் சொல்லி அடிக்கிறாரு.. இன்னும் வேப்பிலை மட்டும்தான் ஐயா கைல இல்லை..//

“விஷக்கடி”க்கு “பார்வை பார்ப்பது போன்ற” வேலைகளில் கூட அனுபவம் உண்டு. வேப்பிலை அடிப்பது இன்றுவரை தெரியாது !!

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

மிக தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள் டாக்டர் !

புருனோ Bruno said...

//மிக தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள் டாக்டர் !//

நன்றி சார்

RVC said...

Dr. Bruno,
the answers u posted r correct. tidal variations, crab moulting cm weight variation and some more activities in the sea-influenced by moon. its proven. if u want i'll post u some research articles regardin this issue. i am an oceanographer :). continue ur good work,
with warm regards,
Chandru

Karthi Blog said...

வழக்கம் போல் கலக்கல் :) . I do not know the subject;so googled in this topic. Many research alreadyhappened and proud they are all in your side

Pike & Predators magazine stats the same. More links

http://www.btinternet.com/~pikeandpredators/goodmoon.html

http://www.solunar.com/the_real_scoop.aspx

http://ezinearticles.com/?Fishing-By-Moon-Phase:-Increase-Your-Catch&id=71934

புருனோ Bruno said...

//Dr. Bruno,
the answers u posted r correct. tidal variations, crab moulting cm weight variation and some more activities in the sea-influenced by moon. its proven. if u want i'll post u some research articles regardin this issue. i am an oceanographer :). continue ur good work,
with warm regards,
Chandru//

நன்றி சார் :) :)

இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...